Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

நீங்கள் வேண்டியது உங்களுக்கு உவப்பானது மட்டுமே.

இந்தியா, தமிழ்நாடு , மற்ற மாநிலங்களின் தேசிய கருத்துவாக்கத்துக்குள் எந்த படி நிலையில், எந்த திசை நோக்கி நகர்க்கருகிறது என்பது நீங்கள் அறியவேண்டியதில் இல்லை என்றதை நீங்களே சொல்வது நல்லது.

ஓர் சிறிய உதாரணம்

கேரளத்தில் இந்தியாவை தேசம் என்கிறார்கள்.

தமிழ் நாட்டில் அந்த நிலை இன்னும் வரவில்லை , அனால் பல விடயங்களில் அவ்வாறே அவர்களின் உணர்வு இருக்கிறது.

தேசம் (Nation) என்பதன் வரைவிலக்கண படி, இப்போதும் இந்திய தேசம் அல்ல

அனால், இந்திய தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசு.

பி.கு :

எப்போது நடிகர்கள் / நடிகைகளை கூத்தாடிகள் என்று சொல்லும் போதே தெரிகிறது, படம் பற்றிய புரிதல் ஆழம் உங்களால அவ்வளவு தான்

படம் நேரடியாக சொல்லாமல் சொல்லும்ம், உருவாகும் ஆள் கருத்துக்கள், தகவல்கள் போன்றவை உங்களு இருப்பதே தெரியாது.

நீங்கள் தேவை என்பது உங்களுக்கு இனிப்பது, அதுவும் நுனி நாக்கில் அல்லது மனதில், மதியில்

ஜ‌யா

க‌ம‌ல் ந‌டித்த‌ இந்திய‌ன் ப‌ட‌த்தை ஆக‌ சின்ன‌ வ‌ய‌தில் பார்த்தேன் பிற‌க்கு வ‌ள‌ந்தாப் பிற‌க்கு அந்த‌ ப‌ட‌த்தை DVDல‌ மூன்று த‌ர‌த்துக்கு மேல‌ பார்த்தேன் அந்த‌ப் ப‌ட‌த்தில் ஊழ‌ல் ஒழிப்பு ம‌ற்றும் இந்தியாவின் ப‌க்க‌த்து நாடுக‌ளின் அசுர‌ வ‌ள‌ர்ச்சி நேர்மையான‌ ஆட்ச்சி ப‌ற்றிய‌ அருமையான‌ ப‌ட‌ம் , அந்த‌ ப‌ட‌த்தை பார்த்தே திருந்தாத‌ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள்......................நீங்க‌ள் அம‌ர‌ன் ப‌ட‌க் க‌தையை ப‌ற்றி என‌க்கு பாட‌ம் எடுக்கிறீங்க‌ள்.....................ஒரு ப‌ட‌ம் பெரிய‌ மாற்ற‌த்தை கொண்டு வ‌ரும் என்று நீங்க‌ள் ந‌ம்பினால் உங்க‌ளை விட‌ முட்டாள் இந்த‌ உல‌கில் இருக்க‌ முடியாது.........................இந்திய‌ன் பாக‌ம் 2ப‌ட‌த்தை கூட‌ நான் இன்னும் பார்க்க‌ல‌.....................சினிமா மேல் என‌க்கு ஆர்வ‌ம் இல்லை................

என‌க்கு ஆர்வ‌ம் விளையாட்டுக்க‌ள் , தாய‌க‌ பாட‌ல் , த‌மிழீழ‌ம் , அர‌சிய‌ல் , இம்ம‌ட்டும் தான் , நான் கூட‌ நேர‌ம் ஒதுக்குவ‌து விளையாட்டுக்க‌ள் பார்க்க‌ அத‌ற்க்கு பிற‌க்கு தான் ம‌ற்ற‌வை..................

பின் குறிப்பு , எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் கிடைச்சு இருந்தால் இந்தியா அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டேன்..................இந்திய‌ அர‌சிய‌ல் என்ப‌து லாறியில் க‌ழிவ‌றைக்கு ஏற்றி செல்லும் த‌ண்ணீர போன்ற‌து👎👎👎👎👎👎👎👎👎.............................

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியாவில் ரிக்ரொக்கை த‌டை செய்யாட்டி , இப்ப‌ இந்திய‌ர்க‌ளும் பாக்கிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ளும் பாக்கிஸ்தான் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் க‌டும் போர் செய்து இருப்பின‌ம் ரிக்ரோக்கில் குரு ஹா ஹா😁.......................

இந்தியாவில் டிக்டாக் கிடையாதா................ எனக்கு இது தெரியாது, பையன் சார். அதற்கு ஈடாக அவர்கள் வேறு ஏதாவது வைத்திருப்பார்கள் போல. ரீல்ஸ் என்றும் ஒன்று இருக்கின்றது தானே.............

நான் இதுவரை ஒரு டிக்டாக் வீடியோ தன்னும் என் வாழ்நாளில் பார்க்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். யூடியூப்பில் 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களின் காமடிக் காட்சிகளையும், ராஜா சாரின் பாடல்களையும் இடைக்கிடை இரவுகளில் பார்ப்பேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை.

பிரான்சின் ரஃபேல் போர் விமானத்தை விட நான் பழசாகவே இருக்கின்றேன் போல........... அப்படியே இருக்கட்டும்.

மேலும் இந்த வகையான ஊடகங்கள் மீது எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது. தெறித்துப் பறக்கும் பரபரப்பான தலைப்புகளை பார்த்தாலே சிரிப்பு தான் வருகின்றது. இதைச் செய்பவர்கள் ஏதோ தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு, வாழ்க்கையை கொண்டு செல்ல இதை ஒரு தொழிலாக செய்கின்றார்கள் போல. சில மாதங்களின் முன் ஒரு கணவனும், மனைவியும் தங்களின் யூடியூப் தளத்திற்கு போதிய ஆட்கள் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தியை பார்த்து மிகவும் கவலைப்பட்டேன்.

மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் மிகமுக்கிய வேறுபாடுகளில் ஒன்று வாசிக்கும், அதை கிரகிக்கும் இயல்பு. தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்பொழுது இந்தக் காணொளி ஊடகங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்கி விடும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........

அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்.....

பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்

அப்ப‌ ராஜிவ் காந்தி செய்த‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌த்தை எந்த‌ இட‌த்தில் வைக்க‌லாம் வாத்தி அண்ணா , முடிந்தால் சொல்லுங்கோ மேல் கொண்டு விவாதிப்போம்......................

குஜ‌ராத்தில் மோடி 3000ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை துடி துடிக்க‌ கொன்று குவிச்ச‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி தான் இந்தியா நாட்டை ஆளுகிறார்

மோடிக்கு 2013ம் ஆண்டு அமெரிக்கா த‌டை போட்ட‌து த‌ங்க‌ட‌ நாட்டுக்கை வ‌ர‌க் கூடாது என்று................வ‌ர‌லாறு முக்கிய‌ம் வாத்தியாரே👍...................................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

குஜ‌ராத்தில் மோடி 3000ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை துடி துடிக்க‌ கொன்று குவிச்ச‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி தான் இந்தியா நாட்டை ஆளுகிறார்

குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்கள் கொலை ok

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் பலர் கொலை செய்யப்பட்டு அடித்து விரட்ட பட்டதை பற்றி என்ன சொல்வீர்கள்

12 minutes ago, வீரப் பையன்26 said:

மோடிக்கு 2013ம் ஆண்டு அமெரிக்கா த‌டை போட்ட‌து த‌ங்க‌ட‌ நாட்டுக்கை வ‌ர‌க் கூடாது என்று

பயங்கரவாதப் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசத்துடன் பேசியிருக்கின்றார்கள்

அமேரிக்கா தடை செய்த மோடி மட்டும் இந்தியாவை ஆள முடியாதா?

16 minutes ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ ராஜிவ் காந்தி செய்த‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌த்தை எந்த‌ இட‌த்தில் வைக்க‌லாம் வாத்தி அண்ணா , முடிந்தால் சொல்லுங்கோ மேல் கொண்டு விவாதிப்போம்......................

பயங்கரவாதம் என்பது எல்லா அரசுகளிடமும் அமைப்புக்களிடமும்

தேவைகேற்ப தலை தூக்கும்.....

போராட்ட அமைப்புக்கள் தமிழ் ஈழத்தில் பல தருணங்களிலும் பயங்கர வாதத்தில் ஈடுபட்டவர்களே

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

இந்தியாவில் டிக்டாக் கிடையாதா................ எனக்கு இது தெரியாது, பையன் சார். அதற்கு ஈடாக அவர்கள் வேறு ஏதாவது வைத்திருப்பார்கள் போல. ரீல்ஸ் என்றும் ஒன்று இருக்கின்றது தானே.............

நான் இதுவரை ஒரு டிக்டாக் வீடியோ தன்னும் என் வாழ்நாளில் பார்க்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். யூடியூப்பில் 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களின் காமடிக் காட்சிகளையும், ராஜா சாரின் பாடல்களையும் இடைக்கிடை இரவுகளில் பார்ப்பேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை.

பிரான்சின் ரஃபேல் போர் விமானத்தை விட நான் பழசாகவே இருக்கின்றேன் போல........... அப்படியே இருக்கட்டும்.

மேலும் இந்த வகையான ஊடகங்கள் மீது எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது. தெறித்துப் பறக்கும் பரபரப்பான தலைப்புகளை பார்த்தாலே சிரிப்பு தான் வருகின்றது. இதைச் செய்பவர்கள் ஏதோ தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு, வாழ்க்கையை கொண்டு செல்ல இதை ஒரு தொழிலாக செய்கின்றார்கள் போல. சில மாதங்களின் முன் ஒரு கணவனும், மனைவியும் தங்களின் யூடியூப் தளத்திற்கு போதிய ஆட்கள் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தியை பார்த்து மிகவும் கவலைப்பட்டேன்.

மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் மிகமுக்கிய வேறுபாடுகளில் ஒன்று வாசிக்கும், அதை கிரகிக்கும் இயல்பு. தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்பொழுது இந்தக் காணொளி ஊடகங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்கி விடும் போல.

நான் போன‌ வ‌ருட‌ம் தான் ரிக்ரோக்கில் இணைந்தேன் குரு..............ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ளை அட் ப‌ண்ணி வைச்சு இருக்கிறேன் , அவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ளின் நினைவு நாளை தொட‌ர்ந்து போடுவின‌ம்...................ஏதோ ஒன்றை பார்க்க‌ போனால் பொழுது போக்கு காணொளிக‌ள் க‌ண்ணில் ப‌டும்😁😁😁😁😁😁😁

ஓம் ரிக்ரொக் இந்திய‌ அர‌சால் த‌டை ப‌ண்ணி இப்ப‌ மூன்று வ‌ருட‌த்துக்கு மேல்.....................டென்மார்க்கிலும் ரிக்ரொக்கை த‌டை செய்ய‌ போவ‌தாக‌ டென்மார்க் அர‌சு அறிவித்த‌து...................எங்க‌ட‌ போன்க‌ளில் இருக்கும் ர‌க‌சிய‌ங்க‌ளை ரிக்ரோக் மூல‌ம் திருட‌ முடியுமாம் அது வ‌ங்கி க‌ண‌க்காய் இருந்தாலும் ச‌ரி ம‌ற்றும் எங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ ர‌க‌சிய‌ங்க‌ளையும் திருட‌ முடியும் என்று சொன்ன‌வை...................ஆனால் இன்னும் ந‌டை முறைக்கு வ‌ர‌ வில்லை ,

பாக்கிஸ்தான் இராணுவ‌ம் இந்தியாவின் எத்த‌னை விமான‌ங்க‌ளை சுட்டு வீழ்த்தினார்க‌ள் என்று வ‌டிவாய் தெரியாது , சில‌ இட‌ங்க‌ளில் மூன்று என்று சொல்லுகின‌ம் உண்மை பொய் அவ‌ன் அறிவான் அவ‌ரிட‌மே விட்டு விடுவோம்....................

நான் பாக்கிஸ்தான் திரும்ப‌ தாக்க‌ தொட‌ங்கின‌தில் இருந்து இந்திய‌ யூடுப்புக்க‌ள் பார்க்க‌ வில்லை

அவ‌ங்க‌ள் யூடும் வ‌ருமான‌த்துக்காக‌ இந்தியாவின் தாக்குத‌லில் ப‌த்தி எரியிது பாக்கிஸ்தானின் காராச்சி...............இஸ்ல‌மாவாட்டில் இந்திய‌ அதிர‌டி தாக்குத‌ல்

பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் த‌ர‌ ம‌ட்ட‌ம் இப்ப‌டி போடுவாங்க‌ள் முன்னுக்கு ..............

எப்போதும் த‌மிழ‌ன் இணைச்ச‌ காணொளிய‌ பாருங்கோ பொறுமை இருந்தால்..................எப்ப‌டி எல்லாம் பொய்யை அவுட்டு விடுகிறாங்க‌ள்😁.............................

9 minutes ago, வாத்தியார் said:

குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்கள் கொலை ok

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் பலர் கொலை செய்யப்பட்டு அடித்து விரட்ட பட்டதை பற்றி என்ன சொல்வீர்கள்

பயங்கரவாதப் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசத்துடன் பேசியிருக்கின்றார்கள்

அமேரிக்கா தடை செய்த மோடி மட்டும் இந்தியாவை ஆள முடியாதா?

உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை

அவ‌ங்க‌ அவ‌ங்க‌ட‌ வ‌ச‌திக்கு ஏற்ற‌ போல் க‌த‌வை திற‌ப்பாங்க‌ள் , பிற‌க்கு மூடுவாங்க‌ள்..................இந்த‌ பையித்திய‌ங்க‌ளிட்டை உல‌க‌ ம‌க்க‌ள் மாட்டி கிட்டு ப‌டும் பாடு இருக்கே யாரிட்டை போய் சொல்வ‌து😁...................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Kandiah57 said:

சரி மாற்றி யோசித்துப் பார்ப்போம் இது ஒரு கற்பனை தான்,.....அதாவது இந்தியா இருக்கும் இடத்தில் சீனா இருக்கிறது ...சீனா இருக்கும் இடத்தில் இந்தியா உண்டு என்று கற்பனை செய்யுங்கள்,......என்ன மாற்றங்கள் நடந்து இருக்கும் ??

நீங்கள் மாத்தி யோசிக்கேக்க நானும் மாத்தி யோசிக்கிறன்.

சிங்களவர் இடத்தில் தமிழர்களும் தமிழர்கள் இடத்தில் சிங்களவர்களும் இருந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

பின் குறிப்பு , எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் த‌லைவ‌ரவாழ்ந்த‌ கால‌த்தில் கிடைச்சு இருந்தால் இந்தியா அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டேன்..................இந்திய‌ அர‌சிய‌ல் என்ப‌து லாறியில் க‌ழிவ‌றைக்கு ஏற்றி செல்லும் த‌ண்ணீர போன்ற‌து

இதை தலைவர் கேட்டு இருந்தால், அவர் எதிரார்த்த சமூகத்தில் இப்படி மு.. மு... விதிவிலக்குகளும் இருக்கிறதே என்று கவலை அடைந்து இருப்பார்.

16 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் அம‌ர‌ன் ப‌ட‌க் க‌தையை ப‌ற்றி என‌க்கு பாட‌ம் எடுக்கிறீங்க‌ள்.....................ஒரு ப‌ட‌ம் பெரிய‌ மாற்ற‌த்தை கொண்டு வ‌ரும் என்று நீங்க‌ள் ந‌ம்பினால் உங்க‌ளை விட‌ முட்டாள்

(அமரன் மாற்றம் பற்றியதா? இதுவா படம் சொல்லும் செய்தி?)

படத்தை சமூக எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதில் கூட ஓர் செய்தி, தகவல் உள்ளது.

அமரன் படம் வெற்றி , எனவே தமிழ் நாடு பரந்த இளம் சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த உணர்வுகளோடு ஒத்து போய், ஏற்றுக்கொண்டும் இருக்கிறது

படத்துக்கு வெளியேயும், படம் வெற்றி, தோல்வி என்பதில், கதையை பொறுத்து, சமூக மனவோட்டத்தை பற்றி சொல்லும் செய்தி இருக்கிறது.

அனால், இது ஒரு சுட்டி மாத்திரம் சமுக மனவோட்டத்தை அறிவதில். (வெளிப்படையான உதாரணத்துக்கு சொன்னது)

(சும்மா படத்தில் 'கூத்தாடிகள் காட்டுவதை' மட்டும் நுனியாக அன்ஹா நேரத்தில் இரசித்து விட்டு, அதற்கு அப்பால் சிந்தனை/ அறிவு இல்லாத, படம் பற்றி கூத்தாடி காட்டும் ... செய்வது கூட அறியாமல்)

மொத்தத்தில் படத்தின் உள்ளே, வெளியே பரிமாணங்கள் தெரியாது.

எனவே இதை பற்றி மேலும் கதைப்பது வீண்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வாத்தியார் said:

இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........

அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்.....

பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்

இந்தியா செய்த‌ துரோக‌ம் பெரிய‌து...................இல‌ங்கை பாக்கிஸ்தானிட‌ன் இருந்து காசு கொடுத்து ஆயுத‌ம் வேண்டின‌து.................இந்தியா எம் இன‌த்தை அழிக்க‌ ரேட‌ர்க‌ளில் இருந்து ப‌ண‌ உத‌வி ஆயுத‌ உத‌விக‌ளை க‌ண்ண‌ மூடி கொண்டு மூர்க்க‌த‌ன‌மாய் உத‌வின‌து..................உல‌கில் த‌டைசெய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை வேண்டி கொடுத்த‌தே இந்தியா தான்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் இந்திய‌ன் உள‌வுத்துறையில் அதிக‌ம்....................2009ம் ஆண்டு அவ‌ர்க‌ள் இல‌ங்கையில் கால் வைச்ச‌ காணொளி பின்னாளில் பார்த்தேன் க‌ள்ள‌ இந்திய‌ன்...................முள்ளிவாய்க்கால் சாப‌ம் இந்தியா நாட்டை ஏதோ ஒரு நாள் போட்டு வாட்டி எடுக்கும்...................

எத்த‌னை த‌மிழ‌ர்க‌ள் பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் என்று சோச‌ல் மீடியாக்க‌ளை த‌ட்டி பார்த்தேன் விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்( வீ ச‌ப்போட் பாக்கிஸ்தான் என‌ எழுதுகின‌ம்)...................... ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் வெறுப்புக்கு ஆளான‌ தேச‌ம் இந்தியா👊....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இதை தலைவர் கேட்டு இருந்தால், அவர் எதிரார்த்த சமூகத்தில் இப்படி மு.. மு... விதிவிலக்குகளும் இருக்கிறதே என்று கவலை அடைந்து இருப்பார்.

(அமரன் மாற்றம் பற்றியதா? இதுவா படம் சொல்லும் செய்தி?)

படத்தை சமூக எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதில் கூட ஓர் செய்தி, தகவல் உள்ளது.

அமரன் படம் வெற்றி , எனவே தமிழ் நாடு பரந்த இளம் சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த உணர்வுகளோடு ஒத்து போய், ஏற்றுக்கொண்டும் இருக்கிறது

படத்துக்கு வெளியேயும், படம் வெற்றி, தோல்வி என்பதில், கதையை பொறுத்து, சமூக மனவோட்டத்தை பற்றி சொல்லும் செய்தி இருக்கிறது.

அனால், இது ஒரு சுட்டி மாத்திரம் சமுக மனவோட்டத்தை அறிவதில். (வெளிப்படையான உதாரணத்துக்கு சொன்னது)

(சும்மா படத்தில் 'கூத்தாடிகள் காட்டுவதை' மட்டும் நுனியாக அன்ஹா நேரத்தில் இரசித்து விட்டு, அதற்கு அப்பால் சிந்தனை/ அறிவு இல்லாத, படம் பற்றி கூத்தாடி காட்டும் ... செய்வது கூட அறியாமல்)

மொத்தத்தில் படத்தின் உள்ளே, வெளியே பரிமாணங்கள் தெரியாது.

எனவே இதை பற்றி மேலும் கதைப்பது வீண்.

உண்மையை சொல்ல‌ ஏன் உங்க‌ளுக்கு சுடுது...................தேர்த‌ல் நேர‌ம் ந‌ட‌க்கும் குள‌று ப‌டிக‌ள்...............ம‌க்க‌ளுக்கு தேர்த‌க் நேர‌ம் கொடுக்கும் காசு பொருட்க‌ள் இவை க‌ல‌ந்த‌ கேடு கெட்ட‌ முறைகேடு தேர்த‌ல் தானே இந்திய‌ அள‌வில் ந‌ட‌க்குது......................

த‌லைவ‌ர் இருந்து இருக்க‌னும் என‌து நேர்மையான‌ எழுத்தை பார்த்து பாராட்டி இருப்பார் இது போதுமா அல்ல‌து இன்னும் கொஞ்ச‌ம் வேனுமா............................

என்னிட‌ம் இருக்கும் ப‌ழ‌க்க‌ம் வைச்சு கொண்டு இல்லை என்று சொல்ல‌ மாட்டேன் , அதே போல் ச‌ட்டிக்கை இருப்ப‌து தான் அக‌ப்பேக்க‌ வ‌ரும்....................

நீங்க‌ள் ஹிந்தியா புக‌ழ் பாடுங்கோ , இது மே மாத‌ம் த‌மிழ‌ர்க‌ளின் வாழ்வின் வ‌லி சும‌ந்த‌ மாத‌ம்...................கோவ‌த்தின் வெளிப்பாட்டில் கூட‌ எழுதினால் நீங்க‌ள் ம‌ன‌ வேத‌னை ப‌டுவிங்க‌ள் இதோட‌ நிறுத்துவோம் எங்க‌ட‌ க‌ல‌ந்துரையாட‌ல‌.......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

விமானம் வீழ்ந்த பின்பு அவற்றின் பங்குச்சந்தை வெகுவாக சரிய

சீன விமான கம்பனியின் பங்குச்சந்தை வெகுவாக கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.

https://finance.yahoo.com/quote/AM.PA/

https://finance.yahoo.com/quote/300696.SZ/

சீன நிறுவனத்தின் பங்குகளின் விலை 20% உயர்ந்துள்ளது ஆனால் ரபேலின் பங்கு விலையில் பெரிதாக மாற்றம் நிகழவில்லை என கருதுகிறேன் அல்லது நான் தவறாக Dassault Aviation (Rafael) பங்கு சுட்டியினை கருதிவிட்டேனா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

இதுக‌ளை ப‌ற்றி என‌க்கும் பெரிய‌ புரித‌ல் இல்லை.................இதை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ஒருக்கா விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் பிற‌க்கு நினைவில் இருக்கும்👍......................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

பாக்கிஸ்தான் பிரிவதை இந்திய அரசு, மற்றும் படை விரும்பாது (இவற்றில் நான் சொல்லிய அதிகார பீட கொள்கை தலையீடு, தீர்மானம். மறுப்பது அவரவரின் பிரச்சனை.).

akhand bharat என்பதே ஆர் எஸ் எஸ் இன் கொள்கை அதன் முதற்கட்டம் காஸ்மீருக்கான சிறப்புரிமை நீக்கம், இது பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கோசான் கூறியுள்ளார்.

https://en.wikipedia.org/wiki/Akhand_Bharat

1 minute ago, வீரப் பையன்26 said:

இதுக‌ளை ப‌ற்றி என‌க்கும் பெரிய‌ புரித‌ல் இல்லை.................இதை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ஒருக்கா விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் பிற‌க்கு நினைவில் இருக்கும்👍......................

யாழில் வாணிபம் பகுதியில் இதெற்கென கோசான் ஒரு திரி தொடங்கியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

akhand bharat என்பதே ஆர் எஸ் எஸ் இன் கொள்கை அதன் முதற்கட்டம் காஸ்மீருக்கான சிறப்புரிமை நீக்கம், இது பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கோசான் கூறியுள்ளார்.

https://en.wikipedia.org/wiki/Akhand_Bharat

இது ஆர் எஸ் எஸ் இன் ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..................

பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாடு சுத‌ந்திர‌ம் பெற‌ த‌ங்க‌ளின் முன்னோர்க‌ள் ப‌ல‌ தியாக‌ங்க‌ளை செய்த‌வை என்று சொல்லித் தான் பிள்ளைக‌ளை வ‌ள‌க்கின‌ம்.................சிங்க‌ள‌வ‌னே விரும்ப‌ மாட்டான் இந்தியா கூட‌ இணைவ‌தை.......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தையிட்டி விகாரையும் வெடுக்குநாறி விகாரையும் இலங்கையின் வடபகுதி தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக இப்போதும் இருக்கின்றது எனக்கு உண்மையாகவே தெரியாது 🙄

நவற்குழி நயினாதீவு,.......போன்ற இடங்களிலும் கூட பெரிய அழகிய விகாரைகளுண்டு இன்னும் கொஞ்ச காலத்தில் சிங்களப்பகுதியை விட தமிழ் பகுதியில் கூடுதல் விகாரைகள். இருக்கும் ஆனால் பக்கத்தில் சீனா இல்லை இந்து நாடு இந்தியா தான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

இது ஆர் எஸ் எஸ் இன் ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்..................

பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாடு சுத‌ந்திர‌ம் பெற‌ த‌ங்க‌ளின் முன்னோர்க‌ள் ப‌ல‌ தியாக‌ங்க‌ளை செய்த‌வை என்று சொல்லித் தான் பிள்ளைக‌ளை வ‌ள‌க்கின‌ம்.................சிங்க‌ள‌வ‌னே விரும்ப‌ மாட்டான் இந்தியா கூட‌ இணைவ‌தை.......................

இரண்டு அடிப்படைவாத சக்திகளிடையேயான அதிகார போட்டியில் இரு தரப்பும் பயங்கரவாத தாக்குதல்களை மற்ற நாடுகளில் ஊக்குவிக்கின்றன, இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே இந்த முட்டாள்தனங்கள்.

கடந்த காலத்தில் இந்தியாவிற்கு அனுசரணையாக இருந்த நிலை தற்போதய போரில் முற்றிலும் 180 பாகை எதிர்நிலை எடுத்த நிலை (யாழிலேயே காணக்கூடியதாக உள்ளது) என்பது அதிகரித்துவரும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே காட்டுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

495965600_1653655895356146_2940454340503

ஒரு வருடத்திற்கு 100 பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்க கூடிய ஆலையை லக்னோவில் இன்று திறந்து வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்..!!

பாகிஸ்தானுக்கான... Future பிளானா இருக்குமோ.

Sarathy Ravichandran

நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன்.

அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம்.

இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல…

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம்.

இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம்.

பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம்.

4 hours ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளுக்கு இந்திய‌ ப‌ற்று அதிக‌ம் போல் தெரியுது , இதுக்கை க‌ருத்து எழுதின‌ ப‌ல‌ருக்கு இந்திய‌ ப‌ற்று அற‌வே இல்லை ,

தனக்கு இந்திய இராஜதந்திரிகளிடம் தொடர்பும் இருப்பதாக அவர் முன்பே யாழில் எழுதி இருக்கிறார்.

3 hours ago, ரசோதரன் said:

காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை.

ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை.

சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

அகண்ட பாரதம், அகண்ட அமெரிக்கா, அகண்ட ரஷ்யா, அகண்ட சைனா................. இப்படி பெரியவர்கள் எல்லோருமே அகலப் போகின்றோம் என்று அடம் பிடித்தால் யார் தான் இங்கே ஒடுங்கிப் போவது........... பாகிஸ்தான், கனடா, உக்ரேன், தாய்வான் இவர்கள் ஒடுங்கி ஒதுங்க வேண்டுமா......

கூட்டத்தின் உரு குறைந்தால் அல்லது இறங்கினால், உடுக்கும் அடித்து, இன்னும் கொஞ்ச சாம்பிராணி புகையும் போடுவது போலவே இந்தப் பேச்சு.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல.

கிட்டதட்ட குணா கமல் போல…

அதை சொல்ல நினைக்கையில்…

வார்த்தை முட்டுது…..

சதாம் உசேனின் பேச்சாளர்…கெமிக்கல் அலி, பின்னாளில் கொமிக்கல் அலி என மாறி, அமெரிக்க படைகளை நாம் வெளுக்கிறோம்….என இருபது சொச்ச வருடத்துக்கு முன் செய்த கோமாளிதனத்துக்கு பிறகு …இப்போதான் ஒரு இராணுவ பேச்சாளர் இப்படி கோமாளித்தனம் பண்ணுவதை இந்த உலகம் காண்கிறது.

உலகமே இந்தியாவை பார்த்து கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறது.

2 hours ago, வாத்தியார் said:

இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்....

இந்தியாவை எதிர்ப்பது = பாகிஸ்தானை ஆதரிப்பது என்பது எளியதும், தவறானதுமான சமன்பாடு.

2 hours ago, வாத்தியார் said:

பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்

பாகிஸ்தானி தலிபான், பலூச்சி போராளிகள் என அவர்களும் இதை எதிர்கொள்கிறார்கள்.

கஸ்மீர் போராளி குழுக்கள், சீக்கிய போராளி குழுக்கள் போன்றவற்றை பாகிஸ்தான் ஆதரிப்பதை வைத்து இந்தியா பலருக்கு இப்படி ஒரு மூளைசலவையை செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

நவற்குழி நயினாதீவு,.......போன்ற இடங்களிலும் கூட பெரிய அழகிய விகாரைகளுண்டு

நயினாதீவுக்கு சும்மா உல்லாசமாக போக விரும்பி படகு சவாரியை பலர் விரும்பாததினால் பின்பு செல்லவில்லை ஆனால் நயினா தீவு விகரை இலங்கையின் தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களில் வராது ஆனால் சீனா அயல்நாடாக இருந்தால் அது மாறும் யேர்மனிக்கு போனால் பேர்லின் சுவர் கொலோன் Cologne பார்ப்பது பேன்று யாழ்பாணம் போனால் விகாரைக்கு தான் போக வேண்டும்.

2 hours ago, வாத்தியார் said:

இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........

அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்.....

பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்

உண்மை

உறவை முஸ்லிம் மத கல்வி சாலைக்கு அழைத்து சென்று நன்றாக கழுவி அனுப்பி இருப்பார்களோ 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் பலர் கொலை செய்யப்பட்டு

எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

எத்த‌னை த‌மிழ‌ர்க‌ள் பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் என்று சோச‌ல் மீடியாக்க‌ளை த‌ட்டி பார்த்தேன் விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்( வீ ச‌ப்போட் பாக்கிஸ்தான் என‌ எழுதுகின‌ம்).

உறவே நீங்கள் பார்த்தவர்கள் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளாக இருக்க முடியாது இலங்கை தீவிர முஸ்லிம் மதவாதிகளாக இருப்பார்கள் பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியா என்று இல்லை எந்த ஒரு முஸ்லிம் அல்லாத நாடு பாக்கிஸ்தானை தாக்கினாலும் அவர்கள் பாக்கிஸ்தானை தான் ஆதரிப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

போராட்ட அமைப்புக்கள் தமிழ் ஈழத்தில் பல தருணங்களிலும் பயங்கர வாதத்தில் ஈடுபட்டவர்களே

அப்போ பாகிஸ்தானிகள் சிலர் லாகூர்.கொம்மில் எனக்கு பயங்கரவாதிகள் என்றாலே நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்கள்தான் என எழுதுவார்களோ என்னமோ😎.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை.

சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.

நாளாக நாளாக இந்தக் கேள்வி தான் பிரதானமாக ஆகின்றது. எங்கள் நாட்டில் நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போலவே இவர்கள் சொல்லும் கதைகள் எதுவும் பொருத்தமாக இல்லை.

இந்த தாக்குதல்களைச் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் உண்மையிலேயே இந்திய அரசுக்கு தெரியாது என்றால், இந்தியாவின் உளவுத்துறையை முதலில் உடனடியாக சீரமைக்க வேண்டும். ரஃபேல் விமான விடயத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே இந்த முட்டாள்தனங்கள்

அதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் சீனா அயல்நாடாக இருந்தால்

இது உங்கள் கருத்துகள்,.......சீனா மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக எனக்கு தெரியவில்லை ....அப்படி இருந்தால் எழுதுங்கள் அறிவோம் ....ஆனால் இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கமும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது கொடுக்கும் அத்துடன் சிங்களவர் இருக்கும் வரை. அவர்கள் நாடு முழுவதும் குறிப்பாக தமிழ் பகுதிகளில் விகாரைகள். புதிது புதிதாக கட்டப்படும். இதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட மாட்டார்கள் என்பது சைக்கிள்க்கு அண்மையில் கிடைத்த ஆதரவு தெரிவிக்கிறது பக்கத்தில் இந்தியா அல்லது சீனா இருந்தால் என்ன இதில் மாற்றங்கள் இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.