Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நேற்று பிரான்சின் Les Echos பத்திரிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றில் இக் கருத்தோவியத்தைப் போட்டுள்ளது.

01403300375934-web-tete.webp

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்!

அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!

பிச்சகாரன் சத்தி எடுத்தால் முதல் வீட்டு இட்லி, இரெண்டாம் வீட்டு ஆட்டு பாயா, ஐந்தாம் வீட்டு பிரியாணி, 9ம் வீட்டு தயிர்சாதம், கோவில் பிரசாதம் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து வருமாம்.

கண்ட, கண்ட இடங்களில் நுனிப்புல் மேய்ந்து விட்டு சத்தி எடுத்தால் அப்படித்தான் வரும்🤣.

ஆனால் இலங்கையில் மொரட்டுவ E1 உங்களுக்கு இதை விளங்கி கொள்ளும் ஆற்றல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து🤣🤣🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்!

அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!

யாழ்ப்பாண‌ம் த‌மீழீழ‌ம் அல்ல‌வாம் ஒரு கோதாரியும் என‌க்கு விள‌ங்க‌ வில்லை அத‌னால் இவ‌ர் கூட‌ விவாதிப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ந‌ண்பா😁👍...........................

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-235.jpg?resize=750%2C375&ssl

ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களை குறிவைத்து இஸ்லாமபாத்துக்கு எதிரான பதிலடி இராணுவத் தாக்குதலான “ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் 22 நிமிடங்களில் இந்தியா பழிவாங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ராஜஸ்தானில் இன்று (22) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,

ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளின் ஒன்பது பெரிய மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம்.

இதன் மூலம், குங்குமம் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகத்தின் மற்றும் நாட்டின் எதிரிகள் பார்த்திருக்கிறார்கள்.

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 அன்று இந்திய பதிலடி இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அரசாங்க வட்டாரங்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 100 பயங்கரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா ஒன்றுபட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) 140 கோடி இந்தியர்களை பாதித்தது.

பயங்கரவாதத்தின் மையத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.

அரசாங்கம் இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்தது, ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – என்றும் அவர் கூறினார்.

இந்த உரைக்கு முன்னதாக ராஜஸ்தான், பிகானீருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தை வைத்தார்.

மேலும், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர், பிரதமர் மோடி பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தேஷ்னோக்கில் உள்ள கர்ணி மாதா ஆலயத்திலும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

https://athavannews.com/2025/1432787

2 hours ago, இணையவன் said:

நேற்று பிரான்சின் Les Echos பத்திரிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றில் இக் கருத்தோவியத்தைப் போட்டுள்ளது.

01403300375934-web-tete.webp

இந்தியாவிற்குப் பின்னால்.... இஸ்ரேல் வந்திருக்க வேண்டும்.

சோனகனுக்கு அடிப்பதென்றால்.... இஸ்ரேலுக்கு வலு புளுகம் வந்திடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நேற்று பிரான்சின் Les Echos பத்திரிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றில் இக் கருத்தோவியத்தைப் போட்டுள்ளது.

01403300375934-web-tete.webp

இங்கே விபரமாக பதிய நேரம் இல்லை. அனால் எனது அவதானங்கள் சுருக்கமாக

(பிரான்ஸ் அதன் இழப்பை சமாளிக்க போடும் படம்.)

அனால், இந்தியா ஊடகம் சொல்லும் பில்-15 ஐ சீனர் இயக்கியது என்பது, எவ்வளவு ஏய்க்கட்டும் கதை.

அப்படியானால், விமானங்களையும் சீனர் இயக்கியதாக வரும். (அது சீனாவின் பார்வையில் எவ்வளவு ஆபத்தானது, தற்செயலாக தாக்குதல் , விபத்தில் பிடிபட்டால் என்பதும், கொல்லப்பட்டால் , ஒரு தேர்ச்சி பெற்ற விமானியை உருவாக்குவது எவ்வளவ்வு கடினம், செலவு போன்றதும், அதுவும் மட்டுபடுத்தப்பட்ட நடவடிக்கைக்கு என்பதும் )

இரண்டாவதாக, புதிய தொழில்நுட்பம் சீன கொடுத்தது - கொடுத்து இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கினைத்து பயிற்சி எடுத்து பாவிக்க நேரம் போதாது.

இப்படி வேறு சிலவற்றிலும் இந்தியா ஊடகங்கள் சொல்வதில் இடைவெளிகள், ஓட்டைகள் இருக்கிறது.

இந்திய ஊடகங்கள் சொல்லாதது - கார்கிலில் கண்டறியப்பட்ட விமானப்படை அமைப்பு அடிப்படையிலான இன்னமும் நிரப்பப்படாத இடைவெளிகள், அமைப்பு அடிப்படையிலான பிரச்சனைகள், மற்றும் அரசியல் / அதிகார பீடம் இணக்கத்துக்கு வந்து முடிவு எடுக்கும் தன்மை வாமனப்படை கொள்வனவு, பயிற்சி போன்றவற்றில் உருவாக்கும் மிக மந்த நிலை போன்றவை.

(உ.ம். இந்தியாவிடம் போதிய அளவு AWACS இல்லை, இருப்பது மிகவும் பழையது. பாகிஸ்தானிடம் போதிய அளவும், பிந்திய தொழில்நுட்பம் உள்ள AWACS இருக்கிறது. அதனால் பாகிஸ்தானின் command & control வானில் இருந்து இருக்க கூடிய வாய்ப்புகள், மிகவும் நன்மை )

அனால், முன்பே சொல்லி இருந்தேன் சீன இந்தியாவுக்குள் இருக்கும் படை, தளபாட விநியோகம், நகர்வுகள் போன்றவை பற்றி பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி இறுக்கலாம் என்று.

(ஏனெனில், விமானங்கள் ஒரே தளத்தில் இருந்த்து களத்துக்கு அனுபுபடுவத்தில்லை, அதுவும் அந்த நேரத்தில் இந்தியா வடக்கில் இருந்த்து அனுப்பி இருக்காது, ஏனெனில் பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும், அநேகாக தெற்கில் / கிழக்கில் உள்ள தளங்களில் இருந்த்து, பாகிஸ்தானிடமும் கண்காணிப்பு வசதிகள் இருந்தாலும், இந்திய விமானங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வருவதும் , அததற்கு ஏற்றவாறு அதன் விமானங்களை வானில் வைத்து இருக்கும் வியூகத்துக்கு நேரம் வேண்டும்.)

சுருக்கமாக , பாகிஸ்தான் விமானப்படையின் / அரசின் / அரசாங்கத்தின் முழு clockwork ஆக வினைத்திறனை கட்டி எழுப்பியதை , அதை களத்தில் நிரூபித்ததை மேற்கும், இந்தியாவும், மேற்கும் மலினப்படுத்துகின்றன.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆனால் இலங்கையில் மொரட்டுவ E1 உங்களுக்கு இதை விளங்கி கொள்ளும் ஆற்றல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து🤣🤣🤣.

உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

யாழ்ப்பாண‌ம் த‌மீழீழ‌ம் அல்ல‌வாம் ஒரு கோதாரியும் என‌க்கு விள‌ங்க‌ வில்லை அத‌னால் இவ‌ர் கூட‌ விவாதிப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ந‌ண்பா😁👍...........................

நீங்கள் சொல்வது தியரி.

அண்ணனின் “நடைமுறை”படி அதை இந்தோனேசியாவில் சேர்திருக்கிறார்..

நீங்கள் புரிந்துகொள்ள சிரமப்படுவாதால் மட்டும், அண்ணன் கஞ்சா கப்ஸா கதை சொல்லிகிறார் என ஆகிவிடாது.

ஆதாரம் ? அண்ணன் 1965 ம் ஆண்டு குப்பி விளக்கில் ஆங்கிலோ அமேரிக்கன் டிரிபியூனில் வாசித்தார்.

தேடிப்பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!

என்னால் முடியாது…

இது மலையாளம் போல தமிழில் இருந்து உருவாகிய இன்னொரு மொழியில் எழுதபட்டிருக்கிறது.

தமிழ் எழுத்துரு, தமிழ் சொற்கள் போல இருக்கும் சொற்கள் பாவிக்கபடும்…ஆனால் வாசித்தால் விளங்காது.

French இல் இருந்து creole ஆங்கிலத்தில் இருந்து Pigeon English உருவானதை போல இது தமிழில் இருந்து உருவாகியுள்ளது.

உலகில் இதை ஒரே ஒருவர்தான் பாவிக்கிறார் என்பது மேலதிக தகவல்.

# நம்பினால் நம்புங்கள்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழன் , நீங்கள் எனக்கு முன்பு கோர்வையாக .. என்று சொல்லியதால்

ChatGPT சொல்லுவது என்ன?

நான் சொல்லியதை நானே ChatGPT க்கு கொடுப்பது சரி அல்ல, கோடியதாக இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.

நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு…

ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன்.

கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣

1 minute ago, ரசோதரன் said:

முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.

ஆள் வர பிந்துகிறது…

பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு…

ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன்.

கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣

ஆள் வர பிந்துகிறது…

பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

தொடர்ந்து அடிக்கவேண்டும் அடிக்கலாம் என்ற அவனது ஆவலில் பெற்றோள் ஊத்துவது மட்டுமே தற்போதைக்கு குருவியின் கழுத்து....😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

எப்போதும் தமிழன் , நீங்கள் எனக்கு முன்பு கோர்வையாக .. என்று சொல்லியதால்

ChatGPT சொல்லுவது என்ன?

நான் சொல்லியதை நானே ChatGPT க்கு கொடுப்பது சரி அல்ல, கோடியதாக இருக்கலாம் அல்லவா?

நானும் ChatGPT இடம் கேட்டுப்பார்த்தேனே. Unable to recognize this language என்று வருகிறது. திருப்பியும் கேட்டால் ChatGPT temporally out of service என்று வருகிறது! ஆனால் வேறு ஏதாவது கேட்டால் பதில் வருகிறது! 😜

  • கருத்துக்கள உறவுகள்

499206026_122228910344083272_23142442440

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2025 at 11:39, Eppothum Thamizhan said:

நானும் ChatGPT இடம் கேட்டுப்பார்த்தேனே. Unable to recognize this language என்று வருகிறது. திருப்பியும் கேட்டால் ChatGPT temporally out of service என்று வருகிறது! ஆனால் வேறு ஏதாவது கேட்டால் பதில் வருகிறது! 😜

இது உங்களுக்கு தெரியும் அல்லது நிச்சயம்நிச்சயம் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள் .

அனால் , நடந்ததை , அந்த ஒழுங்கில் சொல்லும் போது, தொடர்புபடுத்த முடியாமல் இருக்கிறது.

அது தான் செய்தவர்களின் திறமை. செய்தவார்கள் US / மேற்கு அவர்களின் நோக்கத்தை (பெருமளவு) அடைந்து உள்ளனர்.

ஒரு சொல்லில் Indo-Pacific (சொல் 1947 இலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது)

சற்று விரிவாக Indo-Pacific geopolitical and geographical construct.

பொதுவாக பூகோள அரசியலும், புவியியல் பிரதேசமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒரே அமைப்பாக இருப்பதில்லை இருப்பதில்லை.

இதில் தான் (அநேகமாக முதல்தடவையாக) அப்படி இருக்கிறது.

இதில் தான் புலிகள் அகப்பட்டது, அந்த திட்டத்தின் முக்கிய அம்சமா அரசுகளின் மீதான செல்வாக்கு - அரசுகளுக்கு எதிராக எந்தவித ஆயுத அச்சுறுத்தலும் இருக்க கூடாது. ஏனெனில், அரசுகள் மீது செலுத்துவதற்கான பிடிகள் மிகவும் கூட. அது இந்தியாவுடன் ஒத்து போனது, இந்தியாவுக்கு வசதியாக இருந்தது மேலும் வசதி.

(அப்படியே பார்த்தல், அங்கு இருந்த அனைத்து ஆயுத குழுக்கள் ஒன்றின் ஆயுதத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தனர் , ஆச்சே, நேபாளம் உட்பட, அழிவு (புலிகள்), அல்லது பாரிய அழிவின் பின் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸில், US எதிர் மியான்மாருக்கு கூட இந்த கொள்கை. இவை நான் சொல்லாதவை)

பொதுவாக ஆப்பிரிக்காவிலும் அதுவே.

மத்தியகிழக்கில் இந்த 4 அரசுகள் / தலைமைகள் மேற்கு / US எதிர், ருசியா, சீன கூட்டாளிகள். மிகுதி எல்லாம் மேற்கு சார்பு வெளியில் சொல்லாவிட்டாலும். 4 இன் அகற்றமும் மேற்றக் எதிர் அரச தலைமைகள் நீக்கம் , அரசு சாரா குழுக்களை ஆக குறைந்தகாது பலவீனம் ஆக்கும் (ஒரே கல்லில் இரு மாங்காய்கள்).

செய்தது பயங்கரவாத எதிர்ப்பு என்ற திரையுடன்.

சுருக்கமாக.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில்

இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார்.

சிங்கப்பூரில் இன்று (2025 மே 31 சனிக்கிழமை) ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், 'எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை தெரிந்துக் கொள்வதை விட, சேதம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதே மிக முக்கியமானது' என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியதை அவர் மறுத்தார்.

"ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்த அவர், சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தான் ப்ளூம்பெர்க்கிற்கு அவர் நேர்காணலை வழங்கியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், முப்படைகளின் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா இந்தக் கூற்றுகளை நிராகரித்தது.

ஜெனரல் அனில் செளகான்

படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்

ஜெனரல் அனில் செளகான் தெரிவித்த கருத்துக்கள்

இந்த மாதம் பாகிஸ்தானுடனான நான்கு நாள் ராணுவ மோதலில் இந்திய போர் விமானம் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று சிடிஎஸ் அனில் செளகானிடம் கேட்கப்பட்டது.

இந்த பேட்டியின் ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் கொண்ட ஒரு பகுதியை ப்ளூம்பெர்க் டிவி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியில், ஜெனரல் அனில் செளகானிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தானின் கூற்றை உறுதிப்படுத்த முடியுமா என்று ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், "ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்" என்றார்.

முப்படைகளின் தளபதியிடம் இருந்து விஷயத்தை தெரிந்துக் கொள்ள கேள்வி வேறுவிதமாக கேட்கப்பட்டது. "குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?" என பத்திரிகையாளர் வினா எழுப்பினார்.

"ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து, பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்."

"ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அந்த நாடு சொல்லும் கணக்கு சரியானதா?" என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்டார்.

"இது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்." என்று ஜெனரல் அனில் செளகான் பதிலளித்தார்.

இதற்கு முன்பு ராணுவம் என்ன சொன்னது?

மே 7ஆம் தேதியன்று, இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது .

அதற்கு பிறகு, பாகிஸ்தான் விமானப்படை ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறினார், அதில் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்று கூறப்பட்டது.

"இதுவரை, மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு எஸ்.யூ-30 மற்றும் ஒரு மிக்-29 உட்பட ஐந்து இந்திய விமானங்கள் மற்றும் ஒரு ஹெரான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி தெரிவித்த வீடியோவை, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை பகிர்ந்தது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்தக் கூற்றுக்கு இந்தியா எந்தவித பதிலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை.

இருப்பினும் மூன்று படைகளின் பிரதிநிதிகளான, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை டிஜிஏஓ (விமான நடவடிக்கைகள்) ஏர் மார்ஷல் ஏகே பார்தி மற்றும் கடற்படையைச் சேர்ந்த டிஜிஎன்ஓ (கடற்படை நடவடிக்கைகள்) வைஸ் அட்மிரல் ஏஎன் பிரமோத் மற்றும் மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷார்தா ஆகியோர் மே 11 அன்று பாகிஸ்தானுடனான மோதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய தகவல்களை வழங்கினார்கள்.

ஜெனரல் அனில் செளகான்

பட மூலாதாரம்,ANI

ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி , "நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? என்பதாகவே இருக்கவேண்டும். அதற்கான பதில் ஆம்" என்று சொன்னார்.

"நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம், நமது அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும்" என்றும் அவர் கூறியிருந்தார்.

எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் ஒரு மதிப்பாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோருகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் ஊடகப் பதிவில், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரித்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 6 மற்றும் 7ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியது. மே 7ஆம் தேதி மாலை ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவம் இந்தத் தகவலை வழங்கியது.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய ஆயுதப்படைகள் 2025 மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

பட மூலாதாரம்,ANI

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சிடிஎஸ் ஜெனரல் அனில் செளகான் ப்ளூம்பெர்க் டிவிக்கு வழங்கிய பேட்டியின் காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1999 ஜூலை 29ஆம் தேதியன்று, அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம், தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் தந்தையும், மூலோபாய விவகார நிபுணருமான கே. சுப்பிரமணியம் தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தக் குழு அமைக்கப்பட்டு, 5 மாதங்களில் விரிவான அறிக்கையை மறுஆய்வுக் குழு சமர்ப்பித்தது.

தேவையான திருத்தங்களுக்குப் பிறகு, மறுஆய்வுக் குழுவின் 'From Surprise to Reckoning' என்ற அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பாதுகாப்புப் படைத் தலைவர் அளித்த தகவலுக்குப் பிறகு மத்திய அரசு இப்போது அத்தகைய நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், ஆனால் இப்போது அந்த அபாயம் நீங்கி வருவதாகவும் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில், நாட்டின் பாதுகாப்பு தயாரிப்புகளை ஒரு சுயாதீன நிபுணர் குழு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93l1ergk6eo

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து, பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்."

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டார்ட் மியூசிக்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை.

இது எங்களுக்கு ரொம்ப முக்கியமானது. எப்படி அடி வாங்கினீர்களென மக்கள் அறியவுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

presentation செய்த பாக்கிஸ்தான் விமானப்படை அதிகாரி சொல்லி இருந்தார் - multi domain operation ஐ ஆரம்பித்ததாக.

(இப்படி இந்திய விமானப்படை எதையும் சொல்லவில்லை)

இதில் பாகிஸ்தான் மேலாண்மையை தீர்மானித்தது multi domain operation, அதனுடன் இணைக்கப்பட்ட multi domain electronic warfare .

(ஏனெனில், பார்வைக்கு அப்பால் இருந்த தூரத்தில் இருந்து தாக்கி, இலக்குகள் வீழ்த்தப்படது / அழிக்கப்பட்டது)

இந்த multi domain operation கருது கோள் சீனாவால் விருத்தி செய்யப்பட்டது.

இந்திய (ஊடகங்கள்) சொல்வது போல 1-2 கிழமையில் புதிய தொழில்நுட்ப்பதை புகும் முடியாது முடியாது.

முக்கியமாக, இந்தியாவோடு ஒப்பிடும் போது, மிக குறைந்த விலையில், பாக்கிஸ்தான், மிக கூடிய விளையான (மேற்கு, ருசியா) மாணங்களையும், மற்ற ஆயுதங்களையும் துவாம்சம் செய்த்து உள்ளது, பாகிஸ்தானுக்கு மிக குறைந்த இழப்புகளுடன்.

முன்பு சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல. பாக்கிஸ்தான் விமானப்படை / அரசு / அரசாங்கம் உடனடியாகவு , அமைப்பு அடிப்படையிலும் வினைத்திறனை கட்டி எழுப்பியுள்ளது (சீனாவிடம் வாங்கனாலும், உண்மையில் அந்த குறிப்பிட்ட ஜே-10, சீனா - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு, உற்பத்தி), பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் டிரான்சிலேட்டர் நவ் 👇

https://youtube.com/shorts/gHgpCYDUF1E?si=9eoohbiee8-ywjFD

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போர் விமானத்தை இழந்தோம்’ - கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

30 JUN, 2025 | 02:03 PM

image

'சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க வேண்டுமென்ற கட்டளை காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் உரையாற்றினார். அப்போது தான் இதை சொல்லியதாக தகவல். இந்த வீடியோ நேற்று (ஜூன் 29) கவனம் பெற்றது. இந்நிலையில், அண்டை நாடுகளை போல் இல்லாமல் இந்திய பாதுகாப்பு படை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் சேவை புரிவதாக மட்டுமே அவர் தெரிவித்ததாக இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் போர் விமான இழப்பு தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரியின் பேச்சை சுட்டிக்காட்டி ஆளும் அரசு தேசத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

“கருத்தரங்கில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்த கருத்துக்கு மாறாக அது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஊடக செய்திகள் அதை தவறாக சுட்டிக்காட்டி உள்ளன. மற்ற அண்டை நாடுகளை போல் அல்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் தலைமையின் கீழ் பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தாக்கி அழிப்பதுதான்” என இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என்ற கட்டளையின் காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டியதானது என அந்த பாதுகாப்புப் படை அதிகாரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தாக்குதல் உத்தியை மாற்றி அங்குள்ள ராணுவ நிலைகளையும் குறிவைத்தோம். அதன் பின்னர் தான் தரையிலிருந்து வானத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தினோம் என அவர் விவரித்தார்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் “இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

முதலில் தீவிரவாத கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. அதோடு பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

https://www.virakesari.lk/article/218836

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

28 JUL, 2025 | 05:25 PM

image

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார்.

மக்களவையில் பேசிய அவர் “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன. 

ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும் மே 10 2025 அன்றுஇ அதிகாலை 1.30 மணியளவில் பாகிஸ்தான் ஏவுகணைகள் ட்ரோன்கள் ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. நமது எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.

மே 10 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்துகுக்கு முன்வந்தது. அப்போது இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால் இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும்.

ஆபரேஷன் சிந்தூர் என்பது பிரதேசத்தைக் கைப்பற்றவோ அல்லது போரை தூண்டவோ தொடங்கப்படவில்லை மாறாக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கவும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.

எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை” என்றார்

மேலும் “எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும். இந்தியா எதிரிகளின் பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றால் பதில் ஆம் என்பதுதான். நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாக இருந்தால் இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதுதான். இதற்கான பதில் இல்லை என்பதுதான். நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்றார்.

https://www.virakesari.lk/article/221188

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல்

இந்தியா, பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர், ராணுவ மோதல், விமானப்படை, ஏபி சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார்.

இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது.

பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார்.

'80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்'

இந்தியா, பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர், ராணுவ மோதல், விமானப்படை, ஏபி சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று விவரித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று அவர் விவரித்தார்.

"இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், "இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார்.

மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார்.

எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 'ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78znz37862o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.