Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 3

14 May, 2025 | 11:38 AM

image

அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். 

ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும்.

இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி,  

அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவை விட "உறுதியான நட்புறவு கொண்டோர்கள் வேறு யாரும் இல்லை".  சிரியாவுக்கு எதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படும்,  தற்போது நாடு "சிறந்த வாய்ப்புடன்" முன்னேற வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரத்தை அதன் செயற்கை நுண்ணறிவு திறன்களை அதிகரிப்பதன் மூலம் பன்முகப்படுத்த ஆர்வமுள்ள சவுதி அரேபியாவை உயர்மட்ட நிர்வாகிகள் சந்திக்கின்றனர்.

ஹுவாங் இந்த விஜயத்தின் போது Nvidia தனது 18,000க்கும் மேற்பட்ட சமீபத்திய AI சிப்களை சவுதி நிறுவனமான Humain-க்கு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். https://www.virakesari.lk/article/214669

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி , @Kandiah57... அளவுக்கு மிஞ்சின முஸ்லீம் அகதிகளை வைத்து, சோறு போடும்... ஜேர்மனிக்கு ஒரு ஒப்பந்தமும் கிடைக்கவில்லையா. 🤣

எல்லாவற்றையும் @ஈழப்பிரியன்னின் , அமெரிக்கன் லவட்டிக் கொண்டு போகிறான். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்குத்தான் விசர் எண்டால் சவூதிக்கும் என்ன விசரே? 🤣

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

இஸ்ரேலை எதிர்ப்பது போல் நடித்தது இப்போ விளங்கி இருக்கும்.

கட்டார், டோகா ட்ரம்புக்கு பெறுமதியான விமானம் ஒன்றை பரிசாக வழங்கியதாக சில செய்திகள் கூறுகின்றன. இதன் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

497809262_1302395054589627_6248287098299

492930777_1302389754590157_4921005597584

493711420_1302390741256725_7681426619956

497566127_1302389734590159_1887118560054

496148155_1302389791256820_9221184779316

ட்ரம்பு... மகிழ்ச்சியில் 32 பல்லும் தெரிய சிரிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இனி இதை எப்படி யாருக்கு எதிராக எப்போது பாவிக்க வேண்டும் என்பதை யார் முடிவு எடுக்கிறது?

முஸ்லீம் வேண்டாம்

அவர்களின் பணம் மட்டும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

@குமாரசாமி , @Kandiah57... அளவுக்கு மிஞ்சின முஸ்லீம் அகதிகளை வைத்து, சோறு போடும்... ஜேர்மனிக்கு ஒரு ஒப்பந்தமும் கிடைக்கவில்லையா. 🤣

எல்லாவற்றையும் @ஈழப்பிரியன்னின் , அமெரிக்கன் லவட்டிக் கொண்டு போகிறான். 😂

ஜேர்மனி ஒருபோதும் இரட்டை வேடம் போடுவதில்லை இது உலகம் அறிந்த ஒரு பரம ரகசியம் ஆனால் அமெரிக்கா இரண்டு அல்ல மூன்று நான்கு வேடங்களிலும் நடிக்கும்

ஒரு நாட்டுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களையும் விற்றுக்கொண்டு அதுவும் உறுதியான ஒப்பந்தம் மூலம் விற்றுக்கொண்டு போர் செய்யாதீங்கள். என்று எப்படி கோர முடியும் ??

இந்த ஆயுதங்களை என்ன செய்வது??? பாவிக்க வேண்டும்,..அதற்கு போர் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆயுதங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு விற்றுவிடலாம் பணம் மீண்டும் வருகிறது ஆகவே உலகில் பயங்கரவாதிகளின். வளர்ச்சிக்கு காரணம் அமெரிக்கா ஆகும் அமெரிக்கர்கள் ஆயுத வியாபாரத்தை நிறுத்தி ஜேர்மன்காரன் போல உடலை முறித்து. உழைத்து சாப்பிட வேண்டும் 😀. உலகம் அமைதி பூங்காவாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

497809262_1302395054589627_6248287098299

492930777_1302389754590157_4921005597584

493711420_1302390741256725_7681426619956

497566127_1302389734590159_1887118560054

496148155_1302389791256820_9221184779316

ட்ரம்பு... மகிழ்ச்சியில் 32 பல்லும் தெரிய சிரிக்கின்றார்.

இந்தப் படத்தில் உள்ள சிரியனா முன்னர் அமெரிக்காவால் பயங்கரவாதியாக பார்க்கப்பட்டவர்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

497809262_1302395054589627_6248287098299

492930777_1302389754590157_4921005597584

493711420_1302390741256725_7681426619956

497566127_1302389734590159_1887118560054

496148155_1302389791256820_9221184779316

ட்ரம்பு... மகிழ்ச்சியில் 32 பல்லும் தெரிய சிரிக்கின்றார்.

Expand

இந்தப் படத்தில் உள்ள சிரியனா முன்னர் அமெரிக்காவால் பயங்கரவாதியாக பார்க்கப்பட்டவர்

இவரைப் பிடித்து கொடுத்தால் 10 மில்லியனாம்.

சொன்னது அமெரிக்கா.

கை குலுக்கியது அமெரிக்க ஜனாதிபதி.

US President Donald Trump on Wednesday had tea with a former jihadist who until recently had a $10 million US bounty on his head.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரைப் பிடித்து கொடுத்தால் 10 மில்லியனாம்.

சொன்னது அமெரிக்கா.

கை குலுக்கியது அமெரிக்க ஜனாதிபதி.

US President Donald Trump on Wednesday had tea with a former jihadist who until recently had a $10 million US bounty on his head.

அரசியலில் தமக்குத் தேவை என்றால், தலைகீழாக மாறி விடுவார்கள்.

டக்ளஸ் தேவானந்தாவும் 1986’ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமைக்கும், நான்கு பேரை காயப்படுத்தியமைக்குமாக இந்தியப் பொலிசாரால் அறிவிக்கப் பட்ட குற்றவாளியாக இருந்த போதும்… அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்தவுடன் டில்லி வரை சென்று இந்தியப் பிரதமரை சந்தித்து விட்டு வந்தவர்கள்.

சட்டம் என்பது…. ஏழைகளுக்கு மட்டும் தான். அரசியல்வாதிகளுக்கு அது வளைந்து கொடுக்கும் கேவலம் அவ்வப்போது நடந்து கொண்டு இருப்பதை கண் முன்னால் காண்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில் சிஐஏ க்காக வேலை செய்தவர்கள்

பின்னாளில் பயங்கரவாதி என்று கொலை செய்தார்கள்.

இவர் பயங்கரவாதியாக இருந்தவர்

இப்போ சேர்ந்துள்ளார்.

அப்ப எப்போ?

இவரைப்பற்றி @goshan_che னின் நிலைப்பாடு என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ட்ரம்பு... மகிழ்ச்சியில் 32 பல்லும் தெரிய சிரிக்கின்றார்.

யாரை எந்த உச்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசியலுடன் கூடிய பொருளாதாரமே தீர்மானிக்கின்றது.

நீதியோ தர்ம நியாயங்களோ அல்ல.

2 hours ago, ஈழப்பிரியன் said:

இவரைப் பிடித்து கொடுத்தால் 10 மில்லியனாம்.

சொன்னது அமெரிக்கா.

கை குலுக்கியது அமெரிக்க ஜனாதிபதி.

இனியாவது விடுதலைப்புலிகளையும் அவர்களின் நியாமான கொள்கைகளையும் கொச்சைப்படுத்துபவர்கள் கவனிக்க....

புதிய பாதையில் புதிய கோணங்கள் திறக்கப்படும்.

ஜமால் கஷோக்ஜியை துருக்கியில் வைத்து கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் பின் சல்மானுடன் 142 பில்லியன் வியாபார ஒப்பந்தம் செய்த அமெரிக்காதான் இன்றும் அன்றும் கட்டியணைத்து விருந்துபசாரம் செய்கின்றது.ஆனால் இன்றும் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு அமெரிக்கா இன்றும் விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் பொருளாதார தடையை நீக்குவது பற்றி பேசியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, nunavilan said:

சிரியாவில் பொருளாதார தடையை நீக்குவது பற்றி பேசியுள்ளார்.

அண்ணன் அமெரிக்காவின் சொல் கேட்டு நடந்த ஐரோப்பியர்கள் இப்போது தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசியன் வளைகுடாவை அறபு வளைகுடா என ட்ரம் மாற்றி ஈரானுக்கு கடுப்பு ஏற்றியுள்ளார். கூகிளும் இதனை மாற்றியுள்ளதாம். ஈரான் கூகிளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாம். அரபு நாடுகளின் தலையில் மிளகாய் அரைத்துள்ளார்கள் என்ற கருத்து பட அரபு தொலைக்காட்சிகளும் , பல்கலைகளக விரிவுரையாளர்களும் விமர்சித்துள்ளார்கள்.

சி என் என் ட்ரமிடம் இஸ்ரேலுக்கு போகாமல் ஏன் அரபு நாடுகளுக்கு போயுள்ளீர்கள் என கேட்டதற்கு இப்பேச்சுவார்த்தைகளால் இஸ்ரேலுக்கு தான் நன்மை என கூறியுள்ளார்.

கட்டாருடன் 100 பில்லியனுக்கு மேலாக வியாபார ஒப்பந்தங்களில் ட்ரம் கையெழுத்து இட்டுள்ளதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நாடாக பொய் பிச்சை எடுக்கிறார்போல!!

இதைத்தான் வியாபார யுக்தி என்று சொல்வார்களோ??

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அண்ணன் அமெரிக்காவின் சொல் கேட்டு நடந்த ஐரோப்பியர்கள் இப்போது தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள்.

முத‌ல் இட‌ம் டென்மார்க் இன‌த்த‌வ‌ர் 👍........................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

இஸ்ரேலை எதிர்ப்பது போல் நடித்தது இப்போ விளங்கி இருக்கும்.

கட்டார், டோகா ட்ரம்புக்கு பெறுமதியான விமானம் ஒன்றை பரிசாக வழங்கியதாக சில செய்திகள் கூறுகின்றன. இதன் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

497869890_1155889539888915_5969492664104

கட்டார் நாடு.... ட்ரம்புக்கு, 3400 இந்திய கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தது.

பரிசாக வரும் சொகுசு விமானத்தை வேண்டாம் என கூற... நான் என்ன முட்டாளா?: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி

Polimer News Digital

  • கருத்துக்கள உறவுகள்

496941109_1128155466006158_6284457158335

கத்தார் ஏர்வேஸுக்காக.... அமெரிக்க நிறுவனமான போயிங்கிடம், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள 160 விமானங்களை கத்தார் ஆர்டர் செய்துள்ளது.

Jaffna Muslim

  • கருத்துக்கள உறவுகள்

495448371_1127998936021811_1625023401484

495225503_1127999036021801_7991641541690

495532585_1127999196021785_3525211912613

496075604_1127999292688442_2190420413343

497399424_1127999386021766_4272148929642

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வளைகுடா சுற்றுப்பயணத்தின் 2 வது நாளான நேற்று, புதன்கிழமை கத்தார் சென்றடைந்தார். ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் தரையிறங்கினார், அங்கு கத்தார் எமிர் ஷேக் தமீம் அவரை வரவேற்றார்.

Jaffna Muslim 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் சிஐஏ க்காக வேலை செய்தவர்கள்

பின்னாளில் பயங்கரவாதி என்று கொலை செய்தார்கள்.

இவர் பயங்கரவாதியாக இருந்தவர்

இப்போ சேர்ந்துள்ளார்.

அப்ப எப்போ?

இவரைப்பற்றி @goshan_che னின் நிலைப்பாடு என்ன?

அரைநிர்வாண பக்கிரி என அழைத்த காந்தியை, பயங்கரவாதி என அழைத்த மண்டேலாவை பங்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கவில்லையா?

அதுபோலத்தான் இதுவும்.

அநேகமாக சகல “தீவிரவாதிகளுக்கும்” வாழ்வில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே மிகுதி அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

நாடு நாடாக பொய் பிச்சை எடுக்கிறார்போல!!

இதைத்தான் வியாபார யுக்தி என்று சொல்வார்களோ??

இவரது கடந்த காலத்திலும் இப்படித்தான் பல ஒப்பந்தங்கள் செய்தார்.

ஆனாலும் நாளடைவில் கால்வாசி கூட வந்து சேரவில்லை என்று சொல்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.