Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 MAY, 2025 | 10:55 AM

image

"நாங்கள் விளையாட்டுக்கு சண்டைபிடித்துக்கொண்டோம்" - விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அளித்த விளக்கம் இதுதான்.

france_president_slap1.jpg

வார இறுதியில் தென்கிழக்காசிய பயணத்தை ஆரம்பிப்பதற்காக விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் கணவரின் முகத்தில் கைவைத்து தள்ளிவிடுவதை காண்பிக்கும் வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த தருணம் பிரான்சின் தலைப்புச்செய்திகளில் வேகமாக இடம்பிடித்தது.

அப்போதுதான் திறந்த விமானக்கதவு ஊடாக வீடியோக்கள் பார்த்த விடயத்தை பிரான்ஸ் ஊடகங்கள் அர்த்தப்படுத்த முயன்றன.

பிரான்சின் லு பரிசியன் நாளேட்டின் இணையத்தளம் அறையா அல்லது சண்டையா என கேள்வி எழுப்பியது.

france_president_slap2.jpg

பிரான்ஸ் ஜனாதிபதி தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும் படத்திற்கு பலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி நான் மாணவனாகயிருந்த வேளை அவர் ஆசிரியராகயிருந்தார், நாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் விமானத்தில் வேடிக்கையாக விளையாடினோம் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் விளையாட்டுக்கு சண்டை பிடித்துக்கொண்டோம், இந்த விடயத்தை அளவுக்கதிகமாக ஏதோ புவிகிரக பேரழிவு போல ஊதிப்பெருப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிஊடகவியலாளர் எடுத்த வீடியோவில், பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாமிற்கு விமானத்தில் வந்து இறங்குவதையும், சீருடை அணிந்த நபர் ஒருவர் விமானத்தின் கதவை திறந்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளே காணப்படுவதை காண்பிப்பதையும் ஜனாதிபதி யாருடனோ கதைத்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

பிரிஜிட் மக்ரோனின் கரங்கள் ( சிவப்பு ஆடை) மக்ரோனை தள்ளிவிடுவதையும், ஒரு கை மக்ரோனின் வாயையும் மூக்கின் ஒரு பகுதியையும் மூடுவதையும், மற்றை கை அவரது தாடையை பிடித்திருப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி பின்வாங்கி, தலையை திருப்பிகொள்கின்றார், பின்னர் கமராக்கள் தன்னை பதிவு செய்வதை பார்த்ததும், புன்னகைத்து கை அசைக்கின்றார்.

அதன் பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானப்படிகளில் காணப்படுகின்றார், ஜனாதிபதி தனது கரங்களை மனைவியை நோக்கி நீட்டுகின்றார், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை, இருவரும் விமானத்திலிருந்து இறங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

france_president_slap_3.jpg

இந்த படங்களும் அதற்கான எதிர்வினைகளும், தவறான தகவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, கடந்த சிலவாரங்களாக தன்னை பற்றி வதந்திகளிற்காக வேறு வீடியோக்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215789

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

emmanuel-brigitte-macron-052625-2-21cd0f

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்  அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர்  சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான  காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும்  நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத்  தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி  மெக்ரோன் 72 வயதான  தனது ஆசிரியரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்குப் பின்னர்  மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433368

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்!

விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்!

விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

திருமணம்... சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது. 😉

1 hour ago, Eppothum Thamizhan said:

மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

செய்தியைக் கவனியுங்கள், திருமணத்தின் பின்னர்தான் மக்ரோன் ஏற்றம் கண்டுள்ளார். ஜனாதிபதி ஆகியுள்ளார். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையானால் யோசித்து முடிவு எடுங்கள் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இணையவன் said:

செய்தியைக் கவனியுங்கள், திருமணத்தின் பின்னர்தான் மக்ரோன் ஏற்றம் கண்டுள்ளார். ஜனாதிபதி ஆகியுள்ளார். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையானால் யோசித்து முடிவு எடுங்கள் 🤣

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்... பெண் உள்ளார் என்பது இதைத்தானோ. 😂

அடிக்கின்ற கைதான்... அணைக்கும் என்று மக்ரோன் ஆறுதலைடைய வேண்டியதுதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

டீச்சர் அடிப்பாதானே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அடிக்கின்ற கைதான்... அணைக்கும் என்று மக்ரோன் ஆறுதலைடைய வேண்டியதுதான். 🤣

பப்பிளிக்கிலையே உந்த சாத்து எண்டால்.....வீட்டில உலக்கையாலதான் சாத்துப்படி போல... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் நின்றபெண்ணுக்கு கிஸ் அடிச்சிருப்பார் போல ...அது தந்த கோபமாக்கும் . இருந்தாலும் மனுஷன் சமாளிக்கிறார் .😃

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

டீச்சர் அடிப்பாதானே🤣

டீச்சர் அடிச்சது இங்கேயும் தெரியுது. வீட்டில் நடப்பது விமானத்தில் நடந்ததால் வெளியே வந்து விட்டது. குடும்பம் என்றால் அடிதடி இல்லாமலா ஆனால் நாட்டின் முதல் மகன்????

13 hours ago, Eppothum Thamizhan said:

கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்!

விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

நான் அண்மையில் இங்கே ஒரு கதை எழுதினேன். அதில் விரும்பியதை அடைந்தவரும் நிம்மதியாக இல்லை விரும்பியது கிடைக்காதவனும் நிம்மதியாக இல்லை என்று எழுதினேன். இவர் இதில் முதல் ரகம். ஆனால் காதல், இல்வாழ்க்கை மற்றும் திருமணம் சம்பந்தமாக எனக்கு இருக்கும் அத்தனை அனுமானங்கள் மற்றும் பட்டறிவுகள் அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டது உந்தாளின் மணவாழ்க்கை.😭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

டீச்சர் அடிச்சது இங்கேயும் தெரியுது. வீட்டில் நடப்பது விமானத்தில் நடந்ததால் வெளியே வந்து விட்டது. குடும்பம் என்றால் அடிதடி இல்லாமலா ஆனால் நாட்டின் முதல் மகன்???

அரசியலில் தோற்றப்பாடு முக்கியம்.

நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அரசியலில் தோற்றப்பாடு முக்கியம்.

நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.

நிச்சயமாக பாதிக்கும் ஆனால் இனி அவர் ஜனாதிபதியாக இங்கே வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2025 at 18:00, குமாரசாமி said:

பப்பிளிக்கிலையே உந்த சாத்து எண்டால்.....வீட்டில உலக்கையாலதான் சாத்துப்படி போல... 🤣

அதேதான் என் நினைப்பும், நாட்டுக்கே ராஜாவானாலும், வீட்டில் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.