Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

https://www.politico.eu/article/iran-foreign-minister-abbas-araghchi-russia-vladimir-putin-us-strikes-nuclear-sites/

அமெரிக்க தாக்குதலை அடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் இரஸ்சியாவிற்கு பயணம் செய்திருந்தார்.

3 hours ago, vasee said:

https://www.politico.eu/article/iran-foreign-minister-abbas-araghchi-russia-vladimir-putin-us-strikes-nuclear-sites/

அமெரிக்க தாக்குதலை அடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் இரஸ்சியாவிற்கு பயணம் செய்திருந்தார்.

ஆம் இதை அறிந்துள்ளேன்.

ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம்

அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம்.

ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது.

(அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)

Edited by Kadancha

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஈரானில் இளையவர்கள் மிக தெளிவாக இந்த அடிப்படைவாத அரசை எதிர்கிறார்கள்.

ஆனால் இரும்பு கரம் கொண்டு அடக்கபடுகிறார்கள்.

எனக்கு இஸ்ரேல்-ஈரான் போரில் இருபகுதி மீதும் ஈடுபாடு இல்லை.

ஆனால் அயதுல்லா கொமேனி என்ற முன்னாள் பிரெஞ் உளவாளி, பின்னால் அடிப்படைவாதியின் இஸ்லாமிய புரட்சியின் பின்னான கொடுங்கோல் இஸ்லாமிய தியோகிரசி அழிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்தியாவில் ம‌ட்டும் என்ன‌வாம் , ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ளின் அராஜகம் , அதை த‌ட்டி கேட்டால் ஈன‌ இர‌க்க‌ம் இன்றி மக்க‌ளை கொலை செய்வ‌து ,

ஜல்லிக்கட்டு விளையாட்டை த‌டை செய்ய‌ போகிறோம் என‌ சொல்ல‌ , அதுக்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பெரும் எழுச்சியா போராடின‌ போது , பொது ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு காவ‌ல்துறை நெருப்பு வைத்து எரிச்ச‌வை ,

இதை விட‌ வ‌ட‌ நாட்டில் கொடுமைக‌ள் அதிக‌ம் ம‌த‌ ரிதியா ம‌ற்றும் அர‌சிய‌லால்..................

ஈரான் அர‌சு த‌ங்க‌ட‌ நாட்டை அவ‌ர்க‌ளின் ம‌த‌ க‌ட்டுப் பாட்டுட‌ன் வைத்து இருக்க‌ விரும்புகின‌ம்👍................................

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் புரிய‌ல‌ என‌க்கு

ஈரான் அணுகுண்டு த‌யாரிப்ப‌தில் இருந்து பின் வாங்காது....................சிறு கால‌ம் க‌ழித்து மீண்டும் ஈரானுட‌ன் போர் செய்ய‌ ர‌ம்ப் திட்ட‌மா

ஈரான் விழிப்புண‌ர்வோட‌ இருக்க‌னும்...................................

Screenshot-20250624-160746-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ayatollah ali khamenei 94வ‌ய‌து வ‌ரை வாழுவார் அது என‌து விருப்ப‌மும் கூட‌ 🙏🇮🇷👍

அவ‌ர் இப்ப‌வே தெரிவு செய்து விட்டார் த‌ன‌க்கு பிற‌க்கு ஈரானை யார் ஆட்சி செய்வ‌தென‌ , அதில் மூன்று பேர தெரிவு செய்து இருக்கிறார்.............................ஈரானின் ப‌ல‌ம் என்ன‌ என்று இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ந‌ங்கு புரிந்து இருக்கும்..................................

இப்போ இருப்பவர் கமேனி.

இதற்கு முன் இருந்தவர் கொமேனி.

நீங்கள் நினைப்பது போன்ற வகையில் ஈரானில் தனிமனித ஆட்சி நடப்பதில்லை. அதிஉச்ச தலைவர் என வாழ்நாளுக்கு ஒருவரை தெரிவு செய்தாலும், அவரை நியமிப்பது நிபுணர்கள் குழு எனும் குழாமே. இந்த தலைவர் எப்பொதும் revolutionary guardsஎனும் படையின் தலைவரிலேயே தங்கி இருப்பார்கள்.

ஈரானின் ஆட்சியை தக்க வைக்கும் பலம் RG யிடம்தான் உள்ளது. அயதுல்லாக்கள் மக்களால் வெறுக்கப்படும் நிலை வந்தால் பங்களாதேசில் நடந்தது போல் படைகள் ஓடி விடும்.

இஸ்ரேல் அடிப்பதால் மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஸ்டாலினின், லெனினின் கடைகாலத்தில் என்ன நடந்தது, அவர்கள் விரும்பிய ஆட்களுக்கு அடுத்த தலைமை கிடைத்ததா என்பதை எல்லாம் பார்த்தால் கமேனியின் ஈரானின் மீதான பிடி அத்தனை வலுவானது அல்ல என புரியும்.

அதே போல் ஈரானின் வான் பரப்பு முழுவதும் இஸ்ரேலின் ஆதிக்கம்.

ஈரானின் ஒரே ஆயுதம் டிரோன், ஏவுகணைகள் மட்டுமே.

இதில் சீனா இறங்கினால் மட்டுமே ஈரானால் நீடித்து நிற்க முடியும்.

அதே போல் டிரம்பின் போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன்.

டிரெம்பிற்கு இடியப்ப சிக்கல்.

அவரின் MAGA மோட்டு கூட்டம் நவ நாஜிகள், யூத வெறுப்பாளர்.

ஆனால் எப்ஸ்டீன் பைல்கள் உட்பட டிரம்பின் பல பிடிகள், புட்டினை போலவே, இஸ்ரேலிலும் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த யூத வெறுப்பாளரை பேய்க்காட்டி, வேறு வழியில்ல்லை, அதான் அமேரிக்கா முழு வீச்சில் இறங்கியது என காட்ட டிரம்ப் ஆடும் நாடகமே இந்த மோதல் தவிர்ப்பு.

பிகு

ஈரான் கத்தாரில் இருந்த அமரிக்க தளத்தை தாக்கியதும், அமேரிக்கா பயந்து, மறுவினை காட்டாமல் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது என நான் நம்பவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் MAGA மோக்குகளை தன் வழிக்கு எடுக்க டிரம்புக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதை இந்த மோதல் தவிர்ப்பு வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இஸ்ரேல் காசு கொடுத்து சிறு குழுக்க‌ளை அன்டை நாடுக‌ளுக்கு எதிராக‌ எப்ப‌டி இய‌க்கிய‌தோ , அதையே தான் ஈரானும் செய்யுது , ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ன் இஸ்ரேல் , இந்த‌ போர் எத‌னால் இவ‌ள‌வு பெரிதாகின‌து , ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு தீர்வு , அதாவ‌து த‌னி நாடு................................

மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது.

அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படைவாதம் உலகில் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற நாடுகளில் நேரடியாகவும் மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும் உள்ள அடிப்படைவாதத்தை எதிர்தது மாற்றங்களை கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டதே. ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் பொஸ்னியா மற்றும் துருக்கிக்குள் நுளைந்தவுடனேயே மத அடிப்படைவாதத்தின் வாசனை மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும்.

நாடுகளின் வளங்களை ஒரு குறிப்பிட்ட வர்ககம் தம்வசப்படுத்தி அனுபவிப்பதற்கே இப்படியான அடிப்படை வாதங்கள் மக்களிடையே தூண்டப்படுகின்றன.

இலங்கையில் பௌத்த மேலாண்மை புத்த மதத்துக்கான முன்னுரிமை எந்தளவுக்கு தவறானதோ அதேயளவுக்கு ஈழம் சிவபூமி என்ற கூக்குரலும் தவறானதே. அண்மைக்காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைப்பவர்களிடமும் இவ்வாறான மத அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் போக்கை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2025 at 08:56, கிருபன் said:

ஈரானின் கதை கந்தல்தான். முக்கியமானவர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலின் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!

இப்ப நிலமை வேறமாதிரி இருக்கே!!!

ஈரான் Unconditional surrender செய்ய வேண்டும் என்ற ட்ரம்ப் அமெரிக்கத் தளங்களைத் தாக்கினால் ஈரானைத் தாக்குவோம் என்ற ட்ரம்ப் இரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்கிய மறுநாளே போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கிறார் ஆட்சி மாற்றம் கோரியவர் யுரேனியம் செறிவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றவர் அடக்கி வாசிக்கிறார்.வென்றது ஈரான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

யூத‌ர்க‌ளும் அமெரிக்க‌ர்க‌ளும் ந‌ல்ல‌ பிள்ளையாக‌ இருக்க‌ ஈரான் போய் சொன்ன‌தா உங்க‌ளை உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து இல்லாம‌ செய்வோம் என‌

மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம்.

இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய‌ புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம்.

சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது.

இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக‌ நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

செவ்வாய்க்கிழமை காலை 0400 மணிக்கு தொடங்கும் இந்த போர் நிறுத்தம் 24 மணி நேர கட்டமாக இருக்கும் என்றும், ஈரான் ஒருதலைப்பட்சமாக முதலில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும் என்றும் அமெரிக்கத் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

ட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ள் ஈரானுக்கு செய்த‌ துரோக‌ங்க‌ள் ப‌ல‌........................அணு ஆயுத‌த்தை இவ‌ர்க‌ள் வைத்து ஈரானை மிர‌ட்ட‌ வில்லையா , இஸ்ரேல் அர‌சை சேர்ந்த‌ ஒருத‌ர் போன‌ வ‌ருட‌ம் த‌ங்க‌ளிட‌ம் இருக்கும் அணு குண்டை ஈரான் மீது போட‌னும் என‌ வெறித் த‌ன‌த்தோடு சொல்லும் போது , ஈரானிய‌ர்க‌ளுக்கு எப்ப‌டி இருந்து இருக்கும்....................ஈரான் அணுகுண்டு செய்வ‌தில் த‌வ‌று எதுவும் இல்லை , அவ‌ர்க‌ளின் நாட்டின் பாதுகாப்புக்கு அணுகுண்டு முக்கிய‌ம் , அப்ப‌ தான் அமெரிக்க‌ன் இஸ்ரேல் அட‌ங்குவாங்க‌ள் ,

ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன.

ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன்.

இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது.

3 hours ago, வீரப் பையன்26 said:

ஈரான் அணுகுண்டை சிறு குழுக்க‌ளுக்கு கொடுத்தால் அத‌ன் பின் ஈரானை த‌னிமை ப‌டுத்த‌ வேண்டிய‌து தான் , ஆனால் ஈரான் அப்ப‌டி செய்யாது , ஹிஸ்புள்ளாவுக்கு கூட‌ ஈரான் ச‌க்தி வாய்ந்த‌ குண்டுக‌ளை கொடுக்க‌ வில்லை , அப்ப‌டி கொடுத்து இருந்தா , ஹ‌மாஸ் பிர‌ச்ச‌னையின் போது இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திச்சு இருக்கும்..................

ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இதில் ஈரானை குறை சொல்ல‌ முடியாது , வ‌ட‌ கொரியா கிறுக்க‌ன் அணு குண்டு வைத்து இருக்கும் போது , ஈரான் வைத்து இருப்ப‌து த‌வ‌று கிடையாது

வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள்.

3 hours ago, வீரப் பையன்26 said:

நான் ஈரான் பெண்னுட‌ன் ஒன்னா சாப்பிட்டு இருக்கிறேன் இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ ப‌ம்ப‌ல் க‌தை க‌தைச்சு இருக்கிறோம் , அவள் டென்மார்க்கில் வ‌சிப்ப‌தால் த‌லைக்கு துணிய‌ போடுவ‌தில்லை....................ஈரான் நாட்டில் வ‌சிப்ப‌தாக‌ இருந்தால் அந்த‌ நாட்டு அர‌சாங்க‌த்தில் சொல் ப‌டி தான் ந‌ட‌க்க‌னும் அது தான் முறை ......................................

அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு வரலாற்று காலச்சக்கர ஒப்புமையும் இருக்கிறது

கி,மு 331 இல், அலெக்ஸாண்டர் சிறிய அரசாக (இராசியமாக) ஒப்பீட்டளவில் மிகச் சிறிய படையுடன், Achaemenid வம்ச டாரியஸ் ஆட்சி செய்த பாரசீக பேரரசை கொண்ட டாரியசின் மிகப் பெரும் படையுடன் மோதி , டாரியஸ் ஐ தோற்கடித்து, பாரசீக பேரரசை வென்று, பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படும் இப்போதைய ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முநைந்து, அழிவினை சந்தித்து, பஞ்சாப்பில் , விபச நதி அடியில் (இதுவே சரஸ்வதி ஆறு என்று அழைக்கப்ட்டதாக நம்பப்படுகிறது, இது வற்றியதே சிந்துவவெளி நாகரிகம் அழிந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் நம்பப்படுகிறது) அலெக்சாந்தரின் படைகள் அலெக்ஸாண்டருக்கு எதிராக கிளர்ந்த படியால் கி.மு 325 இல் திரும்பினார் பபிலோனியாவுக்கு (இன்றைய இராக், குறிப்பாக பாக்தாத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்கள் தெற்காக). அலெக்சாண்டர், பபியலோனியாவில் கி.மு 323 இறக்க, அலெக்ஸாண்டரின் மசடோனியன் பேரரசு உடைந்தது.

(அலெக்சாண்டர், டரியஸ் இன் பாரசீக பேரரசை (இப்போதைய இரான் முழுமையாக) வென்றதே மேற்கு நாகரிகத்தின் எழுச்சியாக கருதப்படுவது)

இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் இதன் காலச்சக்கர பிம்பமகா இருக்கிறது.

வல்லரசு அமெரிக்கா ஆஃப்கானில் புதைந்து (இந்த காலத்திலேயே சீனா மட்டும் அமெரிக்காவுக்கு பொடியாக எழும்பியது, அமெரிக்கா அரசியல், ராஜதந்திர மற்றும் வரலாற்று வட்டங்கள் பொதுவாக ஆப்கானை புதைகுழி என்கின்றன), திரும்பி, சிறிய இரானுடன் மோதி, ஈரான் கட்டார், இராக்கில் (இதை அமெரிக்கா படைகள் கண்காணிப்பில்படவில்லை என்கிறது) ஆக குறைந்தது குறியீடு அளவிலாவது அமெரிக்காவை தாக்கி பெரும்பாலும் முடிவுக்கு வந்து இருக்கிறது. மீறல்கள் தொடர்கிறது. அல்லது டிரம்ப் இந்த வழமையான பணியாகவும் இருக்கலாம் (சண்டை நிறுத்தம் என்று விட்டு, கபடமாக அடிப்பதுக்கு, அல்லது சண்டை நிறுத்தம் என்று கொண்டே அடிப்பதுக்கு )

ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.

என் அவதானிப்பில், சில ஆதரவு நிலைப்பாடுகள் முழுமையான முட்டாள் தனத்திலிருந்து தான் உருவாகின்றன. பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள் தனம் தான் இந்த ஈரான் முல்லாக்களுக்கான ஆதரவும், மக்களைப் பட்டினி போட்டு தான் தின்று கொழுக்கும் கிம்மை "தலைவா!" என்று பணியும் நிலைப்பாடும்.

அடிப்படை வாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்த பூமியில் இழப்பதற்கு எதுவும் இல்லையென்று வாழ்வோர். வானத்தை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி விட்டு, செத்தால் "சாஹிட்" ஆவோம், விண்ணுலகில் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் இவர்கள். இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂!

இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள, ஒரு மனிதனுக்கு எத்தனை நியூரோன்கள் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய மூன்று நாடுகளும் தங்களுக்கு வெற்றி என்று கொண்டாடிக் கொண்டே அப்படியே கலைந்து போங்கள். நேரடியாக பங்குபற்றாமல் மறைகரங்களாக இருந்தவர்களும் வென்றவர்களே.

ஆனால் சில விசயங்கள்:

  1. இப்பொழுதும் அதிபர் ட்ரம்பின் சமூகவலைப் பதிவுகளை, பேட்டிகளை, பேச்சுகளை இந்த உலகில் எவராவது நம்புகின்றார்கள் என்றால், அவர்களின் தலைகள் மேல் ஜிபியூ - 57 இராட்சதக்குண்டை போடுவதில் தப்பேயில்லை.

  2. அதிபர் கமேனிக்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் நன்கு தெரியும். அவசரப்பட்டு தலையை வெளியே காட்டாமல் இருக்கும் இடத்தில் அப்படியே இருந்து கொண்டால் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் 94 வயதுகள் வரை அவர் அதே இடத்தில் வாழக்கூடும். இந்த 94 என்பது ஒரு மாஜிக் நம்பராக பல இடங்களிலும் பேசப்படுகின்றது. அது ஏன் 94.............

  3. ஈரான் அணுகுண்டு செய்வதற்கு முன்னர் அதன் ஆகாயத்தை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தால் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் போகின்றவர்களே ஈரானுக்கு கல்லால் எறிவார்கள்.

  4. மிக முக்கியமானது: இன்று உலகச் சந்தையில் எண்ணெயின் விலை நன்றாகச் சரிந்துவிட்டது. இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த விலையை விட இன்று குறைவாகிவிட்டது. இறந்தவர்களும், இழந்தவர்களும் தவிர, ஏனையோர் குறைந்த விலை எண்ணெ வாங்கி மகிழலாம். 'ஒரு கலன் எட்டு டாலர்கள் ஆகியது........... கலிஃபோர்னியா கவிழ்ந்தது.............' என்ற யூடியூப் தலைப்பு அடுத்த மத்திய கிழக்கு சண்டை வரை காத்திருக்கவேண்டும்.

  5. 'மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பாகிவிட்டதா..............' - கமேனி 94 வயதில் போய்விடுவார், ட்ரம்ப் கூட போய்விடுவார், ஆனால் இந்த தலைப்பு சாகாவரம் பெற்றது.

  6. இப்பொழுது 12 நாட்களுக்கு முன்னர் விட்ட இடத்திற்கு உலகம் போகவேண்டும், அதாவது ரஷ்யா - உக்ரேன் எல்லைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம்.

இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய‌ புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம்.

சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது.

இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக‌ நிற்கிறார்கள்.

உங்க‌ட‌ க‌ருத்துக்கு ந‌ன்றி ர‌கு அண்ணா

ஈரான் இஸ்ரேல் எதுவ‌ரை கால‌ம் ஒற்றுமையாக‌ இருந்தார்க‌ள் என‌ என‌க்கும் தெரியும் , இரு நாட்டு உள‌வுத்துறைக‌ளும் ஒன்னா செய‌ல் ப‌ட்ட‌தும் தெரியும் , பிற‌க்கு அவ‌ர்க‌ளுக்குள் விரிச‌ல் வ‌ந்த‌வ‌ரை ஆய்வில் தெரிந்து கொண்டேன் ,

அதுக்கு பிற‌க்கான‌ பிர‌ச்ச‌னைக‌ள் சில‌வ‌ற்றை தெரியும் , எல்லாம் தெரியும் என்று என‌க்கு அடிச்சு விட‌த் தெரியாது , தெரிந்த‌தை ம‌ட்டுமே எழுதுவேன் அண்ணா............................

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kadancha said:

ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).

என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள்.

மலைக்கும், மண்ணுக்கும் மேல் தங்கள் இஷ்டப்படி குண்டுகள் போட்டவர்களுக்கு, அங்கே இருக்கும் இராணுவ கட்டமைப்புகள் மேல், அரச கட்டமைப்புகள் மேல், மக்களை வெளியேற சொல்லிவிட்டு பெரும் நகரங்கள் மேல் குண்டுகள் போடமுடியாதா?

வெற்றி - தோல்வி - செருக்கு என்பதையும் தாண்டி, ஏதோ கொஞ்சமாவது மனிதம் இன்னும் வாழ்கின்றதே என்று ஆறுதல் அடையவேண்டியிருக்கின்றது.

டோக்கியோ மீது அணுகுண்டை வீசவில்லை. ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீதே அணுகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இரு நகரங்களின் மேல் கூட வீசாமல், ஜப்பானில் இருக்கும் பொட்டல் வெளிகளிலோ அல்லது மலைகளிலோ வீசி இருக்கலாம். அதற்குப் பின்னும் ஜப்பான் பணிய மறுத்து இருந்தால், கடுமையான மிகக் கவலையான முடிவை அமெரிக்கா எடுத்திருக்க வேண்டும் என்று தானே இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கத்தாரில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது ஈரான் நடத்தியது ஒரு தாக்குதலா........ என்ன சேதம் விளைந்தது............. எங்கள் ஊர் அம்மன் கோவில் வேட்டைத் திருவிழாவில் விட்ட எலி வாணத்தாலாவது சில சேலைகள் பற்றி எரிந்தன....................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள்.

அழிப்பது வேறு. அடக்குவது வேறு.

நீங்கள் சொல்லுவது எல்லா அமெரிக்கார்களும் சொல்வது.

அழித்தாலும், அணு துறையை அழிக்க முடியாது. அதாவது உறுதி இல்லை.

அப்படி ஆயின் அணு ஆயுதத்தை பாவிக்க வேண்டும். அதுவும் 2-3 தடையை பிரயோகிக்க வேண்டும்.

ஜப்பானில் பாவித்த பொது வேறு எவரிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்பொது மற்றவர்களும் அணு ஆயுதத்தி வைத்து இருக்கிறார்கள்.

ஒருவர் அணுஆயுதத்தை பாவிப்பது, மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தல்.

அரசு சாரா ஹௌதி களுக்கு கூட ஏன் அமெரிக்கா இரங்கி வந்தது?

எல்லாமே சீனா. இறங்கினால் அமெரிக்காவுக்கு புதைகுழி.

இரானும் அதை அறிந்தே விளையாடுகிறது. இது ஒன்றும் உடனடியாக வெட்டு ஒன்று, துண்டு 2 என்ற கதி, காலம் அல்ல.

இரானுக்கு தெரியாத அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்று, வரம்புக்குள் நின்று எதிர்பத்தே ஆட்டம்.

அதில் அதன் கேந்திர இலக்குகளை அடைவது. ஏறத்தாழ பாதிக்கு மேல் பெற்றுவிட்டது

அதே போலவே அலெக்சாண்டர் எல்லாத்தையும் அழித்து இருக்கலாம், ஆனால் அது அரசு / இராச்சியம் அல்ல.

மிக கொடுமையான சிங்கிஸ்கான் கூட முதலில் இராச்சியத்தை கொடு, இல்லாவிட்டால் கூண்டோடு தரைமட்டம் என்றே பிடித்தது.

டிரம்ப் அப்படியான போக்கில் சரணடை (அதாவது US சொல்வதில் கையெழுத்து வை) சொல்லி, இப்போது நிபந்தனை இல்லாத சண்டை நிறுத்தத்தில்.

இவற்றின் காலங்கள் வேறு வேறு, அனால் நோக்கம் ஒரே தன்மை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் ரஞ்சித், ஜஸ்டீன், ரசோ அண்ணைகள் எழுதிய கருத்துக்களுக்கு நிகர எடையில் தங்கம் கொடுக்கலாம்.

அதிலும் அந்த கடைசி இருவரும் எனது இன்றைய சிரிப்புகுறிகளை அனைத்தையும் இந்த திரியிலே செலவழிக்க வைத்து விடுவார்கள் போலுள்ளது.

தலையால் சிந்திப்பது - இதற்கு நல்ல நேர்மறையான விளக்கம் உள்ளது.

இன்னும் எத்தனை பேர் தம் உள்மன அழுக்கை பொது வெளியில் கழுவுகிறார்கள் என பார்க்க ஆசைபடுவதால்🤣 கொஞ்சம் தாமதித்து விளக்கத்தை வெளியிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரஞ்சித் said:

ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன.

ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன்.

இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது.

ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன?

ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.

அண்ணா

ஹிஸ்புள்ளாவிட‌ம் அதி ந‌வின‌ தொழிநுட்ப‌ ஆயுத‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை , 1000கிலே மீட்ட‌ர‌ தாண்டி போய் வெடிக்கும் ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ள்ளா குழுக்க‌ளிட‌ம் இருக்க‌ வில்லை , எம்ம‌வ‌ர்க‌ள் போர்க்க‌ள‌த்தில் பாவித்த‌ ஆயுத‌த்தை விட‌ இன்னும் சில‌ புதிய‌ ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ளாவிட‌ம் இருந்த‌து....................ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்ப‌டுத்தின‌ அழிவை ஏன் ஹிஸ்புள்ளா குழுக்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ முடிய‌ வில்லை................அத‌ற்கான‌ ப‌திலை இதில் இருந்தே தெரிந்து கொள்ள‌லாம்....................ஹ‌மாஸ் கூட‌ பாவிச்ச‌து கையில் வைத்த‌ ப‌டி தாக்கும் சிறிய‌வ‌கை ஆயுத‌ங்க‌ள்..............................

நான் கூட‌ நேர‌ம் ஒதுக்குவ‌து விளையாட்டுக்க‌ளில் , ஜ‌ரோப்பா அமெரிக்கா விளையாட்டுக்க‌ளில் , நான் 2009ம் ஆண்டோட‌ அர‌சிய‌லை பெரிசா எட்டியும் பார்த்த‌து கிடையாது , பிற‌க்கு சீமான் க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ அவ‌ர்க‌ளின் அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் என்னால் ஆன‌தை அவ‌ர்க‌ளின் க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு செய்தேன்............................என‌க்கு அமெரிக்க‌ன்ட‌ குழ‌ந்தை பிள்ளை அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ஈரானுக்கு செய்த‌து ப‌க்கா அநீதி , அது தான் என் ம‌ன‌தில் இருப்ப‌தை இந்த‌ திரியில் கொட்டி தீர்த்தேன்..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள்.

அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.

அண்ணா ayatollah ali khamenei நான் பார்த்த‌ ம‌ட்டில் இவ‌ரை ப‌ல‌ ஈரான் ம‌க்க‌ள் க‌ட‌வுளாக‌ பார்க்கின‌ம்.................இவ‌ர் கூட‌ நேர‌ங்க‌ளை குழ‌ந்தை பிள்ளைக‌ளுக்கு ஒதுக்கிறார்..................பொறுமையான‌ நிதான‌மான‌ ம‌னித‌ர் போல் தான் தெரிகிறார் , ம‌ற்ற‌ ப‌ந்தியில் இவ‌ர்க‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ளை அடைச்சு வைச்சு இருந்த‌து என்று எழுதி நீங்க‌ள் அதுவும் தெரியும் , அர‌சிய‌லில் எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது அண்ணா......................நேற்று ர‌சோத‌ர‌ன் அண்ணாவிட‌ம் சில‌ கேள்விக‌ளை கேட்டு இருந்தேன் , அவ‌ரும் ஒன்னு இர‌ண்டை வ‌டிவாய் விள‌ங்க‌ப் ப‌டுத்தினார் ,

ச‌தாமுக்கு தூக்கு , நெத்த‌னியாகுவுக்கு புக‌ழார‌ம் சூட்டும் அமெரிக்காவின் ந‌டுநிலை அற்ற‌ செய‌ல் உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து..................இத‌னால் தான் ப‌ல‌ர் அர‌சிய‌லையே எட்டியும் பார்ப்ப‌து கிடையாது ,

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாற்றை தெரிந்து கொள்ள‌ ஒதுக்கின‌ நேர‌ம் தான் கூட‌ , உல‌க‌ நாட்டு அர‌சிய‌லுக்கு நான் ஒதுக்கின‌ நேர‌ம் மிக‌ மிக‌ குறைவு......................விடுத‌லை வேண்டி போராடின‌ இன‌த்துக்கு இவ‌ங்க‌ள் தொட‌ர்ந்து துரோக‌ம் செய்யின‌மே என்ர‌ க‌வ‌லை இன்று வ‌ரை என‌க்குள் இருக்கு.....................க‌ன‌டா தான் அப்ப‌ அப்ப‌ மெதுவாய் எம‌க்கு ஆத‌ர‌வாக‌ குர‌ல் கொடுக்குது ம‌ற்ற‌ம் ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ள் இதுவ‌ரை வாய் மூடி மெள‌வுன‌மாக‌ இருக்கின‌ம்....................தொட‌ர்ந்து இதுக்கை எழுத‌ த‌ல‌ இடிக்குது அண்ணா , ஜாலியா இர‌ண்டு பாட்டு கேட்டால் தான் த‌லையிடி நிக்கும்

இன்னொரு திரியில் விவாதிப்போம் , கூட‌ நேர‌ம் ஒதுக்கி ந‌ல்ல‌ விள‌க்க‌த்தை த‌ந்த‌துக்கு ந‌ன்றி ர‌கு அண்ணா🙏👍.................................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணா

ஹிஸ்புள்ளாவிட‌ம் அதி ந‌வின‌ தொழிநுட்ப‌ ஆயுத‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை , 1000கிலே மீட்ட‌ர‌ தாண்டி போய் வெடிக்கும் ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ள்ளா குழுக்க‌ளிட‌ம் இருக்க‌ வில்லை , எம்ம‌வ‌ர்க‌ள் போர்க்க‌ள‌த்தில் பாவித்த‌ ஆயுத‌த்தை விட‌ இன்னும் சில‌ புதிய‌ ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ளாவிட‌ம் இருந்த‌து....................ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்ப‌டுத்தின‌ அழிவை ஏன் ஹிஸ்புள்ளா குழுக்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ முடிய‌ வில்லை................அத‌ற்கான‌ ப‌திலை இதில் இருந்தே தெரிந்து கொள்ள‌லாம்....................

உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் நீங்கள் எவ்வளவு தூரம் சாதாரண செய்திகளைக் கூட வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இஸ்ரேலின் வடக்கு முனைக்கும், ஹிஸ்பல்லா அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் தென் லெபனானிற்குமிடையே தூரம் ஆயிரம் அல்ல, நூறு கிலோ மீற்றர்கள் கூடக் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில், ஹிஸ்பல்லாவிற்கு ஏன் 1000 கிலோமீற்றர் செல்லும் ஏவுகணை தேவை? ஹிஸ்பல்லா அமைப்பின் ஒரே நோக்கம் வடக்கு தெற்காக 420 கிலோ மீற்றர்கள் நீண்டிருக்கும் இஸ்ரேலை அழிப்பது மட்டும் தான். இதற்கேன் 1000 கிலோமீற்றர் போகும் கணை?

ஆனால், ஈரானிடம் இந்த இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்திற்காக பல வகை ஏவுகணைகளை ஹிஸ்பல்லா அமைப்புப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில், Qadr-1 என்ற 300 கிலோமீற்றர்கள் செல்லும் ஈரானிய தயாரிப்பு ஏவுகணையை முதன் முதலாக இஸ்ரேல் நோக்கி ஹிஸ்பல்லாக்கள் ஏவினார்கள்.

இவையெல்லாம் சாதாரண செய்திகளில் காணக்கிடைக்கும் தகவல்கள்! எப்படி இவை தெரியாமல் இங்கே வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறீகள்🙄?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

கடந்து செல்லுங்க (எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா)

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத‌ருக்கு ஒவ்வொன்றை தெரிந்து கொள்ள‌ ஆசை , என‌க்கு உல‌க‌ அரைவேக் காட்டு அர‌சிய‌ல் மீது பெரிய‌ ஆர்வ‌ம் இல்லையென‌ ர‌ஞ்சித் அண்ணாவுக்கு எழுதி விட்டேன் , அவ‌ரே சும்மா இருக்க‌

என் க‌ருத்துக்கை சில‌ர் மூக்கை நுழைப்து என‌க்கு பிடிக்க‌ல‌ ,

என‌க்கு விளையாட்டுக்க‌ள் மீது தான் அதிக‌ ஆர்வ‌ம் , அமெரிக்கா விளையாட்டான‌ NBA விளையாட்டில் நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்னேன் மூன்று மாத‌த்துக்கு முத‌ல் OklaHoma City Thunder அணி தான் கோப்பை வெல்லும் என‌ இதுவொன்றும் IPL கிடையாது 10 அணிக‌ள் விளையாட‌ , 30அணிக‌ள் விளையாடும் 8மாத‌ நீண்ட‌ தொட‌ர் , அதில் இந்த‌ அணி தான் வெல்லும் என்று முன் கூட்டி க‌ணிப்ப‌து ஈசிய‌ல்ல‌ , நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்ன‌து போல் OklaHoma City Thunder அணி நேற்று கோப்பை வென்று விட்டின‌ம்.................அந்த‌ அணி வீர‌ர்க‌ளின் புள்ளிய‌ பின் தொட‌ர‌னும் ஒவ்வொரு விளையாட்டிலும் எத்த‌னை பொயின்ட் போட்டு இருக்கின‌ம் என்ற‌தை பார்க்க‌னும் , இதில் தான் என‌து நேர‌ங்க‌ள் போகும்..............

விளையாட்டு செய்திக‌ளை அதிக‌ம் விரும்பி வாசிக்கும் என‌க்கு , அர‌சிய‌ல் ஒரு பொருட்டே கிடையாது......................அதில் என‌க்கு ஆர்வ‌மும் கிடையாது , நான் தெரிந்ததை எழுதினேன் , இதுக்கை க‌ருத்து எழுதுப‌வ‌ர்க‌ள் எல்லாத்திலும் நூற்றுக்கு நூறு தெரிந்த‌வ‌ர்க‌ள் கிடையாது , உல‌கில் அர‌சிய‌ல் ம‌ட்டும் செய்தி கிடையாது , அதையும் தான்டி ப‌ல‌ ந‌ல்ல‌ செய்திக‌ள் இருக்கு...................

அர‌சிய‌ல் ஒரு சாக்டைஅடைப்பு......................ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதி அதுக்காக‌ தான் சில‌ க‌ருத்துக்க‌ளை எழுதினேன் இதுக்கை ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்காது , இதுக்கை எழுதி ர‌த்த‌ கொதிப்பை வ‌ர‌ வைப்ப‌தும் பார்க்க‌😁😛 , விளையாட்டுக்க‌ளை போட்டு விட்டு பார்த்து கொண்டு இருந்தாலே பொழுது ந‌ல்ல‌ மாதிரி போய் விடும்🥰❤️.......................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

ஒவ்வொருத‌ருக்கு ஒவ்வொன்றை தெரிந்து கொள்ள‌ ஆசை , என‌க்கு உல‌க‌ அரைவேக் காட்டு அர‌சிய‌ல் மீது பெரிய‌ ஆர்வ‌ம் இல்லையென‌ ர‌ஞ்சித் அண்ணாவுக்கு எழுதி விட்டேன் , அவ‌ரே சும்மா இருக்க‌

என் க‌ருத்துக்கை சில‌ர் மூக்கை நுழைப்து என‌க்கு பிடிக்க‌ல‌ ,

அர‌சிய‌ல் ஒரு சாக்டைஅடைப்பு......................ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதி அதுக்காக‌ தான் சில‌ க‌ருத்துக்க‌ளை எழுதினேன் இதுக்கை ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்காது , இதுக்கை எழுதி ர‌த்த‌ கொதிப்பை வ‌ர‌ வைப்ப‌தும் பார்க்க‌😁😛 , விளையாட்டுக்க‌ளை போட்டு விட்டு பார்த்து கொண்டு இருந்தாலே பொழுது ந‌ல்ல‌ மாதிரி போய் விடும்🥰❤️.......................

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதலாம். ஆனால் தரவுகளையும், வரலாற்றையும், ஏன் நேற்று, போன வாரம், போன மாதம் நடந்த சம்பவங்களைக் கூட அறியாமல் சகட்டு மேனிக்கு எழுதும் கருத்துக்கள் சவாலுக்குள்ளாகும்.

ஈரான் இஸ்ரேலுக்கு என்ன செய்தது, ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், வளைகுடாக் கடலினூடாக உங்கள் நாட்டுக்கு வரும் சிவிலியன் சரக்குக் கப்பல்களுக்கும் என்ன செய்தார்கள்- இந்த தகவல்கள் எவை பற்றியும் அறியாமல் "ஈரானுக்கு நடந்தது அநீதி" என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள் என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள்.

உங்களை யாரும் உங்களுக்கு ஆர்வமில்லாத விடயங்களை அறிந்து கொள்ளும் படி வற்புறுத்தவில்லை. ஆனால், அறிந்து கொள்ளாத விடயங்களை வைத்துக் கொண்டு இங்கே போலியான கதையாடல்களையும், தகவல்களையும் எழுதி வாசகர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள் என்றே கேட்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.