Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 JUN, 2025 | 02:06 PM

image

வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217712

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி பக்கம் போய் பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது.

சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது.

சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.

அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.

காட்டெருமையின் எலும்பையும், கடவாய் பல்லையும் புத்தரின் விலா எலும்பு, தெத்த பல்லு என்று சொல்லி சரித்திரம் எழுதவும், படுகொலை செய்யப்பட்ட தமிழனின் உடல் எச்சத்தை போர்த்துகீசு என்று சொல்லி மறைத்து ஆடுவதும் சிங்களவருக்கு கைவந்த கலை.

  • கருத்துக்கள உறவுகள்

கார்பன் வயது கணிப்பைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலதிக தகவலுக்காக கீழே இருக்கும் கட்டுரையை வாசிக்கலாம்.

University of Chicago News
No image preview

Carbon-14 dating, explained

First developed in the late 1940s at UChicago, carbon dating can determine the age of organic materials as old as 60,000 years.

ஆனால் சுருக்கமாக இது தான் காபன் திகதி கணித்தல்:

1. காபன் 14 (C14) என்கிற மூலக்கூறு கதிரியக்கத்தை வெளியிடும். எனவே, ஒரு மாதிரியில் இருக்கும் காபன் 14 இன் அளவை கதிரியக்கத்தை அளக்கும் கருவிகள் கொண்டு அளக்கலாம்.

2. ஒரு உயிர் சுவாசிக்காமல் விட்ட கணத்தில், அதனுள் காபன் 14 புதிதாகச் சேர்வதும் நின்று விடும்.

3. இறந்த அந்த உயிரியின் உடலில் அது வரை சேர்ந்த காபன் 14 மெதுவாக அழிய ஆரம்பிக்கும் (decay). இந்த அழிவு எவ்வளவு மெதுவாக நிகழும்? காபன் 14 இனைப் பொறுத்த வரை அதன் அரைவாசி அழிவடைய ~5,700 ஆண்டுகள் எடுக்கும். இதனை காபன் 14 இன் அரை வாழ்வுக் காலம் (half-life) என்பார்கள்.

4. இவ்வளவு மெதுவாக அழிவடையும் காபன் 14 இனை வைத்துக் கொண்டு மிக அண்மையில் (1990 என்று வைத்துக் கொண்டாலும்) இறந்த உடல் எச்சங்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமானது.

எனவே, சாதாரணமாக காபன் 14 வயது கணித்தல் சில நூறு ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரையான வயதைக் கணிப்பதற்கே பயன்படுகிறது.

ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும், காபன் 14 இனை வித்தியாசமாகப் பயன்படுத்தி 1980 இல் இறந்த உடல்களின் வயதைக் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை கீழே இருக்கிறது.

https://www.science.org/doi/10.1126/science.321.5895.1434

ஆனால், இந்த முறை இலங்கையில் இருந்து எடுக்கப் படும் உடல்களில் பயன்படுத்தக் கூடியதா என்பது இன்னும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல் ஜஸ்டின்.

தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்?

இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன?

இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா?

தெரிந்து கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sasi_varnam said:

நல்ல தகவல் ஜஸ்டின்.

தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்?

இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன?

இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா?

தெரிந்து கொள்ளலாமா?

இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன்.

இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன).

இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யே.வி.பி யின் இயல்பான இனவாதமுகம் என்.பி.பி என்ற முகத்திரையைக் கிழித்து மெல்ல மெல்ல மேலெழுந்து வருகிறது. வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றென்பது சிங்களத்தின் கைக்கூலிகளைத் தேர்வு செய்வதல்ல என்பதை இவளவு விரைவாக உணரவைப்பார்களென எதிர்பார்க்கவில்லை

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.

கண்டிப்பாக! அதோடு சேர்த்து ஒரு கதையும் புனைவார்கள். அப்போ, அவர்கள் படையில் குழந்தைகளும் இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். நிர்வாணப்படுத்துவது சிங்களவரின் மரபு. அதை அப்படியே நிலைநிறுத்தி, தம்மை அடையாளப்படுத்த ஒரு துப்பை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் எத்தனை கதையெழுதினாலும் அவை, தம்மை மறைப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குமே உதவும். இன்று அந்த உடல்கள் வெளிவந்தனவென்றால்; அவை வெறும் உடலங்கள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்து உண்மையும் வெளிவந்துள்ளன. அவற்றை மறைக்க யராலும் முடியாது. வேண்டுமென்றால் என். என். பியின் முகத்திரை கிழியும். இந்த லட்ஷணத்தில சர்வதேசம் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டாமென கூற இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நீதியமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மனிதர்கள் கொலை செய்யப்பட்டர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அவர்களது வயதை, கொல்லப்பட்ட விதத்தை இந்த முறையில் கணிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சங்கிலிய மன்னனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மனிதர்கள் கொலை செய்யப்பட்டர்கள்

செம்மணியை போல, திருக்கேதீஸ்வரத்தை போல, மண்டைதீவைப்போல இன்னும் ஈழத்தில் கண்டெடுக்கப்படும் ஏனைய மனித புதை குழிகள் போல நீங்கள் கேள்விப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் விவகாரமும் வெளிப்பட்டால் நிச்சையம் ஜஸ்டின் கூறிய முறையில் சில உண்மைகளையாவது கண்டறியலாம். So அது வரையில் இப்பொழுது வெளிப்படும் தடயங்கள் குறித்து அதன் பின்னணியை ஆராயலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சங்கிலிய மன்னனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மனிதர்கள் கொலை செய்யப்பட்டர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அவர்களது வயதை, கொல்லப்பட்ட விதத்தை இந்த முறையில் கணிக்க முடியுமா?

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை குழிகளில் சில எலும்புக் கூடுகளில் இரும்புச் சங்கிலிகள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. அந்த எச்சங்களை புளோரிடாவுக்கு அனுப்பும் ஆயத்தங்கள் நடந்த போது சுமந்திரன் "பலருக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவுகள் கிடைக்கலாம்" என்று சொன்னதாக நினைவு.

பின்னர், அந்த எச்சங்கள் "300 வருடங்களுக்கு முன் இறந்தவர்களுடையவை" என்று காபன் 14 கணிப்பு வந்ததாக நினைவு. மன்னாரில் சங்கிலியன் மன்னனால், போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தமிழர்கள் கொல்லப் பட்டது 1544 இல் என்று கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ஈழத்தமிழர் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். திருக்கேதீஸ்வர எச்சங்களின் காபன் 14 வயது முடிவு பற்றி அந்த நேரம் ஓடிய யாழ் திரியில், இந்த வரலாற்றை மறுதலித்து "சிங்களவன் பொய் சொல்லி விட்டான்" என்று சில உறவுகள் வாதிட்டிருக்கின்றனர்.

அதெப்படி சுமந்திரனுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இது பற்றித் தெரிந்திருக்க, ஏனையோருக்கு இது புதிராக இருக்கிறது? காரணம் வாய்வழிப் பாரம்பரியமாகக் (oral tradition) கடத்தப் படும் மன்னார் வரலாற்றில் "மன்னார் வேத சாட்சிகள்" பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. மன்னார் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் இந்த வழியாக இந்த வரலாற்றை அறிந்திருக்கிறார்கள்.

இப்போது உங்கள் கேள்விக்குப் பதில்: ஆம், மன்னாரில் கொல்லப் பட்டவர்களின் வயதைக் கணிக்க இயலும் (பல்லில் இருக்கும் எனாமலின் காபன் 14 இன் அளவை வைத்து இதனைச் செய்யலாம்). ஆனால், எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று காபன் 14 இனால் கண்டறிய இயலாது. அதற்கு சட்ட (forensic) மருத்துவ/தொல்லியல் நுட்பங்களைப் பாவிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட இராணுவத்தினனே சாட்சி வழங்கி இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளான். அதோடு அந்த உடல்களில் உடைகள் எதுவும் காணப்படவில்லை என்று அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செம்மணி சந்தடி சாக்கில் அரச அடிவருடி / ஆவா குழு தலைவன் அருண் சித்தார்த்தன் பொண்டாட்டி அரைகுறையும் இல்லாத அசிங்க சிங்களத்தில் மற்றும் தமிழில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்காள். அது துணுக்கையிலோ எங்கோ எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு. சில பாழடைந்த கட்டிட இடிபாடுகள், கைவிடப்பட்ட புதர் காணியை காட்டி அது விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்த இடம் என்றும், அங்கே 1990களில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தன்னுடைய தகப்பனார் உட்பட 4,O௦௦ ஆயிரத்துக்கும் மேட்பட்ட அப்பாவி பொதுமக்களையும், குடும்பமாக கடத்தி படுகொலை செய்து புதைத்ததாகவும், செம்மணி புதை குழிகள் பற்றி நீதி கேட்போர் இவற்றை பற்றியும் கதைக்க வேணும் என்ற தொனியிலும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பற்றி பேசும் யாழ் பல்கலைகழக சமூகம் சகோதர யுத்தத்தால் கொல்லப்பட்ட இந்த மக்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி பதிவு செய்து சிங்கள ஊடகங்கள், வலை தளங்களில் பெருவாரியாக பேசப்பட்டு வருகிறது.

https://lankaleader.com/lankaleader/page/10?post_id=13339

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.