Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

24 Jun 2025, 9:34 AM

Drug case attracts dark life - who is Srikanth?

போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங்கு பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

இளம் வயதில் தனது அண்ணனை இழந்து தவித்த ஸ்ரீகாந்தின் கவனம், மாடலிங் சினிமா பக்கம் திரும்பியது. அதன்படி தனது ஆரம்பகாலத்தில் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் நடிப்பு பயின்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12பி’ படங்களில் நடிக்க முதலில் தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் போனது. அதேபோன்று பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு கிடைத்த வாய்ப்புகள் மாறிப் போயின.

image-103.png

முதல் படமே சூப்பர் வெற்றி!

எனினும் 2002ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அந்த படம் ஹிட் ஆன நிலையில் அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ’சிறந்த அறிமுக நடிகர்’ என்ற விருதை பெற்ற அவர், ரசிகர்களால் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு சினேகா உடன் இனைந்து அவர் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, ’பார்த்திபன் கனவு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க, கோலிவுட் தாண்டி தெலுங்கு திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

image-104-1024x568.png

தெலுங்கில் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருந்ததால், தனது பெயரை ஸ்ரீராம் என்று பயன்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஓகரிகி ஓகாரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு (2005) மற்றும் பம்பரா கண்ணாலே (2005) ஆகிய படங்களும் அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை உயர்த்தின.

தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனரான செல்வராகவன் இயக்கிய ’ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் வெங்கடேஷை அடுத்து ஸ்ரீகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியது.

image-105-1024x576.png

திருமண சர்ச்சை!

இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீகாந்த். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவர் ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஒருவருடகாலமாக சட்ட போராட்டங்களை எதிர்கொண்ட அவர், 2008ஆம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமண சர்ச்சை மற்றும் தவறான கதைத் தேர்வு உள்ளிட்டக் காரணங்களால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவின.

image-107.png

நண்பன் -ஆல் கவனம் பெற்ற ஸ்ரீகாந்த்

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து ’நண்பன்’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜீவாவுடன் இணைந்து விஜய்யின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார்.

இதில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்க வேண்டிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியதால் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காணாமல் போனார்.

அந்த காலக்கட்டத்தில் நிப்பு, லை, ராகல 24 கண்டலோ, ஜெய் சேனா, வை, அசலேம் ஜருகண்டி, 10th class டயரீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஹீரோ, படி உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image-106-1024x572.png

இப்படி சரிவை நோக்கி அவரது திரைப்பயணம் சென்று கொண்டிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது நடிப்பில் வருடத்திற்கு தலா 6 படங்கள் வெளியாகின. ஆனால் அனைத்துமே தோல்வி படங்களாக மாறி அவருக்கு பெரிய மனவலியை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய திரைப்படங்கள் திரையங்கில் வெளியானது கூட பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.

https://minnambalam.com/drug-case-attracts-dark-life-who-is-srikanth/#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார்

image_da2d13cc97.jpg

நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் உபயோகித்தது உறுதியானதை அடுத்து, விசாரணை மற்ற நடிகர்கள், நடிகைகள் நோக்கி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீரெட்டி, பல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

அதில் ஸ்ரீகாந்தின் பெயரும் இடம்பெற்றது. ஸ்ரீரெட்டி கூறுகையில்,

“நான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் விளம்பரம் தேடுவதாக சிலர் கூறுகின்றனர். 

ஆனால், இவை என்னையும் பாதிக்கின்றன. ஒரு பிரபல நடிகர், பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். மேலும், கொக்கைன் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார். 

நான் மறுத்தேன், முடியவே முடியாது என திமிறினேன். உடனே, அவரது நண்பர்கள் சிலரை வர வைத்து என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக விரித்து பிடித்துக்கொண்டு.. என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, என் உதட்டின் அடியில் கொக்கைனை தடவினர். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன். என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார்.

அந்த நேரத்தில் அந்த நடிகர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்,” என்று திடுக்கிடும் வகையில் விவரித்தார். ஸ்ரீகாந்தின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட நடிகர் யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. 

இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.tamilmirror.lk/cinema/என்-கால்களை-விரித்து-பிடித்துக்கொண்டு-அந்த-உறுப்பில்-போதை-பொருளை-தடவினார்/54-359820

  • கருத்துக்கள உறவுகள்

qt3eg734_srikanth-actor_625x300_23_June_

நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த்.

போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்லப் போவதில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  எனவே தனக்கு பிணை வழங்குமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் இங்கு பிணை கோர முடியாது எனவும் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றில் தான் பிணையைப்  பெற முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து,ஸ்ரீகாந்துடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

……….

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு ‘கொகைன்’ சப்ளை செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜான் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம்  செய்தார்? என்ற பட்டியலை பொலிஸாரிடம் கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து பொலிஸார்  நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் பொலிஸார்  சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பொலிஸார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

https://athavannews.com/2025/1436862

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூமிகாவின் பிளந்த அந்த உதடுகளுக்காவே இந்த படத்தை பலமுறை பார்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

"40 முறை போதைப் பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்" - வழக்கில் சிக்கியது எப்படி?

நடிகர் ஸ்ரீகாந்த், போதைபொருள், கோலிவுட், திரையுலகம், குற்றம்

பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM

படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதற்கு முன் நடந்த கைதுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

நடிகர் ஸ்ரீகாந்த், போதைபொருள், கோலிவுட், திரையுலகம், குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.

நடிகர் ஸ்ரீகாந்த், போதைபொருள், கோலிவுட், திரையுலகம், குற்றம்

பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM

படக்குறிப்பு,நடிகர் ஸ்ரீகாந்த்

இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.

பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை

நடிகர் ஸ்ரீகாந்த், போதைபொருள், கோலிவுட், திரையுலகம், குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9xnmm21xpo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த்.

போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்லப் போவதில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  எனவே தனக்கு பிணை வழங்குமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?

இவர் ஒறிஜினல் தமிழர் என்று நான் நினைக்கின்றேன்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவராக இருந்திருந்தால்…. தமிழக அரசே இவரை காப்பாற்றி… வழக்கை நீர்த்துப் போக செய்திருக்கும். 😎

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

இவர் ஒறிஜினல் தமிழர் என்று நான் நினைக்கின்றேன்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவராக இருந்திருந்தால்…. தமிழக அரசே இவரை காப்பாற்றி… வழக்கை நீர்த்துப் போக செய்திருக்கும். 😎

👇🏿

22 hours ago, கிருபன் said:

ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

👇🏿

ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த்.

தாய்... தமிழ் என்றபடியால்தான், கைது செய்து இருக்கின்றார்கள். 😂

பிற் குறிப்பு: போதைப் பொருள் பாவிப்பவர்கள் யாராக இருந்தாலும், தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

🐟🌵இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?

சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்.🐟

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2025 at 09:09, கிருபன் said:

என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார்

image_da2d13cc97.jpg

நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் உபயோகித்தது உறுதியானதை அடுத்து, விசாரணை மற்ற நடிகர்கள், நடிகைகள் நோக்கி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீரெட்டி, பல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

அதில் ஸ்ரீகாந்தின் பெயரும் இடம்பெற்றது. ஸ்ரீரெட்டி கூறுகையில்,

“நான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் விளம்பரம் தேடுவதாக சிலர் கூறுகின்றனர். 

ஆனால், இவை என்னையும் பாதிக்கின்றன. ஒரு பிரபல நடிகர், பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். மேலும், கொக்கைன் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார். 

நான் மறுத்தேன், முடியவே முடியாது என திமிறினேன். உடனே, அவரது நண்பர்கள் சிலரை வர வைத்து என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக விரித்து பிடித்துக்கொண்டு.. என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, என் உதட்டின் அடியில் கொக்கைனை தடவினர். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன். என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார்.

அந்த நேரத்தில் அந்த நடிகர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்,” என்று திடுக்கிடும் வகையில் விவரித்தார். ஸ்ரீகாந்தின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட நடிகர் யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. 

இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.tamilmirror.lk/cinema/என்-கால்களை-விரித்து-பிடித்துக்கொண்டு-அந்த-உறுப்பில்-போதை-பொருளை-தடவினார்/54-359820

நடிகை ஸ்ரீரெட்டி சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட ஆள். 😄

அவர் கால் வைக்காத துறையே இல்லைப் போலுள்ளது. 😂

அமைச்சர் உதயநிதியும்... நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாடிக்கையாளர் என்பதில் இருந்து, ஸ்ரீரெட்டி சர்வதேச லெவலில் புகழ் பெற்ற ஒருவர்.. நமது தமிழ் சினிமாவில் இருப்பது... நமக்கெல்லாம் பெருமைதானே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

1829363-3.webp?resize=750%2C375&ssl=1

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை.

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார்  தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை பொலிஸார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  குறித்த  நடவடிக்கை மேலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் கூறிய  தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டனர்.

இதன்போது நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரைக்  கைது செய்ய பொலிஸார் கேரளாவுக்கு விரைந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ்  நிலையத்தில் வைத்து பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்பிறகு அவருக்கு அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை  நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  நடிகர் கிருஷ்ணாவின்  வீட்டிலும்  பொலிஸார்  சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437172

  • கருத்துக்கள உறவுகள்

Krishnaaa-fe.jpg?resize=750%2C375&ssl=1

நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு  பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்இ ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் இ நீதிமன்றத்திலும்  ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை   ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு  பிணை வழங்குமாறு  கோரி சிறப்பு நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி

sujiththra.jpg

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது,

ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? குழந்தையை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார்.

ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.

திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை.

மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.

மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.

மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது.

இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன.

திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றஞ்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும்.

எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரைக்கும் விற்பனையாகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

ஒரு கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார்.

அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள்.

இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு சுசித்ரா கூறினார்.

https://akkinikkunchu.com/?p=330504

  • கருத்துக்கள உறவுகள்

'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை?

போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், நடிகர் ஶ்ரீகாந்த், நடிகர் ஶ்ரீ கிருஷ்ணா

பட மூலாதாரம்,KRISHNAKULASEKARAN/INSTAGRAM & ACTORSRIKANTH/INSTAGRAM

படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 28 ஜூன் 2025, 05:16 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை விற்பனை செய்த கெவின் என்பவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்துள்ளதாக, ஜூன் 26 அன்று சென்னை மாநகர காவல்துறை கூறியுள்ளது.

வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள்களைப் பெற்று வந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதனை கிருஷ்ணாவின் வழக்கறிஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்ததால் அரசியல் ரீதியான பழிவாங்கலில் கிருஷ்ணா சிக்கியிருப்பதாகவும் கிருஷ்ணாவின் வழக்கறிஞர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கலாம்?

வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் விடுதியில், கடந்த மே 22 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை விசாரிப்பதற்காக போலீஸார் சென்றபோது, அங்கிருந்தவர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் வாண்டையார், தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திற்கு பின்னர் பிரசாத் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கைதானவர்களில் ஒருவரான அ.தி.மு.க பிரமுகர் பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அதேநேரம், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தாக காவல்துறை தெரிவித்தது. ஸ்ரீகாந்துக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப் பரிவர்த்தனை, அவருடைய வீடு முழுமையாக சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளதாக, ஜூன் 24 அன்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் ஆகியோர் மூலமாக போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், நடிகர் ஶ்ரீகாந்த், நடிகர் ஶ்ரீ கிருஷ்ணா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

ஸ்ரீகாந்தை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா கைது

விசாரணையின் தொடர்ச்சியாக, 'கழுகு' உள்பட பல்வேறு படங்களில் கதாநாயனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கெவின் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது தனக்கு இதயநோய் உள்ளதாகவும் அதற்கு மருந்து உட்கொள்வதால் கொகைன் எடுத்துக் கொள்ளவே முடியாது எனவும் கிருஷ்ணா கூறியதாக தகவல் வெளியானது.

போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், நடிகர் ஶ்ரீகாந்த், நடிகர் ஶ்ரீ கிருஷ்ணா

படக்குறிப்பு, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கெவின்

'வாட்ஸ்ஆப் குழு மூலம் கொகைன் விற்பனை'

வாட்ஸ்ஆப் குழு மூலம் நடிகர்கள் ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், போதைப் பொருள் விற்பனையாளர் கெவின் உள்ளிட்டோர் அடங்கிய நெட்வொர்க் இயங்கி வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

"கெவினிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி கிருஷ்ணா பயன்படுத்தி வந்துள்ளார். அதை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்" என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றையும் ஸ்ரீகிருஷ்ணா பகிர்ந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இந்த வழக்கில் ஜெஸ்வர் என்ற கெவினை, வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது. அவரிடம் இருந்து அரை கிராம் கொகைன், 10.30 கிராம் மெத்தம்பெட்டமைன், எம்டிஎம்ஏ (MDMA) 2.75 கிராம், ஓஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிய அளவிலான எடை போடும் இயந்திரம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இவர்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கெவின் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எந்த தொடர்பும் இல்லை" - ஸ்ரீகிருஷ்ணா வழக்கறிஞர்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீகிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " போதைப் பொருள் வழக்கிற்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்.

வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாக காவல்துறை குறிப்பிடுவது குறித்துக் கேட்டபோது, "கெவின் என்பவருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை வைத்து போலீஸ் இவ்வாறு கூறுகிறது. அதற்கும் ஜூனில் நடந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்றார்.

"ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது" எனவும் இன்ஃபேன்ட் தினேஷ் குறிப்பிட்டார். நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவின் ஜாமீன் மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், நடிகர் ஶ்ரீகாந்த், நடிகர் ஶ்ரீ கிருஷ்ணா

படக்குறிப்பு, வழக்குக்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறுகிறார் ஶ்ரீ கிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ்

"10 ஆண்டு சிறைத் தண்டனை" - வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ்

"கொகைன் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது?" என போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும், பா.ஜ.க-வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மெத்தம்பெட்டமைன் 50 கிராமுக்கு மேல் இருந்தால் 20 வருட தண்டனை கிடைக்கும்" எனக் கூறுகிறார்.

என்டிபிஎஸ் (Narcotic Drugs And Psychotropic Substances Act, 1985) சட்டப்பிரிவு 22(a), 22(b), 22(c) என போதைப்பொருளின் தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீகாந்துக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?

ஸ்ரீகாந்த் மீதான வழக்கு குறித்து விவரித்த பால்கனகராஜ், "அவர் கையில் கொகைன் வைத்திருந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படவில்லை. என்டிபிஎஸ் சட்டப் பிரிவு 27 என்பது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப் பற்றிக் கூறுகிறது. அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

"இதன்படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை காவல்துறை கைது செய்யக் கூடாது. அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் பத்திரமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் வழங்கும் நடவடிக்கையும் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"ஸ்ரீகாந்த் வாங்கிப் பயன்படுத்தியதாக கூறப்பட்டாலும், அவர் வாங்கி யாருக்கும் விற்றதாக தகவல் இல்லை." என்கிறார், பால்கனகராஜ்.

பிரிவு 64 ஏ என்ன சொல்கிறது?

போதைப்பொருள் தடுப்பு (NDBS) சட்டப்பிரிவு 27ன்படி போதைப்பொருள் பயன்படுத்துவது குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இருப்பினும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு பிரிவு 64ஏ படி சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசால் பராமரிக்கப்படும் அல்லது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற முன் வந்தால் அவர் மீது எந்தப் பிரிவின் கீழும் வழக்குத் தொடரக் கூடாது என சட்டம் கூறுகிறது.

அவ்வாறு சிகிச்சை எடுப்பதற்கு முன்வராவிட்டால் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கொண்டாட்டங்களுக்கு (Party) அதிகளவில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதாக கண்டறியப்பட்டால் அவருக்கு விலக்கு அளிப்பதற்கு 64 ஏ பிரிவின்படி வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crl0dpk7j54o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

krishna-srikanth.webp?resize=750%2C375&s

போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும்  கிருஷ்ணாவுக்கு  நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்  ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன்  இவர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ எனவும் வாதாடினார்.

நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி  ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார்.

அதேசமயம்  பொலிஸாரின் தரப்பில்  ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை  வழங்கக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார்.

இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை  உயர் நீதிமன்றம்  இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை  அளித்து உத்தரவிட்டது.

அத்துடன்  10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் பிணை  அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

https://athavannews.com/2025/1438500

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.