Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

June 29, 2025 10:33 am

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்று இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது.

கல்லுண்டாய்வெளியில் அவ்வப்போது தீ ஏற்படுவது இயல்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், நேற்று இரவு ஏற்பட்ட தீ இதுவரை பதிவான சம்பவங்களில் மிகப்பெரியது என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல மணிநேரம்வரை தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கல்லுண்டாய்வெளியில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்துவரும் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகள் சகிதம் இரவிரவாக வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், தமது உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

சுவாசப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்வகையில் புகையின் தாக்கம் நிலவியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கல்லுண்டாய்வெளி திண்மக் கழிவகற்றல் நிலையம் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது என்றும், அங்கு அடிக்கடி தீவிபத்து இடம்பெறுவதாலும் வலிகாமம் மேற்கு பிரதேசசபையில் அண்மையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் இந்த விடயம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுக்கவும் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/the-kallunthaiveliya-garbage-dump-is-on-fire-great-tension-throughout-the-night/

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது.

அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண ஏராளமான கட்டாக்காலி நாய்களும்... குறுக்க, மறுக்க ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது.

அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண ஏராளமான கட்டாக்காலி நாய்களும்... குறுக்க, மறுக்க ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.

அண்ணை, நானும் இந்த பாதையால் பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. புகையால் சுவாசிப்பது சிரமமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம்

29 JUN, 2025 | 12:40 PM

image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை (29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால் அதனை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்போது   ஞாயிற்றுக்கிழமை (29)  மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் பல வழிமறிக்கப்பட்டன. மலக் கழிவினை ஏற்றிவந்த மாநகர சபையின் வாகனம் ஒன்று உடனடியாக திரும்பிச் சென்றது. 

வழமையாக குறித்த பகுதிக்குள் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இது குறித்து பல தடவைகள் செய்திகளும் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில்  சனிக்கிழமை (28) தீ மூட்டிய நிலையில் அந்த தீ இன்றுவரை எரிந்து கொண்டு இருப்பதுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறித்த பகுதிக்கு நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகைதந்து பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதுவரை மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் களத்திற்கு வருகை தரவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரனுக்கும், கல்லூண்டாய் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

களத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸார் ஆகியோர் நிலைமைகளை சீருக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

IMG_4289.png

IMG_4288.png

20250629_095140.jpg

20250629_095234.jpg

20250629_102855.jpg

https://www.virakesari.lk/article/218753

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூண்டாயில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றமை உறுதியானது!

Published By: VISHNU

29 JUN, 2025 | 06:00 PM

image

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கழிவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இதற்கு எந்திர்ப்பு தெரிவித்து 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்தனர். இதனால் மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் குறித்த பகுதியை பார்வையிடுவதற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்லூண்டாய் பகுதி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு மக்கள் குறிப்பிட்டது போன்று ஏராளமான மருத்துவ கழிவுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாக கொட்டப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

https://www.virakesari.lk/article/218787

  • கருத்துக்கள உறவுகள்

கழிவுப்பொருட்களை கொட்டும் இடத்தை எல்லையிட்டு அடைத்து உடனடியாக மூடவேண்டும்.

உள்ளே கழிவு கொட்டப்படும் இடங்கள் இன்னென்ன என்று வேறுபடுத்தி தரம்பிரிக்கப்பட்டு (மரப்பொருட்கள், பிளாஸ்டிக், இரசாயன பொருட்கள், சூழலைத் தாக்கும் கழிவுகள், பார உலோகங்கள், இயற்கை உரமாக உதவக்கூடிய கழிவுகள், வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகள், இறந்த மிருகங்கள் இப்படி பல) குறியீடுகள் செய்தபின் அங்கு குப்பைகொட்ட வரும் வாகனங்கள் கட்டுபாடாக உள்ளே செல்லவும் வெளியேறவும் தனிப்பட்ட பாதை அமைக்கப்பட்டு காவலர் ஒருவரால் வண்டி இலக்கம், ஓட்டுனர் பெயர் போன்ற விபரங்கள் அனைத்தும் மா நகரசபை நியமிக்கும் காவலரால் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

கழிவுப் பொருள் கொட்டுவதற்கு கட்டணம் அறவிடலாம். கொட்டப்படும் கழிவுகளை மீள்சுழற்ச்சி செய்வது அல்லது அதை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கான பொறுப்பு மாநகர சபையை சார்ந்தது. இதை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எமது அரசியல்வாதிகளை சந்திக்க வடக்கிற்கு வரும் வெளி நாட்டு பிரதிநிதிகளிடம் இந்த விடயம் கொண்டுசெல்லப்பட்டு உதவிக்கான வேண்டுகோள் விடுக்கப்படுவதும் நன்மை தரும். சூழலை பாதுகாக்கும் முற்சியாக இது போன்ற விடயங்களில் பல நாடுகள் முன்வந்து உதவ அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது.

அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண ஏராளமான கட்டாக்காலி நாய்களும்... குறுக்க, மறுக்க ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.

முன்னரெல்லாம் குப்பைகளை எரித்தார்கள் பாரதூர விளைவுகள் வரவில்லை. ஆனால் இன்றைய குப்பைகளோ மனித குலத்திற்கே பங்கம் விளைவிக்கும் குப்பைகளாக இருக்கின்றது.

எமது முன்னோர்களை போல் இயற்கையோடு சம்பந்தப்பட்ட பொருட்களை பாவிக்க இன்றைய இளையோரை வழிநடத்தி செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே வணங்காமுடி சொல்லியிருப்பவையோடு இன்னொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும்: குப்பை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல். இதை பள்ளிக் கூடங்களில் அமல் படுத்தி இளையவர்களைப் பயிற்றுவித்தால் எது குப்பை, எது மீள்சுழற்சி செய்யக் கூடிய பொருள் என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் சமூகம் உணர்ந்து கொள்ளச் செய்யலாம். அது வரை அல்லாட வேண்டியது தான்.

இந்தக் குப்பைகள் பற்றிய அலட்சிய மனப்பான்மை எங்கள் தமிழ்/தெற்காசிய ஜீன்களில் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு😂. இங்கே அமெரிக்காவில் நடக்கும் எங்கள் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகள் பலவற்றில், நிகழ்வு முடிந்ததும் சுத்தம் செய்வதற்குத் தான் நீண்ட நேரம் ஒதுக்குகிறோம். சாப்பிட்ட பேப்பர் தட்டு முதல், கோப்பிக் கோப்பைகள் வரை சிறுவர் முதல் பெரியோர் வரை அந்த இடத்திலேயே விட்டு விட்டுக் கிளம்பி விடும் பழக்கம் மிகப் பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏற்பாட்டுக் குழு தான் முறிந்து சுத்தம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2025 at 07:28, தமிழ் சிறி said:

சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது.

ஐ….அப்ப ஊருக்கு போய் வாறியள்?

யாழில் அனுரவுக்கு ஆதரவாக எழுதும் போதே நினைத்தேன் 😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐ….அப்ப ஊருக்கு போய் வாறியள்?

யாழில் அனுரவுக்கு ஆதரவாக எழுதும் போதே நினைத்தேன் 😂.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற மாதிரி,

ஊருக்குப் போக முதல்... அங்கு உள்ள ஆளும் கட்சிக் காரருக்கு ஐஸ் வைத்து விட்டுப் போனால் தான்... தற்செயலாக ஏதும் நடந்தாலும் பிணை எடுக்க வருவாங்கள். இல்லாவிடில் நாலாம் மாடியில் கொண்டு போய் வைத்து.. மொங்கிப் போட்டு, வெட்டித் தாட்டுப் போடுவாங்கள் பாவிகள்.

ஏற்கெனவே ஊரில் வாள் வெட்டு கோஸ்ட்டி முதுகிலை வாளை செருகிக் கொண்டு பறந்து திரிகிறாங்கள்.

அதுக்காகத்தான் வில்லங்கம் இல்லாமல் போய்... கொத்து ரொட்டி, அப்பம், தோசை, கூழ், இளநி என்று ஆசைப் பட்டதுகளை சாப்பிட்டு விட்டு கம்மென்று வந்து விட வேணும். 😂

இனி அனுரா, ஜேர்மனிக்கு வந்தால்... கறுப்புக் கொடியும், அழுகின தக்காளிப் பழமும்தான் வரவேற்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சாத்ஸ்சும் அனுரா கீதம் இசைத்தவர்.

இதுதான் காரணம் போலும்.

கு. சா, விசுகு அண்ணைமார் - பார்த்து பழகவும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சாத்ஸ்சும் அனுரா கீதம் இசைத்தவர்.

இதுதான் காரணம் போலும்.

கு. சா, விசுகு அண்ணைமார் - பார்த்து பழகவும் 🤣

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, கிரிமினல் மூளை வேலை செய்யும். 😂

@satan @குமாரசாமி, @விசுகு ஆகியோர் என்ன மாதிரியான பிளான் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, கிரிமினல் மூளை வேலை செய்யும். 😂

@satan @குமாரசாமி, @விசுகு ஆகியோர் என்ன மாதிரியான பிளான் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம். 🤣

கு சா அண்ணைக்கு இந்தியன் ஹொலிடே விசாவில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன்🤣.

திடீரென ஒரு நாள் ரஸ்யா உக்ரேனில் நடக்கும் விதமும், இந்தியா இலங்கை தமிழர் விடயத்தில் நடந்த விதமும் சரிதான் என எழுதினவர் 🤣.

நல்லகாலம் தமிழ்நாடு அரசுக்கு இந்த பவர் இல்லை, இல்லாட்டில் இங்க கனபேர் “ஸ்டாலிந்தான் வாறாரு, விடியல் தரப்போறாரு” எண்டு எழுத வேண்டி வந்திருக்கும்😂.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

என்ன இருந்தாலும்.... நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்... குமாரசாமி அண்ணை தன்னுடைய கொள்கையில் இருந்து U-Turn அடித்து, இந்தியாவை புகழ்ந்து தள்ளினவர் போலை இருக்கு. 😂

ஸ்ராலின் தான் வாறாரு... செம பகிடி 🤣. குதிரைக்கு கொம்பு முளைக்காததும் நல்லதுக்குத்தான். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன இருந்தாலும்.... நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்... குமாரசாமி அண்ணை தன்னுடைய கொள்கையில் இருந்து U-Turn அடித்து, இந்தியாவை புகழ்ந்து தள்ளினவர் போலை இருக்கு. 😂

ஸ்ராலின் தான் வாறாரு... செம பகிடி 🤣. குதிரைக்கு கொம்பு முளைக்காததும் நல்லதுக்குத்தான். 😂

பரிமளம் அண்ணிக்கு சீலை வாங்க வேண்டும் என்றால்....? 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2025 at 16:28, தமிழ் சிறி said:

சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது.

அட, இதுதான் காரணமோ? நானும் என்னவோ ஏதோ என்று கலங்கிப்போனேன். பலதடைவை யோசித்ததுண்டு ஆனால் விசாரிக்க தோன்றவில்லை. காணாமல் போனோர் பக்கத்தில் கேட்டிருக்கலாம். நலமாய் வந்து சேர்ந்தது சந்தோசமே. இனி பயணக்கட்டுரை எழுதி அசத்துங்கோ களத்தை. இல்லையில்லை உங்கள் பதிவை பார்த்து பலபேர் பயண ஆயத்தம் செய்வர் என்பதற்காக சொல்கிறேன், நம்ம அரசியல் வாதிகளைப்பற்றியும் அரசல் புரசலாக எழுதுங்கோ.

8 hours ago, தமிழ் சிறி said:

சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம்.

சாதாரண முருங்கைக்காய் கறியே போதுமானது எனது நாவுக்கு. நான் யாருக்கும் பயப்படுவதில்லை, காரணம் தவறு செய்யவில்லை. யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன், அதே ஆள் தவறு செய்தால் விமர்சிப்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

பரிமளம் அண்ணிக்கு சீலை வாங்க வேண்டும் என்றால்....?

7 hours ago, தமிழ் சிறி said:

நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்...

குடும்பத்தில் ஏதோ மங்கள காரியம் நிகழப்போகிறதென நண்பர் கோடிட்டு காட்டியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2025 at 06:10, vanangaamudi said:

எமது அரசியல்வாதிகளை சந்திக்க வடக்கிற்கு வரும் வெளி நாட்டு பிரதிநிதிகளிடம் இந்த விடயம் கொண்டுசெல்லப்பட்டு உதவிக்கான வேண்டுகோள் விடுக்கப்படுவதும் நன்மை தரும்.

நம்ம அரசியல்வாதிகள்? அவர்களின் வேலை அதுவா? மக்களை சந்திக்கவே மறுக்கின்றனர், மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுக்காக பேச வெட்கப்படுகின்றனர். அப்படியெனில் தேர்தல் காலங்களில் முயற்சிக்கலாம். இப்போ; தேர்தல் காலங்களிலும் மக்களை சந்திக்க அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனவே தமக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டுமென்கிற தெளிவு அவர்களிடத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

சாதாரண முருங்கைக்காய் கறியே போதுமானது எனது நாவுக்கு.

தெய்வமே…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

🤣கல்லுண்டாய் குப்பை மேட்டிலை குமாரசாமியின்ரை கோவணத்தையும் கிழிச்சு தொங்க விடுறதுக்கெண்டே ஒரு கும்பல் அலையுது😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.