Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

28 ஜூன் 2025

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஒரு வாட்டர் பார்க் உள்ளது. இதை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

தனது அணு ஆயுத திட்டங்களால் கடுமையான பொருளாதார தடைகளைச் சந்தித்துள்ள வட கொரியா உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது வடகொரியா வருவாய் ஈட்டுவதற்கான சுலபமான வழி என சிலர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6g2ylz2ywo

  • கருத்துக்கள உறவுகள்

வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு உணவைக் கூட சீனாவும், ஐரோப்பிய யூனியனும், செஞ்சிலுவைசங்கம் போன்ற NGO அமைப்புகளும் தான் கொடுத்து உதவுகின்றன. இவ்வளவு வறுமையில் இருக்கும் மக்கள், இந்த உல்லாச விடுமுறைத் தளத்திற்குப் போய், தங்கி, mall இல் பொருட்கள் வாங்கி..என்ன விளையாட்டு இது😂?

யாழ் களத்தில் கிம்மை "முன்னுதாரணத் தலைவராக" வரித்துக் கொண்ட உறுப்பினர்கள் இதை விளக்குவார்களா😎?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வடகொரிய தனது கடற்கரை மாளிகையை திறந்துவிட்டால் கிம்மை முன்னுதாரணத் தலைவராக வரித்துக் கொண்ட யாழ்கள உறுப்பினர்கள் இலங்கை இந்தியா, கியுபா ,மேற்குலகநாடுகளுக்கு பதிலாக அங்கேயே செல்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளான இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நலன்புரி நிறுவனங்களால் இன்றும் பஞ்ச நிவாரண உதவிகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்தியாவிற்கு என பிரத்தியேக சிறுவர் வறுமை என இன்றும் ஜேர்மனியில் நிதி சேகரிக்கின்றனர். அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வின் பின்னரும் இந்த உதவிகள் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம்.

உலகில் தன்னை புதிய வல்லராசாக காட்டிக்கொள்ள முனையும் சீனாவிற்கு மேற்கத்திய நாடுகள் செய்த உதவிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் அதை செய்து கொண்டே இருக்கின்றன.

கூட்டிக்கழித்து பார்க்கப்போனால் சந்ததி சந்ததியாக இனப்படுகொலை /இன அழிப்பு செய்துவரும் சிங்கள ஸ்ரீலங்கா எனும் இனவாத நாட்டிற்கு சென்றுவரும் வெள்ளை உல்லாச பயணிகளுக்கு செங்கம்பளம் விரிப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

நல்ல காலம் தனி நாடு அமையவில்லை. அதுவும் வந்திருந்தால் தமிழர்களுக்கு தமிழர்களே முற்று முழுதான எதிரிகள் ஆகியிருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வடகொரிய தனது கடற்கரை மாளிகையை திறந்துவிட்டால் கிம்மை முன்னுதாரணத் தலைவராக வரித்துக் கொண்ட யாழ்கள உறுப்பினர்கள் இலங்கை இந்தியா, கியுபா ,மேற்குலகநாடுகளுக்கு பதிலாக அங்கேயே செல்வார்கள்

அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அவர்களால் முடியாது என நினைக்கிறேன். "சதிகார" மேற்கு நாடுகள், அவர்கள் தங்கள் நாட்டை விட்டு எங்கும் போய் விடாமல் கடவுச் சீட்டை வாங்கி லொக்கரில் பூட்டி வைத்திருப்பார்கள் என ஊகிக்கிறேன். இதனால் தான், இஷ்டமில்லாமல் கஷ்டப் பட்டு இந்த மேற்கு நாடுகளிலேயே இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது.

கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன.

பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன.

ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளான இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நலன்புரி நிறுவனங்களால் இன்றும் பஞ்ச நிவாரண உதவிகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்தியாவிற்கு என பிரத்தியேக சிறுவர் வறுமை என இன்றும் ஜேர்மனியில் நிதி சேகரிக்கின்றனர். அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வின் பின்னரும் இந்த உதவிகள் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம்.

உலகில் தன்னை புதிய வல்லராசாக காட்டிக்கொள்ள முனையும் சீனாவிற்கு மேற்கத்திய நாடுகள் செய்த உதவிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் அதை செய்து கொண்டே இருக்கின்றன.

கூட்டிக்கழித்து பார்க்கப்போனால் சந்ததி சந்ததியாக இனப்படுகொலை /இன அழிப்பு செய்துவரும் சிங்கள ஸ்ரீலங்கா எனும் இனவாத நாட்டிற்கு சென்றுவரும் வெள்ளை உல்லாச பயணிகளுக்கு செங்கம்பளம் விரிப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

நல்ல காலம் தனி நாடு அமையவில்லை. அதுவும் வந்திருந்தால் தமிழர்களுக்கு தமிழர்களே முற்று முழுதான எதிரிகள் ஆகியிருப்பர்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இவை நீங்கள் சரியாகச் சுட்டிக் காட்டியது போல சிறந்த வாழ்க்கைத் தரமோ, நீதி முறைமையோ கொண்ட நாடுகள் அல்ல! ஆனால், இவை எவையுமே ஒரு குண்டு மணியைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் தோல்வியுற்ற நாடுகளும் அல்ல!

வட கொரியா கடலுக்குள் விட்டு விளையாடும் வாணங்களுக்கு செலவழிக்கும் தொகையை தன் மக்களுக்கு அடிப்படை உணவு, உடை, சுகாதார வசதிகள் கொடுக்க செலவழிக்க வேண்டும். இலங்கை- அதன் குறைபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி - தன் மக்களுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்தாவது கொடுக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

உங்கள் எண்ணம் போல வடகொரிய மொடலில் தனி தமிழர் தேசம் உருவாகியிருக்க வேண்டுமென்றால், அது உருவாகாமல் விட்டது தான் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது.

இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல

வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல

வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.

புத்திசாலிகளான கிம் ரீம் எப்படி மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் பாருங்கள்😂?

இப்படியே சிங்களவனும் இறுகப் பூட்டிய வீடாக இலங்கையை வைத்திருந்திருந்தால் தமிழர்களே அங்கே எஞ்சியிருக்காமல் போயிருப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல

வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.

சீனாக்காரன் அமெரிக்க வான் வெளியில் பலூன் விட்டு விளையாடியதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றீர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.

அணுவாயுதம் என்பது தன்மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அணுவாயுதத்தைப் பாவிப்போம் என்று அச்சுருத்துவதனூடாக அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பாவிக்கும் ஒரு கருவியாகத்தான் இதுவரையில் அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் பார்க்கின்றன.

ஆனால் வடகொரியாவோ ஈரானோ அவ்வாறல்ல. அவை அணுவாயுதத்தை உருவாக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இருக்கும் காரணங்கள் வேறு.

கிம்மைப் பொறுத்தவரை தனது சர்வாதிகாரத்தனமான ஆட்சியை, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையினை ஒரு நாடோ அல்லது கூட்டாக சில நாடுகளோ தன்மீது எடுக்கலாம், ஆகவே தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அணுவாயுதத்தை வைத்திருப்பது போலத் தெரிகிறது.

ஆனால் ஈரான் அப்படியல்ல. ஈரானின் அணுவாயுதத்தின் முதன்மை நோக்கம் இஸ்ரேலை அழிப்பது, பின்னர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தன்மீது நடக்கலாம் என்று அஞ்சும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரஞ்சித் said:

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

தற்போது அணு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள நாடுகளுக்கு என்ன பிரச்சனை என்பதையும் சிந்திக்க வேண்டும். ஏன் மேற்குலகு மீது அஜாரகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதையும் ஆராய வேண்டும். தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்தித்தால் இவர்கள் செய்வதெல்லாம் சரியாகத்தான் தெரியும்.

எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.

கியூபா இன்று என்ன பாவம் செய்தது? மாறுபட்ட அரசியல் கொள்கையை தவிர.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.

நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள்.

1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.

1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன.

இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன.

அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன்.

7 hours ago, குமாரசாமி said:

கியூபா இன்று என்ன பாவம் செய்தது? மாறுபட்ட அரசியல் கொள்கையை தவிர.....

கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.

பொருளாதார தடைகள் அரசுகளுக்கெதிராக என கூறப்பட்டாலும் அதன் இலக்கு அங்கு வாழும் மக்கள்தான், அரசுகள் பாதிப்படையமாட்டாது (எமது பிராந்தியத்திலும் கடந்த காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை அனுபவித்து வந்தவர்கள் என்பதால் இது ஒன்றும் எமக்கு புதிய விடயமல்ல), அவ்வாறிருக்கையில் ஏன் இவ்வாறான பொருளாதார தடைகள் மக்கள் மீது போடுகிறார்கள்? அதனை எவ்வாறு உலக சமூகத்தின் கண்முன்னே நடத்துகிறார்கள்?

The Sanctions Paradox

Invisible war

இந்த புத்தகங்கள் இது தொடர்பான மேலதிக தரவுகளை தரும், ஆர்வமிருந்தால் வாங்கி படிக்கலாம்.

மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை.

அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க அறிஞ்சர் பிளேட்டோ போலி கவிஞ்சர்களை நாடுகடத்த வேண்டும் என கூறினார், அதற்கு அவர் கூறிய காரணம் மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதே என கூறுகிறார்.

Perception என்பது ஒரு வர்ண கண்ணாடி போன்றது அவரவர் புரிதலி விடயங்கள் ஒன்று போல தோன்றும், மிக குறைவான தரவுகளுடன் விடய்ங்களை சுயவிருப்பின் அடிப்படையில் அணுகும் போது இவ்வாறான தவறான முடிவுகளுக்கு வரவேண்டிய நிலை உள்ளது, சமூகத்தில் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள ஒரு கல்வி சமூகத்திற்கு அதிக அக்கறையும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.

கண்ணுக்கு புலப்படாத போரினை ஒரு மதிப்பாய்வு செய்தவரின் கருத்டினுடாக அதில் கூறப்பட்ட விடயத்தினை சுருக்கமாக.....

ஒரு கொடுமையினை சட்டமாக்குவதற்கு ஐநா எவ்வாறு உடந்தையாக இருந்தது?

அதுவும் ஐ நா பாதுகாப்பு சபையினூடாக ஒரு பாரபட்சமான பொருளாதார தடை ஈராக்கிற்கெதிராக நிறைவேற்றப்பட்டது?

ஐ நாவால் அமைக்கப்பட்ட பிரத்தியேக கண்காணிப்புக்குழு ஈராக்கின் இரக்குமதியினை கண்காணித்தது, அவை மனிதாபிமான உணவு மருந்து உள்ளடங்கலாக.

இந்த பிரத்தியேக கண்காணிப்புக்குழுவிற்குள் ஊடுருவிய அமெரிக்க அதிகார மையம்

1.மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தியது.

2.அதிக பட்ச பொருளாதார அழுத்ததினை பிரயோகித்தது

3.இவை அனைத்தும் மக்களுக்கெதிரானது எனும் புரிதலுடனேயே அதனை நிகத்தியிருந்தது.

அமெரிக்கா ஐநாவின் 661 பொருளாதார தடை குழுவில் தந்து அதிகாரத்தின் மூலம் குளிர்சாதனம், சுத்தமான நீர், சவர்க்காரம், கோழி முட்டை (உயிரியல் ஆயுதம் செய்துவிடுவார்களாம், இந்த தடைகள் அத்துடன் இதற்கு மேலான பொருள்தடைகள் எமது பிராந்தியத்தில் முன்னர் நிகழ்த்தப்பட்டிருந்த்து) போன்ற பொருள்கள் தடை செய்தது.

இந்த பொருளாதார தடை ஈராக்கின் பொருளாதாரத்தினை முற்றாக அழித்தது மட்டுமன்றி ஒரு நாட்டின் இறையாண்மையினையே மீறியது.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல சுத்தமான நீரை வழங்குவதற்கான கருவிகளை திருத்துவத்ற்கான உதிரிப்பாகங்களுக்கான தடை முலம் 5 இலட்சம் குழந்தைகள் இறப்பிற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறையின் பரவல் தடுப்பு பணியகம் ஈரான் ஆக்கிரப்பு போரிற்கு முன்னரே காரணமாக இருந்தது.

இவை அனைத்தும் சதாமினை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியாக இருந்த போதும் அதன் மூலம் சதாமினை இந்த பொருளாதார தடையின் மூலம் எதுவும் செய்யவில்லை.

அவ்வாறிருக்கையில் எதற்காக பொருளாதார தடை? என தொடருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால்

அப்போது உண்மையான ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களை காணலாம். இந்த சர்வாதிக நாடுகள் - மேற்குலகநாடுகள் வேறுபாட்டை நன்கு தெரிந்து கொண்டவர்கள் ஈழதமிழர்கள். அதனால் தங்களது தனிபட்ட வாழ்க்கையை மேற்குலகநாடுகளில் அமைத்து கொண்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2025 at 00:52, ரஞ்சித் said:

கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

இதில் ஒரேயொரு தகவல் பிழை இருக்கிறது: சர்வாதிகாரியான பரிஸ்ரா 1950 கள் வரையில் அமெரிக்க, மேற்கு சார்ந்த அரசொன்றை நடத்தி வந்தார். ஆனால், உள்ளூர் மக்களுக்கு பல துன்பங்கள், மனித உரிமை மீறல்கள் அவரால் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் அவரைக் கண்டிக்க ஆரம்பிக்க, பிடல் காஸ்ரோவின் புரட்சியினால் 1953 இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

கியூபப் புரட்சியின் பின்னர் உடனடியாக அமெரிக்கா தடைகளை விதிக்கவில்லை. காஸ்ரோ கூட ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் சோவியத் பக்கம் சாய்ந்து விடவில்லை. 1959 இல் கியூபத் தலைவரான காஸ்ரோ அமெரிக்காவிற்கு வந்த போது அவருக்கு மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அந்த நேரம் உப ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் காஸ்ரோவைச் சந்தித்துப் பேசிய பின்னர் "a nice young man with strange ideas" என்று தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.

1961 இல் கியூபாவைக் கைப்பற்ற சி.ஐ.ஏ தன்னிச்சையாக முயன்ற பன்றிக் குடா நடவடிக்கை, பின்னர் 1962 இல் சோவியத் ஏவுகணைகளை இரகசியமாக கியூபாவினுள் நிறுத்த முயன்றமை, இந்த இரு கட்டங்களில் தான் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் முகலில் போடப் பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

இதில் ஒரேயொரு தகவல் பிழை இருக்கிறது:

நன்றி ஜஸ்ட்டின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/7/2025 at 06:52, ரஞ்சித் said:

1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன.

ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் போது மன்னர் ஷா அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பதுக்கி வைத்த சொத்துக்கள் சொல்லில் அடங்காதவை.அந்த பணத்தை(தங்கம்) கொடுத்துதான் அமெரிக்க தூதரக பயணக்கைதிகளை மீட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்த பயணக்கைதிகள் அதிரடி மீட்பு விடயத்தில் அமெரிக்கா தோல்வியடைந்து சேறு பூசிக்கொண்ட விடயம் பெரிய அவமானம்.இன்று பழி தீர்த்து விட்டார்கள்.

அந்த அரச பரம்பரைகள் ஒழுங்காக இருந்திருந்தால் இஸ்லாமிய புரட்சிகள் வந்திருக்கவே மாட்டாது.

அந்த மன்னர் பதுக்கி வைத்த சொத்துக்களை வைத்து தான் மன்னர் பரம்பரை மேற்கு நாடுகளில் இன்றும் உல்லாசமாக வாழ்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.