Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Rajeeban

05 Aug, 2025 | 11:15 AM

image

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ்  வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு உத்தரவிடுவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

தீர்மாமொன்றை எடுத்துள்ளேன், அதிலிருந்து பின்வாங்க முடியாது,காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கப்போகின்றோம்,முப்படைகளின் பிரதானி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார் என அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலின் வைநெட் செய்தி வெளியிட்டுள்ளது..

israel_army_2025.jpg

இஸ்ரேலின் இராணுவஅதிகாரிகள் தரைநடவடிக்கையை விஸ்தரிப்பதை விரும்பவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன.

ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரை நடவடிக்கையில் ஈடுபடுவது பணயக்கைதிகளிற்கும் படையினருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என  இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கவிரும்புகின்றார் என வெளியான தகவல்களை இஸ்ரேலிய படையினரின் தாய்மார் கண்டித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/221853

  • கருத்துக்கள உறவுகள்+

வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை கையகப்படுத்த நினைக்கும் ஹிந்தியர்களுக்கும்....

இலங்கையின் தமிழ்பகுதிகளை அபகரிக்க முனையும் சிங்கள இனவாதிகளுக்கும் நல்தொரு சிந்தனையும் நல்ல திட்ட வடிவங்களும் இதுவாகத்தான் இருக்கப்போகின்றது.

பலஸ்தீனத்திற்கு எப்படி விடிவில்லையோ....அதே போல் இலங்கை தமிழர்களுக்கும் விடிவே வராது.

அதிலும் இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் சாம்பார் குழப்பங்களை பார்க்கும் போது தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு இல்லாமல் இருப்பதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

காசாவிற்கான் விடிவு காலம் அண்மிப்பதாகவே தெரிகிறது. ஹமாசின் பயங்கவரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அதற்குப் பதிலடி வழங்குகிறேன், பணையக் கைதிகளை மீட்கப்போகிறேன் என்கிற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்பு சர்வதேசத்தில் கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்து வருகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு 600 பாரவூர்திகள் என்று கணக்கிடப்பட்டிருக்கையில் வெறும் 80 பாரவூர்திகளையே இஸ்ரேலிய அரசு அனுமதித்து வருகிறது. அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் பாரவூர்திகளை சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களும் அவ்வபோது மறித்து வருகிறார்கள்.

ஆக, மிகவும் திட்டமிட்ட வகையில் பட்டிணிச்சாவொன்று இஸ்ரேலினால் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு பத்திற்கும் மேலான பலஸ்த்தீனர்கள், குறிப்பாகக் குழந்தைகள் பட்டினியினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அவலங்களே சர்வதேசத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. இதன் ஒரு அங்கமே பலஸ்த்தீனத் தேசத்தினை அங்கீகரிப்பது எனும் முடிவு.

இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அழிவுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அவலங்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச அங்கீகாரமோ அல்லது யுத்த நிறுத்தமோ இல்லாது எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளும், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளும், நிவாரணப் பொருட்களும் இந்தியாவின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

பலஸ்த்தீனத்திற்கான விடிவென்பது எமக்கான விடிவையும் தேடித்தரலாம். ஆகவே பலஸ்த்தீனத்திற்கான விடிவிற்காய் நாம் ஆதரவு கொடுப்பது எமக்கு நாமே உதவுவதாக அமையும் என்பது எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, ரஞ்சித் said:

காசாவிற்கான் விடிவு காலம் அண்மிப்பதாகவே தெரிகிறது. ஹமாசின் பயங்கவரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அதற்குப் பதிலடி வழங்குகிறேன், பணையக் கைதிகளை மீட்கப்போகிறேன் என்கிற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்பு சர்வதேசத்தில் கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்து வருகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு 600 பாரவூர்திகள் என்று கணக்கிடப்பட்டிருக்கையில் வெறும் 80 பாரவூர்திகளையே இஸ்ரேலிய அரசு அனுமதித்து வருகிறது. அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் பாரவூர்திகளை சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களும் அவ்வபோது மறித்து வருகிறார்கள்.

ஆக, மிகவும் திட்டமிட்ட வகையில் பட்டிணிச்சாவொன்று இஸ்ரேலினால் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு பத்திற்கும் மேலான பலஸ்த்தீனர்கள், குறிப்பாகக் குழந்தைகள் பட்டினியினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அவலங்களே சர்வதேசத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. இதன் ஒரு அங்கமே பலஸ்த்தீனத் தேசத்தினை அங்கீகரிப்பது எனும் முடிவு.

இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அழிவுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அவலங்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச அங்கீகாரமோ அல்லது யுத்த நிறுத்தமோ இல்லாது எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளும், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளும், நிவாரணப் பொருட்களும் இந்தியாவின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

பலஸ்த்தீனத்திற்கான விடிவென்பது எமக்கான விடிவையும் தேடித்தரலாம். ஆகவே பலஸ்த்தீனத்திற்கான விடிவிற்காய் நாம் ஆதரவு கொடுப்பது எமக்கு நாமே உதவுவதாக அமையும் என்பது எனது எண்ணம்.

சர்வதேசத்தில் கமாஸ் இயக்கத்தை யார் பயங்கரவாதிகள் என்று கூறுகின்றார்களோ அவர்கள் தான் விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகள் என கூறி தடை செய்துள்ளார்கள்.

கமாஸ் இயக்கம் செய்வதெல்லாம் சரியென கூற முடியாவிட்டாலும்...... நீ பயங்கரவாதி என கூறி சுண்டு விரலை நீட்டுபவர்கள் பயங்கரவாதத்தை கையில் எடுத்துத்தான் தங்களுக்கென நாடுகளை உருவாக்கியவர்கள்.

உதாரணத்திற்கு அமெரிக்கா,அவுஸ்ரேலியா,கனடா போன்ற நாடுகள்.

ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையை ஒப்பிடும் போது புவிசார் அரசியல்களையும் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெட்டன்யாகு இன வெறிபிடித்து ஆடுகின்றார். இது அவரது அழிவுக்கே வழிகோலலம். தற்கேது பெரும்பாலான இஸ்ரேலியப் பொதுமக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. அதனையே முப்படைகளின் பிரதானி வெளிப்படுத்தியுள்ளார்.கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்கும்.காசாவில் பலியாகும் அப்பாவிக்குழந்தைகளின்ட பாவம் இஸ்ரேலுக்கு சாபமாகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்?

உணவுக்காக தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கட்டுரை தகவல்

  • யோலண்ட் நெல்

  • மத்திய கிழக்கு செய்தியாளர்

  • யாங் டியன்

  • பிபிசி நியூஸ்

  • 41 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

இத்தகைய நகர்வு "மிகவும் கவலையளிக்கும்" எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் ஐநா உதவி பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா ஐநா பாதுகாப்பு அவையில் கூறினார்.

நெத்தன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் காஸா பகுதியை முழுமையாக கைப்பற்றி, ஹமாஸை தோற்கடிக்கப் போகிறோம்," என நெதன்யாகு அரசை சேர்ந்த ஒரு மூத்த நபர் கூறியதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது.

காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலின் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்?

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

ஆனால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இத்தகைய நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

சமீபத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கலாம் அல்லது நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காஸாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது, காஸாவில் படிப்படியாக பஞ்சம் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது உரையில் ஜென்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக எச்சரித்தார்.

"இது பல மில்லியன் பாலத்தீனர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காஸாவில் மீதமுள்ள பணயக்கைதிகளின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம்," என்று அவர் கூறினார்.

சர்வதேச சட்டத்தின் கீழ், "காஸா எதிர்கால பாலத்தீனத்தின நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது, இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேலின் ராணுவம், தற்போது காஸாவின் 75% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது.

ஆனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் உட்பட முழு பகுதியையும் ஆக்கிரமிக்க புதிய திட்டத்தை இஸ்ரேல் பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது

ராணுவத் தளபதி மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் இந்த உத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முன்மொழிவுகள் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளன .

இத்திட்டம் குறித்து ஊடகங்களில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மூத்த நபர், "இது ராணுவ தளபதிக்கு ஏற்புடையதில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்," என்று பதிலளித்தார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியது

இத்தகைய முடிவு தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

49 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவர்களில் 27 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் ஆகியவற்றை ஜென்கா பாதுகாப்பு அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் "அசுத்தமான" மற்றும் "மனிதாபிமானமற்ற" நிலைமைகளைக் குறிப்பிட்டு, உடனடியாக போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார்.

"இஸ்ரேல், காஸாவிற்கு உள்ளே நுழையும் மனிதாபிமான உதவிகளை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அனுமதிக்கப்படும் உதவிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை," என்று ஜென்கா கூறினார்.

மே 2023 முதல் உணவு மற்றும் பொருட்களைப் பெற முயன்றபோது 1,200-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி உணவு விநியோக மையங்களில் நடைபெறும் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகளை அவர் கண்டித்தார்.

2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாகக் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது.

காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட, பரவலான பட்டினி நிலவுவதாக ஐநா முகமைகள் எச்சரித்துள்ளதுடன் இந்த மாதம் குறைந்தது 63 ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.

உதவி வழங்கப்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், காஸாவில் "பட்டினி இல்லை" என்றும் இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqxg4d8jyn8o

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2025 at 16:27, குமாரசாமி said:

ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையை ஒப்பிடும் போது புவிசார் அரசியல்களையும் சிந்திக்க வேண்டும்.

இப்படி புவிசார் அரசியலை ஆழமாக வாசித்து, சிந்தித்து, "எல்லாரும் செய்வது சரிதான், இதில் பிழையேதும் கிடையாது" என்ற முடிவுக்கு வந்து விட வேண்டும்! பிறகேன், எங்களை சிங்களவன் கொன்றது பிழையென்று நீலிக் கண்ணீர் வடிப்பான்? அதுவும் அவசியமில்லை😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் - இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை

07 AUG, 2025 | 02:32 PM

image

ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு  உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

gaza_2222222222222222.jpg

ஐந்து மாதங்களிற்குள் காசா முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது.

இஸ்ரேலிய பிரதமரின் இந்த திட்டத்தினால் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கும் ஆபத்து ஏற்படும் உயர் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச்செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது என பல ஹீப்ரூ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தைய பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள ஹமாசினை அழிப்பதும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.

ஹமாசின் பிடியில் 20 பணயக்கைதிகள் உயிருடன் உள்ளனர் என  இஸ்ரேல் கருதுகின்றது.

காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் காசா நகரிலிருந்து ஆரம்பமாகி மத்திய காசா பள்ளத்தாக்கை நோக்கி நகரும்.

இதன்போது இந்த பகுதியில் உள்ள காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மாவசி மனிதாபிமான வலயத்தை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

சில அமைச்சர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் இந்த திட்டத்திற்கான ஆதரவு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு கிடைக்கும் பாதுகாப்பு அமைச்சரவையின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு கிடைக்கும்.

சிறிய குழுவொன்று கடந்த மூன்று நாட்களாக இது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது காசா மீதான நீண்டகால நடவடிக்கைகளிற்கான பல திட்டங்களை இஸ்ரேலிய இராணுவத்தின் முப்படை பிரதானி லெப் ஜெனரல் எயால் சமீர் முன்வைத்துள்ளார்.

திட்டத்தில் உள்ள விடயங்கள்

காசா நகரை முதலில் கைப்பற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களை விஸ்தரிக்கும்  திட்டம் இஸ்ரேலிடம் உள்ளது.

இதனடிப்படையில் முதற்கட்டமாக காசா நகரில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் பிறப்பிக்கும், இந்த நகரில் ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர்.

முதல்கட்டம் பல வாரங்களிற்கு நீடிக்கும்.

gaza_tent.jpg

இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கும், இதன்போது இஸ்ரேலுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்துவார்.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நான்கைந்துமாதங்கள் நீடிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்களான வைநெட், சனல் 13 போன்றவை தெரிவித்துள்ளன.

காசா நகரை கைப்பற்றுவதுடன், மத்திய காசாவில் உள்ள முகாம்களை நோக்கி செல்லும் திட்டம் உள்ளதாக கான் என்ற ஒலிபரப்புச்சேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் இதுவரை மத்திய காசாவை நோக்கி நகராதது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மக்கள் காசாவின் தென்பகுதி நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும்.

பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.

இதேவேளை யுத்த நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்ககூடாது என வற்புறுத்தி வருகின்றன, அமெரிக்கா ஊடாக இந்த செய்தியை இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன.

அதேவேளை ஹமாஸ் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்த நாடுகள் வற்புறுத்துகின்றன.

israel_army_222222222222222222222222.jpe

இதேவேளை மேலும் அதிகளவு காசா மக்களை தென்மாவாசி நோக்கி நகர்த்துவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என கான் ஒலிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் காசாவிலிருந்து மக்களை வெளியேறச்செய்யும் திட்டத்திற்கு இது உதவலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222049

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.