Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“If I am childish, Gandhi is also childish.”

  • Replies 99
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார்.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா .... தமிழ் இளைஞரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்து இதைவிட பயங்கர மனித உரிமை மீறலில் ஈடுபட்டபோது இவர் வாயே திறக்கவில்லையே, அது ஏன்? தான் தமிழரின் பிரதிநிதி என்று எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம்? எல்லோரும் வைத்திய சாலையில் படுக்கும் போது, தலைமறைவாகும்போது ரணிலார் மட்டும் ஏன் தலையைக் கொடுத்தார்? "யானைக்கும்அடி சறுக்கும்." தமிழரை தந்திரமாக கூறு போட்டு அழித்தவர், இன்று தன்னை தான் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? அனுதாபம் பெறவா? இவனுகள் நித்திரையிலும் தமக்கு எழும் எதிர்ப்பை எதிர்ப்பாளரை வைத்தே தமக்கு சாதகமாக எப்படி திருப்பலாமென யோசிப்பார்கள். இராணுவ வெற்றி மறைந்து போக, இப்போ வீடற்றவர் எனக்காட்டி எப்படி ஏழை மக்களை திசை திருப்பினார்கள். உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் சரியான சட்ட விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் கைது செய்தால் அரசியல் பழிவாங்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதனாலேயே அதற்கு முன், அனுராவுக்கு எதிராக நீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடிகிறது. இப்போ, மக்களை இவர்களின் ஊழலுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை அனுரா செய்ய வேண்டியது முதல் வேலை. இல்லையேல் எதிரி முந்திக்கொண்டு அனுராவை சிறையில் அடைக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கைதாகாலாம்?

written by admin August 23, 2025

saman.jpg?fit=1170%2C658&ssl=1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23) நடைபெற்ற விசேட காவற்துறை  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க கூறினார்.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

https://globaltamilnews.net/2025/219556/

  • கருத்துக்கள உறவுகள்

Ranil-Anura.jpg?resize=650%2C375&ssl=1

ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன்.

2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம்.

ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கனகாலம் சிறையில் வைத்திருக்கவில்லை. ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை அல்ல. அதுபோல ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் உண்டு. சிங்கள உயர் குழாமானது ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியலில் பகைவர்போல நடந்து கொள்ளும். ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது ஒரு உயர் குழாத்தினர் இன்னொரு உயர் குழாத்தினரைப் பாதுகாத்து, ஒரே வர்க்கமாக ஒன்று திரண்டு விடுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதுதான் நடந்தது.

ஆனால் இப்பொழுது ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள உயர் குழாத்தைப் பிரதிபலிக்காத அனுரகுமார ஜனாதிபதியாக இருக்கும் ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நவீன வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “தம்புத்தேகமவில் இருத்து வந்த நாட்டுக்காட்டான் கொழும்பு செவின் ரோயல் மனிதனை சிறைக்கு அனுப்பித் தவறிழைத்ததாகவும் அதற்கான தக்க பதிலை வெகு சீக்கிரத்தில் பெறுவார் என்றும்’ கூறுகின்றார்கள்” என்று இஷார.எம்.ஜெயசேன எழுதியுள்ளார்.

ரணில் கைது செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவரைச் சென்று பார்த்தார்கள். அவருடைய கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித்தும் போய்ப் பார்த்தார். தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவரோடு நின்றார்கள். சிங்கள உயர் குழாம் தங்களில் ஒருவருக்கு ஆபத்து என்றதும் ஒன்று சேரக் காண்கிறோம். “ரணிலுக்கு ஆதரவு வழங்க நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நாமல், மைத்த்ரீ ரிஷாட், ஜீவன், ட்விட்டரில் ஆதரவு வழங்கிய சஜித், பாராளுமன்றத்தில் “little courtesy” கேட்ட ஹக்கீம், வெள்ளிக்கிழமை கைது செய்ததை “ill-advised” என்ற சுமந்திரன் உட்பட அனைவரும் காட்ட முயன்றது இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான்.”என்று இஷார.எம்.ஜெயசேன மேலும் கூறுகிறார்.

அனுர,ரணிலைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை உஷாரடைய வைத்திருக்கிறாரா ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இதுவரையிலும் 63 பேர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்திருக்கிறது.அந்த 63 பேர்களுக்குள்ளும் அரசியல்வாதிகள்.உயர் அதிகாரிகள்,படைத்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவரும் அடங்குவர். இவ்வாறான கைது நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல்வாதிகளும் மேட்டுக்குடியினரும் படைப்பிரதானிகளும் ஒன்று திரளப் போகிறார்கள். அதாவது சிறீலங்காவை இதுவரை காலமும் ஆண்டு வந்த மேட்டுக்குடியினர் -பவர் எலீற்ஸ்- இனி ஒன்றுதிரளுவார்கள். இதனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சவால்கள் மேலும் அதிகரிக்கும்.

அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்தக் கைது நடவடிக்கை ஐநாவிலும் உலகப்பொது மன்றங்களிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

ரணில் கைது செய்யப்பட்டிருக்கும் நேரம் எது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.அடுத்த ஜெனிவா கூட்டத்தினருக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு கடற்படைப் பிரதானியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை யாவும் இலங்கைத் தீவின் நீதி பாரபட்சமற்றது, நம்பகத்தன்மை மிக்கது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவக்கூடும். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டு நீதியை வெளிநாட்டு உதவிகளின் மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ஓர் அனைத்துலக பின்னணியில், இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கு இந்தக் கைது அனுராவுக்கு உதவும்.

கைது செய்யப்பட்டிருப்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலான மேற்கு நாடுகளின் செல்ல பிள்ளை. சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு லிபரலாகப் பார்க்கப்படுகிறவர். தமிழ் மக்கள் அவரை நரி என்று கூறலாம். அல்லது லிபரல் முகமூடி அணிந்த இனவாதி என்றும் கூறலாம்.ஆனால் மேற்கு நாடுகள் அவரை லிபரல் என்றுதான் கருதுகின்றன.மேற்கு நாடுகளுக்கு அதிகம் விருப்பமான ஒரு தலைவர் அவர்.நவீன ஸ்ரீலங்காவில் இதுவரை ஸ்ரீலங்காவை ஆண்ட சிங்களபௌத்த கட்சிகளைச் சேர்ந்த அநேகமானவர்கள் சிங்கள பௌத்த பாரம்பரிய உடைகளுடன்தான் காணப்படுவார்கள்.ஆனால் ரணில் விக்ரமசிங்க என்றைக்குமே அவ்வாறு வேட்டியும் நஷனலுமாக காணப்பட்டதில்லை. அவர் எப்பொழுதுமே மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்படுவார் . அந்த அளவுக்கு அவர் மேற்கத்தியப் பண்பாட்டின் வாரிசு.

அது மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம்,இலங்கை அரசாங்கம் ஐநாவின் தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்கியது.அது ரணில் ஆட்சியில் இருந்தபடியால்தான் நடந்தது.எனவே ஐநாவைப் பொறுத்தவரையிலும்கூட ரணில் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர்.இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்றிய பெற்றோரில் ரணிலும் ஒருவர். ஆனால் அவர், தான் பெற்ற பிள்ளைக்கு உண்மையாக இருக்கவில்லை.அதனால் தான் 2018 ஆம் ஆண்டு சுமந்திரன் கூறுவதுபோல அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாக முடிவடைந்தது.ஆனாலும் ஐநா போன்ற அனைத்துலக நிறுவனங்களைப் பொறுத்தவரை ரணில் கெட்டிக்காரர்;சந்திரசாலி;எல்லாப் பேரரசுகளிலும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.என்றாலும் செல்லப் பிள்ளை.

இப்படி மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகக் காணப்படும் ஒருவரை ஒருவரை அனுர தூக்கியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர் எதைச் சொல்ல முற்படுகிறார்?

இந்த இடத்தில் ராஜபக்சக்களைத் தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? உள்நாட்டில் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் அணிலுக்காக அவருடைய ஆதரவாளர்கள் அந்த அளவுக்குக் கொதித்து எழவில்லை.மகிந்த குடும்பத்தவர்களைத் தூக்கினால் உள்நாட்டில் குழப்பம் ஏற்படலாம்.ஆனால் ரணிலைத் தூக்கினால் ஒப்பீட்டளவில் குறைந்த குழப்பமே ஏற்படும் என்று நன்கு கணித்து ரணில் தூக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகள் மத்தியிலும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்கள் மத்தியிலும் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவரைத் தூக்கி அதன் மூலம் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு அனுர அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

இதில் ஒரு வர்க்கப் பரிமாணம் உண்டு. அதேசமயம் இருவருமே “அரகலய”வின் விளைவுகள்தான். அரகலயவின் முதல் கனிகளைப் புசித்தவர் ரணில். அரகலயவின் விளைவாக ராஜபக்சக்கள் ஓடி ஒழிய வேண்டி வந்தபொழுது அவர்கள் ரணிலை ஒரு கவசமாக முன்னே நிறுத்தினார்கள்.ரணிலும் தனது வர்க்கத்தைப் பாதுகாத்து,அரகலயவை நசக்கினார்.அதேசமயம் அதன் விளைவாக ஜனாதிபதியாக வந்தார்.

அதன்பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் அரகலயவின் கனிகளை தேர்தல் மொழியில் நன்கு மொழி பெயர்த்த ஜேவிபி அரகலயவின் அடுத்த கட்டக் கனிகளை தனக்காக்கிக் கொண்டது. இப்பொழுது அரகலயவை நசுக்கிய ஒருவரை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை “எல் போர்ட் அரசாங்கம்” என்று இகழ்ந்த ஒருவரைத் தூக்கியதன் மூலம் ஜேவிபி தன்னுடைய கணக்கு ஒன்றைத் தீர்த்திருக்கிறது.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். சந்தேகமே இல்லை. அனுர இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார் என்பது உண்மை. இதன் விளைவாக ஒன்று திரளப் போகும் சிங்கள பவர் எலீட்ஸ்-சக்தி மிக்க உயர் குழாம் அனுர வைச் சூழ்ந்து நின்று தாக்கும். அதைத் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.சிலவேளை தொடர்ச்சியாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்மூலம் அனுர தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடும். அல்லது கவிழவும் கூடும்.

https://athavannews.com/2025/1444387

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உப்பிடி எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி உள்ளுக்கு போட அவைக்குள்ள வருத்தங்கள் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் வெளியிலை வரும் போல கிடக்கு....😂

இந்த அரசியல்வாதிகள் எல்லாம் உடம்பு முழுக்க ஆயிரம் வருத்தங்களை வைத்துக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய போட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க... கண் எல்லாம் வேர்க்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

538694271_4075218066053491_6066333885621

ரணிலின் முதல் பேருந்து பயணம்! 76 வருட வாழ்க்கையில், ரணில் ஒருபோதும் பேருந்தில் பயணம் செய்ததில்லை.

////இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டது கதை/////

கைது செய்யப்பட்டு விளக்கமறியலி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது என ஒரு சாராரும், தீதிர சிகிச்சை வழங்கப்படுகிறது என ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.

மற்றொரு கதை அவரை சிங்கபூருக்கு விசேட மருத்துவ தேவைக்காக அழைத்து செல்வதாக.

இந்த கதைகளை போல பல கருத்துக்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்கும் என்பதே நிதர்சனம்.

முதல் பேருந்து பயணம்

ரணில் விக்ரமசிங்க கடந்த 76 ஆண்டுகளில் பெறாத அனுபவத்தை கடந்த 22 ஆம் திகதி பெற்றிருந்தார். ஆம். அது அவரின் முதல் பேருந்து பயணம்.

76 வருட வாழ்க்கையில், ரணில் ஒருபோதும் பேருந்தில் பயணம் செய்ததில்லை.

அவரது முதல் பேருந்து பயணம் சிறைச்சாலை பேருந்தில் நடந்தது. அதுவும் கைகளில் கைவிலங்கிடப்பட்ட நிலையில்.

ரணில் எங்கு சென்றாலும் அவருடன் ஒரு பாதுகாப்பு பரிவாரங்கள் பின்தொடர்வார்கள். அவ்வாறே கடந்த 22 ஆம் திகதி ரணில் பயணித்த பேருந்துக்கும் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இங்கு சிறைச்சாலை பேருந்தென்பதால் சிறை காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

மிஸ்டர் கிளீன்

நாட்டின் மிகவும் சலுகை பெற்ற வகுப்பினரான அல்லது'மிஸ்டர் கிளீன்' என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .

நேற்று முன்தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது அரவது ஆதரவாளர்களக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்ககூடும்.

நீதிபதி நிலுபுலி லங்காபுர அவரது பிணையை நிராகரித்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பிறகு, ரணில் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று 'போகலாம்' என்று கூறி வெளியேறத் தயாராகியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ரணில் சிறை மருத்துவமனையில் இரவைக் கழித்த பின் நேற்று சிறை மருத்துவமனையில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் ETU (அவசர சிகிச்சை பிரிவு) க்கும், அங்கிருந்து காலையில் ICU (தீவிர சிகிச்சை பிரிவு) க்கும் மாற்றப்பட்டார்.

அவர் தற்போது ICUவில் இருக்கிறார். இவ்வளவு நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இரண்டு நாட்களில் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டது என்ற கதை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டது கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன பிரேமரத்ன ரணிலுக்கு ஆதரவாக வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.

முந்தைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளால் விக்ரமசிங்க ஏற்கனவே இதேபோன்ற குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போதைய குற்றச்சாட்டு முன்னுதாரணத்தைப் பற்றியது அல்ல, மாறாக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியது பற்றியது.

அனுஜ பிரேமரத்ன தனது வாதத்தில், விசாரணை தொடக்கத்திலிருந்தே குறைபாடுடையது என்றும், "தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரின் கருத்துக்களால் இது தூண்டப்பட்டது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கறைபட்டது என்றும் அவர் வாதிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முழு வழக்கையும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என வாதிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரதிவாதியின் குற்றங்களை விளக்கிய சட்டமா அதிபர் திணைக்கள வாதங்கள் ரணிலுக்கான பிணை மீது அதில் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

ரணிலுக்கு, "76 வயது, இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்" என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவரது மனைவி, புற்றுநோய் நோயாளி என்றும் கூறப்பட்து.

குழந்தைகள் இல்லாததால், அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து இருந்தனர் என பிரேமரத்னவின் வாதங்களால் விளக்கப்பட்டது.

அந்த வேண்டுகோள் ஒரு அனுதாப உணர்வைத் தூண்டியிருக்கலாம். ஆனாலும் நீதிக்கான வலிமையை எடுத்துகூறவேண்டும் என குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தால், ரணிலுக்கான சிகிச்சை சிறைச்சாலை மருத்துவமனையிலும் கிடைக்கும் என வாதிடப்பட்டது.

இதன்படி இன்று இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் இளைஞர் மன்றத்தில் விக்ரமசிங்க தலைமை விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமரத்ன அறிவித்தார். இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.

இதனால் அவர் விடுவிக்கப்பட்ட வாய்ப்பிருந்ததாக கருதப்பட்டது. இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், அத்தகைய அழைப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்னை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச தொடர்புகள்

இதற்கிடையில், ரணிலின் நிலைமை குறித்து தூதர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது சில அழுத்தங்கள் பிரியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐ.தே.க. தலைவர்கள் மற்றும் கொழும்பு உயரடுக்கில் உள்ளவர்கள் ரணிலுக்கு சிறந்த சர்வதேச தொடர்புகள் இருப்பதாக நினைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்ககூடும்.

ட்ரம்ப் வரி சம்பவத்தின் போது, 'ரணில் இருந்திருந்தால், அவர் ட்ரம்பிற்கு ஒரு முறை அழைப்பு விடுத்து பிரச்சினையைத் தீர்த்திருப்பார்' என்று ஐ.தே.க.தரப்பினர். பகிரங்கமாகக் கூறியிருந்தனர்.

இது அவர் தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச தொடர்புகளை வளர்த்துக்கொண்ட விதத்தின் எதிர்பார்ப்புக்களாக கூட இருந்திருக்களாம்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைபோல் சர்வதேசத்தின் பார்வை ரணில் பக்கம் திரும்பவில்லை என்றே கூறியாகவேண்டும்.

இலங்கையின் மீது அதிக செல்வாக்கு செலுத்தக்கூடிய தூதரகங்கள்தான் பிரதானமானவை. அந்த தூதர்கள் யாரும் இதற்கு பதிலளிக்க வரவில்லை. உண்மையில், தூதர்கள் ரணிலை ஏமாற்றவில்லை.

மேலும், இன்றுவரை, அனைத்து முக்கிய சர்வதேச ஊடகங்களும் இலங்கை பொருளாதார ரீதியாக திவாலான நிலையில், முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப நலனுக்காக மில்லியன் கணக்கான பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன.

அத்தகைய சூழ்நிலையில், அவரை ஆதரிக்க தயாராக ஒருவர் வந்தால் அவர் மற்றொரு மோசடியாளராகவே சர்வதேசத்தின் முன் கருதப்படுவார்.

சலுகை மந்திரம்

அரசியல் சலுகை பெற்ற வர்க்கம் மற்றும் கொழும்பு உயரடுக்கின் மற்றொரு மந்திரம் ரணிலின் கைதில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, அநுரவின் அரசாங்கம் ரணில் செய்ததையே செய்கிறது, யார் அதைத் தொட்டாலும், யாரும் ரணிலைத் தொட முடியாது என கூறிவந்தது.

ரணில் செய்ததை அனுரவின் அரசாங்கம் தொடர்ந்து செய்தால், ரணில் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை.

ரணிலை விடுவிக்க வேண்டும், சட்டம் ரணிலைத் தவிர அனைவருக்கும் பொருந்தும் என்பதே பொருளாகியிருக்கும்.

ஆனால் இறுதியில், ரணிலைத் தொட்டது அநுரவின் அரசாங்கம் அல்ல, மாறாக சட்டத்திற்கு அப்பாற்பட்ட யாரும் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு அளித்த வாக்குறுதியாகும்.

அநுர அடிக்கடி கூறும் ஒரு பழமொழி உண்டு. "எல்லோரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது மட்டுமல்ல, அனைவரும் சட்டத்திற்கு பயப்பட வேண்டும்." என்பதே.

சலுகை பெற்ற வர்க்கமும், கொழும்பு உயரடுக்கும் ரணிலை வைத்து தனது அரசியல் தாகத்தை தீர்த்துக்கொள்ள வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையம் ரணில் சிறைக்குச் சென்ற பிறகு ஆவியாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த அரசியல்வாதிகள் எல்லாம் உடம்பு முழுக்க ஆயிரம் வருத்தங்களை வைத்துக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய போட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்க்க... கண் எல்லாம் வேர்க்குது. 🤣

அவருக்கு முன்னால் ஒரு குழு குழு சிறுவனை விட்டு விட்டு பாருங்கள். அத்தனை வருத்தங்களும் பறந்து எழும்பி ஆட தொடங்கிவிடும்.

அதுவும் காந்தி வழியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

அவர் பற்றி இன்னமும் அறியாத தகவல்கள்...

கொழும்பு CRFC மைதானத்துக்கு அவ்வப்போது வரும் அவர் , அந்த மைதானத்தின் Pavilion மாடியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையில் அமர்ந்து மது அருந்தியபடி அங்கே ரக்பி விளையாடிக்கொண்டிருக்கும் பதின்ம வயது மற்றும் இருபதின் ஆரம்ப இளைஞர்களை கவனித்துக்கொண்டிருப்பார். அதில் பிருஷ்டம் பெரிதான சிறார்களை/இளையோரை குறிவைத்து கீழே இறங்கி, " வீட்டுக்கு வருகிறாயா? இலங்கை அணியில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் " என்பார்.

இவ்வாறாக அவர் இலங்கையை " தூக்கி நிறுத்தினார் "

ithuvum facebook prathithaan

மிஸ்டர் கிளீன் பற்றி எப்படியெல்லாம் எழுதுறாங்க..

1 hour ago, விசுகு said:

அவருக்கு முன்னால் ஒரு குழு குழு சிறுவனை விட்டு விட்டு பாருங்கள். அத்தனை வருத்தங்களும் பறந்து எழும்பி ஆட தொடங்கிவிடும்.

அதுவும் காந்தி வழியாம்.

இதுவரை காலமும் ரணில்... நல்லவர் என நினைத்திருந்தேன். 😜

இந்தக் கெட்ட பழக்கமும் இருக்குது என்று இப்பதான் தெரியும்.animiertes-banane-smilies-bild-0007.gif 😂 🤣

எந்தப் புத்துக்குள்ளை, என்ன பாம்பு இருக்குது என்று, தெரியாமல் கிடக்குது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-08-24-142643.jpg?resize=

ரணில் விக்கிரமசிங்க கைது தொடர்பில் சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது- பிமல் ரத்நாயக்க!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது எனவும் அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது.

இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும். இதுவிடயத்தில் எவருக்கும் விதி விலக்கல்ல.

அதேவேளை, இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரு வருடமாகின்றது.

இதனை முன்னிட்டு முதலாம் திகதியில் இருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பமாகின்றது.

வடக்கில் இருந்துதான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444413

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2025 at 16:56, ஈழப்பிரியன் said:

கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப

எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார்.

அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

அனுரவின் ஆட்சிக்கால நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் கைது இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பாதுகாக்கும் திட்டமே இருக்கும்.மகிந்தவின் கைது தமது எதிர்காலத் தோல்விக்கானதாக அமையலாம் என்ற பயமும் இருக்கும். ஒருவேளை இரண்டாவது பதவிக்காலம் கிடைத்தால் அப்போது மகிந்தவை நோக்கித் திரும்பலாம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அவருக்கு முன்னால் ஒரு குழு குழு சிறுவனை விட்டு விட்டு பாருங்கள். அத்தனை வருத்தங்களும் பறந்து எழும்பி ஆட தொடங்கிவிடும்.

அதுவும் காந்தி வழியாம்.

வீடியொ ஒன்றில்...கெழவி ஒருவருடன் சுத்தி சுத்தி டான்ஸ் ஆடினாரே..அதுவெல்லாம் பொய்யா குமாரு...😆

  • கருத்துக்கள உறவுகள்

537755953_1213449567461760_2247342909439

536275622_1192990092865961_8365535121691

538070261_1193843869447250_3112075270455

536271408_1192987552866215_8026336212141

538038343_1193875146110789_6740799029774

537107296_1193458139485823_5957181855681

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்க கைது சரியா, தவறா ஆராய போவதில்லை நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் - விமல் வீரவன்ச

Published By: VISHNU

24 AUG, 2025 | 08:20 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொது சொத்து துஷ்பிரயோகம் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை தோளில் சுமந்துக் கொண்டு செல்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று உண்ணும் நிலைக்கு ஜனாதிபதி நாட்டை நிர்வகிக்கிறார்.

ஆளும் தரப்பினர் இழைக்கும் குற்றங்களுக்கு சட்டம் முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு சிந்தனைக்கு வருவதில்லை. பொது சொத்துக்கு முறைகேடு குற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி நாங்கள் பேச போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உத்தேகமளித்துக் கொண்டு ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/223274

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் கைது : நீதிமன்ற உத்தரவை மலினப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் - மக்கள் விடுதலை முன்னணி

Published By: VISHNU

24 AUG, 2025 | 08:58 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் 'ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற   நிகழ்வின் பின்னர்  ஊடகங்களுக்கு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணையளிப்பதற்கு போதுமான காரணிகள் இல்லாததால் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுபவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை கிடைத்திருந்தால் நீதிமன்றத்தை புகழ்வார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தவுடன் தேர்தல் காலத்தில் முட்டிமோதிக்கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களில் 99 சதவீதமானோர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.தமது குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் தான் இவர்கள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களின் கூட்டிணைவு எமக்கு சவாலல்ல, ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்று கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் குரல் எழுப்பியவர்கள் தான் இன்று அவருக்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 சிறு குற்றங்களுக்கு தண்டபணம் செலுத்த முடியாமல் எத்தனை பேர் இன்றும் சிறையில் உள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுப்படுத்த கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் அவரது ஆட்சியில் எவ்வாறு சட்டவாட்சி செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்றால் சட்டத்தின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும். எவ்வாறு சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது. ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்புக்கு ஒரு தரப்பினர் வருவதாக குறிப்பிடப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/223275

  • கருத்துக்கள உறவுகள்

fe-2.jpg?resize=645%2C375&ssl=1

ரணில் விக்கிரமசிங்க கைது: நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு  முன்னாள் இலங்கைக்கான  நோர்வேயின்  அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரணில் விக்கிரமசிங்க  உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர்,   ரணிலை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் 2022ஆம் ஆண்டில் இலங்கை நாட்டை பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திலிருந்து காப்பாற்ற முன்வந்த ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்றும், ஐரோப்பாவில் அவை குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின்  நடவடிக்கைகளைத் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால்  உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444455

  • கருத்துக்கள உறவுகள்

538635192_4076255995949698_9154246525675

லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா.
அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால்,
றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள்.
சிரிச்சிகிட்டே அடுத்த கேள்விய கேற்க பெட்ரோல் இல்லாத நேரம் அவர் கார்ல இருந்த பெட்ரோல உருவி முழு நாட்டுக்கும் குடுத்த வள்ளல் என்று சொல்கின்றனர் 😄.

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்

539449371_4076051065970191_8415554302940

  • கருத்துக்கள உறவுகள்

539851459_1187839740046065_3608626634687

ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல

"ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று...

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்

538621701_778248534693319_73801253357942

இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்…

செய்தி:

நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார்.

Inuvaijur Mayuran 

  • கருத்துக்கள உறவுகள்

539182653_1193986106099693_7551768971129

537537866_1194289216069382_1702185384340

538628339_1194674512697519_4641916552882

538181379_1194680336030270_6352739015058

538430641_1194711229360514_3679207446650

  • கருத்துக்கள உறவுகள்

539265300_4077178059190825_5863353956915

540451335_4077123759196255_6674792424809

538629710_4077114719197159_7687488040942

ரணிலுக்கு வைத்தியம் பார்க்கும்... வைத்தியர், ரணிலின் கூட்டாளி. இப்போதைக்கு அவர் ரணிலை... வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அனுப்ப விட மாட்டார் போலுள்ளது.

தேசிய மருத்துவமனையில் "நீரிழப்பு" கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகவும் சந்தேகத்திற்குரியது.

இந்த மருத்துவ நோயறிதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னர் பல ஊழல்களுடன் தொடர்புடையவருமான "டாக்டர் ருக்ஷன் பெல்லனாவின் "கீழ் பணிபுரியும் மருத்துவர்களால் இது வெளியிடப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு.

விக்கிரமசிங்கவின் உண்மையான நிலை குறித்து ஒரு பாரபட்சமற்ற மருத்துவ விசாரணை நடத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன மருத்துவர்கள் குழு, கூறப்பட்ட நோயறிதல் உண்மையானதா அல்லது பெல்லனாவும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையை தவறாக வழிநடத்தவும் உரிய சட்ட செயல்முறையைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

ரணில் விக்கிரமசிங்க கைது: நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் மிகத்திறமையானதும் காலத்துக்கேற்றவாறான சிங்களத்தேசியத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தலைசிறந்த முன்னோடிகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ரணிலின் கைதின் ஊடாகத் தீவின் பல முதன்மைப் பிரச்சினைகளைப் பின்தள்ளி ஊடகங்கள் ரணிலோடு கட்டிப்புரளுகின்றன. யே.வி.பியா கொக்கா. கொழும்பு உயர்குழாம் மட்டுமா வித்தை காட்டும். நாங்களும் காட்டுவம் இல்லை என்று அனுர சிரித்துக்கொண்டு திரிகிறாராம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

சிறிலங்கா ஆட்சியாளர்கள் மிகத்திறமையானதும் காலத்துக்கேற்றவாறான சிங்களத்தேசியத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தலைசிறந்த முன்னோடிகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ரணிலின் கைதின் ஊடாகத் தீவின் பல முதன்மைப் பிரச்சினைகளைப் பின்தள்ளி ஊடகங்கள் ரணிலோடு கட்டிப்புரளுகின்றன. யே.வி.பியா கொக்கா. கொழும்பு உயர்குழாம் மட்டுமா வித்தை காட்டும். நாங்களும் காட்டுவம் இல்லை என்று அனுர சிரித்துக்கொண்டு திரிகிறாராம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

538382118_4076824462559518_1426574009904

வேலிக்கு ஓணான் சாட்சி...
2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்...
காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள்
செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்

537370462_789981753702328_63741872726195

537235435_789981827035654_64529100324784

லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா.

அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால்,

றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள்.

சுமந்திரன் பதில் தருவாரா?

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

537206455_789903593710144_79382157548194

ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான்.

அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர்.

ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர்.

அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம்.

அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம்.

எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம்.

என்னடா நியாயம் இது?

அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா.

அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம்.

மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம்.

மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார்.

அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்?

தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார்.

ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம்.

அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர்.

ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது.

தோழர் பாலன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.