Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[சிறப்பு] கருத்துப்படம் - 02.11.2007

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு தொடர்பான உங்கள் எண்ணங்களை வார்த்தைகளில் சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் வார்த்தைகளை விட வலிமை கூடிய படங்கள் சித்திரங்கள் மூலம் இங்கு தெரிவியுங்கள்.

இவை நீங்கள் கீறிய படங்களாகவோ அல்லது சேகரித்த பொருத்தமான படங்களாகவோ பொருத்தமான காணொளியாகவோ இருக்கலாம்.

எனது உணர்வுகள் கீழே:

19613233lh3lt9.jpg

Edited by வலைஞன்

spt.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமே பொறு. இதோ வந்து கொண்டிருக்கிறோம்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இதே தொனிப்பட வந்த தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரிம் பேச்சும், தமிழ்செல்வன் அண்ணாவுக்கானதும் ஏனைய மாவீரர்களுக்கான அஞ்சலியும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணா!!

தமிழ்ச்செல்வன் அண்ணா

உச்சரிக்கின்ற போதே

நெஞ்சுக்குள் நிறைந்து நிற்கிறதே

புன்னகை பூத்த நின் முகம்

நாற்பதே வயதாம் உனக்கு!

நம்ப முடியவில்லை அண்ணா

வாழ்நாளை வீணாக்கி அழிப்போரில்

வீணர்களை அழிக்கப் பிறப்பெடுத்தவன் நீ!

உன் பதினேழாம் வயதில் விடுதலைக்காய்

இணைந்தாய்!வீரத்தின் உரமென

விளைந்து நிற்கும் ஒரு தானைத்

தலைவன் வழியினில் நீறு பூத்த

நெருப்பாகி நின்றாய்! ஈழத்தின்

விடுதலை அல்லவா விழிகளில்

கனவு! சுதந்திர வேட்கை அல்லவா

இதயத்தின் காதல்!

நீ கவிதையின் நாயகன் அண்ணா

இருந்தாலும் சமாதானப் பேச்சே

மூச்சென்று உழைத்த செல்வா

நேற்றைய விடிகாலைப்பொழுதில்

இடியென செவிப்பறை அறைந்தது

ஓர் சேதி யுத்த நெறி மறந்து பெளத்த

வழி பிறழ்ந்து கோரத் தாண்டவம் ஆடிய

கொடியரின் ஈனச் செய்கை!

பொய்யாகிப் போகாதோ இச்செய்தி

பொழுதோடும் புலம்புகின்றோம்!

சமாதானக் குரலை அமைதிப் புறாவை

நசுக்கியதே சிங்களம்! அண்ணனே!

எங்கள் அண்ணல் வீரச் செம்மலின்

செல்லத் தம்பியல்லவா நீ! அற்புதச்

செல்வனே கலங்கி நிற்கிறோம்!!

பூநகரிப் போரில் ஓர்கால் இழந்தாலும்

நம்பிக்கையொடு உலா வந்த

உற்சாகச் செல்வா~ உனை இழந்த

செய்தி~ உலுக்கி நிற்கிறது எம்மை

மறுபடி மறுபடி அந்தப்

புன்னகைமுகம் அல்லவா

கண்களை நிறைக்கிறது!

ஓர்வருடத்துள் அரசியல் பேச்சின்

அண்ணனையும் தம்பியையும்

இழந்துவிட்டோமே? இனி ஏது

பேச்சு? விடுதலை நெருப்பின்

ஆகுதியாய் நீ இன்னும் உரம்

சேர்க்கிறாய் வீரத்தின் மானத்தை

பறை சாற்றும் நேரம்!! ஒவ்வோர்

தமிழர்க்கும் நீ சொல்கின்றாய்!!

வீரனே!! சொல்லின் செல்வா!

இனி! இழப்பிற்கு இடமில்லை!

சத்தியப் போரில் இதுதான்

இறுதி எல்லை!! அண்ணனின்

வழியிலே!! அனைவரும் ஒன்றாய்!

நின்றே வென்றிடுவோம்! தமிழ்

ஈழத்தை வென்றெடுப்போம்!!

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்!

gotapayacopyio2.jpg

Edited by Soori

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களே நீங்கள் மரணத்தை வென்றவர்கள்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
terrorist.jpg

sppeace.jpg

எண்ணக்கரு: செய்திக் குழுமம் | ஓவியம்: மூனா

கோதபாய புலிகளின் தலைவர்கள் இருக்கும் இடங்கள் தெரியும் தேவைப்படும் பொழுது 1 by 1 கொலை செய்வோம் என்ற சொன்னது எந்தெந்த சர்வதேச ஊடகங்களில் வந்தது?

அதன் இணைப்புகளை தரமுடியுமா?

ஏன் கு.போ அப்படி கேட்கிறீங்கள். Reuters India இல் அப்படித்தானே செய்தி வந்தது?

Sri Lanka jets kill Tamil Tiger political head Thamilselvan: http://in.reuters.com/article/topNews/idIN...-30291920071102

கோத்தபாய சொன்னது எண்டு இப்படி இதில் கூறப்பட்டுள்ளது..

"This is just a message, that we know where their leaders are. I know the locations of all the leaders, that if we want we can take them one by one, so they must change their hideouts," "When the time comes only, we take them one by one."

cartoon01jw4.gif

எனக்குப் படம் வரையத் தெரியாது. முடிந்த அளவு முயன்றிருக்கிறேன்.

நல்ல முயற்சி இணையவன். நன்றாக இருக்கின்றது. மேலும் விளக்கமாக வரைவதானால். மகிந்தரின் உடுப்பை வெள்ளையாக மாற்றி முகத்தை சற்று பொது நிறமாக மாற்றலாம். சமாதான புறா இருக்கும் நீலப்படத்தை தமிழ்செல்வன் அண்ணாவின் படம் ஒன்றை நீல த்திலான பின்புலத்தில் இணைக்கலாம். இந்த வட்டத்தை தமிழீழ வரைபட அமைப்பில் அமைக்கலாம்.

மேலும் சமாதான வழி மற்றும் யுத்த வழி கதவுகள் என்ற கருதுகோள் சித்திரத்தில் சரியாக பிரதிபலிக்கவில்லை.

அதற்கு வேண்டுமானால் ஒரு பெயர் பலகையை பாவித்திருக்கலாம்.

சுகன் கூறியது போல நெருப்பு வட்டம் தமிழீழ எல்லைகள் வடிவில் அமைந்திருந்தால் மேலும் விளக்கமாக இருக்கும்.

நல்லதொரு முன்முயற்சி, நானும் முன்னர் பலதடவைகள் முயன்று கைவிட்டிருக்கிறேன். நீங்கள் முழுமை செய்து துணிவுடன் பிரசுரித்துள்ளீர்கள் அதற்கு விசேட பாராட்டுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.