Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 Sep, 2025 | 05:49 PM

image

(எம்.மனோசித்ரா)

சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் என்றும், இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாழக்கிழமை (11) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியியேறியிருந்த அவர் வெள்ளிக்கிழமை (12) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்ட மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வியாழன் (11) மாலை நான் வெளியேறினேன். இதற்கு முன்னர், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சிலர் ஊடகங்கள் முன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டேன்.

மக்களுக்கு எதையும் செய்ய இயலாமல் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான் விஜேராம இல்லத்திற்கு விடை கொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன்.

தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக, அதன் விளைவாக எழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக நான் ஒருபோதும் வருந்த மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன்.

சுவாசம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன, மத பேதங்கள் இல்லை. நம் சுவாசத்திற்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள். அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாம் அனைவரும் சேர்ந்து அநுராதபுரம் புனித நகரத்தில் சந்த ஹிரு சேயவை (சந்திரன் மற்றும் சூரியன் தாதுகோபுரம்) உருவாக்கினோம். சந்திரன், சூரியன் இருக்கும் வரை நமது தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை அது குறிக்கிறது.

எனது மூத்த மகன் நாமல் கூறியது போலவே, எல்லாம் தொடங்கிய எனது கிராமத்திற்கு நான் திரும்ப வந்துள்ளேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே நான் வந்தேன். இப்போது கிராமத்தில் புளிக்குழம்பில் உள்ள மீனை ருசித்து மகிழ என்னால் முடியும். கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எது எப்படி இருந்தாலும், எல்லாம் இந்த மண்ணிலிருந்துதான் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் போட்டியிட்டான்.

அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார். ஒரு இளம் அமைச்சராக நான் பயணிக்க வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவியாகவும், தாயாகவும் இருந்தார் என்றால் அது சரியானது. அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்கு பின்னால், ரூ{ஹணுவின் மக்கள் பிரதிநிதியாக இருந்த எனது அன்புக்குரிய தந்தை எப்போதும் காணப்பட்டார். எனது தந்தை ரூ{ஹணுவின் பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினராக, 1970 ஆம் ஆண்டு மக்கள் அரசாங்கத்தின் முதல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன்.

அங்கு பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல் போனவர்களுக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி 'வழக்கறிஞர் மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்கல்லை' என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பாதயாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். தங்கள் அரசியல் அழுத்தங்களையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்காக யாரும் ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியது.

மக்கள் எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளின் தீவிரம் காரணமாகவே கடந்த காலத்தில் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மஹிந்த ராஜபக்ஷ தன் மனசாட்சிக்கு இணங்க நாட்டிற்காக முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை. கடந்த காலத்தில் பெற்ற அதே மக்கள் அன்பை இன்றும் அதே போல் பெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். அந்த பாக்கியத்தை யாரிடமும் இழக்க முடியாது.

மதத் தலைவர்களிடமிருந்து இடமிருந்து தினமும் நான் பெறும் ஆசீர்வாதம், பௌதீக வரப்பிரசாதங்களை விட மேலானது. எனது அன்பு மனைவி சிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார். அப்போதும், இப்போதும் என் அருகில் இருந்த மற்றும் இருக்கும் எனது பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு, பணியைத் தாண்டிய ஒரு பாசமான பிணைப்பாகும். மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் வாழும் வரை, நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன். அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கரத்தினத்தை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை.

https://www.virakesari.lk/article/224932

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா புரிந்து கொண்டுதான் இவரை கதநாயகன் ரேஞ்சுக்கு உருவாக்கி விடுகிறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன்.

சிங்கம் அல்ல சிங்களம் எப்போதும் இப்படித்தான்......

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1 hour ago, வாத்தியார் said:

சிங்கம் அல்ல சிங்களம் எப்போதும் இப்படித்தான்......

ஶ்ரீலங்காவில்… முன்னாள் ஜனாதிபதி ரணிலை விளக்கமறியலில் வைத்தால் இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி ஆஸ்பத்திரியில் போய் படுக்கின்றார். மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றார்கள். மக்களும் நீதிமன்றம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

போதாக்குறைக்கு… சுத்துமாத்து சுமந்திரனும் தனது நண்பர் ரணிலை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவிக்கின்றார். ரணில் வெளியில் வந்தவுடன் வருத்தம் எல்லாம் பறந்து பழைய மாதிரி அரசியல் செய்கின்றார்.

மகிந்தவின்…. அரச வீட்டை சட்டப்படி காலி செய்யச் சொன்னவுடன்…. ஏதோ சொத்து சுகம் இல்லாதவன் பிளாட்பாரத்தில் படுப்பது மாதிரி… புலம்பி அரசை மிரட்டுகின்றார்கள். இவர்கள் செய்த கொலை, கொள்ளைகள், பாதாள உலக நடவடிக்கைகளை மக்கள் மறந்து புனிதர் பட்டம் கொடுக்க முனைகிறார்கள்.

இப்படிப்படிப் பட்ட…. உணர்ச்சி அரசியலில் ஈடுபடும் முட்டாள் மக்களும், புத்த பிக்குகளும் உள்ள நாட்டில் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்ப்பது சிரமம் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்காவில்… முன்னாள் ஜனாதிபதி ரணிலை விளக்கமறியலில் வைத்தால் இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி ஆஸ்பத்திரியில் போய் படுக்கின்றார். மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றார்கள். மக்களும் நீதிமன்றம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

போதாக்குறைக்கு… சுத்துமாத்து சுமந்திரனும் தனது நண்பர் ரணிலை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவிக்கின்றார். ரணில் வெளியில் வந்தவுடன் வருத்தம் எல்லாம் பறந்து பழைய மாதிரி அரசியல் செய்கின்றார்.

மகிந்தவின்…. அரச வீட்டை சட்டப்படி காலி செய்யச் சொன்னவுடன்…. ஏதோ சொத்து சுகம் இல்லாதவன் பிளாட்பாரத்தில் படுப்பது மாதிரி… புலம்பி அரசை மிரட்டுகின்றார்கள். இவர்கள் செய்த கொலை, கொள்ளைகள், பாதாள உலக நடவடிக்கைகளை மக்கள் மறந்து புனிதர் பட்டம் கொடுக்க முனைகிறார்கள்.

இப்படிப்படிப் பட்ட…. உணர்ச்சி அரசியலில் ஈடுபடும் முட்டாள் மக்களும், புத்த பிக்குகளும் உள்ள நாட்டில் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்ப்பது சிரமம் போலுள்ளது.

ம்ம்ம் சந்திரிகாவும் நடக்க முடியாமல் இருக்கிறாவாம்.

2 மாதம் தவணை கேட்கிறா.

எப்படி வசதி?

10 minutes ago, தமிழ் சிறி said:

இப்படிப்படிப் பட்ட…. உணர்ச்சி அரசியலில் ஈடுபடும் முட்டாள் மக்களும், புத்த பிக்குகளும் உள்ள நாட்டில் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்ப்பது சிரமம் போலுள்ளது.

சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம்.

புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ம்ம்ம் சந்திரிகாவும் நடக்க முடியாமல் இருக்கிறாவாம்.

2 மாதம் தவணை கேட்கிறா.

எப்படி வசதி?

எல்லோருக்கும் விசாரணை, கைது என்ற பயம் வந்தவுடன்… நோயும் தொற்றிக் கொண்டு குளிரூட்டப் பட்ட வைத்தியசாலைகளில் இருக்க திட்டம் போடுகின்றார்கள்.

வருடக் கணக்கில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்காத சுமந்திரனும் சிங்கள அரசியல்வாதிகள் கைது என்றவுடன் முந்திரிக் கொட்டை மாதிரி சட்ட நுணுக்கம் பேசும் சிங்களப் பாசத்தை என்னவென்று சொல்வது.

இந்த சீத்துவத்தில்…. சுமந்திரனுக்கு வட மாகாண முதலமைச்சர் கனவும் இருக்குது. பிய்ந்த செருப்பை… சாணியில் முக்கி எடுத்து… முதுகில் நாலு சாத்து, சாத்த… மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள். 😂

9 minutes ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம்.

புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?

ஹ்ம்ம்… புத்த பிக்குகளை வழிக்கு கொண்டு வர “அரகலய” மாதிரி, அண்மையில் நேபாளத்தில் வெற்றியளித்த ஒரு புரட்சி மாதிரி ஏதாவது ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டால்தான் உண்டு.

ஆனால் அதுகளையும் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி திசை திருப்ப…. இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பின் புலத்தில் பல மறை கரங்கள் உண்டு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன்.

அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார்.

9 hours ago, ஏராளன் said:

மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன்

சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்?

9 hours ago, ஏராளன் said:

அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான் விஜேராம இல்லத்திற்கு விடை கொடுத்தேன்.

தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்?

9 hours ago, ஏராளன் said:

அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும்.

9 hours ago, ஏராளன் said:

இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன்.

சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்!

9 hours ago, ஏராளன் said:

நம் சுவாசத்திற்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள்.

இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா?

9 hours ago, ஏராளன் said:

தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம்

றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்?

9 hours ago, ஏராளன் said:

அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார்.

அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி.

10 hours ago, ஏராளன் said:

நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்கு பின்னால்,

தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார்.

10 hours ago, ஏராளன் said:

அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல் போனவர்களுக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான்.

அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார்.

10 hours ago, ஏராளன் said:

பாதயாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள்.

10 hours ago, ஏராளன் said:

தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன்.

முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை.

10 hours ago, ஏராளன் said:

எனது அன்பு மனைவி சிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார்.

அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு.

3 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம்.

புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?

சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."

  • கருத்துக்கள உறவுகள்

547414471_1208807654617538_7213688860240

545662638_1208763654621938_2342282434833

548186809_1208764651288505_6155309563395

  • கருத்துக்கள உறவுகள்

வீடிழந்த மகிந்தவுக்கு ராஜகிரியாவில் உள்ள தனது வீட்டை வழங்க ஜெர்மனி வாழ் தமிழர் ஒருவர் முன்வந்துள்ளாராம் அவர் யார் அவருக்கும் மஹிந்தவுக்கு என்ன தொடர்பு என அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் உள்ள அரசியல் களத்தில் முன்னேற வேண்டுமாயின் இனவாதம் பேசினால் உச்சத்தை தொடலாம்.அபிவிருத்தி பணிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்.

இது மேற்குலகிற்கும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

வீடிழந்த மகிந்தவுக்கு ராஜகிரியாவில் உள்ள தனது வீட்டை வழங்க ஜெர்மனி வாழ் தமிழர் ஒருவர் முன்வந்துள்ளாராம் அவர் யார் அவருக்கும் மஹிந்தவுக்கு என்ன தொடர்பு என அறிய ஆவல்.

மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் .

கத்தரி விளைந்தால் சந்தைக்கு வரத்தானே வேணும் இதுவரைக்கும் அந்த பினாமி பற்றி விபரங்கள் வராமலா போயிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் .

தன் பக்கமும் தமிழர் இருக்கிறார்கள் என காட்ட விடும் புலுடாவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் பினாமியாகவுமிருக்கலாம். அனுரா அதையும் விசாரணை செய்தால்; அது விசுவாசியா பினாமியா என்பது தெரிந்துவிடும். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், இவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா இவர்களை?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் .

"நுணலும் தன் வாயாற் கெடும்." இப்போ மகிந்தவுக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்களும், அந்த செய்தியை வெளியிட்டவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அந்த சொத்துக்கள் யாருடையவை, எப்படி பெறப்பட்டவை என்பதும் விசாரித்து மஹிந்தவுக்கு பின்னால் அழுது புலம்பித்திரியும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். அதே போல் மற்றைய ஜனாதிபதிகளின் வசிப்பிடங்களும் ஆராயப்படவேண்டும். பாதாள, போதைக் கும்பல் பிடிபடும்போது நாமல் கதறுகிறார். ரணில் கைது செய்யப்படும்போது எல்லா அரசியல் கள்ளரும் தெருவில் இறங்கி குதிக்கின்றனர். அதற்குள் புலிகளை இழுத்து, இராணுவத்தினரை காட்டி, தமது ஊழலை கொலைகளை மறைக்கப் பாடுபடுகின்றனர். இப்போ அனுரா செய்ய வேண்டியது; இவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி மக்களை கூட்டுகின்றனரோ, அந்த ஆயுதத்தை பாவித்து இவர்களை விட்டு மக்களை விரட்ட வேண்டும். ஆதாரத்தோடு இவர்களின் குற்றங்களை இவர்களை சுற்றி மக்கள் கூடும்போது வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மக்கள் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். நாடே ஊழலால் நிறைந்திருந்திருக்கு. அபேய வர்தன யாப்பாவை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, யாரந்த வீடு வழங்கும் தொழிலதிபர் என்பதை அறிந்து விசாரிக்க தொடங்கவும். அத்தனையும் மஹிந்தவின், சிரந்தியின் பெயரில் பதியப்பட்டுள்ள வீடுகளாக இருக்கலாம். மக்களை என்ன ஆசை வார்த்தை கூறி, எதை கொடுத்து திரட்டுகின்றனர், அவர்களை திரட்டும் திருடர்கள் யார், அவர்களுக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவர்களது தொழில் என்ன என்பதையும் ஆராய வேண்டும். இப்போ குடும்பமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்க போகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2025 at 02:32, ஏராளன் said:

ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன்.

இன்னும் சிறிது காலத்தில் படுத்த படுக்கையாகிறாரோ சிறையில் அடைக்கப்படுகிறாரோ மக்களால் மறக்கப்படுகிறாரோ தெரியவில்லை அதற்குள் எழுந்து நிற்கப்போகிறாராம். அப்பதான் இன்னும் கொள்ளையடிக்கலாம். அதுசரி, எல்லா முன்னாள் ஜனாதிபதிகளையுந்தான் அரச இல்லங்களை விட்டு வெளியேறச் சொல்லப்பட்டிருக்கிறது. இவரும் சந்திரிகாவுந்தான் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்கள் வெளியேறினால் அந்த வீடுகளை பராமரிப்பததற்கு செலவு அதிகமாகுமாம் என்கிறார் ஒரு அரசியல்வாதி. இவர்கள் குடியிருக்கும்போதே பராமரிப்பு, திருத்தம் என்று கோடிக்கணக்கில் மக்களின் சொத்தை கொள்ளையடித்துள்ளார்கள். அப்போ எப்படி செலவு அதிகமாகும் இவர்கள் வெளியேறினால்? இன்னும் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பெற்ற ஓய்வூதியம் சாதாரண தொகையுமல்ல. இப்படியிருக்கும் போது சந்திரிகா, தன் சொந்த வீட்டை விற்று வாழ்கிறாவாம் என அழுகிறதா. இவர்களை விட தெருப்பிச்சைக்காரர் பரவாயில்லைபோலுள்ளதே. இவர்கள் அரசியலுக்கு வராவிட்டால் தெருவிற்தான் கையேந்திக்கொண்டு நின்றிருப்பார்களோ என்கிற சந்தேகம் எனக்கு. இந்த லட்ஷணத்தில் இன்னும் அரசியல் ஆசை. மக்களுக்காகவா, தங்களுக்காகவா? இவர்கள் சிறை செல்வது உறுதியாயிற்று. ஆனால் அதற்கு முதல் நாட்டில் ஒரு பிரளயம் ஏற்படுத்தாமல் விடமாட்டார்கள். உடனேயே இவர்களை பிடித்து அடைப்பதற்கு அனுரா தயாராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

547533156_1211301944368109_6713516397316

548207391_1211301017701535_6761806280051

547442770_1211297457701891_2625353191085

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2025 at 20:15, பெருமாள் said:

மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் .

இவரின் ஒரு சகோதரியின் கணவர் தமிழர். அவர்தான் அந்த தமிழர். அவர் பெயரில் மஹிந்த வாங்கி வைத்திருக்கலாம். இப்போ, தனது வீட்டை தமிழர் ஒருவர் தனக்கு தருவதாக அனுராவுக்கு கடுப்பேற்றுகிறார். மைத்துனர் என்பதை விட, தமிழர் என்று சொல்வதில் பெருமை போலும். இன்னுமா இவரை சிங்களமக்கள் நம்புகிறார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.