Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது.

2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி.

உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது.

குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால்

இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன.

இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை.

சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது.

இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது.

இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது.

ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள்.

இன்னொரு குண்டு என்னவென்றால்

இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள இணைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன்.

ஜேர்மனியின் வீழ்ச்சி பற்றி நிறைய எழுதலாம். நான் உக்ரேன் பற்றிய திரிகளில் ஜேர்மனியின் வீழ்ச்சி ஒரிரு வரிகள் பற்றி எழுதியிருக்கின்றேன். ஏனென்றால் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்த காட்டாறு போன்ற எரிசக்திதான் ஜேர்மனியின் பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்தியது. அதை விட வியாபார ரீதியில் ரஷ்யாவின் பங்கு மிக மிக முக்கியமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது.

சேடம் இழுக்கும் நிலை என்று சொல்வது அபத்தம்

பொருளாதார வீழ்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் அவ்வப்போது வரும் போகும் . ஆனால் அந்த வீழ்ச்சி தொடர்ந்தால் பிரச்னை வரும் .

அப்போது அதை நெருக்கடியான நிலை என்பார்கள்.

அது இப்போது ஜெர்மனியில் நடக்கின்றது .

கடந்த அரசாங்கம் மூன்று கட்சிகளின் கூட்டணியாக அமைந்து ஒரு நிலையற்ற....... எப்போதும் ஆட்சி கவிழும்.... என்ற நிலையில் இருந்ததும் ஒரு முக்கியமான காரணி.

யாரும் முதலீடு செய்ய பலமுறை யோசித்தார்கள்.

அதைவிட கொரோனா காலம் ஒரு காரணி

பல நிறுவனங்கள் மூடப்பட்டன-

உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி இதுவும் ஒரு காரணம்

உக்கிரையின் ரஷ்யப் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை என இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு பல இணைந்த காரணிகள் உள்ளன

இப்படி இருந்தும் ஐரோப்பாவில் ஜெர்மனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான் உள்ளது .

இன்றைய நிலையில் வலதுசாரிகள் ஜெர்மனியில் ஒரு மக்கள் கட்சியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதால்

வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படுகின்றன .

ஜெர்மனி அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் மட்டும் இல்லாமல்......

வெளி நாட்டு மக்களின் உழைப்பினாலும் தான் உலகப் போரின் பின்னர் மீண்டு வந்தார்கள்,

இனியும் மீண்டு வருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னொரு குண்டு என்னவென்றால்

இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.

அதற்காக எங்கள் எல்லோரையும் வயோதிபர்கள் என விழித்தது

பெரிய வன்முறை..... இதை யாம் கண்டிக்கின்றோம் 😂

ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அமெரிக்கத் தாத்தாக்களை விட ஜெர்மன் தாத்தாக்கள்

இன்றும் இளமை எனும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் 🤣

என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு.

வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂?

இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்கள் என்பது மருத்துவ துறையில் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து மனிதர்கள் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கின்றார்கள். முன்னேற்றம் கண்ட மேற்குலகநாடுகளில் இது இன்னும் அதிகமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/9/2025 at 01:28, ஈழப்பிரியன் said:

குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால்

இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன.

உண்மையான தகவல்தான்.

ஆனால் விழுந்தும் மீசையில் மண் முட்டாத நிலையில் தான் இன்று ஜேர்மனி ஓடிக்கொண்டிருக்கின்றது.என்றாலும் இவர்கள் செய்த பொருளாதார தவறுகளின் சூடு நிலை ஆற இன்னும் பல வருடங்களிற்கு நீடிக்கும். அதுவும் சொல்வதற்கில்லை. காரணம் இன்று அரசியல் மாற்றங்கள் வேறு விதமாகி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

அதற்காக எங்கள் எல்லோரையும் வயோதிபர்கள் என விழித்தது

பெரிய வன்முறை..... இதை யாம் கண்டிக்கின்றோம் 😂

ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அமெரிக்கத் தாத்தாக்களை விட ஜெர்மன் தாத்தாக்கள்

இன்றும் இளமை எனும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் 🤣

என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்😂

தாத்தாவாகின பின் அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று…….

6 hours ago, Justin said:

இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂?

கோவிட்டுக்குப் பின் மற்றைய நாடுகளைவிட இந்தியா விரைவாக வளர்வதாக சொல்கிறார்கள்.

Germany

Let’s calculate the average GDP growth rate for Germany from 2017–2025.

We have these values (in %):

2017: +2.8

2018: +1.1

2019: +1.0

2020: −4.1

2021: +3.9

2022: +1.8

2023: −0.9

2024: −0.5

2025 (forecast): let’s use the midpoint of +0.2 (between 0.0 and +0.3)

India

Year

Growth Rate (%)*

2017

~ 6.8 %Â

2018

~ 6.45 %Â

2019

~ 3.9 %Â

2020

~ −5.8 %Â

2021

~ 9.7 %Â

2022

~ 7.0 %Â

2023

~ 9.2 %Â

2024

(forecast / estimated) ~ 6.5 %Â

2025

(forecast) ~ 6.3-6.5 %

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தாத்தாவாகின பின் அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று…….

கோவிட்டுக்குப் பின் மற்றைய நாடுகளைவிட இந்தியா விரைவாக வளர்வதாக சொல்கிறார்கள்.

Germany

Let’s calculate the average GDP growth rate for Germany from 2017–2025.

We have these values (in %):

2017: +2.8

2018: +1.1

2019: +1.0

2020: −4.1

2021: +3.9

2022: +1.8

2023: −0.9

2024: −0.5

2025 (forecast): let’s use the midpoint of +0.2 (between 0.0 and +0.3)

India

Year

Growth Rate (%)*

2017

~ 6.8 %Â

2018

~ 6.45 %Â

2019

~ 3.9 %Â

2020

~ −5.8 %Â

2021

~ 9.7 %Â

2022

~ 7.0 %Â

2023

~ 9.2 %Â

2024

(forecast / estimated) ~ 6.5 %Â

2025

(forecast) ~ 6.3-6.5 %

இது "நான் வளர்கிறேனா மம்மி?" 😂என்று வேறு யாரோ ஒரு கட்சிக் காரரின் ஆட்கள் கேட்டது போல இருக்கிறது.

இந்தியாவை விட 10 மடங்கிலும் குறைவான சனத்தொகை கொண்ட ஜேர்மனி உலக பொருளாதார பலத்தில் (GDP) மூன்றாமிடம். ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியா மிக அண்மையாக நான்காவது இடம் (அதுவும் ஜப்பான் படுத்து விட்டதால் கிடைத்த இடம்). கோவிட்டின் பின்னரான வளர்ச்சியில் ஜேர்மனியை விட மோசமான மந்த நிலையடைந்த ஜி7 நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும், இருக்கும் நாடுகளுள் ஜேர்மனி தான் இன்னும் ஐரோப்பாவின் பொருளாதார powerhouse என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. முதல் உலகப் போரில் இருந்து அவர்களது பலமே உடனே சுதாரித்துக் கொண்டு மொடலை மாற்றி வளர்ச்சியைத் தூண்டுவார்கள். இப்படியான ஒரு நிலை இந்தியாவில் சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி இன்றும் அமெரிக்காவின் கைப்பிடிக்குள் தான் இருக்கின்றது. அமெரிக்காவை மீறி எதையுமே இவர்களால் செய்ய முடியாது.விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் இவர்கள் தன்னிச்சையாக செய்யலாம். ஆனால் வெளியுறவு கொள்கைகளில் இவர்களின் நாணயக்கயிறு அமெரிக்காவிடம் தான் இருக்கின்றது.இந்த விடயம் அரசியல் வரலாறு புரிந்தவர்களுக்கு தெரியும்.அரசியலே தெரியாதவர்களுக்கு ஒரு நாமம் பரிசு..

இன்றும் வயோதிப ஜேர்மனியர்கள் சொல்வார்கள் ஜேர்மனி கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஒரு மாகாணம் போன்றது என...

என்னதான் ஜேர்மனி அமெரிக்காவின் கைப்பிடிக்குள் இருந்தாலும் அது திமிற நினைத்த வழியும் இடமும் ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெரிய ஓடுபாதை.அது வெற்றியாகவும் போய்க்கொண்டிருந்தது.

விடுவானா அமெரிக்க கௌபோய்? காத்திருந்து காத்திருந்து வைச்சான் பாரு உக்ரேன் என்ற ஆப்பு.

nityananda-swamy-smile.gif

எல்லாவற்றுக்கும் முதல் ரஷ்யாவும் துருக்கியும் சேர்ந்து அகதி அலைகளை உருவாக்கி ஜேர்மனிக்குள் தள்ளினார்கள் என்றொரு கதையும் உண்டு.காரணம் ஜேர்மனிக்கு அடுத்தவன் வீட்டு மனித அக்கறை.மனித உரிமை அக்கறை வரவேற்கத்தக்கதுதான்.ஆனால் இடம் பொருள் என ஒன்று உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

"ஜேர்மனி அமெரிக்காவின் மடிக்குள் இருக்கும் நாடு" என்பதை விட, மேற்குலகின் பாரம்பரியத்திற்குள் இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் மீள வந்து இணைந்து கொண்ட, அதனால் பலன் பெற்ற நாடு என்பது தான் சரியாக இருக்கும். இதற்கு ஒரு காரணம், மேற்கு, கிழக்கு என பிரிந்திருந்த வேளையில், மேற்கினை நன்கு அமெரிக்காவும் மேற்குலகும் உதவி செய்து வளர்த்தன. வெளியே இருந்து அகதிகளாக வந்தோர் கூட, கிழக்குப் பாதியில் சற்றுத் தங்கி, பின்னர் பளபளப்பாக இருந்த மேற்கு ஜேர்மனிக்குள் தான் நிரந்தரமாக வாழ வந்தார்கள் - இந்த சொந்த அனுபவத்தை மறந்தவர்கள், நித்தி புகைக்கும் அதே வஸ்துக்களைப் புகைக்கும் ஆட்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்😎.

ஜேர்மனி, குடியேறிகளை வரவேற்கும் நாடாகச் செய்த ஒரு தவறு, தன்னுடைய ஜனநாயகப் பாரம்பரியங்களோடு ஒத்து வராத, ஒன்றிணைய விரும்பாத மக்களையும் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமை தான். அது புதிதாக வந்த இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம், சில தசாப்தங்கள் முன்னர் வந்த இலங்கையர்களாகவும் இருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

ஜேர்மனி, குடியேறிகளை வரவேற்கும் நாடாகச் செய்த ஒரு தவறு, தன்னுடைய ஜனநாயகப் பாரம்பரியங்களோடு ஒத்து வராத, ஒன்றிணைய விரும்பாத மக்களையும் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமை தான். அது புதிதாக வந்த இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம், சில தசாப்தங்கள் முன்னர் வந்த இலங்கையர்களாகவும் இருக்கலாம்!

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே ஜேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்கிறதே தவிர ஜேர்மனி அகதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே மாதிரி யப்பானும் அமெரிக்க அமெரிக்க அனுமதி இல்லாமல் பெரியளவில் ஆயுதங்களை செய்யமுடியாது என்றொரு ஒப்பந்தம் இருப்பதாக

செவிவழி மூலம் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அதே மாதிரி யப்பானும் அமெரிக்க அமெரிக்க அனுமதி இல்லாமல் பெரியளவில் ஆயுதங்களை செய்யமுடியாது என்றொரு ஒப்பந்தம் இருப்பதாக

செவிவழி மூலம் அறிந்தேன்.

ஜப்பான் அமெரிக்காவின் நவீன காலனி.

ஜப்பான் அதன் யாப்பை கூட மாற்ற முடியாது அமெரிக்காவின் அனாமதேய அனுமதி இன்றி.

ஜப்பான், யாப்பின் படி, ஒரு அரசின் மிகவும் முக்கிய இறைமை அம்சமான யுத்தத்தை பிரகடனப்படுத்த அல்லது பாவிக்க முடியாது, யாப்பின் 9 வது சரத்தின் படி

அதை நடைமுறைப்படுத்துவது, ஜப்பான் இடம் தாக்குதல் திறன், வசதிகள் இல்லை.

ஜப்பான் தாக்கப்பட்டால், பாதுகாக்கும் வசதிகளே இருக்கிறது.

அதனால் தான் ஜப்பானின் படை self defence force எனப்படுவது.

இதையும் கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்காரமாக ஏற்கவைத்து.

அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்சிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல,

(அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு.)

அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று.

இதையும் அடிப்படையாக கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்றுகாரமாக ஏற்கவைத்து.

அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்றசிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல,

அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு.

அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று

எனது நினைக்கு வரும் சிறிய உதாரணம் GPS.

GPS இல் சீன ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பாங்கெடுத்ததை தடுத்தது அமெரிக்கா. இது சசுருக்கமாக . சீன அதன் பங்குக பணத்தை ஐரோப்பிய நாடுகள் இப்போதும் சீனாவிடம் திருப்பி கொடுக்கவில்லை.

பின் சீன, தன பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய தொடகங்கியது, அப்போது அமெரிக்கா அது தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தது.

அதனால் , சீன முதலில் (2007) புவியில் இருந்து செய்மதியை சுட்டு விழுத்தும் ஏவுகணையை செய்து, பகிரங்கமாக அதன் செயல் இழந்த செய்மதியை சுட்டு விழுத்தி, அமெரிக்காவை எச்சரித்த பின்பே, பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய ஆரம்பித்தது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே ஜேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்கிறதே தவிர ஜேர்மனி அகதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.

இது சரியான தகவலாகத் தெரியவில்லை. தகவல் மூலத்தை இணைத்தால் நன்றிகள்.

இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்கா ஜேர்மனியின் அகதிகள்/குடியேறிகள் கொள்கையை மாற்றியிருந்தால், அது வரை இலட்சக் கணக்கான துருக்கியர்கள் எப்படி ஜேர்மனிக்கு வந்தார்கள்? அவர்களுள் பலர் நிரந்தரக் குடிகளாக வேரூன்றினார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே ஜேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்கிறதே தவிர ஜேர்மனி அகதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் தங்களது நாட்டிற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்

அதி முதலாவது சட்டம்

எந்த ஒரு மனிதனது தனிமனித உரிமையையும் எந்தக்காரணத்திற்காகவும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது.

இன. மத. நிற. தோற்றம். மற்றும் அடையாளங்கள் காரணமாக யாரையும் தனிமைப்படுத்தல் ஆகாது

அத்துடன் தாங்கள் போர்க்காலங்களில் எப்படியெல்லாம் தஞ்சம் தேடி அலைந்தோமோ அதே போல வேறு யாரும் தஞ்சம் தடி அலையக் கூடாது..... அப்படித் தஞ்சம் தேடி வரும் மக்களுக்கு ஜெர்மனி தன்னாலான சகல உதவிகளையும் அளிக்கவேண்டும் என அகதிகள் சார்பாக ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதன் அடிப்படையில் தான் பழைய அகதிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது

இப்போது அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்துள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகில் ஜேர்மனி ஒரு முக்கிய தொழிற்சாலை நாடு. அது மட்டுமல்லாமல் சமதர்மத்துடன் கூடிய ஒரு முதலாளித்துவ நாடு.இந்த தொழிற்சாலை நாட்டிற்கு எரிசக்தி மிக மிக முக்கியம்.அதற்கு நிலக்கரி மூலம் அந்த சக்தியை தங்குதடையின்றி பெற்றுக்கொண்டார்கள்.அதனுடன் அணுமின்சக்தியும் ஒருங்கிணைய யார் தயவுமின்றி உயர உயர வளர்ந்தார்கள்.made in Germany என்பதற்கு இலக்கணம் வகுத்தார்கள்.இவர்களது தொழில்நுட்பங்களும் இயந்திரவியலும் உலகையே பிரமிக்க வைத்தது. எட்டாத உச்சத்திற்கு சென்றார்கள்.உலக யுத்த அழிவிலிருந்து மீண்டு முன்னேறி ஒரு நிம்மதி பெரு மூச்சு விட ஆரம்பிக்கும் போது புதிதாக முளைத்தது ஒரு புதிய கட்சி. அதுதான் பசுமைக்கட்சி imago51407637h-jpg-100-1920x1080.jpgகட்சி.அவர்களது முக்கிய கொள்கை சுற்றம் சுற்றாடல் பசுமையான உலகம். அவர்கள் முதலில் வைத்த ஆப்பு நிலக்கரி சுரங்களுக்கும் அணுமின் நிலையங்களுக்கும் தான்....அங்கே தான் ஜேர்மனியின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சறுக்க ஆரம்பித்தது.அந்த நிலையில் கைகொடுத்தது ரஷ்ய எரிசக்தி. ஒருவிதத்தில் இருந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இது சரியான தகவலாகத் தெரியவில்லை. தகவல் மூலத்தை இணைத்தால் நன்றிகள்.

இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்கா ஜேர்மனியின் அகதிகள்/குடியேறிகள் கொள்கையை மாற்றியிருந்தால், அது வரை இலட்சக் கணக்கான துருக்கியர்கள் எப்படி ஜேர்மனிக்கு வந்தார்கள்? அவர்களுள் பலர் நிரந்தரக் குடிகளாக வேரூன்றினார்களே?

So yes — Germany’s refugee acceptance wasn’t just voluntary generosity. It came from a mix of external pressure (Allies, UN, EU) and internal moral-political pressure.

ஏற்கனவே செவிவழி என்று எழுதியிருந்தேன்.

ஆனால் நம்பிக்கையானவர் சொன்னதால் இருக்கலாம் என எண்ணினேன்.

கிட்லர் செய்த கொடுமைகளால் இப்படியும் நடந்திருக்கலாம் என இப்போதும் உள் உணர்வு சொல்கிறது.

ஆம் - ஜெர்மனியின் அகதிகள் ஏற்பு வெறும் தன்னார்வ தாராள மனப்பான்மையால் மட்டும் ஏற்படவில்லை. அது வெளிப்புற அழுத்தம் (நேச நாடுகள், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் உள் தார்மீக-அரசியல் அழுத்தத்தின் கலவையிலிருந்து வந்தது.

5 hours ago, வாத்தியார் said:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் தங்களது நாட்டிற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்

அதி முதலாவது சட்டம்

எந்த ஒரு மனிதனது தனிமனித உரிமையையும் எந்தக்காரணத்திற்காகவும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது.

இன. மத. நிற. தோற்றம். மற்றும் அடையாளங்கள் காரணமாக யாரையும் தனிமைப்படுத்தல் ஆகாது

அத்துடன் தாங்கள் போர்க்காலங்களில் எப்படியெல்லாம் தஞ்சம் தேடி அலைந்தோமோ அதே போல வேறு யாரும் தஞ்சம் தடி அலையக் கூடாது..... அப்படித் தஞ்சம் தேடி வரும் மக்களுக்கு ஜெர்மனி தன்னாலான சகல உதவிகளையும் அளிக்கவேண்டும் என அகதிகள் சார்பாக ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதன் அடிப்படையில் தான் பழைய அகதிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது

இப்போது அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்துள்ளன

விளக்கத்திற்கு நன்றி வாத்தியார்.

எனக்கு இன்னமும் குழப்பம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2025 at 01:28, ஈழப்பிரியன் said:

இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.

யேர்மனியின் இன்றைய பொருளாதாரம் வலுவானதுதான்.

உற்பத்தியும் ஏற்றுமதியும் உறுதியாகத்தான் இருக்கின்றன.

யேர்மனியின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்மையாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றது.

முக்கிய உற்பத்தித்துறைகள் என்று பார்த்தால், இயந்திரங்கள், வாகனங்கள் (மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎன்டபிள்யூ, பொல்க்ஸ்வாகன்), இரசாயனப் பொருட்கள், அத்துடன் மின்னணு சாதனங்கள் என பல துறைகள் இருக்கின்றன.

இப்பொழுதும் யேர்மனிய உற்பத்திப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு இருக்கின்றது.

காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, சுத்தமான ஆற்றல் கூடிய பசுமைத் தொழில்நுட்பங்களிலும் யேர்மனி இப்பொழுது முக்கிய முதலீடுகளை செய்து கொண்டிருக்கிறது. யேர்மனியின் இப்பொழுது இருக்கும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் சில முக்கிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலை இன்னும் இருப்பதாகவே கருதுகிறேன்.

யேர்மனியில் மட்டுமல்ல உலகமெங்குமே மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துத்தான் இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், பென்சனுக்கு வழங்கப்படும் தொகை பெரிதாகிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் பென்சன் வயதை உயர்த்தும் திட்டங்கள் இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நான் யேர்மனிக்கு வந்த பொழுது பென்சன் வயது 60. ஆனாலும், வேண்டுமானால் 58 வயதில் பென்சன் எடுக்க அப்பொழுது வழி இருந்தது.ஆனால் எனக்கு பென்சன் எடுக்க அனுமதிக்கப்பட்ட பொழுது எனது வயது 66 வருடங்களும் 8 மாதங்களும் இருந்தது. இப்பொழுது பென்சன் எடுப்பதாயின் வயதெல்லை 67 வருடங்கள் அல்லது 45 வருடங்கள் கண்டிப்பாக வேலை செய்திருக்க வேண்டும்.

யேர்மனி உலகில் முன்னணி கார் உற்பத்தி நாடாக இருந்தாலும், அண்மையில் எலக்ட்ரிக் வாகன மாற்றம் மற்றும் சீனாவின் போட்டி காரணமாக பாரம்பரிய கார் நிறுவனங்கள் உற்பத்தி வீழ்ச்சியை சந்திக்கின்றன என்பது உண்மைதான். வேலைவாய்ப்பு இல்லாமல் மூன்று மில்லியனுக்கு மேலாக மக்கள் இருந்தாலும், இது பெரும்பாலும் வேலைக்கான குறைந்த தகுதியுடையோர் மற்றும் குடியுரிமை பெற்ற வெளிநாட்டில் இருந்து வந்து குடியிருப்பவர்களிடையே அதிகமாகக்காணப்படுகிறது. உயர் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு இன்றும் ஆட்கள் தேவை அதிகமாகவே இருக்கின்றது. யேர்மனியில் மிகப் பெரிய சவாலாக இருப்பது இதுவே, மருத்துவம், தொழில்நுட்பம், ஹோட்டல்/சமையல், கட்டிட வேலை போன்ற துறைகளிலும் ஆட்கள் குறைவாக உள்ளனர். இதனை சரி செய்ய, வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை வரவழைக்கும் புதிய குடியேற்றக் கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ரஸ்யாவின் நடவடிக்கைகள், யேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.பெருமளவு தொகையை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்க வேண்டிய தேவை யேர்மனி ஏற்படிருக்கின்றது. அதாவது, நாட்டின் உள்நாட்டுத் தேவைகளுக்கும் மேலான ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய தேவை. அத்தோடு, உக்ரைன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அளிக்கப்படும் பெரும் தொகை, உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிக்கான செலவுகள் என பெரும் தொகையை யேர்மனி கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களூடாக யேர்மனி, மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆகவேதான் அகதிகளுக்கு புகழிடம் தந்து பாதுகாக்கிறது. அகதிகளுக்கு உதவுவது என்பது அவர்களின் பெரும்பாலான மனதையும், உண்மை உணர்ந்த அவர்களின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. யேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் (1951) ஜெனிவா உடன்படிக்கைகளில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.இந்த உடன்படிக்கை என்பது அகதிகளை அவதிப்படுத்துவதைத் தடுப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பு, வாழும் இடத்தை வழங்குவது, அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் வாழ்வாதாரத்தைக் கவனித்துக் கொள்வது போன்றவற்றுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச சட்டமாகும்.

யேர்மனி, சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.இன்று கோவில்களைக் கட்டுவது, வீதிகளை இடை மறித்து கடவுளை தேரில் வைத்து இழுப்பதுமான செயற்பாடுகள், தெருவெல்லாம் தேங்காய் உடைத்து காவடி எடுத்து ஆடுவது, டோர்ட்மன்ட் போன்ற நகரங்களில் தெருவிழாக்கள் செய்வதும் நான் மேற் குறிப்பிட்ட நல்லிணக்கமும், சுதந்திரம், சமத்துவமும்தான் காரணம்.

பொதுவாக, அரசியல் தஞ்சம் என்பதை தள்ளி வைத்து இட்டு மனிதாபிமான செயற்பாடுகளாலேயே எங்களில் பலருக்கு யேர்மனியில் வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

சில வருடங்களாக வெளிநாட்டவர்களால் ஏற்படும் வன்முறைகளால்தான் AFD போன்ற வலதுசாரிகள் கட்சி வளர்ந்து வருகிறதே தவிர, பொருளாதார வீழ்ச்சி அதன் வளர்ச்சிக்குக் காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இரண்டாம் உலகக் போரின் பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா நாடுகள் தங்கள் படைகளை நிறுத்தி அழுத்தம் கொடுத்த பொழுதும், யேர்மனி பொருளாதார வளர்ச்சியில் உச்சம் கண்ட நாடு மட்டுமல்ல, உள்கட்டமைப்பையும் திறமையாக அமைத்திருந்தது.

இன்று யேர்மனி காணும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சீர் செய்யப்படும். நம்பிக்கையிருக்கிறது.

YouTube இன் மூலம் சம்பாதிக்கலாம் என்று அவனவன் சொல்வதெல்லாம் தாங்கள் பணம் பார்ப்பதற்கேயன்றி வேறொன்றுமில்லை.

தமிழ் பொக்கிசம் சொல்லும் தகவல்களை இந்தியர்கள்கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இப்பொழுது நான்கு இந்தியத் தமிழர்கள் புதிதாக வீடு வாங்கிக் குடியேறியிருக்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎன்டபிள்யூ, பொல்க்ஸ்வாகன்)

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

எனது நீண்டகால நண்பர் ஒரு பென்ஸ் கார் பைத்தியம்.எனக்கு தெரிந்து வேறு கார் ஓட்டியதைப் பார்க்கவில்லை.

எப்போது ஜேர்மனிக்கு வெளியே கார் தயாரிக்கத் தொடங்கினார்களோ அப்போதே பென்ஸ் பழைய மாதிரி இல்லை என்று ஏங்குவார்.

இதே பிரச்சனை அமெரிக்கன் கார்களிலும் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.