Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உங்கள் கதைக்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரசோதரன். அருமையாக எழுதுகின்றீர்கள்.பிரமிக்க வைக்கின்றது.👍 🙏

மிக்க நன்றி அண்ணா. உங்களைப் போன்ற பலர் இங்கு களத்தில் கொடுக்கும் உற்சாகத்தாலும் மற்றும் சில நண்பர்களாலுமே நான் எதையாவது எழுத முயல்கின்றேன்.

யாழ் களத்திற்கு என்றும் என் நன்றிகள். 'எடுத்ததெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது.........' என்று சொல்வது தான் என் வகையிலும் சரியாக உள்ளது............❤️.

  • Replies 83
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த

  • ரசோதரன்
    ரசோதரன்

    3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகள

  • ரசோதரன்
    ரசோதரன்

    5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்வ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதன் said:

Dolphinக்கு என்ன தமிழி சொல் என்று நான் யோசிச்சதுண்டு.

நான் சின்னனாக இருந்த போது, ஒரு Dolphin (இறந்ததாக இருக்கலாம்) முனையில் கரை ஒதுங்கியது பற்றி ஈழநாதம் அல்லது உதயன் இல் பார்த்தது ஞாபகம். ஆனால் எந்தத் தமிழ் பெயரை பயன்படுத்தினார்கள் என்று நினைவில் இல்லை.

பல ஆண்டுகள் கழித்து நான் ஓங்கில் என்ற சொல்லை மீண்டும் கேட்க்கிறேன். ஊரில் ஓங்கில் மீன் என்று சொல்லுவார்கள். ஆனால் என் ஊரில் Dolphin பார்த்ததேதில்லை, அதனால் அது என்ன மீன் எண்டே தெரியாமல் போயிட்டுது.

ஓங்கில் என்பது ஒரு காரண பெயராக இருக்கலாம் — "ஓங்கி பாயும்" என்பதில் இருந்து வந்திருக்கலாம்.

யாழ் களத்திற்கு உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன், ரதன்.

நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு சமயம் ஓங்கில் மீன் ஒன்று யாரோ ஒருவரின் வலையில் அகப்பட்டு விட்டதாக வீட்டில் கதைத்தார்கள். அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டதாகவும் சொன்னார்கள். ஓங்கில் மீன் என்றால் அது தான் டால்பின் மீன் என்று அந்த நேரத்தில் யாரோ விளக்கமும் கொடுத்திருந்தார்கள் என்றும் நினைக்கின்றேன். அது அப்படியே தங்கிவிட்டது.

பின்னர் போராட்ட காலத்தில் என்று நினைக்கின்றேன். எங்களூர் கடற்கரையில் ஓங்கில் மீன் ஒன்று (அல்லது சில?) திசை மாறி ஒதுங்கின என்றும், அதை சில இளைஞர்கள் மீண்டும் ஆழக் கடலில் சேர்த்து விட்டதாகவும் செய்திகளில் வந்திருந்தது.

நீங்கள் சொல்லியிருப்பது போலவே ஓங்கில் என்பது காரணப் பெயராக இருக்கலாம். பல புதிய சொற்கள் காரணப் பெயர்களாகவே உருவாகின்றன என்று நினைக்கின்றேன்.

ஓங்கில் என்னும் சொல் மூங்கில் போல மெலிதாக நீண்டு உயரமாக வளர்ந்தவர்களை விளையாட்டாக குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்ப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்" எங்களூர் வீரபத்திரர் சனசமூக நலநோம்பு மூலவளநிலையத்தில் (வாசிகசாலை) எழுதி இருந்த நன்மொழி! 95 முன்னரான போராளிகளின் கட்டுப்பாட்டில் எமது பகுதி இருந்தபோது நிறைய தமிழாக்க சொற்கள் இருந்தது.

தொடருங்கள் @ரசோதரன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கதையை தொய்வில்லாமல் இடையிடையே நகைச்சுவையும் கலந்து பொறுமையாக தடடெழுதி சுவைபட தந்த ரசோதரனுக்கு பாராட்டுக்கள். உங்கள் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருத்தி. எழுத்துப்பிழை யற்ற நல்ல ஒருஆசானிடம் தமிழ்கற்ற மாணவன் போல நிறைய புத்தகங்கள்தேடி வாசிப்பீர்கள் போல , உங்களைப்போல பலர் இங்கு தேவை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

இந்த இடம் என்னை உள் இழுத்தது....90 களின் முற்பகுதிகளில் கனாடாவிலும் இப்படித்தான் நூலகங்கள் ..இருந்தது...தேடிப்போய்..படித்தோம் ..கொண்டுவந்தும்...படித்தோம்..மார் தட்டி தமிழ்ப்பகுதி என்று மனம்கிழ்ந்தோம்.....இன்று...இவையாவும் தேடுவாரற்று...

வேப்பமர உச்சியில் ஏறி பூ புடுங்வது மட்டுமில்லை...பூவயரையும் நோட்டம் பார்த்து..வீட்டில் பூவரசம் தடியால் பூசையும் வாங்கியதுமுண்டு...

தேடிப் பிடிக்கிறியள்.... எம்மை தேடிப் படிக்கவும் வைக்கிறியள்....தொடருங்கள்

அது சரி அந்த ஓங்கில் மீனில் அம்மா ஓங்கில்..மாமி ஓங்கில் ,சித்தி ஓங்கில் ...அடையாளம் காணக்கூடியதாக இருந்ததோ...கில்லாடி சார் நீங்கள்

🤣..................

அந்த ஓங்கில் மீன்களின் கூட்டமே உண்மையானவையா அல்லது அங்கே அந்தப் பகுதி கடலுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் செயற்கையானவையா என்ற சந்தேகம் தான் மிக மெல்லியதாக வந்தது............😜.

கனடாவில் நான் இது வரை எந்த நூலகத்திற்கும் போகவில்லை. அங்கே போய்ப் பார்க்கவும் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த தடவை முயன்று பார்ப்போம். புலம் பெயர்ந்தவுடன் தாயகத்துடன் இருக்கும் ஒட்டுறவு காலத்தில் மெதுமெதுவாக கரைந்து போய் விடுகின்றது போல. பின்னர் வாழ்வு முடியும் காலத்தில் மீண்டும் தோன்றும் போலவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, villavan said:

அருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.

நல்லதொரு, அர்த்தமுள்ள படம் வில்லவன்.........❤️.

சில வீடுகளில் நாங்கள் கொடுக்கும் வேப்பம் பூவின் பெறுமதியை விட அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். பல அயலவர்கள் எங்கள் மேல் மிகவும் பிரியமாகவே இருந்தார்கள். எல்லாவற்றையும் முடிந்த வரை உள்ள உள்ளபடியே வெளிப்படுத்திய அது வேறு ஒரு உலகம்.

பிடித்தமான எழுத்துகளும், கதைகளும் எங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும் போல. புயலிலே ஒரு தோணியிலிருந்து வெளியே வருவதற்கு சில நாட்கள் எடுத்தன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதன் said:

Dolphinக்கு என்ன தமிழி சொல் என்று நான் யோசிச்சதுண்டு.

நான் சின்னனாக இருந்த போது, ஒரு Dolphin (இறந்ததாக இருக்கலாம்) முனையில் கரை ஒதுங்கியது பற்றி ஈழநாதம் அல்லது உதயன் இல் பார்த்தது ஞாபகம். ஆனால் எந்தத் தமிழ் பெயரை பயன்படுத்தினார்கள் என்று நினைவில் இல்லை.

பல ஆண்டுகள் கழித்து நான் ஓங்கில் என்ற சொல்லை மீண்டும் கேட்க்கிறேன். ஊரில் ஓங்கில் மீன் என்று சொல்லுவார்கள். ஆனால் என் ஊரில் Dolphin பார்த்ததேதில்லை, அதனால் அது என்ன மீன் எண்டே தெரியாமல் போயிட்டுது.

ஓங்கில் என்பது ஒரு காரண பெயராக இருக்கலாம் — "ஓங்கி பாயும்" என்பதில் இருந்து வந்திருக்கலாம்.

நான் முன்பு காரைநகர் nrtb யில் வேலை செய்தபோது (அப்போது பஸ் டிப்போ ஜெற்றி முனையில் இருந்தது)பக்கத்து ஊர்காவற்துறை கடற்கரையில் ஒரு பெரிய ஓங்கில் மீன் இறந்து கரையொதுங்கி இருந்தது ......... அதை நிறையபேர் வந்து பார்த்தார்கள் ......பின் அதை கடற்கரையில் பெரிய குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள் ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4. பாட்டி வடை சுட்ட கதை

------------------------------------------

large.TrainStation.jpg

சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன.  மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை.

அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள்.

புகையிரத நிலையத்தின்  இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது.

ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான்.

உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது  விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது.

சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது.

வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது.

திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன்.

திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம்.

திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார்.

கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள்.

சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.

நாட்டுக்கு நாடு வேறுபடுவார்களென நினைக்கிறன்.

4 hours ago, ரசோதரன் said:

எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள்.

அலுப்புத்தட்டாது, ஆர்வத்தை தூண்டும் அழகிய எளிய வசன நடை. மற்றவரை நோகடிக்காது அவர்களையும் அரவணைத்து எழுதும் உங்கள் மனநிலை எழுத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.

லங்காசிறி ...வீரகேசரி புதினத்தாள்போல...தமிழரெண்டால் பெயர் போடுவினம்...மற்றவை என்றால் பெயர் வராது

4 hours ago, ரசோதரன் said:

அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள்.

எங்கெல்லாம் பூந்து விளையாடி ..கோர்த்து ..அழகாக கதை சொல்லுறியள்....நல்லாயிருக்கு..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல் உள்ளது . ........தொடருங்கள் . ........! 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல் உள்ளது . ........தொடருங்கள் . ........! 😀

ஏற்கனவே அவர் இருக்கும் இடத்தில் அளவுக்கதிகமாக இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இப்படி கதைகள் எழுதுவார் என்று தெரிந்தால் ரசோதரனைக் கடத்தி கோடாம்பாக்கம் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக கதை எழுத வைத்துவிடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.

இது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன்.

அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

லங்காசிறி ...வீரகேசரி புதினத்தாள்போல...தமிழரெண்டால் பெயர் போடுவினம்...மற்றவை என்றால் பெயர் வராது

🤣.................

நக்கீரர் வழி வந்தவர் எங்கள் அல்வாயன்..................... விபரமாகவே பின்னர் எழுதப் போகின்றேன் அல்வாயன்...........👍.

  • கருத்துக்கள உறவுகள்

யசோதரன் எங்களுக்குப் படம் காட்டப்போகின்றார் என பெரிதாக இந்தக் கதையை வாசிக்காமல் சென்று விட்டேன்

இப்போது அப்படி என்ன தான் எழுதுகின்றார் என் ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என்று வந்தால் .....

மிகுதிக் கதை எப்போது வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்

கதையும்..... கதையுடன் சேர்ந்து வரும் செய்திகளும்.... சம்பவங்களும்......

நன்றாக இருக்கின்றது என்பதை விட...... மிகுதி இப்போது வரும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கின்றது

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5. இன்னொரு பாலம்

--------------------------------

large.BridgeToHeaven.jpg

எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும்.   

என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர்.

ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன்.   

சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள்.  என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள்.

சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது.

large.Swami.jpg

சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது.  

கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள்.

அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். 

குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது.

இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது.

அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்?

சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன்.

'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............'

'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?'

'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.'

'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' 

தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது.

(தொடரும்......................)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

14 hours ago, ரசோதரன் said:

இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்?

சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன்

விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன்

ஓம் நமோ நாராயணா....

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

16 hours ago, ரசோதரன் said:

இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன்

புதிதாக கோயில் கட்டப்பட்டால் அதனை ஒரு அருங்காட்சியத்திற்கு போவது போல அந்த கோயிலுக்கு போக வேண்டும் என சொல்வார்கள், அந்த கோயில் எங்காவது ஒரு மூலையில் இருக்கும், அதற்கும் போகும் வழிகள் கற்களாக இருந்தாலும் அந்த கடவுளின் அருளால் வாகன சக்கரம் பழுதாவதில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது🤣.

16 hours ago, ரசோதரன் said:

தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது.

மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

இங்கு படித்தவர்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தமளிக்கும் விட்யமாக இருக்கின்றது, சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய படித்தவர்கள்தான் அதிகளவில் சமூக அடக்குமுறைகளில் பலவழிகளில் பங்களிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2025 at 09:06, ரசோதரன் said:

சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்?

large.IMG_9070.jpeg.9b81abe1dcef6f8e4db4

On 21/9/2025 at 09:06, ரசோதரன் said:

400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள்

49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம்.

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான்.

On 21/9/2025 at 09:06, ரசோதரன் said:

ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார்.

அதுசரி  அநேகமாக பல்லி  மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன்விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....

நீங்கள் சொல்லுவதையே தானும் நானும் நினைத்திருந்தேன். நாராயணர் என்பவர் ஒரு அவதாரம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது.

பத்து அவதாரங்கள் என்று வரிசைப்படுத்தப்படுபவை: 1. மச்ச அவதாரம் 2. கூர்ம அவதாரம் 3. வராக அவதாரம் 4. நரசிம்ம அவதாரம் 5. வாமன அவதாரம் 6. பரசுராமர் அவதாரம் 7. ராமர் அவதாரம் 8. கிருஷ்ணர் அவதாரம் 9. பலராமர் அவதாரம். சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை ஒன்பதாவது அவதாரமாகக் கருதுவதும் உண்டு 10. கல்கி அவதாரம்.

புராணங்களின் படி, 10 வது அவதாரம் மட்டுமே மிச்சமுள்ளது. கலியுகத்தை முடித்து வைப்பதற்க்கான அவதாரம் இது.

பிரகலாதன் - இரணிய மன்னனின் கதையில் வரும் நரசிம்ம அவதாரமே நாராயணரின் தொடர்புடையது போல.

இவை எல்லாமே புராண காலத்தவை, புத்தர் மட்டுமே ஒரு விதிவிலக்கு, அவரை ஒரு அவதாரமாகக் கருதுவது கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இல்லை.

சுவாமி நாராயணன் என்று குஜராத்தி மக்களால் வழிபடப்படுபவர் பிரிட்டிஷ் கால இந்தியாவில், 1781 - 1830 ஆண்டுகளில், வாழ்ந்த ஒரு துறவி. 200 வருடங்களுக்கு முன் மனிதராக வாழ்ந்த ஒருவர். இவர் ஒரு புராண அவதாரம் இல்லை என்றும், பெயர்க் குழப்பமே இங்குள்ளது என்றும் நினைக்கின்றேன்...............

  • கருத்துக்கள உறவுகள்

மகா விஷ்ணுவின் பல நாமங்களில் ஒன்று நாராயணா என்னும் நாமம் .....அச்சுதா, அனந்தா,கோவிந்தா போன்று....... அது அவதாரமல்ல ....... ஆனால் அந்தப் பெயர்களை பக்தியால் பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவார்கள் . ....... அசலம் என்றால் அசையாமல் இருப்பது பொதுவாக மலையைக் குறிக்கும் ........திருவண்ணாமலை இதன் இன்னொரு பெயர் அருணாசலம் ....... பெற்றோர் அன்பினாலோ அன்றி பக்தியினாலோ பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் இடுகின்றார்கள் என்றால் அந்தப் பிள்ளை மலைபோல் அசையாமல் இருக்குமோ . .....இருக்காது ......அது ஓடும் , ஆடும், பாடும் , படம்போடும் அதுபோல் . ........! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது...........🤣.

🤣................

ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣.

17 hours ago, vasee said:

மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

👍..........

சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள்.

நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது.

தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2025 at 00:06, ரசோதரன் said:

ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது.  

என்னடா இது ஒரு பல்லியை பிடித்ததற்கே

முதலையைப் பிடித்த மாதிரி ………..!

  • கருத்துக்கள உறவுகள்

548318941_2773954982810122_1979321453965

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.