Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1377632.jpg

புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other - Supreme Court - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பிழம்பு said:

புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் யார் யாருக்கு என்ன லாபம்? யாருக்கெல்லாம் நட்டம்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இப்படி ஆயிடுச்சு???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

என்னப்பா

இப்படி ஆயிடுச்சு???

முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான்.

அங்கே நாட்டாமை சாத்தப்பன்.

இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம்.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார்.

அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீமான் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் யார் யாருக்கு என்ன லாபம்? யாருக்கெல்லாம் நட்டம்? 😎

அதை பிறகு பார்ப்போம்,...இந்த தீர்ப்பு சரியா?????????? நீதிபதிமார். எந்த சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???

குறிப்பு,...இதைவிடவும் கள்ளு கெட்டிலில். வழங்கும் தீர்ப்புகள். சிறந்தது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

விஷயலச்சுமிக்கு, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்க... பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்‌ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான்.

அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அங்கே நாட்டாமை சாத்தப்பன்.

முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

விஷயலச்சுமிக்கு, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்க... பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்‌ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான்.

அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂

இனி வேலைக்கு என்ன செய்யலாம்?

ஏதாவது கட்சி தொடங்கி, புலம்பெயர் முட்டகோசுகளிடம் திரள்நிதி திரட்டலாம் என யோசிக்கிறேன்😂

பிகு

விஜி அண்ணிக்குத்தான் வாய்பூட்டு 😂. சீமானை தொடர்ந்தும் செ.சை என அடையாளப்படுத்த தடை ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️

ஓம்…மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தமிழ் நாட்டு நீதிபதிகள் முற்போக்கானவர்கள்…

வடக்கே போக, போக கோமிய பாவனை காரணமாக மூளை மாட்டு மூளை போல் மாறிவிடும்.

நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம்.

வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️

அது தான் தீரப்பு,..சிறந்த நீநியான. சட்டப்படியான தீர்ப்பு ஆனால் இங்கே சீமான் வழக்கில் வழங்கும் தீர்ப்பென்பது சீமான் எந்தவொரு பெண்ணையும். அவரது விருப்பம் போல் கசக்கி பிழியாலாம் என்ற சட்டத்தின்படி வழங்கப்படுகிறது .....இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா இந்தியாவில் என்ற ஐயப்பாட்டை. எனக்கு எற்படுத்துகிறது ......ஒரு வழக்கின் தீர்ப்பை அது சரியான தீர்ப்பு தானா என்று 7. பேர்கள் கொண்ட குழு ஆராய்ந்து 4. பேருக்கு மேல் ஒத்துக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும் அதாவது சரியான தீர்ப்பு ஆகும் இலங்கையில் இப்படி இருந்தது, .இந்தியாவில் இப்படி இல்லையா?????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

திருமண வாழ்வு என்பது ஆணும் பெண்ணும் அன்பை பகிர்ந்து இணையர்களாக வாழ்வது. தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவனிடம் ஒரு பெண் அன்பை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வது கந்தையா? எப்படி இதை சரியான தீர்பபு என்று கூறுவீர்கள்? அவளுக்கு அது தண்டனையல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, island said:

திருமண வாழ்வு என்பது ஆணும் பெண்ணும் அன்பை பகிர்ந்து இணையர்களாக வாழ்வது. தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவனிடம் ஒரு பெண் அன்பை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வது கந்தையா? எப்படி இதை சரியான தீர்பபு என்று கூறுவீர்கள்? அவளுக்கு அது தண்டனையல்லவா!

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️

இதை தான் சரியான தீர்ப்பு என்று சொன்னேன் ...பிழையா???? இந்த சீமான் வழக்கை நான் சொல்லவில்லை 🙏. கவனமாக வாசிப்பதும் முக்கியம் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.

உண்மை தான்

12 hours ago, goshan_che said:

மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம்.

இதை அறிந்து தான் என்னவோ இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் இப்பவே இராவணன் இலங்கை தமிழ் மன்னன் என்றும் மறுபக்கம் தெய்வங்கள் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மன் , சமேத லக்ஷ்மன் என்றும் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மனை மீண்டும் இணைத்து வைத்த கடவுள் அனுமான் என்றும் காவிதிரிய ஆரம்பித்துவிட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.