Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

விஜை ரொம்பவும் இமோசனலானவர் என நான் நினைப்பதை இந்த அறிக்கை கொஞ்சம் உறுதி செய்வது போல் உள்ளது.

இத்தனை உயிர்கள் தன் கூட்டத்தில் பலி, அதுவும் தன்னை நேசித்தவர்கள், தன்னை காண என மணிக்கணக்கில் காத்து நின்ற குழந்தைகள் என்பதை கடந்து போவது, மீண்டு வருவது மிக கடினமானது.

ஒத்தாசைக்கு ஒரு கூட்டணி கட்சி கூட இல்லை.

சந்தர்ப்பம் காத்திருந்து நிலைய வித்துவான்கள் ரஜனி, கமல் நன்றாக வாசிக்கிறார்கள்.

விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும்.

30+ உயிர் என்பது இலகுவாக கடந்து போக முடியாத விடயம்.

ஒரு வீடியோ பார்த்தேன். 30 பேர் பலியாகியுள்ளனர் என்று மக்கள் கத்தி விஜய்யிடம் சொல்கிறார்கள் அவர் ஒன்றுமே கேட்காதர்கள் போல் சென்று கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் நடிகனால் புரிந்து கொள்ள முடிகிறது. முடியும்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளான பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும், கண்ணீர் அஞ்சலிகளும்..........😭😭.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகள் அரசியல்களைக் கடந்து ஒரு கூட்டம் வைப்பதும் முடிவில் எதுவுமே நடக்காத மாதிரி அந்த இடத்தை துப்பரவு செய்வது போக்குவரத்துக்களை கட்டுப்பாட்டில் வைத்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பதிலும்

நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து சகல கட்சியினரும் பாடம் படிக்க வேண்டும்.

இறந்த காயம்பட்ட பொதுமக்களுக்கு அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒரு வீடியோ பார்த்தேன். 30 பேர் பலியாகியுள்ளனர் என்று மக்கள் கத்தி விஜய்யிடம் சொல்கிறார்கள் அவர் ஒன்றுமே கேட்காதர்கள் போல் சென்று கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் நடிகனால் புரிந்து கொள்ள முடிகிறது. முடியும்.

அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள்.

ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை பதில் சொல்வதில்லை.

இன்று நிலமை வேறு என உணர்ந்து பதில் சொல்லி இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒரு நடிகன் - இவ்வளவுதான் என்ற பேச்சு எழும் என தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே மக்கள் கொலையை செய்து விட்டு அழுபவனை நம்புவார்கள்.

கொலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவனை இரக்கம் அற்றவன் என திட்டுவார்கள்.

ஆனால் இதை கூட விளங்கி கொள்ளவில்லை எனில் - விஜை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதே உண்மை.

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து சகல கட்சியினரும் பாடம் படிக்க வேண்டும்.

இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது.

ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில்,

"விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

👆 அதிமுக ராஜசபா எம்பி இன்பதுரை.

பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவு சமிக்ஞை?

இதை வைத்து விஜைய வழிக்கு கொண்டுவர பாஜக/அமித் ஷா முயல கூடும்.

இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துத்தான், முத்துகுமாரை கொலை செய்துவிட்டு, றோ சீமானை கட்டுப்பாட்டில் எடுத்தது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது.

ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.

ஆனால் சந்தில் கூடினாலும் அதன் ஒழுக்கம் வேறு. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிஜம் இது. இன்று விஜய் சீமானை தூக்கி விட்டு உள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆனால் சந்தில் கூடினாலும் அதன் ஒழுக்கம் வேறு. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிஜம் இது. இன்று விஜய் சீமானை தூக்கி விட்டு உள்ளார்.

எது ஒழுக்கம்? தலைவரின் ஆளுரய படத்தின் முன் வைத்து, ஒரு சிறுமியை நாதக நிர்வாகி வன்கொடுமை செய்த வீடியோ உலவுகிறதே அதன் பி. அவருடன் சீமான் போட்டோவும் எடுத்தாரே அந்த ஒழுக்கமா?

அல்லது அடிக்கடி செய்யிகளில் அடிபடும் நா தக வினரின் “ஒழுக்கமா”?

இங்கே ஒழுக்க கேட்டால் யாரும் சாகவில்லை. கூட்ட நெரிசல்.

ஆகவே சீமானை இது உயர்தியது என்பது - இதிலாவது நாதகவுக்கு ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற அங்கலாய்பே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நடிகனை கடவுளாக பார்க்கும் சினிமா பைத்தியங்களை என்னவென்பது? மற்றும்படி விஜய் அரசியலுக்காக வந்த கூட்டம் அல்ல இது.

சீமானின் அரசியல் கூட்டங்களில் நடக்கும் ஒழுங்குகளை பார்த்தாவது விஜய் கட்சியின் தொண்டர்கள் எனப்படும் ரசிகர்கள் பாடம் படிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது.

உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார்.


கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை

Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST]

Seeman blood

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள்.

ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை

இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது.

ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.

உண்மை தான் சீமானுக்கு இவ்வளவு கூட்டம் கூடாது.

ஆனால் விஜேக்கு இப்படி சனம் கூடும் என எதிர்பார்த்து அதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு முதல் நடந்த கூட்ட முடிவிலும் குண்டு விழுந்த இடமாக காட்சியளித்தது.கதிரைகள் சின்னாபின்னமாக கிடந்தது.

குப்பைகளை அள்ள ஆட்களைக் காணோம்.

போகப்போக முன்னேற்றம் காணுவார் என எண்ணினேன்.

இப்போ சோகத்தில் முடிந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு.


நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை

Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST]

Thaniyarasu demands that a murder case be registered against actor Vijay and his immediate arrest

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்...

மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார்.

1 minute ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் சீமானுக்கு இவ்வளவு கூட்டம் கூடாது.

ஆனால் விஜேக்கு இப்படி சனம் கூடும் என எதிர்பார்த்து அதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு முதல் நடந்த கூட்ட முடிவிலும் குண்டு விழுந்த இடமாக காட்சியளித்தது.கதிரைகள் சின்னாபின்னமாக கிடந்தது.

குப்பைகளை அள்ள ஆட்களைக் காணோம்.

போகப்போக முன்னேற்றம் காணுவார் என எண்ணினேன்.

இப்போ சோகத்தில் முடிந்துள்ளது.

விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது.

சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது.

அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே.

ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது.

ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. 

ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம்.

சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள்.

அப்படியே நடந்துள்ளது.

இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல்தலைவன் என்றால் அவர் பேசும் பேச்சை தொண்டர்கள் செவி முடுக்க வேண்டும்.கூட்டத்ததைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டும். வியை கூட்டத்தில் பேசும் பேச்சை யார் கேட்கிறார்கள்?கத்திக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் விஜையைப்பார்க்க வந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய அவர் பேசும் கருத்தைக் கேட்பதற்காக வந்தவர்கள் இல்லை.விஜையும் இந்தக் கூட்டத்தைவிரும்பி காக்க வைத்து சொன்ன நேரத்துக்கு கூட்டத்துக்கு வராமல் காக்க வைத்து மாஸ் காட்டியதன் விளைவு நீண்ட நேரமாக தண்ணீர்இன்றி சாப்பாடு இன்றி இருந்தால் மயக்கம்வரத்தான் செய்யும் அதுவும் சனநெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்படத்தான் செய்யும்.மாஸ்காட்ட வெளிக்கிட்டு back fire ஆகமுடிந்திருக்கிறது. கரூரில் விஜை ஆவேசப் பேச்சு >நாமக்கல்லை நடுங்கவைத்தை விஸஜ என்று தமது TRP ஏற்றிய அதே ஊடகங்கள் இன்று பத்திரிகையாளரை சந்திக்க மறுத்த விஜை.விஜை கைதாவாரா?கருரில் விஜை கூட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் மரணம் என்றுTRP ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.விஜைவெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.இல்லயேல் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது.

இதை விஜே உணர்ந்து பணம் கொடுத்தாவது ஆட்களை ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

சரி இனி இதைக் கதைத்து பிரயோசனம் இல்லை.

அடுத்தடுத்து வரும் கூட்டங்களையும் மக்களையும் எப்படி சமாளிக்கப் போகிறார் பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

5 hours ago, goshan_che said:

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

நாதகவினர் இரத்ததானம் செய்யுங்கள்.சீமான்

சீமானின் அறிக்கைக்காக காத்திருந்தேன். சீமான் இதில் அரசியல் செய்யவில்லை. ஆனால் செய்தியைப் போட்டு விட்டு டஸ்கி செய்தியாக போட்டிருந்தது. உங்களது எதிர்வுகூறல் பிழையாகி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இந்த மூவரும் கூட பதில் சொல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

நாதகவினர் இரத்ததானம் செய்யுங்கள்.சீமான்

சீமானின் அறிக்கைக்காக காத்திருந்தேன். சீமான் இதில் அரசியல் செய்யவில்லை. ஆனால் செய்தியைப் போட்டு விட்டு டஸ்கி செய்தியாக போட்டிருந்தது. உங்களது எதிர்வுகூறல் பிழையாகி இருக்கிறது.

ஏற்றுகொள்கிறேன் - இந்த விடயத்தில் சீமான் மிகவும் நியாயமாகவே நடந்து கொள்கிறார்.

எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும்.

2 minutes ago, ரசோதரன் said:

விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இந்த மூவரும் கூட பதில் சொல்லவேண்டும்.

இதை நீங்கள் பலதடவை எழுதியும் உள்ளீர்கள்.

நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன்.

ஆனால் இப்போது கூட ஒரு டிவீட்டின் பின் ஒளிந்து கொள்ள நினைப்பது மிக மோசமானது.

உண்மையில் இதை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லை என்றால் மன்னிப்பு கோரி விலகிவிட வேண்டும்.

பிகு

இது ஜோக் அடிக்கும் விசயம் அல்ல ஆனால் அன்பில் மகேஷ் அழுத அழுகை ஆஸ்கார் ரகம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும்

இப்படியே சொல்லிக் கொண்டிருங்கள்.விஜையின் அரசியல் வருகையை ஆதரித்தவர் சீமான். அதேபோல் கமலின் அரசியல்வருகையைும் ஆதரித்தவர் சீமான். விஜை முதல்மாநாடு கொள்கை விளக்கக் கூட்டத்தில் திராவிடத்தேசியத் தமிழ்த்தேசியம் என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்த அன்று இரவே அதை விமர்சனம் செய்தவர் சீமான்.கொள்கை முரண்பாட்டைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது. முதல்மாநாட்டிலேயே ஆஊ என்று கத்தி அரசியல்பேசுகிறார். சீமானை மறைமுகமாக சீண்டியிருப்பார் விஜை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்.

ஒரு பெரும் தலைவரை பார்ப்பதற்கு குழந்தைகளையும் தூக்கி கொண்டு தாய்மார்களும், கர்பிணிகள் , வயோதிபர்கள், இயலாதவர்கள், இயலுமைகொண்டவர்கள் எல்லோரும் வந்திருக்கின்றார்கள். நடுப் பகல் 12 மணி தொடங்கி இரவு 7.15 வரை அவருக்காக காத்திருந்தார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்

மு.பூபாலன்

1 Min Read

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரையில் நடந்த விபத்துக் குறித்து ஆறுதல் தெரிவித்துப் பேசியிருக்கிறார் நாதக சீமான்.

Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

சீமான்

சீமான்

Join Our Channel

0Comments

Share

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் சோகம் - விஜய் வேதனை

கரூர் சோகம் - விஜய் வேதனை

இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

"இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முண்டி அடித்து நெருங்கி

ஒருவர் மேல் ஒருவர் என்று

ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து

இறந்து போன உடல்களில் ஆறு

அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு

புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு

புதிய நீண்ட மாலைகள் போடப்பட்டு

காத்துக் கொண்டிருக்கின்றன

வந்து கொண்டிருக்கும் முதல்வரின் அஞ்சலிக்காக.

ஏலவே அங்கே வந்தவர்கள் அங்கேயே நின்று அழலாம்.

நேரே வர முடியாதவர்கள்

ட்வீட்டரில்

கலங்கலாம்

துன்பத்தில் உழலாம்

வெடித்துச் சிதறி நொருங்கிப் போகலாம்.

இது தவிர்க்க முடியாத விபத்து என்றும் ஒருவர் சொல்லலாம்.

மோட்டுத் தமிழினமே

என் சனமே

எலிகள் கூட பொறிக்குள்

இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது தவிர்க்க முடியாத விபத்துதான் ]

என்ன ஒரு தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

இது தவிர்க்க முடியாத விபத்துதான் ]

என்ன ஒரு தலைவர்

தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

இப்படியே சொல்லிக் கொண்டிருங்கள்.விஜையின் அரசியல் வருகையை ஆதரித்தவர் சீமான். அதேபோல் கமலின் அரசியல்வருகையைும் ஆதரித்தவர் சீமான். விஜை முதல்மாநாடு கொள்கை விளக்கக் கூட்டத்தில் திராவிடத்தேசியத் தமிழ்த்தேசியம் என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்த அன்று இரவே அதை விமர்சனம் செய்தவர் சீமான்.கொள்கை முரண்பாட்டைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது. முதல்மாநாட்டிலேயே ஆஊ என்று கத்தி அரசியல்பேசுகிறார். சீமானை மறைமுகமாக சீண்டியிருப்பார் விஜை.

சீமானை நான் எதிர்க்க வேறு எவர் மீதான என அபிமானமும் காரணம் இல்லை. சீமான் எப்படிபட்டவர் என்ற புரிதல் மட்டுமே காரணம்.

15 minutes ago, ரசோதரன் said:

மோட்டுத் தமிழினமே

எலிகள் கூட பொறிக்குள்

இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.

😭😭😭

ஒரு ஈழத்தமிழனாக….

அந்த மீண்டும், மீண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் கடினமாது, கொடுமையானது…

ஆனாலும் சம்மட்டியால் அடித்தது போல் உண்மையானது.

இப்படித்தான் நமது மக்களும் மாட்டிகொண்டார்கள் இல்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.