Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

articles2FOjSsyyXpFsiu2AofPgNd.webp?resi

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு! த. வெ. க தலைவர் விஜய்!

தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று (27) நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 இலட்சம் ரூபாவும் அளிக்க எண்ணுகிறேன்.

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கரூர் மாநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

TVK.png?resize=511%2C600&ssl=1

 https://athavannews.com/2025/1448756

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் 40 பேர் பலி: கூட்ட நெரிசலுக்கு பிறகு என்ன நடந்தது? நிழலாக உறைந்த நிஜங்கள்

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சி

28 செப்டெம்பர் 2025, 09:29 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்சை சூழ்ந்துள்ள கூட்டம்

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ரவி என்கிற கட்டடப் பொறியாளரும் ஒருவர். இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடிய நிலையில் சிலர் துக்கம் தாளாமல் அழுதனர்.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் சிக்கிய பலரது உடைமைகள் சிதறிக் கிடக்கும் காட்சி

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றனர்.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் தனது உறவுகளை இழந்த குடும்பத்தினர் துக்கம் தாங்க முடியாமல் உடைந்து அழுதனர்.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காலணிகள் பரவிக் கிடக்கின்றன.

கரூர் பிரசாரம், தவெக, பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் தற்போதைய கழுகுப் பார்வை காட்சி. போக்குவரத்து இயல்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx20lgdw2vqo

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/14JhZo1Xd7m/ok

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிது.கரூரில் செய்தில்பாலாஜியின் தொகுதிக்குள் செந்தில் பாலாஜி எந்த எல்லைக்கும் போகக் கூடிய அரசியல்வாதி.கடந்த தேர்தலில் மக்களை அடைத்து வைத்து உதயநிதி படத்தைப்போட்டு மாற்றுக்கட்சிகளின் பிரச்சாரக்கூட்டத

துக்கு போகவிடாது தடுத்தவர்.தலைமைக்கு நெருக்கமானவர்.விஅஅஜை வெளியில் வந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்காவிட்டால் விஜையின் அரசியல் இருப்பு மட்டுமல்ல சினிமா இருப்பும்கேள்விக்குள்ளாக்கப்படும்.ஆகவே விஜை தனித்துப்போட்டி என்பதை விடுத்து திமுக வைத் தோற்கக்கூடிய சக்திகளுடன் கூட்டணி சேரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/dNmXbV2Ks5E?si=pbgpiJlyVqXBkNdm

https://www.facebook.com/share/p/16BEnjTSMq/?mibextid=wwXIfr

https://www.facebook.com/photo/?fbid=2585100705201672&set=a.321821678196264

May be an image of 7 people and text that says "கரூர் ۱۱ SEWS N NEWS WS SUN 2792025 "கூட்டத்தை சரியா வழி நடத்தத் தெரில.." விஜய் பரப்புரையில் 38 பேர் பலி- மக்கள் வேதனை"

செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்?

555985544_660014250494715_507528348456101072_n.jpg?stp=dst-jpg_p526x395_tt6&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=49rbWSdCiSoQ7kNvwENmADj&_nc_oc=Admfejr4jeSiy-zxQvcz6B72XhXxRwo7JXE04kaw6a6SoFMZ7o50pWYOksStHzVfPzs&_nc_zt=23&_nc_ht=scontent.flhr1-1.fna&_nc_gid=byIUpKCeoB_g2zs599BdQA&oh=00_AfaoaFjdVx9mDThy5QtenZt6gg-7BLJi9zp4NKUbSg-WlQ&oe=68DEE0FD

May be an image of 4 people, temple and text

சீமான் ஒழிக

சீமான் சாகனும்

சீமானை வர சொல்லுங்க

சீமான குத்தி கொல்லணும்

சொன்னவன் எவனும் வரல...

சங்கு சுட்டாலும் வெண்மைதான் 🙌"

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைவதாக.

அரசியலை பெருத்தவரை விஜய் ஒரு தற்குறியாகும், சினிமா போல் எழுதிக்கொடுத்தை ஸ்டைல் ஆக வசிப்பது தான் அரசியல் என நினைக்கின்றார். அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டமாகும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் கவனமாக வைக்க வேண்டும், அல்லாவிடில் அவை எதிரிக்கு சாதகமா அமைந்து விடும். விஜய்யின் கட்சிக்கு ஆகக்குறைத்தது சீமானின் கட்சி போல் ஒரு உட்கட்டமைப்பு இருப்பது போல் தெரியவில்லை, ஊடகங்களால் அவர் பெருமி ஊதப்பட்டுள்ளார் (media hype).

என்னை பொறுத்தவரை, விஜய் என்பவர் அரசியலுக்கு பிஜேபினால் கையில் வேலுடன் நேர்ந்து அனுப்பப்பட்ட கிடாயாகும், இந்த இடத்தில் ரஜனி தப்பி விடாடார்.

  • கருத்துக்கள உறவுகள்

தவெக வின் யாழ்கள பொதுச்செயலாளரைக் காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சீமான் ஒழிக

சீமான் சாகனும்

சீமானை வர சொல்லுங்க

சீமான குத்தி கொல்லணும்

சொன்னவன் எவனும் வரல...

சங்கு சுட்டாலும் வெண்மைதான் 🙌

large.IMG_6229.jpeg

இப்படி மரணவீட்டில் சுய தம்பட்டம் அடிக்கும் பிண அரசியலை இதில் சீமான் கூட செய்யவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் செய்கிறார்கள்….

இதுக்கு பெயர்தான் எச்ச….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புலவர் said:

தவெக வின் யாழ்கள பொதுச்செயலாளரைக் காணவில்லை.

நேற்று வரை என்னை திமுக சொம்பு, 200 ரூபாய் உபி என சொன்னீர்களே?

உங்களை போல் நான் எந்த கட்சிக்கும் நேர்ந்து விட்ட குதிரை அல்ல - த வெ க ஆதரவாளனும் இல்லை.

திமுக. அதிமுக, பாஜக வுக்கு மாற்றாக விஜை முன்வைத்த கொள்கைகள் சிறப்பானவை என்பதால் அவரின் அரசியல் வருகையை ஆதரித்தேன், with reservations.

அதே போல் நிலவரம் கலவரம் ஆகியதும் விஜையை போல் பனையூரில் போய் ஒழிந்துகொள்ளும் கோழையும் நானல்ல.

சீமானின் கருத்து கூலிப்படையை பலவருடமாக யாழில் பல திரிகளில் தனி ஆளாக நின்று ஓட ஓட விரட்டிய எனக்கு இதை இட்டு ஒழிய வேண்டிய அவசியம் இல்லை.

நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my beef.

  • கருத்துக்கள உறவுகள்

https://x.com/sahay_victory/status/1972263856354529408?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

டிஸ்கி

செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா?

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

18 minutes ago, goshan_che said:

நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my

இந்தத்த் தவறான எதிர்வுகூறலை தவிர்த்திருக்கலாமே,செய்தியையும் போட்டு விட்டு சீமான் மீது சேறடிப்பது மிகவும் வன்மமான செயல்.இப்படித்தான் அவர்பெட்டி வாங்கி விட்டார்என்று ஆதாரம் இல்லாமல் எழுதும் பொழுதும் ஒன்றுக்குப் பலமுறையோசிக்க வேண்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜியாருக்கு கூடாத கூட்டமா?அவர்கூட்டத்தில் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.அவருடைய இரசிகர்கள் அவருடைய படங்களில்பாடல்களில்உள்ள நல்ல புரட்சிகரகருத்துக்களால் உள்வாங்கப்பட்ட இரசிகர்கள்.அவருடைய வெற்றிப்படமான உலகம்சுற்றும் வாலிபனை திரையிட விடாது தடுப்பதற்கு எத்தனை முயற்சிகள் எடுத்தார்கள்.அப்படிப்பட்ட திமுகவின் சதிகளை முறியடித்து தான் இறக்கும்வரை திமுகவை கூப்பில் இருத்திய எம்ஜியார் உண்மையில் சாணக்கியன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு அஞ்சலி.. விஜய் கரூர் பிரசாரத்தில் 40 பேர் பலியான சோகம்.. இலங்கை தமிழ் அரசுக்கட்சி வேதனை

srilanka5-1759065492.jpg

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், நாடாளுமன்றம் குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் நேற்று இரவு நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், பாராளுமன்ற எம்.பியும், பாராளுமன்ற குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது.

எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கடியும், வேதனையும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.

மிகக்குறிப்பாக, புதுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், நண்பர் விஜய் அவர்களினது அரசியல் பயணம், துயரமும் - வேதனையும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்.

இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்" என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com/news/srilanka/heartfelt-condolences-40-lives-lost-at-vijay-s-karur-rally-sri-lankan-tamil-party-mourns-victims-739109.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நேற்று வரை என்னை திமுக சொம்பு, 200 ரூபாய் உபி என சொன்னீர்களே?

உங்களை போல் நான் எந்த கட்சிக்கும் நேர்ந்து விட்ட குதிரை அல்ல - த வெ க ஆதரவாளனும் இல்லை.

திமுக. அதிமுக, பாஜக வுக்கு மாற்றாக விஜை முன்வைத்த கொள்கைகள் சிறப்பானவை என்பதால் அவரின் அரசியல் வருகையை ஆதரித்தேன், with reservations.

அதே போல் நிலவரம் கலவரம் ஆகியதும் விஜையை போல் பனையூரில் போய் ஒழிந்துகொள்ளும் கோழையும் நானல்ல.

சீமானின் கருத்து கூலிப்படையை பலவருடமாக யாழில் பல திரிகளில் தனி ஆளாக நின்று ஓட ஓட விரட்டிய எனக்கு இதை இட்டு ஒழிய வேண்டிய அவசியம் இல்லை.

நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my beef.

15 minutes ago, புலவர் said:

https://x.com/sahay_victory/status/1972263856354529408?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

டிஸ்கி

செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா?

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

இந்தத்த் தவறான எதிர்வுகூறலை தவிர்த்திருக்கலாமே,செய்தியையும் போட்டு விட்டு சீமான் மீது சேறடிப்பது மிகவும் வன்மமான செயல்.இப்படித்தான் அவர்பெட்டி வாங்கி விட்டார்என்று ஆதாரம் இல்லாமல் எழுதும் பொழுதும் ஒன்றுக்குப் பலமுறையோசிக்க வேண்டும்.

இதில் நான் என்ன அரசியல் பரப்புரை அல்லது எனக்கு பிடித்த தலைவரை தூக்கி பிடித்து கருத்து எழுதினேன்.

எந்தளவுக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்தேனோ, அதே அளவுக்கு சீமான் என்ன செய்ய கூடும் என்ற என் விமர்சனபார்வையையும் முன்வைத்தேன்.

இந்த திரியில் நீங்களும், நானும் இன்னும் பலரும் அரசியல் பேசினோம். அது தவறில்லை. இது ஒரு சோக செய்தி எனிலும் அரசியல் சார்ந்த திரிதான்.

ஆனால் இந்த திரியில், சீமானியர்கள் மட்டும்தான் இதை வைத்து சீமானுக்கு பஜனை பாடினீர்கள்.

நீங்கள் மட்டும் இல்லை, இன்னும் இருவரும்.

வேறு எவரும் - செத்தவீட்டில் அழும் என் அண்ணணை பாருங்கடா, தங்கம்டா என்ற வகையில் எழுதவில்லை.

இதைத்தான் கேவலம் என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் விஜை வெளியில் வரவில்லை.கோழைத்தனமாக வீட்டில் இருந்து மனதிற்குள் வேதனைப்பட்டு அரசியலைத த்தொடர்வதா இல்லையா என்று குழம்பக்கூடாது.தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.அடுத்தது கூட்டத்தில் அவர்சுயமாகப்பேசம் பொழுது தெளிவாகப்பேசுகிறார்.ஆனால்தரவுகள் அவரிடம் இல்லை.சில விடயங்களுக்கு குறிப்புக்களைப்பார்த்துப்பேசம்போது சிறுபிள்ளைகள் போல எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்.அப்படிப்படிக்கும்பொழுதும் பிழைகளுடன் பேசுகிறார்.சிலவேளை எழுதியவர் தவறு விட்டிருந்தாலும் அதைச் சரிசெய்யும் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

சீமான் சபரிசனை சந்தித்தது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. ஜூனியர் விகடன் எழுதியுள்ளது.

அதை எதிர்த்து சீமான் வழக்கு போடவில்லை. ஏன் என கேட்டால் நீங்கள் நேரம் இல்லை என சப்பை கட்டு கட்டுகிறீர்கள்.

பொதுவெளியில் வைக்கபட்ட குற்றசாட்டு, அது ஆதாரம் அற்ற கருத்து அல்ல.

3 minutes ago, புலவர் said:

இதுவரைக்கும் விஜை வெளியில் வரவில்லை.கோழைத்தனமாக வீட்டில் இருந்து மனதிற்குள் வேதனைப்பட்டு அரசியலைத த்தொடர்வதா இல்லையா என்று குழம்பக்கூடாது.தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.அடுத்தது கூட்டத்தில் அவர்சுயமாகப்பேசம் பொழுது தெளிவாகப்பேசுகிறார்.ஆனால்தரவுகள் அவரிடம் இல்லை.சில விடயங்களுக்கு குறிப்புக்களைப்பார்த்துப்பேசம்போது சிறுபிள்ளைகள் போல எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்.அப்படிப்படிக்கும்பொழுதும் பிழைகளுடன் பேசுகிறார்.சிலவேளை எழுதியவர் தவறு விட்டிருந்தாலும் அதைச் சரிசெய்யும் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை எல்லாத்தையும் விட அரசியலுக்கு நெஞ்சுரம் வேண்டும்.

இது அனைவருக்கும் அமைவதில்லை.

விஜை மிக மென்மையானவராக தெரிகிறார்.

அரசியலில் நல்ல மனது அல்லது கெட்ட மனது எது இருந்தாலும் வெல்லலாம், ஆனால் கெட்டவன் போன்ற மன உறுதி இல்லாமல் வெல்ல முடியாது.

அதேபோல் கொஞ்சம் சமயோசிதமும் வேண்டும். இப்படி போய் பொறியில் சிக்கும் ஒருவர் நாளை முதல்வர் ஆனால், அமித் ஷாவும் நட்டாவும் கூடி கும்மி அடித்து விடுவார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சீமான் சபரிசனை சந்தித்தது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. ஜூனியர் விகடன் எழுதியுள்ளது.

ஜூனியர்விகடன் கிசு கிசு செய்தியாக எழுதியிருக்கிறது.எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை.திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறது.அரசியல்விமர்சகர்களும் யுரியூப்பர்களும் அதற்கு மெருகூட்டி பரப்புவார்கள் என்பது அதற்குத்தெரியும்.அது பக்கச்சார்பற்ற ஊடகம் என்று எப்படிச் சொல்வீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

555530845_122181354050506605_55178322831

  • கருத்துக்கள உறவுகள்

557589352_1285482040256508_5157925731630

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு. அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻
முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..
இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??
ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄
அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..
ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே தேவைப்படுகிறது 🙄🙄
பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄
இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻
உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻
... Dr. கு.. அரவிந்தன்....

Aravindhan.G.Dr ·

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, புலவர் said:

ஜூனியர்விகடன் கிசு கிசு செய்தியாக எழுதியிருக்கிறது.எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை.திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறது.அரசியல்விமர்சகர்களும் யுரியூப்பர்களும் அதற்கு மெருகூட்டி பரப்புவார்கள் என்பது அதற்குத்தெரியும்.அது பக்கச்சார்பற்ற ஊடகம் என்று எப்படிச் சொல்வீர்கள்?

கிசு கிசு வோ…பிசு…பிசு வோ…

ஜூனியர் விகடன் புதுரூட்டில் நாதக - சீமான் சபரீசன் சந்திப்பு என தலைபிட்டு மிஸ்டர் கழுகு கட்டுரை வரைந்துள்ளது.

ஆகவே சீமான் பக்கம் உண்மை இருந்தால் அவர் உடனடியாக வழக்கு போட்டிருக்க வேண்டும்.

யாழ் உட்பட அனைத்து ஊடகமும் ஏதோ ஒரு அஜெண்டாவில் இயங்குவனதான். நான் எங்கும் ஜூவி நடுநிலை ஊடகம் என சொல்லவில்லை.

ஆனால் சீமானுக்கு ஆதரவான பலதை, பல ஆண்டுகளாகவே விகடன் வெளியிடுவது உண்மை. ஆகவே அவர்கள் இப்படி பொய்யாக எழுத நியாயமில்லை.

இந்த செய்தி பொய் எனில் அது சீமானை போலவே திமுக, சபரீசனுக்கும் அவதூறுதான்.

ஆகவே நீங்கள் வழமையாக பாடும் விகடன்- திமுக கொத்தடிமை என்ற கோரஸும் இங்கே எடுபடாது.

சபரீசன் கூட கமுக்கமாக இருப்பது - இருவருக்கும் ஜூவி செய்தியை சவாலுக்கு உட்படுத்த திராணி இல்லை என்றே காட்டுகிறது.

இன்னுமொரு விடயம் - பத்திரிகைகள் சில சமயம் தமது செய்தி மூலத்தை பாதுகாக்க ஆதாரத்தை வெளியிடாது. ஆனால் வழக்கு போட்டால் ஆதாரத்தை தகுந்த பாதுகாப்போடு கோர்ட்டில் சமர்பிப்பார்கள்.

இது சீமானுக்கும், சபரிக்கும் தெரியும்.

ஆகவேதான் கள்ள மெளனம்.

1 hour ago, தமிழ் சிறி said:

555530845_122181354050506605_55178322831

விஜையை விட ஆளுனர் அழகாக அரசியல் செய்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

557589352_1285482040256508_5157925731630

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு. அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻
முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..
இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??
ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄
அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..
ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே தேவைப்படுகிறது 🙄🙄
பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄
இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻
உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻
... Dr. கு.. அரவிந்தன்....

Aravindhan.G.Dr ·

ஒரு மருத்துவர் இவ்வளவு தத்தியாக இருப்பது கவலையான விடயம்.

தன்னெழுச்சியாக மக்கள் கூடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு.

மிக சுலபமாக இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் என அவமானப்படுத்தி கடந்து போகிறார்.

விஜை முன்பு தமிழ் நாட்டில் சூட்டிங் போகவில்லையா?

போராடங்களில்…

விழாக்களில் கலந்து கொள்ளவில்லையா?

அப்போ வராத கூட்டம் இப்போ வர என்ன காரணம்?

இது ஒரு அரசியல் திருப்புமுனை (இனியும் இப்படி இருக்கும் என சொல்ல முடியாது).

அரசியல் கட்சி ஒன்றுக்காக மக்கள் கூடுவது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. Freedom of assembly.

அதை சரிவர, பாதுகாப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது அரசினதும், ஏற்பாட்டாளரதும் கடமை.

இங்கே கடமை தவறியது அரசும், தவெகவுமே தவிர மக்கள் அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.