Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 Sep, 2025 | 03:01 PM

image

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் செவ்வாய்க்கிழமை (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி  அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்,    நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன்போது உரையாற்றிய அமைச்சர் கூறியவை வருமாறு,

பொருளாதார ரீதியில் இலங்கை வேகமாக முன்னேறி வருகின்றது என தரவுகள் கூறுகின்றன. அதேபோல இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட்டு வருகின்றது.  இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலகுவில் முன்னோக்கி சென்று விடலாம். இதனையே எமது ஜனாதிபதி தோழர் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.

எனவே,  இந்த  இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது.

 பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்கா சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர். 

இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். இது பற்றியே ரணிலும், மஹிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர். 

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.

எனவே, இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்  என்றார்.


ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் செவ்வாய்க்கிழமை (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

மட்டுவிலில் ஆரம்பிக்கப் போகும் பொருளாதார மத்திய நிலையத்தைப் பற்றி யாருக்காவது ஏதாவது விபரங்கள் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பணம்

adminSeptember 30, 2025

2dcf6a61-2049-4b93-9f2f-5b1f5dfd07d6.jpe

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

9f7f7c24-86e0-4a1b-a3d0-7a6f1a22f959.jpea94d80c0-87f2-4888-903d-e66e28a7331e-800

https://globaltamilnews.net/2025/220984/

  • கருத்துக்கள உறவுகள்

மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂

தோழர்கள் நடைமுறைக்கு ஒவ்வாத இடதுசாரிக்கொள்கைகளை கைவிட்டு கனகலாம் ஆகிவிட்டது ( 2015 இருந்து ), அப்படி செய்தபடியால் தான் அவர்களை மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋.

https://ads.ciaboc.lk/

Edited by zuma
மேலதிக தகவல் இனைக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தோழர்கள் நடைமுறைக்கு ஒவ்வாத இடதுசாரிக்கொள்கைகளை கைவிட்டு கனகலாம் ஆகிவிட்டது ( 2015 இருந்து ), அப்படி செய்தபடியால் தான் அவர்களை மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋.

https://ads.ciaboc.lk/

உண்மை தான். தீவிர தமிழ் தேசியர்கள் போல் நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளை பிடிவாதமாக கட்டி பிடித்து அழிய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2025 at 20:45, zuma said:

அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋.

https://ads.ciaboc.lk/

ஏன் சொத்துக்களின் பிரகடனத்தை பார்க்க வேணும்..தோழர்களின் வண்டியை(தொந்தியை)உடல் பருமனின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதே தெரிகின்றது தோழர்களிடம் சொத்துக்கள் குவிகின்றது என்று....🤣

On 1/10/2025 at 20:45, zuma said:

, அப்படி செய்தபடியால் தான் அவர்களை மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋.

https://ads.ciaboc.lk/

சிறிலங்கா தீவு மக்கள் இவையை மட்டுமா அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள்.சிறிமா கோஸ்டி,ஜெஆர் கோஸ்டி,சந்திரிக்காகோஸ்டி ,மகிந்தா கோஸ்டி என எல்லோரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் ...இப்பொழுது அனுரா கோஸ்டி யை ஏற்றியிருக்கினம் ...தீவு மக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

சிறிலங்கா தீவு மக்கள் இவையை மட்டுமா அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள்.சிறிமா கோஸ்டி,ஜெஆர் கோஸ்டி,சந்திரிக்காகோஸ்டி ,மகிந்தா கோஸ்டி என எல்லோரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் ...இப்பொழுது அனுரா கோஸ்டி யை ஏற்றியிருக்கினம் ...தீவு மக்கள்...

ஸ்ரீ லங்கா தீவு மக்கள் பல கோஸ்டிகளை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள் தான்.

புலம்பெயர் ஈழதமிழர்கள் கூவி கூவி அதிகம் விளம்பரம் செய்வது தற்போதைய இந்த கோஸ்டிக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்ரீ லங்கா தீவு மக்கள் பல கோஸ்டிகளை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள் தான்.

புலம்பெயர் ஈழதமிழர்கள் கூவி கூவி அதிகம் விளம்பரம் செய்வது தற்போதைய இந்த கோஸ்டிக்கு தான்.

பேரதானிய,மொரட்டுவ,கொழும்பு பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது அடிவாங்கி சிவப்பு சிந்தனையுடன் ஒடிவந்த பலர் இப்ப கூவி கொண்டு திரியினம் ... உவையல் யார் அரியனையில் ஏறினாலும் தொப்பி மாற்றி போடுவினம் ...கேட்டா தீவாராம் தாங்கள் என புலம்பல் வேற...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.