Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.

அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.

இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும். வீடியோ:


‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய் | Vijay releases video regarding Karur Stampede: Challenges CM Stalin - hindutamil.in

தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் - என்ன நடந்தது?

'கரூரில் மட்டும் ஏன் இப்படி? உண்மை வெளியே வரும்' -  விஜய் பேசியது என்ன?

பட மூலாதாரம், tvk

30 செப்டெம்பர் 2025, 10:38 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்' என கரூர் நெரிசல் சம்பவம் வீடியோ மூலம் விஜய் பேசியுள்ளார்.

சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பில் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார்.

இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார்.

"ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார்.

இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்'

"எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார்.

தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார்.

கரூர் பரப்புரை, கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

அரசுத் தரப்பில் கூறுவது என்ன?

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

  • தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா?

''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.''

  • கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை?

''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.''

விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள்

பட மூலாதாரம், Getty Images

  • கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா?

''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.''

  • பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா?

''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.''

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக,

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்

  • காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா?

''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.''

  • பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா?

''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.''

இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர்.

என்ன நடந்தது?

விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள்

பட மூலாதாரம், Getty Images

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cr4q19zzv0lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை.

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.

விஜய்

விஜய்

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார்.

'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார்.

உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா?

கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை.

பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள்.

பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது.

அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்.

நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

TVK Vijay

TVK Vijay

விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை.

கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது.

அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது.

12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது.

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்?

மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே.

திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா?

'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங்.

திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்?

தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்?

கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார்.

அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்!

TVK Vijay speech: 'மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!' - கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: 'Stand With the People, Vijay!' – Karur Deaths Raise Tough Questions - Vikatan

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

விகடனின் இந்த கட்டுரையை முன்பு வாசித்தேன். ஐபில் வெற்றிவிழாவின் போது இடம்பெற்ற சனநெரிசல் சாவும் நினைவுகூறத்தக்கது.

இந்தியா போன்ற சனத்தொகை நிறைந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகம்.

விஜய் அவர்கட்கு தனது பகுதியால் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லை என்பது ஒருபுறம் போக அல்லது அவரது வழக்கறிஞர்கள் அறிவுரையாகவும் அமையலாம்; இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன. நேரடி ஒன்றுகூடல்களுக்கு பதிலாக இதர மாறீடுகள் பயன்படுத்தப்படுவது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1CgNcrNBrr/?mibextid=wwXIfrவிஜயின் முதல் பிரச்சாரக்கூட்டம் பற்றி எழுதும் போதே கூட்டத்தை பார்த்து பயமாக இருக்கிறது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்று எழுதியிருந்தேன். விஜய்க்கு கூடுகிற கூட்டம், மற்றும் கட்டுப்பாடற்ற அவரது ரசிகர்கள் செய்யும் காரியங்களை பார்த்த பலரும், இது போன்ற அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். அதே போலவே கரூர் சம்பவம் மனதை உலுக்கி விட்டது. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சம்பவமாக பதிந்து விட்டது.

விஜய்க்கு கூடும் கூட்டம் தான் அவருடைய அரசியல் முதலீடு. கட்டுப்பாடில்லாத கூட்டம் கூடுவதை விஜயும் விரும்புகிறார். அதனால் தான் எந்த இடத்திலும் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் விரும்புவதில்லை. ரசிகர்கள், தொண்டர்கள் துன்பப்படுவதையோ, பொதுமக்கள் துன்பப்படுவதையோ பற்றி விஜய் கவலைப்படுவதே இல்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்சியில் எந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அருஜுனா, ஜான் சொல்வதை தான் அவர் நம்ப போகிறார். அப்படியே தெரிந்தாலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, ரசிகர்களை ஒழுங்குபடுத்த விஜய் விரும்பவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

ரசிகர்களும் நாம் இப்படி நடந்து கொள்வதை தான் விஜயும் விரும்புகிறார் என்று நினைத்து மேலும் மேலும் அடாவடியாக நடந்து கொள்கின்றனர்.

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கலெக்ஷன் ரிப்போர்ட் சொல்வதை போல், களத்தில் என்ன நடந்தாலும் மாஸ் காட்டிட்டோம் என்பது மட்டும் தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் பிரச்சாரமாக இருக்கிறது.

விஜய் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை தன்னுடைய அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவாக காட்டிக்கொள்வதற்கு தான் விஜய் முயற்சி செய்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் பேச வேண்டிய இடத்தில மட்டும் வேனில் இருந்து வெளியே வருகிறார்.

உதாரணமாக கரூரையே எடுத்துக் கொண்டால் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசவேண்டிய இடத்திற்கு வர வேண்டும். பைபாஸிலேயே மிகப்பெரிய கூட்டம் நிற்கிறது. அங்கேயே அவர் வேனில் இருந்து வெளியே வந்து கை காட்டியிருந்தால் விஜயை பார்த்த சந்தோஷத்தில் பாதி கூட்டம் கலந்திருக்கும். ஆனால் விஜய் அதை செய்வதில்லை. திருச்சியிலும் அதுதான் நடந்தது. வேனிற்குள்ளேயே அமர்ந்து கொள்வதால் பொது மக்களால், ரசிகர்களால் அவரை பார்க்க முடிவதில்லை. இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவர் பேசற இடத்துல அவரை பார்த்துட்டு போயிடுவோம் என்று மொத்த கூட்டமும் அவர் வாகனத்தின் பின்னாலேயே வருகிறது .

நாமக்கல்லில் இருந்து அவர் பின்னால் வந்த கூட்டம், பைபாஸ் சாலையில் நின்றிருந்த கூட்டம், அவர் பேசும் இடத்தில ஏற்கனவே காத்திருக்கும் பெருங்கூட்டம் என அனைத்தும் சேர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமாக மாறுகிறது. எல்லா கூட்டமும் ஒரே இடத்தில கூடிய பிறகு விஜய் வெளியே வருகிறார்.

இதைத்தான் விஜய் விரும்புகிறார். குறைந்த பட்சம் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசும் இடம் வரை வேனில் நின்று கொண்டு கையசைத்து வந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. ஆனால் அதை செய்ய விஜய்க்கு மனமில்லை. விஜயுடைய ஒரே டார்கெட் கூட்டம். அதனால் தான் தாமதமாக வருகிறார்.

காவல்துறை என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலை தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் திருச்சியில் தடையை மீறி ரோட் ஷோ நடத்தினார். சாலையில் இறங்கிய பிறகு யாராலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது விஜய்க்கும் தெரியும். ஒருவேளை காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் விஜய் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வார். அந்தளவு சுயநலமாக சிந்திக்கிறார்.

அதே போல் தன் ரசிகர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விஜய் தயாராக இல்லை. ஏனென்றால் அவரது ரசிகர்கள் செய்யும் முட்டாள்தனங்கள் கூட அவருக்கு விளம்பரமாக மாறும் காலமிது. இப்படிப்பட்ட ஒரு கூட்ட

த்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை விஜய் பெருமையாக நினைக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் நான் பார்த்த வரையில் ஒரு விஜய் ரசிகர் கூட இறந்து போன 40 உயிர்களுக்காக கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் விஜய்க்கு கெட்ட பெயர் வந்து விடுமா? கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமா? விஜயுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடுமா என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுயநலமான தலைவனுக்கு சுயநலமான தொண்டர்கள்.

இதோடு அரசியலை விட்டு ஒதுக்கினால் தமிழ்நாடு தப்பிக்கும்.ஏனென்றால் விஜயால் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது.

https://www.facebook.com/share/v/17CgqSJ4mm/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன

நீங்கள் சொல்வது சரியானது தான். அவர்களுக்கு குழந்தைகளையும் இழுத்து கொண்டு நேரில் சென்று உணவு தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து விஜய்யை பார்க்க வேண்டுமாம் 🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான குற்றங்களை செய்தார் என சொல்கிறார். ‘ஆட்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தடியடி நடத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ இதெல்லாம் அரசியல் நேர்மையற்ற குற்றச்சாட்டு. இது கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்தான்.

ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல். அவருக்கே இது நல்லதல்ல.

விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும்.

பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

“விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து | he does not think on his own Thirumavalavan opinion vijay karur tragedy video - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் அவர்கள் மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

என் நெஞ்சில் குடியிருக்கும்...

தூ.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

என் நெஞ்சில் குடியிருக்கும்...

தூ.....

இதுக்கேன் எச்சியை வீணாக்குகிறீர்கள் அண்ணை😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

சீமான் அமைதியாக பேசுகின்றார்.உண்மை நிலை பற்றி பேசுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் அமைதியாக பேசுகின்றார்.உண்மை நிலை பற்றி பேசுகின்றார்.

சீமான் பற்றி விளங்க நினைப்பவன் யாழில் எழுதிய முதல் பாசிடிவ் கருத்து இது என நினைக்கிறேன் 🤣.

யாழின் சீமானியர்களுக்கு இது ஒரு #ஸ்வீட் எடு, #கொண்டாடு தருணம்🤣.

பிகு

வி. நி யே போற்றும் அளவுக்கு சபரீசன் பெட்டி சீமானை மாற்றி உள்ளது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.