Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்!

Published On: 2 Oct 2025, 7:33 PM

| By Pandeeswari Gurusamy

Social activists issue joint statement Karur issue

கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர்.

கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம்.

விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.

கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.

தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.

விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்

இவர்களில் பலரை திமுக சார்பு கலை, இலக்கிய மேடைகளில் சர்வசாதாரணமாக அண்மைய வருடங்களில் காண கிடைத்தது என்பதை கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதுவும் இந்து ராம் இப்போதெல்லாம் ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார்😂.

21 minutes ago, ரசோதரன் said:

கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன

மெத்த படித்த கனவான்களே, அப்படியாயின் அந்த முன்னோட்டத்தை கண்டும், அழிவை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பேணும் தன் பொறுப்பில் தவறியுள்ளது என்பதுதானே பொருள்?

இந்த தவறுக்காக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்😂.

24 minutes ago, ரசோதரன் said:

வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில்

அப்பட்டமான பொய்.

விஜைக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கவில்லை.

வேலுசாமிபுரத்தில் நடந்தது பொதுக்கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இவர்களில் பலரை திமுக சார்பு கலை, இலக்கிய மேடைகளில் சர்வசாதாரணமாக அண்மைய வருடங்களில் காண கிடைத்தது என்பதை கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதுவும் இந்து ராம் இப்போதெல்லாம் ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார்😂.

எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான்.

விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும்.

இதில் ஒரு அரசாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறியமையும் உள்ளடங்க வேண்டுமா இல்லையா அறிஞர்களே?

1 minute ago, ரசோதரன் said:

எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான்.

விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.

சந்துரு திமுக சார்பானவர் என்றே அறியபடுகிறார் என நம்புகிறேன். அடுத்த கலைமாமணி, தமிழ் நாடு அரசு விருதுகள் வரும்போது ஏனையோர் சாயமும் வெளிக்கும்.

இவர்கள் முன்வைத்த விஜை மீதான விமர்சனத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரே அடியாக மொத்த பழியையும் விஜை மீது போடுவதும். ஏதோ தாமே விசாரணை அதிகாரிகள் போல் சதியே நடக்கவில்லை என சாதிப்பதும், இவர்கள் யார் சொல்லி அறிக்கை விடுகிறார்கள் என சந்தேகிக்க வைக்கிறது.

சதி இல்லவே இல்லை என ஆகட்டும்.

இதில் யார் ஒருவர் அரசின் கூட்டு பொறுப்பை (joint liability), ஆளும் கட்சியாக திமுவின் அலட்சியத்தை (criminal negligence) பேசாமல் விடுகிறார்களோ அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகிறது.

இந்த அறிக்கையில் ஒரு வரி கூட அரசை கண்டித்து இல்லை.

பிகு

விஜை இந்த அழிவுக்கு பின்னர் நடந்து கொள்ளும் முறையால் - மக்கள் அவரை அகற்றியே ஆவர்கள் என நான் எண்ணுகிறேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

விஜை இந்த அழிவுக்கு பின்னர் நடந்து கொள்ளும் முறையால் - மக்கள் அவரை அகற்றியே ஆவர்கள் என நான் எண்ணுகிறேன்.

மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை.

இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை.

'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார்.

ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன்.

சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார்.

சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும்.

எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை.

அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது.

இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும்.

இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.

எந்த உண்மை?

கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா?

அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்…

அந்த உண்மைதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

எந்த உண்மை?

கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா?

அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்…

அந்த உண்மைதான் என்ன?

பிரமாண்டமான சினிமா வெளிவரும் வரும்

வரணும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே

4 hours ago, goshan_che said:

சந்துரு திமுக சார்பானவர் என்றே அறியபடுகிறார் என நம்புகிறேன். அடுத்த கலைமாமணி, தமிழ் நாடு அரசு விருதுகள் வரும்போது ஏனையோர் சாயமும் வெளிக்கும்.

4 hours ago, goshan_che said:

இதில் யார் ஒருவர் அரசின் கூட்டு பொறுப்பை (joint liability), ஆளும் கட்சியாக திமுவின் அலட்சியத்தை (criminal negligence) பேசாமல் விடுகிறார்களோ அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகிறது.

ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர்

அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு

இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் .

( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. )

உதாரணம்

1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம்.

2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும்

அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை

இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர்

பின்னர் கம்யூனிஸ்ட்

ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்

என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால்

எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாத்தியார் said:

ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்

என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால்

எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்

நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம்.

நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன்.

விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார்.

ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை

தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார்.

ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள்

அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய

திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள்

இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா?

என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை

தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி.

ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி.

அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும்.

ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள்

எதற்காக

ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா?

தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ?

அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ?

அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ?

இப்படிப் பல கேள்விகள் உள்ளது

இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி

எப்போதும் எதுவும் நடக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எந்த உண்மை?

கரூரில் என்ன நடந்தது என்ற உண்மையா?

அந்த எல்லோரில் நான் இல்லை. நீங்கள் இருந்தால்…

அந்த உண்மைதான் என்ன?

7 minutes ago, வாத்தியார் said:

விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார்.

ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை

தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார்.

ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள்

அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய

திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள்

இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா?

என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை

தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி.

ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி.

அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும்.

ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள்

எதற்காக

ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா?

தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ?

அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ?

அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ?

இப்படிப் பல கேள்விகள் உள்ளது

இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி

எப்போதும் எதுவும் நடக்கலாம்

இந்திய அரசியலை மாபியாவுடன் ஒப்பிட்டது மிகப்பொருத்தமானது.

இது தனியே கூட்டம் கூடியது, தள்ளுமுள்ளு, சாவு என்பதாக எனக்கு படவில்லை.

விஜையின் நிகழ்வுக்கு பின்னான நடத்தை அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், நாமும் இந்த சதிக்கு பலியாகி அவர் மீது மட்டும் கோவத்தை காட்டி விட்டு அடங்கி விட கூடாது என நான் நினைக்கிறேன்.

விஜைக்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது, மாறாது என கூவினாலும், திமுக ரொம்பவே கிலி கொண்டது என்பதே உண்மை.

சீமானை பெயரை கூட சொல்லாமல் சிவாஜி கிருஸ்ணமூர்தியை வைத்து லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிய அதே திமுக அத்தனை அமைச்சர், முதல்வர், துணை முதல்வரையும் இறக்கி களமாடியது. தேர்தலுக்கு 7 மாதம் முன்பே.

தமது சுயநலனுக்காக பல இலட்சம் ஈழதமிழர் கொலையை உண்ணாவிரத நாடகம் ஆடி கடந்து போன கட்சி, குடும்பம் இது, அதே சுயநலனுக்காக ஏன் இதை செய்திருக்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.

சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்?

சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை.

ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள்

நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, வாத்தியார் said:

தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி.

ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது.
இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை.
நிலைமை இப்படியிருக்க....
சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா?

சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.

ஹேமமாலினி ஏற்கனவே சொல்லிவிட்டார். பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை.

கும்பமேளாவில் இறந்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்லும் கூட்டம் அது.............🫣.

என்ன நடந்தது என்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் முன்னைய ஆதரவு - எதிர்ப்பு நிலையை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது என்ன சொல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதில் பல பார்வைகள் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை.

😂

சீமான் கேட்டுள்ளார் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது. அங்கே பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை. விஜய்யை எப்படியாவது பாஜக அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான் இப்போது முயற்சிக்கின்றார்கள் என்று சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.

என்னது? வருகிறார்களா? வந்து ஆராய்ந்து, பேட்டியும் கொடுத்து விட்டு போய் இரெண்டு நாள் ஆகிறது.

வாட் ப்ரோ…இட்ஸ் வெரி ராங் ப்ரோ…

உங்களின் கருத்தில் இருந்த பொருளுக்கான பதிலை ரசோ அண்ணா தந்துள்ளார்.

10 hours ago, ரசோதரன் said:

பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை.

நாலு பேர் சீரியசாக பேசி கொண்டிருக்கும் நடுவீட்டில் யாராவது அதை தூக்கி கொண்டு வந்து போடுவார்களா, இல்லைத்தானே😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இதில் ஒரு அரசாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறியமையும் உள்ளடங்க வேண்டுமா இல்லையா அறிஞர்களே?

மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும்.

அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம்.

விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣.

ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை.

காரணம் கட்டுக்கடங்காத கூட்டம்.

அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல.

பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை.

ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே.

திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் நடந்த அவலமான நிகழ்வுக்கும், மரணங்களுக்கும் யார் பொறுப்பு???

நடிகர் விஜை,

தமிழக அரசு,

கூட்டம் கூடிய மக்கள்.

இந்த அனைவருமே பொறுப்பானவர்கள். குற்றம் இந்த அனைவரிலும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம்.

விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣.

இனி விஜய்க்கு அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் இடம் இல்லை. ஆகக் கூடியது காமெடியனாக வேண்டுமானால் நடிக்கலாம் தனது பணத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இனி விஜய்க்கு அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் இடம் இல்லை. ஆகக் கூடியது காமெடியனாக வேண்டுமானால் நடிக்கலாம் தனது பணத்தில்.

நான் மேலே சொன்னது ஜோக் அண்ணை.

விஜை வாழ்வில் ஏழரை, அஷ்டம, அஷ்டமாத்து எல்லாம் ஒண்டா வந்து கும்மி அடிப்பது மட்டும் இல்லாமல், குசினி வரை போய் குடும்பமே நடத்துவது பார்க்க புரிகிறது🤣.

பிகு

நான் கேட்ட சீமான் 2026 வாக்கு சதவீத பந்தயத்துக்கு ஒத்து கொண்டிருக்கலாம் என இப்ப தோணணுமே?🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிகு

நான் கேட்ட சீமான் 2026 வாக்கு சதவீத பந்தயத்துக்கு ஒத்து கொண்டிருக்கலாம் என இப்ப தோணணுமே?🤣

எனக்கு தெரியும் நீங்கள் மண் குதிரையை நம்பி பந்தயம் கட்டுகிறீர்கள் என்று. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.