Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது.

பயணிகள் சிரமம்

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது.

இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்! | Vadamaratchi East Push Broken Government Bus

அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான றஜீவன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

 இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎

@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan

உடனடியாக செயல்படவும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது உதவும் பகிருங்கள்

இலங்கை போக்குவரத்து சபை CTB

🔴திருகோணமலை 0262222201

பேருந்து நிலையங்கள்

யாழ்ப்பாணம் 0212222281

கிளிநொச்சி 0212283637

முகாமையாளர்கள்

யாழ்ப்பாணம் 0771058150 / 151

கிளிநொச்சி 0771058170 / 171

முல்லைத்தீவு 0771058190 / 191

வவுனியா 0771058160 / 161

மன்னார் 0771058140 / 141

இ.போ.ச - வட பிராந்தியம்

0212222877

பிரதம பிராந்திய முகாமையாளர்

Chef Regional Manager (CRM)

07715058100

பிராந்திய முகாமையாளர்கள்

Operation Manager 0771058101

சாலை

யாழ்ப்பாணம் (கோண்டாவில்) 0212222207

காரைநகர் 0212283637

பருத்தித்துறை 0212262188

முல்லைத்தீவு 0212290139

தற்போது நாட்டு சூழ் நிலையினை கருத்தில் கொண்டு பயணம் தொடர்பான தகவல்களுக்கு பொது போக்குவரத்து தொடர்பான தொடர்பு இலக்கங்களை உங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன நேரம் பஸ் இருக்கு, இல்லை என்பதை அறிய அடுத்தவரை call எடுத்து அடிக்கடி தொந்தரவு செய்யாமல் நீங்களே உரிய சேவை தரப்பிடம் கேட்டு கொள்ளுங்கள்.

தகவல் தொகுப்பு: த. கிருஷ்ணா

ஏனயவர்களுக்கும் உதவும் தகவல் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Tourism Directories (Bus Stands)

Bus Depot - Karainagar

0212251854

0212251854

Address

Karainagar (AB17) - Jaffna, Road, Karainagar, Jaffna, 40000, Sri Lanka

Central Bus Stand - Jaffna

0212222281

0212222281

Address

Hospital, Road, Jaffna Town, Jaffna, 40000, Sri Lanka

Bus Depot - Kondavil

0212222207

0212222207

Address

Palaly, Road, Kondavil, Jaffna, 40000, Sri Lanka

Central Bus Stand - Mullaitivu

0212290139

0212290139

info@tourismnorth.lk

Address

SLTB, Mullaitivu Depot, Mullaitivu town, Mullaitivu, 42000, Sri Lanka

Central Bus Stand - Mannar

0232222281

0232222281

info@tourismnorth.lk

Address

SLTB, Mannar Depot, Mannar town, Mannar, 41000, Sri Lanka

Central Bus Stand - Vavuniya

0242223481

0242223449

info@tourismnorth.lk

Address

Kandy, Road, Vavuniya town, Vavuniya, 43000, Sri Lanka

  • கருத்துக்கள உறவுகள்

தரமான பேரூந்து வண்டிகளை மட்டுமல்ல தரமான வண்டி ஓட்டிகளையும் தெரிவு செய்ய வேண்டும். தற்போது விமான ஓட்டிகளை பரிசோதனையின் பின்பு விமானப் பறப்புக்கு அனுமதிப்பது போல பேரூந்து வண்டி ஓட்டிகளையும் பரிசோதனையின் பின்புதான் ஓட்டவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎

குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛

உங்களுட்ட தட்டிவான் நிறய இருக்குத்தானே....அத எடுத்து ஓடுங்க சார் எண்டு சந்திரசேகர் சொன்னாலும் சொல்லுவார்.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan

உடனடியாக செயல்படவும்.

வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன குமாரசாமியும் அஞ்சோ பத்தோ குடுக்க தயாராக இருக்கின்றார் என ஒலிபெருக்கியில் அறிவிக்கவும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை

@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம்.
வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan

உடனடியாக செயல்படவும்.

அய்யோ பிரியன் சார்...இந்த மிகச்சிறிய பொறுப்பை எம் தலைமீது சுமத்தி ...எங்களை தரம் குறைத்து விட்டீர்கள் அய்யனே...

பள்ளிக்கூடங்களுக்கு கொடுத்த வண்டிகளே கராச்சில் கல்லில் ஏறி நிக்குது...இந்த அழகிலை ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

அய்யோ பிரியன் சார்...இந்த மிகச்சிறிய பொறுப்பை எம் தலைமீது சுமத்தி ...எங்களை தரம் குறைத்து விட்டீர்கள் அய்யனே...

105ebc0d15133c413e1455284e835bf3.gif

அல்வாயனிட்ட நிறைய விசயம் இருக்கு போல......கறந்துட வேண்டியதுதான்😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan

உடனடியாக செயல்படவும்.

வடமராட்சி கிழக்கு கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களின் பிறந்த பூமி. அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தள்ளித் திரிகின்றனர். முதலமைச்சர் கனவில் இருப்பவருக்கு தெரிவித்தால் உடனடியாக செயற்பட்டு புதிய பஸ்களைப் பெற்றுத் தருவார்😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வடமராட்சி கிழக்கு கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களின் பிறந்த பூமி. அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தள்ளித் திரிகின்றனர். முதலமைச்சர் கனவில் இருப்பவருக்கு தெரிவித்தால் உடனடியாக செயற்பட்டு புதிய பஸ்களைப் பெற்றுத் தருவார்😁

அவர் எப்பவோ பின் கதவாலே போயிட்டார் எண்டு சொன்னாங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.