Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

கொழும்பான் வெறும் கணக்காளர் மட்டுமல்ல, வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், வர்த்தக துறை பற்றிய சரியான புரிதல் உள்ளவர், அவருக்கே விளங்கவில்லை என்றால் எங்களின் நிலை?

இந்த விவாத திரி எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, ஒரு முன்மாதிரியான திரியாக அமைவதற்கான அனைத்து பண்புகளும் கொண்ட திரியாக உள்ளது, அதனால் சில விடயங்களில் உள்ள விளங்காத விடயங்களை அறிய முனைகிறேன்.

ஒருவரின் வியாபார தோல்வி எந்தளவிற்கு அவர்களுக்கு உளப்பாதிப்பினை உண்டாக்கும் என்பதினை ஓரளவு உணர்ந்த முறையில், தவறுகளை சுட்டிகாட்டி அதன் மூலம் எதிர்காலத்தில் மற்றவர்கள் இம்மாதிரியான இக்கட்டுக்குள் விழாமல் பேண இந்த திரி உதவும் என நம்புகிறேன்.

மேலே கோசன் தெளிவாக குறிப்பிட்டுள்ளர். இவர்களது நோக்கம் பிழையானது

  • Replies 179
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

🤣...................

சாட் ஜிபிடி இருக்கும் போது நமக்கென்ன வேலை.............😜

அமெரிக்காவில் இரண்டு வகையிலும் ஒரே வரியே: 6,543

ஆஸ்திரேலியாவில்........... அநியாயம்........ வீட்டில் சும்மா இருந்தால் தண்டப்பணம் அறவிடுகின்றார்கள் போல:

ஒருவர் வேலை செய்தால்: 19,588

இருவரும் வேலை செய்தால்: 10, 376

🫣

பிரித்தானிய நடைமுறையும் அவுஸ் போலவே.

இதன் பின்னால் பெண்ணுரிமை, தனிமனித உரிமை, வேலை செய்ய கூடிய அனைவரையும் வேலைக்கு அனுப்ப தூண்டுவது, இன்னும் பல வலுவான காரணங்கள் உள்ளன.

அனைவருக்கும் உழைக்கும் முதல் 12500 க்கு வரி இல்லை. இதில் 1200 ஐ மணமானவகள் marriage allowance என தமக்குள் பரிமாறி கொள்ளலாம்.

இருவரும் 12500 க்கு மேல் உழைத்தால். எந்த வரி விலக்கும் இல்லை.

ஆனால் அனைவருக்கும் கான்சர் சிகிச்சை வரை இலவசமாக அரசு தரும். இந்த வரிப்பணத்தை வைத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் நான் கேட்பது, எதை வைத்து மோசடி செய்ததாக இங்கே முடிவு எடுக்கப்படுகிறது?

எல்லாமே எடுகோள் அல்லது வேறு வியாபாரம் எப்படி முறிந்ததோ அப்படியே இதுவும் முறிந்து இருக்க வேண்டும் என்பதும் எடுகோள்.

அனால், வரும் தரவுகள் மாறாக இருக்குகிறது.

எல்லா செய்திகளும் சொல்வது மிக விரைவான விரிவாக்கம் , அது ஒரு போதும் advisors சொல்லாமல் செய்யப்பட்டு இருக்காது.

வாங்கிய கடன் விரிவாக்கத்துக்கும், தொடர்புபட்ட வியாபாரங்களை இயக்குவாதத்திற்க்கும். inter-company கடன்கள் சட்டப்பூரமானவை, அதுவும் ஒன்றுடன் ஒன்று வியாபர அடிப்படையில் தொடர்ப பட்டு இருந்தால்.

உற்பத்தி குறைந்து (இது வருமானத்தை குறைத்தது), வட்டி கூடி, வருமானமம் குறைய (இது எண்ணெய் மார்ஜின் குறைவதால்) குறைய, வியாபார செலவுகள் liquid assets இல் இருந்தே வரவேண்டும்

இந்த receivables securitisation பெரும்பாலும் அந்த நோக்கத்துக்கு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையாக இருந்து இருக்கும்.

( receivables securitisation - இப்போதைக்கு இதன் அடிப்படையான விளக்கம் - அவர்களின் கம்பனி விற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளரினால் சட்ட பூர்வமாக கொடுக்கப்படவேண்டிய பணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சட்ட பூர்வ ஆவணங்களை (இவற்றை invoice என்பது) விற்று பணம் பெற்றார்கள் என்ற சுருக்கமான விளக்கம் . அதில் தவறு இல்லை, அது கம்பனியின் பணம் தானே. இதில் வேறு சில விடயங்களும் உள்ளது, அதை பின்பு பார்க்கலாம். ஆனால், இதில் வேறு சில விடயங்களும் உள்ளது, அதை பின்பு பார்க்கலாம், குறிப்பாக அந்த விடயங்கள் நான் இந்த பதிவில் சொல்லுவதை மாற்றாது)

இருக்கும் காசை கொடுத்தால், கம்பனியை இதுவரை இயக்கி இருக்க முடியாது. ஏனெனில் 400 மில்லியன் மட்டும் Lindsey என்னை சுத்திகரிப்பு இயக்க தேவை.

எல்லாம் முடிந்து, வந்த Administrators (Teneo) மோசடி அல்லது மோசடி அம்சங்களை குற்றம் சுமத்துவார்கள் என்றால், அப்படி கட்டாயம் செய்ய வேண்டிய வழக்கில் அது தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

(இது எனது புரிதல். ஏனெனில், மோசடி, அல்லது மோசடி அம்சங்களுக்கு கொண்டு போய் வழக்கு தோற்கும் என்றால், இவர்கள் செய்ததை மீண்டும் வழக்காக கொண்டு வர முடியாது. ஏனெனில் , மோசாடி, மோசடி அம்சங்கள் ஒப்பிட்டளவில் உயர்தர நிரூபண சுமை கொண்டது. உயர்தர நிரூபண சுமைக்கு கொண்டு போய்விட்டு (அது தோற்கும் என்றால்) , மீண்டும் அதை விட குறைந்த நிரூபண சுமையுள்ள வழக்காக கொன்டுவர முடியாது. அதாவது, Teneo (administrator) க்கு மோசடி, அல்லது மோசடி அம்சங்களுக்கு சட்ட நிச்சயம் அற்ற தன்மை பெரிய அளவில் உள்ளது.)

அப்போது, எடுகோள்களையா அல்லது தரவுகளையா கருத்தில் எடுப்பது?

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நான் எழுதாத எதையும், நான் எழுதியதாக கற்பனை செய்ய வேண்டாம் 😂.

புரியும் படியாக எழுதத்தான் முடியவில்லை.

எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளவுமா முடியவில்லை.

இங்கே பதிந்த செய்தியில் இவர்கள் மீது மோசடி குற்றம் சுமத்த பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

100% தரவுகள் அடிப்படையிலேயே செய்திகளும் தலைப்பும் பகிரப்பட்டுள்ளது.

செய்திக்கு கீழ் வாசகர் எழுதியது அவரவர் கருத்து.

உதாரணமாக மகிந்த மீது போர்குற்ற குற்றபத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை.

அதனால் மட்டும் அவர் போர்குற்றம் செய்யவில்லை என நாம் ஏற்க மட்டோம் அல்லவா?

இப்போதைக்கு இது ஒரு சிவில் விடயமாகவே கையாளப்படுகிறது.

அதற்கு யூகே அரசு இதனால் நாட்டுக்கு வரும் இழப்பை குறைக்க முயல்வது பிரதான காரணம்.

ஆனால் be rest assured, Serious Fraud Office

தகவல் திரட்ட தொடங்கி இருப்பார்கள். இது சிவில் வழக்காக முடியுமா, கிரிமினல் வழக்காகுமா என்பது சஞ்சீவ் ஒத்துழைப்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஆனால் மக்கள் மன்றில் மகிந்த போர் குற்றவாளி. சஞ்சீவ் மோசடிக்காரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் be rest assured, Serious Fraud Office

தகவல் திரட்ட தொடங்கி இருப்பார்கள். இது சிவில் வழக்காக முடியுமா, கிரிமினல் வழக்காகுமா என்பது சஞ்சீவ் ஒத்துழைப்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

இப்படி இது கிரிமினல் வழக்காகி, குற்றம் தீந்தால் - சொந்த சொத்துக்கள் கூட proceeds of crime என எடுக்கப்படலாம். கட்டாயம் எடுக்கப்படும் என்பதில்லை.

இதனால்தான் இருப்பது அனைத்தையும் இப்போதே விற்று விட்டு அல்ல மார்கெட்டில் போட்டு விட்டு ஓட்டம் எடுத்துள்ளனர்.

ஆனால் தலைமறைவு வாழ்க்கைதான் இலக்கு எண்டால் - இலங்கை பாதுகாப்பு இல்லை. யூகே, இலங்கை இடையா நாடுகடத்தும் ஒப்பந்தமுண்டு. கியூபா, ஈக்குவடோர் எண்டு போனால்தான் தப்பலாம். அல்லது பிரேசில் போய் ஒரு லோக்கல் ஆளை கலியாணம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிரித்தானிய நடைமுறையும் அவுஸ் போலவே.

இதன் பின்னால் பெண்ணுரிமை, தனிமனித உரிமை, வேலை செய்ய கூடிய அனைவரையும் வேலைக்கு அனுப்ப தூண்டுவது, இன்னும் பல வலுவான காரணங்கள் உள்ளன.

அனைவருக்கும் உழைக்கும் முதல் 12500 க்கு வரி இல்லை. இதில் 1200 ஐ மணமானவகள் marriage allowance என தமக்குள் பரிமாறி கொள்ளலாம்.

இருவரும் 12500 க்கு மேல் உழைத்தால். எந்த வரி விலக்கும் இல்லை.

ஆனால் அனைவருக்கும் கான்சர் சிகிச்சை வரை இலவசமாக அரசு தரும். இந்த வரிப்பணத்தை வைத்து.

👍..............

இங்கு முழுநேரமாக குடும்பத்தை பராமரித்தலும் ஒரு வேலையே என்றும், அதன் மதிப்பும் மிகவும் அதிகம் என்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குக்கான காரணங்களைச் சொல்லுவார்கள். இங்கு இப்பொழுதுபெண்கள் வேலைக்குச் செல்ல, ஆண்கள் முழுநேரமாக வீடுகளில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் நடைமுறையும் ஓரளவுக்கு வந்துவிட்டது.

அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அறவிடப்படும் வருமான வரிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் இந்த துறையும் ஒரு Wild Wild West தான்.................

அமெரிக்காவில் இருப்பது முழு முதலாளித்துவம் என்றால், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வைத்திய, சுகாதார சேவைகளில் இருக்கும் மெத்தனப் போக்கும் யோசிக்க வைக்கின்றது. சில நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்த நிகழ்வுகளும், கதைகளும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. கனடாவில் ஒரு பத்து அடிகள் மட்டுமே உயரமுள்ள தலைவாசலின் ஓடுகளை ஏணி ஒன்றில் நின்று மாற்றிக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் தடக்கி விழுந்ததும், அதன் பின்னால் தொடராக நடந்த நிகழ்வுகளும் நல்ல ஒரு உதாரணம். இதை ஒரு கதையாக எழுதவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிகு

பெட்டிக்கடை கணக்கு

இருநூறாயிரமோ, இருபது பில்லியனொக் - வங்குரோத்து மூலம் சுத்துமாத்து பண்ணும் டகால்டி வேலையின் அடிப்படை ஒன்றேதான்.

இந்த பிணக்கின் பரிமாணம் எமக்கு வாழ்நாளில் பரிச்சயமில்லா தொகைதான்.

ஆனால் நம்மிடம் பணம்தான் இல்லை, புத்தி இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை விளங்க அது போதும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்கள் இருவரையும் மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதே. என்ன நடக்கிறது என்ற புரிதல் நமக்கும் போதாதே என்பதுதான்.

பெட்டிக்கடை என்று சொன்னதற்குக் காரணம். பெட்டிக் கடையில், ஒரு 30 பவுன்ட்ஸ் எடுத்திருந்தால், என்ன மாதிரி எதிர்வினை ஆற்றியிருப்போம். ஆனால் 3 மில்லியன் பவுன்ட்ஸ் என்டவுடன் கோபம் வருகிறது. உன்மையில், விகிதாதாரத்தின் அடிப்படையில், இரண்டும் ஒன்றுதான். ஒரு 200,000ல் இருந்து 30 எடுப்பதும், 20 பில்லியனில் இருந்து 3 மில்லியன் எடுப்பதும். இரண்டும் தவறு.

முழு விபரமும் சரியாக அறிந்தால் நன்றாக இருக்கும். அரசின் விசாரணை வெளியே வரும் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍..............

இங்கு முழுநேரமாக குடும்பத்தை பராமரித்தலும் ஒரு வேலையே என்றும், அதன் மதிப்பும் மிகவும் அதிகம் என்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குக்கான காரணங்களைச் சொல்லுவார்கள். இங்கு இப்பொழுதுபெண்கள் வேலைக்குச் செல்ல, ஆண்கள் முழுநேரமாக வீடுகளில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் நடைமுறையும் ஓரளவுக்கு வந்துவிட்டது.

அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அறவிடப்படும் வருமான வரிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் இந்த துறையும் ஒரு Wild Wild West தான்.................

அமெரிக்காவில் இருப்பது முழு முதலாளித்துவம் என்றால், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வைத்திய, சுகாதார சேவைகளில் இருக்கும் மெத்தனப் போக்கும் யோசிக்க வைக்கின்றது. சில நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்த நிகழ்வுகளும், கதைகளும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. கனடாவில் ஒரு பத்து அடிகள் மட்டுமே உயரமுள்ள தலைவாசலின் ஓடுகளை ஏணி ஒன்றில் நின்று மாற்றிக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் தடக்கி விழுந்ததும், அதன் பின்னால் தொடராக நடந்த நிகழ்வுகளும் நல்ல ஒரு உதாரணம். இதை ஒரு கதையாக எழுதவேண்டும்.

ஓம்…இதை நான் இலங்கையில் இருக்கும் வரை உணரவில்லை.

ஐரோப்பாவிடம் ஒப்பிடும் போது அமெரிக்கா பாரம்பரிய விடயங்களுக்கு (இதை சிலர் பழமைவாதம் என்பார்கள்) அதிகம் முன்னுரிமை கொடுக்கும் நாடு.

இந்த family values என்பதும் அதுவே என நினைக்கிறேன். எந்த நிறத்தவரானாலும் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக வரக்கூட மனைவியை மேடை ஏற்றி நான் ஒரு நல்ல குடும்பஸ்தன் என அங்கே சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலோ, யூகேயிலோ அப்படி அல்ல. பதவி ஏற்பு, விலகல், அரிதாக நில பிரச்சார மேடைகளில் தோற்றம் அவ்வளவுதான்.

இதுவேதான் வரியிலும் எதிரொலிக்கிறது என நினைக்கிறேன்.

யூகேயை பொறுத்தவரை வருமானம் தனிநபரின் உழைப்புக்கு எனும் போது, வரியும் அதற்கே என்பதுதான் நிலைப்பாடு.

இந்த வரி விடயத்தில் பெண்கள் விடயத்தை மட்டும் எடுத்து கொள்வோம்.

Equal pay, gender pay gap என இரு விடயங்கள் உள்ளன. சட்டம் பல ஆண்டுகளாகவே ஒரே வேலைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஊதியம் என்பதை equal pay உறுதி செய்து விட்டது.

ஆனால் gender pay gap என்பது ஒரு நிறுவனத்தில் ஒட்டு மொத்த ஆண், பெண் தொழிலாளர் இடையே இருக்கும் சராசரி ஊதியத்தின் வேறுபாடு.

இன்றும் கிட்டதட்ட அனைத்து துறை, நிறுவனங்களிலும் பெண்கள் இதில் பல விழுக்காடு பின்னால்தான் நிற்கிறார்கள்.

ஏன்? நான் மேலே சொன்ன traditional family values என்ற போர்வையில் அவர்கள் தலையில் வேலைக்கு அப்பாலான பல சுமைகள் இறக்கி விடபடுகிறன.

குழந்தை பிறக்கும் வரை தனது career இல் சமவேகத்தில் முன்னேறி வரும் பெண், அதன் பின் மிகவும் பிந்தங்கி போகிறாள்.

இந்த நிலையில் மனைவிக்கு அவர் உழைத்தால் கிடைக்கும் tax allowance ஐ அப்படியே தூக்கி கணவருக்கும் கொடுத்தால். மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளோடு லோல் பட, கணவருக்கோ - tax allowance இரெட்டிப்பாகும்.

“நீ வேலைக்கு போய் கொண்டு வரும் 20,00 ஐ விட நீ வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எனது 50,000 ற்கு வரும் வரி பாதியாகும். எனவே நீ வீட்டிலே இரு” என சொல்வது இலகுவாக போகும்.

வேலை என்பது தனியே உழைப்பு மட்டும் அல்ல. அது ஒரு அங்கிகாரம். ஒவ்வொருவரினதும் சுய மரியாதை (self esteem) சம்பந்தபட்டது. அதனால்தான் இந்த குடும்ப-நலன், family value பத்தாம் பசலிதனத்தை எல்லாம் காலால் நெட்டிதள்ளி விட்டு வேலைக்கு போ என் பெண்களை பார்த்து பல தசாப்தங்கள் முன்னே சொன்னார் பெரியார்.

இது ஒரு கோணம் மட்டுமே, இப்படி இந்த தனி மனிதருக்கான வரி விதிப்பில் பல நியாயங்கள் உள்ளன.

ஆணாதிக்கத்தை இன்னொரு வகையில் திணிக்கும் குடும்பம்-சார் கருத்தியலால் அதை வெல்ல முடியாது என்பது எண் கருத்து.

ஆண்கள் கூட வீட்டில் இருக்க பெண்கள் வேலைக்கு போகிறார்கள் என்பது விதி விலக்கு. அதை விதி என மாற்றவே இப்படியான வரி-கொள்கைகள் அவசியமாகிறன.

மருத்துவம் - கடந்த 2010-2022 இல் இருந்த அரசு அமெரிக்கா போல் ஒரு காப்புறுதி அடிப்படியிலான தனியார் மருத்துவமாக மாற்ற மறைமுகமாக விரும்பினர். ஆனால் மக்கள் ஆதரவு இல்லை. அதை கொள்கை என அறிவித்தால் கூட தேர்தலில் தோல்வி நிச்சயம்.

ஆகவே அதை கொஞ்சம், கொஞ்சமாக உள்ளிருந்து அழித்தார்கள். அதன் விழைவுதான் நீங்கள் சொல்லுவது.

ஆனால் எனக்கே 2022 இன் பின் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. விரைவில் 2009 இல் இருந்த நிலைக்க்கு சேவை மீளும்.

ஆனால் இன்சூரண்ஸ் இல்லையா ரத்தம் கக்கி சாவு என இங்கே ஒரு நாளும் விடமாட்டார்கள். சில டோக்குமெண்டரிகள் பார்த்தேன். ரத்தம் உறையவைக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாத முறை அமெரிக்கன் மருத்துவ முறை.

என்னை பொறுத்தவரை சொல்கிறேன் ஒரு ஏழையாக, விளிம்புநிலை மனிதராக அமெரிக்காவில் இருப்பதை விட இலங்கையில் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்கள் இருவரையும் மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதே. என்ன நடக்கிறது என்ற புரிதல் நமக்கும் போதாதே என்பதுதான்.

பெட்டிக்கடை என்று சொன்னதற்குக் காரணம். பெட்டிக் கடையில், ஒரு 30 பவுன்ட்ஸ் எடுத்திருந்தால், என்ன மாதிரி எதிர்வினை ஆற்றியிருப்போம். ஆனால் 3 மில்லியன் பவுன்ட்ஸ் என்டவுடன் கோபம் வருகிறது. உன்மையில், விகிதாதாரத்தின் அடிப்படையில், இரண்டும் ஒன்றுதான். ஒரு 200,000ல் இருந்து 30 எடுப்பதும், 20 பில்லியனில் இருந்து 3 மில்லியன் எடுப்பதும். இரண்டும் தவறு.

முழு விபரமும் சரியாக அறிந்தால் நன்றாக இருக்கும். அரசின் விசாரணை வெளியே வரும் என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக எமக்கு முழுவிடயமுமே தெரியாது என்பதில் மாற்று கருத்தில்லை. அனைவரும் பத்திரிகை செய்தியை வைத்துத்தானே எழுதுகிறோம்.

ஆனால் ஒரு பொது விதி உண்மை - யூகே போன்ற ஒரு சட்டத்தின் ஆளுமை உள்ள நாட்டில், கள்ளர் கூட தப்பி ஓடத்தேவையில்லை. இது ரஸ்யாவோ இந்தியாவோ தென்னாபிரிக்காவோ இல்லை.

இது + மேலே சொன்ன பல விடயங்கள் - ஓ….இது அது இல்ல? என நினைக்க வைக்கிறது.

பெட்டிகடை

இன்னொரு திரியில் வாழைபழம் திருடியவின் மன்னிப்பும் மகிந்தவின் மன்னிப்பும், ஒன்றுதான் என எழுதினேன். ஏன் என்றால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான்.

அதே போலத்தான் களவும். 30,300,300, 300 பில்லியன் எல்லாமும் களவுதான்.

மாற்றுக் கருத்து இல்லை. களவு களவுதான். நாமதான் எமது சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 minutes ago, செம்பாட்டான் said:

மாற்றுக் கருத்து இல்லை. களவு களவுதான். நாமதான் எமது சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று படுகின்றது.

நிச்சயமாக.

எனக்கு நீங்கள் நினைப்பது போல் எந்த பரிட்சயமும் சம்பந்த பட்ட நபர்களிடம் இல்லை. ஒரு பில்லியனுக்கு எத்தனை சைபர் எண்டாலே கால்குலேட்டர் தேடும் ஆள் நான்😂.

நாதமுனி இவர்களிருவரையும் பற்றி எழுதியபோதுதான் இவர்கள் இருப்பதே தெரியவந்தது. அட ஒரு தமிழன் பூந்து விளாடுறானே… என கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

பின்னர் இவர்களின் துறை சம்பந்தமான ஒருவருடன் ஒரு சாதாரண சந்திப்பில் கதைத்தேன். சிலதை சொன்னார். ஆனால் என்னிடம் ஆதாரம் ஏதுமில்லையே? அப்படியே விட்டு விட்டேன்.

அண்மையில் அதே நபரை சந்தித்தேன்… என்னடாப்பா உங்கட ஆள் ஊரை விட்டே ஓடிட்டான் எண்டார்… யார்ரா அது…ஊரை விட்டு ஓடும் ஒருவர் எனது ஆள்? அவ்வளவு பெரிய சகவாசம் எமக்கில்லையே…எனப்பார்த்தால்….சங்கதி இதுதான்.

பின்னர் வந்து செய்தியை தேடிப்பார்தால் இது சில மாதங்கள் முன்பே நடந்துள்ளது.

சரி யாழில் அறிமுகமான விடயம், யாழில் தெரிய படுத்துவோம் என ஒரு திரி திறந்தேன்.

தொடர்ந்து எழுதும் எண்ணம் அப்போ அறவே இல்லை.

ஆனால் கருத்தாளர் இருவர் எழுதிய பதில்கள் கடந்து போகதக்கன அல்ல என்பதால் - நேரம் நாசமாகியது 😂.

பிகு

யாழில் நாம் நேரம் செலவழிக்கும் ஏனைய திரிகளின் பயனாக பிளாட்டினமும் தங்கமும் விளைகிறதா என்ன?😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இந்தச் செய்தி எனக்கும் ஆர்வமாகத்தான் இருந்தது. நம்மாளுங்க என்றதால் என்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய வியாபாரத்தை செய்தது மெச்சத்தக்கது. இப்பிடி எத்தினை பேர் அவ்வாறான நிலையில் இருக்கிறார்கள், இருந்தார்கள். நீங்கள் சொல்வதுபோல் வந்த அந்த ஆர்வம்தான். நடந்தவற்றை வாசிக்கும் போது, ஒன்று மட்டும் புரிகிறது. முழு விபரமும் வெளியே தெரியவில்லை.

ஊகத்தின் அடிப்படையில், செய்திகளில் வந்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்த அரட்டை ஓடிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் ராஜரட்ணம் இன்னொருவர். எப்படிப்பட்ட வளர்ச்சி. கடைசியில் எங்கு வந்து முடிந்தது.

பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இவ்வாறு எழுதிக் கொண்டிருக்க France இன் முக்கிய உதைபந்தாட்ட கழகத்திற்கு Lyca ஸ்பொன்சராக வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

அமெரிக்காவில் ராஜரட்ணம் இன்னொருவர். எப்படிப்பட்ட வளர்ச்சி. கடைசியில் எங்கு வந்து முடிந்தது.

பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்.

இவரது தொழில் வித்தியாசமானது. அத்துடன் இவரது கைதும் அவரது தொழிலால் மட்டும் வந்ததல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

மேலே கோசன் தெளிவாக குறிப்பிட்டுள்ளர். இவர்களது நோக்கம் பிழையானது

இந்த திரியில் நானும் கடஞ்சாவும் நல்லதொரு விவாதத்தில் ஈடுபட்ட நினைவுள்ளது, அது போல உங்களின் துறைசார் அறிவுடன் கடஞ்சாவுடன் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை எதிர்பார்க்கிறேன்.

எங்களை ஏமாற்றிவிடாதீர்கள்!

17 minutes ago, செம்பாட்டான் said:

அமெரிக்காவில் ராஜரட்ணம் இன்னொருவர். எப்படிப்பட்ட வளர்ச்சி. கடைசியில் எங்கு வந்து முடிந்தது.

Buy side எனும் புத்தகத்தில் இவரது நிறுவனத்தில் வேலை செய்தவரின் வாழ்க்கை வரலாற்றில், ராஜரட்ணத்தினைப்பற்றியும் குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது மறுபக்க பார்வை கொண்டது.

அமேசனில் இந்த புத்தகம் உள்ளது ஒலி வடிவிலும் உள்ளது, இலவச பிரதிகள் இணையத்தில் இருக்கக்கூடும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் இணைத்த இணைப்புகளின் கூகிள் தமிழாக்கம்

சரிந்த பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரின் £150 மில்லியன் சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியுள்ளது.

இந்தக் கட்டுரை 1 மாதத்திற்கும் மேலாக பழமையானது.

சஞ்சீவ் குமார் மீது கடமைகளை மீறியதற்காக வழக்குத் தொடர்ந்த நிறுவனங்கள் கோரிக்கையை வழங்கியதை புதிதாக வெளியிடப்பட்ட தாக்கல்கள் வெளிப்படுத்துகின்றன.

ராப் டேவிஸ்

வியாழன் 4 செப்டம்பர் 2025 16.00 AEST

பகிர்

இடிந்து விழுந்த பிராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான £150 மில்லியன் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கியுள்ளது , இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆலையின் திடீர் நிதி வெடிப்பிலிருந்து அவர் இருக்கும் இடம் ஒரு மர்மமாகவே உள்ளது.

பிராக்ஸ் பேரரசில் உள்ள ஐந்து நிறுவனங்களின் இடிபாடுகளை ஆராய்ந்து வரும் நிர்வாகிகள், எரிசக்தி குழுமத்தின் தோல்விக்குப் பிறகு, இயக்குநராக தனது கடமைகளை மீறியதற்காக, சஞ்சீவ் குமார் என்ற நடுத்தரப் பெயர்களால் நன்கு அறியப்பட்ட வின்ஸ்டன் சூசைப்பிள்ளை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்ட நீதிமன்றத் தாக்கல்கள், ஜூலை மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சூசைப்பிள்ளைக்கு எதிராக "முடக்கத் தடை உத்தரவு" கோரிய நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக வெளிப்படுத்தின.

இந்த உத்தரவு அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இருந்து வெளியேற்றுவதிலிருந்தோ அல்லது £150 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்பதிலிருந்தோ தடுக்கிறது. அவர் இணங்கத் தவறினால், அவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

சூசைப்பிள்ளைக்கு எதிரான நிறுவனங்களின் வழக்கை விவரிக்கும் ஒரு தனி உரிமைகோரல் படிவம், "ஒவ்வொரு உரிமைகோருபவர்களும் ஒரு கட்சியாக இருக்கும் ஒரு பத்திரமயமாக்கல் வசதி தொடர்பாக" அவர்கள் இழப்பீடு கோருவதாக வெளிப்படுத்தியது.

கடந்த மாதம் நிறுவனங்களின் மன்றத்தில் நிர்வாகிகளால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, பிராக்ஸ் நிறுவனங்களின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வகையான கடன் - £783 மில்லியன் பத்திரமயமாக்கல் வசதி தொடர்பான "முறைகேடுகள்" குழுவின் தோல்விக்கு மையமாக இருந்தன.

"தவறான பிரதிநிதித்துவம்" தொடர்பாக, ஒப்பந்தங்களை மீற "மற்றும்/அல்லது சட்டவிரோத வழிமுறைகள் மற்றும்/அல்லது ஏமாற்றுதல் மூலம் சேதத்தை ஏற்படுத்துதல்" தொடர்பாக நிறுவனங்கள் இழப்பீடு கோருகின்றன. கோரப்படும் சேதங்களின் அளவு இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று படிவம் கூறுகிறது.

லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்சேயின் தோல்வி மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள கிரேன்ஜ்மவுத் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது "தொழில்துறை நாசவேலைகள்" என்றும் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைக் குறை கூறுவதாகவும் கூறி, தொழிற்சங்கமான யுனைட் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியபோது நீதிமன்ற ஆவணங்கள் வெளிவந்தன.

'லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் காப்பாற்றுங்கள்' மற்றும் 'அரசாங்கம் செயல்பட வேண்டும்' என எழுதப்பட்ட பதாகைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள்.படத்தை முழுத்திரையில் காண்க

புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்த பேரணியில் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள். புகைப்படம்: ஸ்டீபன் ரூசோ/பிஏ.

நிர்வாகச் செயல்பாட்டின் போது வணிகத்திற்கு வாங்குபவர் யாரும் வராததால் லிண்ட்சே நிரந்தரமாக மூடப்பட உள்ளது. புதன்கிழமை நடந்த போராட்டத்தில், யுனைட்டின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம், "இந்த வேலைகளைக் காப்பாற்றும் சக்தி தொழிற்கட்சிக்கு உள்ளது" என்று கூறி, "லிண்ட்சேயைக் காப்பாற்ற" அரசாங்கத்தை அழைத்தார்.

வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஹம்பர் கழிமுகத்தில் உள்ள பிராக்ஸ் லிண்ட்சே, ஜூன் மாத இறுதியில் நிர்வாகத்தில் மூழ்கியபோது, இங்கிலாந்தில் எஞ்சியிருந்த ஐந்து சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.

வணிகத்தின் தோல்வி, சூசப்பிள்ளை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோபமடைந்த அரசாங்க அமைச்சர்களிடமிருந்து அழைப்புகளைத் தூண்டியது, ஆனால் அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொள்ள சிரமப்பட்டதாக அறியப்படுகிறது.

நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் முன்பு கார்டியனிடம், சூசைப்பிள்ளையும், அந்த வணிகத்தின் இணை உரிமையாளரான அவரது மனைவி ஆரணியும், ஆலை திவால்நிலைக்குச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, இங்கிலாந்திலிருந்து துபாய்க்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சரான மைக்கேல் ஷாங்க்ஸ், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது வேலை இழக்கும் வாய்ப்பை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பணம் செலுத்துவதன் மூலம் "கண்ணியமான காரியத்தை" செய்யுமாறு சூசைப்பிள்ளையிடம் முன்பு அழைப்பு விடுத்திருந்தார் .

2021 ஆம் ஆண்டில் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டலிடமிருந்து சுத்திகரிப்பு நிலையத்தை வாங்கியதிலிருந்து சூசைப்பிள்ளைகள் நிறுவனத்திடமிருந்து சுமார் £11.5 மில்லியன் சம்பளம் மற்றும் ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாக கார்டியன் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

ஆனால், சூசைப்பிள்ளை தனது பணத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதில் உயர் நீதிமன்றம் இப்போது குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட முடக்க உத்தரவின் கீழ், சூசைப்பிள்ளை தனது £50,000க்கும் அதிகமான மதிப்புள்ள அனைத்து சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் நிறுவனங்களுக்கான வழக்கறிஞர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன.

இந்த உத்தரவு, வாழ்க்கைச் செலவுகளுக்காக வாரத்திற்கு £2,500 செலவிடவும், சட்ட ஆலோசனைக்காக "நியாயமான" தொகைகளை செலவிடவும் அவரை அனுமதிக்கிறது.

உத்தரவின்படி, சூசைப்பிள்ளைக்கு நீதிமன்றத்திற்கு £150 மில்லியன் செலுத்தவோ அல்லது நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட மற்றொரு வகையான பாதுகாப்பை வழங்க ஒப்புக்கொள்ளவோ, உத்தரவுக்கு அடிபணியாமல் இருக்க வாய்ப்பு இருந்தது.

சர்ரேயை தளமாகக் கொண்ட சூசைப்பிள்ளைகள், ஒரே ஒரு பெட்ரோல் நிலையத்துடன் தொடங்கி, 25 ஆண்டுகளில் £10 பில்லியன் ஆண்டு வருவாயுடன் ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். குழு சரிந்த நேரத்தில், அதில் ஒரு வட கடல் எண்ணெய் வயல், நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்கள் மற்றும் UK எரிபொருள் உற்பத்தியில் 10% பொறுப்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான லிண்ட்சே ஆகியவை அடங்கும்.

ஆனால் , அதன் உரிமையாளர்களின் கடனால் தூண்டப்பட்ட வளர்ச்சிக்கான தீராத தாகம் காரணமாக, பெருகிய முறையில் நிலையற்ற அடித்தளங்களில் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளின் வீடு என்று உள்நாட்டினர் விவரித்துள்ளனர் .

அதன் மறைவின் போது, ப்ராக்ஸ் லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வங்கியில் £203 மட்டுமே மீதமிருந்ததால், அதற்கு கச்சா எண்ணெய் வழங்கிய பொருட்கள் வர்த்தக குழுவான க்ளென்கோர், 53.6 மில்லியன் டாலர் கடனை செலுத்தியதாக, டைம்ஸ் பெற்ற தனி நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

சூசைப்பிள்ளை மீது சுத்திகரிப்பு நிலையத்தின் தாய் நிறுவனமான ஸ்டேட் ஆயில் மற்றும் பிராக்ஸ் குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்களான பிராக்ஸ் ட்ரெஷுர்டு, பிராக்ஸ் பெட்ரோலியம், ஹார்வெஸ்ட் எனர்ஜி மற்றும் ஹார்வெஸ்ட் எனர்ஜி ஏவியேஷன் ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ளன .

ஐந்து நிறுவனங்களின் நிர்வாகியான டெனியோ கடந்த மாதம் கம்பெனிகள் மாளிகையில் தாக்கல் செய்த ஆவணங்கள், பிராக்ஸ் சரிவதற்கு முந்தைய மாதங்களில் அதன் நிதி நிலையின் சிக்கலான தன்மை மற்றும் நிலையற்ற தன்மை பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தின.

டெனியோவால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு இடையே £1.5 பில்லியனுக்கும் அதிகமான நிறுவனக் கடன்கள் நிலுவையில் இருப்பதாக தாக்கல்கள் காட்டுகின்றன.

எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு

Loan ‘irregularities’ led to collapse of Prax Lindsey oil refinery

This article is more than 2 months old

Administrator was appointed after parent company State Oil given new information about £783m loan

Rob Davies

Thu 21 Aug 2025 02.03 AEST

Share

The Prax Lindsey oil refinery collapsed after “material irregularities” were discovered in a complex £783m loan facility that funded the wider group, it has emerged.

The refinery on the Humber estuary in northern England – one of just five left in the UK, – was suddenly plunged into administration in late June, prompting calls from furious government ministers for an investigation into Winston Soosaipillai, Prax Group’s oil tycoon owner.

Amid uncertainty about the whereabouts of Soosaipillai, who goes by his middle names, Sanjeev Kumar, administrators sifting through the rubble of the refinery’s parent company, State Oil, published a progress report on Wednesday.

Among details disclosed by Teneo, which is serving as the administrator for State Oil and five other group companies, is a £70m debt owed to HM Revenue and Customs by the group entity Prax Petroleum. Including sums owed by the refinery unit itself, which is being liquidated separately, taxpayers are thought to be owed up to £250m by the wider Prax Group.

Alongside a list of hundreds of creditors, ranging from the oil company Shell to the ride-hailing app Uber and the pest control firm Rentokil, Teneo also offered new insight into the circumstances leading to the collapse of an oil empire that has been described by insiders as a “house of cards”.

According to the Companies House filing, the failure hinged on unspecified “irregularities” relating to the £783m loan, arranged by HSBC in 2021 and secured against expected future income from the sale of oil products, such as petrol and jet fuel.

This facility provided cash for “critical” payments as they came due, such as supplier invoices.

State Oil was the guarantor of this securitisation facility, provided by an Ireland-based entity called Prax Global Financial Services (PGFS), which stood outside the Prax Group. PGFS itself borrowed from other international lenders.

குழுவிற்கு வருவாய் ஈட்டுவதில் முக்கியமானதாக இருந்த சுத்திகரிப்பு நிலையம், ஜூன் 2025 இல் ஏற்கனவே மோசமான நிதி நிலையில் இருந்ததாக டெனியோ கூறினார்; 2021 ஆம் ஆண்டில் பிராக்ஸ் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டலிடமிருந்து ஆலையை வாங்கியதிலிருந்து அடிக்கடி பராமரிப்பு பணிநிறுத்தங்கள் மற்றும் மோசமான சுத்திகரிப்பு லாபம் காரணமாக நிர்வாகி குற்றம் சாட்டினார்.

அவர் திறந்த கழுத்து சட்டை மற்றும் ஜாக்கெட்டில் பரந்த அளவில் புன்னகைக்கிறார்.படத்தை முழுத்திரையில் காண்க

வின்ஸ்டன் சூசைப்பிள்ளை இருக்கும் இடம் தெரியவில்லை. புகைப்படம்: பிராக்ஸ் குழுமம்.

புதிய நிதி திரட்டுவதற்கான வழிகளை குழு ஆராய்ந்து கொண்டிருந்தபோது, "பொருள் முறைகேடுகள்" கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்டேட் ஆயில் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக அது கூறியது.

முறைகேடுகளை யார் அடையாளம் கண்டார்கள் அல்லது அவை என்ன என்பது போன்ற கூடுதல் விவரங்களை டெனியோ வழங்கவில்லை.

சூசைப்பிள்ளை உட்பட நிறுவனத்தின் இயக்குநர்கள், £783 மில்லியன் கடன் வசதியை உடனடியாக "நிறுத்த வேண்டும்" என்று முடிவு செய்தனர். இதன் பொருள், கடன் நிதியளிப்பதற்காக குழுவின் பிற பகுதிகளுக்கு ஸ்டேட் ஆயில் வழங்கிய உத்தரவாதங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

டெனியோவால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு இடையே £1.5 பில்லியனுக்கும் அதிகமான நிறுவனக் கடன்கள் நிலுவையில் இருப்பதாக தாக்கல்கள் காட்டுகின்றன.

கடன் வசதி நிறுத்தப்பட்டதால், சுத்திகரிப்பு நிலையம் அதன் முக்கிய சப்ளையரான உலகளாவிய பொருட்கள் வர்த்தக நிறுவனமான க்ளென்கோருக்கு இனி திருப்பிச் செலுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிராக்ஸுடனான அதன் விநியோக ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், க்ளென்கோர் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது, இதன் பொருள் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனை அதன் ஒப்புதல் இல்லாமல் நடைபெற முடியாது.

இது, நிறுவனத்தின் சரிவின் "துரிதமான தன்மைக்கு" பங்களித்ததாக டெனியோ கூறினார், இது அரசாங்க அமைச்சர்களை கண்மூடித்தனமாகப் பார்த்தது, சில வாரங்களுக்கு முன்பு சூசைப்பிள்ளை நிறுவனத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ததாகக் கூறினார்.

முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் நிர்வாகிகள் நியமனத்திற்கும் இடையே ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே இருந்ததாக, தாக்கல்கள் காட்டுகின்றன.

டெனியோ அதன் 112 பக்க புதுப்பிப்பில், கடன் வழங்குநர்களுக்கு மீட்டெடுக்கக்கூடிய தொகை "நிச்சயமற்றது" என்று விவரித்தது, மேலும் அவர்கள் எவ்வளவு கோருவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியது.

"கடன் வழங்குநர்களின் இறுதி முடிவை கணிசமாக பாதிக்கக்கூடிய பல நிலுவையில் உள்ள விஷயங்கள்" இருப்பதாக அது கூறியது. சில கடன் வழங்குநர்கள் பிராக்ஸ் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைக் கொண்டுள்ளதாக கம்பெனிகள் ஹவுஸ் பதிவுகள் காட்டினாலும், அந்த நிறுவனங்களின் சொந்த பதிவுகள் உண்மையில் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கின்றன என்றும் அது மேலும் கூறியது.

ஷெல் £10 மில்லியனுக்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளது; HMRC £70 மில்லியன் கடன்பட்டுள்ளது; மேலும் 2023 ஆம் ஆண்டு ப்ராஜெக்ட் கிங் என்ற திருப்புமுனைத் திட்டத்தை வழிநடத்திய டெலாய்ட், £700,000 க்கும் அதிகமாகக் கடன்பட்டுள்ளது.

பெரிய நிறுவன கடன் வழங்குநர்களுடன், ஸ்டேட் ஆயிலின் 171 ஊழியர்களும் மொத்தம் £4.2 மில்லியன் கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 45 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிராக்ஸ் குழுமத்தின் சில சொத்துக்களை விற்க முயற்சிப்பதாக டெனியோ கூறியது, இதில் வட கடல் எண்ணெய் வயல், மூன்று டேங்கர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்கள் அடங்கும். துணை நிறுவனங்களில் ஸ்டேட் ஆயிலின் பங்குகளின் மதிப்பு £112.2 மில்லியன் என அது நிர்ணயித்தது.

நிர்வாகி சூசைப்பிள்ளைக்கு எதிராக நம்பிக்கைக் கடமையை மீறியதற்காக சட்டப்பூர்வ உரிமைகோரலையும் தாக்கல் செய்துள்ளார், மேலும் தொழிலதிபரின் நடத்தை குறித்த அறிக்கையை அரசாங்கத்தின் திவால்நிலை சேவைக்கு வழங்குவதாகவும் கூறினார்.

பிராக்ஸ் குழுமத்தின் கூட்டு உரிமையாளரான சூசைப்பிள்ளையும் அவரது மனைவி ஆரணியும், டோட்டலிடமிருந்து சுத்திகரிப்பு நிலையத்தை வாங்கிய பிறகு, சம்பளம் மற்றும் ஈவுத்தொகையாக £11.5 மில்லியன் பெற்றதாக இந்த ஆண்டு கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது .

கடந்த செய்திமடல் விளம்பரத்தைத் தவிர்க்கவும்.

பிசினஸ் டுடேவில் பதிவு செய்யுங்கள்

லூக் பார்

ஜூலை 1, 2025 3 நிமிடம் படித்தது

ஆரணி குமார் சூசைப்பிள்ளை மற்றும் சஞ்சீவ் குமார் சூசைப்பிள்ளை

பிராக்ஸ் குழும உரிமையாளர்களான சஞ்சீவ் குமார் (வலது) மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை ஆகியோருக்கு வழங்கப்பட்ட பணம் அமைச்சர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் - பிராக்ஸ்

சரிந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பின்னணியில் இருந்த தம்பதியினர், கடந்த ஆண்டு தங்கள் எண்ணெய் சாம்ராஜ்யத்திலிருந்து 5 மில்லியன் டாலர் (£3.65 மில்லியன்) ஈவுத்தொகையை தங்களுக்குத் தாங்களே செலுத்திக் கொண்டனர், இருப்பினும் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட $30 மில்லியன் மதிப்புள்ள இழப்பைச் சந்தித்தது.

லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பின்னால் உள்ள நிறுவனமான பிராக்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களாக சஞ்சீவ் குமார் மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

திங்களன்று சுத்திகரிப்பு நிலையம் சரிந்தது, அரசாங்கத்தின் திவால்நிலை சேவை தொடர்ச்சியான செயல்பாடுகளை பராமரிக்க தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உடனடி சுத்திகரிப்பு வணிகத்தால் அல்லாமல், குழு மட்டத்தில் ஈவுத்தொகை வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் குழு $28.6 மில்லியன் இழப்பைச் சந்தித்தது, செயல்பாடுகள் "சவாலானவை" என்று முதலாளிகள் ஒப்புக்கொண்டனர்.

பிரிட்டனின் எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி எவ்வாறு சரிய அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர்கள் பதில்களைத் தேடுவதால், இந்த ஊதியம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது.

எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட், திவால்நிலை சேவைக்கு திங்களன்று கடிதம் எழுதி, "இயக்குநர்களின் நடத்தை மற்றும் இந்த திவால்நிலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரினார்.

எரிசக்தி அமைச்சர் மைக்கேல் ஷாங்க்ஸும் பிராக்ஸின் உரிமையாளர்களிடம் நேரடியாக முறையிட்டார்.

அவர் கூறினார்: "தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு வணிகத் தலைமை ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் நம்புகிறது. இந்த கடினமான காலகட்டத்தில் சரியானதைச் செய்து தொழிலாளர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவர்களை அழைக்கிறோம்."

கடனில் மூழ்கிய ஒப்பந்தங்கள்

விசாரணைகள் லிண்ட்சேயின் பின்னால் இருக்கும் கணவன்-மனைவி இரட்டையரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

கென்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்த பிறகு, 26 ஆண்டுகளுக்கு முன்பு வெய்பிரிட்ஜில் உள்ள ஒரு பிளாட்டில் இருந்து திரு. மற்றும் திருமதி. சூசைப்பிள்ளை பிராக்ஸைத் தொடங்கினர்.

அவர்கள் அதை உலகம் முழுவதும் செயல்படும் ஒரு பரந்த $10 பில்லியன் கூட்டு நிறுவனமாக வளர்த்துள்ளனர். முதலில் பெட்ரோல் நிலையங்களை கையகப்படுத்துவதன் மூலம் செயல்பாடுகளைத் தொடங்கிய பிராக்ஸ், பின்னர் எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்குச் சென்று வணிகத்தை விரிவுபடுத்தியது.

2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து எரிபொருள் சப்ளையர் ஹார்வெஸ்ட் எனர்ஜியை கையகப்படுத்தியது உட்பட, கடனால் தூண்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்து வந்தன. பிராக்ஸ் 2021 இல் பிரான்சின் டோட்டலிடமிருந்து லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கையகப்படுத்தியது.

சஞ்சீவ் பிராக்ஸ் வணிகத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் திருமதி சூசைப்பிள்ளை தலைமை மனிதவள அதிகாரியாக உள்ளார்.

நிறுவன தாக்கல்கள் இந்த ஜோடியை வணிகத்தின் இறுதி உரிமையாளர்களாக பட்டியலிடுகின்றன, ஒவ்வொன்றும் 40 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன. மீதமுள்ள 20 சதவீதம் அறக்கட்டளைகளில் வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் அவர்கள் இருவரும் அறங்காவலர்கள்.

திரு அல்லது திருமதி சூசைப்பிள்ளை இருவருமே எந்த ஊடக நேர்காணல்களையும் நடத்தவில்லை, மேலும் அவர்களைப் பற்றிய தகவல்கள் பிராக்ஸ் வலைத்தளத்தில் உள்ள சிறிய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறுகளுக்கு மட்டுமே.

இந்த ஜோடியைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், அவர்கள் சர்ரேயில் உள்ள ஒரு சொகுசு எஸ்டேட்டான செயிண்ட் ஜார்ஜ் மலையில் £4.5 மில்லியன் மதிப்புள்ள மாளிகையில் வசித்து வந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய மாதங்களில் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெறுவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது, இதனால் திங்களன்று ஏற்பட்ட திவால்நிலையால் அதிகாரிகள் கண்மூடித்தனமாக உள்ளனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அரசாங்கத்தின் விசாரணை சரிவின் தன்மையைக் கண்டறிய முயற்சிக்கும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, vasee said:

சரிந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பின்னணியில் இருந்த தம்பதியினர், கடந்த ஆண்டு தங்கள் எண்ணெய் சாம்ராஜ்யத்திலிருந்து 5 மில்லியன் டாலர் (£3.65 மில்லியன்) ஈவுத்தொகையை தங்களுக்குத் தாங்களே செலுத்திக் கொண்டனர், இருப்பினும் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட $30 மில்லியன் மதிப்புள்ள இழப்பைச் சந்தித்தது.

லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பின்னால் உள்ள நிறுவனமான பிராக்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களாக சஞ்சீவ் குமார் மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

திங்களன்று சுத்திகரிப்பு நிலையம் சரிந்தது,

இது ஒரு திட்டமிட்ட நிதி அபகரிப்பு என்றே நினைக்கத் தோன்றுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வேலை என்பது தனியே உழைப்பு மட்டும் அல்ல. அது ஒரு அங்கிகாரம். ஒவ்வொருவரினதும் சுய மரியாதை (self esteem) சம்பந்தபட்டது. அதனால்தான் இந்த குடும்ப-நலன், family value பத்தாம் பசலிதனத்தை எல்லாம் காலால் நெட்டிதள்ளி விட்டு வேலைக்கு போ என் பெண்களை பார்த்து பல தசாப்தங்கள் முன்னே சொன்னார் பெரியார்.

இது ஒரு கோணம் மட்டுமே, இப்படி இந்த தனி மனிதருக்கான வரி விதிப்பில் பல நியாயங்கள் உள்ளன.

ஆணாதிக்கத்தை இன்னொரு வகையில் திணிக்கும் குடும்பம்-சார் கருத்தியலால் அதை வெல்ல முடியாது என்பது எண் கருத்து.

ஆண்கள் கூட வீட்டில் இருக்க பெண்கள் வேலைக்கு போகிறார்கள் என்பது விதி விலக்கு. அதை விதி என மாற்றவே இப்படியான வரி-கொள்கைகள் அவசியமாகிறன.

பெண்கள் வேலைக்கு போவது பற்றி நல்ல ஒரு பார்வை கோஷான். வேலை என்பதை ஒரு அங்கீகாரம் என்று நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. பல இடங்களில் அது ஒரு காலத்தின் கட்டாயம் என்றும், ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு ஏற்ற முடிவை தெரிவு செய்து கொள்ளுகின்றார்கள் என்றுமே நினைத்திருந்தேன்.

கீழே உள்ள அட்டவணையை ஏஐயிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அமெரிக்க குடும்ப/சமூக அமைப்பும், அதனூடாக வரும் வரி விதிப்பு முறைகளும் நிச்சயமாகவே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பல நாடுகள் 80% தாண்டிவிட்டன.

இத்தாலியில் எவருமே, ஆணோ பெண்ணோ, வேலை செய்வதில்லை என்று இங்கே பகிடியாகச் சொல்லுவார்கள்.............. அட்டவணையில் அதுவும் தெரிகின்றது.............🤣.

Country

Female Labor Force Participation Rate

Iceland

78.4 %

Netherlands

82.2 %

Sweden

82.2 %

Switzerland

80.3 %

Germany

76.8 %

Norway

78.0 %

Denmark

77.4 %

Canada

61.1 %

United Kingdom

58.3 %

United States

56.5 %

Italy

41.3 %

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆனால் இன்சூரண்ஸ் இல்லையா ரத்தம் கக்கி சாவு என இங்கே ஒரு நாளும் விடமாட்டார்கள். சில டோக்குமெண்டரிகள் பார்த்தேன். ரத்தம் உறையவைக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாத முறை அமெரிக்கன் மருத்துவ முறை.

என்னை பொறுத்தவரை சொல்கிறேன் ஒரு ஏழையாக, விளிம்புநிலை மனிதராக அமெரிக்காவில் இருப்பதை விட இலங்கையில் இருக்கலாம்.

அமெரிக்க மக்களின் முதலாவது தெரிவு என்ன என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருக்கின்றது. அதிகாரம், செல்வம் இவற்றை விடவும் சமரசமற்ற தனிநபர் சுதந்திரமும் தெரிவுகளுமே அவர்களின் முதல் தெரிவாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். அதன் விளைவுகளே மருத்துவம் போன்ற பொதுக் கட்டமைப்புகள் சிதைந்து போனதற்கான பிரதான காரணம். 'அரசாங்கம் என்னை கவனிக்கத் தேவையில்லை............ நானே என்னைப் பார்த்துக் கொள்கின்றேன்....................' என்று சொல்பவர்கள் இங்கு மிக அதிகம். எந்தச் சமூகத்திலும் அரச நிர்வாகத்தின் உதவியுடன் வாழவேண்டியவர்கள் ஒரு பகுதியினர் என்பதை அளவு மீறிய தனிநபர் தெரிவுகள் மறைத்துவிடுகின்றன. இதற்கு மருத்துவக் காப்புறுதி ஒரு உதாரணம்.

கலிஃபோர்னியா போன்ற சில மாநிலங்கள் எல்லோரையும் உள்வாங்க முயற்சிக்கின்றன. நல்ல திட்டங்கள் நடைமுறையிலும் இருக்கின்றன. ஆனாலும் இன்னும் போக வேண்டிய தூரம் ஏராளம்.

ஒரு ஏழையாக, விளிம்பு நிலை மனிதர்களாக, வீடற்று தெருவில் வாழ்பவர்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் போதும் அரசின் சில சேவைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பது சரியே. ஆனால் அவர்களின் அந்த நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலேயே அதிகம் என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

பெண்கள் வேலைக்கு போவது பற்றி நல்ல ஒரு பார்வை கோஷான். வேலை என்பதை ஒரு அங்கீகாரம் என்று நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. பல இடங்களில் அது ஒரு காலத்தின் கட்டாயம் என்றும், ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு ஏற்ற முடிவை தெரிவு செய்து கொள்ளுகின்றார்கள் என்றுமே நினைத்திருந்தேன்.

இந்த சிந்தனைக்கோணம் நானும் கேட்டறிந்து கொண்ட ஒன்றேதான். பெரியார் தளைகளை தூக்கி எறிந்து விட்டு வேலைக்கு போ என சொன்னார் என வாசித்த போது அதை மேலோட்டமாக சம உரிமைக்கான அறைகூவல் என்றே கடந்து விட்டிருந்தேன்.

ஆனால் பின்னாளில் ஒருவர் கண்தெரியாது, அவருக்கு தடவி உணர்ந்து, தொடுகை மூலம் வாசித்து வேலை செய்ய பல கருவிகளை, ஒரு உதவியாளரை அரசு பலத்த செலவில் செய்த விடயத்தில் ஏன் அவருக்கு வீட்டில் இருக்க கொடுக்கும் காசை விட பலமசடங்கு அதிக காசை செலவழித்து வேலை செய்ய வைக்கிறார்கள் என ஆராய்ந்த போது அறிமுகமானதே இந்த dignity of work என்ற விடயம். இதில் ஒரு விடயம் - work itself is dignity, வேலை என்பதே ஒரு மரியாதைதான் என்பது.

இதை முழுவதுமாக புரிந்து கொண்ட பின், படி, வேலைக்கு போ, டிரவுசர் போட்டுகோ, நீ பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல என பெரியார் சொன்னது, அதன் முழுப்பரிமாணத்தில் விளங்கியது.

எல்லா புகழும் கிழவன் ஒருவனுக்கே ❤️.

2 hours ago, ரசோதரன் said:

பல நாடுகள் 80% தாண்டிவிட்டன.

என்னை பொறுத்த மட்டில் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிய நாடுகள் எண்டால் ஸ்கெண்டிநேவிய நாடுகள் தான்.

அமெரிக்கா, யூகே எல்லாம் பணக்காரர் நாடுகள்.

2 hours ago, ரசோதரன் said:

இத்தாலியில் எவருமே, ஆணோ பெண்ணோ, வேலை செய்வதில்லை என்று இங்கே பகிடியாகச் சொல்லுவார்கள்.............. அட்டவணையில் அதுவும் தெரிகின்றது

😂 கிரீசில் மைனசில் போகும் என நினைக்கிறேன்😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஆனால் அவர்களின் அந்த நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலேயே அதிகம் என்று நினைக்கின்றேன்.

அமெரிக்கன் டிரீம் - நிச்சயமாக இது உண்மை.

ஆனால் விளிம்புநிலையில் பிறந்து, விளிம்பு நிலையிலே இறப்பவருக்கு ஐரோப்பா, இலங்கை, அமெரிக்கா என்பதே வரிசை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

இது ஒரு திட்டமிட்ட நிதி அபகரிப்பு என்றே நினைக்கத் தோன்றுகின்றது

இந்த வார இறுதி முழுவதும் வேலை, இந்த நிறுவனத்தின் வரலாற்று பதிவினை இங்கிலாந்து அரச நிறுவன பதிவேட்டு பகுதியினை இணைத்துள்ளேன்.

குறித்த நபர் மார்ச் மாதம் முதலாம் திகதி 2021 இல் நிறுவனத்தின் அதிபராக பதவியேற்றுள்ளார், நேரமின்மையால் முழுமையாக பார்க்கவில்லை, இது ஒரு சரியான புரிதலை கள உறவுகளுக்கு கொடுக்கும் என நம்புகிறேன், வேலை இடைவேளையில் இதனை பார்க்க முற்படுகிறேன்.

https://find-and-update.company-information.service.gov.uk/company/00564599

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

இது ஒரு திட்டமிட்ட நிதி அபகரிப்பு என்றே நினைக்கத் தோன்றுகின்றது

2 hours ago, vasee said:

இந்த வார இறுதி முழுவதும் வேலை, இந்த நிறுவனத்தின் வரலாற்று பதிவினை இங்கிலாந்து அரச நிறுவன பதிவேட்டு பகுதியினை இணைத்துள்ளேன்.

குறித்த நபர் மார்ச் மாதம் முதலாம் திகதி 2021 இல் நிறுவனத்தின் அதிபராக பதவியேற்றுள்ளார், நேரமின்மையால் முழுமையாக பார்க்கவில்லை, இது ஒரு சரியான புரிதலை கள உறவுகளுக்கு கொடுக்கும் என நம்புகிறேன், வேலை இடைவேளையில் இதனை பார்க்க முற்படுகிறேன்.

https://find-and-update.company-information.service.gov.uk/company/00564599

வாத்தியார்!

இந்த கட்டுரைகளை வெறுமனே மொழி மாற்றம் செய்துள்ளேன், இன்னமும் வாசிக்கவில்லை, அதற்க் முன்னர் வியாபார பதிவேட்டினை பார்ப்போம் எனும் முயர்சியில் (அதனை இங்கும் இணைத்துள்ளேன்) பார்த்த போதுதான் இந்த நிறுவனம் இங்கு குறிப்பிடும் இந்த நிறுவன அதிபர் பிறப்பதற்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்ன்னர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது (1956) என தெரியவந்தது.

இந்த இடைப்பட்ட காலங்களில் பல அதிபர்கள் பணியாற்றி சுயமாக வேலையில் இருந்து விலகி உள்ளார்கள்.

ஒரு 5 நிமிடம் மட்டுமே இந்த நிறுவன வரலாற்றினை பார்த்துள்ளேன் அதன் பிரகாரம் இங்கு கூறப்படுவது போல இந்த நிறுவனத்தினை இவர் மோசடி செய்வதற்காக இவர்தான் ஆரம்பித்தார் எனும் வாதம் சரி வருமா தெரியவில்லை.

வேலை தொடங்குவதற்கு சில் நிமிடங்கள் உள்ளமையால் அதனை பார்க்கவில்லை ஆனால் கள உறவுகளே அந்த இணைப்பினை சொடுக்கி அதில் உள்ள விபரங்களை பார்த்து உங்கள் கருத்தினை பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

Buy side எனும் புத்தகத்தில் இவரது நிறுவனத்தில் வேலை செய்தவரின் வாழ்க்கை வரலாற்றில், ராஜரட்ணத்தினைப்பற்றியும் குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது மறுபக்க பார்வை கொண்டது.

அமேசனில் இந்த புத்தகம் உள்ளது ஒலி வடிவிலும் உள்ளது, இலவச பிரதிகள் இணையத்தில் இருக்கக்கூடும்.

ராஜரட்ணம் செய்தது சட்டப்படி குற்றம். அதுக்காக சிறையும் சென்று வந்தார். அவரின் உலகத்தில் எல்லோரும் அவர் செய்த உள்ளக விளையாட்டைச் செய்கிறார்கள். மாட்டுப்படும் வரை செய்வார்கள். அவரின் உலகில் இரண்டே வகை ஆக்கள்தான். ஒருவன் மாட்டுப்பட்டவன். மற்றையவன் மாட்டுப்படாதவன். அவர்கள் மத்தியில், இது ஒரு பிரபல்யமான சுலோகம். சட்டத்தின் முன் எல்லோரும் குற்றவாளிகள்தான்.

Billions என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் உள்ளது. சந்தர்ப்பம்/வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2025 at 08:33, goshan_che said:

இப்படி இது கிரிமினல் வழக்காகி, குற்றம் தீந்தால் - சொந்த சொத்துக்கள் கூட proceeds of crime என எடுக்கப்படலாம். கட்டாயம் எடுக்கப்படும் என்பதில்லை.

இதனால்தான் இருப்பது அனைத்தையும் இப்போதே விற்று விட்டு அல்ல மார்கெட்டில் போட்டு விட்டு ஓட்டம் எடுத்துள்ளனர்.

ஆனால் தலைமறைவு வாழ்க்கைதான் இலக்கு எண்டால் - இலங்கை பாதுகாப்பு இல்லை. யூகே, இலங்கை இடையா நாடுகடத்தும் ஒப்பந்தமுண்டு. கியூபா, ஈக்குவடோர் எண்டு போனால்தான் தப்பலாம். அல்லது பிரேசில் போய் ஒரு லோக்கல் ஆளை கலியாணம் செய்ய வேண்டும்.

குற்றம் என்று நிருபிக்கப்பட்டால், மற்றவர்கள் பெயரில் மாற்றினாலும், எடுத்து விடுவார்கள். எனக்கென்றால், இந்த வழக்கு, பூசி மெழுகப்படும் என்றே நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.