Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picsart_25-10-30_08-46-33-152-780x927.jpg

கலாபூஷணம் பரீட் இக்பால்

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து,   சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன.

35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன.

எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.

புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்.நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?

ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.

பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.

பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது……

ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று சாதாரணமாக கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதல் அளித்தாலும் பலவந்த வெளியேற்றத்தை நினைத்ததும் உள்ளங்கள் கொதித்தன.

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது யாழ் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈட்டுடன் கூடிய மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றம் நிகழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!!
கலாபூஷணம் பரீட் இக்பால்-

யாழ்ப்பாணம்.

https://madawalaenews.com/30874.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..!

Vhg அக்டோபர் 30, 2025

AVvXsEg8ykDNBKcGJcSRXZ2UT5y3CUyrzIgopl8y28uq3FIXbidtJ76VlOC1sRnLdBhL_KKoU2JyaLy2D-oSKyBbmM51byZQkzr4tvCFpq2x4b91cWOqYQ0m27pQsIFZ2yZ35p-5ElUAMHWqJkBNL5f0e9dQOtRS0_aRKNCSNcK9JSik-MBiORqQR_qgvKwClUMK

யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம்.

நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது.

ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.?

அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது?

இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும்.

அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும்

ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர்.

இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு.

தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு.

இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார்.

இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள்.

இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது.

அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர்.

இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர்.

எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது.

-பா.அரியநேத்திரன்-

https://www.battinatham.com/2025/10/35.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இவர்களை மீள் குடியேற யார் தடுக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர்.

எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர்.

இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

. கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர்.

5 hours ago, colomban said:

தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட.

வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும்.

5 hours ago, colomban said:

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள்.

புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்+

இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன்.

இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை:

"தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது"

முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள்

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

On 2/9/2025 at 09:28, நன்னிச் சோழன் said:

பாகம் - 10

“தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது” என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: “இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே  ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்” என்று கூறினான் என்றார்.

முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார்.

தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன்.

தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார்.

தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன்.

அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன்.                                         

(தொடரும்)

இந்து நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம்.

சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:

  • கருத்துக்கள உறவுகள்+

ஆண்டாண்டாய் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போன்று முஸ்லிம்கள் வேடமிடுவதும் அதற்கு தமிழர்கள் மண்டியிடுவதையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. மற்றது, முஸ்லிம்கள் எப்படி ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கியுள்ளர்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த வெளியேற்றத்திற்கு புலிகளை தூண்டியவர்கள்/ இட்டுச் சென்றவர்கள் இவர்களின் இனத்தவர்களே. எனினும் அதனை மறந்து தாம் இழைந்த அநீதிகளை எல்லாம் ஒளித்துவிட்டு என்றென்றும் தமிழர் தரப்பு மேல் குற்றம் சொல்வதும் அதற்கு தமிழர்களின் சல்லிக் காசு அரசியல்வியாதிகள் ஓமென்று தலையாட்டுவதும் வேதனையானது.

எம்மவர்கள் கொஞ்சமேனும் சிரத்தையெடுத்து முஸ்லிம்களின் இந்த "நல்ல பிள்ளை" வேடத்தை குலைக்க வேண்டும்.

மேலும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் இந்த விடையத்தில் தம் அறிவை பெருக்க வேண்டும். சும்மா தம் பிரதேசவாத வாயால் தென் தமிழீழ தமிழர்களை இந்த விடையத்தில் குறை சொல்வதை நிறுத்த வேண்டும். ஒழுங்கான வரலாற்றை அறிய வேண்டும்; இந்த வெளியேற்றத்திற்கான முக்கிய காரணிகளை! இல்லையேல் எமது தலையில் தொடர்ந்து மிளகாய் அரைப்பார்கள், சோனகர்கள்.

1954இல் வீரமுனையை வேண்டுமென்று எரித்து விட்டு கண்கலங்கி அழுவது போல் பாசாங்கு செய்தவர்கள் இந்த சோனகர்கள் தான். மறக்க கூடாது. என்றாலும் 99 வீதமான தமிழர்கள் மறந்தே விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலிகள் செய்த செயல்களுக்கு தமிழர்கள் பொறுப்பேற்க முடியாது. அதே போல இலங்கை இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்பட்ட முஸ்லீம் ஊர்காவற்படை செய்த செயலுக்கு முஸ்லீம் மக்களும் பொறுப்பேற்க முடியாது.

செய்தியில் கூட பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் என்று தான் கூறப்பட்டிருகிறதே தவிர தமிழர்கள் எடுத்த தவறான முடிவால் என்றோ, தமிழர்கள் தான் இதற்கு பொறுப்பு என்றோ கூறப்படவில்லை. எனவே, இது போன்ற விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இந்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வாழும் தமிழ் மக்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர்.

எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர்.

இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.

பொதுவாக இந்த இடப்பெயர்வுகள் அகதிகளாக துரத்தப்படுவது நாளாந்த நிகழ்வான இரு சமூகங்களுக்கும் பொதுவான ஒரு நிகழ்வு, சிலர் அதனை மீட்டி பார்க்கிறார்கள் சிலர் அது அவர்களுக்கு வாடிக்கையான விடயமாக இருப்பதனால் அதனை இலகுவாக கடந்து செல்கிறார்கள்.

ஆனால் இவர்களது வலிகள் உண்மையானவை அது அவர்களின் மனங்களில் இருந்து நீங்காமல் இருப்பதற்கு காரணம் ஒரு வலியினை விட அதிக வலியினை உணரும் போது அதிகமான வலி குறைவான வலியினை புறந்தள்ளி விடுகிறது, இந்த இடப்பெயர்வு இஸ்லாமியர்களின் அதிக உயர் பட்ச வலியாக இருக்கிறது.

இந்த வலியினை எம்மால் உணரமுடியாமல் இருப்பதற்கு காரணம் பல மோசமான வலிகளை கடந்து வந்தமையால் இருக்கலாம், அதனால் அவர்களது வலி இல்லை என்றாகி விடுமா?

தமது வலிகளை நினைவு கூறுவது எவ்வாறு தவறாகும்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

மிகவும் காத்திரமான கருத்து.

நான் அவர்களின் வலியை இல்லை என சொல்லவில்லை.

ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய சேர்க்கையை கொண்டு வருவதுதான்….

இவர்களின் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் இதை பெருபித்து காட்டவிளைகிறார்களோ என எண்ண வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல.

ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல.

புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது.

அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே.

பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன.

ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள்.

ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர்.

ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது.

புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும்.

உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும்.

கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும்.

இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு.

இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது.

ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான்.

உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை.

கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம்.

ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.

எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

.

புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும்.

உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும்.

கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும்.

இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு.

இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது.

ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான்.

உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை.

இதை நான் வழிமொழிகிறேன்.

மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும்.

முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது.

எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால்,

  1. அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம்.

  2. பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும்.

  3. எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம்.

  4. நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும்.

  5. வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும்.

இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன்.

இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும்.

இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓

😂 வாலி சார் நீங்க அடிவாங்கணுண்னு முடிவெடுப்பது உங்கள் சுதந்திரம் வாலி சார் 😂

2 hours ago, நன்னிச் சோழன் said:

இதை நான் வழிமொழிகிறேன்.

மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும்.

முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது.

எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால்,

  1. அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம்.

  2. பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும்.

  3. எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம்.

  4. நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும்.

  5. வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும்.

இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன்.

இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும்.

இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.

சரியான முன்னோக்கிய பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முஸ்லிம் இளைய சந்ததி மேலே நன்னி எழுதியது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

நினைவுகூரல் என்பது never again என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும்.

Never again என்றால் பரஸ்பர வதைகளுக்கு மட்டும் அல்ல.

1990 இல் இனமுறுகலுக்கு தூபம் போட்ட, காணி அடிப்படையிலான பிண்ணக்கு, 60,70 களிலேயே கிழக்கில் ஆரம்பித்து விட்டது.

இன்றும் அப்படியே இருக்கிறது.

அஷ்ரப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் - 70களில் புதுக்கடையில் வக்கீல் அலுவலகம் வைத்திருப்பாராம். ஜூனியர் தமிழ் வக்கீல்கள் தேனீருக்கு காசில்லை எனில், கையில் உள்ள ஒரு பழைய சுதந்திரன் பேப்பருடன் அவரின் அலுவலகம் போனால் காணுமாம்.

சுதந்திரன் தமிழ் தேசிய அபிலாசைக்கு எதிரான பத்திரிகையாம். அதை கண்டது சினம் கொள்ளும் அஷ்ரப், இந்த குப்பையை ஏன் வாசிக்கிறீர்கள் என கடிந்து கொண்டு, சிலமணிநேரம் தமிழரசு கட்சியின் கொள்கை பற்றி விளக்கம் கொடுப்பாராம். கூடவே வடையும் தேனீரும்.

இதே அஷ்ரப். ஒரு பழைய பேப்பரை ரயிலின் கதவடியில் வச்சு, அதன் மேல் அமர்ந்து கிழக்கை விட்டு வெளியேற நேர்ந்ததாக பின்னாளில் மேடையில் பேசி உள்ளார்.

இந்த கசப்புகளில் இருந்து அவர்களை மீட்டு, சகோதரதுவத்தை வளர்க்க முஸ்லிம் இளையோர் முன்வரல் வேண்டும்.

அதே போல் தமிழ் இளையோர் மீதும் ஒரு கடமை உள்ளது.

என்னை பொறுத்தவரை தமிழர்கள் முதலில் முஸ்லிம்களை வந்தான் வரத்தான் என நினைப்பதையும், அவர்கள் ஒரு இனமே அல்ல என மறுதலிப்பதையும் கைவிட வேண்டும்.

இதுவே இந்த பிரச்சனையின் ஆரம்பம்.

நீங்கள் என்ன நினைத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் கிட்டதட்ட ஈழவம்சாவளி தமிழரை நெருங்கி விட்ட ஒரு இனக்குழு.

அவர்களை இலங்கை அரசியலமைப்பே அப்படி ஏற்கிறது.

இதை நாம் மறுதலித்து அவர்களை எம்முள் அடக்கும் வேலை 80க்கு பின் ஒருபோதும் சரி வராததொன்று.

ஆகவே அவர்களை ஒரு சக இனமாக மதித்து பேச்சுவார்த்தைக்கு போவதே நடக்ககூடியது.

உங்கள் அங்கீகாரம் அவர்களுக்கு தேவையே இல்லை.

ஆனால் இதை அங்கிகரிக்க மறுத்தால் ஒரு அடி கூட நகர முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாக இருதரப்பும், நம்ப நட, நம்பி நடவாதே அடிப்படையில் காணி உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை எட்ட வேண்டும்.

முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெருகுகிறார்கள், என்றால் அது அவர்கள் இஸ்டம். முடிந்தால் நீங்களும் பெருக்குங்கள்.

அதேபோல் மகிந்தவின் இரெண்டாம் ஆட்சியில் அபாயா களைவு உச்சத்தில் இருந்த போது - மிக கீழதரமாக யாழில் பேரினவாதிகளின் செயலை ஆதரித்து எழுதியதை எல்லாம் நாமும் நினைத்து பார்க்க வேண்டும். கொழும்பில் பொட்டை அழித்து விட்டு பஸ் ஏறிய காலத்தை கடந்து வந்த நாமே, அபாயா களைவை ஆதரித்து எழுதியது அசிங்கமானது.

அண்மையில் கூட செருப்புதைக்கும் முஸ்லிம்களிடம் தங்கம் ஏது என ஒரு பொன்மொழி இங்கே உதிர்க்கப்பட்டது.

இது முஸ்லிம்கள் மீது மட்டும் அல்ல, கிழக்கு தமிழர்கள், மலையக, மேலக தமிழர்கள் மீதும் கொட்டப்படும் விசம்தான். சில சமயங்களில் வடக்கு கிறிஸ்தவ தமிழர் மீதும் கூட கொட்டப்படும்.

நாம் ஒரு இனஒதுக்கலுக்கு உள்ளாகும் இனம் என்பதால் மட்டும், நாமே ஒரு ஒதுக்கும் இனம் என்பது இல்லை என்றாகி விடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மிகவும் காத்திரமான கருத்து.

நான் அவர்களின் வலியை இல்லை என சொல்லவில்லை.

ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய சேர்க்கையை கொண்டு வருவதுதான்….

இவர்களின் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் இதை பெருபித்து காட்டவிளைகிறார்களோ என எண்ண வைக்கிறது.

ஏன் முஸ்லீம்கள் இதுவரை தமது தவறுக்கு மன்னிப்பு கோராமல் தொடர்ந்து தமிழ் தரப்பினரை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்கு எனது புரிதலின்பட, ஒரு சிறுபான்மை இனமான தமிழர்களை பெரும்பான்மையினருடன் இணைந்து அதே போல கொடுமைகள் செய்தனால் ஏற்பட்ட குற்ற உணர்வாக இருக்கலாம்.

அது தவறீனை ஏற்காமல் தாமே பாதிக்கப்பட்டவர்கள் என ஒரு புதிய வரலாறை உருவாக்க முயல்வதன் நோக்கம், இலங்கையில் எந்த சிறுபான்மையும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உண்மையினை காலம் தாழ்த்தி உணர்ந்துள்ளார்கள் (தமிழர்களுக்கு நிகழ்ந்தது போல தமக்கு நிகழாது என நினைத்தது).

சிறுபான்மையினர் பாதுகாப்பாக இலங்கையில் வாழ வேண்டுமானால் அவர்களுக்கிடையேயான வேற்றுமையினை களைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும், அதற்கு இந்த முயற்சிகள் உதவாது மேலும் தடையாகவே இருக்கும்.

அனைத்து மதங்களும் மனிதர்களை சிந்திப்பதனை அநுமதிப்பதில்லை, பல மூட நம்பிக்கைகளை அடிப்படையாக மதங்களின் நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அதன் ஆணி வேரை ஆட்டி பார்க்கும் சிந்தனைகளை உருவாக்குபவர்களை மதம் தனது எதிரியாக பாவித்து அழித்த வரலாறுகள் உள்ளது.

எந்த மதமானாலும் அதனை கேள்விக்கிடமின்றி ஒரு ஒட்டு மொத்த சமூகமும் ஆதரிக்கின்றது என்றால் அந்த சமூகம் ஒரு ஆபத்தான எதிர்காலம் உள்ள சமூகமாக காணப்படுகிறது.

வேகமாக சிந்திக்கும் அமைதியற்ற சமூகமாக உருவெடுத்து இறுதியில் தம்மை அழிவிற்குள்ளாக்குகிறார்கள் (நான் கூறுவது எமது சமூகத்தினை).

பேரினவாதத்துக்கு எதிராக எவ்வாறு எதிர்வினையாற்றினோமோ அதே போல பேரினவாத்துடன் இணைந்தவர்களுக்கெதிராக எதிர்வினையாற்றிய விடயங்களே தற்போது பேசு பொருளாக உள்ளது, தற்போதும் இதற்கு எதிர்வினையாற்றினால் எந்த மாற்றமும் ஏற்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

அருமை.

  • கருத்துக்கள உறவுகள்+
45 minutes ago, vasee said:

சரி ஐயனே, அப்ப இந்த விடையத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

2 hours ago, goshan_che said:

அடுத்த முஸ்லிம் இளைய சந்ததி மேலே நன்னி எழுதியது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

நினைவுகூரல் என்பது never again என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும்.

Never again என்றால் பரஸ்பர வதைகளுக்கு மட்டும் அல்ல.

1990 இல் இனமுறுகலுக்கு தூபம் போட்ட, காணி அடிப்படையிலான பிண்ணக்கு, 60,70 களிலேயே கிழக்கில் ஆரம்பித்து விட்டது.

இன்றும் அப்படியே இருக்கிறது.

அஷ்ரப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் - 70களில் புதுக்கடையில் வக்கீல் அலுவலகம் வைத்திருப்பாராம். ஜூனியர் தமிழ் வக்கீல்கள் தேனீருக்கு காசில்லை எனில், கையில் உள்ள ஒரு பழைய சுதந்திரன் பேப்பருடன் அவரின் அலுவலகம் போனால் காணுமாம்.

சுதந்திரன் தமிழ் தேசிய அபிலாசைக்கு எதிரான பத்திரிகையாம். அதை கண்டது சினம் கொள்ளும் அஷ்ரப், இந்த குப்பையை ஏன் வாசிக்கிறீர்கள் என கடிந்து கொண்டு, சிலமணிநேரம் தமிழரசு கட்சியின் கொள்கை பற்றி விளக்கம் கொடுப்பாராம். கூடவே வடையும் தேனீரும்.

இதே அஷ்ரப். ஒரு பழைய பேப்பரை ரயிலின் கதவடியில் வச்சு, அதன் மேல் அமர்ந்து கிழக்கை விட்டு வெளியேற நேர்ந்ததாக பின்னாளில் மேடையில் பேசி உள்ளார்.

இந்த கசப்புகளில் இருந்து அவர்களை மீட்டு, சகோதரதுவத்தை வளர்க்க முஸ்லிம் இளையோர் முன்வரல் வேண்டும்.

அதே போல் தமிழ் இளையோர் மீதும் ஒரு கடமை உள்ளது.

என்னை பொறுத்தவரை தமிழர்கள் முதலில் முஸ்லிம்களை வந்தான் வரத்தான் என நினைப்பதையும், அவர்கள் ஒரு இனமே அல்ல என மறுதலிப்பதையும் கைவிட வேண்டும்.

இதுவே இந்த பிரச்சனையின் ஆரம்பம்.

நீங்கள் என்ன நினைத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் கிட்டதட்ட ஈழவம்சாவளி தமிழரை நெருங்கி விட்ட ஒரு இனக்குழு.

அவர்களை இலங்கை அரசியலமைப்பே அப்படி ஏற்கிறது.

இதை நாம் மறுதலித்து அவர்களை எம்முள் அடக்கும் வேலை 80க்கு பின் ஒருபோதும் சரி வராததொன்று.

ஆகவே அவர்களை ஒரு சக இனமாக மதித்து பேச்சுவார்த்தைக்கு போவதே நடக்ககூடியது.

உங்கள் அங்கீகாரம் அவர்களுக்கு தேவையே இல்லை.

ஆனால் இதை அங்கிகரிக்க மறுத்தால் ஒரு அடி கூட நகர முடியாது.

இன்னுமொன்று என்னவென்றால்,

புலிகளே இவர்களை தனிச் சமூகமாக 1988/1989 இல் ஏற்று அறிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நன்னிச் சோழன் said:

புலிகளே இவர்களை தனிச் சமூகமாக 1988/1989 இல் ஏற்று அறிவித்தார்கள்.

இது நான் அறியாதது.

தகவலுக்கு நன்றி.

ஆதாரம் தந்தால் மகிழ்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நன்னிச் சோழன் said:

சரி ஐயனே, அப்ப இந்த விடையத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

இதெல்லாம் ஒரு விடயமே இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, goshan_che said:

இது நான் அறியாதது.

தகவலுக்கு நன்றி.

ஆதாரம் தந்தால் மகிழ்வேன்.

Book: The Satanic Force, Volume 1, 1988 April

Page no: 747

  • கருத்துக்கள உறவுகள்+

"• It is understood that although the Muslim people living in Sri Lanka speak the Tamil language, they are a distinct ethnic group falling within the totality of Tamil nationality.

• The Muslim people recognise that the area composed of the northern and eastern provinces is as much their traditional homeland as it is of the rest of the Tamil-speaking people."

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்னி.

இதுவும் கூட தமிழ் தேசிய பேரினத்தில் அடங்கும் இனக்குழு எனவே முஸ்லிம்களை அழைக்கிறது.

முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இலங்கை சோனகர், இலங்கை தமிழருக்கு நிகரான ஒரு இனம். என்பதே அவர்கள் நிலைப்பாடு.

நாம் 12% அவர்கள் 10% எனும் போது, அவர்கள் வாழும் இடங்கள் அவர்களினதும் மரபுவழி நிலப்பரப்புத்தான் எனும் போது, இது நியாயமான கோரிக்கை போலவே எனக்கு படுகிறது.

என்ன நாம் போராடினோம் அவர்கள் போராடவில்லை.

ஆனால் போராடினோமா இல்லையா என்பதல்லவே உரிமை உள்ளதா இல்லையா என்பதன் அளவுகோல்?

2 minutes ago, நன்னிச் சோழன் said:

"• It is understood that although the Muslim people living in Sri Lanka speak the Tamil language, they are a distinct ethnic group falling within the totality of Tamil nationality.

• The Muslim people recognise that the area composed of the northern and eastern provinces is as much their traditional homeland as it is of the rest of the Tamil-speaking people."

  • கருத்துக்கள உறவுகள்+
54 minutes ago, goshan_che said:

இதுவும் கூட தமிழ் தேசிய பேரினத்தில் அடங்கும் இனக்குழு எனவே முஸ்லிம்களை அழைக்கிறது.

முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இலங்கை சோனகர், இலங்கை தமிழருக்கு நிகரான ஒரு இனம். என்பதே அவர்கள் நிலைப்பாடு.

ஓமோம் ஐயனே, இங்கு கவனிக்க வேண்டியது, அவர்களை தனி இனக்குழுவாக (ethnicity/ethnic group) புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்பதுவே. இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் - சிங்களவரும் தமிழரும் போன்று - தனித் தனியான இனக்குழுக்களாக பிரிந்திருப்பதை தாம் ஏற்பதாகவே தவிபு கூறியுள்ளனர். எனவே அவர்களை தமிழர்களோடு சேருமாறு வற்புறுத்துவது என்பது எப்படி சரியென்று எனக்கு தெரியவில்லை.

மேலும் இவ்விரு தமிழ் பேசும் இனக்குழுக்களும் "தமிழ் தேசிய மொத்தத்தின்" (Totality of Tamil nationality) கீழ் அடங்குகின்றனர்.

(பேரினம் என்னும் சொல் தமிழில் Genus என்பதைக் குறிக்க பாவிக்கிறார்கள், ஆகையாலே மாற்றுச் சொல்லை பரிந்துரைத்தேன்)

1 hour ago, goshan_che said:

நாம் 12% அவர்கள் 10% எனும் போது, அவர்கள் வாழும் இடங்கள் அவர்களினதும் மரபுவழி நிலப்பரப்புத்தான் எனும் போது, இது நியாயமான கோரிக்கை போலவே எனக்கு படுகிறது.

ஆம், புலிகளே ஏற்ற பின்னர் நானும் அதை எதிர்க்க போவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.