Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

October 31, 2025 8:38 am

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது.

2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாடுபூராகவும் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது.

2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர்.

இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது.

மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர்.

மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர்.

https://oruvan.com/sri-lankas-population-reaches-21-million-males-make-up-48-3/

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட ரீதியிலான சனத்தொகைப் பரம்பல்

யாழ்ப்பாணம் - 584,000

large.IMG_4131.jpeg

இன ரீதியிலான சனத்தொகைப் பரம்பல்

சிங்களவர் - 74.9%

இலங்கைத் தமிழர் - 11.1%

மலையகத் தமிழர் - 4.1%

முஸ்லிம் - 9.3%

ஏனையோர் - 0.5%

large.IMG_4132.jpeglarge.IMG_4134.jpeglarge.IMG_4133.jpeg

சமய ரீதியிலான பரம்பல்

பெளத்தர் - 70.1%

இந்து - 12.6%

இஸ்லாம் - 9.7%

கத்தோலிக்கர் - 6.2%

பிற கிறீஸ்தவர் - 1.4%

large.IMG_4135.jpeglarge.IMG_4137.jpeglarge.IMG_4136.jpeg

https://www.statistics.gov.lk//Resource/en/Population/CPH_2024/Population_Preliminary_Report.pdf

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சனத்தொகையில் எந்த மாவட்டத்தில் அதிக சனத்தொகை - முழு விபரம் 

Published By: Digital Desk 3

31 Oct, 2025 | 04:44 PM

image

இலங்கையின் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டுகிறது. இருப்பினும், 2020 ஆண்டின் போது முகங்கொடுக்க நேரிட்ட கொவிட்தொற்று மற்றும் அதற்கு பின்னர் முகங்கொடுக்க நேரிட்ட நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இத் தொகைமதிப்பானது 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

முதலாவது கட்டம்

"வரைபடம் தயாரிக்கும் கட்டம்" என அழைக்கப்படுவதுடன் அதன் போது நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் பிரிவினை அடிப்படையாக கொண்டு "தொகைமதிப்புக் கண்டம்" எனும் பெயரில் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. 

இரண்டாவது கட்டம் 

"நிரற்படுத்தும் கட்டம்” இதன்போது தொகைமதிப்புக் கண்ட வரைப்படங்களைப் அடிப்டையாக் கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள சகல கட்டடங்கள் மற்றும் அவற்றினுள் உள்ள தொகைமதிப்புக் கூறுகளை, ("வீடு","கூட்டு வசிப்பிடம்","வதிவிட நிறுவனம்", மற்றும் "வசிப்பிடம் அல்லாத கட்டடக் கூறு"என வகைப்படுத்தி) அடையாளங்கண்டு அதற்கான இலக்கம் ஒன்றினை வழங்கி நிரற்படுத்தப்பட்டது. இதன்போது அடையாளங்காணப்பட்ட சகல தொகைமதிப்புக் கூறுகளுக்கும் சிவப்பு நிறத்தினால் ஆன தொகைமதிப்பு லேபல் ஒன்று ஒட்டப்படும்.

மூன்றாவது கட்டம்

அவ்வாறு தயாரிக்கப்பட்ட தொகைமதிப்புக் கூறுகளின் பட்டியலுக்கு ஏற்ப மூன்றாவது கட்டத்தின் போது தனி நபர் மற்றும் வீட்டுவசதிகள் தொடர்பான தகவல் சேகரிப்பானது 2024 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 2025 ஆண்டு பெப்ரவரி மாதம் வரை 19 ஆம் திகதி அல்லது (2024 டிசம்பர் 18 ஆம் திகதி அவ்வாறு சேகரிக்கப்பட்ட மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "தொகைமதிப்பு தினம்" உதயமாகும் கணம் அதாவது 00.00 மணி நள்ளிரவு 12.00) "தொகைமதிப்புக் கணம்" என கருதப்படும். தகவல்கள் தொகைமதிப்புக் கணத்தினை அடிப்படையாக கொண்டு இற்றைப்படுத்தப்படும். இறுதிக் கட்டத்தின் போது சேகரிக்கப்படும் வெளியிடப்படும். தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு லங்கையில் தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, இம் முறை தொகைமதிப்பில் தரவு சேகரிப்பு செயல்முறை கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. நபர்களின் வாழ்க்கைத் தகவல்கள், கல்வி, எழுத்தறிவு, உடல் மற்றும் மன நிலைமைகள். குடிபெயர்வு நிலை போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு நபரிடமிருந்தும் தனித்தனியாகப் பெறப்பட்டன. 

அதன்படி. ஒட்டுமொத்தமாக ஒரு தனிநபரின் சமூக, பொருளாதார மற்றும் மக்களியற் தகவல்களின் தொகுப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் மூலம் டிப்படையாகக் கொண்டு முதலாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிறப்பு, இறப்பு மற்றும் வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கமையத் திருத்தங்கள் இரண்டாவது சுற்றின் போது மேற்கொள்ளப்பட்டது. இது 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து 2024 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களைக்கொண்ட காலத்தினுள் மேற்கொள்ளப்பட்டது.

2024 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புத் தகவல்களுக்கு ஏற்ப இலங்கையின் சனத்தொகை மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கூறுகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக 2025.10.30 ஆம் திகதி அன்று தெகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

சனத்தொகைப் பரம்பல் மற்றும் ஆண்,பெண், பாலின அமைப்பு

2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையினை நகரம், கிராமம், மற்றும் பெருந்தோட்டம் எனும் மூன்று பிரிவுகளாக பிரித்து தரவு சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், 2024 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது அவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு நகரம், கிராமம், நகரப் பெருந்தோட்டம், மற்றும் கிரமியப் பெருந்தோட்டம் என நான்கு பிரிவுகளாக தரவு சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த நான்கு பிரிவுகளும் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டன.

நகரப் பெருந்தோட்டப் பிரிவு

மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும்.

கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு

பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும்.

நகரப் பிரிவு

மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, “நகரப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும்.

கிராமப் பிரிவு

பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, “கிராமியப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும்.

2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது மாநகர சபை மற்றும் நகர சபையின் மூலம் நிர்வாகிக்கப்படுகின்ற சகல பிரதேசங்களும் "நகரப் பிரிவு" என்றும், அதன்படி 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது "நகர- பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள், 2012 ஆம் ஆண்டின் போது “நகரப் பிரிவு” என்பதன் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, 2012 தொகைமதிப்பின் போது “பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள் 2024 தொகைமதிப்பின் போது கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு என கருதப்பட்டுள்ளது. “கிராமம்” எனும் பிரிவை அடையாளங்காண்பதில் 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை. அதன் பிரகாரம் பிரிவு அடிப்படையிலான சனத்தொகையைப் போன்று மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை விபரங்கள் அட்டவணை 1 இன் மூலம் காட்டப்பட்டுள்ளது.

2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. 2012 தொகைமதிப்பின் போது பதிவாகிய 20,359,439 சனத்தொகையை விட இம் முறை சனத்தொகையானது 1,422,361 இனால் அதிகரித்து காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது கிராமப் பிரிவின் சனத்தொகை 1,343,596 இனால் அதிகரித்தும், நகரப் பிரிவின் சனத்தொகை 114,733 இனால் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பெருந்தோட்டப் பிரிவுகளில் மாத்திரம் 35,968 சனத்தொகையில் குறைவடைந்திருப்தைக் காணலாம்.

சனத்தொகையின் 'பாலின அமைப்பு' என்பது பாலினத்தின்படி சனத்தொகைகுள் நபர்களின் பரவலாகும். இம்முறைத் தொகைமதிப்பிலே கணக்கிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையினை விட 757,112 இனால் அதிகமாக காணப்படுகிறது. விகிதாசாரமாகக் காட்டினால் இலங்கையின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 51.7 வீதம் பெண்களாவர் என்பதுடன் நூற்றுக்கு 48.3 வீதம் ஆண்களாவர்.

2012 தொகைமதிப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை நகரம் மற்றும் கிராமப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் பெருந்தோட்டப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் அதிகமாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் போது, நகரப் பிரிவுகளில் பெண்களின் சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

சனத்தொகைத் தகவல்கள்

இம்முறை தொகைமதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781,800 என பதிவாகியுள்ளது. அதில், 51.7 சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். நாட்டில் 15 வயதிற்கும் குறைந்தவர்களின் சனத்தொகை 2012-2024 ஆண்டிற்கான தொகைமதிப்புக் காலவரையறையினுள் 25.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாக 4.5 சதவீத அலகுகளில் குறைந்துள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகை 7.9 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக 4.7 சதவீத அலகுகளினால் அதிகரித்துள்ளது.

ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக காணப்படுகிறது, இது 2012 இல் 66.9 சதவீதமாக காணப்பட்டது. அதன்படி 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகைக்கான சதவீதம் 2012-2024 தொகைமதிப்பு காலவரையறையினுள் இந்த சதவீதம் 0.2 அலகுகளில் குறைந்துள்ளது. பதினைந்து வயதுக்குட்பட்ட மற்றும் அறுபத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகைக்கான கூட்டுத்தொகையைக் தங்கிவாழ்வோர் என கருதப்படும். 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பின் பிரகாரம் கணக்கெடுப்பின்படி 49.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 49.8சதவீதமாக அதிகரித்துள்ளது.

Capture.JPG

இலங்கை சனத்தொகையின் இனப்பரம்பல்

தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட இனத்தை அவர்களது இனமாக அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 74.1 சதவீதம், அல்லது சனத்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிங்களவர்கள் என்றும், 12.3 சதவீதம் பேர் இலங்கை தமிழர்கள் என்றும், 10.5 சதவீதமானோர் இலங்கைச் சோனகர்/முஸ்லிம் என்றும், 2.7 சதவீதமானோர் இந்திய தமிழர்கள்/மலையக தமிழர்கள் என்றும் பதிவாகியுள்ளன. மேலும், மீதமுள்ள சதவீதமானது சனத்தொகை சதவீதத்தில் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவாகியுள்ளது. 

0.3 தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட சமயத்தை அவர்களது சமயமாக அடையாளங்காணப்படுகின்றன. நாட்டில் மொத்த சனத்தொகையில் 69.8 சதவீதம் பௌத்தர்கள் என்பதுடன் 12.6 சதவீதம் இந்துக்கள் ஆவர். 10.7 சதவீதம் இஸ்லாமியர்கள், 5.6 சதவீதம் றோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் இந்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் அந்த சதவீதம் 0.02 என்ற சிறிய எண்ணிக்கையைக் கொண்டு காணப்படுகிறது.

2024 தொகைமதிப்பில் இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் சதவீதங்களை 2012 தொகைமதிப்புடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுதல் மற்றும் 2012 - 2024 ஆம் ஆண்டுக்கான சராசரி அதிகரிப்பு விகிதம் அட்ட வணை 06 இல் காட்டப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இனரீதியான பரம்பல் வரைபடம் 04 இல் காட்டப்பட்டுள்ளது.

2.JPG

இனத் தொகுதிகளுக்கிடையில் 2012- 2024 காலப்பகுதிக்குள் சனத்தொகையில் கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைச் சோனகர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் அவர்களின் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 1.5 நாட்டின் மொத்த சனத் தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். அதற்கடுத்ததாக கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைத் தமிழர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் 2012- 2024 காலப்பகுதியினுள் அவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 1.3 ஆகும். 2012 2024 காலப்பகுதியில் சனத்தொகையில் சிங்களவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 0.4 ஆகும்.

இக்காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் நூற்றுக்கு 2.6 என்ற மிகக் குறைவான வருடாந்த வளர்ச்சி விகிதத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இலங்கையின் வேறு இனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் இக் காலப் பகுதியில் அந்தச் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அதன் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு - 3.1 ஆகும்.

இம்முறைத் தொகைமதிப்பில் (2024) மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குடிசனத் தொகைமதிப்பின் போது இனத் தொகுதிக்கு ஏற்ப சனத்தொகை வீகிதாசாரம் மாவட்ட மட்டத்தில் அட்டவணை 7 இல் காட்டப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியிலான சனத்தொகை பரம்பல்

கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை (122619) மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிகமானோர் பெண்கள் என்பது முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டுத் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிலேயேகும். அதன்போது தொகைமதிப்பு முழுமையாக நடைபெற்ற 18 மாவட்டங்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 50.2 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் பதிவுகளுக்கமைய 1981, 2001, 2012 மற்றும் 2024 தொகைமதிப்புகளின்போது மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட பால்நிலை விகிதாசாரம் அட்டவணை 2 இல் வழங்கப்பட்டுள்ளது. 2024 தொகைமதிப்பின் போது, நாட்டின் 25 மாவட்டங்களையும் கருத்தில் கொள்ளும்போது, சகல மாவட்டங்களிலும் பால்நிலை விகிதாசாரம் 100 விடக் குறைவான மதிப்புகளைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10.jpg(1) 1981 தொகைமதிப்புத் தொடர்பாக தற்போது காணப்படும் மாவட்ட எல்லைகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. (2) 2001 தொகைமதிப்புத் தொடர்பாகத் தொகைமதிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த மாவட்டங்களுக்கு மட்டும் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது.

995.jpg

இம்முறை தொகைமதிப்பின் போது அதிகூடிய பால்நிலை விகிதாசாரம் மொனராகலை மாவட்டத்தில் 97.9 சதவீதம் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த தொகைமதிப்பில் மிகக் குறைந்த பால்நிலை விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88.0 சதவீதம் பதிவாகியுள்ளது.

வீட்டுவசதிகள் தொடர்பான தகவல்கள்

வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்கள் நபர்கள் வசிக்கும் வீட்டுக் கூறுகளில் இருந்தே சேகரிக்கப்படும் என்பதுடன், இதன் போது வீட்டுக் கூறின் தகவல்கள் மற்றும் குடித்தனத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இலங்கையில் வசிக்கும் வீட்டுக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை 6,030,541 ஆகும். அதிகமான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (28 சதவீதம்) மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றது என்பதுடன், குறைவான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (51 சதவீதம்) வட மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டிலுள்ள வீட்டுக்கூறு

4.32 வகைகளினுள் 95.66 சதவீதமான வீட்டுக்கூறுகள் தனி வீடுகளாகும் என்பதுடன் இணைந்த வீடுகளாகும். எஞ்சிய வீட்டுக் கூறுகளில் 82 சதவிதம் ஏனைய வீட்டுக் கூறுகளாக பதியப்பட்டுள்ளது.

இலங்கையில் வீட்டுக் கூறுகளில் 97.9 சதவீதம் மாத்திரம் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையுள்ள பொருட்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதுடன், எண்ணிக்கையில் 2.1 சதவீதமானவற்றின் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையற்ற களிமண் பலகை/ கிடுகு/பனையோலை போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வீட்டுக்கூறுகளில் 98.1 தன்மையுள்ள பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.7 சதவீதமானவற்றின் கூரைகள் சதவீதத்திலும் கூரைகள் நெடுவாழ்வுத் நெடுவாழ்வுத் தன்மையற்ற கிடுகு/ பனையோலை/ வைக்கோல் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள மொத்த வசிக்கும் வீட்டுக்கூறுகளில் காணப்படும் மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும் என்பதுடன், குடித்தனத்தின் அளவு (வழமையாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை) 3.5 ஆகும். இலங்கையில் உள்ள மொத்த குடித்தனங்களில் 38.9 சதவீதமானவர்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையிடமிருந்து விநியோகிக்கப்படுகின்ற நீர்ஆகும்.

நாட்டில் மொத்தக் குடித்தனங்களில் 97.4 சதவீதமானோர் வெளிச்சத்தினைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக மின்சாரம் காணப்படுகிறது . மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கையில் 92.2 சதவீதமானோர்க்கு தமது குடித்தனத்தில் தனியான பாவனைக்கு (வீட்டுக் கூறினுள் அல்லது வீட்டுக் கூறிற்கு வெளியில்) மலசலகூடம் காணப்படுகிறது.

https://www.virakesari.lk/article/229096

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

இலங்கை சனத்தொகையில் எந்த மாவட்டத்தில் அதிக சனத்தொகை - முழு விபரம் 

இனத் தொகுதிகளுக்கிடையில் 2012- 2024 காலப்பகுதிக்குள் சனத்தொகையில் கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைச் சோனகர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் அவர்களின் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 1.5 நாட்டின் மொத்த சனத் தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். அதற்கடுத்ததாக கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைத் தமிழர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் 2012- 2024 காலப்பகுதியினுள் அவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 1.3 ஆகும். 2012 2024 காலப்பகுதியில் சனத்தொகையில் சிங்களவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 0.4 ஆகும்.

இக்காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் நூற்றுக்கு -2.6 என்ற மிகக் குறைவான வருடாந்த வளர்ச்சி விகிதத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இலங்கையின் வேறு இனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் இக் காலப் பகுதியில் அந்தச் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அதன் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு - 3.1 ஆகும்.

ஞானசார தேரர் மிகவும் கவலைப்படப் போகின்றார். இந்தக் கணக்கெடுப்பின் படி இஸ்லாமிய மக்களும், இலங்கை தமிழ் மக்களும் அதிகமான சனத்தொகை வளர்ச்சியினையும், சிங்கள மக்கள் குறைவான சனத்தொகை வளர்ச்சியினையும் கொண்டிருக்கின்றார்கள். தேரர் ஏற்கனவே சிங்கள மக்களை இந்த விடயத்தில் எச்சரித்து இருக்கின்றார். அவரின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.................🤣.

மலையக தமிழ் மக்களுக்கு என்னவானது............... அவர்களின் வளர்ச்சி வீதம் எப்படி எதிர்மறையானது (- 2.6)................. அவர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறவும் இல்லை........ ஒரு வேளை அவர்களில் பலர் தங்களை வேறு விதமாக அடையாளப்படுத்தியிருக்கக்கூடும்.

உலகெங்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சனை இலங்கையிலும் வந்திருக்கின்றது. முதியவர்களின் விகிதம் அதிகரிக்க, சிறுவர்களின் விகிதம் குறைந்திருக்கின்றது. அதிகரித்த வாழ்க்கை செலவுகளும், அதிகரிக்கும் தனிநபர் வாழ்க்கை முறைகளும்/தெரிவுகளும் இந்த இடைவெளியை இன்னும் கூட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கார்டியன் மிக நுணுக்கமான ஒரு கட்டுரையை எழுதியுள்ளது.

தமிழாக்கம் கூகிள்:

தமிழர் தாயகத்தின் மக்கள் தொகை வீழ்ச்சி - இலங்கையின் 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு

The Tamil homeland’s falling population – Sri Lanka’s 2024 census

இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிதாக வெளியிடப்பட்ட முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை இழப்பு மற்றும் தேக்கநிலையின் அடிப்படையில் தமிழ் வடகிழக்கு, குறிப்பாக வன்னிப் பகுதி, தீவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகின்றன.

இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் “மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு - 2024 முதற்கட்ட அறிக்கை”யின்படி, வன்னியின் மையப்பகுதியை உருவாக்கும் மூன்று மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகியவை முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை எண்ணிக்கை, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அடர்த்தி விகிதங்களைக் கொண்டுள்ளன.

இந்த புள்ளிவிவரங்கள் பல தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலின் பேரழிவு தாக்கத்தை பிரதிபலிக்கின்றன, இதில் 2009 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன்றுவரை நீடிக்கும் இராணுவமயமாக்கல் ஆகியவை அடங்கும்.

122,542 குடியிருப்பாளர்களுடன் முல்லைத்தீவு முழு தீவின் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகையைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் 123,674 மக்கள்தொகை மற்றும் கிளிநொச்சி 136,434 மக்கள்தொகை கொண்டவை. வவுனியாவில் 172,257 மக்கள் தொகை மட்டுமே பதிவாகியுள்ளது.

தீவு முழுவதும் மிகக் குறைந்த மக்கள் தொகை நான்கு மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது, அடுத்த அருகிலுள்ள மாவட்டமான திருகோணமலையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகை 442,465 ஆகும் - இது தமிழர் தாயகத்தின் மற்றொரு மாவட்டம்.

தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும்.

கொழும்பு போன்ற பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,500 பேருக்கு மேல் உயர்ந்தாலும், வடகிழக்கில் உள்ள தமிழ்ப் பகுதிகள் மக்கள் தொகை குறைவாகவே உள்ளன.

முல்லைத்தீவின் சமீபத்திய வளர்ச்சி விகிதம் 2012 முதல் 2024 வரை 2.23% ஆக உயர்ந்திருந்தாலும், முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மாவட்டம் முல்லைத்தீவு ஆகும், சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் மட்டுமே உள்ளனர். அதைத் தொடர்ந்து மன்னார் (66/கிமீ²) மற்றும் வவுனியா (96/கிமீ²) உள்ளன. ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின் போது கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இறப்புகள் ஏற்பட்ட மற்றொரு தளமான கிளிநொச்சி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 115 பேருடன் ஐந்தாவது மிகக் குறைந்த இடத்தில் உள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகியவை கூட மக்கள் தொகை அடர்த்தி தரவரிசையில் கீழ் பாதியில் உள்ளன, இது தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இராணுவமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றின் நீண்டகால மக்கள்தொகை தாக்கத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வடகிழக்கு பின்தங்கிய நிலை

ஒட்டுமொத்தமாக, தீவின் மக்கள்தொகையில் வடக்கு மாகாணம் வெறும் 5.3% மட்டுமே, கிழக்கு மாகாணம் 8.2% மட்டுமே, தீவின் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர்.

இந்த புள்ளிவிவரங்கள் வளர்ச்சியின்மையின் விளைவாக மட்டுமல்லாமல், பல தசாப்த கால மோதல்கள், பாரிய அட்டூழியங்கள், கட்டாய இடம்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கலையும் பிரதிபலிக்கின்றன.

ஆயுத மோதலின் பேரழிவு எண்ணிக்கை, குறிப்பாக பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களைக் கொன்று லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர்த்த 2009 இனப்படுகொலை, இப்பகுதியின் மக்கள்தொகையை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. முறையான மீள்குடியேற்றம் இல்லாதது, தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் முதலீடு இல்லாதது ஆகியவை வன்னியிலும் தமிழர் தாயகம் முழுவதிலும் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

https://www.tamilguardian.com/content/tamil-homelands-falling-population-sri-lankas-2024-census

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

மலையக தமிழ் மக்களுக்கு என்னவானது............... அவர்களின் வளர்ச்சி வீதம் எப்படி எதிர்மறையானது (- 2.6)................. அவர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறவும் இல்லை........ ஒரு வேளை அவர்களில் பலர் தங்களை வேறு விதமாக அடையாளப்படுத்தியிருக்கக்கூடும்.

அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

2024, சனத்தொகை கணிப்பீட்டில்
ஈழத்தமிழர்கள் நிலை..!

🔺வடமாகாணம்:

1.யாழ்ப்பாணம்.
தமிழர்கள். 2012, 98.9%~2024,98.6%. (.3% குறைவு)
சிங்களவர்,2012,0.4% -2024,0.6% ( .2% அதிகரிப்பு)
முஷ்லிம்:2012,0.4%- 2024,0,7% ( .3% அதிகரிப்பு)
மலை. தமிழர்:2012,0.3%- 2024,0.1%. (.2% குறைவு)

2.கிளிநொச்சி.
தமிழர்கள். 2012,97.3% - 2024,97.3% ( சமன்)
சிங்களவர்,2012,1.2% - 2024,1.2% ( சமன்)
முஷ்லிம்,2012,0.6% - 2024,0.9% (.3% அதிகரிப்பு)
மலை. தமிழர். 2012,0.9% -2024,0.5% (.4% குறைவு)

3.மன்னார்.
தமிழர்கள். 2012,80.4% -2024,72.7%. (7.7% குறைவு)
சிங்களவர்.2012,2.3% - 2024,0.5% (1.8% அதிகரிப்பு)
முஷ்லிம்.2012,16.5% -2024,26.5%. (10% அதிகரிப்பு)
மலை.தமிழர்.2012,0.7% - 2024,0.3% ( 0.4% குறைவு)

4.வவுனியா.
தமிழர்கள், 2012,82.0% - 2024,78.4% ( 9.6% குறைவு)
சிங்களவர்,2012,10.0% -2024,10.8% ( .8% அதிகரிப்பு)
முஷ்லிம்,2012,6.8% - 2024,10.8% ( 4% அதிகரிப்பு)
மலை. தமிழர்,2012,1.1% - 2024,0.9% ( 0.2% குறைவு)

5.முல்லைத்தீவு.
தமிழர், 2012,85.8% - 2024, 88.1% ( 2.6% அதிகரிப்பு)
சிங்களவர்,2012,9.7% - 2024, 9.1% (.6% குறைவு)
முஷ்லிம், 2012,2.0% - 2024, 2.5% (.5% அதிகரிப்பு)
மலை.தமிழர்,2012,2.5% -2024,0.2% ( 2.3% குறைவு)

🙌🏿வடமாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024 ஒப்பீடு செய்தால்..

தமிழர் 20.2 வீதம் குறைவடைந்துள்ளது,
சிங்களவர் 2.8, வீதம் அதிகரித்துள்ளது.
முஷ்லிம்கள்,15.1வீதம் அதிகரித்துள்ளது.
மலை.தமிழர்,3.5, வீதம் குறைவடைந்துள்ளது.

🔺கிழக்குமாகாணம்:

1.மட்டக்களப்பு.
தமிழர்.2012, 72.3% - 2024,71.3% ( 1% குறைவு)
சிங்களவர்,2012,1.3% -2024,1.2%. ( ,1% குறைவு)
முஷ்லிம்,2012, 25.4% - 2024, 26.9% ( 1.5% அதிகரிப்பு)
மலை. தமிழர்,2012,0.4% - 2024, 0.2% ( 0.2% குறைவு)

2.அம்பாறை.
தமிழர்,2012, 17.3% - 2024, 16.9% ( 0.4% குறைவு)
சிங்களவர்,2012,30.9% - 2024,37.1% ( 6.2% அதிகரிப்பு)
முஷ்லிம்,2012,43.4% - 2024,45.6% ( 2.2% அதிகரிப்பு)
மலை. தமிழர்,2012,0.1% - 2024, 0.1% ( சமன்)

3.திருகோணமலை.
தமிழர், 2012, 30.7% - 2024, 28.9%. (1.8% குறைவு)
சிங்களவர்,2012, 26.7% - 2024, 24.5% ( 2.2% குறைவு)
முஷ்லிம்,2012,41.8% - 2024, 46.1% ( 4.4% அதிகரிப்பு)
மலை. தமிழர்,2012, 0.3% - 2024, 0.2% (0.1% குறைவு)

🙌🏿கிழக்கு மாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024, ஒப்பீடு செய்தால்..

தமிழர் 3.5, வீதம் குறைவு.
சிங்களவர் 4.3, கூடியுள்ளது.
முஷ்லிம்கள் 13,3, வீதம் கூடியுள்ளது.
மலை தமிழர் 0.3, வீதம் குறைவு

♨️வடகிழக்கில் 2012,ஆண்டுடன் 2024, கணக்கெடுப்பை ஒப்பீடு செய்தால்

தமிழர்கள் 23.4% வீதம் குறைவு.
சிங்களவர் 7,1% வீதம் கூடியுள்ளனர்.
முஷ்லிம்கள் 28.3% வீதம் கூடியுள்ளனர்.
மலை தமிழர் 3.8% வீதம் குறைவு.

வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டியது 2012, ல் இருந்த தமிழர் தொகையைவிட 2024, ல் குறைந்தும், ஏனைய சிங்கள, முஷ்லிம் மக்கள் தொகை கூடியும் உள்ளது 12, வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்.
காரணங்கள் பல கூறலாம்.
இடப்பெயர்வு, பொருளாதார வறுமை, தொழில் இன்மை,
இவைகளுடன் தமிழரின் பிறப்பு வீதம் ஏனைய சமூகத்துடன் ஒப்பிடும்போது குறைவடைந்து செல்கிறது என்பதும் உண்மை.

-பா.அரியநேத்திரன்.
01/11/2025

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வடமாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024 ஒப்பீடு செய்தால்..

தமிழர் 20.2 வீதம் குறைவடைந்துள்ளது,
சிங்களவர் 2.8, வீதம் அதிகரித்துள்ளது.
முஷ்லிம்கள்,15.1வீதம் அதிகரித்துள்ளது.
மலை.தமிழர்,3.5, வீதம் குறைவடைந்துள்ளது.

👆👇

ஏனைய இனங்களை பார்த்து குத்தி முறிவதில் பலனேதும் இல்லை மக்காள்.

இயற்கையாகவே நீங்கள் ஆப்பை செருகிகொள்வீர்கள்.

கொழும்பிலும், கம்பஹாவிலும் இலங்கை தமிழர் எண்ணிக்கை சதவீதம் எப்படி கூடியுள்ளது என பார்க்க ஆவல்.

3 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024, ஒப்பீடு செய்தால்..

தமிழர் 3.5, வீதம் குறைவு.
சிங்களவர் 4.3, கூடியுள்ளது.
முஷ்லிம்கள் 13,3, வீதம் கூடியுள்ளது.
மலை தமிழர் 0.3, வீதம் குறைவு

♨️வடகிழக்கில் 2012,ஆண்டுடன் 2024, கணக்கெடுப்பை ஒப்பீடு செய்தால்

தமிழர்கள் 23.4% வீதம் குறைவு.
சிங்களவர் 7,1% வீதம் கூடியுள்ளனர்.
முஷ்லிம்கள் 28.3% வீதம் கூடியுள்ளனர்.
மலை தமிழர் 3.8% வீதம் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இயற்கையாகவே நீங்கள் ஆப்பை செருகிகொள்வீர்கள்.

அப்போ தாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ தாங்கள்?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மலையகத் தமிழர் மக்கள் தொகை சரிவு - இலங்கைத் தமிழர், முஸ்லிம் நிலை என்ன?

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழ்

  • 10 நவம்பர் 2025

இலங்கை அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு அறிக்கை தரவுகளின்படி மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளனர்.

இலங்கையில் இறுதியாக 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம், 8,39,504 மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) இருந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின்படி, 6,00,360 மலையக தமிழர்களே (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பதிவாகியுள்ளனர்.

சிங்களர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சனத் தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும், மலையக தமிழர்களின் சனத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.

2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் மலையக தமிழர்கள் ஏன் குறைவடைந்துள்ளனர் என்பது உள்ளிட்ட 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் இந்த கட்டுரையில் ஆராய்கின்றது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2024

2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையை, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

இலங்கையில் 15வது தடவையாக இந்த குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

15வது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2021-ஆம் ஆண்டு நடாத்தப்படவிருந்த நிலையில், கோவிட் - 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் இரண்டு கோடியே பதினேழு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து நூற்று எழுபது (2,17,63,170) பேர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் அறிக்கையிடப்பட்ட மொத்த சனத் தொகையை விட, 2024-ஆம் ஆண்டு சனத் தொகை பதினான்கு லட்சத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று (1,403,731) பேர் அதிகமாக உள்ளனர்.

2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சனத் தொகை சராசரியாக வருடத்திற்கு 0.7 வீதத்தினால் காணப்பட்டதுடன், அந்த வளர்ச்சியானது 2012 முதல் 2024ம் ஆண்டு வரை 0.5 வீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் சனத் தொகை குறைந்த வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இலங்கையில் மாகாண ரீதியாக சனத் தொகையை கருத்திற் கொள்ளும் பட்சத்தில், முழு சனத் தொகையில் 28.1 வீதமானோர் மேல் மாகாணத்தில் வசிக்கின்றனர். 5.3 வீதத்தையும் விட குறைவானோர் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வட மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகளவான சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் (2,433,685) பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிக சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் ( 2,374,461) உள்ளது.

இதேவேளை, சனத் தொகை குறைந்த மாவட்டங்கள் பட்டியலில் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434) மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

எனினும், குறைவான சனத் தொகையை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.23 என்ற வீதத்திலான அதியுயர் வளர்ச்சி வீதத்தினை காண முடிகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0.01 எனும் குறைந்த வளர்ச்சி வீதத்தினை கொண்ட மாவட்டமாக வவுனியா மாவட்டம் பதிவாகியுள்ளது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

1871 முதல் 2024 வரையான சனத் தொகை வளர்ச்சி

இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான சனத்தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சனத் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் 24,00,380 மக்கள் வசித்துள்ளனர்.

ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மதிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டு வந்த பின்னணியில், அந்த செயற்பாடு 1931-ஆம் ஆண்டு வரை முறையாக நடாத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 1946ம் ஆண்டு சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டதுடன், அதன்பின்னர் 1953ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 1963, 1971, 1981ம் ஆண்டுகளில் முறையாக நடாத்தப்பட்ட நிலையில், 1981-ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்த கணக்கெடுப்பு 20 வருடங்கள் கழித்து 2001-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது.

உள்நாட்டு போர், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சனத் தொகை மதிப்பு 20 வருடங்களுக்கு பிற்போட காரணமாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது.

2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2012ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்த சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய சனத் தொகை மதிப்பானது, கோவிட் - 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் 2024ம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

சனத் தொகை வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைய காரணம் என்ன?

இலங்கையில் 153 வருட சனத் தொகை மதிப்பீட்டு வரலாற்றில் வருடாந்த வளர்ச்சி வீதம் பெரும்பாலும் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் இதுவரை நடாத்தப்பட்டுள்ள 15 முறையான சனத் தொகை மதிப்பீடுகளில் 1953-ஆம் ஆண்டு வருடாந்த சனத் தொகை வளர்ச்சி அதி உயர்ந்த வீதமாகிய 2.8 வீதமாக பதிவாகியுள்ளது.

அதன்பின்னராக சனத் தொகை மதிப்பு அறிக்கைகளின் பிரகாரம், சனத் தொகையின் வருடாந்த வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது.

2012-ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பில் 0.7 வீதமாக காணப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதம், 2024ம் ஆண்டு 0.5 வீதமாக குறைந்துள்ளது.

இலங்கையில் சனத் தொகை வளர்ச்சி வீதம் குறைவடைவதற்காக பல்வேறு விடயங்களை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளது.

நீண்ட காலமாக காணப்படும் குறைந்த பிறப்பு வீதம், அதிகமான இறப்பு வீதம் மற்றும் நாட்டில் வெளிநோக்கிய இடப் பெயர்வு அதிகரித்தல் போன்ற காரணங்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்துடன், உரிய காலத்தில் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய் நிலைமைகள், போர் நிலைமைகள் போன்றவற்றை அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சராசரி வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதத்தில் நேர்மறையான மதிப்பினை காட்டுவதன் மூலம் இலங்கையின் சனத்தொகை குறைந்த வீதத்திலேனும் படிப்படியாக வளர்ச்சியடைந்து நிலைமையை காண முடிகின்றது என சன தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்

பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka

படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024

சிங்களவர்களே நாட்டில் அதிகம்

இலங்கையில் 2024ம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையின் பிரகாரம், சிங்கள மக்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.

  • இலங்கையில் சிங்கள மக்களின் தொகை 1,61,44,037ஆக இம்முறை பதிவாகியுள்ளது. 2012ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம், நாட்டிலிருந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை 1,52,50,081 ஆகும். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 0.4ஆக பதிவாகியுள்ளது.

  • சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 2012ம் ஆண்டு 22,69,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள், 2024ம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம், 26,81,627ஆக பதிவாகியுள்ளனர். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 1.3ஆக பதிவாகியுள்ளது.

  • இலங்கை முஸ்லிம் மக்களின் தொகையானது, 2012ம் ஆண்டு 18,92,638ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 22,83,246ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5ஆக காணப்படுகின்றது.

  • எனினும், மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) சனத் தொகை வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் -2.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) தொகையானது, 2012ம் ஆண்டு 8,39,504ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 6,00,360ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் காணாமல் போன 2,39,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்)

2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 239,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பை காட்டி நிற்கின்ற நிலையில், அங்கு மலையக மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டுகின்றது.

மலையக தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளமைக்கான காரணம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்வதற்காக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது.

''நாம் சனத் தொகை மதிப்பீட்டில் முக்கியமாக இனம், மதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே தரவுகளை சேகரிப்போம். ஆவணங்களை பரிசோதனை செய்து, இனம், மதம் குறித்த தகவல்களை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. பிரஜைகள் சொல்கின்ற விடயங்களையே தரவுகளாக பதிவு செய்யுமாறு நாங்கள் எங்களது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அவர்கள் சொல்கின்ற விதத்திலேயே தரவுகளை பதிவு செய்யுமாறு கூறியிருந்தோம்.

கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட இனங்கள், இம்முறை தரவு சேகரிப்பின் போதும் சேர்த்துக்கொள்வோம். இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற விடயத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இன்னுமொரு பெயரை உள்வாங்குமாறு அமைச்சு மட்டம் உள்ளிட்ட உயர் மட்டங்களில் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நாங்கள் ''மலையக தமிழர்கள்'' என்ற பெயரை உள்வாங்கினோம். உடனடியாகவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பதை புறக்கணிக்க முடியாது என்பதனால், இந்திய தமிழர்கள், மலையக தமிழர்கள் என்ற இரண்டு பெயரையும் பயன்படுத்தினோம். இனங்களை தீர்மானிப்பதற்கும், இனங்களை வேறுபடுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் கிடையாது. இதன்படி, நபர்கள் சொல்கின்ற விடயங்களை நாங்கள் அவ்வாறே பதிவு செய்துக்கொண்டுள்ளோம்.'' என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மலையக பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமைக்கான காரணம் என்னவென்பது குறித்தும் பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது.

''மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்கள் அதிகரித்துள்ளமைக்கான காரணம் தெரியாது. அது அவ்வாறே பதிவாகியுள்ளது.'' என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமொன்று குறித்தும் இதன்போது, குறித்த அதிகாரியினால், எமக்கு தெளிவூட்டப்பட்டது.

''இனங்களை குறிப்பிடும் போது இந்திய தமிழர்கள் அல்லது இலங்கை தமிழர்கள் என குறிப்பிடப்படுவதற்கான நியதிகள் என குறிப்பிடப்பட்டு சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவுகளின் இனங்களை பதிவிடும் போது பதிவாளர் நாயகத்தினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதானது, ஒருவருடைய உரிமையாகும். அவர்களில் இந்திய தமிழர்களை இந்திய தமிழர்கள் என குறிப்பிடுவதுடன், அதற்கு முன்னரான இரண்டு பரம்பரையிலுள்ள பாட்டன், தந்தை ஆகியோர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயின், அவர்களை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த முடியும். இரண்டு பரம்பரையினர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயினும், அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய, இலங்கை தமிழர்களாக தம்மை பதிவு செய்துக்கொள்ள முடியும். அத்துடன், நபரொருவர் தனது இனம் மற்றும் மதம் குறித்து அவர் சொல்கின்ற விடயங்களையே நாங்கள் பதிவு செய்துக்கொள்வோம்.'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகளின் கருத்தின் படி, "மலையகத்தில் வாழ்கின்ற மலையக தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ள விதமே தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்களில் ஒரு தொகுதியினர் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். ஏனையோர் தம்மை மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அதனாலேயே, மலையக தமிழர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ம் ஆண்டு குறைவடைந்துள்ளது." என்று தெரியவந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp97p7v583mo

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு எடுப்பின் பிரகாரம்

ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால்

7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை

என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

கணக்கு எடுப்பின் பிரகாரம்

ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால்

7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை

என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!

காஜல் அண்ணி(காஜலிசம்) கோச்சிக்கமாட்டாங்களா அண்ணை?!

16 minutes ago, Maruthankerny said:

கணக்கு எடுப்பின் பிரகாரம்

ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால்

7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை

என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!

பொதுவாக உலகில் ஆண்களை விடப் பெண்கள் விகிதாசாரப்படி அதிகம். இதற்கான முக்கிய காரணம் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகமானது.

எப்படியிருந்தாலும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

காஜல் அண்ணி(காஜலிசம்) கோச்சிக்கமாட்டாங்களா அண்ணை?!

காஜலிச கோட்ப்பாட்டில் இந்த பிரபஞ்சத்தில் மூடர்களால் உருவான எடுப்பது (Take) கொடுப்பது (Give) என்ற துஸ்பிரயோகமே இல்லை. பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு.

அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது

இந்த நொடியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருக்கும் சூரியன்/ சந்திரன் தன் ஒளியை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் காற்று தான் சுமந்திருக்கும் ஓட்ஸிசனை பகிர்ந்துகொள்ளும் அவ்வாறு கண்ணுக்கு தெரியாத பல மூல கூறுகள் ஒவ்வொன்றும் பகிர்வதால் இந்த பிரபஞ்சம் நீள்கிறது அந்த நொடியில் உங்கள் அருகில் இருக்கும் மூல கூறுகளுடன் எதை பகிர முடியுமோ அதை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கையில் தண்ணீர் இருந்தால் ஒரு செடிக்கு ஊற்றுங்கள் விலங்குகள் பறவைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். இந்த பிரபஞ்ச பயணத்தில் தொடருங்கள் .........

ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

காஜலிச கோட்ப்பாட்டில் இந்த பிரபஞ்சத்தில் மூடர்களால் உருவான எடுப்பது (Take) கொடுப்பது (Give) என்ற துஸ்பிரயோகமே இல்லை. பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு.

அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது

இந்த நொடியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருக்கும் சூரியன்/ சந்திரன் தன் ஒளியை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் காற்று தான் சுமந்திருக்கும் ஓட்ஸிசனை பகிர்ந்துகொள்ளும் அவ்வாறு கண்ணுக்கு தெரியாத பல மூல கூறுகள் ஒவ்வொன்றும் பகிர்வதால் இந்த பிரபஞ்சம் நீள்கிறது அந்த நொடியில் உங்கள் அருகில் இருக்கும் மூல கூறுகளுடன் எதை பகிர முடியுமோ அதை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கையில் தண்ணீர் இருந்தால் ஒரு செடிக்கு ஊற்றுங்கள் விலங்குகள் பறவைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். இந்த பிரபஞ்ச பயணத்தில் தொடருங்கள் .........

ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை

எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

காஜலிச கோட்ப்பாட்டில் பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு.

காஜலிசம்=சோசலிசம்=கம்யூனிசம் ?!

44 minutes ago, Maruthankerny said:

அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது.

"எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிவிடும். இது வாழ்க்கையின் நிலையாமைக்கான ஒரு உதாரணம். அதற்காக, இன்று நம்மிடம் உள்ளதை சிறப்பாகப் பயன்படுத்துவோம்." என்று பலர் கூறுகின்றனர்.

46 minutes ago, Maruthankerny said:

ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை

ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி

"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் 

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! 

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; 

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், 

அதனாலே மரணம் பொய்யாம்."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.