Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு

பட மூலாதாரம், VEERU SINDHI

10 நவம்பர் 2025, 14:21 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.

இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை.

மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.

செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே  வெடிப்பு - நடந்தது என்ன?

பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images

டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிப்பு - சமீபத்திய தகவல்

பட மூலாதாரம், ANI

வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது.

டெல்லி, செங்கோட்டை, வெடிப்பு

படக்குறிப்பு, வெடிப்பில் காயமடைந்தவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன?

டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே சிவப்பு சிக்னல் காரணமாக மெதுவாகச் சென்ற வாகனம் மாலை 6.52 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட வாகனத்தில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர்.

"வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், ன்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

வெடிப்பு ஏற்பட்டதில் சேதமடைந்த வாகனத்தின் ஒரு பகுதி

படக்குறிப்பு, வெடிப்பு ஏற்பட்டதில் சேதமடைந்த வாகனத்தின் ஒரு பகுதி

இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாகவும், சிலர் இறந்ததாகவும் டெல்லி காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார்.

"சிலர் காயமடைந்துள்ளனர், சிலர் இறந்துள்ளனர். சரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றார்.

'கட்டடத்தின் ஜன்னல் குலுங்கியது'

ராஜ்தர் பாண்டே

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராஜ்தர் பாண்டே

அந்தப் பகுதி காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

"நாங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்தோம்... நான் அதை என் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். வெடிப்பு ஏற்பட்டபோது மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது'' என அருகில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

''வெடிப்பு நடந்தபோது நான் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று நான் இதற்கு முன்பு கேட்காத அளவுக்கு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. நான் மூன்று முறை விழுந்தேன். இதற்குப் பிறகு, அருகில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர்" என்று செங்கோட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் ரெஹ்மான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு,

செங்கோட்டை டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய பிரதமர் இக்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dn23y182lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி

Nov 10, 2025 - 08:30 PM

செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர். 

இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. 

அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. 

சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. 

தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

https://adaderanatamil.lk/news/cmht9rd7j01ifqplp3b0o3b17

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 10 பேர் பலி - பயங்கரவாதிகளின் சதிச்செயலா ? சிக்கிய 2 பேர் மீது தீவிர விசாரணை!

10 Nov, 2025 | 10:09 PM

image

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் (Red Fort Metro Station) அருகே இன்று திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, இன்று மாலை 6:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில், அருகிலிருந்த வேன், ஆட்டோ மற்றும் கார் உட்பட 8 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. 

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை நிர்வாகம், 8 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG)உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவம் நடந்த நேரமும், இடமும் சதிச்செயலுக்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 

குறிப்பாக, அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா  அமைப்புகளின் கூட்டுத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த வாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் மருத்துவர்கள் உட்பட சிலர், 360 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயுத விநியோகம் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிவிபத்து தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்து சிக்கிய 2 பேரிடம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது, வெடிப்புக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

டெல்லியின் முக்கியப் பகுதிகளான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மட்டுமின்றி, மும்பை, உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/230038

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி எண்டு சின்ராசு எத்தனை ரஃபேலை பப்படம் ஆக்கப்போறானோ😂

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஜீ இருக்கும் வரை இந்தியாவை ஒருத்தரும் அசைக்க முடியாது ...மோடி ஜீக்கு ஜிந்தா பாத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? புலனாய்வு தீவிரம்

டெல்லி கார் வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.

வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.

வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுதொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

டெல்லி கார் வெடிப்பு

படக்குறிப்பு, கார் வெடிப்பு நடந்த இடத்தைக் காட்டும் வரைபடமும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேரில் கண்டது என்ன?

பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்றிரவு பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது ஆசாத், சம்பவ இடத்திற்கு வந்தபோது குறைந்தது நான்கு உடல்கள் தரையில் இருப்பபதைக் கண்டதாக கூறினார்.

"உடல்களுக்கு அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. நானும் வேறு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடல்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்." என்று அவர் கூறினார்.

டெல்லி கார் வெடிப்பு

பட மூலாதாரம், PTI

டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன?

டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.52 மணிக்கு கார் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் அரசு கட்டடங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப், சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், "செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ, செங்கோட்டை, அரசு கட்டடங்கள் மற்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) தங்களது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அமித் ஷா கூறியது என்ன?

டெல்லி கார் வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "என்எஸ்ஜி மற்றும் என்ஐஏ குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

"நான் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgk8vvd9n7o

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

Published By: Digital Desk 1

11 Nov, 2025 | 12:02 PM

image

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 

சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளார்.

சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியான் உமர் முகமதுவின் புகைப்படம் இந்திய ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.அவர் வைத்தியர் ஆதீல்அஹ்மத் ராதர் மற்றும் வைத்தியர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு வைத்தியர்களும் ஜம்முகாஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரால் தகர்க்கப்பட்ட "வெள்ளைக் காலர்" பயங்கரவாத அமைப்பில் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டனர்.

தனது நண்பர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த பின்னர், வைத்தியர் உமர் ஃபரிதாபாத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். 

அதற்கு பின்னர் அவர் குண்டுவெடிப்பைத் தூண்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை உமர், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாகவும், அந்தக் காரில் ஒரு டெட்னேட்டர் கருவியை பொருத்தியதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/230071

  • கருத்துக்கள உறவுகள்

PTI11_11_2025_000102B.jpg?resize=750%2C3

டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது!

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அவர்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விசாரணை: சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் ஆய்வு: இந்நிலையில், டில்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் உடனுக்குடன் தகவல் பகிர்ந்து வருகிறோம். கார் வெடிக்கும் முன்பாக சிக்னலில் மெதுவாக அது நகர்ந்து கொண்டிருந்தபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது கார் வெடிகுண்டு தாக்குதலா என இப்போதைய சூழலில் தெரிவிக்க இயலாது’ என்றார்.

இந்தச் சம்பவத்தில் நெற்றிப்பகுதியில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், “எனது ஆட்டோவின் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்தது’ என்றார்.

பலத்த பாதுகாப்பு:

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த ஹரியாணாவின் ஃபரீதாபாதில் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் சுமார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் திங்கள்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தில்லி செங்கோட்டை அருகே இந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவா? என்பதை கூற முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரதமர் இரங்கல்

அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு:

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கார் வெடிப்பு சம்பவ நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள காணொளியில் சம்பவம் குறித்து விரிவாக விளக்கினார்.

சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வைத் தீவிரப்படுத்தவும் அனைத்து கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு:

கார் வெடிவிபத்து நிகழ்ந்த செங்கோட்டை பகுதியில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா, எல்.என்.ஜேபி மருத்துவமனைக்கு சென்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதத் தாக்குதலா?

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும் இது குண்டுவெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று டில்லி காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.

எனினும், அனைத்து கோணங்களிலும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் உரிமையாளர் கைது

வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

முன்னதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “வெடிப்பு நிகழ்ந்த கார் ஹரியாணா மாநிலத்தின் பதிவெண் கொண்டிருந்தது. காரின் உள்ளே மூன்று பயணிகள் இருந்தனர்’ என்று தெரிவித்தார். இதையொட்டி, சல்மான் என்ற நபரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1452454

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரி ஒரு டொக்டர் மற்றும் ஒரு பெண் டொக்டர் உட்பட வேறும் சில டொக்டர்கள் பயங்பரவாதத்துடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர் ஆசிய நாடுகளில் டொக்டர்மார் மருத்துவமனையில் மட்டும் தங்களது வேலையை பார்க்க வேண்டும். மதம், அரசியலில் அவர்கள் சொல்வதை மக்கள் ஒரு போதும் கேட்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2025 at 11:01, goshan_che said:

இதுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி எண்டு சின்ராசு எத்தனை ரஃபேலை பப்படம் ஆக்கப்போறானோ😂

எனது சந்தேகம் இந்தியாவே இதனை செய்திருக்கும் என, பாகிஸ்தானினை பயங்கரவாத நாடாக உருவகப்படுத்துவதற்கு இதனை தானே செய்திருக்க வாய்ப்புள்ளது,

கொஞ்ச காலமாக ஆசிய பகுதியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இந்தியா மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையே ஒரு அச்சாணி போல இருந்த நிலையில், இந்தியா தற்போது புறந்தள்ளப்படுகின்றது, மறு வளமாக பாகிஸ்தான் திடீர் அமெரிக்க நட்பு என ஒரு நல்ல நிலையில் உள்ளது, இதனிடையே இலங்கை அணி பாகிஸ்தானிற்கு விளையாட சென்றுள்ளது, இதியணி பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் இருந்து கோப்பையினை வாங்குவதனை தவிர்த்திருந்தது.

இலங்கை அணி மீது மீண்டும் ஒரு தாக்குதலை இந்திய ஆதரவுடன் செய்யவதற்காகவே புலிகள் உறுப்பினர்களுக்கும் தாவூத்திற்கும்? தொடர்பு என அண்மையில் இந்திய உளவுத்துறை கூறியதாக செய்தி விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் முஸ்லிம் என்ற அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாடு குண்டு வைப்பது பயங்கரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது என்ன என்று தெரியாத தன்னை ஒரு அமைதி பூங்காவாக பராமரித்து வருகின்ற ஒரு நாடு அப்படியான செயல்கள் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் உள்ள புனித போர் போராளிகளின் அமைதி மீதான ஆர்வம் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசும் , இந்தியாவில் ஒரு முஸ்லிம் கட்சியும் , இலங்கை அரசும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தங்களது கண்டணங்களை தெரிவித்தது ஏற்று கொள்ள முடியாதது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் 

13 Nov, 2025 | 01:41 PM

image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். 

“டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிப்பதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்டவேண்டும்” என மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்திருக்கிறார். 

இந்தியாவின் டெல்லி, செங்கோட்டைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி இரவு வெடிபொருட்களை கொண்டுசென்ற கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. 

இவ்வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பில் டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வெடிப்பு சம்பவம் என்பதால் பின்னர், உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/230239

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் 

என்ன இது இவரும் தப்பாக இலங்கை அரசும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இந்திய முஸ்லிம் கட்சி போன்று தற்கொலை குண்டுவெடிப்பை கண்டிக்கின்றார். இது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக உலகத்திற்கு காட்டுவதற்காக இந்தியா தனக்கு தானே வைத்த குண்டு எல்லோ

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடு இடிக்கப்பட்டது!

adminNovember 14, 2025

umar.jpg?fit=750%2C375&ssl=1

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ  புகையிரத நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின்,  ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10ம் திகதி டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ   புகையிரத  நிலையம் அருகே, கார் ஒன்று வெடித்து சிதறிய நிலையில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்ததுடன் 13 பேர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் காரை செலுத்தியவர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் முகமது உமர் நபி என தெரியவந்துள்ளதுடன் இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையிலேயே அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/222653/

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2025 at 11:37, விளங்க நினைப்பவன் said:

பாகிஸ்தான் முஸ்லிம் என்ற அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாடு குண்டு வைப்பது பயங்கரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது என்ன என்று தெரியாத தன்னை ஒரு அமைதி பூங்காவாக பராமரித்து வருகின்ற ஒரு நாடு அப்படியான செயல்கள் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் உள்ள புனித போர் போராளிகளின் அமைதி மீதான ஆர்வம் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசும் , இந்தியாவில் ஒரு முஸ்லிம் கட்சியும் , இலங்கை அரசும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தங்களது கண்டணங்களை தெரிவித்தது ஏற்று கொள்ள முடியாதது.

On 14/11/2025 at 08:55, விளங்க நினைப்பவன் said:

என்ன இது இவரும் தப்பாக இலங்கை அரசும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இந்திய முஸ்லிம் கட்சி போன்று தற்கொலை குண்டுவெடிப்பை கண்டிக்கின்றார். இது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக உலகத்திற்கு காட்டுவதற்காக இந்தியா தனக்கு தானே வைத்த குண்டு எல்லோ

பொதுவாக தீவிர சிந்தனை கொண்டவர்கள் (ஒற்றை பார்வை), மற்றவர்களுக்கும் அபிப்பிராயம் உள்ளது என்பதனை புரிவது கூட இல்லை, இதனாலேயே மதம், சாதி, ஆண், பெண் இப்படி பல வகுப்புவாதங்களுக்குள் தம்மை இலகுவாக பிரதிநிதித்துவப்படுத்தி கொள்கிறார்கள், இதில் ஒன்றிற்கொன்று குறைவாக இருக்கமாட்டார்கள்.

பேர்னாட்சோவிடம் ஒரு நடிகை நாம் இருவரும் திருமனம் செய்து எமக்கு ஒரு குழந்தை என்னை போல அழகுடனும் உங்களை போல அறிவுடனும் பிறந்தால் எப்படி இருக்கும் என கேட்டார், அதற்கு பேர்னாட்சோ நன்றாக இருக்கும் ஆனால் அதுவே இடம் மாறினாலேயே மோசமாக இருக்கும் என கூறினார்.

தீவிர சிந்தனையாளர்கள் தமக்கு ஒவ்வாத பக்கங்களை கூட பார்க்க விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றால் இதர முஸ்லிம்கள் பெரும்பாலோர் அதை கண்டிக்க மாட்டார்கள். குண்டு வைத்த முஸ்லிம் மத வெறி குழுவை பாதுகாத்து முண்டு கொடுத்து இது வேறு சக்திகளின் சதி வேலை அல்லது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சதி என்பார்கள் . இது முதலில் நிறுத்தபட வேண்டும். முஸ்லிமாக இருந்தும் தலிபான் ஆப்கானிஸ்தான் அரசும் இந்திய ஒரு முஸ்லிம் கட்சியும் இந்த குண்டுவெடிப்பை கண்டித்தது நல்ல செயல். மற்றவர்களும் அது போன்று எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றால் இதர முஸ்லிம்கள் பெரும்பாலோர் அதை கண்டிக்க மாட்டார்கள். குண்டு வைத்த முஸ்லிம் மத வெறி குழுவை பாதுகாத்து முண்டு கொடுத்து இது வேறு சக்திகளின் சதி வேலை அல்லது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சதி என்பார்கள் . இது முதலில் நிறுத்தபட வேண்டும். முஸ்லிமாக இருந்தும் தலிபான் ஆப்கானிஸ்தான் அரசும் இந்திய ஒரு முஸ்லிம் கட்சியும் இந்த குண்டுவெடிப்பை கண்டித்தது நல்ல செயல். மற்றவர்களும் அது போன்று எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

அவர்களை அல்லாவாலும் காப்பாற்ற முடியாது, இவர்களை ஈசனாலும் காப்பாற்ற முடியாது.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.