Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

babaa-780x470.jpeg

ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர்.

அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன.

சர்வதேச பரப்பில் உக்ரைன் – ரஷ்ய போர் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாபா வங்காவின் இந்த கணிப்பு, முன்னதாக அவரின் கணிப்புக்களில் சில விடயங்கள் நிகழ்ந்துள்ளன என்பதால் நிபுணர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://akkinikkunchu.com/?p=350062

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2025 at 08:42, கிருபன் said:

குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

images?q=tbn:ANd9GcTBqmdOU3V4UZEohHlgG8i images?q=tbn:ANd9GcS2fPqe5AvW5lGIiVMhvM5

2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும்,

விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும்,

விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.

இன்றும் புட்டின் அவர்கள் உலகை ஆளும் சக்தி கொண்டவர்தான். மேற்குலக ஊடகங்கள் தான் அதை மூடி மறைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2025 at 08:42, கிருபன் said:

அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன.

ஏன். அது. மோடி. ஆக. இருக்கக் கூடாது. ?. உலகம். என்றால. அங்கே. நிச்சயம். ஐரோப்பியா. இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இன்றும் புட்டின் அவர்கள் உலகை ஆளும் சக்தி கொண்டவர்தான். மேற்குலக ஊடகங்கள் தான் அதை மூடி மறைக்கின்றன.

மேற்கு… என்றுதான் உண்மையை சொல்லியிருக்கு.

இப்போது, எந்த ஊடகமும் நடுநிலையான செய்திகளை வெளியிடுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஏன். அது. மோடி. ஆக. இருக்கக் கூடாது. ?

அது மோடி தான் என்று வேறு பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

மகிந்தாவுக்கு சாத்திரம் சொன்ன சாத்திரி போன்றவர் தான் இந்த பல்கேரிய நாட்டு பாபா வங்கா 🤣

இந்த சாத்திரி உலகையே ஆளும் சக்தி கொண்டவராக உலகின் இறைவன் வருகிறார் என்று சொன்னது விளாடிமிர் புடினை இல்லை. ரம்பின் உக்ரைன் சமாதான முயற்சிகளைத் தடுக்கும் யூரோப் முட்டாள்கள் என்று சொன்ன ரஷ்ய மெட்வேடியெவ் வை தான் என்று வேறு பல நிபுணர்கள் சொல்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே நீண்ட காலமாக நம்மிடையே கண்டறியப்படாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று பல்கேரிய நாட்டு பாபா வங்கா தெரித்து இருக்கின்றார். புதின், மெட்வேடியெவ், டொனால்ட் ரம் வேற்றுகிரகவாசிகளாக இருக்கலதமோ என்று பல நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

🤣...................

அக்னிக்குஞ்சு நிறுவனத்தை ஆதவன் நிறுவனம் வாங்கி விட்டதா, சொல்லவேயில்லை...................😛.

எத்தனை பாபாக்கள் வந்தாலும் அத்தனையையும் பூமியும் தயக்கம் இல்லாமல் தாங்குதே..................🤣.

பாபாக்கள் சொல்லும் விடயங்களை விட, அவர்கள் தங்கள் வாய்க்குள் இருந்து எடுக்கும் சிவலிங்கங்களை விட, அவர்கள் காற்றிலிருந்து வரவழைக்கும் பொருட்களை விட, இப்படியான அவர்களினால் நிகழ்த்தப்படும் எல்லா அதிசயங்களையும் விடவும் அதிசயமான விசயம் என்னவென்றால்.............. பாபாக்களின் அருள் வார்த்தைகளை கேட்டு 'நிபுணர்கள்' எனப்படுவோர் குழம்பி நிற்கின்றார்கள் என்ற செய்தியே...............😜.

இது என்ன நிபுணத்துவம் என்று தெரிந்தால் நாங்களும் கற்றுத் தேரலாம் என்ற ஒரு ஆவல் தான்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

இது என்ன நிபுணத்துவம் என்று தெரிந்தால் நாங்களும் கற்றுத் தேரலாம் என்ற ஒரு ஆவல் தான்....................🤣.

வேண்டாம். இருக்கிறவர்கள். போதும். அவர்கள். சொல்வதில். 10%. தான். சரியாக. நடக்கிறது. இதை. ஒரு. குழந்தை. கூட. சொல்லும். படிக்க. தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

வேண்டாம். இருக்கிறவர்கள். போதும். அவர்கள். சொல்வதில். 10%. தான். சரியாக. நடக்கிறது. இதை. ஒரு. குழந்தை. கூட. சொல்லும். படிக்க. தேவையில்லை.

அண்ணா, என்னுடைய களப்பெயரின் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒரு பாபாவைச் சேர்த்துப் பாருங்கள்............. ஒரு சகோதரத்துவம் தெரியவில்லையா........😜.

சேலத்து பாபா (நித்தி), கோயம்புத்தூர் பாபா (ஜக்கி வாசுதேவ்), புட்டபர்த்தி பாபா............ இப்படி எத்தனை பாபாக்கள் உலகிற்கு தேவையாக இருக்கின்றார்கள். இவர்கள் பொய்யர்கள் மட்டும் இல்லை, குற்றவாளிகளும் கூட என்றாலும், இவர்கள் குருக்களாக இருக்கின்றார்கள்.

மனிதர்களுக்கு அவ்வளவு தேவைகளும், பிரச்சனைகளும் இருக்கின்றன............. ஆனால் அவற்றை அவர்களின் கடவுள்களிடம் நேரடியாகச் சொல்வதில் ஏதோ சில இடர்பாடுகள் போல......... இடையில் ஒரு குரு தேவைப்படுகின்றார்........

விக்கினேஸ்வரனை பிரேமானந்தாவின் பக்தர் என்று சொன்னார்கள். சும்மா சொல்கின்றார்கள் என்று அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. சமீபத்தில் அவர் வீட்டில் எடுத்த படமொன்றில் பிரேமானந்தாவின் படம் வரவேற்பறையில் இருந்தது......... அட கொக்கா மக்கா (இது என்னை நானே சொல்லிக் கொள்வது, உங்களையல்ல.....)............. இவர்கள் தான் இனத்தின் வழிகாட்டிகளா....................🫣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

அண்ணா, என்னுடைய களப்பெயரின் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒரு பாபாவைச் சேர்த்துப் பாருங்கள்............. ஒரு சகோதரத்துவம் தெரியவில்லையா........😜.

சேலத்து பாபா (நித்தி), கோயம்புத்தூர் பாபா (ஜக்கி வாசுதேவ்), புட்டபர்த்தி பாபா............ இப்படி எத்தனை பாபாக்கள் உலகிற்கு தேவையாக இருக்கின்றார்கள். இவர்கள் பொய்யர்கள் மட்டும் இல்லை, குற்றவாளிகளும் கூட என்றாலும், இவர்கள் குருக்களாக இருக்கின்றார்கள்.

மனிதர்களுக்கு அவ்வளவு தேவைகளும், பிரச்சனைகளும் இருக்கின்றன............. ஆனால் அவற்றை அவர்களின் கடவுள்களிடம் நேரடியாகச் சொல்வதில் ஏதோ சில இடர்பாடுகள் போல......... இடையில் ஒரு குரு தேவைப்படுகின்றார்........

விக்கினேஸ்வரனை பிரேமானந்தாவின் பக்தர் என்று சொன்னார்கள். சும்மா சொல்கின்றார்கள் என்று அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. சமீபத்தில் அவர் வீட்டில் எடுத்த படமொன்றில் பிரேமானந்தாவின் படம் வரவேற்பறையில் இருந்தது......... அட கொக்கா மக்கா............. இவர்கள் தான் இனத்தின் வழிகாட்டிகளா....................🫣.

ரசோ பாபா!! நல்லா தான் இரிக்கி😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

சேலத்து பாபா (நித்தி), கோயம்புத்தூர் பாபா (ஜக்கி வாசுதேவ்), புட்டபர்த்தி பாபா............ இப்படி எத்தனை பாபாக்கள்

அவன் அவனுக்கு அவன் பிரச்னை 😁🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kandiah57 said:

வேண்டாம். இருக்கிறவர்கள். போதும். அவர்கள். சொல்வதில். 10%. தான். சரியாக. நடக்கிறது. இதை. ஒரு. குழந்தை. கூட. சொல்லும். படிக்க. தேவையில்லை.

அறிவார்ந்தவர்களும்,அறிஞர்களும், எல்லாம் தெரிந்தவர்களும்,விஞ்ஞானிகளும் ஒழுங்காக இருந்திருந்தால் உலகில் பிரிவினைகளும்,சண்டைகளும்,யுத்தங்களும் வந்திருக்கவே கூடாது அல்லவா?

மனிதன் மனிதனை மதித்து நடந்திருந்தால் பாபாக்களும் கடவுளும் தோன்றியிருக்க மாட்டார்கள். அப்படி தோன்றியிருந்தாலும் மனித பாபாக்களையும் கடவுள்களையும் நம்பியிருக்க மாட்டார்கள்.

உள்ள நரக வேலைகளை செய்வது மனிதம். இதில் குறை சொல்வது இயற்கையை.....😎

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

ரசோ பாபா!! நல்லா தான் இரிக்கி😂

இதைவிட. பாப்பா. ரசோ. சிறந்தது. கருத்துகள். நிறைந்தது. ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இதைவிட. பாப்பா. ரசோ. சிறந்தது. கருத்துகள். நிறைந்தது. ஏராளன்.

அவர் விரும்பணுமே?!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

அவர் விரும்பணுமே?!

அவர் பாபா ரசோதரன் அல்லது ரசோ பாபா என்ற பெயரில் வந்து கருத்து சொன்னால் தான் கேட்பீர்களோ 😄

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் பாபா ரசோதரன் அல்லது ரசோ பாபா என்ற பெயரில் வந்து கருத்து சொன்னால் கேட்பீர்களோ 😄

maxresdefault.jpg

எதையும் தாங்கும் இதயம்!

எவ்வளவோ பார்த்திட்டோம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.