Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகிய காதல் மகன்!!

Featured Replies

தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்"

*கதாநாயகன் -

"காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் பிரசாந்தன்

*கதாநாயகி -

அறிமுக நட்சத்திரம் "அழகிய மகள்" ப்ரியா (ஜரோப்பிய வருகை)

*இவர்களுடன்

அறிமுகம் சின்ன கலைவாணன் செந்தூரன் (அவுஸ்ரெலிய வருகை)

அறிமுகம் சிரிபழகி அனுசா (ஜரோப்பிய வருகை)

*கெளரவேடத்தில்

அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்)

(தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்நாற்சந்தியில் காண்பிக்கபடுகிறது)

kankalre9.jpg

சுண்டல் அண்ணாவின் அட்டகாசமான நடிப்பில்!!!

கண்களை மட்டும் அகல் விரித்து

மூடிய திரைகுள் முகத்தை தேடி

என்னிடம் ஏதோ கேட்கத் துடிக்கும்

எனது உயிரின் இன்னோர் துளியே!!

அழகிய காதல் மகன்!!

காலை கதிரவன் தன் கதிர்களை பாய்ச்ச தொடங்கிவிட்டான் இன்னும் பிரசாந்தனோ நித்திரை அம்மாவின் குரல் கேட்டு திடுகிட்டு எழும்பினவன் அவசரமாக ஓடுகிறான் அம்மா சாப்பிட சொல்லியும் நேரமற்றவனாக புகையிரததை பிடிக்க ஓடுகிறான் அவன் மனம் முழுவதும் "ப்ரியாவை" நோக்கியல்லவா ஓடுகிறது இதனை அவனை தவிர யாரறிவர்!!ஓடியவன் ஸ்டேசனிற்கு சென்று தான் தன் ஓட்டத்தை நிற்பாட்டினான் அவன் கண்கள் அங்கும் இங்கும் வட்டமிட தொடங்கியது அவன் கண்கள் முழுவதும் ப்ரியாவை தான் தேடியது!!அந்த கூட்டத்தில் காலை குளிரில் ஒரு தேவதையை போல் வருகிறாள் "ப்ரியா" எல்லோரினதும் கண்களும் ஒரு நிமிடம் ப்ரியாவை பார்க்க தவறவில்லை என்றே சொல்லலாம்.....ஒரு கண் மட்டும் இமைக்க மறந்து பார்த்து கொண்டே இருந்தது அது தான் பிரசாந்தனின் கண்கள்!! :lol:

ப்ரியா ஸ்டேசன் படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் தோழி அனுசாவுடன்,அதே நேரம் பிரசாந்தனின் நண்பன் செந்தூரன் ஓடி வந்து பிரசாந்தனிடம் எப்படிடா மச்சான் என்று கதைக்க தொடங்க பிரசாந்தனிற்கோ "இவன் ஏன் வந்தான்" என்ற மனநிலையில் அவனின் கேள்விகளுக்கு கடமைக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் :lol: !!செந்தூரனுக்கும் ஆச்சரியமாக இருந்தது உடனே அவன் என்னடா உனக்கு ஆச்சு என்று கேட்க ஒருவாறு சமாளித்த பிரசாந்தன் ஒன்றும் இல்லைடா என்று நினைவிற்கு வந்தவன் போல் திரும்பினான்!!

ப்ரியாவும் அவள் தோழியும் பிரசாந்தனிடம் வந்தார்கள் "ப்ரியாவிற்கு" பிரசாந்தனின் அறிமுகம் இணையதளம் மூலம் தான் கிடைத்தது பிறகு தான் அவர்களுக்கு தெரிய வந்தது இருவரும் ஒரே புகையிரதத்தில் செல்பவர்கள் என்ற விசயம்!!அதன் பின் இருவரும் நல்ல அந்நியோன்யமாக பழகி வந்தார்கள்.......தங்கள் பிரச்சினைகளை எல்லாம் ஒருவருகொருவர் பகிர்ந்து நல்ல உறவு நிலையில இருந்தார்கள்!!

ஒவ்வொருநாளும் போலவே இன்றும் வந்தாள் "ப்ரியா" வந்து குட்மோர்னிங் எப்படிடா இருகிறாய் என்று கேட்க பிரசாந்தன் வெட்கத்துடன் "குட்மோர்னிங் ப்ரியா நான் நல்ல சுகம் என்று" மென்மையாக சொன்னான்!!பக்கத்தில் இருந்த செந்தூரனுக்கோ ஒரே ஆச்சரியம் என்னடா இவன் இப்படி வெட்கபடுறான் என்று!!ப்ரியா செந்தூரனை பார்த்து யார் இவர் என்று வினாவ இவன் தான் என் நண்பன் செந்தூரன் என்று பிரசாந் வேண்டா வெறுப்பா அறிமுகம் செய்து வைக்கிறான் செந்தூரன் அத்துடன் விடாம அனுசாவை பார்த்து "கலோ நைஸ் டூ மீட் யூ" என்று தொடங்க பிரசாந்தனிற்கு கோபம் வராத குறை ஆனால் அதனை வெளிகாட்டவில்லை!! :D

புகையிரதமும் வர எல்லோரும் ஏறுகிறார்கள் இவர்களும் ஏறுகிறார்கள் அங்கே மூன்று இருக்கைகள் மட்டும் இருக்க பிரசாந்தனைவிடுத்து மற்ற மூவரும் இருக்கிறார்கள் பிரசாந்தனிற்கோ செந்தூரனை நினைக்க கோபம் தான் வந்தது ஆனா வெளிகாட்டாம இருக்க அவன் பட்டபாடு அவனுக்கு தான் தெரியும்!!ஒரு மாதிரி செந்தூரனின் இறங்குமிடம் வர அவன் விடைபெறுகிறான் பிரசாந்தனிற்கோ மிக்க சந்தோசம் தொல்லை ஒழிந்தது என்று!! :huh:

இவர்கள் வழமையான தங்கள் உரையாடல்களை ஆரம்பிகிறார்கள் ஆனால் பிரசாந்தனோ அவள் கதைக்கும் போது வாயாடுவதை இரசித்த வண்ணம் இருந்தானே தவிர அவன் அதிகம் கதைக்கவில்லை......ப்ரியா உடனே என்னடா ஆச்சு என்று கேட்க இல்லை ஒன்றும் இல்லை என்று ஒருவாறு சமாளித்தான்!!அனுசாவிற்கோ ஏதோ விளங்கிட்டு போல ஒரு புன் முறுவலை பூத்தாள்!! :)

ப்ரியா கதைத்து கொண்டிருக்கும் போது பிராசாந் நீ யாரையாவது காதலிகிறாயா என்று கேட்க இவன் திடுகிட்டு சற்று நேரம் மெளனித்தவன் இல்லை என்று சொல்ல ப்ரியாவிற்கு ஆச்சரியம் என்னடா ஒன்றும் இல்லையா என்று கேட்டாள் பிராசாந்தின் மனசு முணுமுணுத்தது "உன்னை தவிர எனக்கு யார் காதலி" என்று ஆனா வெளிகாட்டி கொள்ளவில்லை!!என்னடா என்ன ஆச்சு என்று கேட்டவள் எனக்கு அது மறக்கமுடியாத வலி காதலிக்காம இருப்பது ஒரு சுகம் என்று சொல்ல உடனே அனுசா அப்படி சொல்ல வேண்டாம் எல்லா காதலும் அப்படி இல்லை என்று சொல்ல சரி ஒகே என்று ப்ரியா சமாதனபடுத்தினாள் அனுசாவா உடனே பிரசாந்திற்கோ பல கேள்வி அது என்ன மறக்கமுடியாத வலி என்று பல கேள்விகள் மனதில் சஞ்சரித்தாளும் அதனை கேட்க துணிவற்றவனா இருந்தவன் ஒருவாறு துணிவை வரவழைத்து கேட்டான்!!

உடனே ப்ரியா இதை பற்றி கேட்க வேண்டாம் அது முடிந்து போனது என்று சொல்ல பிராசாந் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஆனாலும் கவலையாக முகத்தை வைத்து கொண்டவன் ஏன் உங்களுக்கு என்ன ஆச்சு காதலில் உங்களுக்கு என்ன வெறுப்பு என்று கேள்விகளை அடக்க என்றுமில்லாதவாறு ப்ரியாவின் கண்ணில் இருந்து கண்ணீர் பூக்கள் பூத்தன!!இதை கண்டவன் சொறி ப்ரியா அழவேண்டாம் என்று அவளை சமாதானபடுத்தினவன் நடந்துமுடிந்தவற்றை பேசுவதில் ஒரு பயனும் இல்லை என்று அவளை தேற்ற அனுசா என்ன இது சின்னபிள்ளைதனம் என்று ப்ரியாவை கோவித்து கொண்டாள்!!

பிராசாந்தன் மனதில் பலகேள்விகள் ஓடின இவள் என்னுடைய காதலை ஏற்று கொள்வாளோ இல்லையா இவள் ஏற்று கொள்ளாவிடில் என்னால் எப்படி தான் தாங்கி கொள்வேன் என்று பல சிந்தனை ஓட்டங்கள் சிதற தொடங்கின.........இவ்வாறு இருக்கும் போது ப்ரியா சொறிடா பிரசாந் உன்னையும் அப்சேட் ஆகிட்டேன் என்று மன்னிப்புகேட்க சா இதற்கு எல்லாம் என்ன என்று பிரசாந் மறுபதிலளித்தான்!!உடனே அவள் நாங்கள் வீட்டை என்ன சொல்லுகிறார்களோ அதை கேட்க வேண்டும் பெற்றொருக்கு காதல் என்றா விருப்பமே இல்லை இப்படி என்னுடைய காதலும் கண்ணீராய் போய்விட்டது என்று சொல்லி வாய் முடிக்க முன் அனுசா என்னடி சொல்லுறார் காதலிக்கும் போது இதை எல்லாம் யோசிக்க வேண்டும் பிறகு அம்மா,அப்பா எல்லாரையும் பற்றி யோசித்து காதலை தியாகம் பண்ணுறது எல்லாம் சுத்த முட்டாள்தனம் என்று கூற பிரசாந் ஒன்றும் புரியாதவன் தலையை மட்டும் ஆட்டினான்!!உடனே ப்ரியா பிரசாந் நீங்களே சொல்லுங்கோ பருவ மயக்கத்தில் ஏதொ ஒரு உணர்வை காதல் என்று தொடர்ந்துவிட்டேன் சற்று தூரம் சென்ற பின் தான் தெரிந்தது அது காதல் இல்லை வெறும் கானல் என்று!! :(

இவ்வாறு பேச்சு போய் கொண்டிருக்கும் போது புகையிரத்தில் பயணித்த ஒரு முதியவர் வந்து என் பெயர் (நெடுக்ஸ்) கனகரத்தினம் காதல் என்பது புனிதமானது அது கசங்காம இருக்கும் வரைக்கும் அதை கசங்க பண்ணிட்டோமோ அதன் பின் அந்த கசங்கலை போக்க என்ன தான் முயற்சி செய்தாலும் என்ன தான் சொன்னாலும் அதனை மீட்கமுடியாது என்று சொல்லிவிட்டு பிள்ளைகளுக்கு நான் சொன்னா இப்ப கோபம் தான் வரும் என்னை பொறுத்தவரை இயற்கையை காதலிப்பது தான் எல்லாவற்றையும் விட மேல் என்று சொல்லிபோட்டு அவரின் ஸ்டேசன் வர இறங்கிறார்!!

இவர்கள் எல்லோரும் வாயடைத்து போய் அந்த வயோதிபரை வைத்த கண் வாங்காம பார்த்து கொண்டிருக்க அவர் இந்த வயதிலும் சுறுசுறுப்பா நடந்து கொண்டிருந்தார்!!

அந்த கிழட்டிற்கு இந்த வயதிலும் லொள்ளை பார் :huh: என்று அனுசா சொல்ல ப்ரியா அவர் சொல்வதிலும் ஒரு தெளிவு இருக்குது என்று சொல்லி வாய் மூட முன் அனுசா ஆமாம் இவாவும் இப்ப கிழவியா போயிட்டா தானே என்று சிரிக்க தொடங்கிவிட்டாள் ஆனா பிரசாந்தோ சிரிப்பதா அழுவதா என்று தெரியாம ஏங்கி கொண்டிருந்தான்!!உடனெ ப்ரியா என்னடா நீ மூடப்செட் ஆகிட்டாய் இதற்கு எல்லாம் அப்செட் ஆகினா லைவில எத்தனை விசயம் இருக்கு என்று சொல்ல!!பிரசாந் தலையை ஆட்டினான்!!அவன் சொல்ல தான் நினைக்கிறான் அவனால் சொல்ல முடியாம தவிர்கிறான்,பிரசாந் எப்ப முதன் முதலா ப்ரியாவோட கதைத்தானோ அன்றிலிருந்து இன்று வரை 6 மாத இரயில் பயணத்தில் அவளை தன் காதலியாக எண்ணி பயணித்தி கொண்டிருகிறான் ஆனால் அவளிடம் ஒரு நாள் கூட தன் விருப்பத்தை சொல்லவில்லை காரணம் அவள் தன்னை வெறுத்துவிடுவாளோ என்று ஆனால் ப்ரியாவோ எனி தன் வாழ்கையில் காதல் என்ற ஒன்றுக்கு இடம் இல்லை என்று வாழ்ந்து வருகிறாள் ஆனால் பிரசாந் மேல் அளவுகடந்த அன்பை வைத்திருப்பது உண்மை தான் அதனை அனுசா கூட அறிவாள்!!

புகையிரதம் ஒரு ஸ்டேசனில் நிற்க அனுசா விடைபெற்று செல்கிறாள் இருவரிடம் இருந்து புகையிரதம் மீண்டும் தன் பயணத்தை தொடங்குகிறது.......

புகையிரதம் பயணத்தை மறுபடி தொடங்கமுன் சிறிய இடைவேளை!!(புகைத்தல் உடல் நலதிற்கு கேடு)

பிரசாந்தனும் மெல்ல மெல்ல கதைக்க தொடங்கினான் ப்ரியா இப்ப பார்தீங்க தானே ஒரு ஸ்டேசன் வர ஒவ்வொருத்தர் இறங்குகிறோம் ஆனா புகையிரதம் மட்டும் போய் கொண்டு அல்லவா இருக்குது அது போல் அல்லவா வாழ்கையும் என்று சொல்ல ப்ரியா புன்சிரிப்புடன் என்ன தத்துவம் எல்லாம் பேச தொடங்கிட்டியள் ஆனால் பாருங்கோ புகையிரதத்தை ஓட்டி செல்பவர் ஒருத்தர் என்று கூற அவன் ஏதும் பேசாம மெளனம் ஆகினான்!!

சற்று நேரம் மெளனம் என்னடா பேசாம இருகிறாய் என்று ப்ரியா கேட்க திடுகிட்டவன் இல்லை ப்ரியா சில நேரத்தில வாழ்கை பிடிக்குதில்லை ஏன் என்று தெரியவில்லை என்று சொல்ல உடனே ப்ரியா அப்ப இது காதல் தான் யாரடா அந்த அதிஸ்டசாலி என்று கேட்க "ப்ரியா" என்று உதடுகள் உச்சரிக்க எத்தணித்த போது மனம் விடவில்லை ஏனோ தெரியவில்லை அவனிற்கே!!உடனே பிரசாந் ப்ரியா நீ எனி காதலிக்கவே மாட்டாயா என்று கேட்க என்னடா கேள்வி இது அந்த வயோதிபர் சொன்ன மாதிரி இயற்கையை காதலிபேன் என் வேலையை காதலிபேன் இவையும் காதல் தானே என்று சொல்லி சிரிக்க பிரசாந் ஆனால் எனக்கு உன்னை மட்டும் அல்லவா காதலிக்க தெரியும் என்று சொல்லி தலைகுனிந்தவனை திடுகிட்டு பார்த்தாள் ப்ரியா என்னடா பேசுறாய் "ஆர் யூ ஒகே" என்று கேட்டவளை பார்த்த பிரசாந் நீங்க வரமட்டும் ஒகேயா தான் இருந்தனான் ஆனா இப்ப ஒன்றுமே எனக்கு ஒகே இல்லை என்று மறுபடிதலைகுனிந்தாள்!!

என்னடா தெரிந்தா கதைக்கிறாய் நான் உன் நண்பி வாழ்கையில் ஒருத்தியா என்னால் வரமுடியாது அதுவும் காதல் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்று சொல்லி நீயுமா என்னை புரிந்துகொள்ளவில்லை என்று கண்கலங்கினாள்.........இல்லை ப்ரியா உன்னை நான் புரிந்தபடியா தான் காதலிகிறேன் "நீயில்லாத வாழ்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது" என்று சொல்லி வாய் மூட முன் ப்ரியா காதலிக்கும் போது இப்படி தான் இருக்கும் பிறகு தானே தெரியும் என்று அலுத்து கொண்டாள் இவன் உடனே ஏன் அப்படி நினைக்கிறீங்க உங்கள் கடந்தகால வாழ்கை எனக்கு தேவையில்லை எனக்கு நீங்க தான் வேண்டும் என்று குழந்தையை போல் கெஞ்சினான்!!ப்ரியாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவள் பதில் பேசவில்லை மெளனமானாள் அவளின் முகங்கள் வாடின........ஆனா இவனோ ஏன் எல்லாரையும் ஏமாற்றி உங்களையே நீங்களே ஏமாற்றி வாழ்கிறீங்க உண்மையா என்னை பிடிக்கவில்லையா என்னை பார்த்து சொல்லு என்று கேட்டவனை பார்த்த ப்ரியா என்ன செய்வது என்று தெரியாமா" பிடிக்கவில்லை.பிடிக்கவில்லை" என்று தலைகுனிந்தபடி சொன்னாள் ஏன் என்னை பிடிக்கவில்லை என்று இவன் கேட்க........தயவு செய்து இதற்கு மேல் கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் பிளீஸ் என்று கெஞ்சியவளை பார்த்த பிரசாந் சொறி ப்ரியா என்று விலகி கொண்டான்!! :(

சற்று நேரம் மெளனம் அதன் பின் ப்ரியா பேச தொடங்கினாள் பிரசாந் காதல் தப்பு என்று நான் சொல்லவில்லை ஆனா என்னால் காதலிக்கமுடியாது உங்களை இல்லை யாரையும் சாமிக்கு வைத்த பூவை ஒருக்கா தான் பாவிப்பார்கள் அதை போல் தான் காதலும் தயவு செய்து என்னை மறந்துவிடுடா நல்ல நண்பர்களாக இருப்போம் என்றால் என்னோடு தொடர்ந்து வாங்கோ இல்லாட்டி இத்துடன் எங்கள் இந்த பயணத்தை முடித்து கொள்வோம் என்று சொன்னவளை பார்த்த பிரசாந் "சாமிக்கு வைத்த பூவை தான் பக்தர்கள் எடுத்து காதில் சூடி கொள்வார்கள்" அதை போல் தான் நானும் சூடி கொள்ள விரும்பினேன் ஆனா பூவோ தேனை குடிக்கும் தேனீயாக என்னோடு இராமல் என்னையும் பூவாக இருக்க சொல்கிறது ஆனா பூவின் வாழ்வு சில நாள் அந்த சில நாளிள் தன்னிடம் உள்ள தேனை (காதலை) தேனிக்கு கொடுப்பது பிழையா என்று மறுபேச்சு எழுப்பினான்!!

இதை கேட்டவள் என்ன பேசுவது என்று தெரியாம சில நேரம் மரமாக நின்றாள் சற்று நிதானித்தவள் பூ தான் நான் காதல் என்னும் தேனை முடித்துவிட்டேன் எனி என்னிடம் கொடுப்பதிற்கு தேன் இல்லை ஒரு பூவில் தேன் இல்லாவிடில் தேனி மறு பூ தேடி போகும் அதை போல் நீங்களும் மறு பூ தேடி செல்வது தான் சிறப்பு என்று சொல்லி பேச்சை முடித்தாள்!!பிரசாந் சிரித்து கொண்டு எல்லா பூவிலும் போய் மொய்க்கும் தேனி நான் இல்லை இந்த பூவில் தேன் இல்லை எனில் எந்த பூ தேனியும் எனக்கு வேண்டாம் என்று சொன்னவை பார்த்த ப்ரியா என்னடா கதைக்கிறாய் என்னை புரிந்துகொள்ளவே மாட்டாயா பிளீஸ்.............உடனெ பிரசாந் என்னை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீங்க உங்களை நான் புரிந்து கொள்ள என்று வேண்டா வெறுப்பாக பதிலளித்தான்.......சில நிமிட மெளனம் அதன் பின் ப்ரியா வெறி சொறி பிரசாந் என்னால் காதல் என்ற வார்த்தையே கேட்கவே முடியாது நல்ல பிரண்டா இருப்பதாக இருந்தா கதைக்கவும் இல்லாவிடில் கதைக்க வேண்டாம் அதை கேட்கும் மனநிலையிலும் நான் இல்லை என்று கூறியவளை பார்த்த பிரசாந் என்னால் உங்களை காதலிக்காம இருக்க முடியாது நீங்கள் என்னை காதலிக்காட்டியும் நான் உங்களை காதலித்து கொண்டே இருப்பேன் என்று சொல்லி பேச்சை முடித்தான் உடனே அவள் குட்பாய் என்று சொல்லி எழுது அடுத்த இருக்கையில் போய் இருந்தாள் பிரசாந்தால் இதனை தாங்கி கொள்ளமுடியவில்லை ஆனாலும் தாங்கி கொண்டாண் புகையிரதம் இறுதி ஸ்டேசனை அண்மித்தது இருவரும் இறங்கவேண்டிய தருணம் வந்தது அப்போதும் பிரசாந் அவளை பார்த்தான் உடனே அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது இனி இறங்கினா நான் யாரோ நீங்க யாரோ என்று சொல்லி சென்றாள்..........அவனோ என்னை சொல்வது என்று தெரியாம அப்படியே நின்றான்!!

இறங்கவேண்டிய இடம் வந்தது இருவரும் பிரிந்து இரு கோணங்களிள் சென்றனர் வேலைக்கு போய் இருவருக்கும் வேலை சரியாக ஓடவில்லை ஏதோ கடமைக்கு வேலையை செய்து கொண்டிருந்தார்கள் இருவரும் தங்களுடைய அலுவலகத்தில்.......

இருவரும் நடந்தவற்றை மறக்க நினைத்தாலும் அதுவே கண்முன் வந்து நின்றது இருவரும் வேலையை அரைவாசியில் முடித்து கொண்டு ஸ்டேசனிற்கு செல்கிறார்கள் அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் மறுபடி சந்திகிறார்கள் "ப்ரியாவிற்கு" என்ன செய்வது என்று தெரியவில்லை கண்டும் காணதவன் போல் செல்கிறாள் பிரசாந் திகைத்து போய் நிற்கிறான் டிரெயினில் இருவரும் வெவ்வேறு இருக்கையில் இருந்து பயணித்து கொண்டிருகிறாகள்!!இவர்கள் இருவரினது இத்தயகைய பயணம் 6 மாதங்களாக தொடந்து கொண்டே இருக்கின்றது!

6 மாதங்களின் பின்...........................

பிரசாந் ஸ்டேசனிற்கு வருகிறான் வழமையாக வேலைக்கு போக அவனின் தோற்றத்தை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது மிகவும் மெலிந்து,தாடி வளர்த்து இவன் தான் பிரசாந்தோ என்று கேட்கும் அளவிற்கு இருந்தான் ஆனாலும் அவனின் கண்கள் "ப்ரியாவை" தான் தேடி கொண்டிருந்தது அந்த வேளையிலும் அவன் இதயத்தில் இருந்து வரும் ஓசையும் ப்ரியாவாகவே எதிரொலித்தது..........ஆனா ப்ரியா ஸ்டேசனிற்கு வருவதை நிறுத்தி 3 மாசம் ஆகிறது ஆனால் ப்ரியா தன்னிசம் வருவாள் என்று அவன் காத்து கொண்டிருகிறான்.........இப்படி இன்றும் அவன் கண்கள் தன் பிரியமான ப்ரியாவை நோக்கி பார்த்து கொண்டிருக்கும் போது..... :(

ஒருத்தர் ஓடி வந்து கொண்டிருகிறார் ஒடி வந்தவர் பிரச்சந்தனின் கால் தடக்கி விழும் போது ஒரு கை அவரை தாங்கிறது உடனே பிரசாந்தன் பார்த்து வர கூடாதா என்று சொல்லும் போது அவரை விழாம பிடித்தவர் சொல்கிறார் சிரித்து கொண்டு கண்ணா வாழ்கையில எவ்வளவு தான் கவனமா வந்தாலும் விழ நினைத்தா விழுந்து தான் ஆகவேண்டும் அதை யாரலையும் தடுக்க முடியாது அண்ணே என்று சொல்ல பிரசாந் டேய் ஜம்முபேபியா எங்கே இங்கே என்று கேட்க நான் இல்லாம ஒரு பயணமா "தீபாவளி வாழ்த்துகள்" பிரசாந்தன் அண்ணா என்ட டிரெயின் வந்திட்டு நான் வரட்டா என்று கிளம்புகிறான்.................கண்ணன் (ஜம்மு) வரும் வேளை!!

ஆனாலும் தீபாவளியை கொண்டாடும் மனநிலையிலா பிரசாந் இருகிறான் தன் பிரியமானவள் தன்னிடம் எப்போது வருகிறாளோ அப்போது தான் தனக்கு தீபாவளி என்று மனதில் நினைத்து கொண்டு டிரேயினில் ஏறுகிறான்.........ப்ரியாவோ கைதொலைபேசியை எடுத்தவள் தீபாவளி வாழ்த்து சொல்ல பிரசாந்திற்கு ஆனால் வாழ்த்து சொல்லாமலே வைக்கிறாள்.................. :o

அடுத்த தீபாவளியாவது இவர்களின் பயணங்கள் ஒன்றாகும் என்ற நம்பிக்கையுடன் டிரேயினில் பயணித்து கொண்டிருப்பவர்!!

கதை

திரைகதை

வசனம்

பாடல்

இசை

அமைத்த சூப்பர்ஸ்டார் ஜம்மு பேபி!!!

எத்தனை

மழைதுளிகளை

நீ என் கைகளிள்

பிடிகின்றாயோ

அவ்வளவும் நீ

என்மீது கொண்ட

அன்பு

எத்தனை

மழைதுளிகள்

மண்ணின் மடியில்

விழுகிறதோ

அவ்வளவும்

நான் கொண்ட அன்பு!!

வணக்கம்!!

பயணங்கள் தொடரும்..................(அடுத்த தீபாவளிக்கு)

laknesh3lkxl5.jpg

ஓ வாழ்த்துக்கள் ஜெனரல்..

தீபாவளி ரிலீசோ..

இத வெளியில ஒட்டாமல் ஏன் இதுக்க கொண்டுவந்து ஒட்டி இருக்கிறீங்கள்?

நான் இப்ப பள்ளியில நிக்கிறன். வீட்டபோய் ஆறுதலா உங்கட படத்த பார்த்துப்போட்டு எப்படி இருக்கிது என்டு சொல்லிறன். படம் சரியான நீளமா இருக்குப்போல.

  • தொடங்கியவர்

நன்றி குருவே வாழ்த்துகளிற்கு!! :)

ஆமாம் தீபாவளி ரிலீஸ் தான் இனிய தீபாவளி வாழ்த்துகள் :) ஜெனரல் முதல் முதலா இந்த படத்தை பார்க்க தியேட்டறிற்கு நீங்க தான் வந்திருகிறீங்க மிக்க நன்றி :wub: !!வெளியால ஓட்டலாம் தான் யாரும் ஸ்கீரினை கிழித்து போட்டாலும் அது தான் இங்கே ஒட்டி இருகிறேன் :lol: பிகோஸ் இது எமது குடும்ப திரையரங்கு தானே இங்கே எப்படி ஓடுது என்று பார்த்து அங்கால திரையிடுவோம் என்று நினைத்திருகிறேன்!! :rolleyes: பள்ளியிலேயா சரி ஜெனரல் நல்லா படியுங்கோ வீட்ட போய் பார்த்துவிட்டு சொல்லுங்கோ அப்ப தான் மற்றதிரையரங்கில் திரையிடலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

வெல்டன்.

படம் சூப்பர்.

அதிலும் நெடுக் அண்ணா வந்து போகும் காட்சி சூப்பர்.

கண்ணன் வரும் வேளை ...... நல்லா இருக்குது. நல்லா இருக்குங்கோ தயாரிப்பாளர் அவர்களே.

உண்மைச் சம்பவமோ. ஆமெனில் ப்ரியாவும் பிரசாந்தனும் அடுத்த தீபாவளிக்காவது ஒன்று சேர பிரார்த்திக்கின்றேன்.

ஹீஹீ இது தீபாவளி ரிலீஸ் எல்லோ. தியட்டர் இல் தான் முதலில் போடுறதாம். பிறகு லேட் ஆக பப்ளிக் இல் போடுவினமாம் குருவே.

"மொத்தத்தில் அழகிய காதல் மகன் அழகு."

  • கருத்துக்கள உறவுகள்

படம் நன்னா இருக்கு. BUT நெடுக்ஸ்கு ஒரே ஒரு வசணம் மட்டும் குடுத்து அவமான படுத்தி போட்டிங்கள். :rolleyes:

வணக்கம்,

உங்கள் படம் பார்த்தேன்.

பிரசாந்த் என்பது நீங்கள் போல் தெரிகிறதே? படத்தை வாசிக்க, டிரையினில் போகும் கதை எல்லாம் சொந்த அனுபவம் போல இருக்கிது.

பாடல்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. 13 பாடல்களா உங்கள் படத்தில்? ஐந்து பாட்டுக்கு மேல் கூடாது. சில பாட்டுக்கள் நான் இன்றுதான் முதல்தடவையாக கேட்டேன்.

உங்கட பட கதைவசனத்தில பிடித்தது:

"பூ தான் நான் காதல் என்னும் தேனை முடித்துவிட்டேன் எனி என்னிடம் கொடுப்பதிற்கு தேன் இல்லை ஒரு பூவில் தேன் இல்லாவிடில் தேனி மறு பூ தேடி போகும் அதை போல் நீங்களும் மறு பூ தேடி செல்வது தான் சிறப்பு என்று சொல்லி பேச்சை முடித்தாள்!!பிரசாந் சிரித்து கொண்டு எல்லா பூவிலும் போய் மொய்க்கும் தேனி நான் இல்லை இந்த பூவில் தேன் இல்லை எனில் எந்த பூ தேனியும் எனக்கு வேண்டாம்"

வெரி குட்.. பயமில்லாம வேற தியேட்டருகளிலையும் படத்த ஓடலாம். கல்லெறி விழாது.

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ் கதை சூப்பர்....வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஜம்ஸ் ழூலக்கதை சுண்டல்' அப்பிடினு டைட்டில் கார்டல போட்டு இருக்கனும்...

அப்புறம் நான் இந்த படத்துக்கு தடை வாங்கி கோர்ட்டுக்கு எல்லாம் போய்டுவன் ......:lol :lol :lol

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது சங்கர் ஸ்டைல் படமோ?முதல் படம் கிராமத்து காற்று இப்ப பட்டணத்தில எடுத்து பெரிய டைரக்டர் ஆகிட்டீங்க போல ஜம்முபேபி. :wub:

என்ன தான் இருந்தாலும் ஒரு 20 வருசதிற்கு முதல் இந்த யாழ்களம் இல்லாம போயிட்டு இருந்திருந்தா நாங்களும் எங்களுடைய காதல்களை கதையா எழுதி படம் தயாரித்து இருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்ஸ் இப்ப மட்டும் என்னவாம்...பாத்தால் 25 வயசு வாலிபன் மாதிரி தானே இருக்கிங்க..சோ கதையை தாரலமா சொல்லுங்கப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

யாழில முளைச்ச பாரதிராஜாவுக்கு நம்ம பேராண்டிக்கு வாழ்த்துக்களுப்பா. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் எங்கடை ஜமுனன் எல்லா இடத்திலேயும் என்னமா கலக்குறான் :rolleyes::wub:

ஜம்மு அழகிய காதல் மகன் கலக்கலோ கலக்கல்..... ஹிஹி சுண்டல் அண்ணாவோ பிரசாந்த் ? நல்லா நடிச்சிருக்கார்.... ஹாஹா கதைக்கு ஏற்றது போல் பாட்டுக்களையும் போட்டு நல்லா செய்திருக்குறீங்க ஜம்மு ..... பாராட்டுக்கள்...! :rolleyes:

Edited by அனிதா

அட எப்ப விஜயோட அழகிய தமிழ் மகன் வருமெண்டு கேட்க...நம்ம யாழில அழகிய காதல் மகன்

வந்திருக்கு எண்டு சொன்னாங்க..உடனே ஓடி வந்து பார்த்தா சுண்டல், ஜம்மு இயக்கத்தில

நல்லொரு படம்..நல்லா இருக்கு...

பொருத்தமான பாடல்கள்.. அழகான கவி வரிகள்...ஜம்மு கலக்கிட்டீங்க...

சுண்டல் தான் பிரசாந்தோ? :wub:

சரி பிச்சாந்தும்..ப்ரியாவும் அடுத்த தீபாவளி மட்டும் ஏன் பொங்கலுக்கே இணைய என்னோட வாழ்த்துக்கள்.. :rolleyes:

விஜயோட அழகிய டுமீல் மகன் அட்ட பளாப் எண்டாங்க என் ப்ரெண்ட்ஸ்..

ஆனால் நம்ம ஜம்முவோட படம் சூப்பர் கிட்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ் நல்ல முயற்சி.அது சரி கதாபாத்திரங்கள் ஒன்றும் கற்பனை இல்லையே? பாடல்கள் கூடினாலும் நல்ல பாடல்கள் என்ற வகையில் ரசிக்க கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்ஸ் இப்ப மட்டும் என்னவாம்...பாத்தால் 25 வயசு வாலிபன் மாதிரி தானே இருக்கிங்க..சோ கதையை தாரலமா சொல்லுங்கப்பா....

நம்ம கதையை சொன்னா இப்பத்தைய இளசுகள் கண்டுகாதுகள் சரி சரி தாங்கள் தான் பிரசாந்தோ உங்களுக்கு வாழ்த்துகள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"அழகிய காதல் மகன்" திரைபட கதாநாயகனின் பேட்டி வெகுவிரைவில் பத்திரிகைகளிள் பிரசுரமாகும் சிட்னி வாழ் ரசிகர்களே வாசிக்க தவறாதீர்கள்... :wub::D

  • தொடங்கியவர்

வெல்டன்.

படம் சூப்பர்.

அதிலும் நெடுக் அண்ணா வந்து போகும் காட்சி சூப்பர்.

கண்ணன் வரும் வேளை ...... நல்லா இருக்குது. நல்லா இருக்குங்கோ தயாரிப்பாளர் அவர்களே.

உண்மைச் சம்பவமோ. ஆமெனில் ப்ரியாவும் பிரசாந்தனும் அடுத்த தீபாவளிக்காவது ஒன்று சேர பிரார்த்திக்கின்றேன்.

ஹீஹீ இது தீபாவளி ரிலீஸ் எல்லோ. தியட்டர் இல் தான் முதலில் போடுறதாம். பிறகு லேட் ஆக பப்ளிக் இல் போடுவினமாம் குருவே.

"மொத்தத்தில் அழகிய காதல் மகன் அழகு."

நன்றி நிலா அக்கா நல்லாவா இருக்கு அப்ப சந்தோசம் தான் :lol: !!நெடுக்ஸ் தாத்தா வரும் காட்சி சூப்பரா அவர் கெளரவ வேடம் தான் "அமிதாபச்சான்" மாதிரி :D சுண்டல் அண்ணாவின் நடிப்பை பற்றி சொல்லவே இல்லை அட்டகாசமான நடிப்பு அல்லவா அது!!"கண்ணண் வரும் வேளை" நல்லா இருக்கா அது பேபிக்கான பாட்டு அல்லோ படத்தில அது தான் :blink: !!உண்மை சம்பவமோ அதை பற்றி சுண்டல் அண்ணாவிட்ட தான் கேட்கவேண்டும் உண்மையா இருக்கலாம் அல்லது எனி தான் உண்மையாக ஆகலாம் இது எல்லாம் நேக்கு தெரியாது :D கதை,திரைகதை,வசனம்,இசை எழுதினது நான் நடித்தது அவர்!!அடுத்த தீபாவளிக்கு என்ன நடக்கும் என்பது தான் என்னுடைய அவா கூட!! மிக்க நன்றி நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

படம் நன்னா இருக்கு. BUT நெடுக்ஸ்கு ஒரே ஒரு வசணம் மட்டும் குடுத்து அவமான படுத்தி போட்டிங்கள். :huh:

படம் நல்லாவா இருக்கு மாமா அப்ப சந்தோசம் அச்சோ நெடுக்ஸ் தாத்தா அமிதாபச்சான் மாதிரி அவரின்ட பிசி ஸ்கேடிலில் நமக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்கி தந்ததே பெரிய விசயம் மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம்,

உங்கள் படம் பார்த்தேன்.

பிரசாந்த் என்பது நீங்கள் போல் தெரிகிறதே? படத்தை வாசிக்க, டிரையினில் போகும் கதை எல்லாம் சொந்த அனுபவம் போல இருக்கிது.

பாடல்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. 13 பாடல்களா உங்கள் படத்தில்? ஐந்து பாட்டுக்கு மேல் கூடாது. சில பாட்டுக்கள் நான் இன்றுதான் முதல்தடவையாக கேட்டேன்.

உங்கட பட கதைவசனத்தில பிடித்தது:

"பூ தான் நான் காதல் என்னும் தேனை முடித்துவிட்டேன் எனி என்னிடம் கொடுப்பதிற்கு தேன் இல்லை ஒரு பூவில் தேன் இல்லாவிடில் தேனி மறு பூ தேடி போகும் அதை போல் நீங்களும் மறு பூ தேடி செல்வது தான் சிறப்பு என்று சொல்லி பேச்சை முடித்தாள்!!பிரசாந் சிரித்து கொண்டு எல்லா பூவிலும் போய் மொய்க்கும் தேனி நான் இல்லை இந்த பூவில் தேன் இல்லை எனில் எந்த பூ தேனியும் எனக்கு வேண்டாம்"

வெரி குட்.. பயமில்லாம வேற தியேட்டருகளிலையும் படத்த ஓடலாம். கல்லெறி விழாது.

நன்றி!

படத்தை பார்த்ததிற்கு மிக்க நன்றி குருவே!!பிரசாந் நான் இல்லை டிரேயினில் போறனான் தான் ஆனா டிரேயினில் இவைக்கு பின் சீட்டில தான் பேபி என்ட பெயர் பிரசாந் இல்லை யாரின்ட பெயர் பிரசாந்தோ அவர் தான் ஆள் இதற்கு மேலே ஒன்றும் சொல்ல ஏலாது!!கதை சொந்த அநுபவம் இல்லை நான் இன்னும் பேபியாக்கும்!! :D

ஓ 5 பாட்டிற்கு மேல் கூடாதோ இதை அடுத்த முறை கவனிகிறேன் இந்த சுண்டல் அண்ணா தான் தனக்கு கூட பாட்டு வேண்டும் என்று அடம்பிடித்தவர்!!சில பாட்டுகளை இன்றோ கேட்கிறீஙக் எப்படி இருந்தது பாட்டுகள்!! :wub:

மிக்க நன்றி நீங்க சொன்ன மாதிரியே தியேட்டரில் போட்டாச்சு கல்லெறி இதுவரை விழவில்லை!! :(

Edited by Jamuna

  • தொடங்கியவர்

யோவ் ஜம்ஸ் ழூலக்கதை சுண்டல்' அப்பிடினு டைட்டில் கார்டல போட்டு இருக்கனும்...

அப்புறம் நான் இந்த படத்துக்கு தடை வாங்கி கோர்ட்டுக்கு எல்லாம் போய்டுவன் ......

அட சுண்டல் அண்ணாவே வாழ்த்தி தெரிவித்திருகிறார் அவ்வளவு நல்ல படமா உங்க நடிப்பு அந்த மாதிரி சுண்டல் அண்ணா :blink: !!உங்களை வைத்தே ஒரு படம் எடுத்திருகிறேன் என்றா பாருங்கோ :huh: !!அட சுண்டல் அண்ணா டென்சன் ஆகிறதை பார்த்தா அந்த பிரசாந்தன் நம்ம சுண்டல் அண்ணா போல அல்லவா இருக்கு அவா எனக்கு அண்ணி பயப்பிட வேண்டாம்....... :wub:

என்ன இது சங்கர் ஸ்டைல் படமோ?முதல் படம் கிராமத்து காற்று இப்ப பட்டணத்தில எடுத்து பெரிய டைரக்டர் ஆகிட்டீங்க போல ஜம்முபேபி.

என்ன தான் இருந்தாலும் ஒரு 20 வருசதிற்கு முதல் இந்த யாழ்களம் இல்லாம போயிட்டு இருந்திருந்தா நாங்களும் எங்களுடைய காதல்களை கதையா எழுதி படம் தயாரித்து இருக்கலாம்.

அட புத்து மாமா இது ஜம்மு ஸ்டைல் படம் எப்படி இருக்கு!!கிராமத்து காற்றில் தொடங்கி தான் கொஞ்சம் கொஞ்சமா வரவேண்டும் மாமா உது தெரியாதோ!! :lol:

அட மாமா இது என்ட கதை இல்லை இது உண்மை கதையாக இருப்பது உண்மை தான் ஆனா நான் நல்ல பிள்ளை உது தெரியாதோ உங்களுக்கு!!அப்ப 20 வருசதிற்கு முன்னாடி உங்களுக்கு ஒரு காதல் இருந்து வெளிகாட்ட முடியாம போயிருக்கு இருங்கோ மாமிகிட்ட போட்டு கொடுகிறேன்!! :D

யாழில முளைச்ச பாரதிராஜாவுக்கு நம்ம பேராண்டிக்கு வாழ்த்துக்களுப்பா. :lol:

ஆ பாரதிராஜாவா தாத்தா ரொம்ப நன்றி என்றாலும் தாத்தாவின்ட நடிப்பு அந்த மாதிரி!! :lol:

இவன் எங்கடை ஜமுனன் எல்லா இடத்திலேயும் என்னமா கலக்குறான் :D

கு.சா தாத்தா எங்கே ஆளை காணகிடைக்குதில்லை என்னத்தை கலக்கிறேன் தாத்தா!! :(

  • தொடங்கியவர்

ஜம்மு அழகிய காதல் மகன் கலக்கலோ கலக்கல்..... ஹிஹி சுண்டல் அண்ணாவோ பிரசாந்த் ? நல்லா நடிச்சிருக்கார்.... ஹாஹா கதைக்கு ஏற்றது போல் பாட்டுக்களையும் போட்டு நல்லா செய்திருக்குறீங்க ஜம்மு ..... பாராட்டுக்கள்...!

அனிதா அக்கா கதை நல்லாவா இருக்கு நன்றியுங்கோ :huh: !!ம்ம்ம்ம் அவர் நல்லா தான் நடித்து கொண்டு இருகிறார் அனிதா அக்கா நான் சொன்னது படத்தை தான் :( !!சுண்டல் அண்ணா தான் பிரசாந்த் நான் சொல்ல வந்தது அப்படியே கதைக்கு ஏற்ற மாதிரி மாறி நடித்திருகிறார் சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரியோ!!நன்றி அனிதா அக்கா பாராட்டுகளிற்கு! :lol: !

அப்ப நான் வரட்டா!!

அட எப்ப விஜயோட அழகிய தமிழ் மகன் வருமெண்டு கேட்க...நம்ம யாழில அழகிய காதல் மகன்

வந்திருக்கு எண்டு சொன்னாங்க..உடனே ஓடி வந்து பார்த்தா சுண்டல், ஜம்மு இயக்கத்தில

நல்லொரு படம்..நல்லா இருக்கு...

பொருத்தமான பாடல்கள்.. அழகான கவி வரிகள்...ஜம்மு கலக்கிட்டீங்க...

சுண்டல் தான் பிரசாந்தோ?

சரி பிச்சாந்தும்..ப்ரியாவும் அடுத்த தீபாவளி மட்டும் ஏன் பொங்கலுக்கே இணைய என்னோட வாழ்த்துக்கள்..

அட சகி அக்கா எங்கே இருந்து இருந்து விட்டு ஆளை காணவே கிடைக்குதில்லை!! :wub: அப்ப "அழகிய காதல் மகன்" பற்றி வெளியால போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டுறாங்களோ சகி அக்கா!!ஓடி வந்து படத்தை பார்த்ததிற்கு மிக்க நன்றி சகி அக்கா :D !!அக்சுவலா சுண்டல் தான் பிரசாந் என்ட படத்தில உண்மையாகவும் இருக்கலாம் அதை பற்றி சுண்டல் அண்ணா சொல்லுவார்!!என்றாலும் கடைசியாக "பிச்சாந்" என்று சொல்லி போட்டீங்க :lol: சகி அக்கா நீங்க சொல்லுற மாதிரி பொங்கலுக்கே இணைந்தா படத்தை எடுத்த எனக்கும் சந்தோசம் தான்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

விஜயோட அழகிய டுமீல் மகன் அட்ட பளாப் எண்டாங்க என் ப்ரெண்ட்ஸ்..

ஆனால் நம்ம ஜம்முவோட படம் சூப்பர் கிட்

மாமோய் நீங்களும் தியிட்டரிற்கு வந்திட்டீங்களோ நீங்களோ சொல்லிட்டீங்க சூப்பர் கிட் என்று ரொம்ப சந்தோசம் மாமா :D ஆனாலும் நம்ம பட கதாநாகன் "பிரசாந்தனின்" கனவு நனவானா தான் படதிற்கு முழு வெற்றியே!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்ஸ் நல்ல முயற்சி.அது சரி கதாபாத்திரங்கள் ஒன்றும் கற்பனை இல்லையே? பாடல்கள் கூடினாலும் நல்ல பாடல்கள் என்ற வகையில் ரசிக்க கூடியதாக இருந்தது.

நன்றி நுணாவிலன் அண்ணா கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனை இல்லை அண்ணா நம்ம படத்தில் எப்பவும் கதாபாத்திரம் எல்லாம் உண்மை தான்!! :blink:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

"அழகிய காதல் மகன்" திரைபட கதாநாயகனின் பேட்டி வெகுவிரைவில் பத்திரிகைகளிள் பிரசுரமாகும் சிட்னி வாழ் ரசிகர்களே வாசிக்க தவறாதீர்கள்...

மாமோய் உண்மையாவா அட அட சுண்டல் அண்ணாவையே கீரோ ஆக்கி அந்த படத்தையே நான் எடுத்து அது வெற்றி படம் ஆனது நேக்கு ரொம்ப சந்தோசம் தான் :wub: !!அடுத்த படத்தில எனி யாரை கீரோ ஆக்குவோம்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

யாரின்ட பெயர் பிரசாந்தோ அவர் தான் ஆள் இதற்கு மேலே ஒன்றும் சொல்ல ஏலாது!!

யாரு, நம்ம வானத்தில வில்லு மாதிரி இருக்கிற பிரசாந்தோ???? :)

  • தொடங்கியவர்

யாரு, நம்ம வானத்தில வில்லு மாதிரி இருக்கிற பிரசாந்தோ???? :)

மாமோய் எப்படி இப்படி எல்லாம் உங்களாள மட்டும் முடியுது அவர் பிரசன்னா இது பிரசாந் வித்தியாசம் இருக்குது அல்லோ!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கும் தீபாவளி றிலீசா?

ஜொம்மு...கலக்கிட்டீங்களே..பிரம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.