Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. 

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. 

அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார்.

குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது:

வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. 

முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://jaffnazone.com/news/53411

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன?

  1. பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

  2. சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம்.

பிகு

இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

சுத்துமாத்து சுமந்திரனும், நாமல் ராஜ பக்சவும்...

ஒரே சட்டக் கல்லூரியில் படித்து, பின் கதவால் பாஸ் பண்ணிய ஆட்கள் போலுள்ளது. 😂

ஒரு வழக்கை தாக்கல் செய்வது எப்படி, அதனை வாதாடுவது எப்படி என்று தெரியாத சுத்துமாத்து சுமந்திரனுக்கு... அப்புக்காத்து வேலையும் சரிவராது. 🤣

நீதிமன்றம் கொடுத்த செருப்படியின் பின்னராவது..

சுமந்திரன் சட்டப் புத்தகங்களை வடிவாக மீண்டும் மீண்டும் திரும்ப வாசிக்கவும். animiertes-lesen-smilies-bild-0043.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை அழிக்காமல் விகாரமகாதேவி பூங்கா மாதிரி மாற்றலாம்.. ஆனால் மரங்களுக்குக் கீழே குடைக்குள் குலாவும் நிலையை உருவாக்கக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன?

சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம்.

large.IMG_9323.jpeg.a503b7d155173194a9c1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து சுமந்திரனும், நாமல் ராஜ பக்சவும்...

ஒரே சட்டக் கல்லூரியில் படித்து, பின் கதவால் பாஸ் பண்ணிய ஆட்கள் போலுள்ளது. 😂

ஒரு வழக்கை தாக்கல் செய்வது எப்படி, அதனை வாதாடுவது எப்படி என்று தெரியாத சுத்துமாத்து சுமந்திரனுக்கு... அப்புக்காத்து வேலையும் சரிவராது. 🤣

நீதிமன்றம் கொடுத்த செருப்படியின் பின்னராவது..

சுமந்திரன் சட்டப் புத்தகங்களை வடிவாக மீண்டும் மீண்டும் திரும்ப வாசிக்கவும். animiertes-lesen-smilies-bild-0043.gif

நான் நினைக்கிறேன் அவர் உங்கள் அளவு படிக்கவில்லை என….

சரி அதை விடுவோம் அடுத்தவர் படிப்பை பற்றி நாம் கதைத்தால் பிறகு நம்மை இன்னொருவர் நோண்டினால் கதை கந்தலாகி விடும்.

இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன?

1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_9323.jpeg.a503b7d155173194a9c1

சுமன் தரும் தமிழ் ஈழத்தில் வாழ்வதை விட காலம் பூராவும் அனுரவுக்கு காவடி எடுத்து வாழ்வை முடிப்பது சுகமானது😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன?

நகரத்தை அண்மித்துள்ள பழைய பூங்காவில் உள்ள நூறாண்டு கால மரங்களை அழித்து... காங்கிரீட் காடாக்குவது பிழை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரம்பரியங்கள் சில காலத்திற்கு காலம் மாறும். ஆனால் பழமையானவைகள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அதை அழிக்கவே கூடாது.இது பற்றி மேலைத்தேய வன,மர பாதுகாப்பு நிறுவனங்களிடம் இவர்கள் பாடம் படிக்க வேண்டும். நவீனங்கள் இன்றைய உலகிற்கு அவசியமானது. அது பழமைகளை அழித்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்மை நாமே குழிக்குள் தள்ளுவதற்கு சமம்.

மற்றும் படி.....

சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை.

படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்பவர்களே பல விட்டுக்கொடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கும் போது.... அதே அவர்கள் பாமரன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பதும் ஒரு வித மேட்டுக்குடித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2025 at 04:13, goshan_che said:

இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன?

  1. பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

  2. சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம்.

பிகு

இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?

2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார்.

ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம்.

போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது.

பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஓம்…brown belt, green belt என சொல்வார்கள். ஏலவே கட்டிடம் அல்லது கார்பார்க் இருந்தால் அது பிரவுன் பெல்ட். பிரவுன் பெல்டில் புதிய கட்டிடங்களை கட்ட அனுமதி கிடைப்பது இலகு. ஆனால் கிரீன் பெல்டில் கட்ட அனுமதி எடுப்பது மிக கடினம்.

கிரேட்டர் இலண்டனின் புறநகரில் கூட இந்த கிரீன்பெல்ட் அதிகம் உண்டு. போக்குவரத்துக்காக இலண்டன் 1-6 வலயங்களாக பிரிக்கப்பட்டுளது. 1,2,3 இல் கிரீன்பெல்ட் குறைவு ஆனால் சாலையோர மரங்கள், பாரிய நிலப்பரப்பை கொண்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்கா என்பதை விட meadow எனப்படும் பற்றைகள் போலவே இருக்கும். வலயம் 4 இல் கணிசமாக ஆரம்பிக்கும் கிரீன் பெல்ட்டின் அளவு,5,6 என கூடி அதற்கு அப்பால் கிரீன் பெல்ட்த்தான் அதிகம் இருக்கும். அடுத்த நகரை அல்லது ஊரை அடையும் வரை.

போன அரசும், இந்த அரசும் கிரீன்பெல்டில் கட்டுவதை கொஞ்சம் இலகுவாக்க முயல்கிறார்கள் ஆனால் பலத்த எதிர்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2025 at 12:47, goshan_che said:

இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன?

On 21/12/2025 at 12:47, goshan_che said:

சுமன் தரும் தமிழ் ஈழத்தில் வாழ்வதை விட காலம் பூராவும் அனுரவுக்கு காவடி எடுத்து வாழ்வை முடிப்பது சுகமானது

பழைய பூங்கா ஒரு பசுமைத் திட்டத்தின் கீழே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி .

அதில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கை வைக்கவில்லை .......

ஆனால் இப்போது சுமந்திரனின் வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது அரசாங்கத்திற்கு ஆதரவாக முடிந்துவிட்டது

மக்களுக்கு சுமந்திரனால் நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கு.......

இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

திட்டம் சரியானது என சொல்லவும் முடியவில்லை….

சுமனை குறை சொல்லவும் வேண்டும்…

#டெலிகேட் பொசிசன்😂

பிகு

ஒழுங்கா சட்டதுறையில் வேலை செய்ய தெரிந்த சட்டதரணிகள் அரசியலுக்கு வருவதில்லை 😉.

இது சுமனுக்கும் பொருந்தும்.

On 21/12/2025 at 12:00, தமிழ் சிறி said:

நகரத்தை அண்மித்துள்ள பழைய பூங்காவில் உள்ள நூறாண்டு கால மரங்களை அழித்து... காங்கிரீட் காடாக்குவது பிழை.

நன்றி. நானும் உடன்படுகிறேன்.

21 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை

சுமன் நல்ல சட்டத்தரணியும் இல்லை, நல்ல அரசியல்வாதியும் இல்லை, மனிதரை மனிதராக மதித்து நடத்த கூடிய நல்ல மனிதர் கூட இல்லை.

பண்பு கிலோ என்னவிலை எனக்கேட்கும் சுண்ணாம்பு படிந்த மூளைதான் அவருக்கும்.

இதனால் மட்டும் அவர் சொல்லும் கருத்துகளை பிழை என பொய்யாக நாண்டு கொண்டு நிண்டு வாதிட வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂

இதைத் தான் கையறு நிலை என்பதா? அல்லது இரு தலைக் கொள்ளி எறும்பு என்பதா? 😂

நல்ல சட்டத் தரணியல்லாத சுமந்திரன்:

"அரசியல் கைதிகள் சார்பில் ஆஜராக வேண்டும்!"

"காணிப் பிரச்சினையில் ஆஜராக வேண்டும்"

"இனப்படுகொலை விசாரணைக்கு சர்வ தேச நீதி மன்றில் உதவ வேண்டும்!"

இப்படிக் கேட்போரெல்லாம் வரிசையில் வாருங்கள்! சிரட்டையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன், அதற்குள் குதித்து விடுங்கள்😎!

ஆனாலும், நல்ல சட்டத் தரணியென்று பெயரெடுக்க இலகுவான வழி சட்டப் பட்டத்தை (அது இங்கிலாந்தில் எடுத்த "பரிஸ்ரர்" பட்டமாக இருந்தாலும் கூட) பிறேமிற்குள் போட்டு சுவரில் மாட்டி விட்டு, கோர்ட்டுப் பக்கமே போகாமல் இருப்பது தான்😇!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இதைத் தான் கையறு நிலை என்பதா? அல்லது இரு தலைக் கொள்ளி எறும்பு என்பதா?

8 minutes ago, Justin said:

சிரட்டையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன், அதற்குள் குதித்து விடுங்கள்

உங்களுக்கு என்ன பிரச்சனை 😂

வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல

அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார்

சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம்.

பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

சுமன் நல்ல சட்டத்தரணியும் இல்லை, நல்ல அரசியல்வாதியும் இல்லை, மனிதரை மனிதராக மதித்து நடத்த கூடிய நல்ல மனிதர் கூட இல்லை.

பண்பு கிலோ என்னவிலை எனக்கேட்கும் சுண்ணாம்பு படிந்த மூளைதான் அவருக்கும்.

இதனால் மட்டும் அவர் சொல்லும் கருத்துகளை பிழை என பொய்யாக நாண்டு கொண்டு நிண்டு வாதிட வேண்டியதில்லை.

On 21/12/2025 at 10:13, goshan_che said:

இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன?

யாழ்கள உறவுகளை கருத்து சொல்லும் படி அழைத்தது நீங்கள்.

அதற்கு பதில் நாகரீகமாக பண்பாக எழுதியுள்ளேன்.அதே போல் சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியின் முக்கிய நபர். அதனால் அவரின் மறு பக்கத்தையும் எழுதினேன்.

மற்றும் படி உங்கள் மன பக்குவத்திற்கு ஏற்ப கருத்துக்கள் சொல்ல ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

யாழ்கள உறவுகளை கருத்து சொல்லும் படி அழைத்தது நீங்கள்.

அதற்கு பதில் நாகரீகமாக பண்பாக எழுதியுள்ளேன்.அதே போல் சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியின் முக்கிய நபர். அதனால் அவரின் மறு பக்கத்தையும் எழுதினேன்.

மற்றும் படி உங்கள் மன பக்குவத்திற்கு ஏற்ப கருத்துக்கள் சொல்ல ஏதுமில்லை.

உங்கள் கருத்தில் நான் தவறேதும் சொல்லவில்லை.

நீங்கள் உட்பட சுமன் பற்றிய பலரின் பார்வைதான் எனதும்.

ஆங்கிலத்தில் “கழுவிய தண்ணீரோடு, குழந்தையையும் எறிய கூடாது” என்பார்கள். என் நிலைப்பாடும் அதுவே.

14 hours ago, Justin said:

ஆனாலும், நல்ல சட்டத் தரணியென்று பெயரெடுக்க இலகுவான வழி சட்டப் பட்டத்தை (அது இங்கிலாந்தில் எடுத்த "பரிஸ்ரர்" பட்டமாக இருந்தாலும் கூட) பிறேமிற்குள் போட்டு சுவரில் மாட்டி விட்டு, கோர்ட்டுப் பக்கமே போகாமல் இருப்பது தான்

ஒத்தை சீட்டு ஒப்பிலாமணி தாக்கப்பட்டார்😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

உங்களுக்கு என்ன பிரச்சனை 😂

வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல

அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார்

சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇

15 hours ago, புலவர் said:

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம்.

பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.

உங்கள் இருவரையும் போலவே "ரூம் போட்டு" யோசித்திருக்கிறார் போல சுமந்திரன்😂. அதனால் தான் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று நீதி மன்றங்களினாலும் மாற்றி எழுதப் பட முடியாத மாவட்ட நீதிமன்றில் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

அதனால் தான் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று நீதி மன்றங்களினாலும் மாற்றி எழுதப் பட முடியாத மாவட்ட நீதிமன்றில் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்!

18 hours ago, வாத்தியார் said:

இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂

உங்களுக்காகத்தான் இந்த ஒரு வசனத்தையும் அதில் எழுதியிருந்தேன் 😊

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன்.

நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன்.

இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம்.

இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது.

ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது.

சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம்.

சுமன் இதையாவது செய்தார்….

கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே?

ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஏன் கொழும்பில் போய் தேடுவான்? ஐங்கரநேசனின் "தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்" பரிஸ்ரர் பட்டம் பெற்ற கஜேந்திரகுமார் பா.உ வின் கூட்டில் தான் இருக்கிறது. புலவரும், வாத்தியாரும் குத்தி முறிந்து இங்கே செய்ய முயல்வது "Don't Look Up" என்ற திரைப் படத்தில் சித்திரித்த மடை மாற்றும் வேலையை மட்டும் தான்😎! இவர்களுக்கு பழைய பூங்காவின் பாதுகாப்பிலும் அக்கறை இல்லை, சூழல் பாதுகாப்பிலும் துளி ஆர்வம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இது தடுக்கப்பட வேண்டும்.

வழக்கு போடும் தரப்பின் சட்ட / வழக்கு வியூகம் பற்றி தெரியாமல் கதைக்க ம்முடியாது

சில வழக்குகள் தோற்கும் என்று தெரிந்தே போடுவது.

ஏனெனில், இந்த வழக்கின் வழியாக பொது அமைப்புகள், வேறு அரச நிர்வாகங்கள் இதை கையில் எடுக்கும் கதவுகளை திறந்த்து விட்டு உள்ளது. வேறு நோக்கங்களும் இருக்கலாம்.

(சுமந்திரனுக்கு தெரிந்து இருக்கலாம் சட்ட அடிப்படையில் தடுக்க முடியாது அல்லது கடினம் என்று. ஏனெனில் சட்டமா அதிபரின் ஒப்புதல் முறையின்படி (procedural) தேவை என்கிறர் நீதிபதி. ஏன் சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும் , அரசதரப்பு விளையாட்டு அரங்கை கட்ட முயலும் போது. இது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இது பொதுவான நிலையா, அதாவது வழக்கு போடும் தரப்பு பொது அமைப்பாக இருந்தாலும், அதாவது அரசு மீது வழக்கு போடும் போது, சட்டமா அதிபரின் ஒப்புதல் தேவை என்பது தெரியாது.)

வழக்கின் நோக்கம், 2 ஆக இருக்கலாம். வென்றால் தடுக்கப்படும். தோற்றால் எதிர்க்கும் தரப்புகள் கூடும்.

எதுவும் இறுதி நோக்கத்துக்காக பூக்களில் விளையாட்டு அரங்கை தடுப்பதற்கு, அரசியலையும் சேர்த்து.

இதில் பிரச்னை எதிர் தரப்புக சட்டத்தரணி கட்டணத்தை எவர் பொறுப்பேற்பது என்பது.

இப்படியான தோற்கும் கணிசமான வியூக வழக்குகளை நேரடியாக இங்கே uk இல் கண்டு இருக்கிறேன்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை.

மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம்.

பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே.

மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

அப்ப பலர் சொன்னது போல, சுமந்திரன் பின் கதவால் வர ரணில் காரணம் இல்லையா? மகிந்த ரீம் தான் காரணமா? என்ன 15 வருடங்கள் முன்னர் நடந்தவற்றையே திரிக்கு ஒன்றாக மாற்றிச் சொல்கிறீர்கள்? இந்த இலட்ணத்தில் உங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவைப் பற்றிய அறிமுகம் எப்படித் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்😇??

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.