Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

ஆப்கான், நேபாளம் வழியாக முன்னேறி(!) சுமை தாங்கிப் போட்டியில் வெல்லப் போவது நான் தான் ........... ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்............🤣.

இந்த யாழ் களத்தை சுமக்க வேண்டும் என்பது என்னுடைய bucket list இல் ஒன்று போல.........😜.

ஓம் ஓம் நானும் கேள்வி ப‌ட்டேன்

சிலைய‌டிக்கு பெய‌ர்

வின்லேட‌ன் ர‌சோதர‌ன் சிலைய‌டி என‌ ஹா ஹா😄😁😃...........................

3 minutes ago, செம்பாட்டான் said:

அதெல்லாம் ஏற்கனவே அறிவித்தபடிதானே. ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் நடக்கும். தெரிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

நான்

இந்தியா பாக்கிஸ்தான் மைச் ந‌ட‌க்காது என்ர‌ ப‌டியால் அந்த‌க் கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ வில்லை.............................

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

அனுர, ஷபாஸ் ஷெரிபுடன் பேசிய பிந்தான் விளையாடும் முடிவை பாக்கிஸ்தான் எடுத்ததாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லன்ட்டுடன் விளையாடிய இலங்கை அணியினை பார்க்கும் போது சுப்பர் 8 க்கும் தகுதி பெறாது போல இருக்கு, போட்டியினை சேர்ந்து நடத்தும் நாடு சுப்பர் 8 க்கும் போகாட்டில் அவமானமா போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, alvayan said:

நீங்கள் ஒரு வித்தியாசமான ஆளென்று எங்கையோ ..படித்தது உண்மைதான் போல..

41 minutes ago, goshan_che said:

எங்கையோ எண்டு மொட்டையா சொன்னால் எப்படி?

காபூல்.கொம் மிலா அல்லது கந்தஹார்.கொம் மிலா?😀

24 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் ஓம் நானும் கேள்வி ப‌ட்டேன்

சிலைய‌டிக்கு பெய‌ர்

வின்லேட‌ன் ர‌சோதர‌ன் சிலைய‌டி என‌ ஹா ஹா😄😁😃...........................

🤣...........

முதலாவதாக நிற்கும் செம்பாட்டானை விட, முடிவில் நிற்கும் என்னையும், கோஷானையும் தான் உலகம் கதைக்கின்றது. என்ன உலகமப்பா இது..............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

அயர்லன்ட்டுடன் விளையாடிய இலங்கை அணியினை பார்க்கும் போது சுப்பர் 8 க்கும் தகுதி பெறாது போல இருக்கு, போட்டியினை சேர்ந்து நடத்தும் நாடு சுப்பர் 8 க்கும் போகாட்டில் அவமானமா போயிடும்.

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்காட்டி தோல்வி தான்

நேற்று க‌மெட் மெடிஸ் வ‌ந்து அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் தான் 163 ர‌ன்ஸ் அடிக்க‌ முடிஞ்ச‌து

இல‌ங்கை க‌ப்ட‌ன் தொட‌ர்ந்து ர‌ன்ஸ் அடிக்காம‌ அவுட் ஆகிறார்.............

சூப்ப‌ர்8க்கு போவின‌ம்

சிம்பாவேயை வென்றால்

இல்லையே சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போய் விடும்...................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

எனக்கு விளையாட ஓரளவு தெரியும்.

முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன்.

அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன்.

2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது.

ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே.

குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை.

அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.

ஒன்றுமே தெரியாது என்று சொல்லி அந்தக் கடைசி பந்தியில், எல்லாம் தெரியும் என்று காட்டி விட்டீர்கள். கோசானா கொக்கா. 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

🤣...........

முதலாவதாக நிற்கும் செம்பாட்டானை விட, முடிவில் நிற்கும் என்னையும், கோஷானையும் தான் உலகம் கதைக்கின்றது. என்ன உலகமப்பா இது..............🤣.

உலகம் போற போக்கு அப்பிடித்தானே. பொல்லாப்பு நிறைந்த உலகமப்பு. 😉

  • கருத்துக்கள உறவுகள்

@vasee

ப‌ல‌ர் மன‌ங்க‌ளில் இது வ‌ந்து போகும்

2010 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தான் ப‌ல‌ருக்கு தெரியும் அப்கானிஸ்தான் அணி என்ர‌ ஒன்று இருக்கேன்று

1996க‌ளில் முத‌ல் முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ இல‌ங்கை அணி கிட்ட‌ த‌ட்ட‌ 20வ‌ருட‌மாய் ம‌லை போல் ப‌ல‌மாய் இருந்த‌ அணி

அப்கானிஸ்தானின் அசுர‌ வ‌ள‌ர்ச்சி இல‌ங்கையின் வீழ்ச்சியாக‌ மாறி விட்ட‌து கிரிக்கேட்டில்

இனி இல‌ங்கை உல‌க‌ கோப்பை வெல்லும் என்று கேட்டால் அது நூற்றுக்கு பூச்சிய‌ம் என‌ தான் சொல்லுவேன்.....................

ம‌லை போல் இருக்கும் இந்தியாவை இப்போது உள்ள‌ ஆசிய‌ நாடுக‌ளால் வெல்ல‌ முடியாது.................

அவுஸ்ரேனியா

தென் ஆபிரிக்கா

இங்லாந்

நியுசிலாந் இந்த‌ நாடுக‌ள் கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ நிலையில் இருக்கின‌ம்...............

இல‌ங்கை கிரிக்கேட்டை அழித்து நாச‌ம் ஆக்கின‌ பெருமை இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளையே சேரும்......................................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வீரப் பையன்26 said:

@vasee

இல‌ங்கை கிரிக்கேட்டை அழித்து நாச‌ம் ஆக்கின‌ பெருமை இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளையே சேரும்......................................

இப்ப அந்ததலையீடுகள் இருப்பதாக தெரியவில்லையே...சிலவேளை இது அமசடக்கமோ...ஒரு தலையீடு மட்டும் பார்த்தேன்...அனுர பாகிஸ்தான் தலைவரிடம் இந்தியாவுடன் விளையாடும்படி கேட்டது....😁

1 hour ago, vasee said:

அயர்லன்ட்டுடன் விளையாடிய இலங்கை அணியினை பார்க்கும் போது சுப்பர் 8 க்கும் தகுதி பெறாது போல இருக்கு, போட்டியினை சேர்ந்து நடத்தும் நாடு சுப்பர் 8 க்கும் போகாட்டில் அவமானமா போயிடும்.

இது ஒருவகை...அதிர்ஸ்டம்...இலங்கை தப்பித்தது

1 hour ago, ரசோதரன் said:

🤣...........

முதலாவதாக நிற்கும் செம்பாட்டானை விட, முடிவில் நிற்கும் என்னையும், கோஷானையும் தான் உலகம் கதைக்கின்றது. என்ன உலகமப்பா இது..............🤣.

இதுதான் நம்ம ஸ்டைலு...குத்திற இடத்தை குத்துவம் ....பின்னர் பம்மிக்கொண்டு திரிவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5138.jpeg

2 hours ago, வீரப் பையன்26 said:

நான்

இந்தியா பாக்கிஸ்தான் மைச் ந‌ட‌க்காது என்ர‌ ப‌டியால் அந்த‌க் கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ வில்லை.............................

நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

21..

22..

23...

கப்பல் கரையை தட்டிவிட்டது...................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM எதிர் NED

06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும்  மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நமீபியா

  • செம்பாட்டான்

  • ஈழப்பிரியன்

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • நந்தன்

நெதர்லாந்து

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வீரப் பையன்26

  • சுவி

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?  polar-bear_1f43b-200d-2744-fe0f.webp

backhand-index-pointing-down_1f447.png

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ எதிர் UAE

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? cooking_1f373.webp

backhand-index-pointing-down_1f447.png

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK எதிர் USA

22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்கா

  • நிலாமதி

இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா? hamsa_1faac.png

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி அவ‌ர் ஏல‌த்தில் எடு ப‌ட்டு இருக்கிறார் விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ல‌.................

நானும் இப்ப‌ தான் முழுதா தேடி பார்த்தேன் அவ‌ரை பற்றி...................

ஜ‌பிஎல்ல‌ சின்ன‌ அணிக‌ளில் விளையாடின‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு வ‌ழ‌ங்க‌னும்...........................

அவர் இந்தியாவில் பரோடா அணிக்காக 2021 இல் விளையாடி இருக்கிறார். இதனால் 2022 ஐபிஎல் இல் பஞ்சாப் அணியில் இந்தியா uncapped வீரராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. பிறகு கனடாவுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார். ஐபிஎல்லில் இனிமேல் இவர் சேருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஐபிஎல் ஏலத்தின் ஒரு அணி அதிக பட்சம் 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யமுடியும். அவர்களில் ஒரு போட்டியில் அதிக பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆனால் இந்தியர்கள் என்றால் ஒரு அணியில் ஏலத்தில் குறைந்தது 17 வீரர்களை தெரிவு செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

நாளைய முதலமைச்சர் @செம்பாட்டான் ?அல்லது @ஏராளன் ?

55 minutes ago, கிருபன் said:

நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும்

ஆக @வீரப் பையன்26 ஓடி வாப்பா.

39 minutes ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?

அக்காவுக்கு அதிஸ்டம் அடிக்க போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁

"தெரிவு செய்யவில்லை" என்பதுதான் அவரின் தெரிவு இல்லையா. 😁

(இது நகைச்சுவை என்பதைத் தெரிவித்துக்கொண்டு)😁

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM எதிர் NED

06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும்  மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நமீபியா

  • செம்பாட்டான்

  • ஈழப்பிரியன்

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • நந்தன்

நெதர்லாந்து

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வீரப் பையன்26

  • சுவி

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?  polar-bear_1f43b-200d-2744-fe0f.webp

அப்ப என்ன, நபீயாவின் வெற்றியுடன்.....

நமீபிய அணி.... தென்னாபிரிக்காவின் B அணி போன்ற ஒரு அணி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா? hamsa_1faac.png

நடக்கும் போல என்று குருவி சொல்லுது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

🤣...........

முதலாவதாக நிற்கும் செம்பாட்டானை விட, முடிவில் நிற்கும் என்னையும், கோஷானையும் தான் உலகம் கதைக்கின்றது. என்ன உலகமப்பா இது..............🤣.

அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் …

நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள்.

பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀.

6 hours ago, செம்பாட்டான் said:

ஒன்றுமே தெரியாது என்று சொல்லி அந்தக் கடைசி பந்தியில், எல்லாம் தெரியும் என்று காட்டி விட்டீர்கள். கோசானா கொக்கா. 😁

😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

கப்பல் கரையை தட்டிவிட்டது...................🤣.

ஹொல்ட் ஓன் ப்ரோ…

ஐ ஆம் ஒன் மை வே…

நாளைக்கு நானும் நமிபியாவும் சேர்ந்து உங்களை மேலே தூக்கிறம்😂.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5138.jpeg

நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁

இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா. மெதுவாக ஆட்டத்தை கொண்டு போகினம். 8வது பரிமாற்றத்தில் ஒரு விக்கட்தான். ஓட்டம் வேகம் எடுக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

சிலைய‌டிக்கு பெய‌ர்

வின்லேட‌ன் ர‌சோதர‌ன் சிலைய‌டி என‌ ஹா ஹா😄😁😃...........................

பையா, சுருக்கமா வைக்கலாம் என்றால் ரசோமா(ரசோதரன்+ஒசாமா) சிலையடி என்று வைக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

156 ஓட்டங்கள். அடிக்கடி விக்கட்டை இழந்ததால், நமீபியாவால் கூடுதாலாகப் பெற முடியவில்லை. பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

157 நல்ல ஒரு இலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பையா, சுருக்கமா வைக்கலாம் என்றால் ரசோமா(ரசோதரன்+ஒசாமா) சிலையடி என்று வைக்கலாம்!

ஓ இது ந‌ல்லா இருக்கே ஹா ஹா😄😁😃..................

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, செம்பாட்டான் said:

156 ஓட்டங்கள். அடிக்கடி விக்கட்டை இழந்ததால், நமீபியாவால் கூடுதாலாகப் பெற முடியவில்லை. பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

157 நல்ல ஒரு இலக்கு.

டெல்லி மைதான‌த்துக்கு இது சின்ன‌ ஸ்கோர்

நெத‌ர்லாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...............

நெத‌ர்லாந் தோத்தால் என‌க்கு முட்டை உங்க‌ளுக்கு புள்ளி

நெத‌ர்லாந் வென்றால் என‌க்கு புள்ளி.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.