Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியா இதை இன்று முறியடிக்கும்.

பேசாமல் மரியாதையாக தானே மட்டையடியை தெரிவு செய்திருக்கலாம்.

இந்தியா 209/9 முறியடிக்கவில்லை

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்பீயா அணி இந்தியா அணிய‌ பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ விடாம‌ ம‌ட‌க்கிட்டின‌ம்🙏.......................

  • கருத்துக்கள உறவுகள்

ந‌பீயா அணிய‌ சேர்ந்த‌ ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை சூப்ப‌ரா போட்டார்

இப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல் ஏல கோமாளிக‌ளு தெரிவ‌தில்லை

சும்மா விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ நாட்டு வீர‌ர்க‌ளை ந‌ட‌த்தும் தொட‌ர் குப்பை தொட‌ர்

வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ளிட‌ம் திற‌மை இருந்தும் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் வேண்டுவ‌தில்லை

சின்ன‌ சின்ன‌ அணிக‌ளில் ஒருசில‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............இன்று இத்தாலி அணிய‌ சேர்ந்த‌ வீர‌ர் குறைந்த‌ ர‌ன்ஸ் விட்டு கொடுத்து மூன்று விக்கேட் எடுத்தார்.................................................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

இத்தாலி

  • சுவி

  • கோஷான் சே

  • ரசோதரன்

  • நிலாமதி

கடைசி பெஞ்ச் இத்தாலிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தும் இத்தாலி வென்றிருக்கின்றது என்றால், அப்புறம் கடைசி பெஞ்சிற்கு என்ன மரியாதை............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ரசோதரன் said:

முதல் சுற்றில், 41 போட்டியில் 19 போட்டிகள்தான் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் எவ்வளவோ பாக்க கிடக்கு.

images?q=tbn:ANd9GcRO6GEVyLksNTr89njBkXe

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

முதல் சுற்றில், 41 போட்டியில் 19 போட்டிகள்தான் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் எவ்வளவோ பாக்க கிடக்கு.

யாராவது ஆப்கானை இனியாவது கொஞ்சம் ஆடச் சொல்லுங்க............... நான் அவர்களை அரையிறுதி வரை அனுப்பி வைத்திருக்கின்றேன்....................😜.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

யாராவது ஆப்கானை இனியாவது கொஞ்சம் ஆடச் சொல்லுங்க............... நான் அவர்களை அரையிறுதி வரை அனுப்பி வைத்திருக்கின்றேன்....................😜.

இதை டிரை பண்ணி பார்க்கவும்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிறிலங்கா அணி, பவன் ரத்னாயக்கவின் புயல்வேக 60 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் மின்னல்வேக 50 (20 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் அதிரடியான 61 (45 பந்துகள்) ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து இத் தொடரின் தற்போதைய அதிகூடிய 225 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் மொஹமட் நடீம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 53 (56 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம் அணியின் வீரர்கள் ஒருவரும் நிலைத்து ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, சகோதரர்களான அந்தனி மொஸ்காவின் புயல்வேக ஆட்டமிழக்காத 62 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் அதிரடியான ஆட்டமிழக்காத 60 (44 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் இஷான் கிஷனின் மின்னல்வேக 61 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹார்டிக் பாண்டியாவின் புயல்வேக 52 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பந்துவீச்சில் நமீபியா அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்ததனால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

முடிவு: இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5141.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி 13 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS எதிர் ZIM

22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஸிம்பாப்வே

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? man-bowing_1f647-200d-2642-fe0f.png

backhand-index-pointing-down_1f447.png

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN எதிர் UAE

09 பேர் கனடா அணி வெல்லும் எனவும் 14 பேர் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

கனடா

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • சுவைப்பிரியன்

  • வீரப் பையன்26

  • சுவி

  • கிருபன்

  • கோஷான் சே

  • எப்போதும் தமிழன்

  • பிரபா

ஐக்கிய அமீரகம்

  • வசீ

  • புலவர்

  • அல்வாயன்

  • ஈழப்பிரியன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • ரசோதரன்

  • நிலாமதி

  • நந்தன்

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? skunk_1f9a8.png

backhand-index-pointing-down_1f447.png

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED எதிர் USA

10 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும்  13 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • நியூ பலன்ஸ்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • சுவி

  • அஹஸ்தியன்

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

ஐக்கிய அமெரிக்கா

  • செம்பாட்டான்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • ஈழப்பிரியன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

  • நந்தன்

இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? eagle_1f985.png

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌ந்து நாள் வெற்றிக‌ர‌மாய் போயிட்டு இருந்த‌ தெரிவு

நேபால் இத்தாலியிட‌ம் தோத்த‌தால் ஒரு முட்டை😛😄..............

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

சுகவீனம் காரணமாக விளையாடவில்லை.

இந்தியன் ரீமிலை வயித்துகுத்துக்கும் , காய்ச்சலுக்கும் வெளியிலை இருக்கிறஆட்கள் கூட... இதெ ரீம் பாக்கியுடன் விளையாடுமாக இருந்தால் கஸ்டம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிறிலங்கா அணி, பவன் ரத்னாயக்கவின் புயல்வேக 60 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் மின்னல்வேக 50 (20 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் அதிரடியான 61 (45 பந்துகள்) ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து இத் தொடரின் தற்போதைய அதிகூடிய 225 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் மொஹமட் நடீம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 53 (56 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம் அணியின் வீரர்கள் ஒருவரும் நிலைத்து ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, சகோதரர்களான அந்தனி மொஸ்காவின் புயல்வேக ஆட்டமிழக்காத 62 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் அதிரடியான ஆட்டமிழக்காத 60 (44 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் இஷான் கிஷனின் மின்னல்வேக 61 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹார்டிக் பாண்டியாவின் புயல்வேக 52 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பந்துவீச்சில் நமீபியா அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்ததனால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

முடிவு: இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5141.jpeg

போட்டியில் குறைவான ஓட்ட எண்ணிக்கை எடுக்கும் அணி என்பதற்கு இத்தாலியை தெரிவு செய்தேன். இத்தாலி நல்லாய் விளையாடும் போல் உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

போட்டியில் குறைவான ஓட்ட எண்ணிக்கை எடுக்கும் அணி என்பதற்கு இத்தாலியை தெரிவு செய்தேன். இத்தாலி நல்லாய் விளையாடும் போல் உள்ளதே.

நானும் இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ வில்லை

அத‌னால் நானும் க‌ட‌சி இட‌ம் இத்தாலி வ‌ரும் என‌ க‌ணித்தேன்....................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஐக்கிய அமெரிக்கா

  • செம்பாட்டான்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • ஈழப்பிரியன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

  • நந்தன்

ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.

அமெரிக்கா நல்ல‌ அணி

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ந்து வீச்சு ஓக்கே

நெத‌ர்லாந்தும் ந‌ல்லா விளையாடுது வெற்றி வாய்ப்பு அமெரிக்காவுக்கு அதிக‌ம்

இண்றையான் நாள் நெத‌ர்லாந்துக்கு ந‌ல்ல‌ நாளாக‌ இருந்தால் நெத‌ர்லாந் வெல்லும்................இர‌ண்டு அணிக‌ளையும் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.

தம்பரும் யூ எஸ் கிரிகெட் அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார்.

ஆனால் டீம் முழுக்க குடியேறியள் எண்டது ஆளுக்கு தெரியாது போல😂.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா நல்ல‌ அணி

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ந்து வீச்சு ஓக்கே

நெத‌ர்லாந்தும் ந‌ல்லா விளையாடுது வெற்றி வாய்ப்பு அமெரிக்காவுக்கு அதிக‌ம்

இண்றையான் நாள் நெத‌ர்லாந்துக்கு ந‌ல்ல‌ நாளாக‌ இருந்தால் நெத‌ர்லாந் வெல்லும்................இர‌ண்டு அணிக‌ளையும் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்...........................

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அலிகான் 2 ஓவர் சிறப்பாக பந்து வீசினார். காயப்பட்டதினால் தொடர்ந்து அவரால் வீசமுடியவில்லை. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடமுடியவில்லை. இன்று பூரண குணமடைந்தால் விளையாட சந்தர்ப்பம் இருக்குது.

5 hours ago, alvayan said:

இந்தியன் ரீமிலை வயித்துகுத்துக்கும் , காய்ச்சலுக்கும் வெளியிலை இருக்கிறஆட்கள் கூட... இதெ ரீம் பாக்கியுடன் விளையாடுமாக இருந்தால் கஸ்டம்....

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @வீரப் பையன்26 க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

ந‌பீயா அணிய‌ சேர்ந்த‌ ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை சூப்ப‌ரா போட்டார்

இப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல் ஏல கோமாளிக‌ளு தெரிவ‌தில்லை

சும்மா விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ நாட்டு வீர‌ர்க‌ளை ந‌ட‌த்தும் தொட‌ர் குப்பை தொட‌ர்

வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ளிட‌ம் திற‌மை இருந்தும் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் வேண்டுவ‌தில்லை

சின்ன‌ சின்ன‌ அணிக‌ளில் ஒருசில‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............இன்று இத்தாலி அணிய‌ சேர்ந்த‌ வீர‌ர் குறைந்த‌ ர‌ன்ஸ் விட்டு கொடுத்து மூன்று விக்கேட் எடுத்தார்.................................................

நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை.

டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார்.

வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.

டம்பர் எனக்கு கோல் பண்ணிட்டார் ..இன்று தன்னுடன் இருந்து மச் பார்க்காட்டாம்....முப்பது வருசம் அமெரிக்காவில் இருந்து என்னாத்தைக் கிழிச்சியள் ... சும்மாயாழில் தேவையில்லாத...அலட்டல்தானே ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்

இன்றைய மச்சை ஜெய்சா நேரில் பார்த்தவரெல்லோ ....கொழும்பு பிச் நிச்சயமாக வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும்

நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் .

இவர்தானே கார்டிக் பாண்டியாவிற்கு போட்டவர் ..அவருடைய பந்து எறிவு எவ்வளவு தூரத்தில் இருந்து என்பதை கவனித்தீர்களா..

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்

Star sports Tamil commentaryயில்

இப்படி வர்ணனை செய்ததாக

என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன்

எனக்கு

வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார்.

..........................

"வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது"

....................

வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ்

செய்தி அனுப்பிய வாசகர்

பிரசாந்த் கிருஷ்ணன்

இருவருக்கும்

நன்றி.

நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை.

டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார்.

வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்

இவைதான் 😁

IPLல் பணம்தான் பிரதானம். மற்றவை எல்லாம் பின்னாடி என்று புரிந்தால், பிறகு கனக்க யோசிக்கத் தேவையில்லை.

IPLக்கும், நாடுகளுக்கு இடையிலான போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசம். IPLல வைத்து இந்தப் போட்டிகளை எடைபோட முடியாது. கூடாது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

சற்று முன்

Star sports Tamil commentaryயில்

இப்படி வர்ணனை செய்ததாக

என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன்

எனக்கு

வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார்.

..........................

"வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது"

....................

வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ்

செய்தி அனுப்பிய வாசகர்

பிரசாந்த் கிருஷ்ணன்

இருவருக்கும்

நன்றி.

நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...

வருணது கூக்ளி வழமையாக வீசப்படுவது போல மணிக்கட்டினை முழுமையாக திருப்பி போடப்படுவது போலல்லாமல், மோதிர விரலால் சுண்டி விடுதல் (பிலிக்), வருணது பந்து பிடி சேன் வோர்னது பிடி போன்றது சேன் வோனும் மணிக்கட்டினால் வீசினாலும் மோதிர விரலாலும் பந்தினை சுழற்றுவார்.

அத்துடன் வருணது பந்து விச்சு வேகமானது (முஜீப், ரஸீட் கான் ஆகியோரது போல) அதனால் கணிப்பது கடினம் அத்துடன் மணிக்கட்டுகூட அவர்களது ஆடை மறைக்கின்ற போது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.