Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣.

இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣.

இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.

விளையாட்டு இன்னும் முடிய‌ல‌ ஹா ஹா😄😛...............

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Live

30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup

Australia FlagAustralia

181

Sri Lanka FlagSri Lanka

(12.3/20 ov, T:182) 109/2

Sri Lanka need 73 runs in 45 balls.Stats view

Current RR: 8.72

 • Required RR: 9.73

 • Last 5 ov (RR): 37/1 (7.40)

Win Probability SL 55.16% AUS 44.84%

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

உவ‌ங்க‌ள் சுத‌ப்புவாங்க‌ள் லொள்😄.................

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது..

உண்மையாவா?

இலங்கைக்கு வெற்றி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

15வது ஓவரில் இருபது ரன்னா....................... மாட்ச் முடிய முழுச் சிறீலங்காவுமே புகை மயக்கத்துக்கு போகப் போகுது...................🤣.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?

🤣..............

இன்னும் நான்கு ஓவர்கள் தானே, அண்ணா................ உண்மையா உண்மை தெரிஞ்சிடும்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

15வது ஓவரில் இருபது ரன்னா....................... மாட்ச் முடிய முழுச் சிறீலங்காவுமே புகை மயக்கத்துக்கு போகப் போகுது...................🤣.

உண்மையை ஒத்துக் கொள்ளுகிறேன்

உங்க‌ட‌ ஆத்தில் அடை ம‌ழை என்று ஹா ஹா😄.......................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

15வது ஓவரில் இருபது ரன்னா....................... மாட்ச் முடிய முழுச் சிறீலங்காவுமே புகை மயக்கத்துக்கு போகப் போகுது...................🤣.

🤣..............

இன்னும் நான்கு ஓவர்கள் தானே, அண்ணா................ உண்மையா உண்மை தெரிஞ்சிடும்..................🤣.

இதென்ன சாட் குரு ஆசிரமா புக வர😂

இதெல்லாம் ஞான திருஸ்டி…😂

41 minutes ago, ரசோதரன் said:

முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣.

இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup

Australia FlagAustralia

181

Sri Lanka FlagSri Lanka

(18/20 ov, T:182) 184/2

Sri Lanka won by 8 wickets (with 12 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா 8 விக்கட்டுகளால் வென்று விட்டது .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இரண்டாவது இனிங்ஸில் மைதான ஈரலிப்பால் பந்து வீசுவதும் கடினம் அதே நேரம் இந்த மெதுவான ஆடுகளத்தில் பந்து ஸ்கிடியாகி மட்டைக்கு இலகுவாக வரும் இலகுவாக அடிக்கலாம், அதனால் முதலில் பந்து வீச முடிவு செய்தார்கள்.

181 அவுஸ்ரேலிய இலக்கு ஒரு வெற்றிக்கான இலக்கு!

இலங்கை வெல்வது கடினம்.

இலங்கை சிறப்பாக விளையாடி வென்றுவிட்டது என்று சொன்னால், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா அணிக்கு பாக்கிஸ்தான் தொட‌ரில் இருந்து இப்ப‌ வ‌ரை ச‌ரி இல்லை................முன்ன‌னி ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லாத‌து தெரியுது..................

நாத‌ன் எலிஸ் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர் அவ‌ரின் ப‌ந்துக்கே இந்த‌ அடியா😄😛........................

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣.

இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.

வீரப்பையன் கூறுவார் பின்னால பாருங்கோ பின்னால பாருங்கோ என, தற்போது நீங்கள் அவரின் இடத்தை எடுத்து விடுகிறீர்கள், போட்டி ஆரம்பிக்கும் போது ஆமை போலவும் முடிக்கும் போது முயல் போலவும் முடிக்கிறீர்கள்.🤣

உங்களுக்கு ஏதாவது கெளரவப்பட்டம் கொடுப்பதற்கு யாராவது சிபாரிசு செய்யவேண்டும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வைத்தார்கள் ஆப்பு எல்லாருக்கும்.

இங்கே பதிவுகளை வாசிச்சா, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இலங்கையின் சுழல் பந்தாளர்களை கேள்வி கேக்கிறார் ஒருவர். மட்டையாளர்களை நக்கல் அடிக்கிறார் ஒருவர். நான் சிலவேளை நினைப்பது. நானும் இவர்களும் ஒரே போட்டியைத்தான் பார்க்கிறோமா என்று. 😁😛

  • கருத்துக்கள உறவுகள்

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் இங்லாந்திட‌ம் இல‌ங்கை அணி வேண்டி க‌ட்ட‌ அதை பார்த்து தான் அவுஸ்ரேலியாவை தெரிவு செய்தேன் லொள்😄😛.................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இதென்ன சாட் குரு ஆசிரமா புக வர😂

இதெல்லாம் ஞான திருஸ்டி…😂

🤣.............

கோவையில் நடந்த ஆட்டம், பாட்டம் பார்த்தீர்களா........... நான் நேற்று இரவு கொஞ்ச நேரம் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்................ அந்த தாக்கம் தான் இந்த 'புகை' கதை.......... இப்படி போய் அங்கு, அந்த ஆளிடம் மாட்டுப்பட்டிருக்கின்றார்களே................🫣.

நம்மளையும் மீறி நடப்பதால் ஞான திருஷ்டி என்பது நல்ல பொருத்தம்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

வீரப்பையன் கூறுவார் பின்னால பாருங்கோ பின்னால பாருங்கோ என, தற்போது நீங்கள் அவரின் இடத்தை எடுத்து விடுகிறீர்கள், போட்டி ஆரம்பிக்கும் போது ஆமை போலவும் முடிக்கும் போது முயல் போலவும் முடிக்கிறீர்கள்.🤣

உங்களுக்கு ஏதாவது கெளரவப்பட்டம் கொடுப்பதற்கு யாராவது சிபாரிசு செய்யவேண்டும்.🤣

படிக்கல படிக்கல என்று சித்தி செய்கிற ஆள் எல்லோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

படிக்கல படிக்கல என்று சித்தி செய்கிற ஆள் எல்லோ. 🤣

இல்லை அவர் ஒரு படித்த பல்கலை பட்டதாரி என நினைக்கிறேன், நிங்கள் கூறும் படிக்காத ஆள் அது நான் தான்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

Sorting பண்ணி unofficial rankings கொடுக்க உதவி தேவைப்படலாம்!

செய்திட்டாப் போச்சு. கூகிள் சீற்றில் எனக்குப் பரிச்சயம் இருக்கு. தனி மடலில் கதைக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5168.jpeg

முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார்.

சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை கொச் ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா ஒரு வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்ன‌வ‌ர் 2026 உல‌க‌ கோப்பை வெல்வ‌தே த‌ங்க‌ட‌ ல‌ச்சிய‌ம் என்று

அது ந‌ட‌க்குமா😍🙏.....................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செம்பாட்டான் said:

இலங்கை வைத்தார்கள் ஆப்பு எல்லாருக்கும்.

இங்கே பதிவுகளை வாசிச்சா, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இலங்கையின் சுழல் பந்தாளர்களை கேள்வி கேக்கிறார் ஒருவர். மட்டையாளர்களை நக்கல் அடிக்கிறார் ஒருவர். நான் சிலவேளை நினைப்பது. நானும் இவர்களும் ஒரே போட்டியைத்தான் பார்க்கிறோமா என்று. 😁😛

இலங்கை பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையினை (Condition) சாதகமாக்கி சிறப்பாக பந்து வீசினார்கள், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாக எடுத்து சென்றார்கள், அவுஸ்ரேலியா 1-6 ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டார்கள் 7-14 இல் 5 விக்கெட்டினை கொடுத்திருந்தார்கள் ஆனாலும் 1-6 ஓவர்கள் போலவே இலங்கை அணியினை விட அதிக ஓட்டங்களில் இருந்தார்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் போட்டியினை இலகுவாக முடிக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்க முக்கிய காரணம்.

1 minute ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை கொச் ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா ஒரு வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்ன‌வ‌ர் 2026 உல‌க‌ கோப்பை வெல்வ‌தே த‌ங்க‌ட‌ ல‌ச்சிய‌ம் என்று

அது ந‌ட‌க்குமா😍🙏.....................

இலங்கை அணி சுப்பர் 8 போவதற்கு தமது ஆடுகள சாதகம் ஒரு பங்களிப்பாக இருக்கும் ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் போட்டிகள் நடக்கின்றது.

இலங்கை அணி சுப்பர் 8 உடன் வீடு திரும்பும் எனவே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

🤣.............

கோவையில் நடந்த ஆட்டம், பாட்டம் பார்த்தீர்களா........... நான் நேற்று இரவு கொஞ்ச நேரம் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்................ அந்த தாக்கம் தான் இந்த 'புகை' கதை.......... இப்படி போய் அங்கு, அந்த ஆளிடம் மாட்டுப்பட்டிருக்கின்றார்களே................🫣.

நம்மளையும் மீறி நடப்பதால் ஞான திருஷ்டி என்பது நல்ல பொருத்தம்.................🤣.

தமன்னா, சாரா அர்ஜூன் போகிறார்கள் என்பதால் அல்ல, வேலுமணி, பிரேமலதா போகிறார்கள் என்பதால்தான் பார்த்தேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

இலங்கை பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையினை (Condition) சாதகமாக்கி சிறப்பாக பந்து வீசினார்கள், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாக எடுத்து சென்றார்கள், அவுஸ்ரேலியா 1-6 ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டார்கள் 7-14 இல் 5 விக்கெட்டினை கொடுத்திருந்தார்கள் ஆனாலும் 1-6 ஓவர்கள் போலவே இலங்கை அணியினை விட அதிக ஓட்டங்களில் இருந்தார்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் போட்டியினை இலகுவாக முடிக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்க முக்கிய காரணம்.

கடைசி 77 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தார்கள். சுழளர்கள் நிகழ்த்திய ஜாலம் அது.

பதுமும் குசாலும் எல்லாவற்றியும் இலகுவாக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

வீரப்பையன் கூறுவார் பின்னால பாருங்கோ பின்னால பாருங்கோ என, தற்போது நீங்கள் அவரின் இடத்தை எடுத்து விடுகிறீர்கள், போட்டி ஆரம்பிக்கும் போது ஆமை போலவும் முடிக்கும் போது முயல் போலவும் முடிக்கிறீர்கள்.🤣

உங்களுக்கு ஏதாவது கெளரவப்பட்டம் கொடுப்பதற்கு யாராவது சிபாரிசு செய்யவேண்டும்.🤣

17 minutes ago, செம்பாட்டான் said:

படிக்கல படிக்கல என்று சித்தி செய்கிற ஆள் எல்லோ. 🤣

🤣............

கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக வந்த நேரங்களில், எனக்கு முடிவுகள் நல்லாவே வந்திருக்கின்றன. சிலபஸ்ஸுக்குள்ள கேள்விகள் வந்த போது மற்றவர்கள் பிய்ச்சு உதறியிருக்கின்றார்கள்......................

இன்றைக்கு இலங்கை விளையாடியது அவுட் ஆஃப் சிலபஸ் தானே................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.