Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SIVARANCHAN THEVAKUMARAN

A/C:- 300131108781

National Savings Bank

Chankanai Branch

Swift Code:- NSBALKLX

முழுப்பெயர் போட்டுள்ளேன்.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள்

என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.

unnamed-1.jpg

images?q=tbn:ANd9GcSEkcCd2subBwtWy6T7k8M

HHNS-Helping-Hand-Home-Health-Care-4x6-1

Edited by ஏராளன்

  • Replies 62
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்த

  • ஏராளன்
    ஏராளன்

    நல்லது, மாற்று கருத்து இல்லை அண்ணா. தாயகத்தில் அவர் பெயரைச் சொல்லி செயற்படமுடியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். யாழிணையத்தில் அவர் பெயரால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பதில் எ

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

SIVARANCHAN THEVAKUMARAN

A/C:- 300131108781

National Savings Bank

Chankanai Branch

Swift Code:- NSBALKLX

முழுப்பெயர் போட்டுள்ளேன்.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள்

என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும்.

unnamed-1.jpg

images?q=tbn:ANd9GcSEkcCd2subBwtWy6T7k8M

HHNS-Helping-Hand-Home-Health-Care-4x6-1

அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்

கறுப்பு கை தானே தவிர உள்ளம் வெள்ளை என்பதை யாழ் அறியும் அண்ணை.

வாங்கோ ஊர் கூடித் தேர் இழுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோடி உதவி நிறுவனத்தின் அடிப்படை சுகாதாரத் திட்டத்துக்காக தனியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. தனியாக யாழ்கள உறவுகளால் மட்டும் இதை நடைமுறைப்படுத்த இயலாது. வெளியாரிடமும் இருந்து உதவிகள் பெற வேண்டிய தேவை அவசியம். ஆகவே முன்னோடி உதவி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

மாதாந்தம் குறைந்தது பத்து டொலர்கள் அளவிலாவது, முழுமையாக தன்னார்வ அடிப்படையில், உதவி வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளலாம். குமாரசாமி தன்னால் நூறு பேர்களை இணைக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதேபோல், மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை முன்னோடி நிறுவனத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த மாதத்திலிருந்து எனது மாதாந்த உதவித் தொகையை ஏராளன் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்க உள்ளேன். மேலும், எனக்குத் தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து தெரிவிப்பேன்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் சேரும் பொது நிதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, தனிநபர் பொறுப்பாக அல்லாது, அனைவரும் இணைந்து பங்களிக்கும் கூட்டு முயற்சியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

குமாரசாமி, நான் பங்களிப்புடனேயே நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள், வாத்தியார் இருவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஒன்றும் அவசரமில்லை. நேரம் எடுத்து முடிவெடுங்கள். தற்சமயம் முன்னோடியின் முதல் திட்டத்தை ஆரம்பிப்போம். இணைந்து பயணிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் சேரும் பொது நிதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, தனிநபர் பொறுப்பாக அல்லாது, அனைவரும் இணைந்து பங்களிக்கும் கூட்டு முயற்சியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்

இதைத் தான் நானும் முன் கூட்டியே சொல்லியிருந்தேன்

பொருளாளராகிய ஏராளன், குறிப்பிட்ட நிதி வங்கிக்கணக்கிற்கு வந்ததும்

எத்தனை பேர் அனுப்பினார்கள்........ அல்லது யார் அனுப்பினார்கள்...

எவ்வளவு தொகை அனுப்பினார்கள்......

என்ற விபரத்தை உடனே வெளியிடக் கூடாது

கிடைத்த தொகையை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வோம்

முதலில் அராலி அடுத்து பொன்னாலை

இவற்றின் வெற்றிக்குப் பின்னர்

எமது உண்மையான இலக்கை நோக்கி ஒவ்வொரு காலடியாக எடுத்து வைப்போம்.

அது முதலில் காரைநகரில் ஒரு காலடியாகவோ அல்லது சுழிபுரத்தில் ஒரு காலடியாகவோ இருக்கலாம்

அந்த நேரத்தில் பயனாளர்களின் உண்மையான நிலைமைக்கு ஏற்ற மாதிரிச் செயற்படுவோம்,

அதற்கு முதல் வாத்தியாரின் நிதி உதவியினால் செய்யப்பட்டது கு சா அண்ணாவின் செயற்பாட்டால் செய்யப்பட்டது அல்லது கோஷான் அவர்களின் உதவியால் செய்யப்பட்டது

என்ற எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமோ அல்லது கருத்துக்களோ இங்கே வரக்கூடாது

முன்னோடி அமைப்பினரால் என்ற அந்த ஒன்றின் பின்னால் தான் நாங்கள் எல்லோரும் என்பது இங்கே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் அண்ணா

இதுவே எனது கருத்து மற்றவர்களும் அதையே விரும்புகின்றார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது

இங்கே யாழ் களத்தின் உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னோடி என்ற அமைப்பே முன்னோடும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்

உள்ளதிலேயே வெள்ளையாக உள்ளது எனது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்

நந்தன் அவர்கள் தனது ஆதரவுக் கரங்களை தருவதாகக் கூறுவது

இன்னும் எங்கள் பலம் அதிகரிப்பதாகத் தோன்றுகின்றது.

நாம் ஒன்று பட்டால் எங்கள் மக்களுக்கு உண்டு வாழ்வு

ஆதரவிற்கு நன்றி நந்தன்🙏

5 minutes ago, ஈழப்பிரியன் said:

உள்ளதிலேயே வெள்ளையாக உள்ளது எனது தான்.

நீங்கள் வெள்ளை மனம் கொண்ட ஒரு நல்ல தாத்தா என்று

எல்லோருக்குமே தெரியும் அமெரிக்கன் தாத்தா 😅🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன விளக்கம்

வேலையிடத்து நிர்வாக கெடுபிடிகள் உட்பட்ட சில காரணங்களால் என்னால் யூகேயில் இருந்து நிதி ஒருங்கிணைப்பை செய்ய முடியாது. அனைவரும் மன்னிக்க வேண்டும். நான் இதை ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன் என நம்புகிறேன்.

இப்போதைக்கு அனைவரும் எராளன் திறந்துள்ள கணக்குக்கு அனுப்புவது. அவர் மொத்த தொகையை அறிவிப்பது. அதன்படி வேலையை ஆரம்பிப்பது என செய்வோம்.

திட்ட மீளாய்வு நேரத்தில் இதை எப்படி வினைதிறனாக செய்யலாம் என சிந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இதைத் தான் நானும் முன் கூட்டியே சொல்லியிருந்தேன்

பொருளாளராகிய ஏராளன், குறிப்பிட்ட நிதி வங்கிக்கணக்கிற்கு வந்ததும்

எத்தனை பேர் அனுப்பினார்கள்........ அல்லது யார் அனுப்பினார்கள்...

எவ்வளவு தொகை அனுப்பினார்கள்......

என்ற விபரத்தை உடனே வெளியிடக் கூடாது

கிடைத்த தொகையை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வோம்

முதலில் அராலி அடுத்து பொன்னாலை

இவற்றின் வெற்றிக்குப் பின்னர்

எமது உண்மையான இலக்கை நோக்கி ஒவ்வொரு காலடியாக எடுத்து வைப்போம்.

அது முதலில் காரைநகரில் ஒரு காலடியாகவோ அல்லது சுழிபுரத்தில் ஒரு காலடியாகவோ இருக்கலாம்

அந்த நேரத்தில் பயனாளர்களின் உண்மையான நிலைமைக்கு ஏற்ற மாதிரிச் செயற்படுவோம்,

அதற்கு முதல் வாத்தியாரின் நிதி உதவியினால் செய்யப்பட்டது கு சா அண்ணாவின் செயற்பாட்டால் செய்யப்பட்டது அல்லது கோஷான் அவர்களின் உதவியால் செய்யப்பட்டது

என்ற எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமோ அல்லது கருத்துக்களோ இங்கே வரக்கூடாது

முன்னோடி அமைப்பினரால் என்ற அந்த ஒன்றின் பின்னால் தான் நாங்கள் எல்லோரும் என்பது இங்கே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் அண்ணா

இதுவே எனது கருத்து மற்றவர்களும் அதையே விரும்புகின்றார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது

இங்கே யாழ் களத்தின் உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னோடி என்ற அமைப்பே முன்னோடும்

அண்ணை, பெயர் குறிப்பிடுவது நன்கொடையாளரின் விருப்பம். ஆனால் ஒவ்வொரு நன்கொடை கிடைத்ததும் அதை இங்கே வெளிப்படையாக பதிவது நல்லது. ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது ஒரு மலசலகூடம் புதிதாக அமைக்க/பூரணப்படுத்த(வட்டு.தெற்கு) அல்லது திருத்த(பொன்னாலை) நிதி முழுவதும் கிடைத்த பின் பணிக்குரிய நிதியை படிப்படியாக வழங்குவமா? இல்லை முதற்கட்டமாக 50000 ரூபாவை வங்கிக்கணக்கிற்கு வழங்கி வட்டு.தெற்கில் மலசலகூடக்குழி வெட்டத் தொடங்கச் சொல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நன்கொடை கிடைத்ததும் அதை இங்கே வெளிப்படையாக பதிவது நல்லது. ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏

2 hours ago, ஏராளன் said:

இப்போது ஒரு மலசலகூடம் புதிதாக அமைக்க/பூரணப்படுத்த(வட்டு.தெற்கு) அல்லது திருத்த(பொன்னாலை) நிதி முழுவதும் கிடைத்த பின் பணிக்குரிய நிதியை படிப்படியாக வழங்குவமா? இல்லை முதற்கட்டமாக 50000 ரூபாவை வங்கிக்கணக்கிற்கு வழங்கி வட்டு.தெற்கில் மலசலகூடக்குழி வெட்டத் தொடங்கச் சொல்லவா?

அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன்

எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை

மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்

  • கருத்துக்கள உறவுகள்

1) முன்னோடிக்கான முதலாவது நன்கொடை ரூபா 100,080.02 சதம் 09/01/2026 கிடைக்கப்பெற்றது.

நன்கொடையை அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி உறவே. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறும் என நம்புகிறேன்.

இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.

ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.

கட்டாயம்

2 hours ago, ஏராளன் said:

1) முன்னோடிக்கான முதலாவது நன்கொடை ரூபா 100,080.02 சதம் 09/01/2026 கிடைக்கப்பெற்றது.

வங்கிக் கணக்கு கிடைத்த உடனேயே உதவித் தொகையை அனுப்பிய உறவிற்கு கோடி நன்றிகள் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.