Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்த பதிவிலும் ரஞ்சித்துடன் தனிப்பட்ட முறையில் மல்லுக்கட்டவில்லை. அவருடன் தனிப்பட பகையும் கிடையாது. அவரது கருத்துகளை விமர்சிக்கும் போது அவர் கோபப்படுகிறார். பொதுவெளியில் இங்கு வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கிறேன். விமர்சனங்களை வைக்கிறேன், கேள்விகள் கேட்கிறேன். ரஞ்சித் இங்கு பொது வெளியில் வரலாறுகள் என்ற பெயரில் ஒருதலைப்பட்ச தகவல்களை அடிப்படையாக கொண்டு அவற்றை முழுமையான உண்மை போல் இங்கு எழுதும் போது அது தொடர்பாக கேள்வி கேட்க கூடாதா? பொது வெளியில் எழுதும் எவரும் இவ்வாறான கருத்தியல் விவாதங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அவரது கருத்துகள் புனிதமானவை, அவற்றுக்கு எவரும் விமர்சனம் வைக்க கூடாது என்பது அவரது கொள்கையாக இருக்கலாம். அதற்கு நான் கட்டுபட முடியாது

சிறிமா பண்டாரநாயக்காவை புகழந்தேனாம். அதை ஒரு குற்றமாம். சிறிமாவின் உள்ளூர் உற்பதி கொள்கையை யாழ்பாண விவசாயிகள் பாரிய நன்மையடைந்ததும், யாழ்பாண விவசாயிகளின் குடிசை வீடுகள் அவரது காலத்தில் கல்வீடுகளானதும் அதற்காக அவர்கள் அவரை ஒட்டு மொத்தமாக புகழ்ந்ததும் அந்த நன்றியறிதலுக்காக 1982 ல் அவரது மாமன் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு தன்னிச்சையாக பெருவாரியாக வாக்களித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அத்தனை யாழ் விவசாயிகள் மீதும் குற்றம் சாட்டுவாரா?

யாழ் பலகலைகழகத்தை சிறிமாவோ திறந்த போது முழுமையாக எதிர்த்தது தமிழரசுக்கட்சி தனது அரசி யல் ஆதாயத்துக்காக. தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி ஒன்றும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. பிரச்சனைகளை தீர்வு காண்பதை விட அதை வைத்து காலாகாலமாக அரசியல் செயத்து தமிழரசுக்கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மீது விமர்சனம் செய்யக்கூடாதா?

தேசியத்துக்கு எதிரானவனாம். அடுத்த குற்றச்சாட்டு. என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது, கல்வி/ தொழில்நுடப/ வர்த்தக / பொருளாதார பலத்தை உயர்ததுவது, வட கிழக்கில் தமிழரின் சனத்தொகையை குறையவிடது காப்பது. இவற்றை ஜனநாயக நீரோட்டதில் இணைந்து ஆளும் அரசுகளோடு தந்திரோ உறவுகளோடாவது மேற்கொள்ளுவது இன்றைய அவசர தேவை. அதை விடுத்து உசுப்பேற்றுவது, சாத்தியமற்ற வெற்று கோசங்களை வைத்து வினைதிறனற்ற, மக்களுக்கு உபயோகமற்ற அரசியல் நடத்துவது, அதை தூண்டுவிடும் புலம்பெயர் தேசிய வியாபாரிகளும் செய்வது தமிழ் தேசியம் என்றால் அதற்கு நான் எதிரானவன் தான். அது வெளிபடையாக கூறுகிறேன். அந்த கருத்துகளை எதிர் கொள்ள இயலாமல் துரோகி, கோடரிக்காம்பு, இழிந்த இனத்தவர் போன்றவற்றையே அவர் போன்றவர்களால் கூற முடியும். ஏனென்றால் அவர்கள் கற்ற அரசியல் என்பது எதிர் கருத்துடையவர்களை வன்முறை மூலம் அகற்று அது முடியாத போது மீது அவதூறு கூறி அவரை அகற்று என்பதே.

  • Replies 144
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இதுவும் நீங்கள் நம்பக்கூடியதுதான். ஆனால், புலிகளுக்கெதிரான உங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று வெளியே வந்து, (அதாவது 2009 இற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாடு) இதனைச் சிந்தித்தீர்கள் என்றால், புலி

  • ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப்

  • நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது

கோசான், “போராடி இருக்கவே தேவையில்லை, இலங்கை தேசியத்தைள் கரையலாம்”, என்பது எனது கருத்து அல்ல. அப்படி மக்களை நினைக்க வைத்தவர்கள் இந்த தீவிர தமிழ் தேசியர்களே. நடைமுறைச் சாத்தியமற்றதை வேண்டி பிடிவாதம் பிடித்து பெறக்கூடியவற்றை தொடர்ந்து இழப்பது குறித்தே எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன்.

2002 ல் இருந்து அரசியல் போராளிகள் ஐரோப்பா முழுவதும் செல்வதற்கும் உலக நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடி எமது பக்க நியாங்களை எடுத்து கூறவும் நல்லுறவுகளை வளர்தது லொபி செய்யவும் அதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவதற்கான சிறந்த வாய்பபு கிடைத்தது. நோர்வே அநுசணை விசா கிடைத்து ஐரோப்பா வந்தவர்கள் எல்லோரும் அடுத்த யுத்தத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் மக்களை சந்திப்புகளில் மட்டுமே அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டிருந்தனர். மக்களின் ஆவலை தூண்ட யுத்தக் கதைகளை சுவார்சியமாக கூறி மக்களை உசுபேற்றி விட்டு சென்றனர். இது தமிழ் தேசியத்தை வளர்ததா? அல்லது அதற்கு ஆப்பக அமைந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்.

துரையப்பா மீதும் அவரது அரசியல் மீதும் எவர் அவதூறுகளை சுமத்தினாலும் விமர்சனங்களை வைத்தாலும் யாழ்பாணத்திற்கு அவரைப் போல ஒரு சிறந்த மேயர் இதுவரை கிடைக்கவில்லை என்பது எவரலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியை பகீரங்கமாக ஆதரித்தார் என்பதே அவர் மீதான துரோகி பட்டம். ஆனால் இன்று ஆளும் கட்சியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்று அவர்களைத் துரோகிகள் என்று மக்களிடம் கூற முடியத கையறு நிலை.

அத்துடன் மாநகர சபைக் கட்டத்தினுள் ஒரு சிறிய அறையில் இருந்த நூல் நிலையத்தை மாற்றி யாழ்பாணத்திற்கு ஒரு அழகிய நூலகம் கட்டம் தேவை என்று 1050 களின் நடுப்பகுதியிலேயே பேரவா கொண்டு நூல்நிலைய கட்டட நிர்மாணிப்பில் key role ஆக செயற்பட்டவர் அவராகும் . 1950 களில் வெளிவந்த பத்திரிகைகளை பார்ததால் அவரது அந்த பங்களிப்பு தெரியும். நூல் நிலைய எரிப்பை வைத்து அரசியல் செய்த தேசியர்கள் அவரது அந்த பங்களிப்பை கபடத்தனமாக மறைத்து அவர் மீது அவதூறுகளையே பொழிந்தனர். அது தான் தமிழரசுக்கட்சியின் அரசியல். காரணம் அவர் இருந்தால் யாழ்பாண தொகுதி கிடைக்காது என்ற பயமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

யாழ் பலகலைகழகத்தை சிறிமாவோ திறந்த போது முழுமையாக எதிர்த்தது தமிழரசுக்கட்சி தனது அரசி யல் ஆதாயத்துக்காக.

இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும்.

1 hour ago, island said:

என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது

தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீ தமிழன் என்றால் நான் கூறும் தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதை நான் செயற்படுத்துவதையும் அந்த செயற்பாட்டையும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எதிர் பார்கின்றனர். அவரகள் உரு வந்து ஆடுவதை சாந்தப்படுத்தி நல்வழிப்படுத்த கோசான் சிலவற்றை சிலவற்றை சொல்ல வேண்டும் தானே! அதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

சிறிமா பண்டாரநாயக்காவை புகழந்தேனாம். அதை ஒரு குற்றமாம். சிறிமாவின் உள்ளூர் உற்பதி கொள்கையை யாழ்பாண விவசாயிகள் பாரிய நன்மையடைந்ததும், யாழ்பாண விவசாயிகளின் குடிசை வீடுகள் அவரது காலத்தில் கல்வீடுகளானதும் அதற்காக அவர்கள் அவரை ஒட்டு மொத்தமாக புகழ்ந்ததும் அந்த நன்றியறிதலுக்காக 1982 ல் அவரது மாமன் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு தன்னிச்சையாக பெருவாரியாக வாக்களித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அத்தனை யாழ் விவசாயிகள் மீதும் குற்றம் சாட்டுவாரா?

சிறிமாவினால் உள்ளூர் உற்பத்தி கொள்கை யாழ்ப்பாண தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல.அது ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா மக்களுக்குமானது. அதில் பலனடைந்தவர்கள் வடபகுதி மக்கள் மட்டுமே. கிழக்கு மக்களும் இல்லை. சிங்கள மக்களும் இல்லை. எல்லோரும் பஞ்சத்தால் அவதிப்பட்டார்கள்.

நன்றிக்கடன் என்பது இலங்கை தமிழர்களின் இரத்தத்தில் ஊறியது.அதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம்.

இருந்தாலும் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் சிறிமா காலத்து ஈழத்தமிழர்களுக்கெதிரான இன அழிவையும் அடக்கு முறைகளையும் இலகுவாக மறந்து விடுகின்றீர்கள்.இந்த இடத்தில் காசி ஆனந்தனை நினைவுபடுத்துகின்றேன்.

சிங்களவர்கள் ஒரு துண்டு பாணிற்காக வரிசையில் நின்றார்கள். அவதிப்பட்டார்கள். அவர்கள் பிற்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கவில்லை.இன்றைக்கு பால் நாளைக்கு சோறு எனும் நிலையிலையே இருந்தார்கள். இதே கொள்கையிலும் வட கிழக்கு சோம்பேறிகளும் இருந்தார்கள்.

அதன் பரிசுதான் இனவாத ஜே ஆர் பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சியமைப்பு.ஆட்சிக்கு வந்ததும் மாண்புமிகு அதி உத்தம ஜே ஆர் செய்த வேலை சிறிமாவின் குடியுரிமையை பறித்தது.

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

அனுர அரசியல் இலங்கை மக்களுக்கு புதியது. அனைத்து மக்களும் ஆதரித்தார்கள். அவ்வளவுதான். விளைவுகளும் விடைகளும் அடுத்த தேர்தலில் தெரியலாம். இதற்காக பரீட்சார்த்த அரசியலை பார்ப்பவர்களுக்கு அனுர விசுவாசி பட்டம் கட்டுவது ஒருவித அரசியல் அனுபவ பற்றாக்குறையே.🌟

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தேசியத்துக்கு எதிரானவனாம். அடுத்த குற்றச்சாட்டு. என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது, கல்வி/ தொழில்நுடப/ வர்த்தக / பொருளாதார பலத்தை உயர்ததுவது, வட கிழக்கில் தமிழரின் சனத்தொகையை குறையவிடது காப்பது. இவற்றை ஜனநாயக நீரோட்டதில் இணைந்து ஆளும் அரசுகளோடு தந்திரோ உறவுகளோடாவது மேற்கொள்ளுவது இன்றைய அவசர தேவை.

அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???

அப்பாவிகளையும், பத்திரிகையாளர்களையும் கொன்ற டக்கியை நீங்கள் "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்தவர் என்று கருதுவதாலா இந்தக் கேள்வி😂?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

கோசான், “போராடி இருக்கவே தேவையில்லை, இலங்கை தேசியத்தைள் கரையலாம்”, என்பது எனது கருத்து அல்ல. அப்படி மக்களை நினைக்க வைத்தவர்கள் இந்த தீவிர தமிழ் தேசியர்களே. நடைமுறைச் சாத்தியமற்றதை வேண்டி பிடிவாதம் பிடித்து பெறக்கூடியவற்றை தொடர்ந்து இழப்பது குறித்தே எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன்.

2002 ல் இருந்து அரசியல் போராளிகள் ஐரோப்பா முழுவதும் செல்வதற்கும் உலக நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடி எமது பக்க நியாங்களை எடுத்து கூறவும் நல்லுறவுகளை வளர்தது லொபி செய்யவும் அதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவதற்கான சிறந்த வாய்பபு கிடைத்தது. நோர்வே அநுசணை விசா கிடைத்து ஐரோப்பா வந்தவர்கள் எல்லோரும் அடுத்த யுத்தத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் மக்களை சந்திப்புகளில் மட்டுமே அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டிருந்தனர். மக்களின் ஆவலை தூண்ட யுத்தக் கதைகளை சுவார்சியமாக கூறி மக்களை உசுபேற்றி விட்டு சென்றனர். இது தமிழ் தேசியத்தை வளர்ததா? அல்லது அதற்கு ஆப்பக அமைந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்.

துரையப்பா மீதும் அவரது அரசியல் மீதும் எவர் அவதூறுகளை சுமத்தினாலும் விமர்சனங்களை வைத்தாலும் யாழ்பாணத்திற்கு அவரைப் போல ஒரு சிறந்த மேயர் இதுவரை கிடைக்கவில்லை என்பது எவரலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியை பகீரங்கமாக ஆதரித்தார் என்பதே அவர் மீதான துரோகி பட்டம். ஆனால் இன்று ஆளும் கட்சியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்று அவர்களைத் துரோகிகள் என்று மக்களிடம் கூற முடியத கையறு நிலை.

அத்துடன் மாநகர சபைக் கட்டத்தினுள் ஒரு சிறிய அறையில் இருந்த நூல் நிலையத்தை மாற்றி யாழ்பாணத்திற்கு ஒரு அழகிய நூலகம் கட்டம் தேவை என்று 1050 களின் நடுப்பகுதியிலேயே பேரவா கொண்டு நூல்நிலைய கட்டட நிர்மாணிப்பில் key role ஆக செயற்பட்டவர் அவராகும் . 1950 களில் வெளிவந்த பத்திரிகைகளை பார்ததால் அவரது அந்த பங்களிப்பு தெரியும். நூல் நிலைய எரிப்பை வைத்து அரசியல் செய்த தேசியர்கள் அவரது அந்த பங்களிப்பை கபடத்தனமாக மறைத்து அவர் மீது அவதூறுகளையே பொழிந்தனர். அது தான் தமிழரசுக்கட்சியின் அரசியல். காரணம் அவர் இருந்தால் யாழ்பாண தொகுதி கிடைக்காது என்ற பயமே.

உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்….

தொடர்ந்து எழுதுங்கள்.

யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள்.

இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை.

துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின்

அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா.

துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை.

இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை.

அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம்.

ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும்

இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.

நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது.

தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை,

ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும்.

முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார்.

இதைத்தான் நான் சொன்னேன்.

கருத்து சொல்வதை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்….

தொடர்ந்து எழுதுங்கள்.

யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள்.

இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை.

துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின்

அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா.

துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை.

இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை.

அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம்.

ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀.

இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோசான். ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன். தமிழ்த் தேசிய போர்வையை போர்ததியதன் மூலம் தமது வண்டவாளங்களை அந்த போர்வைக்குள் மறைத்து, நல்ல தமிழன், நல்ல அரசியல்வாதி, நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகளில் பலர் உண்டு. அன்றும் இன்றும் அது தான் உண்மை. எவ்வளவு இறுக அந்த போர்வையை போர்கிறர்களோ அந்தளவுக்கு அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாது காப்பாற்றப்படும் கேடயமாக அது செயற்படும் என்பதை புரிந்தவர்கள் அவர்கள். உதாரணங்கள் தந்தால் அதுவே நீண்ட விவாதம் ஆகும் என்பதால் தவிர்ககிறேன்.

9 hours ago, விசுகு said:

அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???

டக்லஸ் நீண்ட காலம் அரசாங்கத்தில் அமைசராக இருந்தாரே தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டு தவிர ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஏதாவது திட்டங்கள் ஏதாவது செய்தாரா? எனது பார்வையில் அப்படி இல்லை. ஒரு வேளை எனது கண்ணுக்கு அது தெரியவில்லையோ? அவ்வாறு செய்தார் என்பதை நீங்கள் நிரூபித்தால் அவரது அந்த செயலை நான் ஆதரித்து எழுதுவேன். (கவனிக்க அந்த செயலை மட்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிறிமாவினால் உள்ளூர் உற்பத்தி கொள்கை யாழ்ப்பாண தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல.அது ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா மக்களுக்குமானது. அதில் பலனடைந்தவர்கள் வடபகுதி மக்கள் மட்டுமே. கிழக்கு மக்களும் இல்லை. சிங்கள மக்களும் இல்லை. எல்லோரும் பஞ்சத்தால் அவதிப்பட்டார்கள்.

நன்றிக்கடன் என்பது இலங்கை தமிழர்களின் இரத்தத்தில் ஊறியது.அதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம்.

இருந்தாலும் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் சிறிமா காலத்து ஈழத்தமிழர்களுக்கெதிரான இன அழிவையும் அடக்கு முறைகளையும் இலகுவாக மறந்து விடுகின்றீர்கள்.இந்த இடத்தில் காசி ஆனந்தனை நினைவுபடுத்துகின்றேன்.

சிங்களவர்கள் ஒரு துண்டு பாணிற்காக வரிசையில் நின்றார்கள். அவதிப்பட்டார்கள். அவர்கள் பிற்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கவில்லை.இன்றைக்கு பால் நாளைக்கு சோறு எனும் நிலையிலையே இருந்தார்கள். இதே கொள்கையிலும் வட கிழக்கு சோம்பேறிகளும் இருந்தார்கள்.

அதன் பரிசுதான் இனவாத ஜே ஆர் பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சியமைப்பு.ஆட்சிக்கு வந்ததும் மாண்புமிகு அதி உத்தம ஜே ஆர் செய்த வேலை சிறிமாவின் குடியுரிமையை பறித்தது.

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

அனுர அரசியல் இலங்கை மக்களுக்கு புதியது. அனைத்து மக்களும் ஆதரித்தார்கள். அவ்வளவுதான். விளைவுகளும் விடைகளும் அடுத்த தேர்தலில் தெரியலாம். இதற்காக பரீட்சார்த்த அரசியலை பார்ப்பவர்களுக்கு அனுர விசுவாசி பட்டம் கட்டுவது ஒருவித அரசியல் அனுபவ பற்றாக்குறையே.🌟

சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது. பல பொருளாதார வல்லுனர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். ஆனால், வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல, அகில இலங்கை உள்ளூர் உற்பத்தியாளரும் இந்த பொருளாதாரக் கொள்கையால் நன்மையடைந்தனர். மக்கள் அன்றாட பாவனையில் இருந்த வெங்காயம், மிளகாய் ஆகியனவற்றை வட பகுதி விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்ததால் நல்வாய்பாக வட பகுதி விவசாயிகள் உடனடி நன்மையடைந்தனர்.

மற்றபடி, பாணுக்கு கியூவால் பாதிக்கப்படவர்கள் சிங்கள மக்கள் மட்டுமல்ல, யாழ்பாணம் உட்பட வட கிழக்கிலும் அதே நிலை தான். சடுதியான இறக்குமதி தடையையல் 1973 ன் இறுதியில் இருந்து குறுகிய காலத்திற்கே அது இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் அரச/ தனியார் துறை ஊழியர்கள். சுய தொழில் செய்வோர் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், . 1974 ன் நடுப்பகுதியின் பின் நிலமை சற்று சீராகியது. ஒட்டு மொத்தமாக உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்தன. பல தரவை நிலங்கள் விவசாய நிலங்களாகின. படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டதின் மூலம் மக்களுக்கு வன்னியில் அரசால் காணிகள் வழங்கப்பட்டது அந்த காலத்தில் தான். ஆனால் திட்டத்தின் எதிர்பார்ப்பின் அளவுக்கு யாழ் மக்கள் தமது சோம்பேறித்தனத்தால் அங்கு செல்லவில்லை என்பது வேறு விடயம்.

எந்த ஒரு பொருளாதார திட்டமும் அதன் பலனை கொடுக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான பொதுத்துறை ஊழல் இந்த பொருளாதார கொள்கை நடைமுறை படுத்தலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியது. அரச துறையில் ஊழல்கள் மலிந்தது இத்திட்டதை பெரிதும் பாதித்தது. ஊழலை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது. ஆளும் கட்சியினரே பல ஊழல்களை செய்தனர். இது பல எதிர்மறையான அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தது. இதன் பலனை ஐக்கிய தேசியக்கட்சி 1977 ல் அறுவடை செய்தது.

மற்றப்படி நான் சிறிமா ஆட்சியை அப்படியே முழுமையாக ஆதரித்து எப்போதுமே கருத்திடவில்லை. எந்த ஆட்சி என்றாலும் அவர்களால் தமிழருக்கு நன்மையான திட்டங்கள் வரும் போது தந்திரோபாய ரீதியில் கண்டும் காணாமல் அனுமதிக்க வேண்டிய தமிழரசு எல்லா திட்டதையும் மூர்க்கமாக தனது அரசியல் பிழைப்புக்காக எதித்தது. அதற்கு வழமைபோல் பல சொத்தைக் காரணங்களை தூக்கி பிடித்து உணர்சசி அரசியலை மட்டும் செய்தது. அதைத் தவறு என்று குறிப்பிட்டதை தூக்கிப் பிடித்து நான் சிறிமாவை ஒரேயடியாக புகழ்ந்ததாக மடைமாற்றுவது தமிழ் தேசியவாதிகளின் இயல்பு தான் என்பதால் அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை.

மக்கள் நன்றியறிதலுக்காக வாக்களித்ததாக கூறியவுடன் நன்றி இலங்கை தமிழரின் இரத்தத்தில் ஊறியது DNA யில் ஊறியது என்று வெற்றுப் பெருமை மார்தட்ட வேண்டாம். இப்படியான வெற்றுப் பெருமை மார்தட்டல்கள் தான் தமிழரை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது. கொப்பேகடுவ்வுக்கு வடபகுதி மக்கள் வாக்களித்தது நன்றியறிதல் மட்டுமல்ல மீண்டும் சு. க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இறக்குமதி தடை வரும் நாம் நன்மையடையலாம் என்ற சுய நல எதிர்பார்ப்பினாலும் தான். அதில் தவறில்லை சாதாரண மக்கள் அரசிடம் தமக்கு நன்மைகளை எதிர்பார்த்து வாக்களிப்பது இயல்பானது.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் நடைபெறும் இந்த வாதப் பிரதி வாதங்களால் இலங்கையில் தமிழினம் வாழ நல்வாழ்வு கிடைத்துவிடாது. சிங்களம் தமிழினத்தின் காலைச்சுற்றிய பாம்பு. பாம்புக்கு பால்ஊற்றி வணங்கவும் தமிழினத்திலும் பக்தர்கள் உண்டு. இவர்கள் போன்றோர் மாறும்வரை ஏட்டுச் சுரைக்காயை தொடர்ந்து சுவைக்கலாம் அவ்வளவுதான்.

இலங்கையில் இன்றைய பல தமிழர்களின் தறிகெட்ட வாழ்க்கை முறையும், அங்கு தலைவர்கள் என விளங்குவோரின் தவறான செயற்பாடுகளும் மேலோங்கி உள்ள நிலையில் தமிழீழம் மலர்ந்தால்…… நந்த வனத்தில் ஓர் ஆண்டிக் கதை மீண்டும் எழுதப்படும்போல் தோன்றுகிறது.

புத்த துறவிகள் அரசியலுக்குள் நுழையாது வலுவான அணை ஒன்று கட்டப்படல் வேண்டும். துறவிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் செயல்களில் ஈடுபடும்வரை தமிழினம் மட்டுமல்ல, சிங்கள இனம் உட்பட, வேறு எந்த இனமும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அப்ப யாழை மூடி விடுவோம் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

அப்பாவிகளையும், பத்திரிகையாளர்களையும் கொன்ற டக்கியை நீங்கள் "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்தவர் என்று கருதுவதாலா இந்தக் கேள்வி😂?

இதுக்கு பிறகு வாறன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அப்ப யாழை மூடி விடுவோம் என்கிறீர்களா?

ஆமாம் ஆனால் பூலோகம் இருண்டுவிடுமே?????? என்ற பயம்தான்.🫣

இப்படி ஒரு அவாவை வெளிப்படுத்துவதற்கும் ஒரு “தில்” வேண்டும்.!!!!! அது என்னிடம் இல்லை ஐயனே.😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/2/2026 at 10:20, island said:

சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது.

விடுதலைப்புலிகளும் தன்னிறைவு பொருளாதாரத்தை திறம்பட செய்து காட்டியவர்கள். அது ஒரு சிலருக்கு கசப்பாக தெரிந்தது. அந்த கசப்பின் பிரதிபலன்கள் தான் இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலைகள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாட்டு மக்கள் அனுபவித்த பொருளாதார கட்டுப்பாடுகளும் மிக கடுமையானனது. அந்த கடுமையான சட்டங்களினால் தான் மேற்கின் பல நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்றுருக்கின்றன.

கட்டுப்பாடுகள் கசந்ததினால் தான் விடுதலைகளும் அழிந்தன. இது உலக சரித்திரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/2/2026 at 21:34, goshan_che said:

அப்ப யாழை மூடி விடுவோம் என்கிறீர்களா?

உங்களுக்கு அப்படி ஒரு சிந்தனை இருக்கின்றதா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள உறவுகளே, திரியோடு தொடர்புடைய சம்பந்தரையாவின் உரையாதலால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nochchi said:

யாழ்க்கள உறவுகளே, திரியோடு தொடர்புடைய சம்பந்தரையாவின் உரையாதலால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

இன்னுமொரு டிக்டொக் வியாக்கியானம்.

சம்பந்தர் மகிந்தவுக்கு புலிகளை தோற்கடித்தமைக்கு நன்றி கூறினார் என்பதற்கான ஆதாரம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே கும்பலாக செய்தி என்ற பெயரில் உருட்டுகளும் செய்தி திரிப்புகளையும் தங்களுக்கு விருப்பமான் தலைப்புகளை இட்டு யுரூப், ரிக்ரொக், ஃபேஸ் புக் என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது. பின்னர் அதையே கொண்டுவந்து ஆதாரம் என்பது. இப்பவ்வும் அந்தப் பழைய நினைப்பில். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.