Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hindutamil-prod%2F2026-03-13%2Fxipo51hp%

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார்.

இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-former-cadre-kaliammal-joins-admk

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் அடிக்கடி சொல்லுவார்…

வென்றால் மகிழ்ச்சி….

தோற்றால் பயிற்சி…

(அவருக்கு வென்றாலும் தோற்றாலும் பெட்டி என்பது வேறு விடயம்)

அண்ணனோடு இருந்தால் பெட்டியை தான் எடுத்து கொண்டு பயிற்சியை மட்டுமே தமக்கு தருவார் என உணர்ந்து வெளியே போனோர் பலர்.

அதில் முக்கியமானவர்கள், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி, காளியம்மாள்.

இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம்.

காளியம்மாளுக்கும் அதிமுகவில் இதே இணை கொ ப சே பதவி மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு என பேசி கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதகவில் இருந்து காளியம்மாளுக்கு நாலு வருடம் முன்பே அதிமுகவில் சேர்ந்தாலும் கல்யாண சுந்தரத்தை இன்று சேர்ந்த காளியம்மாள் ஓவர் டேக் செய்து விட்டார். அவருக்கென ஒரு கூட்டத்தை சேர்க்க தவறிய நாவலர் நெடுஞ்செழியன் போல் ஆகி, நமது அம்மா இதழின் எடிட்டர் என்ற அளவில் இருக்கிறார் க.சு.

பிகு

ரஜீவ், க.சு, தூசண துரைமுருகன் மூவரும் இணைந்து அண்மையில் ஒரு மேடையில் அரசியல் பேசினர்.

இப்போ தூசண துரை விஜையை போட்டு வெளுப்பதால் நாதக தம்பிகளை விட உபிக்கள் தான் அவருக்கு பரம ரசிகர்கள் ஆகி விட்டனர்.

விஜையை வெளுக்க எண்டே தூசண துரைக்கு திமுக தனியாக சில பெட்டிகளை தட்டி விட்டது என்கிறார்கள்.

போதிய அளவு விலை படிந்தால் தூ. துரையும் பயிற்சியை முடித்து வெளியேறலாம்😂.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

காளியம்மாளுக்கும் அதிமுகவில் இதே இணை கொ ப சே பதவி மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு என பேசி கொள்கிறார்கள்.

தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!

2 minutes ago, Justin said:

தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!

கொ.ப.செ : கொள்கைகளை பறக்கவிடும் செயலாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

large.IMG_0046.jpeg.5ce46af8bb2fa10bcbf8

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணன் அடிக்கடி சொல்லுவார்…

வென்றால் மகிழ்ச்சி….

தோற்றால் பயிற்சி…

(அவருக்கு வென்றாலும் தோற்றாலும் பெட்டி என்பது வேறு விடயம்)

அண்ணனோடு இருந்தால் பெட்டியை தான் எடுத்து கொண்டு பயிற்சியை மட்டுமே தமக்கு தருவார் என உணர்ந்து வெளியே போனோர் பலர்.

அதில் முக்கியமானவர்கள், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி, காளியம்மாள்.

இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம்.

காளியம்மாளுக்கும் அதிமுகவில் இதே இணை கொ ப சே பதவி மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு என பேசி கொள்கிறார்கள்.

கட்சியில் ஏற்கெனவே உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி முக்கிய பதவிகளை இவர்கள் பெறும் போதே பயிற்சியின் பெறுமதி தெரிகிறது அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய இந்த எடப்பாடி பழனிசாமி முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எள்று ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

Daily Thanthi
No image preview

புதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயல
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

கட்சியில் ஏற்கெனவே உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி முக்கிய பதவிகளை இவர்கள் பெறும் போதே பயிற்சியின் பெறுமதி தெரிகிறது அல்லவா.

பயிற்சியாளரை போலவே அதிகமாய் கூறப்படும் விலைக்கு விற்கப்படும் போதே பயிற்சியின் சீத்துவம் புரிகிறது😂

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய இந்த எடப்பாடி பழனிசாமி முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எள்று ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

Daily Thanthi
No image preview

புதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயல

என்னது தென்ந்தோப்பு சின்னமா?

கங்கை அமரன் வீட்டை ஆட்டயப்போட்டது போல் அடுத்த முறை யாரின் தோப்போ😂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

என்னது தென்ந்தோப்பு சின்னமா?

இவா ஊழல் மோசடி வழக்கில் வெளியே வந்த போது சீமான் அன்பாக சென்று சந்தித்தவர்😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவா ஊழல் மோசடி வழக்கில் வெளியே வந்த போது சீமான் அன்பாக சென்று சந்தித்தவர்😂

பிஸ்கெட் போட்டவரை எந்நாளும் மறக்காது😂.

சந்தித்து விட்டு, பத்திரிகையாளர் முன் வாசலில் நிற்பதால் பின் கதவால் தப்பி ஓடினவர்.

சீமானின் முதல் பெரிய வியாபாரம் ஜெக்கு #இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிரச்சாரம் செய்ததுதான்.

அதை ஏற்பாடு செய்தவர் சசி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்திவாரத்தை விட்டுச்செல்லும் மனநிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்தும் பயனில்லை. இப்படியான நடவடிக்கைகள் தமிழினத்திற்கு புதிதும் அல்ல.

இலங்கை தமிழ் அரசியலிலும் இராசதுரை மற்றும் ஊர்காவல்துறையார் நல்ல உதாரணங்கள்.

அதே போல் கருணா,பிள்ளையான் போன்றோரின் நடவடிக்கைகளும் தகும்.

காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல.

கடந்த பதினாறு வருடங்களாக செபஸ்ரியன் சீமான் பிரபாகரனை வியாபார பொருளாகவே பயன்படுத்தி வருகிறார். அவரிடம் கற்றுக்கொண்டதை தான் பயன்படுத்தினால் என்ன என்று அவர் நினைத்திருக்கலாம். செபஸ்ரியனுக்கு மட்டுமே பிரபாகரனை உபயோகிக்கும் copy right உள்ளது என்று நீங்கள் நினைப்பதை போல் காளியம்மாள் நினைக்கவில்லைப் போலும்.

  • தொடங்கியவர்

தி.மு.க. வில் சேர்ந்து... ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி என்று...

பரம்பரை அடிமை சேவகம் செய்வததை விட...

ஒறிஜினல் தமிழன் பழனிச்சாமி கட்சியில் சேர்ந்தது ஓகே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல

இந்த யோசனை சீமான் தலைவர் படத்தை, புலி கொடியை வைத்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போதே வந்திருக்க வேண்டும்.

அப்போ தட்டி கேட்காததன், ஊக்குவித்ததன் பலன் இப்போ வாறவன் போறவன் எல்லாம் அதையே செய்கிறார்கள்.

7 minutes ago, தமிழ் சிறி said:

தி.மு.க. வில் சேர்ந்து... ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி என்று...

பரம்பரை அடிமை சேவகம் செய்வததை விட...

ஒறிஜினல் தமிழன் பழனிச்சாமி கட்சியில் சேர்ந்தது ஓகே. 😂

அப்போ நான் தவழும் தமிழன்…

இப்போ நான் பச்சை தமிழன்…

அதிரடி கார மச்சான்…மச்சான்…மச்சானே😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்த யோசனை சீமான் தலைவர் படத்தை, புலி கொடியை வைத்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போதே வந்திருக்க வேண்டும்.

அப்போ தட்டி கேட்காததன், ஊக்குவித்ததன் பலன் இப்போ வாறவன் போறவன் எல்லாம் அதையே செய்கிறார்கள்.

அன்றும் இன்றும் தலைவர் படத்தை தூக்குகின்றார் என்பதற்காக நான் சீமானை ஆதரிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்போ நான் தவழும் தமிழன்…

இப்போ நான் பச்சை தமிழன்…

சீமானே திராவிட கட்சி ஜெயலலிதாவுக்கு தான் வாக்கு கேட்டிருக்கின்றார் அப்போதே தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில் அனைத்தும் திராவிடம் தான் என்பது இப்போது நாம் தமிழர் காளியம்மாள் தவழும் திராவிட தமிழனை தலைவராக ஏற்றிருக்கின்றார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்போ நான் தவழும் தமிழன்…

இப்போ நான் பச்சை தமிழன்…

அதிரடி கார மச்சான்…மச்சான்…மச்சானே😂

9TdFi2vf.jpg

அன்று அவர் தவழ்ந்து.. முதல் அமைச்சராக பதவி பெற்று இருக்காவிடில்,

அடுத்த சில மாதங்களில், அரசியலில் இருந்தே காணாமல் போயிருப்பார்.

அதன் பின் அவர் இரண்டு முறை முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்தது ஒரு சாதனைதான்.

அரசியலில் அதிரடி முடிவை எடுப்பவர்கள்... உயர் பதவிக்கு சென்ற வரலாறுகள் பல.

அதில் இதுவும் ஒன்று. அம்புட்டுத்தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதன் பின் அவர் இரண்டு முறை முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்தது ஒரு சாதனைதான்.

எடப்ஸ் 2017-2021 வரைதான், 4 வருடம் மட்டுமே முதல்வர்.

எந்த தேர்தலிலும் இன்னும் இவர் தலைமையில் கட்சி/கூட்டணி வெல்லவில்லை.

3 minutes ago, தமிழ் சிறி said:

அரசியலில் அதிரடி முடிவை எடுப்பவர்கள்... உயர் பதவிக்கு சென்ற வரலாறுகள் பல.

அதில் இதுவும் ஒன்று. அம்புட்டுத்தான். 😂

ஐயோ பாவத்த..

சீமானுக்கு கூட தலைவர் பெயரை பயன்படுத்துவது காரணமாக எமோஷனலா முட்டு கொடுப்பது புரிந்துகொள்ள கூடியது…

சசியின்கால், ஜெயிம் டயர் ரில் எல்லாம் விழுந்து முதலமைச்சர் ஆன, “கூவத்தூரில்” “ஒருங்கிணைப்பு” செய்து ஆட்சியை பிடித்த எடப்பாடி மாமாவுகெல்லாம் முட்டு கொடுப்பது காலக்கொடுமை😂.

கண்மூடித்தனமாக ஒன்றை (திமுக) எதிர்க்க வேண்டும் என்ற முடிவில் பலர் வாழ்க்கையில் இப்படித்தான் கடைசியில் முட்டு சந்தில் போய் நிற்பார்கள்.

இன்னொரு அண்ணை புட்டினுக்கு முட்டு கொடுக்க போய், கடைசியில் புலிகள் விடயத்தில் இந்தியா செய்தது சரியே எண்டு ஒரு முட்டு சந்தில் வந்து நிண்டார்😂.

இதுவும் அப்படி ஒரு முட்டுச்சந்தே.

  • கருத்துக்கள உறவுகள்

“சூரியக் கட்சியில், முக்கியமான ஒரு அணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட அந்த நிர்வாகி. கொங்கு மண்டலத்தில் சீட் எதிர்பார்த்து, வீட்டையெல்லாம் மாற்றிக்கொண்டு சென்றவருக்கு, ‘ஜெயில் மாஜி’யின் தலையீட்டால் சீட்டே கிடைக்காத சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் அவரது கட்சிப் பொறுப்புக்கும் பங்கம் வந்துவிட்டதாம். ‘கடந்த ஐந்து வருடங்களில், அன்பான மாண்புமிகுவின் தயவால் ஏகப்பட்ட டெண்டர்களை வாரிக் குவித்துவிட்டார்’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டதாம் உளவுத்துறை. சின்னவருக்கும் விஷயம் போகவும், அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்க முடிவாகியிருக்கிறது. டம்மியான ஒரு அணியின் பதவியை அளிக்கவும் ஆலோசனை நடந்தது. தகவல் கேள்விப்பட்டதிலிருந்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அத்தனை கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறாராம் அந்தப் பிரமுகர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

நன்றி-ஜூனியர் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அன்றும் இன்றும் தலைவர் படத்தை தூக்குகின்றார் என்பதற்காக நான் சீமானை ஆதரிக்கவில்லை.

  1. தலைவர் பெயரை சொல்லி இயக்கம் நடத்தி கொண்டு, தலைவரின் ஆளுயர படத்தின் முன் நின்று, புலிகள் அழித்தொழிக்க படவேண்டிய தீய சக்தி என இலங்கை அரசு கூட நிறைவேற்றாத தீர்மானத்தை தமிழக சட்ட சபையில் நிறைவேற்றிய ஜெயை ஈழத்தாய், அவருக்கு வாக்கு போடுங்கள், போட்டால் ஈழம் மலரும் என சொன்னார் சீமான்.

  2. எடப்பாடியை சந்திக்க தலைவர் படம் போட்ட புத்தகத்தோடு போனார் காளி.

முதலாவதை ஊக்குவித்த உங்களுக்கு, இரெண்டாவது உறுத்துவதாக சொல்லுவது வினோதமானது😂.

தனக்கு பதவி ஏற்கும் போது தலைவர் பெயரால் என சொல்லி பதவி ஏற்க ஆசை என உருகியவர் காளி.

அது மட்டுமா, நீ அதிமுக க்குதான் வாக்கு போடுவேன்னா செத்துரு என்று கூட்டத்தில் பேசியவர் 😂.

ஒரு எம் எல் ஏ சீட், துணை கொ ப சே க்கு இன்று எல்லாவற்றையும் கூவி கூவி விற்று விட்டார்😂.

சீமான் தன்னை போலவே பச்ச்சோந்திகளையும், முகவர்களையும் உருவாக்கி உள்ளார் என்பதற்கு காளி நல்ல உதாரணம்.

இப்போதும் தலைவருக்காக கிடைக்கும் கொஞ்ச வாக்கையும் இழக்க விரும்பாத சுயநலமே அவர் புத்தகத்தை தூக்கி போனது:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, island said:

கடந்த பதினாறு வருடங்களாக செபஸ்ரியன் சீமான் பிரபாகரனை வியாபார பொருளாகவே பயன்படுத்தி வருகிறார். அவரிடம் கற்றுக்கொண்டதை தான் பயன்படுத்தினால் என்ன என்று அவர் நினைத்திருக்கலாம். செபஸ்ரியனுக்கு மட்டுமே பிரபாகரனை உபயோகிக்கும் copy right உள்ளது என்று நீங்கள் நினைப்பதை போல் காளியம்மாள் நினைக்கவில்லைப் போலும்.

4 hours ago, goshan_che said:

முதலாவதை ஊக்குவித்த உங்களுக்கு, இரெண்டாவது உறுத்துவதாக சொல்லுவது வினோதமானது😂.

தனக்கு பதவி ஏற்கும் போது தலைவர் பெயரால் என சொல்லி பதவி ஏற்க ஆசை என உருகியவர் காளி.

இவர்,இன்னார் இப்படித்தான் இருப்பார் எனும் மனநிலையில் வந்து கருத்துக்களை வாசித்தால் இப்படித்தான் என பிழையாக விளங்கிக்கொள்ள நேரிடும். அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள மனநிலை.

நான் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் சீமானின் ஈழ அரசியலை விடுத்து ....... சீமானின் தமிழ்நாட்டு அரசியல் பிடிக்கும் என பல இடங்களில் எழுதியுள்ளேன். அதை உங்கள் மூளை விளங்கிக்கொள்ள மறுக்கின்றது.

எனவே இதற்கு மேல் என்னால் விளங்கப்படுத்த முடியாது. உங்கள் கருத்து வெற்றிக்காக தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

தி.மு.க. வில் சேர்ந்து... ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி என்று...

பரம்பரை அடிமை சேவகம் செய்வததை விட...

நான் தமிழ்நாடு முன்னேறவில்லை என பல இடங்களில் எழுதுவதற்கு அந்த குடும்ப அரசியலும் முக்கிய காரணம்.எனது இன்னொரு முகநூல் பக்கத்தில் குடும்ப அரசியலுக்கு எதிரான உக்கிரம் இருந்து கொண்டே இருக்கும்.அதில் சீமானுக்கு இடமில்லை.விரும்பினால் சொல்லுங்கள் முகவரியை தருகின்றேன்.🤣

12 hours ago, தமிழ் சிறி said:

ஒறிஜினல் தமிழன் பழனிச்சாமி கட்சியில் சேர்ந்தது ஓகே. 😂

ஓம் நீங்கள் சொல்வது சரிதான்.👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தனக்கு பதவி ஏற்கும் போது தலைவர் பெயரால் என சொல்லி பதவி ஏற்க ஆசை என உருகியவர் காளி.

அது மட்டுமா, நீ அதிமுக க்குதான் வாக்கு போடுவேன்னா செத்துரு என்று கூட்டத்தில் பேசியவர் 😂.

ஒரு எம் எல் ஏ சீட், துணை கொ ப சே க்கு இன்று எல்லாவற்றையும் கூவி கூவி விற்று விட்டார்😂.

சீமான் தன்னை போலவே பச்ச்சோந்திகளையும், முகவர்களையும் உருவாக்கி உள்ளார் என்பதற்கு காளி நல்ல உதாரணம்.

முழுக்க உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் தமிழ்நாடு முன்னேறவில்லை என பல இடங்களில் எழுதுவதற்கு அந்த குடும்ப அரசியலும் முக்கிய காரணம்.எனது இன்னொரு முகநூல் பக்கத்தில் குடும்ப அரசியலுக்கு எதிரான உக்கிரம் இருந்து கொண்டே இருக்கும்.அதில் சீமானுக்கு இடமில்லை.விரும்பினால் சொல்லுங்கள் முகவரியை தருகின்றேன்.🤣

முகபுத்தகம் இப்போ வயசாளிகளின் கூடாரம் ஆகி விட்டது. அங்கே அங்கிள் ஆண்டி, தாத்தா பாட்டிகளின் ரோதனை தாங்கமுடியாமல் 2014 வாக்கிகேயே அதை நிறுத்தி விட்டேன்.

தவிர யாழை பொறுத்தவரை - முகபுத்தகம் யாழில் தர்க்கத்தில் தோத்து போனவர்களின் புகலிடமாக இருக்கிறது என்பதும் என் எண்ணம்.

எனவே இங்கேயே தொடரலாம்.

தமிழ் நாடு முன்னேற்றத்துக்காக, குடும்ப ஆட்சியை எதிர்க்க என்ற உங்கள் வாதம் - திசை திருப்பல்.

இங்கே நீங்கள் பேச எடுத்து கொண்ட விடயம்…

காளி அம்மாள் தலைவர் படம் போட்ட புத்தகத்துடன் எடப்பாடியிடம் சரண் அடைந்திருக்க கூடாது என்பது.

ஜெயாவிடம் சரண் அடைந்த சீமானை ஊக்குவித்த நீங்கள் இதை பேசுவது முரண் என்பது என்வாதம்.

இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.