Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published By: Vishnu

03 Apr, 2026 | 07:21 PM

image

அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள்

இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

https://www.virakesari.lk/article/242677

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்த விமானத்தின் விமானியை... அமெரிக்க விமானங்கள் தேடிக் கொண்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்

hindutamil-prod%2F2026-04-03%2Fa6k416wj%

அமெரிக்காவின் F-35 போர் விமானம் | கோப்புப் படம்

மோகன் கணபதி

Updated on: 03 Apr 2026, 3:05 pm

1 min read

தெஹ்ரான்: அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும்.

தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்

  • கருத்துக்கள உறவுகள்

இரான் தொழிநுடட்பம் / தந்திரோபாயத்தை சோதனை செய்வது போன்றே தோற்றம் இருக்கிறது.

இரான் செய்வது என்று சில ஆய்வாளர் சொல்லுவது,

வானில் சில தானியங்கி ஏவுகணை / வெடிபொட்களால் (இவை வானில் உலாவித்ததிரியும்) உருவாக்கப்படும் கொலைச் சங்கிலியும் (kill chain), அதனால் உருவாகும் பொறியும்.

(து 25% அளவில் வேலை செய்தாலே போதும்.)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்த விமானம் F-15 என்று இப்பொழுது சொல்லுகின்றார்கள். இரண்டு விமானிகளில் ஒரு விமானியை மீட்டு விட்டதாகவும் இங்கு அமெரிக்காவில் செய்திகளில் போய்க் கொண்டிருக்கின்றது. இரண்டாவது விமானியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதே செய்தியில் இருந்தது.

அமெரிக்க மக்களை, முக்கியமாக அதிபர் ட்ரம்பின் முன்யோசனை இல்லாத, ஆபத்தான, தேவையற்ற நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் நிபந்தனை இன்றி ஆதரித்து வரும் அமெரிக்க மஹா குழுமத்தைச் சேர்ந்தவர்களை, இந்த நிகழ்வு சிறிதாவது அசைத்துப் பார்க்கும் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - இதுவரை தெரிந்தது என்ன?

F-15 போர் விமானம் புறப்படுகிறது (சித்தரிப்புப்படம்)

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,F-15 போர் விமானம் (சித்தரிப்புப்படம்)

3 ஏப்ரல் 2026, 15:17 GMT

புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தற்போது தெரியவில்லை.

இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான சில படங்களை சிபிஎஸ் சரிபார்த்துள்ளது. அவற்றில், எரிபொருள் நிரப்பும் விமானமும் இரண்டு ஹெலிகாப்டர்களும் குஸெஸ்தான் மாகாணத்தின் மேல் தாழ்வாக பறப்பது காணப்படுகிறது. இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை போன்று உள்ளது.

இந்நிலையில், இந்த விமானத்தை இரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள்

படக்குறிப்பு,மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள்

இதுவரை தெரிந்தது என்ன?

இத்தகவல் முதலில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தாஸ்னிம் செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா தனது விமானி ஒருவரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ராய்ட்டட்ஸ், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களும், அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி இதே தகவலை வெளியிட்டுள்ளன.ஆனால், அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்று ராய்ட்டட்ஸ் தெரிவித்துள்ளது.

'விமானியை உயிருடன் பிடிப்பதே முன்னுரிமை' - இரான்

இரானின் தெற்கு கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் ஆளுநர், "வீழ்த்தப்பட்ட எந்தவொரு அமெரிக்கக் குழுவினரையும் உயிருடன் பிடிப்பதே தங்களது முன்னுரிமை" என்று கூறுகிறார்.

"எதிரிப் படைகளைப் பிடிப்பதில் அல்லது கொல்வதில் வெற்றி பெறுபவர்கள், ஆளுநர் அலுவலகத்தால் சிறப்பாகப் பாராட்டப்படுவார்கள்," என்று அவர் கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி முகமையின் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க 'ஊடுருவல்காரரைக்' கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த மாகாணத்தின் வர்த்தகர்களால் 10 பில்லியன் டோமன்கள் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cql70n267reo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இரான் தொழிநுடட்பம் / தந்திரோபாயத்தை சோதனை செய்வது போன்றே தோற்றம் இருக்கிறது.

இரான் செய்வது என்று சில ஆய்வாளர் சொல்லுவது,

வானில் சில தானியங்கி ஏவுகணை / வெடிபொட்களால் (இவை வானில் உலாவித்ததிரியும்) உருவாக்கப்படும் கொலைச் சங்கிலியும் (kill chain), அதனால் உருவாகும் பொறியும்.

(து 25% அளவில் வேலை செய்தாலே போதும்.)

நீங்கள் எழுதியதை வைத்து யோசித்தபோது வானத்தில் விமானங்களை வேகமாகச் சென்று தாக்கக்கூடிய ஏதோ ஒன்று பலூன் போன்ற/வேறொரு விதமாக மிதக்க வைத்திருந்துவிட்டு இலக்கு அருகில் வந்தவுடன் தாக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் முரட்டு சம்பவம் செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நீங்கள் எழுதியதை வைத்து யோசித்தபோது வானத்தில் விமானங்களை வேகமாகச் சென்று தாக்கக்கூடிய ஏதோ ஒன்று பலூன் போன்ற/வேறொரு விதமாக மிதக்க வைத்திருந்துவிட்டு இலக்கு அருகில் வந்தவுடன் தாக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்களோ?!

அவர்கள் சொல்வது தானியங்கி பறக்கும் (வெடிபொருளுடன்) drone, எகனைகள் போன்றவை.

இவை விமான எதிர்ப்பு ஏவுகணை போல சூடு, மற்றும் அண்மை ஆகையால் ரேடார் பூட்டின் மூலம் விமானத்தை நெருங்க கூடியவை.

ஆனால், இவை எல்லாம் விமானத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.

இதனால், 4-5 ஐ பாவித்து பொறியை ஏற்படுத்துவது, அதாவது வேகம் குறைந்ததை விமானம் சுட்டால், வேகம் கூடிய நாடிச்சென்று தாக்கும் ஏவுகணையை சமாளிக்க நேரம் போதாது.

அல்லது வேகம் கூடிய ஏவுகணையை விமானம் சாமளிக்க முயன்றால், வேகம் குறைந்த த்தானியங்கி drone இல் மோதும் சாத்தியக்கூறுகள்.

அத்துடன் கீழே இருந்த்தும் விமான எதிர்ப்பு தாக்குதல்.

நீங்கள் இதை போன்றதை, இரான் ஏவும் ஏவுகணையை சுட்டு விழுத்த முயலும் இஸ்ரேல் செய்வது, youtube இல் இருக்கிறது.

ஈரான் செய்ய முயல்வதாக ஆய்வாளர் சொல்லுவது அதன் எதிர்வளம்.

இதில் முக்கியமானது, இரான் மிக குறைந்த செலவில் இதை செய்ய முயல்வது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ காட்டுகிறது.

ரேடார் பூட்டு, திரியும் ஏவுகணையில் இருந்தா, அல்லது நிலத்த்தில் இருந்த்து ஏவப்படும் விமான எதிர்ப்பு

காகுத்தலில் இருந்தா என்பது காட்டப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தாக்குதலில் ஈரான், இரண்டு இராணுவ விமானங்களை - எஃப்-15 மற்றும் ஏ-10 - வீழ்த்தியுள்ளது, மேலும் இரண்டு பிளாக்ஹாக் ( Blackhawk) உலங்குவானொர்திகளுக்கு சேதத்தை எற்படித்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ‍தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. 

இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. 

அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. 

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார்.

https://athavannews.com/2026/1470940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய ஈரான்

Apr 4, 2026 - 07:50 AM

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் விமானி வான்குடை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஈரானினால் நேற்று (3) சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmnjpgno90005356pof9lra2d

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான், இஸ்பஹான் மாகாணத்தின் மேல் பறந்த ஒரு அமெரிக்க ட்ரோனை தாங்கள் வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் “மேம்பட்ட நவீன” வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அந்த MQ‑1 ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இதற்கு முன்பும், ஈரான் படைகள் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்களை வீழ்த்தியதாக தெரிவித்திருந்தன — ஒன்று தென்‑மேற்கு ஈரானில், மற்றொன்று ஹோர்முஸ் நீரிணை அருகே.

Al Jazeera
No image preview

Iran fires more missiles at Israel, celebrates downing of...

Celebrations in Tehran as Iran's military says the strikes show its forces still have fighting capability.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஈரானுக்கெதிராக இன்னமும் வான் ஆதிக்கம் கொண்டதாகவே காணப்படுகிறது, விமானிகளை மீட்பதற்காக மீட்பு பணிகளை செய்வதற்காக விமான எதிர்ப்பு ஏவுகனைகளை எதிர்கொள்வதற்காக தாழ்வாக பறந்து செல்கின்ற நிலை காணப்படுகிறது.

தாழ்வாக பறக்கும் விமானத்தினை சுட்டு வீழ்த்தும் மான்பாட் களை பயன்படுத்தும் நிலை கூட காணப்படவில்லை, இரஸ்சிய உக்கிரேன் போரில் ஆரம்ப காலத்தில் இவ்வாறு தாழ்வாக பறந்த இரஸ்சிய விமானத்தினை வகை தொகையின்றி உக்கிரேன் இராணுவத்தினர் மான்பாட் களை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

ஈரானிய படையினர் தற்போது விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அனைத்தும் குறுந்தூர எல்லை கொண்ட ஏவுகணைகளே, இவற்றின் பிற ஊதா செயற்பாடு நீண்ட நடுத்தர தூர ஏவுகணைகளில் உள்ள ராடர் தொழில்னுட்பம் இன்மையால் அமெரிக்க விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகனை தொடர்பான எச்சரிப்பு கிடைப்பதில்லை, அதுவே அமெரிக்க விமானப்படைக்கு தலையிடியாகவுள்ளது, தாழ்வாக அல்லது மிக உயரமாக பறக்கும் அமெரிக்க விமானத்தினை ஈரானால் தற்போதுள்ள நிலையில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை, அத்துடன் குறித்த குறுந்தூர ஏவுகனைகளில் கூட ஒரே ஒரு சூடு மட்டும் செய்கின்ற நிலை காணப்படுகிறது (காணொளிகளை பார்க்கும் போது), இது ஈரானினது குறித்த ஏவுகணைகளின் இருப்புக்களின் அளவு தொடர்பில் சந்தேகம் ஏற்படுத்துகிறது (அல்லது திட்டமிட்டு வேண்டு மென்றே தவறாக தம்மை பிரதிபலிக்கிறார்களோ தெரியவில்லை).

இது ஒரு இணைய மிகைப்படுத்தலகவே இந்த நிகழ்வுகளை கொள்ளமுடியும், அமெரிக்க விமானப்படை இன்னமும் ஈரானில் எதுவும் செய்யும் நிலையிலேயே காணப்படுவதாகவே கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான் - நேரலை

இரான், அமெரிக்கா, டிரம்ப், அமெரிக்கப் போர் விமானம்

பட மூலாதாரம்,EPA/Shutterstock

படக்குறிப்பு,இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன (விளக்கப் படம்)

4 ஏப்ரல் 2026, 02:34 GMT

புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரானியப் படைகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இரானின் அரசு ஊடகம் உரிமை கோருகிறது.

முன்னதாக, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டாவது நபருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இரான் பாதுகாப்பு படைகள் காணாமல் போன நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.

காணொளிக் குறிப்பு

இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என கூறிய டிரம்ப்

எஃப்-15 குழுவினரை மீட்க முயன்றபோது ஏ-10 வார்தாக் (A-10 Warthog) மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உட்பட மேலும் இரண்டு அமெரிக்க விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக சிபிஎஸ் தெரிவிக்கிறது.

இந்தப் போரில், இரான் வான்வெளியில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறியப்படுவதில் இதுவே முதல் சம்பவமாகும். மேலும், அமெரிக்க விமானங்கள் இரானுக்கு மேல் பறக்கும், ஆனால் இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என்று டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போரை முடிவுக்குக் கொண்டுவர இரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக என்பிசி நியூஸ் தெரிவிக்கிறது.

ஒரு குறுகிய தொலைபேசி நேர்காணலில், இந்த நிகழ்வுகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டதாக என்பிசி நியூஸ் கூறுகிறது. அதற்கு அவர், "இல்லை, இல்லவே இல்லை. இது போர். நாம் போரில் இருக்கிறோம்," என்று பதிலளித்தார்.

இரான், அமெரிக்கா, டிரம்ப், அமெரிக்கப் போர் விமானம்

பட மூலாதாரம்,State media

படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் காணப்படும் பாகங்கள், அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானத்தைச் சேர்ந்தவை என்பதை நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.

'விளைவுகள் மோசமாக உள்ளன'

அயோன் வெல்ஸ்

பிபிசி செய்தியாளர்

இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தச் சம்பவத்தின் விளைவுகள் தொடக்கத்தில் நினைத்ததை விட மோசமாக உள்ளன.

எஃப்-15இ (F-15E) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மட்டுமின்றி, வீழ்த்தப்பட்ட விமானத்தைத் தேடும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏ-10 வார்தாக் விமானமும் சுடப்பட்டு சேதமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

எஃப்-15இ விமானத்திலிருந்து வெளியேறிய ஒரு விமானி வெற்றிகரமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் பங்கேற்று, வெளியேறிய எஃப்-15இ விமானியை மீட்டன, ஆனால் இரண்டாவது நபரைத் தேடும் பணி தொடர்கிறது.

மீட்கப்பட்ட விமானியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மீது சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அதிலிருந்த குழுவினர் காயமடைந்தனர்.

இரானால் தனது வான்வெளியில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் குறித்து எதுவும் செய்ய முடியாது என்ற டொனால்ட் டிரம்பின் சமீபத்தில் தெரிவித்துள்ள போதிலும், ஆபத்துகள் இன்னும் அதிகமாகவே உள்ளன என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன.

அமெரிக்க 'விமானியை' தேடும் இரான்

கோன்ஷே ஹபிபியாசாத்

மூத்த செய்தியாளர், பிபிசி பாரசீக சேவை

அமெரிக்கா, தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தின் 'காணாமல் போன விமானியை' தேடும் பணிகள் இன்னும் முழு வீச்சில் தொடர்வதாக இரானின் தெற்கு கோகிலுயே-போயரஹ்மத் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இரானின் அரசு ஆதரவு செய்தி முகமையான ஃபார்ஸ் (Fars) செய்தியின்படி, "காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான, காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் மக்களின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன" என்று மாகாண துணை ஆளுநர் கூறியதுடன், 'காணாமல் போன விமானி' பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விமானம் சரியாக எங்கே சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், இரானின் அரசு ஊடகங்களில் இதுவரை இரண்டு மாகாணங்களின் பெயர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன - அவை கோகிலுயே-போயரஹ்மத் மற்றும் குசெஸ்தான்.

இரான், அமெரிக்கா, டிரம்ப், அமெரிக்கப் போர் விமானம்

பட மூலாதாரம்,Reuters

'போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும்'

கிரேஸ் எலிசா குட்வின்

பிபிசி செய்தியாளர், அமெரிக்கா

இரண்டு ராணுவ ஆய்வாளர்களிடம் பேசுகையில், அவர்கள் இரான் வான்வெளியில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது செயல்பாட்டு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றாலும், இது போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

"ஆரம்பத்திலிருந்தே இதுவொரு தவறான போர் என்றும், இது அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தேவையற்ற ஆபத்து என்றும், இது அமெரிக்க ராணுவ சக்தியின் தேவையற்ற பயன்பாடு மற்றும் அமெரிக்க ராணுவ வளங்களை இது வீணடிக்கிறது என்று வாதிடுபவர்களுக்கு - இந்தச் சம்பவம் வலு சேர்க்கிறது," என்று டிஃபென்ஸ் பிரையாரிட்டிஸ் சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரும் ராணுவப் பகுப்பாய்வு இயக்குநருமான ஜெனிபர் கவானாக் கூறுகிறார்.

இந்த சிந்தனைக் குழு கட்டுப்பாடுகளுடன் கூடிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது.

இந்தச் சம்பவம், தற்போதைக்கு, டிரம்ப் போரைக் கைவிடுவதை 'அரசியல் ரீதியாக அடிப்படையில் சாத்தியமற்ற ஒன்றாக மாற்றுகிறது' என்று அவர் கூறுகிறார்.

ஏனென்றால், போர் வெற்றி குறித்த தனது கூற்றுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபருக்கு வேறு ஏதேனும் தேவைப்படுகிறது, ஆனால் இந்தச் சம்பவம் அத்தகைய ஒன்றல்ல என்று ஜெனிபர் கூறுகிறார்.

'தி வாஷிங்டன் இன்ஸ்டிடியூட்' சிந்தனைக் குழுவின் ராணுவ உத்தி நிபுணரும் ஆய்வாளருமான ஜேம்ஸ் ஜெஃப்ரி பேசுகையில், "இந்தத் துயரச் சம்பவத்தின் விளைவாக, போர் குறித்த தங்களது கோபம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுவார்கள்" என்கிறார்.

"இது உண்மையில் ஒரு கவலைக்குரிய விஷயம், ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள்," என்று ஜெஃப்ரி கூறுகிறார்.

"பெரும்பாலான நவீன நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கர்கள் தங்களது ராணுவ வீரர்களை அதிகமாக நேசிக்கிறார்கள்."

ஆனால், ''பொதுமக்களின் கவலை, டிரம்ப் போரை எவ்வாறு கையாள்கிறார் என்பதையோ அல்லது அவர் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளையோ பாதிக்காது'' என்று அவர் கூறுகிறார்.

இரான், அமெரிக்கா, டிரம்ப், அமெரிக்கப் போர் விமானம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,F-15 போர் விமானம் (விளக்கப் படம்)

அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள்

கடந்த சில தசாப்தங்களில் எதிரிப் படைகளால் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்து வருகிறது.

மார்ச் தொடக்கத்தில், குவைத்துக்கு மேலே மூன்று அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானங்கள் நட்பு நாட்டுப் படையின் தவறுதலான தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CentCom) தெரிவித்தது. இந்தச் சம்பவத்தில் விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.

மார்ச் 12 அன்று மேற்கு இராக்கில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இருந்த ஆறு பேரும் கொல்லப்பட்டதாக சென்ட்காம் (CentCom) தெரிவித்தது.

7 ஏப்ரல் 2003 அன்று, 'இராக் சுதந்திர நடவடிக்கையின்' (Operation Iraqi Freedom) போது இராக்கிற்கு மேலே பறந்த ஒரு அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானி எரிக் தாஸ் மற்றும் ஆயுத அதிகாரி வில்லியம் வாட்கின்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க கடற்படை நினைவு இணையதளத்தின்படி, இராக்கின் டிக்ரிட் அருகே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஒரு முக்கியமான பணியை மேற்கொள்வதற்காக, அந்த விமானம் கத்தாரில் உள்ள அல் உதைத் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.

அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, 8 ஏப்ரல் 2003 அன்று இராக்கின் பாக்தாத்தில், தரையிலிருந்து வான்நோக்கி பாயும் ஏவுகணை மூலம் அமெரிக்காவின் ஏ-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II) விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.

மற்றொரு எஃப்-15இ (F-15E) போர் விமானம் மார்ச் 2011இல் வடகிழக்கு லிபியாவில் விழுந்து நொறுங்கியது. விமானியை மீட்பதற்காக நான்கு விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க கடற்படை அப்போது தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y8kdr7vgjo

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, உடையார் said:

ஈரான், இஸ்பஹான் மாகாணத்தின் மேல் பறந்த ஒரு அமெரிக்க ட்ரோனை தாங்கள் வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் “மேம்பட்ட நவீன” வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அந்த MQ‑1 ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இதற்கு முன்பும், ஈரான் படைகள் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்களை வீழ்த்தியதாக தெரிவித்திருந்தன — ஒன்று தென்‑மேற்கு ஈரானில், மற்றொன்று ஹோர்முஸ் நீரிணை அருகே.

animiertes-gefuehl-smilies-bild-0438.gifimages?q=tbn:ANd9GcRh3HnwRSLttSNqtx0WbzPu0hGWG.gif

அமெரிக்காவிற்கு... அடி மேல் அடி விழுந்து கொண்டுள்ளது. 😂

அமெரிக்காவிற்கு... இன்னொரு வியட்நாம் தான், ஈரான். 🤣

வெட்கப் படாமல்... வெள்ளைக் கொடியுடன்,

ஈரானிடம் சரண் அடைவதே புத்திசாலித்தனம். 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.