Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரிசனத்தின் இம்சைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தரிசனம் தொலைக்காட்சி. இதன் தற்போதய நிலை என்ன? *****புலிகள் தங்களுக்கும் தரிசனம் தொலைக்காட்சிக்கும் இடையே உள்ள தொடர்பை கடந்த வாரம் துண்டித்துள்ளனர். இத்தகவல் கடிதத்தின் மூலமும் தங்களது பிரதிநிதிகள் மூலமும் தரிசனம் தொலைக்காட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் சார்பில் இயங்கவோ அல்லது தங்களின் பெயரை உபயோகிக்கவோ **** புலிகள் தரிசனம் தொலைக்காட்சிக்குத் தடை செய்துள்ளனர்"

மேற்குறிப்பிடப்பட்ட செய்தி மாற்றுக் கருத்துக்கொண்ட தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை அறியும் நோக்குடன் தரிசனம் அலுவலகத்தைத் தொடர்புசெய்தபோது, மேற்கூறிய செய்தி உண்மைனெய உறுதிசெய்தனர். தரிசனம் தொலைக்காட்சி தற்போது முதல் தனியார் தொலைக்காட்சியாக இயங்கும் எனவும் தெரிவித்தனர்.

  • Replies 52
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாக இருப்பதாக அறிந்தேன். ஆனால் அதைப்பற்றிய ஆதார விபரங்கள் கிடைக்கவில்லை.

கிடைக்கும் பட்சத்தில் மேலதிக விபரங்களை இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்கை எதை செசய்யிறதெண்டு எனக்கு தெரியேல்லை அதாலை எந்த :) வும் தோன்றவுமம் இல்லை இந்த புலம் பெயர் ஊடக விடயங்களிலை தொடர்ந்தும் நாங்கள் எங்கடை தலையிலையே நாாங்கள் மண் அள்ளி போட்டுக்கொண்டிருக்கிறம் எண்டது மட்டும் உண்மை :)

எமது தேசிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாக இருப்பதாக அறிந்தேன். ஆனால் அதைப்பற்றிய ஆதார விபரங்கள் கிடைக்கவில்லை.

கிடைக்கும் பட்சத்தில் மேலதிக விபரங்களை இணைக்கின்றேன்.

கறுப்பி மேலதிகமா இப்போதைகக்கு ஒண்டும் கிடைக்காது

தரிசனம் ஆரம்பித்து இப்பொழுது ஒருவருடம் கூட முடியவில்லை. அதற்குள் உடனடியாக பெரிதாக வரமுடியாது. அவர்களுக்கு நிதி தேவை. ஆதரவாளர்களின் எண்ணிக்கை கூட வேண்டும். மாவீரர் நிகழ்வுகளை புலம் பெயர்ந்தவர்கள் பார்க்க உதவி செய்யப்போவது தரிசனம் மட்டுமே. நான் எந்தத்தொலைக்காட்சி வந்தாலும் தரிசனத்துக்கு தான் ஆதரவு. முன்பு ரி.ரி.என், சிகரத்துக்கு ஆதரவு குடுத்தேன்.

நீங்க சொல்வது சரி தான் கந்தப்பு

ஆனால்

சும்மாவே எங்காளுங்கள தென்னிந்திய தொலைக்காட்சிகளிடமிருந்து பிரிப்பது கடினம்..இதில எங்காளுங்க தொலைக்காட்சி வேற இப்படி "நல்ல" தரத்தோட இருந்தா...சுத்தம்..

தரிசனம் தனியார் தொலைக்காட்சி தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்கை எதை செசய்யிறதெண்டு எனக்கு தெரியேல்லை அதாலை எந்த :) வும் தோன்றவுமம் இல்லை இந்த புலம் பெயர் ஊடக விடயங்களிலை தொடர்ந்தும் நாங்கள் எங்கடை தலையிலையே நாாங்கள் மண் அள்ளி போட்டுக்கொண்டிருக்கிறம் எண்டது மட்டும் உண்மை :)

கறுப்பி மேலதிகமா இப்போதைகக்கு ஒண்டும் கிடைக்காது

ஆஆஆஆஆஆ.........அதுதான் இவ்வளவு மலிவா காட் விக்குறாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ.........அதுதான் இவ்வளவு மலிவா காட் விக்குறாங்களா?

இப்போதைக்கு இவ்வளவுமட்டும்தான் என்னாலை எழுத முடியும் என்று சொல்்லுறதை விட இதுக்கு மேலை எதுவும் எழுத முடியாது எண்டுதான் சொல்லாம்.ஆனால் தற்சமயயம் உள்ளதையும் கெடுத்த கொள்ளி கண்ணன் நிலையிலைதான் எங்கடை ஊடகங்களின்ரை போக்கும் அதுக்கு பொறுப்பானவர்களின் போக்கும் இருக்கு தற்சமயயம் தேசிய ஊடகம் எண்டு எதுவும் இல்லை தேசியத்தின்ரை பெயரிலை பந்தம் பிடிக்கிற தும் விளம்பரம் தேடுற ஊடடகம்தான் கனக்்க. இனி வரபோறதும் அதுதான்.. புலத்தின் என்ரை ஊடக அனுபவங்கள் எண்டு ஒரு கதை" இல்லை" தொடர் எழுதலாம் எண்டு இருக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறபோக்கிலை நானும் பரீட்சார்த்த ஒளிபரப்பு செய்யலாம் போலை கிடக்கு :) ஏனெண்டால் என்னட்டையும் கொஞ்ச பழையவீடியோ கசெற்ரும் அஞ்சாறு டிவிடியும் கிடக்கு.அதோடை இரண்டு ஒல்லாந்தர் காலத்து வீடியோகமராவும் இருக்கு :) இப்ப பிரச்சனை என்னவெண்டால் தொடங்கிற தொல்(லை)காட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்?ஆராவது ஐடியா சொல்லுங்கோப்பா? :)

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நிகழ்வு எந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது?. அத்தொலைக்காட்சிதான் தற்சமயத்தில் தேசியத் தொலைக்காட்சி.

  • தொடங்கியவர்

புலிகள் தங்களுக்கும் தரிசனம் தொலைக்காட்சிக்கும் இடையே உள்ள தொடர்பை கடந்த வாரம் துண்டித்துள்ளனர். இத்தகவல் கடிதத்தின் மூலமும் தங்களது பிரதிநிதிகள் மூலமும் தரிசனம் தொலைக்காட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் சார்பில் இயங்கவோ அல்லது தங்களின் பெயரை உபயோகிக்கவோ புலிகள் தரிசனம் தொலைக்காட்சிக்குத் தடை செய்துள்ளனர்"

அப்போ கடந்தவாரம் வரை ரெண்டு தரப்பும் தொடர்பில இருந்தவையோ? :)

தரிசனத்துக்கு புலிகள் முத்திரை குத்திறதுக்கு சிலபேர் அலைஞ்சிருப்பினம்.

இப்ப அவயின்ர மூக்கை ரெண்டு தரப்பும் சேர்ந்து உடைச்சிருக்கு...

இது புரியாம இணையத்தில அந்த விசுக்கோத்துகள் கும்மியடிக்குதுகள்... :)

  • தொடங்கியவர்

மாவீரர் நிகழ்வு எந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது?. அத்தொலைக்காட்சிதான் தற்சமயத்தில் தேசியத் தொலைக்காட்சி.

தனியார் தொலைக்காட்சிகளுக்கு தேசிய உணர்வு இருக்கக் கூடாதா? :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் உரைய ஒளிபரப்புச்செய்தா அது தேசியத்தின்ட தொலைக்காட்சி எங்கிற காலம் மாறிப்போச்சுப்பா. எங்கட தலைவரின் பேச்சை உலக ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்யிற காலம் இது.

வசி அண்ண சொன்னதுபோல தனியார் தொலைக்காட்சிக்கு தேசிய உணர்வுகள் இருக்கக் கூடாதா? எங்கிட்டக் கேட்டீங்க எண்டால் தெசிய தலைவரிண்ட உரைய எல்ல தமிழ் தொலைக்காட்சியும் ஒலிபரப்புச் செய்யவேணும்.. செய்வினம்....

காலத்தில இந்திய தொலைக்காட்சிகளும் எங்கட தலைவரின்ட உரைய ஒளிபரப்புவினம்... தேசிய உணர்வு இல்லாட்டிலும் வியாபார நோக்கிலாவது செய்வினம்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு ஆணிவேர் படம் போகுது .

  • தொடங்கியவர்

தரிசனத்தில் இன்று இரவு ஆணிவேர் திரைப்படம்

ஒளிபரப்பாகிறது.

மன்னிக்கவும்... கறுப்பி எழுதியதை கவனிக்காது நானும்

எழுதிவிட்டேன். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் நாங்கள் இணையத்தளங்களில் பார்க்கின்ற செய்திகளை மாலையில் அவர்கள் வாசிக்கின்றார்கள். அதுகளை திருத்தி ஒளி வடிவத்தில் தரலாம்தானே, இங்கு ஒளிபரப்பாகும் மற்றைய தொலைக்காட்சிகள் போல் சர்வதேசதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளின் ஒளிப்படங்களையோ, தங்களிடம் உள்ள ஆவணங்களிலோ, அல்லது நேரடியாகவோ பெறப்படும் ஒளிபடசெய்திகளையோ கலந்து செய்தி தரலாம் தானே. அதைவிடுத்து வானொலிகளில் செய்தி வாசிப்பது போல் தொலைக்காட்சியிலும் வாசிப்பதானால் அதற்கு பெயர் தொலைக்காட்சியல்ல.

நேற்றைய செய்திகளின் போது கிளிநொச்சியில் நடைபெற்ற 'வெளிச்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழா காண்பிக்கப்பட்டது

தனியார் தொலைக்காட்சிகளுக்கு தேசிய உணர்வு இருக்கக் கூடாதா? :unsure::wub:

தனியார் தொலைக்காட்சிகளுக்கு தேசிய உணர்வு இருப்பது உண்மை. ஆனால் சென்ற மாவீரர் தினம், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஞ்சலிகள் நேரடியாக ஜரோப்பாவில் ரி.ரி.என்னில் மட்டுமே காண்பிக்கப்பட்டது. தீபம் தொலைக்காட்சிக்கு நேரடியாகக் காண்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் இவ்வருடம் ஜெனிவாவில் நடைபெற்ற தமிழர்களின் பேரணி தரிசனம் தொலைக்காட்சியிலே தான் காண்பிக்கப்பட்டது. மாமனிதர் ஜெயக்குமார் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வும் தரிசனம் தொலைக்காட்சியில் தான் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

சென்ற மாவீரர் தினம், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஞ்சலிகள் நேரடியாக ஜரோப்பாவில் ரி.ரி.என்னில் மட்டுமே காண்பிக்கப்பட்டது.

இவ்வருடம் ஐரோப்பிய நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் பகல் 12.30க்கு ஆரம்பமாகவுள்ளதை அவதானித்திருப்பீர்கள். காரணம் நமது தேசியத் தலைவரது உரை நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதையும் அறிவீர்கள். எனவே, இம்முறை நேரடியாக ஒளிபரப்பும் அனுமதி தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே, எல்லோரும் நேரடியாக மாவீரர் நிகழ்வுகளில் பங்குபற்றி தேசியத் தலைவரது உரையைக் கேட்பது சிறந்ததுதானே?!

தரிசனத்தைப்பற்றி கூறுவதானால்.. அதற்கும் பார்க்க விரைவில் வரவுள்ள ITTN தொலைக்காட்சிக்காக இங்கு பலர் காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. :wub::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் இன்று மாலை முதல் புதன் வரை மாவீரர் தின நிகழ்வுக்காக தரிசனம் இலவசமாகக் காண்பிக்கப்படவுள்ளது. வழமையான ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டு, மாவீரர் நிகழ்வுகள் காண்பிக்கப்படவுள்ளது.

நேற்றைய செய்திகளின் போது கிளிநொச்சியில் நடைபெற்ற 'வெளிச்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழா காண்பிக்கப்பட்டது

வரவேற்கதக்கது தொடரவும்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவெழுச்சி நாளையொட்டி இன்று திங்கட்கிழமை (26.11.07) தொடக்கம் நாளை மறுநாள் புதன்கிழமை (28.11.07) நள்ளிரவு வரை 'தரிசனம்" தொலைக்காட்சி இலவசமாக அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா எங்கும் ஒளிபரப்பாகிறது.

தரிசனத்தின் வழமையான நிகழ்ச்சிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டு நினைவெழுச்சி நாள் நிகழ்ச்சிகள் சிறப்பு ஒளிபரப்பாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய அவுஸ்திரேலியாவில் உள்ளோர் 1300 886 548 என்ற தொலைபேசி இலக்கத்திலும், ஐரோப்பாவில் உள்ளோர் 0044 208 920 2111 என்ற லண்டன் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

http://www.tamilnaatham.com/tharisanam20071126.htm

  • 4 months later...
  • தொடங்கியவர்

தரிசனம் நிப்பாட்டிப்போட்டினமா?? வானவில் மட்டும் தெரியுது... :wub:

தரிசனம் நிப்பாட்டிப்போட்டினமா?? வானவில் மட்டும் தெரியுது... :wub:

ம்ம்...வானவில்லாவது தெரியுது என்று சந்தோசபடுங்கோ வசி அண்ணா :lol: ...இன்னும் கொஞ்சத்தால அமாவாசையே வர போகுது பாருங்கோ :lol: ..(நிசமா என்னால முடியல்ல :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வசி பிடிக்காத ஒரு தொலைக்காட்சி சேவையை விட்டு விட்டு அடுத்த தெரிவுக்கு போகலாமே. தொலைகாட்சி சேவைக்கா லண்டனில் பஞ்சம்?

  • தொடங்கியவர்

பிடிச்சதாலதான் இந்த திட்டு... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் நாளை வரும் என்று அறிவித்ததிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் நாளை வரும் என்று அறிவித்ததிருக்கிறார்கள்

அப்ப இண்டைக்கு லீவோ? :wub::lol::lol:

நான் யூரோ ரிவிக்கு மாறீட்டன் அப்ப நீங்க??? :wub:

:lol::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் வரவில்லை எண்டவுடனே நினைச்சுட்டேன். இழுத்து மூடிட்டுங்களோ எண்டு.

நாளையாவது வருமா?

இன்று வராது எண்டு முன்னறிவித்தல் சரி கொடுத்து இருக்கலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.