Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றுக்கணக்கில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறிலங்காவில் திடீர் கைது- தனி முகாமில் அடைக்க மகிந்த உத்தரவு- உறவுகளின் கதறலைக் கேட்கவும் மகிந்த மறுப்பு!

Featured Replies

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நிகழும் வகை தொகையற்ற கைதுகளுக்கு எதிராக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிளர்ந்தெழுமாறு மேலக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பல இடங்களிலும் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் அனைவரும் பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

மலையகத் தமிழ்ர்களைக்கூட விட்டுவைக்கவில்லை இந்த அரசாங்கம்

இனியாவது இந்திய அரசு இலங்கைக்கு நியாயமான பதிலைக் கூறுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசின் உயர்பீடத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு அனுப்பியதாக கொட்டாஞ்சேனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நிரஞ்சல அபேவர்தன தெரிவித்தார்.

ஏதாவது ஒரு சம்பவத்தை சாட்டி பிந்துவல கொலைகள்,வெலிகட,பூசா கொலைகள் மாதிரி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

  • கருத்துக்கள உறவுகள்

முத்து சிவலிங்கத்தைத் திட்டியதற்காக பொய் ரோஷம் காட்டிய எலும்புத்துண்டு பொறுக்கிகள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்களாம்? மூன்றாம் பட்ஜெட் வாசிப்பில் வாக்களிக்க வேறென்ன எச்சியிலைகளைக் கேட்கலாம் என ஹில்ரனில் றூம் போட்டு ஆலோசிக்கிறார்களாமா?

  • தொடங்கியவர்

சிறிலங்கா காவல்துறையினரும், முப்படையினரும் அடாவடித்தனமான கைதுகளை மேற்கொள்வதாக சிறிலங்காவின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழர்களுக்கு இது கஷ்டந்தரும் காலமா? எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் உருவாகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும் நாம் அரசாங்கத்துக்கு வரவு செலவுத் திட்டம் போன்றவற்றுக்கு ஆதரவு அளிப்போம். இல்லையென்றால் எமக்கு எழும்புத் துண்டுகள் கிடையாது.

  • தொடங்கியவர்

பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூசா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கிடைத்த எலும்புத்துண்டுகளை புதைத்து வைக்கவே நேரம் காணாது. :)

தமிழனுக்குத் தனிநாடு உருவாக்கப்படவில்லை என்றால் உள்ள இடமெல்லாம் தமிழன் வாழ்வு உருக்குலைக்கப்படும். எல்லா இடத்திலும் தமிழனுக்கு இன்னல் என்றால் எந்த நாட்டுத் தமிழன் மற்றைய நாட்டுத் தமிழனுக்கு உதவமுடியும்? இது தீர்வெழுதவேண்டிய காலம் அதுதான் எல்லா இடத்திலும் கொந்தளிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தீர்க்கமான முடிவினை எடுக்கும் நிலையினை மலையக இளைஞர் யுவதிகளின் கைது ஏற்படுத்தியுள்ளது ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமைச்சர் சந்திரசேகரன் கடிதம்

வீரகேசரி நாளேடு

நூற்றுக்கணக்கான மலையக இளைஞர், யுவதிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையும் கொழும்பில் நடைபெறும் வீதி சோதனைகளில் ஆயிரக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் மலையக மக்கள் முன்னணிக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்ருமான பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பில் இன்று நடைபெற்றுவரும் கடுமையான வீதி சோதனைகளினாலும் கண்மூடித்தனமான கைதுகளினாலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.

தமது தொழிலின் நிமித்தம் கொழும்பு நகரில் தஞ்சம் அடைந்துள்ள நூற்றுக்கணக்கான மலையக இளைஞர், யுவதிகள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நடவடிக்கைகளினால் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பிற்குள்ளாகியிருப்பத

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத அரசை நக்கிப் பிழைக்கும் இந்த கீழ்த்தரமான அரசியல் வாதிகளின் பேச்சைக் கேற்பதற்கும் இன்னும் ஆட்கள் உள்ளபடியால்தான் இந்த அறிக்கையெல்லாம் வந்துகொண்டிருக்கிறது.

இவர்களே மாதம் தோறும் அவ்சரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக் வாக்களிப்பார்களாம், பின்னர் அரசாங்கத்திற்கெதிராக அறிக்கையும் விடுவார்களாம்.

பறத் தமிழர்கள் என்று பசில் ராஜபக்சவிடம் மரியாதை பெற்ற பின் இனி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம், நாங்கள் ரோசமுள்ள தமிழர்கள் என்று அறிக்கை விட்டு விட்டு ரெண்டாம் நாளே "எமக்கும் அரசுக்கும் இருந்த கருத்து முரண்பாடு நீங்கி விட்டது" என்று கூறிக்கொண்டு அரசின் காலடியில் போய் விழுந்த வீரப்ருஷர்கள் அல்லவா?

தொண்டமான், சந்திரசேகரன் போன்ற தமது சமூகத்தையே ஏமாற்றிப் பிழைக்கும் மூன்றாம் தர இழிவு அரசியல்வாதிகளின் வெற்று வேட்டு அறிக்கைகள் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஆனாலும் இந்த கோடரிக்காம்புகளால் முண்டு கொடுக்கப்படும் ஒரு இன வெறி பிடித்த அரசினால் அநியாயமாக கொன்று குவிக்கப்படும் ஒரு இனம் என்ற வகையில் பேசாமலும் இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமைகாத்தது போதும். இனியாவது சிங்களத்திற்கு மரணடி கொடுக்க வேண்டும். விரைவில் எமக்கொரு நாடு உருவாக்க வேண்டும்.

அச்சோ...அச்சோ...

அவசரகால சட்டம் எண்டால் வடக்கு-கிழக்கு மக்களுக்கு எதிரானது என்று நினைச்சே ஆதரிச்சு வோட்டு போட்டவையள் :unsure:

இந்த நிலைமை கெதியில JVP க்கும் வரும்

தமிழ்ப்பேசும் மக்களைக் கண் மூடித்தனமாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கும் மஹிந்த அர சின் போக்கால் மலையகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்ப தாக ஒப்புக்கொண்டிருக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவரது அமைச்சு இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பின் இது குறித்து பிரஸ்தாபிக்கபக் பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

மலையகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது கொழும்பில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றுவரும் கடுமை யான வீதிச் சோதனைகளினாலும் கண்மூடித்தனமான கைதுகளினா லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.

தமது தொழிலின் நிமித்தம் கொழும்பு நகரில் தஞ்சம் அடைந்துள்ள நூற்றுக் கணக்கான மலையக இளைஞர், யுவதிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நடவடிக்கைகளினால் அப் பாவி தோட்டத் தொழிலாளர்களின் குடும் பங்கள் நேரடியாகப் பாதிப்பிற்குள்ளாகி யிருப்பதோடு இந்த நிகழ்வு மலையக மெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.

மலையக மக்கள் முன்னணி, இந்த அரசின் ஓர் அங்கமாக இருந்துக்கொண்டு இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத நெருக்கடிக்குள்ளாகியிருக் கின்றது.

தற்போதைய சம்பவங்களை ஒட்டி மலையக மக்கள் முன்னணியின் அரசி யல் நிலைப்பாட்டையும் மீள் பரிசீலனை செய்யவேண்டுமென கட்சியின் சகல மட்டத்திலிருந்தும் எமக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகின்றது.

அரசுக்கு எதிரான

நடவடிக்கையில் இறங்கலாம்

எனவே உடனடியாக அப்பாவி பொது மக்களை விடுதலை செய்யாவிட் டால் மலையக மக்கள் இந்த அரசுக்கு தமது எதிர்ப்பை காட்டுவதற்காக எந்த நடவடிக்கையிலும் இறங்கலாம் என்ற சூழல் ஏற்பட்டு வருவதை அதிர்ச்சி யோடு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றோம்.

மலையகம் எங்கும் ஏற்பட்டுவரும் கொந்தளிப்பைத் தவிர்ப்பதற்காக தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக் கவேண்டுமென வலியுறுத்திக் கேட் டுக் கொள்கின்றோம்.

மலையக மக்கள் பாதிப்பிற்கு உள் ளாகின்றமையை பற்றி அரசு தரப்பில் ஏதாவது ஆக்க பூர்வமான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாம் அரசுக்குள் ஓர் அங்கமாக இருப் பது பற்றி தீவிரமாக தீர்மானம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற் படும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். என் றும் ுறிப்பிட்டுள்ளார்

எனத் தெரி விக்கப்பட்டிருக்கின்றது

uthayanpmuz6.gif

  • கருத்துக்கள உறவுகள்

கைதான மலையக இளைஞர், யுவதிகளை விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த உத்தரவு இ.தொ.கா., ம.ம.மு. தலைவர்கள் தகவல்

வீரகேசரி நாளேடு

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட மலையக இளைஞர், யுவதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் அறிவித்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரும் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினர். இப்பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இருகட்சிகளின் பிரதிநிதிகளும் இவ்வாறு தெரிவித்தனர்.

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவையும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாயராஜபக்ஷ உட்பட அதிகாரிகளை இ.தொ.கா. குழுவினர் சந்தித்தனர். இச்சந்திப்பினையடுத்து கட்சியின் தலைமையகமான சௌமியபவனின் செய்தியாளர் மாநாடொன்றினை இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கம், செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், பிரதிஅமைச்சர் எம். சச்சிதானந்தன் ஆகியோர் நடத்தினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கைகளில் கைதான மலையக இளைஞர், யுவதிகள் அனைவரையும், விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கைது செய்யப்பட்ட வடபகுதி மக்கள் விடுதலை தொடர்பாகவும் இதற்காக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

நுகேகொடை குண்டுவெடிப்பிற்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுவ சுற்றுப்புறங்களிலும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர், யுவதிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டேõம். இதற்கமைய நேற்று நண்பகல் 12.30 மணிக்குள் 150 பேர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் விடுதலை செய்யப்படவுள்ளார்கள். இ.தொ.கா. குழுவினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சந்தித்து அவர்களது விடுதலை தொடர்பாகவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இதேநேரம் கைது செய்யப்பட்டுள்ள வடகிழக்கு அப்பாவிமக்கள் விடுதலை செய்யப்படவேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். நாட்டின் பாதுகாப்பிற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆனால் அப்பாவி மக்கள் நெருக்கடிக்குள்ளாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

:):( இதே சந்திரசேகரந்தான் மகிந்தவின் கைதுகளுக்கு வக்காலத்து வாங்கியிருப்பதுடன், மக்களையும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அனால் இனரீதியான கைதுகளை மட்டுமே அவர் எதிர்ப்பாராம் !

இதைப் பார்க்கும்போது, 1988 இல், இந்திய ராணுவம் ஈழத்தில் பாரிய தமிழ்ப் படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து அன்றய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், வெற்றிமாலை எனும் இந்திய ராணுவ வானொலியூடாக தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அது என்னவெனில், " தமிழ் மக்களின் விடுதலைக்காக தியாகத்துடன் போராடி வரும் இந்திய ராணுவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டுமென்றும், அவர்களுக்குத் தேவையானவற்றை மக்கள் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கிறேன்"

இவர்களை நம்பிய, இன்றும் நம்புகின்ற மக்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது !!!

  • கருத்துக்கள உறவுகள்

வோட்டுப் போட்டு இன்னும் இதுகளப் பார்லிமென்ற் அனுப்புற மலையக மக்களைத் தான் செருப்பால அடிக்கோணும். வடக்கு கிழக்கில இப்படி ஒருவர் இருந்தால் எப்போதோ விளக்குமாறு பார்த்திருப்பார்கள் (ஜெயலத் ஜெயவர்தனவை நினைவிருக்குத் தானே?)

  • கருத்துக்கள உறவுகள்
:) மலயக மக்களை எதுவுமே படிக்க விடாமல், அவர்களை மூடர்களாக்கி கொழும்பில் தேனீர் கடைகளி தொழிலுக்கு அனுப்பி அதிலிருந்து அவர்களுக்கு வரும் சொற்பக் காசில் கட்சி சந்தாப் பணம் என்று ஒரு பெரிய தொகையை அறவிட்டு அவர்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஆறுமுகம் தொண்டமானும் சரி, சந்திரசேகரனும் சரி ஒருபோதுமே அம்மக்கள் பற்றி கவலைப் பட்டது கிடையாது. இம்மக்கள் மூடர்களாயிருப்பதால்தான் இம்மாதிரியான சமூக விரோதிகள் அரசியலுக்கு வரக்கூடியதாக இருக்கிறது. இன்றும் குதிரை லாயங்களில் வாழ்ந்து அவதிப்படும் இம்மக்கள் இந்த கொள்ளைக்கூட்டத்தை நம்பி நம்பியே ஏமாந்து போகிறது. இவர்கள் தமது சொந்த அரசியல் வாதிகளாலும், இந்தியாவாலும், இலங்கையாலும் கைவிடப்பட்ட ஒரு அநாதைக் கூட்டம். பாவம்...!!!
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அடுத்த கட்ட வாக்களிப்புக்கு தொண்டமான்,சந்திரசேகரன் போன்றோருக்கு ஒரு வெருட்டு கொடுத்து தங்களுக்கு வாக்களிக்க பண்ணும் தந்திரம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தமிழர்கள் கைது: வைகோ கண்டனம்

சென்னை: இலங்கையில் தேடுதல் வேட்டை, விசாரணை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. எந்தவிதக் காரணமும் இல்லாமல் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.

தமிழர்களின் மனதில் பயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இலங்கைக்கு பெருமளவில் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு அங்கு நடப்பதைக் கண்டும் காணாமல் இருக்கிறது இந்திய அரசு. இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கைது செய்து வரும் இலங்கை அரசின் உண்மையான நோக்கம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கொழும்பு சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். இதற்காக தூதரக ரீதியிலான முயற்சிகளை அது மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.

- தட்ஸ் தமிழ்

கடந்த மூன்று தினங்களாகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களையும் பூஸா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நானூறுக்கும் அதிகமான தமிழர்களையும் இயன்ற விரைவில் கட்டம் கட்டமாக விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருக்கின்றார் என மலையக மக்கள் முன்னணி நேற்று அறிவித்தது.

அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகக் கட்சியின் தகவல் செயலாளர் விடுத்த பத்திரிகைக் குறிப்பிலும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன், பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன், நிதிச் செயலாளர் சரத் அத்துக்கோறளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கைது செய்யப்படுவோரின் உண்மை நிலைமை குறித்தும் அவர்கள் எந்தவிதப் பயங்கரவாதச் சம்பவங்களுடனும் தொடர்பற்றவர்கள் என்பதையும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைமை உறுதிப்படுத்தினால் அத்தகையோரை உடன் விடுவிக்கவும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார் என்றும் கூறப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பொலிஸ்மா அதிபர் விக்டர்பெரேரா, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கே.என்.இலங்கக்கோன், கொழும்பு மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் மெதிவக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.uthayanpmuz6.gif

கடந்த சில நாள்களாகக் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் மலைய கத்திலும் அரச பாதுகாப்புத் துறை யினர் மேற்கொண்ட கைதுக் கொடூரத்தின் போது பிடிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர் களை அவர்கள் மலையகத் தமிழர்கள் என அடையாளம் காணப்படுமிடத்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி அளித்திருக்கின்றார்.

நேற்று ஜனாதிபதியை இ.தொ. காங்கிரஸின் எம்.பிக்கள் நேரில் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கின்றது.

நேற்று இ.தொ.காவின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமா னும் அக்கட்சியின் தேசிய அமைப்பா ளரான ஆர்.யோகராஜனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினர்.

பின்னர் அவர்கள், பிரதி அமைச் சர்கள் முத்து சிவலிங்கம், செல்லச் சாமி, சச்சிதானந்தன் மற்றும் ஜெகதீஸ் வரன் எம்.பி ஆகியோரைக் கூட்டிச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

கைதான மலையக இளைஞர், யுவதிகளின் உறவினர்கள் இருபது பேரையும் அவர்கள் தம்முடன் அழைத் துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மலையகத் தமிழர்களை விடுவிக்கத் தாம் உடன் நடவடிக்கை எடுப்பார் என ஜனாதிபதி அப்போது உறுதியளித்தார் என்று தெரியவந்தது.

ஜனாதிபதியிடம் இருந்து

வந்த கருத்து

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டபோது, நீங்கள் மலையகத் தமிழர்களின் பிரச்சினை யைப் பாருங்கள் என்ற சாரப்படவும், கைதான வடக்கு, கிழக்குத் தமிழர்கள் முறையான விசாரணைகளின் பின் னர் விடுவிக்கப்படுவர் என்ற கருத் திலும் ஜனாதிபதியின் பதில் அமைந் ததாகத் தெரியவருகின்றது.

அத்துடன், கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையகத் தமிழர் கள் தொடர்பாகவும் அவர்கள் அப்பாவி கள் என்பதையும் இ.தொ.கா. தலைமை தனிப்பட்ட முறையில் உறுதியளித் தால் அத்தகையோரை உடன் விடு விக்க நடவடிக்கை எடுக்கும்படி சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனா திபதி பணிப்புரை விடுக்க இணங்கி னார் என்றும் தெரியவந்தது.

uthayanpmuz6.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன் தலைமையிலான குழு பூசா முகாமுக்கு நேற்று விஜயம் 60 மலையக இளைஞர் யுவதிகள் விடுதலை

வீரகேசரி நாளேடு

தேடுதலின் போது கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர் யுவதிகளில் 60 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து மலையக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து சந்தேகமற்ற மலையக இளைஞர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிணங்கவே 60 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மேலும் 81 மலையக இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை பூசா முகாமுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன் பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர் யுவதிகளை பார்வையிட்டனர். அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் 141 பேரை மட்டுமே இவர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் மலையக இளைஞர் யுவதிகளின் விடுதலை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து இ.தொ.கா. வின் தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் தெரிவித்ததாவது:

பூசாமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நாம் பார்வையிட்டோம். அவர்களின் விடுதலை குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று (நேற்று) 17 யுவதிகள் உட்பட 60 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 81 பேர் நாளை (இன்று) விடுவிக்கப்படுவர். ஏனையவர்களையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.