Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனோ கணேசன் தன்னுடைய உயிரை துட்ஷமாக நினைத்து தமிழருக்காக தழிழருடைய உரிமைக்காக போராடுகின்ற ஒரு உன்னதமான மனிதர். அவர் அரசியல் வாதி என்றதுக்கும் மேலாக உணர்வுள்ள உண்மைத் தழிழன் சிங்கத்தின் குகைக்குள் இருந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைக்காக அற்பணிப்புடன் போராட்டங்களை நடத்திவருபவர் பல வெளியுலக ராஜதந்திரிகளிடம் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை துணிவுடன் எடுத்துக்கூறிவருகின்றார் ஒவ்வொரு தடவையும் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்த்து வாக்களிப்பவர் 2008 பாதீட்டை எதிர்த்து வாக்களித்தவர்.

வீணாப் போன முரளிக்கு பாராட்டு தெரிவிப்பதை நியாயப்படுத்தவதற்காக மனோ கணேசனை உதாரணம் காட்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் மலையக கட்சிகளுடன் மனோ கணேசனை ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது அவர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் வாழும் தழிழருக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

Edited by அருண்

  • Replies 116
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழர்கள்

அடிமைகளாக வாழ்ந்த போது

நம்மவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

அவர்களது வாக்குகள் பறிக்கப்பட நம்மவரே காரணமாக இருந்தார்கள்.

இப்படியே எவ்வளவு காலதிற்கு தான் காலம் தள்ள போறோம் :)

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம நாட்டு வீரன் ஷேன் வோர்னின்ட ரெக்கோர்ட்டை முறியடித்தது சரியான துக்கமாக இருகிறது சிறிலங்கா தமிழர்கள் எல்லாம் சந்தோசபடுகிறார்கள் போல் தெரிகிறது இதில் ஈழ புகழ்பாடுபவர்களும் சந்தோசபடுவது போல் தெரிகிறது அது சரி விளையாட்டு வேறு அரசியல் வேறு தான் இப்படி ஒவ்வொரு மாவீரனும் தன்னுயிர் வேறு தமீழீழம் வேறு என்று நினைத்திருந்தால் இன்று புலத்தில் மாவீரர் தினத்தன்று மேடையில் மாவீரர் புகழ் பாட உங்களாள் முடியாம இருந்திருக்கும்.அந்த மாவீரர்கள் தமிழும் தம்முயிரும் ஒன்று என்று நினைத்தபடியா தான் அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.ஆனால் அவர்களின் புகழை பாடி கொண்டு இங்கு நீங்கள் பாரட்டுதெரிவிப்பது அவர்களை கொச்சபடுத்துவதிற்கு சமன்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற (பிரித்தானிய அடிமைகளின்) விளையாட்டில் முரளிரரன் புகழ் பெற்று இருப்பதை வைத்து கொண்டு சிங்கள அரசு நல்லாகவே அரசியல் இலாபம் சர்வதேசமட்டத்தில் சம்பாதிக்கின்றது,இவரை வாழ்த்து பாடுவதும் ஒன்று தான் கருணாவை வாழ்த்தி பாடுவதும் ஒன்று தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

முரளியை தமிழர் என்று பாராட்ட நினைத்தாலும், அவர் விளையாடும் அணி வாளை ஏந்தும் சிங்கத்தினைக் கொண்ட அணி. தமிழர்களைக் கொல்வதற்காக வாளை ஏந்தும் சிங்களவனின் அணி. அதனால் என்னால் பாராட்ட முடியாமல் இருக்கிறது.

தமிழன் என்று யாரையும் வாழ்த்தாதையுங்கோ எவன் அநியாயதிற்கு எதிரா வாதாடுகிறானோ போராடுகிறானோ அவனை வாழ்த்துங்கோ இது எப்படி இருக்கு கந்தப்பு :)

இந்தக் கைதுகள் தொடர்பாக

விடுதலைப் புலிகள் தரப்பில் ஏதாவது கண்டனம் வந்திருக்கிறதா?

இங்கு பேசுவோர் எவருமே

சிறீலங்காவின் அடையாள அட்டை

பாஸ்போட் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாமல் வந்தவர்கள்?

அங்கு போய் திருமணம் செய்து

வந்தவர்கள் கூட நீந்தித்தான் வந்தார்கள்?

சும்மா போங்கப்பா?

சிறீலங்காவில பிரச்சனை எண்டு வந்துதானே

இங்க இருக்கிறம்.

என்ன தமழீழத்தில பிரச்சனை என்றா?

தமிழீழம் கிடைக்கும் வரை

அதை தூக்கி எறிந்து விட்டு

எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாது.

அப்பிடி இல்லை என்றால்

நீங்கள் சொல்வது எல்லாம் சரியப்பா?

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :)

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :(

Edited by AJeevan

முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்றுவிட்டார். சிங்களவர்கள் மகிழ்ச்சியில் துள்ளல். சிங்களதேசத்தில் சிங்களவர்கள் வெடிகள் கொளுத்தி மகிழ்கிறார்கள். மகிந்தா விரைவில் வாழ்த்துச் செய்தியை சொல்ல இருக்கிறார். என்னால் முரளிதரன் தமிழராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல மனம் விரும்பவில்லை. எமது மண்ணில் தினமும் கொல்லப்படும் சகோதர சகோதரிகளை நினைக்கவே மனம் செல்கிறது.

அப்புறம் இந்த விடயத்தை ஏன் யாழ்க்களத்தில் கொண்டு வந்து இணைத்தீர்கள்??

சுயதம்பட்டம் அடிக்கவா??

அட நம்ம நாட்டு வீரன் ஷேன் வோர்னின்ட ரெக்கோர்ட்டை முறியடித்தது சரியான துக்கமாக இருகிறது சிறிலங்கா தமிழர்கள் எல்லாம் சந்தோசபடுகிறார்கள் போல் தெரிகிறது இதில் ஈழ புகழ்பாடுபவர்களும் சந்தோசபடுவது போல் தெரிகிறது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற (பிரித்தானிய அடிமைகளின்) விளையாட்டில் முரளிரரன் புகழ் பெற்று இருப்பதை வைத்து கொண்டு சிங்கள அரசு நல்லாகவே அரசியல் இலாபம் சர்வதேசமட்டத்தில் சம்பாதிக்கின்றது,இவரை வாழ்த்து பாடுவதும் ஒன்று தான் கருணாவை வாழ்த்தி பாடுவதும் ஒன்று தான். :(

தமிழன் என்று யாரையும் வாழ்த்தாதையுங்கோ எவன் அநியாயதிற்கு எதிரா வாதாடுகிறானோ போராடுகிறானோ அவனை வாழ்த்துங்கோ இது எப்படி இருக்கு கந்தப்பு :)

மேலேயுள்ள இரு விடயங்களும் எப்படி ஒன்றுக்கொன்று முரன்படுகின்றது என்பது கூட எழுதிய புத்தனுக்கு புரிகின்றதா தெரியவில்லை. சேன் வார்ணேயின் சாதனை முரளியால் முறியடிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் புத்தன், சேன் வார்ணே நமது போராட்டத்திற்கு என்ன செய்தார் நீங்கள் கவலைப்படுமளவிற்கு.

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

இந்தக் கைதுகள் தொடர்பாக

விடுதலைப் புலிகள் தரப்பில் ஏதாவது கண்டனம் வந்திருக்கிறதா?

இங்கு பேசுவோர் எவருமே

சிறீலங்காவின் அடையாள அட்டை

பாஸ்போட் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாமல் வந்தவர்கள்?

அங்கு போய் திருமணம் செய்து

வந்தவர்கள் கூட நீந்தித்தான் வந்தார்கள்?

சும்மா போங்கப்பா?

சிறீலங்காவில பிரச்சனை எண்டு வந்துதானே

இங்க இருக்கிறம்.

என்ன தமழீழத்தில பிரச்சனை என்றா?

தமிழீழம் கிடைக்கும் வரை

அதை தூக்கி எறிந்து விட்டு

எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாது.

அப்பிடி இல்லை என்றால்

நீங்கள் சொல்வது எல்லாம் சரியப்பா?

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :)

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :(

அட நீங்களொன்று வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்போம் என்றும் கோசம் போடுவோம். பின்பு தமிழ்மக்களுக்கு அரசு ஒன்றும் அனுப்பவில்லையென்றும் கோசம் போடுவோம்.

:D இரண்டையும் வைத்து எவரும் குளம்பி விடக்கூடாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எத்தனை பேர் பேராதனை மொரட்டுவ கொழும்பு களனி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்குப் போய் படிக்கினம். தமிழாக்கள். சிங்களவன் படிப்பிக்கிறான் நான் தமிழீழம் பிறந்து அதில உருவாகிற யுனிலதான் படிப்பன் என்று எவராவது இருக்கினமா..??! புலிகள் கூட எல்லோரும் தமிழீழம் பிறக்கும் வரை தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டாம் என்று மறுக்கிறார்களா..??! இல்லையே.

எதிரியின் வளங்களைப் பயன்படுத்தி எமது போராட்டத்தை வளர்க்கிறது தவறான நடவடிக்கை அன்று. எதிரியின் வளங்களைப் பயன்படுத்தி போராடும் மக்களை வளப்படுத்திறதும் தவறான நடவடிக்கை அன்று. புலம்பெயர்ந்து இருந்து கொண்டு அவையவை தங்கட பிள்ளைகளுக்கு வசதியான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறவை எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளைப் போராட ஈழத்துக்கு அனுப்பி இருக்கினம்.

சிங்களத்தின் பாரபட்சமா அணுகுமுறைக்குள்ளும் வெள்ளையர்களின் மட்டந்தட்டலுக்குள்ளும் போராடி சளைக்காமல் வென்றவன் முரளி. அவனுக்குரிய சூழலுக்கு ஏற்ப அவன் தன்னை இசைவாக்கிக் கொண்டிருக்காவிட்டால் விளையாட்டில் சாதித்திருக்க முடியாது. முரளியின் கிரிக்கெட் கொள்கை தமிழீழமோ தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை நடத்திறதோ அல்ல. கருணா டக்ளஸ் சங்கரி அரசியல்வாதிகள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு மக்களின் பிரதிநிதிகள் என்று கொண்டு மக்களை அழிப்பவர்கள். முரளி தனிமனிதனாக தான் தேர்ந்தெடுத்த விளையாட்டில் விளையாட்டுக்கான சாதனையைப் புரிபவன். அது மக்களின் உரிமையோ மக்களின் கொள்கைகளையோ பாதிக்கப்போவதில்லை.

சிங்களவர்கள் ஒரு முரளியை அடையாளம் காட்டி அவன் தமிழன் என்று சொல்லும் போது நீங்கள் சிங்களவர்களிடம் கேட்க வேண்டியதுதானே. அவன் ஒருவன் தானா தமிழன். அணியில் முரளிக்குப் பிறகு எத்தனை தமிழர்கள் இடம்பிடித்தார்கள் என்று. எதிரியின் பிரச்சாரத்தை பிரச்சார வழிமுறைகளில் முறியடிக்க முனையனுமே தவிர முரளியை துரோகி ஆக்கி விளையாட்டையும் விளையாட்டு வீரனையும் கேவலப்படுத்துவது அநாகரிகமான செயல்.

சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்ற முரளிக்கு விடுதலைப்புலிகள் கூட வரவேற்பளித்திருந்ததும் அவரும் காவல்துறையினர் என்று தமிழீழக் கட்டுமான அமைப்புக்களோடு படங்கள் எடுத்து அதைப் பிரபல்யப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அருமையாக சொன்னீர்கள் நெடுக்கு :unsure:

நல்ல கருத்துகள் நெடுகஸ்.

நன்றி!

சிங்களவர்கள் ஒரு முரளியை அடையாளம் காட்டி அவன் தமிழன் என்று சொல்லும் போது நீங்கள் சிங்களவர்களிடம் கேட்க வேண்டியதுதானே. அவன் ஒருவன் தானா தமிழன். அணியில் முரளிக்குப் பிறகு எத்தனை தமிழர்கள் இடம்பிடித்தார்கள் என்று. எதிரியின் பிரச்சாரத்தை பிரச்சார வழிமுறைகளில் முறியடிக்க முனையனுமே தவிர முரளியை துரோகி ஆக்கி விளையாட்டையும் விளையாட்டு வீரனையும் கேவலப்படுத்துவது அநாகரிகமான செயல்.

எவ்வளவோ செய்யிறம் இதைச் செய்ய முடியாதா என்ன??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தியத்தேவனின் அறியாமைக்காக முரளிக்கு தமிழ் தெரியாதென்று ஆகிவிடுமா?? ஏதோ எழுத வேண்டுமென்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா??

கந்தப்பு நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது உங்களுக்கே தெளிவில்லை. தமிழனாக பிறந்ததினால் சிங்களஇனம் பலரை ஒதுக்கியது போல் முரளியையும் ஒதுக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் முரளியின் தனிப்பட்ட திறைமை தான் அவரை அணியில் மீளச் சேர்க்க வைத்ததையும் ஒத்துக் கொளன்கின்றீர்கள். அப்டியிருக்க முரளியை தமிழர்களாகிய நாமும் ஒதுக்க நினைப்பதற்கு உங்கள் வலுவான காரணம் ஒன்றுமில்லை.

இங்கே நாம் பாராட்டுவது முரளியென்ற தமிழனின் தனிப்பெரும் சாதனையைத் தான். அவர் யாருக்காக விளையாடுகின்றார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

இப்படியே எங்களுக்குள்ளேயே பாகுபாடுகளை வளர்த்து பிரிந்தபட்டு வாழ்வதனால்த்தான், உலகமும் எம்மை ஒதுக்கும் உண்மைகளை என்று உணரப் போகின்றீர்களோ??

அண்ணே வசம்பு

அப்படியென்றால் ஏன் இதுவரை சிங்களம் முரளிக்கு தலைமைப் பதவியோ, அல்லது உதவித் தலைவர் பதவியோ கொடுக்கவில்லை,.

சமிந்த வாஸ்சுக்கு உப தலைவர் பதவிகொடுத்துவிட்டு ஒரு மேட்சுடன் பறித்துவிட்டார்கள் ஏனென்றால் அவர் சிங்கள கிறிஸ்தவர். முரளி இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்ததற்க்கு கம்பன் கழகம் நடத்திய பாராட்டுவிழாவில் முரளி எந்த மொழியிலும் நன்றி சொல்ல வில்லை. ஒரு வார்த்தை பேசவில்லை.

முரளியின் சாதனையில் பல விக்கெட்டுகள் அவரின் வாயால் வீழ்த்தப்பட்டவை எத்தனையோ எல்விடவுள்யூவல் முரளி வாய் கிழியக் கத்தி வீழ்த்திய விக்கெட்டுகளே. அதிலும் முன்னர் டெஸ்ட் மேட்சுகளில் முரளி ஸ்ரீ லங்கன் அம்பயர் நிற்க்கும் பக்கத்தில் இருந்துதான் போல் போடுவார். இப்பொழுது டெஸ்ட் மேட்சில் நியூட்ரல் அம்பயர்ஸ் என்றபடியால் பரவாயில்லை. ஒரு நாள் ஆட்டத்தில் பாருங்கள் முரளி எந்தப் பக்கத்தில் இருந்து பந்துவீசுவார் என்பதை,

தம்பீபீ வந்தியத்தேவா

சிங்களஅரசு அவர் தமிழன் என்பதற்காகவும் அவருக்கு அணித்தலைவன் பதவி கொடுக்காமல் விட்டிருக்கலாம். அதை விட ஒருவர் சிறந்த சுழல் பந்துவீச்சாளர் என்பதற்காகவோ அல்லது சிறந்த துடுப்பாட்ட வீரரென்பதற்காகவோ அணித்தலைவன் பதவி கொடுக்கப்படுவதில்லை. அதில் ஏனைய வீரர்களை அரவணைத்து வேலை வாங்கும் திறைமைகள் போன்ற பலவற்றைப் பார்க்கின்றார்கள். அத்துடன் அணித்தலைமைப் பொறுப்பிலுள்ள வேலைப்பழுவால் அவரது தனித்திறைமையை சுதந்திரமாக காட்ட முடியாமலும் போகும் வாய்ப்பு அதிகம்.

ஒருவர் ஒரு பாராட்டுவிழாவில் எந்த மொழியிலும் நன்றியுரை ஆற்றவில்லை என்றால் அவருக்கு தமிழ் தெரியவில்லையென்றா அர்த்தம். நல்லவேளை அவர் ஊமை என்று சொல்லாமல் விட்டீர்கள்.

முரளியின் சாதனைகளை அவரது போட்டியாளராகிய சேன் வார்ணே உட்பட அகில உலகமுமே ஏற்றுக் கொண்டு வாழ்த்தும் போது உங்களுக்கேன் எரிகின்றது என்பது தான் எனக்கும் புரியவில்லை.

ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

நீங்கள் சொல்வதுதான் சரி முரளி விக்கெட் எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன தன்னைத் தமிழன் எனச் சொல்ல அவமானம் எனக் கருதும் முரளிக்கு வக்காலத்து வாங்குபவர்களுடன் சண்டை போடுவதைவிட சும்மா இருப்பதே மேல்.

உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

தம்பீ வந்தியத்தேவா

ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் விதாண்டாவாதம் செய்வதற்காகவே எழுதுகின்றீர்கள். முரளி சமாதான காலத்தில் வன்னிக்கு மட்டுமல்ல யாழ்ப்பாணம் சென்றும் அங்குள்ள மாணவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். அவர் திருமணம் செய்திருப்பதும் சென்னையைச் சேர்ந்த மலர் வைத்தியசாலை உரிமையாளரின் மகளையே. அவர் என்றும் தன்னை ஒரு தமிழன் எனச் சொல்ல வெட்கப்பட்டதில்லை. நீங்கள் தான் புதிது புதிதாக எதையெதையோ எடுத்து விடுகின்றீர்கள். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகத்தைப் பார்க்கின்றீர்கள். கொஞ்சம் :unsure: கண்ணைத் திறந்து :lol: பாருங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அவர்களுக்கு:

அப்படியானால் தமிழீழம் கிடைக்கும் வரை நாம் சிறிலங்காக் கொடியின் கீழ் அணிதிரண்டு நமோ நமோ மாதா பாடுவது தான் நல்ல குடிமகனுக்கு அழகு என்கிறீர்கள்? ஒரு நாடு தன் பிரஜைகளுக்கு பிறப்புச் சான்றிதழும் கடவுச் சீட்டும் கொடுத்தால் அது பெரிய நன்றிக்கடன் செலுத்த வேண்டிய பணியாக உங்களுக்குத் தோன்றுகிறது. இது எல்லாம் தந்த பின்னும் தமிழர்களை விலங்குகள் போல் நடத்துவது உங்கள் கண்களுக்குச் சாதாரணமான விடயமாகவும் தெரிகிறது. புலத் தமிழர்கள் எல்லோரும் அனேகமாக சிறிலங்காவில் இருக்கும் உறவுகளுக்குப் பணம் அனுப்புகிறார்கள். அந்த வெளிநாட்டுப் பணத்தால் சிறிலங்கா அரசுக்கு எவ்வளவு மில்லியன் வருமானம் வருகிறது? அதுவே நம் பிறப்புச் சான்றிதழுக்கும் கடவுச்சீட்டுக்கும் நாம் திருப்பிச் செலுத்தும் அளவுக்கதிகமான கட்டணமாக நான் நினைக்கிறேன். தமிழர்களைப் பிரிந்து போக அனுமதிக்கும் வரை இதையெல்லாம் செய்து தர வேண்டியதும் சிறிலங்காவின் கடமையல்லவா? அதைக் காவுகிறோம் என்பதற்காக நாம் சிறிலங்காவின் உன்னத புதல்வர்கள் புதல்வியர் ஆகி விடுவோமா? அந்த மரியாதை எமக்குத் தரப் படுகிறதா?

வசம்பு: ஏதாவது கருத்துச் சொன்னால் அதற்கு அறிவுபூர்வமான பதில் எழுதுவதை விடுத்து சொகுசாக வாழும் புலத்தமிழர் இப்படிச் சொல்வர் தான் என்கிற வாதம் எவ்வளவு ஆக்க பூர்வமானது என விளங்கவில்லை எனக்கு.இங்கு வந்து எழுதும் புலத்தமிழர்கள் சும்மா வந்து எழுதி விட்டு மட்டும் போகிறார்கள் என்பதில் உண்மையில்லை.அவரவர் நிலையில் நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இங்கு எப்படி அறிக்கையிடப் பட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?உங்களுக்குக் காட்டி ஒரு பங்களிப்புச் சான்றிதழ் வாங்கிய பிறகு தான் அவர்கள் இதையெல்லாம் எழுத வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை உங்களுக்கு? :unsure:

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :unsure:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

Edited by AJeevan

அடப்பாவிகளா! ஒரு தமிழன் துடுப்பாட்டத்தில் இனி யாருமே எட்டமுடியாத சிகரத்தைத் தொட்டுவிட்டு நிற்கின்றான். அவனை வாழ்த்துவதை விட்டு விட்டு வசை பாடுகிறீர்களே!.

அப்படி எமது போராட்டத்திற்கு எதிராக முரளி என்ன செய்து விட்டான்.

புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சத்திற்காக விடுதலைப் புலிகளும் நம்மைக் கொடுமைப் படுத்தீனார்கள் என வாக்குமூலம் கொடுக்கும் நாமெல்லாம் முரளியைப் பற்றிக் கதைப்பதற்கு அருகையுடையவர்களா?

வசம்பு: ஏதாவது கருத்துச் சொன்னால் அதற்கு அறிவுபூர்வமான பதில் எழுதுவதை விடுத்து சொகுசாக வாழும் புலத்தமிழர் இப்படிச் சொல்வர் தான் என்கிற வாதம் எவ்வளவு ஆக்க பூர்வமானது என விளங்கவில்லை எனக்கு.இங்கு வந்து எழுதும் புலத்தமிழர்கள் சும்மா வந்து எழுதி விட்டு மட்டும் போகிறார்கள் என்பதில் உண்மையில்லை.அவரவர் நிலையில் நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இங்கு எப்படி அறிக்கையிடப் பட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?உங்களுக்குக் காட்டி ஒரு பங்களிப்புச் சான்றிதழ் வாங்கிய பிறகு தான் அவர்கள் இதையெல்லாம் எழுத வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை உங்களுக்கு? :unsure:

ஜஸ்டின்

நான் என்னசொல்கின்றேனென்பது உண்மையில் உங்களால் புரிய முடியவில்லையா?? அல்லது புரியாதது போல் கதைக்கின்றீர்களா?? உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம். நல்ல கொள்கை. உங்களால் சிறிலங்காவையோ அது சார்ந்தவற்றையோ முழுவதுமாக புறக்கணிக்க முடிந்தால் சொல்லுங்கள் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கின்றேன். நீங்கள் நித்திரையில் இருந்தால் எழுப்பலாம். ஆனால் நித்திரை போல் நடிக்கும் உங்களை ................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பீ வந்தியத்தேவா

ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் விதாண்டாவாதம் செய்வதற்காகவே எழுதுகின்றீர்கள். முரளி சமாதான காலத்தில் வன்னிக்கு மட்டுமல்ல யாழ்ப்பாணம் சென்றும் அங்குள்ள மாணவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். அவர் திருமணம் செய்திருப்பதும் சென்னையைச் சேர்ந்த மலர் வைத்தியசாலை உரிமையாளரின் மகளையே. அவர் என்றும் தன்னை ஒரு தமிழன் எனச் சொல்ல வெட்கப்பட்டதில்லை. நீங்கள் தான் புதிது புதிதாக எதையெதையோ எடுத்து விடுகின்றீர்கள். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகத்தைப் பார்க்கின்றீர்கள். கொஞ்சம் :unsure: கண்ணைத் திறந்து :lol: பாருங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும்.

அண்ணே நான் பல தடவை முரளிதரனை நேரை சந்தித்துள்ளேன் ஒரு முறை தமிழ் யூனியன் கழகம் அவருக்காக விருந்தளித்தபொழுதும் சென்றுள்ளேன் ஒரு தடவையாவது அவர் தமிழில் வாய் திறக்கவே இல்லை. மலர் மருத்துவமனை மலரை முரளிதரன் திருமணம் செய்தது எத்தனையோ சிங்களவர்களுக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி ஐஸ்லண்ட் மற்றும் திவயின பத்திரிகைகள் மறைமுகமாக கருத்துக்கள் வெளியிட்டன.

அவர் சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றதோ யாழ் சென்றதோ தான் ஏற்றிருந்த உலக உணவு நிறுவனத்தின் பதவிக்காகத் தான்.

ஒரு சின்ன செய்தி முரளியுடன் ஒப்பிடும்போது ரசல் ஆர்னோல்ட் எவ்வளவோ மேல். அவர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு தமிழில் பிரார்த்தனை நடைபேறும் நேரத்தில் தான் கூடுதலாக செல்பவர். தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழில் தான் பேசுவார்.

நீங்கள் முரளிதரனைப் தமிழனாகப் பார்க்கின்றேன் நானோ முரளியை சிங்கள இனவாத அரசின் பிரச்சாரமாகப் பார்க்கின்றேன். இல்லையென்றால் ஜேபிவித் தலைவர் முரளியை வைத்து அரசியல் நடாத்துவது ஏன்? ஜக்கிய தேசியக் கட்சியும் , ஜேவிபியும் முரளீயை பாராளமன்றத்துக்கு அழைப்பது ஏன் ? அவரைக் கெள்ரவிப்பதுடன் சர்வதேசத்துக்கு இதோ பாருங்கள் நாம் தமிழர் ஒருவரைக் கெளரவிக்கின்றோம் எனக் காட்டவே. இந்த அரசியல் சித்து விளையாட்டு உங்களுக்கு ஏன் புரியவில்லை.

முரளி ஒழிக!

சிங்கள அடிவருடியே ஒழிக!!

நீ தமிழனே இல்லை!!!

நீ மலை நாட்டான்!

நீ இந்தியன்!

நீ சிங்களவனுக்கு வால் பிடிப்பவன்!

உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்

ஆனால்

எங்களால் முடியாது.

காரணம்

நாங்கள் மட்டுமே தமிழர்கள்!!!!!!!

நிம்மதியா?

அப்பாடா :unsure::lol::lol:

ஒரு சின்ன செய்தி முரளியுடன் ஒப்பிடும்போது ரசல் ஆர்னோல்ட் எவ்வளவோ மேல். அவர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு தமிழில் பிரார்த்தனை நடைபேறும் நேரத்தில் தான் கூடுதலாக செல்பவர். தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழில் தான் பேசுவார்.

அண்ணை அவரும் தமிழ்பேச பயந்தவர்(விரும்பாதவர்)தான். தெஹிவளையில் ரசல் ஆனல்ட் இருந்த வீட்டிற்கு அருகேதான் இரண்டு ஆண்டுகளாக வசித்தேன். பல முறை அவரைக் கண்டிருக்கிறேன். அவர் ஒருபோதும் தமிழ் பேசியதில்லை. ஆங்கிலத்தில்தான் தமிழர்களுடனும் உரையாடுவார்.

மின்னல்

ஒரு சிங்களவன் வெற்றி வாகை சூடியிருந்தால்

நம்மட ஆக்கள் சந்தோசப்பட்டிருப்பினம்.

ஒரு தமிழன் எல்லே

அதுதான் தாங்க முடியல்லயப்பா? :D

புலத்தில

நம்மட பிள்ளைகள் வென்றாலும்

நாளைக்கு இதே கதிதான்.

நம்மட பிள்ளைகள்

அவங்க வாழுற நாட்டு மொழிதான் அதிகம் பேசுதுகள்.

தமிழ் பேசினா மட்டும்

தமிழன் என்று நினைக்கிறாங்க............

இருந்தாலும் முரளி ஒழிக! :D:lol::D

(நான் கட்சி மாறிட்டேன் . இந்த திட்டல் முரளியின் கால் தூசுக்கு சமன் :):lol::D )

முத்தையா முரளிதரன் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

முரளி ஒழிக!

சிங்கள அடிவருடியே ஒழிக!!

நீ தமிழனே இல்லை!!!

நீ மலை நாட்டான்!

நீ இந்தியன்!

நீ சிங்களவனுக்கு வால் பிடிப்பவன்!

உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்

ஆனால்

எங்களால் முடியாது.

காரணம்

நாங்கள் மட்டுமே தமிழர்கள்!!!!!!!

நிம்மதியா?

அப்பாடா :lol::D:)

அட இன்னொன்றை விட்டுவிட்டீர்கள்

முரளிதரன் 710 விக்கெட்டுக்கள் வீழ்ததியதெல்லாம் சும்மா புருடா ( எரிச்சலுடன்).

யார் என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கவே மாட்டோம்.

அவர் விக்கெட்டுக்களை வீழ்த்தியதை நாம் பார்க்கவேயில்லை.

எம்மால் முடியாததை இன்னொருவர் செய்ததாக சொல்லும் போது ஏற்றுக் கொள்வதா??

அதனால் அதை நாம் ஒத்துக்கவே மாட்டோம். ( எரிச்சலுடன் நற நறவென பற்களைக் கடித்தவாறு) :lol::D:D

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.