Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே பயன் படுத்தப் படுகின்றன, சூழ் நிலையோடு எந்த சம்பந்தமும் இல்லாத போது கூட. ஒரு செய்தி பற்றிக் கருத்துச் சொல்லவும் ஒத்த எதிரான கருத்துக்களைச் செவிமடுக்கவுமே களம் இருக்கிறது. கந்தப்பு அப்படியான ஒரு பதிவையே செய்தார்.அதன் மூலம் அவர் "சுய தம்பட்டம்" அடித்தார் என்கிறார்கள். அவர் தன்னைத் தமிழ் தேசிய ஆர்வலராகக் காட்டிக் கொண்டார் என்பதையே இப்படி மிகைப் படுத்திச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசுவது பல அனுகூலங்களைக் கொண்டுவரும் ஒரு பதவி அல்லது பெருமை என்று வசம்பு போன்றோர் நினைக்கிறார்கள். அது தமிழர்களின் கடமை என்பது என் அபிப்பிராயம். முரளியின் சாதனை விடயத்தில் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற கருத்தாடல் மட்டுமே நடைபெற்றது. ஏதோ கந்தப்புவும் அவரது கருத்துடன் உடன் பட்டோரும் தேர்தலுக்கு நிற்கிற மாதிரியும் பிரச்சாரத்திற்காக முரளியின் சாதனை புறக்கணிப்பைப் பாவித்த மாதிரியும் "அரசியல் ஆதாயம்" என்ற சொல்லை வேறு பாவிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு எதிர்க்கருத்துக்குத் துலங்கல் காட்டும் போது "நீங்கள் தூங்குகிறீர்கள், உங்களுக்குப் பார்வை சரியில்லை" என்று தன் விழிப்பு நிலை பற்றித் தம்பட்டம் அடித்தோர் மிகவும் தன்னடக்கமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். :lol:

Edited by Justin

  • Replies 116
  • Views 14.4k
  • Created
  • Last Reply

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

இல்லையே.ஏனெனில் கதிர்காமர் குலத்தை கெடுத்த கோடரிகாம்பு.தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகி.முரளி யாரை காட்டி கொடுத்தார்? தனது திறமையை காட்டி எவ்வளவோ தடைகளை தாண்டி தான் இந்த சாதனையை சாதிக்க அவரால் முடிந்தது.நினத்து பாருங்கள் அவுஸ்த்ரேலிய இனவாதிகள் ஒரு பக்கம்,சிங்கள இனவாதிகள் மறு பக்கம்.இவ்வளவையும் தாண்டி ஒரு தமிழ் வீரன் சாதனை படைக்கும் போது அவரை பாராட்டாமல் இருப்பது கவலைக்கிடமானது.எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் முரளியை பாராட்டாமல் விடுபவர்கள் இருந்தென்ன விட்டென்ன?

அற்புதமான வரிகள் நுணாவிலான் பாராட்டுக்கள்.

சில சொற்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே பயன் படுத்தப் படுகின்றன, சூழ் நிலையோடு எந்த சம்பந்தமும் இல்லாத போது கூட. ஒரு செய்தி பற்றிக் கருத்துச் சொல்லவும் ஒத்த எதிரான கருத்துக்களைச் செவிமடுக்கவுமே களம் இருக்கிறது. கந்தப்பு அப்படியான ஒரு பதிவையே செய்தார்.அதன் மூலம் அவர் "சுய தம்பட்டம்" அடித்தார் என்கிறார்கள். அவர் தன்னைத் தமிழ் தேசிய ஆர்வலராகக் காட்டிக் கொண்டார் என்பதையே இப்படி மிகைப் படுத்திச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசுவது பல அனுகூலங்களைக் கொண்டுவரும் ஒரு பதவி அல்லது பெருமை என்று வசம்பன் போன்றோர் நினைக்கிறார்கள். அது தமிழர்களின் கடமை என்பது என் அபிப்பிராயம். முரளியின் சாதனை விடயத்தில் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற கருத்தாடல் மட்டுமே நடைபெற்றது. ஏதோ கந்தப்புவும் அவரது கருத்துடன் உடன் பட்டோரும் தேர்தலுக்கு நிற்கிற மாதிரியும் பிரச்சாரத்திற்காக முரளியின் சாதனை புறக்கணிப்பைப் பாவித்த மாதிரியும் "அரசியல் ஆதாயம்" என்ற சொல்லை வேறு பாவிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு எதிர்க்கருத்துக்குத் துலங்கல் காட்டும் போது "நீங்கள் தூங்குகிறீர்கள், உங்களுக்குப் பார்வை சரியில்லை" என்று தன் விழிப்பு நிலை பற்றித் தம்பட்டம் அடித்தோர் மிகவும் தன்னடக்கமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். :(

முதலில் களத்தில் கௌவரமாக கருத்தெழுதக் கற்றுக் கொள்ளுங்கள். கந்தப்புவை நான் சுயதம்பட்டம் அடிப்பதாக எழுதியதற்கு காரணமுண்டு. அவர் களத்தில் புதிதாக தன்னை இணைத்தபோதே 'ஐயகோ தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்புண்டோ" என்று ஏதோ ஆர்ப்பாட்டமாகவே நுழைந்தார். அக்கருத்துப் பக்கத்தை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் நான் எழுதியதன் நியாயம் புரியும். அதே பாணியைத்தான் தொடர்ந்தும் கந்தப்பு கையாண்டு வருகின்றார். மற்றும்படி நீங்கள் தேர்தலில் போட்டியிடுவது போன்ற கற்பனைக் கனவுகள் தேவையற்றது. ஏனெனில் உங்கள் வாக்கே தடுமாற்றத்தில் உங்களுக்கு நீங்கள் போடுவீர்களா என்பதே கேள்விக்குறி ?? அப்படியிருக்க கட்டுப்பணம் ?? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் களத்தில் கௌவரமாக கருத்தெழுதக் கற்றுக் கொள்ளுங்கள். கந்தப்புவை நான் சுயதம்பட்டம் அடிப்பதாக எழுதியதற்கு காரணமுண்டு. அவர் களத்தில் புதிதாக தன்னை இணைத்தபோதே 'ஐயகோ தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்புண்டோ" என்று ஏதோ ஆர்ப்பாட்டமாகவே நுழைந்தார். அக்கருத்துப் பக்கத்தை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் நான் எழுதியதன் நியாயம் புரியும். அதே பாணியைத்தான் தொடர்ந்தும் கந்தப்பு கையாண்டு வருகின்றார். மற்றும்படி நீங்கள் தேர்தலில் போட்டியிடுவது போன்ற கற்பனைக் கனவுகள் தேவையற்றது. ஏனெனில் உங்கள் வாக்கே தடுமாற்றத்தில் உங்களுக்கு நீங்கள் போடுவீர்களா என்பதே கேள்விக்குறி ?? அப்படியிருக்க கட்டுப்பணம் ?? :lol::D

வசம்பு, கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

Edited by Justin

வசம்பன், கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தும் புரிந்து கொள்ள முடியாத அடிப்படைத் தமிழ் அறிவு கூட இல்லாத உங்களுக்கு எதைப் புரிய வைப்பது??

களத்தில் இணையவன் என்றொரு மட்டுறுத்தினர் இருக்கின்றார். அவரிடம் கேளுங்கள் அற்புதமாகப் புரிய வைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பன், கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

ஜஸ்டினும் சரி, யாழ் கள உறுப்பினர்களும் சரி எனது வார்தை பிரயோகங்கள் யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல.எனது ஆதங்கத்தை சொன்னேன்.நான் சொன்ன முறையில் கௌரவம் இல்லை எனில் அது ஏன் என பகிரங்கமாக கூறுமிடத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க என்றைக்குமே தயாராகவுள்ளேன்.ஜஸ்டின் எந்த வகையில் "இருந்தென்ன செத்தென்ன" என்ற வார்த்தை உங்களை பாதித்தது.பாதித்தால் மன்னிக்கவும்.யாரயும் நேரடியாக தாக்க வேண்டுமென்பது அல்ல எனது ஆதங்கம்.மாறாக எனது கருத்து செல்ல வேண்டுமன்பதே எனது குறிக்கோள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தும் புரிந்து கொள்ள முடியாத அடிப்படைத் தமிழ் அறிவு கூட இல்லாத உங்களுக்கு எதைப் புரிய வைப்பது??

களத்தில் இணையவன் என்றொரு மட்டுறுத்தினர் இருக்கின்றார். அவரிடம் கேளுங்கள் அற்புதமாகப் புரிய வைப்பார்.

ஓகோ, புரிந்தது. மன்னிக்கவும், அது எழுத்துப் பிழை. உண்மையாகவே வசம்பு என்பதை மாறித் தட்டச்சு செய்தது மட்டுமே, இதோ திரும்பிப் போய்த் திருத்தி விடுகிறேன். இனிக் கவனமாக எழுதுகிறேன். நான் வேண்டுமென்றே இப்படி "ன்" போட்டிருப்பேன் என நினைக்குமளவுக்கு என்னைப் பற்றியும் மன விம்பம் உருவாக்கி விட்டீர்கள். வருந்துகிறேன். ஆனால் அடிப்படைத் தமிழ் அறிவுக்கும் இந்த எழுத்துப் பிழைக்கும் முடிச்சும் போடுவது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கிறது. பரவாயில்லை, நான் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol:பிழைகளை ஒத்து கொள்பவன் மனிதன் ஆகும் போது பிழைகளை மன்னிப்பவன் கடவுளாகி விடுகிறான்

.எங்கோ கேட்ட ஞாபகம்.ஆக ஒரு கருத்து மோதல் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

எவ்வளவு தான் சந்திரிக்காவுடன் ஒத்து போயும் அவரை பிரதமராக சிங்களம் விடவில்லை.

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

இல்லை கடைசியில் இதற்காக தான் போட்டு தள்ளி விட்டு வி.புலிகள் மீது பழி சுமத்தினார்கள்.

அவர்களுடைய வெற்றி, எங்களுடைய பரப்புரைப் போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது.

எப்படி இருக்கும்.கதிர்காமர் ஒரு அரசியல் வாதியாகும் போது முரளி சாதாரண கிறிக்கட் விளையாட்டு வீரர் ஆகும் போது அரசியல் பகடை காயாக முரளி பயன்படுத்தப்படுகிறார் என்பது தான் யதார்த்தம்.உங்களின் தெளிவான பார்வையை தெளிவாக சொன்னால் பயன்பாடாக இருக்கும்.உண்மையை சொன்னால், நான் இருவருக்கும் ரசிகன்தான். கதிர்காமரின் ராஜதந்திரமும், முரளியின் பந்துவீச்சும் எனக்குப் பிடிக்கும்.

கதிர்காமாருக்கு ரசிகன் ஆன முதலாவது ஆள் நீங்களாக தான் இருக்கும்.

அதே போன்று முரளியாலும் அணித் தலைவராக முடியவில்லை. அதற்கு காரணமும் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்ப்பதுதான்.

இதை தான் ஐயா தொடக்கம் முதல் இறுதி வரை சொல்கிறோம்.எத்தனை தடவை சொல்வது.முரளி இல்லாமல் வெல்வது கடினம் ஒன்று.ஆனால் அவர் தமிழர் என்பதால் அவரை தலைவர் ஆக்க முடியாது.

ஒன்று மட்டும் நிச்சயம் தேசிய தலைவர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வீரர் என்பது மட்டும் திண்ணம்.

விளையாட்டு ஒன்றும் தூய்மையானது அல்ல. விளையாட்டுத் திடலில் உள்ள விளம்பரப்பலகளைகளின் எண்ணிக்கை விளையாடு வீரர்களின் ஆடைகளைச் சோடிக்கும் விளம்பரங்கள் என்பன அது எந்தளவிற்கு வர்த்தக மயப்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

அடுத்து விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது ஒன்றும் எமது போராட்டத்திற்கு மாத்திரம் உரித்தான விவாதம் அல்ல. விளையாட்டை அரசியலாக பார்ப்பதும் அணுகுவதும் சாதாரணமான விடையம். புறக்கணிப்புரீதியில் அதற்கான சில வரலாற்று ரீதியான ஆதாரங்கள்.

http://en.wikipedia.org/wiki/Olympic_Games#Boycotts

http://sport.guardian.co.uk/cricket/story/0,,866670,00.html

http://query.nytimes.com/gst/fullpage.html...755C0A967958260

http://www.anc.org.za/un/conference/jbspector.pdf

http://www.voanews.com/english/archive/200...FTOKEN=45639635

http://www.stopthewall.org/downloads/flash/Boycottppt.swf

http://tadamon.resist.ca/index.php/campaig...theid-israelien

http://www.zmag.org/content/showarticle.cfm?ItemID=13511

முத்தைய்யா முரளிதரனின் தனிமனித சாதனையை ரசிக்கலாம் வியக்கலாம் பாராட்டலாம் வாழ்த்தலாம் தப்பில்லை.

முரளியின் சாதனையை "தமிழன்" என்றதன் அடிப்படையில் இனவாத சிங்கள அரசு தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் போது நாமும் முரளியை தமிழன் என்ற ரீதியில் கொண்டாடுவது சிறீலங்காவின் "முரளி தமிழன்" முத்திரைக்கு அங்கீகாரம் கொடுத்து பலம் சேர்ப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் நாம் முரளிதரனை எதிர்க்க வேண்டும் என்று அல்ல. முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடபடதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ்.. மிக நல்ல கருத்து..

எங்கே ஒரு நீதிமன்ற விசாரணையை மறுபடி ஆரம்பிக்க வேணுமோ எண்டு பயந்து போனன்..! :unsure:

முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

நல்ல கருத்துக்கள். குறுக்ஸ்.

Edited by vettri-vel

முரளிதரனுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கின்ற போது நான் கதிர்காமருக்கு ரசிகனாக இருப்பதால் என்ன நட்டம் வந்து விடப் போகிறது?

(கதிர்காமருக்கு ரசிகன் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். ஆனால் நிலைமையை புரியவைக்க அப்படிச் சொன்னேன்)

குறுக்காலபோவானின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன.

முரளிதரனை துரோகி என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அதே போன்று முரளிதரனின் சாதனைகளில் தமிழர்கள் பெருமிதம் கொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

முரளிதரனுக்கும் ஜெயசூர்யாவிற்கும் சச்சின்டெண்டுல்கரிற்கும் நான் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை.

எல்லோரும் விளையாட்டு வீரர்கள். திறமையானவர்கள். சாதனையாளர்கள்.

இவர்களின் விளையாட்டை ரசிக்கலாம், வியக்கலாம், புகழலாம்.

ஆனால் முரளிதரனை ஒரு தமிழன் என்று நோக்கில், பாராட்டுவதும், வாழ்த்துவதும் சுத்த அசட்டுத்தனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணை நீங்கள் ஏன் முரளியைவைத்து ஸ்ரீ லங்கா அரசு பிரச்சாரம் செய்கிறது என்பதை புரிந்துகொள்ளவில்லை. நேற்றைய டெய்லி நியூஸ் பத்திரிகையில் அலரி மாளிகையில் முரளி தன் குடும்பத்துடன் மஹிந்தவுடன் எடுத்த படங்கள் போடுகிறார்கள் கீழே அவர்கள் எழுதிய வசனம் தமிழன் ஒருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அதனைவிட ஜேவிபி இனவாதிகள் புலிகள் இல்லையென்றால் எத்தனையோ முரளிகள் தோன்றியிருப்பார்கள் என்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் மட்டும் தானா தமிழர்கள் இருக்கிறார்கள். மலையகத்தில் ஒரு முரளி, கொழும்பில் ஒரு ஆர்னால்ட் போல் எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இதுவரை ஒரு லோக்கல் மாட்ச் ஆடக்கூட சிங்கள இனவெறி அரசு விடுவதில்லை. முரளியின் சாதனையை நாம் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டாம் என்றுதாம் நாம் சொல்கின்றோம்,

இன்னொரு சிரிப்பு: குமுதம் இதழில் முரளியைப் பற்றி எழுதி பாராட்டியிருக்கிறார்கள் , பாராட்டியவர்கள் சும்மா இருக்காமல் தமிழ் நாட்டில் முரளி பிறந்திருந்தால் இந்திய அணிக்குத்தான் இந்தச் சாதனை என்றார்கள். நன்றாக் ஆடிய பாலாஜியையே தூக்கிய இந்தியத் தேர்வாளர்கள் ஒரு தமிழன் நன்றாக ஆடினால் சும்மா இருப்பார்களா? தூக்கிவிடுவார்கள் அத்துடன் முரளி பந்தை எறிகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவு அளித்ததுபோல் எந்த இந்திய அணித்தலைவர்களும் ஆதரவு அளித்திருக்கமாட்டார்கள். காரணம் தமிழன். இதே குமுதத்தில் இருவாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

தம்பீ வந்தியத்தேவா

உங்களைப் போன்றோர் முரளியைப் பார்க்கும் பார்வைக்கும் எனது பார்வைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. உங்களைப் போன்றோர் சிங்கள அரசு முரளியையும் ஒதுக்கியதையும், அவரை

அணித்தலைவராக்காததைதையும் சுட்டிக்காட்டிக் கொண்டு நாமும் அவரை ஒதுக்கவேண்டுமென வாதிடுகின்றீர்கள்.

ஆனால் எந்த சிங்களஅரசு முரளியை ஒதுக்கியதோ அதே சிங்களஅரசு அவருக்கு சாமரம் வீச வேண்டிய நிலையை தனி மனிதனாக முரளி ஏற்படுத்தியுள்ளார். தன் வேதனைகள், சோதனைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளை நிலை நாட்டியுமுள்ளார். இன்று முரளியென்ற ஒருவரை வைத்தே இலங்கை அணியின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்திக் காட்டியுள்ளார். தமிழனாய் நினைத்து சிங்கள அரசு ஒதுக்க நினைத்தாலும் தமிழன் சாதனைகளால் உயர்ந்து நிற்பான் என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார். அந்தச் சாதனையைத்தான் நாம் பாராட்டுகின்றோம்.

மற்றும்படி முரளியின் சாதனையை சிங்கள அரசு தனக்குச் சாதகமாக பிரசாரமாக்கினாலும் எந்த நாடும் அதை நம்பியதாக இல்லை. அப்படியிருக்க வெறும் கற்பனைகளை வைத்து ஒருசாதனையாளனின் மனம் நோக கருத்துக்கள் படைப்பது சாதுரியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சச்சினை வாழ்த்த ஜெயசூரியாவை வாழ்த்த சங்ககாராவை வாழ்த்தப் பின்னிற்பினும் முரளியை வாழ்த்தப் பின் நிற்கேன்.

காரணம் அவன் தமிழன் என்பதற்காக அல்ல. அவன் பல தடைகளைத் இடர்களைத் தாண்டி சாதனையைச் செய்த விளையாட்டு வீரன் என்பதற்காக..! அவன் தமிழனாக இருப்பது இரண்டாம் அம்சம்..! இங்கு முரளியை வாழ்த்திய பலரின் நிலையும் இதுதான்.

இதற்குள் நாமே பகிர்ந்த கருத்துக்களை சுருக்கிச் சொல்லிட்டு.. தமிழனா வாழ்த்தினா குற்றம்.. விளையாட்டு வீரனா வாழ்த்திறது சுத்தம்.. என்ற ஆக்களைப் பார்த்தா சிரிப்பா இருக்குது..! எப்படி எப்படி எல்லாம் அறிவாளிகள் உருவாகிடுறாங்கப்பா. சைக்கிள் கப்பில... நம்ம தலையிலேயே மிளகாய் அரைக்கிறாங்க..! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பீ வந்தியத்தேவா

உங்களைப் போன்றோர் முரளியைப் பார்க்கும் பார்வைக்கும் எனது பார்வைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. உங்களைப் போன்றோர் சிங்கள அரசு முரளியையும் ஒதுக்கியதையும், அவரை

அணித்தலைவராக்காததைதையும் சுட்டிக்காட்டிக் கொண்டு நாமும் அவரை ஒதுக்கவேண்டுமென வாதிடுகின்றீர்கள்.

ஆனால் எந்த சிங்களஅரசு முரளியை ஒதுக்கியதோ அதே சிங்களஅரசு அவருக்கு சாமரம் வீச வேண்டிய நிலையை தனி மனிதனாக முரளி ஏற்படுத்தியுள்ளார். தன் வேதனைகள், சோதனைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளை நிலை நாட்டியுமுள்ளார். இன்று முரளியென்ற ஒருவரை வைத்தே இலங்கை அணியின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்திக் காட்டியுள்ளார். தமிழனாய் நினைத்து சிங்கள அரசு ஒதுக்க நினைத்தாலும் தமிழன் சாதனைகளால் உயர்ந்து நிற்பான் என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார். அந்தச் சாதனையைத்தான் நாம் பாராட்டுகின்றோம்.

நன்றிகள் அண்ணை.

இதனைப் பலர் அறிவார்கள் முரளி இல்லாமல் ஸ்ரீ லங்கா டீம் சொதப்பல் தான். அண்மையில் மஹேல(இவர் மகிந்த, விமல் வீரவன்ச போன்றவர்களைப் போல சரியான துவேஷி) முரளி இல்லாமல் நாம் வென்று காட்டுவோம் என இங்கிலாந்துடன் ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்தது அனைவருக்கும் தெரியும்.

புறக்கணிப்பின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்டிருப்பதால்....

பிரித்தானியா பிரதமந்திரி ஐரோப்பா - ஆபிரிக்க உச்சி மநாட்டினை புறக்கணித்திருந்தார். காரணம் ஐரோப்பிய பிரயாணத்தடை விதிக்கப்பட்டிருந்த சிம்பாவே ஜநாதிபதி முகாபே விசேட அனுமதியுடன் இந்த மாநாட்டிற்கு போர்த்துக்கல் வந்திருந்தார். அது பற்றிய விவாதம் பிபிசியி இணையத்தில்

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20071209080809

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்டிருப்பதால்....

பிரித்தானியா பிரதமந்திரி ஐரோப்பா - ஆபிரிக்க உச்சி மநாட்டினை புறக்கணித்திருந்தார். காரணம் ஐரோப்பிய பிரயாணத்தடை விதிக்கப்பட்டிருந்த சிம்பாவே ஜநாதிபதி முகாபே விசேட அனுமதியுடன் இந்த மாநாட்டிற்கு போர்த்துக்கல் வந்திருந்தார். அது பற்றிய விவாதம் பிபிசியி இணையத்தில்

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20071209080809

இது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களிடம்.. இலங்கையில் மலைய மற்றும் ஏழைத் தமிழ் சிங்கள முஸ்லீம் அப்பாவித் தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் யானை மார்க் சோடாவை புறக்கணிக்கச் சொல்வது போன்ற விளையாட்டு அல்ல..!

இரண்டு நாட்டுக்குமிடையே இராஜதந்திர உறவில் ஏற்பட்ட விரிசலின் விளைவாக... வெள்ளையினத்தினரின் பண்ணைகளை முகாபே அரசு அரச சொத்துடமையாக்கி கறுப்பினத்தவர்களிடம் கையளித்ததன் பின்னணியில் எழுகிறது.

பிரித்தானியாவில் ஆபிரிக்கர்களும் ஆசியர்களும் வேலைக்கு வர முடியாது ஐரோப்பிய யூனியன் ஆக்கள் தான் வரமுடியும் என்று சட்டம் போடேக்க முகாபே செய்தது மட்டும் அதுவும் காலனித்துவத்தின் போது வன்பறிப்புச் செய்த நிலங்களை மீளப் பெறுவதில் எந்த அநியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு நெடுங்காலமாக வாழ்ந்து வந்த வெள்ளையினத்தவருக்குரிய அடிப்படை வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பை முகாமே அரசு உறுதி செய்யத் தவறியமை கண்டிக்கத்தக்கதே..! அதற்காக பிரிட்டனின் நகர்வுகள் யோக்கியமானவை என்பதல்ல அர்த்தம். அதுவும் பல அநியாயங்களை செய்து கொண்டே இருக்கிறது சிம்பாபேவுக்கு எதிராக. முகாபேயை கொல்லச் சதி கூட செய்திருந்தார் டொனி பிளேயர்..!

இரண்டு நாடுகளிடையே ஏற்பட்ட இராஜதந்திர விரிசலின் தொடர்சியாக ஏற்பட்ட இராஜதந்திர மட்டத்திலான புறக்கணிப்பே இது.

இந்த நிலை உலகக் கிண்ணக் கிரிக்கெட்டுக்கு முன்னர் தொடங்கிய போதும்.. சிம்பாவே விளையாடிய உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து விளையாடியது. முகாபே அரசின் செயற்பாட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விளையாட்டு வீரர்கள் சிலருக்கு பிரித்தானியா அரசியல் தஞ்சம் வழங்க முன் வந்தது. இவ்விவகாரம் இராஜதந்திர நகர்வுகளில் செலுத்திய செல்வாக்கை விட விளையாட்டில் செலுத்திய செல்வாக்கு மிகக்க் குறைவானதே..!

தமிழர்களுக்கும் என்று ஒரு தேசம் இருந்து அதற்கு ஒரு கிரிக்கெட் அணி இருந்து அது சிறீலங்காவோட விளையாட அழைக்கப்படும் போது புறக்கணிப்பது வேறு. ஏலவே சிறீலங்கா அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் ஒரு வீரனின் சாதனையை வாழ்த்தாது புறக்கணிப்பதென்பது அந்த தனிப்பட்ட வீரனைப் புறக்கணிப்பதாக அமைகிறதே அன்றி அது உலக அரங்கில் சிறீலங்கா அணிக்கு எந்தத் தாக்கத்தையும் உண்டு பண்ணாது. இவ்வநாவசிய புறக்கணிப்புக்கள் முரளி என்ற வீரனுக்கும் அவன் சார்ந்த சமூகத்தினருக்கும் வடக்குக் கிழக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர் மீதான அனுதாபத்தின் மீதே பாதிப்பை உண்டு பண்ணும்..!

இதனால் சிங்கள தேசம் அதிக பலனையும் ஒத்துழைப்பையும் முரளியிடம் இருந்து பெறத் தூண்டப்படுமே அன்றி அதற்கோ அதன் அணிக்கோ 0% அளவு கூட தேசாரம் வரப்போவதில்லை..! தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள். :lol::lol:

Edited by nedukkalapoovan

புறக்கணிப்புகள் சாதாரண மக்களாக நுகர்வோர் மட்டத்தில் இருந்து, பாரிய வியாபார நிறுவனங்கள், நாடுகளின் அரச தலைவர்கள் என்று பல மட்டங்களில் உலகில் நடக்கிறது.

புறக்கணிக்கப்படுவதாக சிறு வியாபார இறக்குமதி ஏற்றுமதி முதல் பாரிய வர்த்தக முதலீடுகள், ஒலிம்பிக்ஸ் முதல் உலகக் கிண்ணப் போட்டிகள் என்று விளையாட்டில், அரச தலைவர்களின் உச்சி மாநாடுகள் என்று விரிகிறது.

எந்தெந்த மட்டத்தில் புறக்கணிப்பு ஆரம்பமாகிறது எப்படி விரிவாக்கப்படுகிறது அல்லு குறிக்கோளிற்கு ஏற்ப மட்டுப்படுத்தப்படுகிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. தென்ஆபிர்க்கா மியன்மார் போன்றவற்றை ஒருவகை உதாரணங்களாகக் கொள்ளலாம். அதேபோல் தலாய்லாமாவை ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உபசரிப்பதற்கான எதிரொலியை 3 வாரங்களிற்கு முன்னர் நடந்த ஐரோப்பிய ஒன்றியம் - சீனா உச்சி மாநாட்டில் கவனிக்கலாம். அத்தோடு சைனா கைனான் ஏயர்லைன்ஸ் தலைவர் யேர்மனிக்கான சேவை விரிவாக்கத்தை பிற்போட்டதையும் குறிப்பிடலாம்.

பலஸ்தீனியர்களும் அரபு நாடுகளும் இஸ்ரேலின் விளையாட்டு, கலை கலாச்சாரத் தொடர்பாடல் முதல் நுகர்வுப் பொருட்களை புறக்கணித்து தமது எதிர்ப்பைப் பலவருடங்களாகத் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் காசாவிலும் மேற்குகரையிலும் உள்ள பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிடம் இருந்து மின்சாரம் முதல் ஏனைய பல அத்தியாவசிய தேவைகளிற்கு தங்கியிருக்கிறார்கள். அத்தோடு இஸ்ரேலில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மூலம் தமது வாழ்வாதாரத்தை கொண்ட குடும்பங்கள் ஏராளம்.

ஆனால் பலஸ்தீனர்கள் புறக்கணிப்பில் இன்னும் ஒரு படி மேலே சென்று யூதர்களின் பாரிய முதலீடுகளைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் எந்த நாட்டில் இருந்து இயங்கினாலும் புறக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதை ஏனைய அரபுநாடுகளிடமும் கேட்கிறார்கள். அண்மையில் இஸ்ரேலின் கல்வித்துறையை புறக்கணிக்க பிரித்தானியாவில் குரல்கொடுத்தார்கள். அது வெற்றி பெறாவிட்டாலும் அதற்கு பல பலஸ்தீனர் அரபியர் அல்லாதவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தது முக்கிய விடையம்.

9-11 நிகழ்விற்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு பிரான்ஸ் காட்டிய நிலைப்பாட்டினால் அமெரிக்கா பிரான்ஸ் ஓடு இராஜதந்திர உறவுகளை முறிக்கவில்லை அரசமட்டத்திலான புறக்கணிப்புகள் நிகழவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மட்டத்தில் சில புறக்கணிப்பு முயற்சிகள் மூலம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இப்படி புறக்கணிப்புகள் பலவிதம்

ஒரு நாடு பற்றி இன்னொரு நாட்டு மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பு மரியாதை பாசம் என்பது இராஜதந்திர மொழியில் மென் பலம் (soft power) என்கிறார்கள். இதை வழர்த்தெடுக்கும் தந்திரோபாயத்தை பொதுமக்கள் இராஜதந்திரம் (public diplomacy) என்கிறார்கள். இதன் யுக்த்திகளில் சிலவாக

கலாச்சார உறவாடல்கள்

அபிவிருத்தித் திட்ட நிதி உதவிகள்

குடிவரவு குடிபெயர்விற்கான ஊக்குவிப்புகள்

வியாபார வணிக ரீதியான முதலீடுகள் விரிவாக்கங்கள்

கல்வி மற்றும் தொழிற்பயிற்ச்சிக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்

இவ்வாறு மக்கள் மட்டத்தில் தனியார் துறையில் உருவாக்கப்படும் பிணைப்புகளின் பலத்தை புறக்கணிப்புகளிற்கு தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்கா புறக்கணிப்புக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே.

முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடபடதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

இப்படிக் கருத்தெழுதிய குறுக்காலேபோவான் தன் பெயருக்கேற்றமாதிரி குழம்பிப்போய் கருத்தெழுதுவதில் வியப்பேதுமில்லை. :D:lol:

மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்கா புறக்கணிப்புக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே.

இன்றும் தாயகத்தில் சிறிலங்கா அரசை நம்பியே நமது மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. அப்படியிருக்க சிறிலங்காவை புறக்கணியுங்கள் என்று மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்காவை புறக்கணி என்று ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே. சிறிலங்கா கடவுச்சீட்டு வேண்டும், சிறிலங்கா பிறப்பத்தாட்சிப்பத்திரம் வேண்டும், சிறலங்கா திருமணச்சான்றிதழ் வேண்டும். ஆனாலும் நாம் புறக்கணிப்புக் கோசம் போடுவோம். :lol::lol::D

Edited by Vasampu

வசம்பு சிறீலங்காவை புறக்கணியுங்கள் சிறீலங்காவின் உத்தியோகபூர்வ விளையாட்டுக் குழுவைப் புறக்கணியுங்கள் முரளியை தனிமனிதனாக எதிர்க்காதீர்கள் புறக்கணியாதீர்கள் அவரது சாதனை புகழுங்கள் வாழ்த்துங்கள் இரசியுங்கள். அவர் எமக்கு எதிராக ஆர்வமெடுத்து இயங்கியதற்கான ஆதாரம் இல்லை அப்படிச் செய்யத் தூண்டாதீர்கள் என்று தான் கூறியுள்ளேன்.

சீனாவின் ஏற்றுமதியில் தங்கியிருந்து கொண்டுதான் சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்கோடு கொள்கைகளை வழர்த்து அந்தந்த நாடுகள் தமது நல்களைக் காக்கிறார்கள். அதே நேரம் தாமும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சலுகைகளிற்காகவும் வாதாடுகிறார்கள்.

ஏன் அமெரிக்கா படைகளின் சீருடைகளில் பல உதிரிப்பாகங்கள் சீனாவால் தான் தயாரிக்கப்படுகிறது. அதற்காக அமெரிக்கா சீனாவை (உங்கள் பாசையில்) "நம்பித்தான்" தனது படைகளை வைத்திருந்தும் The National Defense Authorization Act 2000 இல் சீனா பற்றிய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

ஈரானின் எண்ணை ஏற்றுமதியை நுகர்ந்து கொண்டுதான் ஈரானிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கிறார்கள் அரசியல் இராஜதந்திர அழுத்தங்கள் போடுகிறார்கள்.

அமெரிக்கவின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பிரித்தானியாவில் இருந்து சென்று குடியேறியவர்களின் அடுத்தடுத்த சந்ததியினர் தான்.

ஏதோ உலகத்தில் நடக்காத ஒன்றை நாம் செய்ய முயற்சிப்பதாகவும் கேட்பதாகவும் கற்பனைபண்ணிக் கொண்டு புறக்கணிப்பை சிறிலங்கா பிறப்புச்சாட்சிப்பத்திரத்த

Edited by kurukaalapoovan

குறுக்காலேபோவான்

ஏற்கனவே மொட்டத்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப்போடும ஒருவர் இருக்க நானும் அவருக்குச் சளைத்தவரல்ல என்று நீங்களும் நிற்கின்றீர்கள். இங்கு முரளியின் பந்துவீச்சு சாதனைபற்றி தான் எழுதுகின்றோமே தவிர சிறிலங்கா அரசாங்கத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க பிளளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டு கோமாளித்தனம் செய்யும் நீங்கள், நெடுக் சொன்னமாதிரி தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள்.

குறுக்காலேபோவான்

ஏற்கனவே மொட்டத்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப்போடும ஒருவர் இருக்க நானும் அவருக்குச் சளைத்தவரல்ல என்று நீங்களும் நிற்கின்றீர்கள். இங்கு முரளியின் பந்துவீச்சு சாதனைபற்றி தான் எழுதுகின்றோமே தவிர சிறிலங்கா அரசாங்கத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க பிளளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டு கோமாளித்தனம் செய்யும் நீங்கள், நெடுக் சொன்னமாதிரி தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள்.

இந்தக் கைதுகள் தொடர்பாக

விடுதலைப் புலிகள் தரப்பில் ஏதாவது கண்டனம் வந்திருக்கிறதா?

இங்கு பேசுவோர் எவருமே

சிறீலங்காவின் அடையாள அட்டை

பாஸ்போட் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாமல் வந்தவர்கள்?

அங்கு போய் திருமணம் செய்து

வந்தவர்கள் கூட நீந்தித்தான் வந்தார்கள்?

சும்மா போங்கப்பா?

சிறீலங்காவில பிரச்சனை எண்டு வந்துதானே

இங்க இருக்கிறம்.

என்ன தமழீழத்தில பிரச்சனை என்றா?

தமிழீழம் கிடைக்கும் வரை

அதை தூக்கி எறிந்து விட்டு

எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாது.

அப்பிடி இல்லை என்றால்

நீங்கள் சொல்வது எல்லாம் சரியப்பா?

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :lol:

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :lol:

அட நீங்களொன்று வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்போம் என்றும் கோசம் போடுவோம். பின்பு தமிழ்மக்களுக்கு அரசு ஒன்றும் அனுப்பவில்லையென்றும் கோசம் போடுவோம்.

:lol: இரண்டையும் வைத்து எவரும் குளம்பி விடக்கூடாது. :D

குறுக்காலேபோவான்

ஆமாங்கோ உங்களைப் போன்ற குழப்பவாதிகள் குழப்பமுயன்ற பின் அதற்குப் பதில் சொல்லியாவது தெளிய வைக்கலாம் என்று பார்த்தோம் என்ன செய்வது எல்லாம் விழலுக்கிறைத்த நீர் தானுங்க நன்றாகப் புரியுதுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.