Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்]

இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம்

நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது.

இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ அப்படியென்றால் கொழும்பிலே வரும் வாரங்களில் நிறைய ரஸ்சிய அழகிகளை காணலாம். அத்துடன் தண்ணி வெந்நி பாட்டி தான் :unsure::huh::huh: ....எங்களுக்கும் சாட்டில் நிறைய கொசுரு செய்திகள் வரும் :)<_<

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆசிரியர்கள் வந்து படிப்பித்தும் மாணவன் தேறுவதாக தெரியவில்லை.மாறாக கூழ் முட்டை தான் எடுக்கிறான். :)<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு ஆசிரியர்கள் வந்து படிப்பித்தும் மாணவன் தேறுவதாக தெரியவில்லை.மாறாக கூழ் முட்டை தான் எடுக்கிறான். <_<:unsure:

மாணவர்கள் எப்படி படிக்கிறது. இரவில் முழு தண்ணி போட்டுவிட்டு யாகூ வெப் கம்(web cam) பார்த்து கொண்டு சாட்டிலிருந்தால் பகலில் எப்படி படிப்பு ஏறும். :)

பாவம் அந்த கிராமத்து சிங்கள இளைஞர்கள் தான் வாங்கி கட்டுறது கடைசியில்.

அவர் அங்க மகனுக்காக இளைஞர்களை கூட்டி மாநாடு நடத்தி கொண்டு இருக்கிறார். அவருக்கு மத்திய அரசில் என்ன நடந்தாலும் அதை பற்றி கவலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இந்தியாவுக்கு நன்றிகள் !!!! தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறது ! அதென்ன கடமையென்று கேட்கிறீர்களா ? தமிழரை அழிப்பதற்கு சிறிலங்காவிற்கு விடாமல் முண்டு கொடுப்பதுதான். மற்றும்படி தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தால், பாவம், எங்களைத் தவிர வேறு அறிவாளிகள் இருக்க முடியாது. மன்னிக்க வேண்டும்.....நான் யாரும் இந்திய அபிமானிகளைத் தாக்கியிருந்தால்!!!!???###@@@

சிறிலங்கா அரசாங்கத்தின் வான் பாதுகாப்பு பொறிமுறைகளை மேம்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் பாதுகாப்பு உயரதிகாரிகள் குழு நாளை திங்கட்கிழமை சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்கின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வாருங்கள், உங்கள் வரவு ...ஆகட்டும் ! அது சரி இம்முறை எத்தனை தமிழரைக் கொல்வதற்கு அலோசனை வழங்குவதாக உத்தேசம் ?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாக இறங்கியிருக்கும், இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு உதவிகள் வழங்குவதற்காக இந்திய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் குழு இன்று இலங்கை செல்கிறது.

இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியில் எந்த உதவியையும் செய்யக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்தியா ஆயுத உதவிகளை வழங்காவிட்டால், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவிகளைப் பெறவோம் என ராஜபக்சே அரசு இந்தியாவை மிரட்டியது.

சொன்னதோடு நில்லாமல் பாகிஸ்தான், சீன நாட்டு ஆயுதங்ளையும் அது வாங்கிக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில், இலங்கை விமானப்படைக்குத் தேவையான பல ஆயுத உதவிகள் கிடைத்துள்ளன. சீனாவும் நவீன ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது.

இதையடுத்து இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதி நவீன கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்டவற்றை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் விமானப் படைக்குத் தேவையான பல உதவிகளையும் இந்தியா செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் சமீபத்தில் விமானப் படையை உருவாக்கியது. உலகிலேயே ஒரு போராளி இயக்கம் விமானப்படையைப் பெற்றது இதுவே முதல் முறை என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகளின் விமானப் படையை இந்தியாவும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில், புலிகளின் விமான படையை எதிர்த்து போரிட தேவையான உதவிகளை இலங்கை விமானப்படைக்கு இந்தியா அளித்துள்ளது.

மேலும் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அரசுக்கு மேலும் உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கவும், இலங்கை படைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை அளிக்கவும், அதுகுறித்த ஆலோசனைகளுக்காவும் இந்திய பாதுகாப்பு குழு இன்று கொழும்பு செல்கிறது.

3 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு குழுவில் விமான பாதுகாப்பு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரஷியாவிடமிருந்தும் ஆயுதம் வாங்கும் இலங்கை:

இதற்கிடையே, ரஷ்யாவிடமிருந்தும் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவுள்ளது.

ஏற்கனவே ரஷ்ய பாதுகாப்பு குழு ஒன்று கொழும்புக்கு வந்துள்ளது. இன்று இந்தியக் குழு வருகிறது. இரு குழுக்களுடனும் இலங்கை பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்து விரிவாகப் பேசவுள்ளனர்

நன்றி

thatstamil

ஒரு சிறிய நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து கூலிவேலை செய்கிறது இந்தியா.உலகில் வல்லரசு நாடாகபோறார்களாம் இவர்கள்.

ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தினமும் அல்லல்பட்டு சாவதை வல்லாதிக்க அரக்கர்கள் எட்டிப்பார்த்து இரசிக்கிறார்கள்.

எத்தின தரம் தான் இதை திரும்பி திரும்பி போடப்போறியழ்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியில் எந்த உதவியையும் செய்யக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்தியா ஆயுத உதவிகளை வழங்காவிட்டால், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவிகளைப் பெறவோம் என ராஜபக்சே அரசு இந்தியாவை மிரட்டியது.

நன்றி

thatstamil

அப்படி ராஜபக்ஸ மிரட்டினால் . இந்தியா தான் புலிகளுக்கு மறைமுகமான உதவிகளை செய்யப்போவதாக செய்தியை கசியவிட்டாலே போதும். சிங்கள தேசம் ஓடித்திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலிகள் தான் இப்ப உலக வல்லரசு தரத்துக்கு மனோவலிமையால உயர்ந்திருக்கிறார்கள்..

அமெரிக்கா

பிரிட்டன்

ரஷ்சியா

உக்ரைன்

செக் குடியரசு

இஸ்ரேல்

ஈரான்

பாகிஸ்தான்

இந்தியா

சீனா

தென்னாபிரிக்கா

என்று உலகம் பூரா உள்ள வல்லரசுகளும் இராணுவ தொழில்நுட்ப வல்லுனர்களும் தயாரித்த ஆயுதங்களையும் தொழில்நுட்பங்களையும் பயிற்சி உதவிகளையும் நேரடி உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் சந்தித்து துரோகத்தனங்கள் காட்டிக் கொடுப்புக்களை மேலதிகமாகச் சந்தித்தும்..புலிகள் இன்னும் தமது தாயகத்தை ஆக்கிரமிப்பில் இருந்து காத்து நிற்கிறார்கள் என்றால்.. நிச்சயம் விடுதலைப் புலிகளே உலகின் அதி சக்தி வாய்ந்த மனோவலிமை மிக்க இராணுவத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமாகிறது.

Edited by nedukkalapoovan

தமிழினிக்ஸு க்கு குசும்பு கூடிப்போச்சு... செத்தாலும் இந்தியா தமிழுக்கு உதவாது...

வெறும் வாயிக்கு அவல் கிடைத்ததுபோல ஆகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தியா கொடுப்பது அவலல்ல. தமிழ்மக்களைக் கொல்லுவதற்கான நஞ்சு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் குழுவே திரும்பி வா

சென்னை: 17.12.07 அன்று 'இந்திய தரை மற்றும் வான் வழி படையின் வல்லுநர் குழு' ஒன்று கொழும்பு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கு வேதனைக்குரியதும் கண்டிக்கத்ததும் ஆகும். கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவ வல்லுநர் குழுவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் நேர்மையில்லாத, பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாத, இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

பாகிஸ்தான் சிங்கள இன வெறிக் கும்பலுக்கு பல வகையிலும் உதவிகள் செய்வது போல இந்திய அரசும் போட்டி போட்டிக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஓரணியில் நின்று சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப் பெரும் கேலிக் கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களை அவ்வப்போது சுட்டுக் கொன்று இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதிலேயே இந்திய அரசு முனைப்பாய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் வாழும் சுமார் 6 கோடி தமிழர்களின் உணர்வுகளைத் துளியும் பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதில் சிங்கள இனவெறியர்களை விடத் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில்தான் 17.12.07 அன்று 'இந்திய தரை மற்றும் வான் வழி படையின் வல்லுநர் குழு' ஒன்று கொழும்பு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கு வேதனைக்குரியதும் கண்டிக்கத்ததும் ஆகும்.

இது தொடர்பாகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் சோனியா காந்தியையும் நேரிலே சந்தித்து, தமிழினத்திற்கு எதிரான செயல் திட்டத்தோடு புறப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வல்லுநர் குழுவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்த வேண்டும்.

மேலும், சிங்கள இன வெறியர்களின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் எனச் சிங்கள அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இந்திய அரசை வற்புறுத்துகிறோம். சிங்கள இன வெறியர்கள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், புலிகளும் வான் வழித் தாக்குதலை நிறுத்தும் சூழல் உருவாகும்.

ஆகவே சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்த வேண்டுமென்கிற முயற்சியைக் கைவிட்டு வான் வழித் தாக்குதலை கைவிட வலியுறுத்துவதுடன் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிங்கள வான்படைத் தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாகவும் நூலிழையில் உயிர் தப்பியிருப்பதாகவும் சிங்கள அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஆதாரம் இல்லாத செய்திகளைப் பரப்பி தமிழர்களிடையே பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் உருவாக்க முயன்று வருகின்றன. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிட முடியும் என்பது சிங்கள வெறியர்கள் கனவு கண்டு வருகின்றனர்.

சிங்கள அரசின் இத்தகையை கனவை நனவாக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்க போகிறதா? அல்லது இந்திய நாட்டைச் சார்ந்த 6 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் போகிறதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனினும் எமது ஜனநாயக உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் என்கிற நம்பிக்கையோடு கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவ வல்லுநர் குழுவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

-சிஃபி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.