Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ வெ ராமசாமியின் உறவினரால் சிதைக்கப்படும் ஈழத்தமிழர் ஆதரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு வாங்குது என்று புரளிகளைக் கிழப்பி புலிகள் மீதான தடையை நீட்டிக்க முற்படுகின்றனர் என்று தமிழகத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-------------

He also criticized Congress leader E.V.K.S. Elangovan's appeal to the Tamil Nadu government to arrest LTTE supporters in the state. Elangovan, is incidentally the grand-newphew of 'Periyar' E.V.Ramasamy Naicker,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24022

------------

தமிழகத்தில் இன்னும் கன்னட ஈ வெ ராமசாமியை "தந்தையாக" "பெரியாராக" மதிப்பளிக்கின்ற போதும் அவரின் உறவினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள கட்சிகள் சிலவற்றுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது ஈ வெ ராமசாமியின் வழியில் எவ்வாறு தமிழக தமிழ் மக்கள் பிறரால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களுக்காக புரட்சி பண்ணுவதாகக் கூறிக் கொண்டு தமிழர்கள் ஒற்றுமைப்படுவதையும் பிராந்தியத்தில் பலமாவதையும் முன்னர் திராவிடம் பேசி வஞ்சகமாக சிதைத்தது போல இப்போ மத்திய அரச விசுவாசம் பேசி சிதைக்கின்றனர் என்பதை இது அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது..!

ஆனால் தமிழக மக்களோ ஈ வெ ராமசாமி தமிழர்களுக்கு தனிநாடு கேட்டார் என்று அவர் திராவிட நாட்டை திராவிடர்களுக்காகக் கேட்டத்தை மாற்றி அவரைப் பெரியாராக்கி வைத்து சிலையும் வைக்க முனைகின்றனர்..! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 51
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயும் சேயும் ஆனாலும் .................. என்றொரு பழமொழி இருக்கிறது. ஆகவே தனிமனிதனாக தான் ஒவ்வொருவரையும் கருத வேண்டும்.

பெரியார் தராவிடர் கழகத்தின் ஆதரவு இன்றும் இருக்கிறது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நீங்கள் கூறுவது 100 % உண்மை ! பெரியாரும் அவரது பேரன் இளங்கோவனும் தமிழரை ஏமாற்றிப் பிழைக்கும் தெலுங்கர்கள். இவர்கள் எப்போதுமே தமிழருக்குச் சார்பாக இருந்ததில்லை. பெரியார் சமூக சீர்திருத்தவாதியாக தன்னை அடையாளங்காட்டிக் கொண்டவரே ஒழிய தனிநாட்டுக்கான போராளியாக அடையாளங்காட்டிக் கொள்ளவில்லை. இளங்கோவன் தனது முழுமையான சுயரூபத்தைக் காட்டுகிறார், அவ்வளவுதான். அடிப்படையில் தெலுங்கர்களான இவர்களால் தமிழர்மேல் அநுதாபம் கொள்வதென்பது இயலாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கருணாநிதி மட்டும் திராவிடராக பிறந்து ஈழமக்களுக்கு 30 வருடங்களாக செய்ததை சொல்லுங்களேன் பெரியவர்களே தாய்மார்களே? இப்படியே பார்த்தால் விஜயகாந், வை.கோ ஒருவருமே தமிழர்கள் அல்ல.என்றாலும் எவ்வளவு தூரம் ஈழ போராட்டத்தை தன்பால் கொண்டுள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மை.

30 வருட கால போராட்ட உண்மை என்னவெனில் எவ்வளவு நண்பர்களை உருவாக்குகின்றோமென்பதே.

ஆகவே ஒரு சில தனிமனிதர்களால் பெரிதாக எதை சாதிக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடம் தமிழ்ச்சேவை என்று சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தப் பாக்கிறியள். இந்த 30 வர்ஷத்தில தமிழீழ தமிழருக்கு உருப்படியாக செய்த ஒரு வேலை சொல்லுங்கள் ? அறிக்கை விட்டதைத் தவிர ? தமிழ்செல்வனுக்காக கவிதை எழுதுவதால் மட்டும் எல்லாம் முடிந்து விடாது. எதிரிகளைச் சம்பாதிக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே துரோகிகளை சேர்த்து வைத்திருக்கப் பார்க்கிறியள். மத்திய அரசு மாநில அரசு மேலும் ,மாநில அரசு மத்திய அரசு மேலும் குற்றம் சாட்டிக்கொண்டு மாறி மாறி தமிழர் அழிப்பில் ஈடுபடுவது தெரிந்துமா இந்த 30 வருடச் சேவை பற்றிக் கதை ?

தமிழ்நாட்டு மக்களை தமிழர், தெலுங்கர், கன்னடர் என்று பிரித்துப் பேசுவது அறியாமை.

தமிழ்நாட்டில் வாழுகின்ற நாயுடுக்கள், நாயக்கர்கள் போன்றவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி, அந்த மண்ணோடு கலந்து தமிழுணர்வோடு வாழ்ந்து வருபவர்கள்.

ஒவ்வொரு மனிதனுடைய உண்மையான இனம் எதுவென்று தேட முற்பட்டால், இன்றைக்கு யாருமே அவர்கள் நம்புகின்ற இனமாக இருக்க முடியாது.

மனித இனம் ஆபிரிக்காவில் உருவானதாக சொல்லப்படுகின்ற போது, எல்லோரும் ஆபிரிக்கர்கள் ஆகிவிடுவோம்.

"உண்மையான சுத்தமான இனம்" என்ற ஒன்று தற்பொழுது இல்லை.

தமிழை பேசி, தமிழுணர்வோடு, தமிழனாக வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். அவர்களின் முப்பாட்டார்கள் 500, 600 வருடங்களுக்கு முன்பு எங்கிருந்து வந்தார்கள் என்று ஆராய்பவன் முட்டாள்.

வைகோவின் முப்பாட்டனும் தெலுங்குதேசத்தில் இருந்து வந்தவர்தான். அதற்காக வைகோவை தெலுங்கன் என்று சொல்லிவிட முடியுமா? எத்தனை "சுத்தமான" தமிழர்களுக்கு வைகோ அளவிற்கு தமிழறிவு இருக்கிறது?

சரி, தலைப்பிற்கு வருவோம்.

இளங்கோவன் செய்வது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழர்களுக்கா தன்னுடைய காலத்தை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். அறிவற்று அடிமையாய் கிடந்த தமிழனை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்திலோ, அல்லது வேறெங்கிலோமோ தமிழர்கள் போராடுகின்ற போது, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்படியான பலமான தொண்டர் படையை உருவாக்கி விட்டவர் தந்தை பெரியார்.

ஆனால் வேதனைப்படும்படி தந்தை பெரியாரின் உறவினரான இளங்கோவன் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

இளங்கோவன் தன்னுடைய தாத்தா முறையான தந்தை பெரியாரை மதிக்காதது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. அவர் தன்னுடைய தாயுடனும் பேசுவது இல்லை. அவருடைய தாய் சுலோச்சனா சம்பத் அதிமுகவில் இருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்வார்கள்.

நல்ல ஒரு திராவிட பாரம்பரியத்தில் வந்த இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பார்ப்பனியத்திற்கு சேவை செய்கிறார்.

ஆனால் இப்படியான சம்பவங்கள் பல நாடுகளில் உண்டு. தமிழர்களின் விடிவுக்காக பாடுபட்ட தந்தை செல்வாவின் மகனும் தமிழினத்திற்கு எதிரான வேலையைத்தான் செய்து வருகின்றார்.

மேலும் பிடல் காஸ்ரோவின் மகள், சதாமின் மருமகன்கள் என்று எதிரியோடு இணைந்து நிற்பவர்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமில்ல அது திராவிடர்களின் சொத்து. ஆனால் ஆந்திரா தெலுக்கருக்கும் கர்னாடகா கன்னடர்களுக்கு கேரளா மலையாளத்தவர்களுக்கும் சொந்தம்..! ஆக தமிழன் மட்டும் நாதியில்லாத பிடாரி..! இதே இதேதான் ஈ வெ ராமசாமியின் கொள்கையும்..! இதே இதேதான் எஸ் இளங்கோவனின் கொள்கையும்..!

இவர்கள் ஈழத்தையும் நாளைக்கு சிங்களவனுக்கும் சேர்த்து தாயகமாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். ஏனெனில் சிங்களவனும் மனிதன் தானே..! அவன் மட்டும் என்ன வேறுக்கிரகவாசியா..??! அவனும் ஆபிரிக்க வழித்தோன்றல் தானே..! என்னே சித்தாந்தங்கள்.. நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப இக்களத்திலேயே அடிக்கடி கொள்கைகளும் சித்தாந்தங்களும் மாறுது பாருங்க.. இந்தப் பச்சோந்தித்தனம் தான் தமிழன் என்ற நிலையை உலகில் நாம் இழக்கக் காரணம்..!

இன்றைய இனத்துவம் என்பதன் வரையறையின் கீழ் தமிழன் என்றொரு இனம் இருக்கா அவனுக்கு என்றொரு நிலம் இருக்கா இல்லையா.. இந்திய உபகண்டத்தில் இதை.. முதலில் தீர்மானியுங்கள். அடிக்கடி ஈ வெ ராமசாமியை பாதுகாக்க பச்சோந்திகளாகி தமிழர்களின் தனித்துவத்தன்மையை சீரழிக்காதீர்கள்..! :lol:

நான் சொன்னது உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கின்றேன்.

தமிழைப் பேசி, தமிழனாக உணர்பவர்கள் தமிழர்கள். இதுதான் என்னுடைய கருத்து.

தமிழ்நாடு தமிழர்களுக்குத்தான் சொந்தம்.

தமிழ்நாட்டிலே தெலுங்கர்கள் உண்டு. கன்னடர்கள் உண்டு. அவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் தொடர்ந்தும் தெலுங்கையும், கன்னடத்தையும் பேசுகிறார்கள். தம்மை தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும் உணர்கிறார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாயக்கர்கள், களப்பிரர்கள் ஆட்சிக் காலங்களின் போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களாக மாறிய கோடிக் கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களின் சாதிப் பெயரை வைத்துத்தான் அவர்கள், மற்றைய மொழிகளை சேர்ந்தவர்கள் என்று ஊகிக்க முடியும். மற்றையபடி அவர்கள் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன், கன்னடன்" என்று சொல்வது இனவாதம்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் தென்பகுதியில் அதிகமானளவு நாயுடுக்களும், நாயக்கர்களும் வாழ்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டின் தென்பகுதியில் தெலுங்கர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று கொள்ள முடியுமா?

நீங்கள் சொல்வதன்படி பார்த்தால்தான் தமிழர்களுக்கு நிலம் இல்லாது போகும்.

500, 600 வருடங்களுக்கு முன்பு என்னவாக இருந்தார்கள் என்று ஆராய்ந்து, தமிழினத்தையும், தமிழ் மண்ணையும் கூறுபோடும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

தமிழினத்திற்கு பெருமை சேர்த்த சேரர் பரம்பரை இன்றைக்கு மலையாளிகள் ஆகி விட்டது. அவர்களிடம் "நீ சில நூறு வருடங்களுக்கு முன்பு தமிழன், ஆகவே இப்பொழுதும் தமிழன்தான்" என்று சொல்ல முடியாது.

அதே போன்று தமிழ் மண்ணில் தமிழைப் பேசி, தமிழ் உணர்வோடு, தமிழர்களாக வாழ்பவர்களைப் பார்த்து "நீ சில நூறு வருடங்களுக்கு முன்பு தெலுங்கன், ஆகவே இப்பொழுதும் தெலுங்கன்தான்" என்று சொல்ல முடியாது.

அதுவும் தமிழினத்திற்காகவே வாழ்ந்த, வாழ்கின்ற தலைவர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் விரோதமானது.

தமிழினத்தை கூறு போட்டு, பலவீனப்படுத்தும் வேலையை செய்து பார்ப்பனியத்திற்கு யாரும் துணை போக வேண்டாம்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெலுக்கனை தெலுக்கன் என்று சொல்வது இனவாதமல்ல. அது அவர்களின் இன அடையாளத்தை தனித்துவப்படுத்துவது. கன்னடனை கன்னடன் என்பது இனவாதமல்ல அவர்களின் இனத்தை அது அடையாளப்படுத்துகிறது. சிங்களவனை சிங்களவன் என்பது அவனின் இனத்தை அடையாளப்படுத்துகிறது என்பது மட்டுமன்றி அவனின் இன அடையாளத்தை அங்கீகரிக்கின்றோம் என்பதும் தான் அர்த்தம்.

தமிழர்கள் தங்களை தமிழன் என்பதும் இனத்துவ அடையாளம் கருதியே அன்றி வேறல்ல. தமிழ் பேசுவதற்காக சிங்களவர்கள் தமிழர்களாகிட முடியாது. சிங்களம் பேசும் மலையக மக்கள் சிங்களவர்களாகிட முடியாது. அவர்கள் தமிழர்கள் தான்.

நீங்கள் உங்கள் உங்கள் வசதிக்கேற்பட இனத்துவ வரைவிலக்கணப்படுத்தலைச் செய்ய முடியாது.

தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து தமிழ் பேசும் பிற சிறுப்பான்மை இனத்தவர்களுக்காக தமிழர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்துதான் மதிப்பளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு வம்சாவளி தமிழ் பேசுவோர் இருக்கட்டும்.. கன்னடர் இருக்கட்டும்.. மலையாளம் பேசும் கேரளத்தவர் இருக்கட்டும் அவர்களுக்கான தனித்துவத்தை அவர்கள் பேணட்டும்.. தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்கள் தமிழர்கள் என்று இனங்காட்டப்படுதலே இனவாதம். அடுத்தவரின் இனத்துவ அடையாளத்தை தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக பறிக்க முற்படுவதே பேரினவாதம்..!

ஈ வெ ராமசாமி கன்னடனே. அவரைத் தமிழன் என்று இனங்காட்ட முடியாது. ஒருவேளை வைகோ கூட தெலுக்கரின் வழி வந்தவராக இருக்கலாம். அதற்காக அவர் தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவழிக்கக் கூடாது என்றில்லையே. எங்கோ பிறந்த சேகுவரா.. கியுப விடுதலைக்காகப் போராடிய போது எந்த இன அடிப்படையில் பங்களித்தார்..! அதற்காக அவர் தன்னைக் கியூபப் பிரஜையாக காட்டிக் கொள்ள கோரவில்லையே..!

ராமசாமி தமிழர்களை தமிழர்களாக இனங்காட்டிக் கொண்டு தமிழ்நாடு கேட்டிருப்பின் அவரை முன்னிலைப்படுத்தி தமிழர்கள் புகழாரம் சூட்டுவதில் நியாயம் இருக்கும்.

ஆனால் தமிழனின் நிலத்தில் நின்று கொண்டு திராவிடத்துக்கு கோசம் எழுப்பியதும் திராவிட தேசத்தை தமிழினனின் நிலத்தில் உருவாக்க நினைத்ததும் தான் தமிழினத் துரோகம் எங்கிறோம்.

ராமசாமி திராவிடம் பேசி தெலுக்கருக்கும் கன்னடருக்கு கேரளருக்கும் தனித்தனி நாடும் வாங்கி தமிழனுக்கு தமிழ்நாட்டையும் வாங்க கோரி இருப்பின் அது நியாயம். அல்லது நான்கு தேசங்களையும் ஒருங்கிணைத்து திராவிடம் என்ற பொது அலகின் கீழ் அவரவர் தனித்துவத்துடன் தென்னிந்திய தேசத்தை உருவாக்கி இருப்பின் அது ஏற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ராமசாமி தமிழகத்தில் நின்று கொண்டு திராவிட தேசத்தை தமிழகத்தில் நிறுவ நின்றது தமிழின தேசத்தை கபளீகரம் செய்யும் செயலே அன்றி வேறல்ல. கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளத்தவரும் தமக்கென்று நிலங்களைக் கொண்டிருக்க.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் திராவிட சாயம்..??!

வைகோ கூட தமிழகத்தில் நின்று தமிழர்களுக்காக குரலையென்ன தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கின்றார். அவரின் பூர்வீகம் வேறாக இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடு தமிழினத்துக்கோ தமிழரின் பூர்வீக நிலத்துக்கோ ஆபத்தானதல்லாமல் தமிழரின் இன அடையாளத்தை அங்கீகரிக்க நிற்கின்றது. அந்த வகையில் வைகோவை தமிழர்கள் போற்றுதலும் விரும்புதலும் ஈ வெ ராமசாமிக்கு தந்தை .. பெரியார் போன்ற அநாவசியக் கெளரவமளிப்புச் செய்வது போன்றதல்ல..!

ஈ வெ ராமசாமி சாதி ஒழிப்பை செய்ய முற்பட்டிருப்பின் தமிழர்களிடத்தில் பிராமண சமூகத்தை பிரித்துக் காட்டி இருக்கக் கூடாது. அவர்களையும் தமிழர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களையும் அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். சாதி ஒழிப்பில் அவர்களின் பங்களிப்பையும் பெற்றிருக்க வேண்டும். அவர்களை எதிரிகளாக்கி பிற சாதிகளோடு மோதவிட்டு தமிழர்களைப் பிளவு படுத்தி இருக்கக் கூடாது.

அநாவசியமா பார்பர்னியத் திணிப்பை இதற்குள் செய்யாமல் மக்களை சிந்திக்க அனுமதியுங்கள்.

திராவிடம் பேசி தமிழனைப் பலவீனமாக்கி அதில் தமிழரின் பூர்வீகத்தையே கபளீகரம் செய்து இன்று கன்னடர்களாகவும் தெலுங்கர்களாகவும் மலையாளத்தாராகவும் அவரவருக்கு என்று எல்லை பெற்ற நிலப்பரப்புக்களை வைத்துக் கொண்டு அங்கு தங்களை தாங்களே ஆள ஆதிக்கம் செய்ய அனுமதித்துக் கொண்டு தமிழர்கள் மட்டும் தமிழர்களின் இனத்தனித்துவத்தைக் கூட அடையாளப்படுத்த முடியாதபடிக்கு இன்று இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பார்பர்னியத்தை விட திராவிட மாயைதான் அதிகம் பங்காற்றியுள்ளது..!

தமிழ் பூர்வீகமுள்ள கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளத்தவரும் தனி இனமாகக் காட்சியளிக்க சேர சோழ பாண்டியன் என்று தென்னிந்தியாவையே ஆண்ட தமிழர் பரம்பரை பூர்வீகமிழந்து தமிழன் என்பதைக் கூட உச்சரிக்க முடியாதபடி திராவிடம் என்ற போர்வைக்குள் போட்டு மூடப்படுவதும் ஏன்..??! இதனால் காக்கப்பெற்ற தமிழ் தேசியம் என்பது என்ன...??! சிந்தியுங்கள்..!

பார்பர்னியத்தை விட திராவிடமே தமிழரின் இன அடையாளத்தனித்துவத்தை இன்று பறித்து நிற்கிறது..! தமிழன் தமிழனாக உலகில் காட்டப்பட வேண்டின் அவன் தனது பூர்வீகத்துடன் திராவிட மாயைக்குள் இருந்து வெளி வர வேண்டும். எப்படி தெலுங்கனும் கன்னடனும் மலையாளியும் தமிழ் பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பினும் திராவிடத்தை உச்சரித்துக் கொண்டு ஒரு பொதுமைப்பாட்டுக்குள் பதுங்கிக் கிடக்காமல் தமது தனித்துவத்தை காட்ட முனைகின்றனரோ அவர்களை விட பலமடங்கு தனித்துவ அங்கீகாரமுள்ள தமிழன் தான் தன் தனித்துவத்துடன் தமிழன் என்று வாழ வழி வகை செய்யப்பட வேண்டும். திராவிடம் என்ற பொதுப் பூச்சும் பேச்சு மேடையும் எனித் தமிழனுக்கு அவசியமில்லை. அதனால் தமிழன் இழந்தவை போதும் போதும்.

தமிழன் தமிழனாக தன்னை அடையாளப்படுத்துதல்.. தெலுக்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் மலையக்கத்தாருக்கும் வட இந்தியருக்கும் எதிரானதன்று. அது தமிழன் என்ற உலக இன இருப்பின் தனித்துவக் காப்பின் ஒரு அம்சமே அன்றி வேறல்ல..! அதற்கு உரிமைக்காகக் குரல் கொடுக்கும் எவரும் உதவலாம். அதில் தெலுங்கு கன்னடன் மலையாளத்தான் மராட்டியன் ஈழத்தான் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் பங்களிக்கலாம். அதற்காக தமிழன் தனது தனித்துவத்தை மறைத்து திராவிடத்துள் நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை..! தேவைப்பாடும் இல்லை. அப்படி நிற்பது தமிழர்களுக்கே ஆபத்தானதாக அமையும்.

Edited by nedukkalapoovan

இப்படி பார்க்க போனால் பாரதியும் தமிழர் அல்லவே. இவர் பார்ப்பாண இனத்தை சேர்ந்தவர். தமிழை மூச்சாக கொண்டு செயல்படும் தமிழர்களை பார்த்து நீ தமிழன் இல்லை என்று சொல்வது வேடிக்கையானது. எட்டப்பர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.

இலங்கையில் வசிக்கும் சிங்கள்வர்களும் தமிழர்களே. புத்த சமயத் தமிழர்கள் தங்கள் மதத்தை காப்பாற்றுவதற்காக பாளியை தமிழுடன் கலந்து சிங்கள்தை உருவாக்கினார்கள்.

நான் சொல்வதை சரியாகப் படித்துப் பாருங்கள்

நாம் யாரையும் "நீ தமிழன், நீ தெலுங்கன்" என்று வரையறுக்க முடியாது.

ஒரு மண்ணில் 500 வருடங்களாக வாழ்பவர்கள், அந்த மண்ணின் தாய்மொழியை தமது மொழியாக வரித்துக் கொண்டவர்கள், அந்த மண்ணின் இனமாக உணர்பவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

அதை விடுத்து, நீ எம்மவன் இல்லை என்று சொல்வது நாசிசவாதம்.

அவர்கள் தெலுங்கர்களாக இருக்கப்போகின்றார்களா, அல்லது தமிழர்களாக இருக்கப் போகின்றார்களா என்பது அவர்களின் முடிவு.

அவர்கள் தமிழர்களாக வாழ்வதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று அவர்கள் தெலுங்கர்களாக வாழ்ந்தால், அதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

இதில் எதை மறுத்தாலும், அது நாசிசவாதம்.

தந்தை பெரியார், வைகோ போன்றவர்கள் தமிழ் மண்ணோடு கலந்து தமிழர்களாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்.

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன்" என்று சொல்லும் உரிமையோ, அருகதையோ யாருக்கும் இல்லை.

இனவாத சிந்தனையை விடுத்து, உலகத்தைப் பாருங்கள். எல்லாத் தேசிய இனங்களும் சேர்ந்து, அமெரிக்கர் என்ற தேசிய இனம் உருவானதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரே இனமாக இருந்து காலவோட்டத்தில் தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் என்று ஒரு இனம் பிரிந்து போன வரலாற்றையும் பாருங்கள்

ஒரு இனத்தின் முடிவை தீர்மானிப்பது நானோ நீங்களோ அல்ல. காலம்தான் அதைச் செய்கிறது.

தமிழினத்தில் இருந்து பல கோடி மக்களை தனி இனங்களாக பிரித்த வரலாறு, அதே இனங்களில் இருந்து இலட்சக் கணக்கான மக்களை மீண்டும் தமிழர்களாக வாழ வழி செய்திருக்கிறது.

இதை யாராலும் மறுக்க முடியாது.

தந்தை பெரியார் தமிழ்நாடு கேட்டார் என்பதுதான் வரலாறு. பார்ப்பனர்கள் எழுதுகின்ற புத்தகங்களை படித்து பொய்யான செய்திகளை நம்பாது, உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.

தந்தை பெரியார் தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவர். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார். அதற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார்.

அந்த உணர்வோடுதான் அவருடைய தொண்டர்கள் தமிழனுக்கு ஒரு நாடு உருவாக வேண்டும் என்று எமக்காக குரல் கொடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன்" என்று சொல்லும் உரிமையோ, அருகதையோ யாருக்கும் இல்லை.

தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பினும் ராமசாமியே தன்னை கன்னடன் என்று அடையாளப்படுத்தும் போது அவரும் நாசியவாதி ஆகிறாரா..??! :rolleyes::wub:

ராமசாமி கன்னடனே அதில் அவரெ பெருமைப்படுகிறார். ஆனால் அவரைத் தமிழன் ஆக்கி.. தந்தையாக்கி பெரியாராக்கி.. கேவலம் தமிழன் பாதை பூஜை செய்வது.. அநாவசியமானது. தேவையற்றது.

வைகோ தன்னைத் தமிழன் எங்கிறார். அந்த வகையில் அவர் தமிழனாக இருக்கட்டும். அதில் தவறே இல்லை..! அவர் தமிழன் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.. உலகத் தமிழினத்தின் இருப்புக்காகவும் உழைக்கிறார். எனவே அவர் தமிழனாக தன்னை இனங்காட்டிக் கொள்வதால் தமிழருக்கு எந்தப் பாதகமும் இல்லை..! மாறாக அவர் தமிழினத் தொண்டனாகப்படுகிறார்.

ராமசாமி அப்படியானவர் அன்று. அவர் தன்னைக் கன்னடனாக இனங்காட்டிக் கொண்டு திராவிடத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழினத்தை பிராமண அடையாளமிட்டு சாதியமிட்டு பிளவுபடுத்தி சீரழிப்பதை கடமையாகக் கொண்டிருந்தவர். அவரை வைகோவோடு மற்றும் இதர தலைவர்களோடு சமன் செய்ய முற்படுதல் மோசமான செயல்..!

ஒருவரின் கொள்கையை ஏற்பதும் விடுவதும் வேறு. ஒருவர் கொண்ட கொள்கைக்காக அவரை தமிழனாக்குவது முழு முழு... மு .... தனம்..!

தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்காக தமிழன் ஆகிட முடியாது.. மனிதன் என்பவன் கூட தமிழன் ஆக வேண்டின் தமிழன் என்பதற்கான இனத்துவ அடையாளத்துக்கு உரிமையுள்ளவனாக இருக்க வேண்டும்.

தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்ட விரும்பாத கன்னட ராமசாமியை வலுக்கட்டாயமாக தமிழன் ஆக்குவது அவரின் இனத்துவ உரிமையைப் பறித்து தமிழ் பேரினவாதம் பேசி அவரை அவரின் திராவிட மூட்டைக்குள் அடைப்பதாகும். இதுவே நாசியம்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு வாங்குது என்று புரளிகளைக் கிழப்பி புலிகள் மீதான தடையை நீட்டிக்க முற்படுகின்றனர் என்று தமிழகத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-------------

He also criticized Congress leader E.V.K.S. Elangovan's appeal to the Tamil Nadu government to arrest LTTE supporters in the state. Elangovan, is incidentally the grand-newphew of 'Periyar' E.V.Ramasamy Naicker,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24022

------------

தமிழகத்தில் இன்னும் கன்னட ஈ வெ ராமசாமியை "தந்தையாக" "பெரியாராக" மதிப்பளிக்கின்ற போதும் அவரின் உறவினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள கட்சிகள் சிலவற்றுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது ஈ வெ ராமசாமியின் வழியில் எவ்வாறு தமிழக தமிழ் மக்கள் பிறரால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களுக்காக புரட்சி பண்ணுவதாகக் கூறிக் கொண்டு தமிழர்கள் ஒற்றுமைப்படுவதையும் பிராந்தியத்தில் பலமாவதையும் முன்னர் திராவிடம் பேசி வஞ்சகமாக சிதைத்தது போல இப்போ மத்திய அரச விசுவாசம் பேசி சிதைக்கின்றனர் என்பதை இது அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது..!

ஆனால் தமிழக மக்களோ ஈ வெ ராமசாமி தமிழர்களுக்கு தனிநாடு கேட்டார் என்று அவர் திராவிட நாட்டை திராவிடர்களுக்காகக் கேட்டத்தை மாற்றி அவரைப் பெரியாராக்கி வைத்து சிலையும் வைக்க முனைகின்றனர்..! :rolleyes:

பெரியாரோ, பெரியாரின் கட்சியோ ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்று நிரூபிகக முடியாத இயலாமை, பெரியாரின் உறவு வழியில் தேடி நரிகளைக் கண்டு பிடிக்கின்றார்கள், மாமேதைகளுக்கு அசடர்கள் பிள்ளைகளாக வந்து வாய்பது இயற்கையின் விதியில் ஒன்றும் குற்றமாகப் கொள்ளப்படுவதில்லையே!

ஒரே குடும்பத்தில் தம்பி துரோகியாகவும், தமயன் தியாகியாகவும் இருப்பது அதிசயமான ஒன்றா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குடும்பத்தில் தம்பி துரோகியாகவும், தமயன் தியாகியாகவும் இருப்பது அதிசயமான ஒன்றா?

இப்படி இருப்பது ஆபத்துக் குறைவு. பனங்காட்டு நரியாக எஸ் இளங்கோவன் வெளிப்படும் போது ஆட்டுத்தோல் போர்த்திய குள்ள நரி ராமசாமியையும் இனங்காட்டுதல்... தவறன்று..!

எம் ஜி ஆரின் பெயரைக் கட்சிக்கு வைச்சிட்டா அவரெல்லாம் எம் ஜி ஆர் ஆகிடுவாரா என்ன..??! அதேபோல் ராமசாமியின் பெயரில் கட்சி வைத்திருப்பதற்காக அவர்கள் எல்லோரும் ஆட்டுத் தோல் போர்த்திய குள்ளநரிகள் என்பதல்ல அர்த்தம்..!

சில கொள்கை ஈடுபாடு பெயரை முன்னிலைப்படுத்துகிறதே அன்றி வேறல்ல. ராமசாமியை கொள்கை அளவில் போற்றும் நெடுமாறன் ஐயா தமிழ் தேசியக் கட்சி நடத்திறார். திராவிடத் தேசியக் கட்சியல்ல..! இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.. பெயருக்குப் பின்னாடி..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பென்பது ஒருவர் மீது வைப்பதற்கு மிகப்பெறுமதியான காரணமாக 'தமிழனாக இருக்கவேண்டும்' என்று சொல்வதைப் போல இருக்கின்றது இந்தவாதம்.

பெரியார் என்ற வரலாறு தமிழ் இனத்தின் பகுத்தறிவு மீது மண்டிக்கிடந்த இடுட்டை விரட்ட வந்த ஒளி அதனாலேயே நாம் அவரைப் போற்றுகின்றோம்.

போற்றுதல்களுக்கு தகுதியாக அவர் தமிழனாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பென்பது ஒருவர் மீது வைப்பதற்கு மிகப்பெறுமதியான காரணமாக 'தமிழனாக இருக்கவேண்டும்' என்று சொல்வதைப் போல இருக்கின்றது இந்தவாதம்.

பெரியார் என்ற வரலாறு தமிழ் இனத்தின் பகுத்தறிவு மீது மண்டிக்கிடந்த இடுட்டை விரட்ட வந்த ஒளி அதனாலேயே நாம் அவரைப் போற்றுகின்றோம்.

போற்றுதல்களுக்கு தகுதியாக அவர் தமிழனாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தேவன், என்னைப் பொறுத்தவரை ராமசாமியின் கொள்கைகள் தெளிவற்றவை.. தமிழ் மக்களை பிரித்தாளும் நோக்கங்களோடும் செயற்பட உதவுகின்றன.. தமிழரின் தேசிய அடையாளங்களை திராவிட முலாமிடுகின்றன என்பவை போன்ற இன்னோரென்ன காரணங்களால் உங்களில் இருந்து நாம் அவரின் கொள்கைகைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்வதில் இருந்து விலகிச் செல்கின்றோம்.

இங்கு நாம் முதன்மைப்படுத்துவது ராமசாமியின் கொள்கைகளை ஏற்கின்றோம் என்பதறாக கன்னடன் ஆக தன்னை இனங்காட்ட விரும்புபவரின் உரிமையைப் பறித்து அவரைத் தமிழனாக்குவதும் தமிழ் தேசியவாதி ஆக்குவதும்.. தனித் தமிழ்நாட்டின் முன்னோடி ஆக்குவதையுமே..!

இப்போது அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மற்றும்படி ராமசாமியை தமிழனாக்க நான் எப்போதுமே முனையவில்லை..! அதையுமே எதிர்த்து வருகின்றேன்.! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இருப்பது ஆபத்துக் குறைவு. பனங்காட்டு நரியாக எஸ் இளங்கோவன் வெளிப்படும் போது ஆட்டுத்தோல் போர்த்திய குள்ள நரி ராமசாமியையும் இனங்காட்டுதல்... தவறன்று..!

எம் ஜி ஆரின் பெயரைக் கட்சிக்கு வைச்சிட்டா அவரெல்லாம் எம் ஜி ஆர் ஆகிடுவாரா என்ன..??! அதேபோல் ராமசாமியின் பெயரில் கட்சி வைத்திருப்பதற்காக அவர்கள் எல்லோரும் ஆட்டுத் தோல் போர்த்திய குள்ளநரிகள் என்பதல்ல அர்த்தம்..!

சில கொள்கை ஈடுபாடு பெயரை முன்னிலைப்படுத்துகிறதே அன்றி வேறல்ல. ராமசாமியை கொள்கை அளவில் போற்றும் நெடுமாறன் ஐயா தமிழ் தேசியக் கட்சி நடத்திறார். திராவிடத் தேசியக் கட்சியல்ல..! இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.. பெயருக்குப் பின்னாடி..! :rolleyes:

பெரியாரின் பெயரில் நிகழும் அரசியல் தெருக்கூத்துக்களை நான் அறிவேன். அவற்றை விடுவோம். இப்போது பெரியாரின் கொள்கை இவை மனிதாபிமானத்துக்கு ஆகாதவை என்று இனம் காட்டுங்கள் அவற்றைப் பற்றி ஆராய்வது உபயோகமாய் இருக்கும்.

ஈழத்தில் பெரியார் கொள்கைக்கு தேவை அதிகம் இருக்கவில்லை அதனால் அவரின் கடவுள் மறுப்புக்கொள்கை மட்டும் அவதானிக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.

தன் உணர்வுக்கு மனிதன் என்ற மதிப்பு கிடைக்காத போது, பதிலுக்கு எத்துணை வசதிகள் தரப்பட்டாலும் அந்த சூழலை எதிர்த்து எந்த அஸ்திரத்தையும் பிரயோகிக்கும் உரிமையை அவனுக்கு வளங்கவேண்டும். எனவே அதை வாங்கிக் கொடுக்கும் முகமாகவே ஒரு அஸ்திரமாக கடவுள் மறுப்புக்கொள்கையை விவகாரமாகவே பாவிக்க வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

Edited by தேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் பெயரில் நிகழும் அரசியல் தெருக்கூத்துக்களை நான் அறிவேன். அவற்றை விடுவோம். இப்போது பெரியாரின் கொள்கை இவை மனிதாபிமானத்துக்கு ஆகாதவை என்று இனம் காட்டுங்கள் அவற்றைப் பற்றி ஆராய்வது உபயோகமாய் இருக்கும்.

ஈழத்தில் பெரியார் கொள்கைக்கு தேவை அதிகம் இருக்கவில்லை அதனால் அவரின் கடவுள் மறுப்புக்கொள்கை மட்டும் அவதானிக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.

ஒருவனுக்கு மனிதன் என்ற மதிப்பு கிடைக்காத போது, பதிலுக்கு எத்துணை வசதிகள் தரப்பட்டாலும் அந்த சூழலை எதிர்த்து எந்த அஸ்திரத்தையும் பிரயோகிக்கும் உரிமையை அவனுக்கு வளங்கவேண்டும். எனவே அதை வாங்கிக் கொடுக்கும் முகமாகவே ஒரு அஸ்திரமாக கடவுள் மறுப்புக்கொள்கையை விவகாரமாகவே பாவிக்க வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

எந்த அறிவியல் அடிப்படையும் அற்று எழும் பகுத்தறிவு கடவுள் மறுப்புக் கொள்கைகளை நான் ஏற்க மாட்டேன்..! ராமசாமியின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது கூட பிராமண சமூக எதிர்ப்பு என்பதன் கீழும் தனது அரசியலுக்கு பிராமண சமூகம் தந்த தடைகளால் எழுந்த கோபத்தின் மூலமுமே தீவிரமாகிறதே தவிர சமூக அக்கறை என்பது பின்னாடி இணைப்புப் பெற்ற ஒன்று..!

கடவுள் மறுப்பை அறிவியல் மயப்படுத்தவோ சமூக மயப்படுத்தவோ தவறிவிட்டார்கள். கடவுள் மறுப்பை கட்சி அரசியலாக்கி சமூக (பிராமண சமூகத்துக்கு எதிராக) வெறுப்புணர்வை வெளிக்காட்டவே உபயோகித்து வருகின்றனர். இதை பிரிவினையற்ற ஏற்றத்தாழ்வற்ற ஒற்றுமையுள்ள சமூகம் என்பதை விரும்பும் எந்த நடுநிலை மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்..!

கடவுளின் பெயரால் அமைந்த மூடநம்பிக்கைகளைக் களைதல்.. கடவுளின் பெயரால் மக்களைச் சிந்தனையற்றவர்களாக செயற்பட தூண்டல் கடவுளின் பெயரால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் பேணல் போன்ற விடயங்களைக் களைய கடவுள் மறுப்பு அவசியமன்று. அதற்கு சமூக அறிவியல் விழிப்புணர்வும் கல்வியூட்டலுமே அவசியம்.

கடவுளை ஏற்பதையும் விடுவதையும் மக்கள் தங்கள் அறிவியல் மற்றும் கல்வியியல் சார்ந்த சுய சிந்தனைக்குரிய பகுத்தறிவின் மூலம் பெற வேண்டுமே தவிர அடுத்தவரின் கருத்துத் திணிப்பினால் அல்ல..!

கடவுள் என்பதன் அடிப்படையில் சமூக நலனைப் பேணத்தக்க மெய்யியல் அறிவை ஊட்டுதல் தவறன்று. அது மூடநம்பிக்கைககளை வளர்ப்பதில் இருந்தும் தொடர்வதில் இருந்தும் மக்களை சிந்தனையற்றவளாக்குவதில் இருந்தும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை புகுத்துவதில் இருந்தும் பாதுகாக்கும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும்..!

இதனால் ராமசாமியின் 100% கடவுள் மறுப்பு, ராமசாமியின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தொடர்பில் என்னால் அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை மக்கள் பெறுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..!

அதனால் அவற்றை நிராகரித்துவிட்டு அதற்குப் பதிலாக மக்களை அறிவியல் மற்றும் சமூகக் கல்வி மூலம் சுயமாக சிந்திக்கத் தூண்டுதலும் மெய்யியல் கல்வி மூலம் சமூக ஒழுக்கத்தை விதைப்பதும் சாலச் சிறந்தது என்பதை நான் முதன்மைப்படுத்துகின்றேன்..!

இதுதான் எனக்கும் இங்கு ராமசாமியின் கடவுள் மறுப்பு பகுத்தறிவு என்பவற்றை திணிக்க முயல்வோருக்கும் இடையில் கருத்துமுரண்பாட்டுக்கான காரணமே அன்றி வேறல்ல..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த அறிவியல் அடிப்படையும் அற்று எழும் பகுத்தறிவு கடவுள் மறுப்புக் கொள்கைகளை நான் ஏற்க மாட்டேன்..! ராமசாமியின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது கூட பிராமண சமூக எதிர்ப்பு என்பதன் கீழும் தனது அரசியலுக்கு பிராமண சமூகம் தந்த தடைகளால் எழுந்த கோபத்தின் மூலமுமே தீவிரமாகிறதே தவிர சமூக அக்கறை என்பது பின்னாடி இணைப்புப் பெற்ற ஒன்று..!

கொள்ளமாட்டான்..!

கடவுளின் பெயரால் அமைந்த மூடநம்பிக்கைகளைக் களைதல்.. கடவுளின் பெயரால் மக்களைச் சிந்தனையற்றவர்களாக செயற்பட தூண்டல் கடவுளின் பெயரால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் பேணல் போன்ற விடயங்களைக் களைய கடவுள் மறுப்பு அவசியமன்று. அதற்கு சமூக அறிவியல் விழிப்புணர்வும் கல்வியூட்டலுமே அவசியம்.

:rolleyes:

ஒருவனுடைய நம்பிக்கை கடவுள் என்று வணங்குகின்ற ஒன்றை செருப்பால் அடித்து இம்சை செய்வது என்பது, பண்பாடான உலகின் எந்த மூலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்தான் நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு சந்ததியை மனிதனாகப் பிறந்தும் மிருகதரத்தில் உள்ள ஒரு வாழ்கையை வாழ நிர்ப்பந்திக்கின்ற கொடுமைக்குள் இருந்து விடிவைத்தேடிக் கொடுக்கின்ற முயற்சி மேல் உள்ள பாவத்தைவிட மேலான பாவத்தை செய்வது கூட முற்போக்கான சிந்தனை உடையவர்களுக்கு உடன்பாடாகவே இருக்கும்.

பெரியார் தன்னை கன்னடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அல்ல.

பெரியாரிர் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கிய போது, அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அவரை "தெலுங்கர்" என்று மக்கள் மத்தியில் சித்தரிக்க முயன்றனர்.

அப்பொழுது அவர் தன்னுடைய முன்னோர்கள் கன்னடத்தை சேர்ந்தவர்கள் என்பதை சொன்னார்.

அவரை கன்னடர் என்று சொல்லியிருந்தால், சில வேளைகளில் அவர் தன்னை தெலுங்கர் என்று பதில் சொல்லியிருப்பார்.

அவருடைய இந்தக் கூற்று சிலருடைய அர்த்தமற்ற வசைபாடலுக்கு பதிலாகத்தான் இருந்தது.

மற்றையபடி தந்தை பெரியார் என்றைக்கும் தன்னை "கன்னடன்" என்று பிரகடனப்படுத்தியவர் அல்ல.

தமிழினம் சிறக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்ந்த தமிழினத் தலைவர் அவர். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று போராடிய தலைவர் அவர்.

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தமிழினத்தை அழிக்க முனையும் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பெரும் தலைவர்.

பெரியாரின் காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நின்ற அனைத்தையுமே தந்தை பெரியார் எதிர்த்தார்.

ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனிய சிந்தனையை காவும் சில வேளாள மேலாதிக்க வாதிகளும் தந்தை பெரியார் மீது இன்றைக்கும் அவதூறு பரப்புகிறார்கள்.

பெரியாரின் சிந்தனை பரவி "அடித்தட்டு மக்கள்" முன்னேறி விடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுடைய நம்பிக்கை கடவுள் என்று வணங்குகின்ற ஒன்றை செருப்பால் அடித்து இம்சை செய்வது என்பது, பண்பாடான உலகின் எந்த மூலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்தான் நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு சந்ததியை மனிதனாகப் பிறந்தும் மிருகதரத்தில் உள்ள ஒரு வாழ்கையை வாழ நிர்ப்பந்திக்கின்ற கொடுமைக்குள் இருந்து விடிவைத்தேடிக் கொடுக்கின்ற முயற்சி மேல் உள்ள பாவத்தைவிட மேலான பாவத்தை செய்வது கூட முற்போக்கான சிந்தனை உடையவர்களுக்கு உடன்பாடாகவே இருக்கும்.

முற்போக்கு என்பதை நான் முரண்பாடாகச் செய்தல் என்பதாக கருதுவதில்லை. முற்போக்கு என்பது ஒரு சமூகத்தை குறித்த விடயம் தொடர்பில் அறிவு மயப்படுத்தி அதன் சுயசிந்தனையின் பால் மாற்றங்களை உண்டு பண்ணுதல்.. என்பதாகவே கருதுகின்றேன்.

எனவே கடவுள் சிலைக்கு செருப்பாலை அடிக்கிறதையும்.. தாலியைக் கழற்றி வீசுறதையும்.. பொட்டைக் கழற்றி வீசுறதையும் நான் முற்போக்காக்கக் கருதுவதில்லை. இவை வழமைக்கு முரண்படுதல் என்பதாகவே இனங்காண்கிறேன். இவற்றால் சமூகத்துக்குக் கிடைக்கப்பெற்ற அறிவியல் என்ன.. எதுவுமில்லை..! அது சமூகவியல் சார்ந்திருக்கட்டும்.. தனிமனித நடத்தையியல் சார்ந்திருக்கட்டும்..!

ஆனால் அறிவியல் கல்வியூட்டல் மூலமும் சமூகக் கல்வியூட்டல் மூலமும் இந்த செருப்பால் அடித்தல் தாலியைக் கழற்றி வீசல்.. பொட்டை வீசுதல் எந்தளவுக்கு சமூக உபயோகமானது என்பதுடன் குறித்த விடயங்களைப் பின்பற்றுதலால் ஏற்படத்தக்க விளைவுகளின் தன்மைகள் தொடர்பில் ஆய்ந்தறிந்து மக்களே தங்களைத் தாங்கள் தீர்வுகளைத் தேடி தம்மை மாற்றிக் கொள்ள செம்மைப்படுத்த இடமளித்தல் சிறப்பானது..! அதுவே சமூகத்தில் நீடித்து நிலைக்கக் கூடியதுடன் சமூக ஒற்றுமைக்கும் வழி சமைக்கும்..! :rolleyes:

பெரியார் தன்னை கன்னடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அல்ல.

பெரியாரிர் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கிய போது, அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அவரை "தெலுங்கர்" என்று மக்கள் மத்தியில் சித்தரிக்க முயன்றனர்.

ராமசாமி தானே தனது பந்தி ஒன்றில் "நான் கன்னடன்" என்று தற்பெருமைபடப் பேசியதைக் இன்றும் காணலாம்.

"ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்."

ராமசாமி திராவிட ஈடுபாடு கொண்டிருந்த ஒருவரே தவிர மறந்தும் தமிழன் என்ற நிலையில் நின்று தமிழர்களுக்காக தமிழரின் நலனுக்காக என்று பணி செய்தவரல்ல. ஆனால் தற்போது தமிழக அரசியல் தேவைகளுக்காக அங்குள்ள கட்சிகள் அவரை தமிழன் நலன் விரும்பியாகக் காட்டி வருகின்றன என்பதே உண்மை..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பையும் தொடரும் கருத்துகளும் மீண்டுமொரு கருத்துக்களத் தொடரொன்றாக மிளிர்கிறது. களக்கருத்துக்களால் தொடர்களைப் படைக்கும் தட்டெழுத்தர்களை நினைத்துச் சிரிக்கலாம்.. டிவி தொடர்களின் தாக்கம் கருத்துக்கள எழுத்தர்களையும் பாதிக்கிறது.

எய்தவனை (பின் மறைந்திருந்து ஆட்டிவிப்பவனை) நோக்காது அம்பை (இளங்கோவினது வாய்ச் சொற்கள்) நோகலாமா?- ஆராயலாமா?

இதை இணைத்தவரின் நோக்கம் நன்றாகவே புரிகிறது.

1938 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற விடுதலைக் குரல் பெரியாரால் எழுப்பப் படுகிறது. திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின் 1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாட்டின் போது திராவிட நாடு திராவிடருக்கே என மாற்றப் படுகிறது.

தமிழ் நாட்டை திராவிட நாடு என பெரியார் ஏன் மாற்றினார்?

அப்போது தமிழ் நாட்டுடன் ஆந்திராவின் பெரும் பகுதியும், கன்னடம் கேரளம் அகியவற்றின் சில பகுதிகளுமாகச் சேர்ந்து சென்னைத் தலைமாகாணம் என அழைக்கப் பட்டது. அதையேதான் பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றார். பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றவுடன் அவரோடு இருந்த தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் தமது மாற்றுக் கருத்தைத் தெரிவித்தனர். அதன் பின்தான் பெயர் மாற்றப் படுகிறது.

ஆனால் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகி சென்னைத் தலைமாகாணத்திலிருந்து ஆந்திரம், கன்னடம், கேரளம் போன்றவைகள் வெளியேறியவுடன் தனித்து நின்ற தமிழ்ப் பகுதிகளுக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பெரியார் கோரிக்கை விடுக்கிறார்.

அது வரைக்கும் திராவிட நாடு கோரிய பெரியார் அன்றிலிருந்து அதைத் தூக்கிப் போட்டு விட்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். தனது விடுதலை நாளேட்டில் தங்கள் கட்சியின் கொள்கை முழக்கமாக இருந்த திராவிட நாடு திராவிடருக்கே என்ற பதத்தை மாற்றி தமிழ் நாடு தமிழருக்கே என்று எழுதினார். இறுதிவரைக்கும் அதிலிருந்து அவர் விலகவில்லை.

1960 ஆம் ஆண்டு இந்திய வரை படத்தை பெரியார் தீயிட்டுக் கொளுத்தும்போது தமிழ் நாடு நீங்கலான வரைபடத்தையே கொளுத்தினார். இந்திய வரை படத்தில் ஆந்திராவும் கன்னடமும் கேரளாவும் அடங்கியிருந்தன.

தான் இறப்பதற்கு முன் அவர் பேசிய இறுதி உரையின்போது, என் தமிழனுக்கு என்னால் விடுதலையை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என அவர் வேதனையால் முனகியது தமிழ் நாட்டு விடுதலை தொடர்பான அவரது வேட்கையையே வெளிக்காட்டி நிற்கிறது. பெரியாரின் விடுதலை முழக்கமானது தமிழ் நாடு எனத் தொடங்கி பின் திராவிட நாடு என மாறி அதன் பின் இறுதியில் தமிழ் நாடு என்றே முடிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு ராமசாமி பற்றி இல்லை எனினும் இங்கு ராமசாமி பற்றி போலிப் புகழ்பாட திரிவுகளை முன் வைப்பதையிட்டு இப்பதிவு இடப்படுகிறது.!

நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '

விஸ்வாமித்ரா

சமீபத்தில் வெளியான 'ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' என்ற

புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர்.

'இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்

கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற

எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் '

என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்

பட்டிருக்கின்றன.

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே

பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

'நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்

கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப்

படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள

புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம்,

ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர்,

கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக்

காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி

எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு

- அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார்

என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள்

அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி

மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின்

கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று

கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக

மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்

அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். '

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,

இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,

ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை,

சொல்லும் செயலும் முரணானவையே,

வரலாற்றுத் திரிபுகள்,

தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,

வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,

ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,

தேசப்பற்றி இல்லாத ஈவேரா,

பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,

சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும்

என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார்

ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள் ' என்று முத்துராமலிங்கத்தேவர்,

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம்

ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ' என்ற முதல் அத்தியாயத்தில்

இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

'ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால்

கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை

அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு

சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில்

பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. '

ஈவேரா தமிழரா ?

'ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர்

என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு

தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே

உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர்

தலைவர் ' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே -

அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ' (பெரியார்

ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார்

வகுப்பைச் சேர்ந்தவன் ' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்

படுத்திக் கொள்கிறார். '

'நான் கன்னடியன் ' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்

கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக்

கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன் ' என்று சொல்லிக் கொண்டே

ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது

கொஞ்சநஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும் ' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

' 'இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள்

அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன்,

3.கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக

செய்துவிட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு

கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும்

முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர்

படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்

பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும்

தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்

பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி

விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக்

கொண்டவர் ஆவார்கள். '

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

'அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,

மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத

சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப்

பரக்கக் காணலாம். '

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த

இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும்

துரோகிதானே ?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர்

பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின்

பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி

21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று

கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்

அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல்

அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,

அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட

இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்று

பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா

பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல்

ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று

போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால்

அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட

இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில்

நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the

names Jinnah and Robinson so sweet to you Sir ? How is

the name of poor Tilak so bitter to you Sir ? I am not

able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில்

ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர்

பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த

நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்

அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த

கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக்

காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை

சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க

வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்

சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம்

பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப்

பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்

'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன்

கேட்பானா ?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு

இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக்

கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற

வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை

மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து

கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு

யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை

அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது

சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது

வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு

அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு

கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய

ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம்

படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள்

அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி

எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' என

ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது

சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று

பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை

எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ்

என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற

பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய

போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள்

அனுமதிக்க மாட்டோம்.

'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர்

அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி

இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி

கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான்

அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

இதுவா தமிழ் நாகரீகம் ?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக

விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய

கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்

கொள்கிறேன்.

நன்றி திண்ணை.

ராமசாமி மற்றும் அவரது பேரன் போட்ட கூத்துக்களை படிக்க விரும்புறவை இங்கும் போய் பாருங்க.. :rolleyes:

http://www.tamilnadutalk.com/portal/index....c=5946&st=0

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.