Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

Featured Replies

ஒலிவடிவம்:

1. ஈ சினிப்ஸ்

2. ஐஜிக்

பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன்

குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன்

இசை: டிசான்

புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!

கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!

புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!

கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!

எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

jESUS WE LOVE YOU! weLcome to the world!

ஆ... ஆ.... ஆ..... ஆ...

பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற

தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!

பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற

தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!

மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்

எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..

மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்

எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!

ஆ... ஆ.... ஆ.....

கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!

கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!

கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!

கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!

கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்

எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..

கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்

எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!

ஆ... ஆ.... ஆ.....

இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!

இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!

இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!

இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!

அன்பு அமைதி உலகில் பொங்கி

ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..

அன்பு அமைதி உலகில் பொங்கி

ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!

ஆ... ஆ.... ஆ.....

எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன

சின்ன இதயங்களை நீ பார் பார்!

எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன

சின்ன இதயங்களை நீ பார் பார்!

உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து

உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..

உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து

உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..

எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

jESUS WE LOVE YOU! weLcome to the world!

ஆ... ஆ.... ஆ.....

There is a country Called Sri Lanka

Everyday Tamil people are suffering..

Noway people live in harmony

no money even no food to eat

arresting abducting killing harassing

Discrimination by the Govenment..

Jesus we need your present at this Time

Thisis the only way we could stop crime

There is a country Called Sri Lanka

Everyday Tamil people are suffering..

Noway people live in harmony

no money even no food to eat

arresting abducting killing harassing

Discrimination by the Govenment..

Jesus we need your present at this Time

This is the only way we could stop crime

arresting abducting killing harassing

Discrimination by the Govenment..

Jesus we need your present at this Time

This is the only way we could stop crime

arresting abducting killing harassing

Discrimination by the Govenment..

Jesus we need your present at this Time

This is the only way we could stop crime

photo3376ag6.jpg

அனிதா

Thusnavis

கலைஞன்

லாவண்யா

அபிஷன்

டிசான்

மோகனா

நாகேஸ்வரன்

இமானுவேல் ஒலிப்பதிவு கலையகம்

யூரியூப் இணையம்

யாழ் இணையம்

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்லாயிருக்கின்றது வாழ்த்துக்கள். மாப்பு எதற்கும் உங்கள் குரலை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்னமோ மாதிரியிருக்கின்றது

  • தொடங்கியவர்

நன்றி கு.சா அண்ணா. நான் குரல மாத்தின மாதிரி இருக்கிதோ? ஒலிப்பதிவு செய்த அண்டைக்கு தொண்டை கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.

கலைஞன் நல்ல முயற்சி. நேரம் மினக்கட்டு, ஆர்வமுள்ளவர்கள் இணைந்த சிறப்பாக பயனுள்ள ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நல்ல முயற்சி கலைஞன்

வாழ்த்துகளும் பாராட்டுகளும்...........

sclaus-20.jpg

அனைவருக்கும் நத்தார் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கலைஞன் மற்றும் உங்கள் குழுவிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் சேர்சில் ஞாயிறு ஆராதனைகளில் பாடுபவரா. அப்படியே கரோல் வடிவில் தந்திருக்கிறீர்கள்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது கலைஞன்.

  • தொடங்கியவர்

நன்றிகள் இளைஞன், அஜீவன் அண்ணா, சாத்திரி அண்ணா, நெடுக்காலபோவான், தூயவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி கலைஞன். நன்றாக உள்ளது.உளம் கனிந்த நத்தார் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி நுணாவிலான். உங்களிற்கும் உளம் கனிந்த நத்தார் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைஞன் இன்று கிறிஸ்மஸ் தினத்தில் உங்கள் பாடல் கேட்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

எனது மனப்ப+ப்வமான நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி கண்மணி. உங்களுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

  • 2 weeks later...

ஜெனரல் கலக்கிட்டியள் நீங்களும் உங்க குழுவும் அந்த மாதிரி இருக்கு :D நல்லா தான் பாடுறியள் அதிலையும்.........ஆ...ஆ...ஆ..ஆ என்று ஒரு இடத்திலை பாடுறியள் நேக்கு ரொம்பவே பிடித்திருந்தது :lol: உங்களிற்கும் உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள் :lol: .....அது சரி ஜெனரல் உங்க குழுவில உள்ள ஆட்களை எனக்கும் அறிமுகபடுத்துறது ஏன் கேட்கிறேன் என்று தெரியுமோ சும்மா தான் :) ...நானும் ஒரு பாட்டை பாட தான் நான் பாடினா எப்படி இருக்கும் என்று நினைக்கிறியள் :) ம்ம் அல்லாவை நோக்கி பாட போறேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி! நன்றி! பிரச்சனை இல்ல. நான் சிட்னிக்கு உங்கள பாக்க வரேக்க அங்க ஒரு பாட்டு செய்வம். அதில நீங்களும் என்னோட சேந்து பாடலாம். ரப் மாதிரி ஏதும் பாடலாம்.

நான் இந்த பாடலில ஆங்கிலத்த கலக்க வேண்டி வந்தது ஒரு தற்செயலான சம்பவம். மியூசிக் செய்த நண்பர் பாட்டிண்ட மெலடிய பாடி அனுப்பச் சொல்லி கேட்டு இருந்தார் மியூசிக் செய்ய. நான் பாடி அனுப்பினன். எண்டாலும், அவருக்கு நேரப் பற்றாக்குறை இருந்ததால கடைசி நேரத்திலதான் மியூசிக்க செய்து தந்தார்.

அவர் முதல் தரம் அனுப்பின மியூசிக்கில சில மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தது. நான் அவருக்கு இன்ன இன்ன மாற்றங்கள் செய்யவேணும் எண்டு சொல்லி இருந்தன். ரெண்டு நாளில எனக்கு பைனல் மியூசிக்க செய்து தந்திட்டு அவர் வக்கேசனில எங்கையோ தூர இடம் போட்டார்.

அவர் கடைசியா அனுப்பின மியூசிக்க வச்சு நான் ஆரம்பத்தில நினைச்சமாதிரி பாடலிண்ட இறுதிப் பகுதிய தமிழில பாட முடியவில்ல. இதவிட அடுத்தநாள் பாடல ஒலிப்பதிவு செய்யவேண்டி இருந்தது. இதால உடனடியா அண்டு இரவு என்ன செய்யுறது எண்டு கிடுகிடு எண்டு யோசிச்சுப் போட்டு கடைசியில ஆங்கிலத்தயும் கலந்து எழுதி பாடலிண்ட இறுதிப் பகுதிய வித்தியாசமா செய்ய வேண்டி போச்சிது.

பாட்ட கேட்ட கொஞ்சப் பேர் ஆங்கிலப்பகுதி தமிழவிட நல்லா இருக்கிறதா சொல்லிச்சீனம். சிலர் ஆங்கிலப்பகுதி நல்லா இல்ல எண்டு சொல்லிச்சீனம்.

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.