Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் என்னும் மாயை

Featured Replies

2006 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக The God Delusion இருக்கிறது.

இதை எழுதியவர் பிரித்தானிய உயிரியிலாளரும் Oxford பல்கலைக்கழக பேராசிரியர் Richard Dawkins. மக்களிற்கு விஞ்ஞானத்தை விளங்கப்படுத்த வைக்கும் முயற்சிப் பிரிவின் தலைவராகவும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார் (holder of the Charles Simonyi Chair for the Public Understanding of Science at the University of Oxford. Charles Simonyi என்பவர் மைக்குரோசொப்ற் நிறுவனத்தின் MS Office Application பிரிவை ஆரம்பித்து வெற்றிகரமாக அபிவிருத்தி செய்தவர்).

கடவுள் என்னும் மாயை என்ற புத்தகத்தில் சொல்லப்படும் முக்கிய விடையங்களாக...

Supernatural creator (எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள்?) என்று ஒன்று அனேகமாக இருக்க முடியாது (almost certainly does not exist). எனவே கடவுள் நம்பிக்கை என்பதை ஒருவகை மாயையாகத்தான் வகைப்படுத்த முடியும். பலமான ஆதாரங்களிற்கு முரணாக ஒரு நம்பிக்கை போண முனைவது மாயை என்ற வரையறைக்குள் வரவேண்டியது என்கிறார். ஒருவர் மாயையால் கண்டுண்டு இருந்தால் அது மனநோய். பலர் ஒரு மாயையால் கண்டுண்டிருந்தால் அது மதம் ஆகிறது.

மதம் என்பதை விமர்சனத்திற்கு அப்பாற்படுத்துவது தவறு. ஒருவரின் அரசியல் நிலைப்பாட்டை வலதுசாரியா இடதுசாரியா பழமைவாதியான என்று விமர்சிக்க முடிவது போல் மதமும் இருக்க வேண்டும்.

பெற்றோரின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களது பிள்ளைகளையும் கிறீஸ்தவப் பிள்ளை இஸ்லாமியப் பிள்ளை இந்துப் பிள்ளை என்று லேபல் குத்துவது தவறு. அவர்களின் சுய தெரிவிற்கு விடவேண்டும். இதை நாம் அரசயில் நிலைப்பாட்டிலோ அல்லது இனவாதியான பெற்றோருக்கு பிறந்த பிள்ளையும் இனவாதி என்று முடிவு கட்டுவதில்லை. அவர்கள் அப்படி இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம் ஆனால் அவ்வாறே ஆரம்பத்தில் இருந்து அவர்கள் அந்தப் பெயரை சுமக்கச் செய்வது தவறு.

http://en.wikipedia.org/wiki/The_God_Delusion

பிபிசி இன் Hardtalk என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் 2007 இன் சிறந்தாக Prof Richard Dawkins உடனான அவரது புத்தகம் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

Part1

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிறமொழி ஆக்கங்களுக்க போக வேண்டியது ஏன் இங்க இருக்குது. என்ன ரோக் என்றாலும் அங்க வைச்சு பேசிக்கலாமே..! :lol:

Edited by nedukkalapoovan

இதை ஆங்கில பகுதிக்கு நகர்த்தினீர்கள் என்றால்................

We can have a constructive debate in English on Mr.Dawkins and his arguments

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

திரைகடல் பகுதி வந்து வேற்று மொழி ஆக்கங்களை வெட்டி ஒட்டத்தான் வைச்சிருக்கே அன்றி வேற்று மொழியில் கருத்தாட அல்ல. :lol:

ஆனபடியா கலாநிதி வெற்றிவேல் வெக்கப்படாமல் இங்கையே தமிழில் உங்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை வைய்யுங்கோ :D

இல்லை ஆங்கிலத்திலான் செய்வன் எண்டா TRF இக்கு வாங்கோ :D

ஆனபடியா கலாநிதி வெற்றிவேல் வெக்கப்படாமல் இங்கையே தமிழில் உங்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை வைய்யுங்கோ :lol:

Uh! you got a wonderful 6th sense :D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

Uh! you got a wonderful 6th sense :D

you mean.... so funny.................... :lol::D

திரைகடல் பகுதி வந்து வேற்று மொழி ஆக்கங்களை வெட்டி ஒட்டத்தான் வைச்சிருக்கே அன்றி வேற்று மொழியில் கருத்தாட அல்ல.

ஆனபடியா வெற்றிவேல் வெக்கப்படாமல் இங்கையே தமிழில் உங்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை வைய்யுங்கோ

அப்படியென்றால் திரு.டோக்கின்ஸின் வாதங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்ப்பு செய்து இணைத்து விடுங்கள். நமது விவாதத்தின் அடிப்படை என்னவென்று அறிந்துகொள்ள ஆங்கிலத்தை விட தமிழை சிறப்பாக புரிந்து கொள்ளக்கூடிய கள நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஞ்ஞானி தர்க்கிப்பதால் அது விஞ்ஞானம் ஆகிடாது. இது முழுக்க முழுக்க தர்க்க ரீதியான அணுகுமுறையினூடு "கடவுளின் இருப்பை" அணுகுதல். தர்க்கத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தை காட்டிட்டு மறுபக்கத்தை மறைப்பது விஞ்ஞானமும் அல்ல அறிவியல் அணுகுமுறையும் அல்ல..! விஞ்ஞானம் ஆம் என்று சொல்லவும் சரி இல்லை என்று சொல்லவும் சரி விளக்கங்களையும் ஆதாரங்களையும் சரிவர முன்வைப்பது. தர்க்கத்துக்கு இடமில்லாத நிரூபணங்களை வேண்டி நிற்பது..!

மேலுள்ள கடவுள் - மாயை உட்பட குறித்த தர்க்கிப்பின் இரண்டு பக்கங்களையும் கீழ் உள்ள இணைப்பில் அணுகி திறம்படத் தொகுத்து ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். ஆங்கிலப் பாண்டியத்தியம் மிக்கவர்களுக்காக திறக்கப்பட்ட இத்தலைப்பின் கீழ் குறிப்பிட்டவர்களே இதைப் படித்துப் பார்க்கலாம்..!

மேற்குறிப்பிட்ட கடவுள்- மாயையை எதிர்க்கவும் ஆதரிக்கவும் செய்யும் தர்க்கங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு.. இந்த கடவுளின் இருப்பு என்ற தலைப்போடு அடக்கப்பட்டிருக்கிறது...!

Existence of God

http://en.wikipedia.org/wiki/Existence_of_God

யாழின் விவாத நோக்கம் ஆங்கிலத்தில் விவாதிப்பதல்ல. ஆங்கிலத்தில் விவாதிப்பதாயின் யாழோடு கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்ல..! யாழை விட திறமையான அறிவியல் போறங்கள் ஆங்கிலத்தில் உள்ளன..!

ஆங்கில மொழிமூல விவாதக்களம்..

http://www.sciencechatforum.com/bulletin/v...c80504514b81f48

அதுமட்டுமன்றி ஆங்கிலப் பதங்களை அப்படியே தொடர்சியாக தமிழினுள் புகுத்திக் கொண்டிருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவாது. அதுமட்டுமன்றி தமிழில் தொடர்ந்து கலைச்சொற்களுக்கான இடைவெளியை அதிகரிக்கவே செய்யும்..! இவற்றை எல்லாம் தவிர்க்க என்றுதானே யாழில் தமிழில் முக்கித் திணறி எழுதிறம். ஆனால் சிலர் தொடர்சியாக.. இதைக் கவனத்தில் கொள்வதில்லை. நிர்வாகமும் அவர்களின் நடைமுறைக்கு ஒத்தாசையை வழங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றீடுகளை தேடுவதோ பிரேரிப்பதோ கிடையாது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஸ்டவசமாக தமிழில் ஒரு Richard Dawkins இல்லாததால் ஆங்கில அறிவாளரின் கருத்தை உள்வாங்கி தமிழில் கருத்தாடி தமிழை வளர்க்கலாமே?

கடவுள் என்னும் மாயை

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்?

இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா?

இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்?

மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எனக்குத் தெரியவில்லை, என்னால் இந்தச் சோகத்தை எதிர்க்கொள்ள முடியவில்லை ஆகவே நான் கடவுள் என்னும் ஒரு மாயையில் நம்பிக்கை வைக்கிறேன் என்பது, கடவுள் நம்பிக்கை பற்றி அண்மையில் கண்மணி எழுதிய பதிவின் தொனிப் பொருளாகவும் இருந்தது.ஆகவே கடவுள் என்பது நாமாகவே உருவாக்கும் ஒரு மாயை என்பதை ஏற்றுக் கொள்கிறோமா? சரி அப்படி என்றால் ஏன் நாம் அப்படியான ஒரு மாயைக்குள் வாழ வேண்டும்? உளவியல் ரீதியாக மன ஆற்றலை ஆரய்ந்த வல்லுனர்கள் சொல்வார்கள் ,எவனொருவன் தனது தலைவிதியயைத் தானே தீர்மானிக்கும் உள உரனை உடையவனாக இருக்கிறானோ அவனே தனது தலை விதியை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெறுகிறான் என்ங்கிறார்கள்.

தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டு மென்று சொல்லிச் செத்துப் போன தந்தை செல்வாவுடன், தமிழர் தலை விதியை நாம் தான் மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட ஒரு பதினாறு வயசுப் பையன் நிகழ்த்திய சாதனைகளின் பின்னால் இருப்பது இந்த உள உரன் என்பது எமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம்.என்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று எழும் நம்பிக்கையே மாற்றங்களை நிகழ்த்த வல்லது.என்னால் எதுவும் முடியாது அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது, அப்பனே முருகா என்னைக் காப்பது என்பதால் என்ன மாற்றத்தை நிகழ்த்தி விட முடியும்?இது எனது விதிப் பயன்,இது தான் எனது தலை எழுத்து என்று சொல்லி விட்டு முயற்ச்சி எதுவும் அற்று இருப்பதால், விதி என்னும் புற நிலையை நாமே எமது அகத்திற்குள் வரவழைத்துக் கொள்கிறேம் அல்லவா?ஆகவே இந்த கடவுள் என்னும் மாயையில் இருந்து விடுபட்டால் இந்த 'விதி வழி ' என்னும் மாயைக்குள் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது அல்லவா?

கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று கூறும் எல்லா மதங்களும் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை மறுதலிக்கின்றன.பரிணாமத் தத்துவத்திற்கு எதிர்வினையாக முன் வைக்கப்பட்ட ஒரு பிரபலமான கூற்று, பின் வருமாறு வருகிறது.

//Fred Hoyle who reportedly stated that the "probability of life originating on Earth is no greater than the chance that a hurricane, sweeping through a scrapyard, would have the luck to assemble a Boeing 747."//

இதை தமிழில் மொழி பெயர்த்தால், உலகில் உயிர்கள் பரிணாமத்தால் தோன்றியதற்கான நிகழ்தகவு ,ஒரு கழிவுப் பட்டறைக்குள் உள் நுழைந்த சூறாவழியால் ஒரு போயிங் 747 விமானம் ஒன்று வடிவமைக்கப் படுவதற்கான நிகழ்தகவை விடக் குறைவானது என்பதாகும்.படைப்பை நிருபிப்பதற்காக fரெட் கொயில் என்பவரால் முன் மொழியப்பட்ட இந்த தர்க்கத்தை, ரிச்சர்ட் டார்க்கின் பின்வருமாறு கட்டுடைக்கிறார்.

முதலாவதாக மிகவும் சிக்கலான ஒரு விமானத்தை வடிவமைப்பதற்கு ஒரு தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர் தேவை.ஆகவே சிக்கலான உயிரினக்களை வடிவமைத்த கடவுள் இன்னும் சிக்கலானவராகவே இருப்பார்.அப்படியான சிக்கலான கடவுளை வடிவமைத்தவர் யார்? அவரைக் கடவுளின் தந்தை என்று கொள்வோமாயின், இன்னும் சிக்கலான கடவுளின் தந்தையை வடிவமைத்த திறமைசாலி யார் என்று இது ஒரு தொடரான கேள்வியாகச் செல்லும்.ஆகவே உயிர்களின் தோற்றத்தைப் பற்றி விளக்கக்கூடிய ஒரு கோட்பாடாக பரிணாமக் கோட்பாடே இருக்கிறது எனலாம்.ஒரு விமானத்தைப் போலன்றி பரிணாமம் என்பது நெடு நாட்களாக நிகழ்ந்த ஒரு விடயம்.பல்வேறு விதமான விகாரங்கள்,தேர்வுகளின் இறுதியில் தக்கன பிழைத்து நிகழ்ந்ததே பரிணாமம்.உயிரினக்கள் இப்போது உள்ள நிலையிலையே வடிவமைக்கப்பட்டன என்பது ஒரு வகை மாயையே.பரிணாமத்திற்கான பல் வேறு வளர்ச்சி நிலைகள் அடையாளம் காணப்பட்டு அந்தச் சங்கிலியில் இருந்த பல் வேறு உயிரிகளும் அடையாளம் காணப்படுள்ளன.பல்லாயிரம் ஆண்டுகளின் முன் இருந்த உயிரிகளும் அகழ்வாராச்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஆகவே இன்று இருக்கும் உயர் நிலை உயிரிகளின் வடிவமே பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னும் இறைவனால் படைக்கப்பட்டன என்பது ஏற்றுக்கோள்ள முடியாத ஒரு வாதமாகும்.

அடுத்ததாக எல்லா கடவுள் சம்பந்தமான வாதங்களும் சங்கமிக்கும் ஒரு வாதம் இருக்கிறது ,அது தான் மனித சிந்தனைக்கு தெரியாத விடயத்தை எதோ ஒரு சக்தியைத் தான் கடவுள் எங்கிறோம் என்னும் வாதம்.இந்த வாதத்தில் இருக்கும் தர்க்கவியற் பலவீனம் என்ன என்பதைப் பார்ப்போம்.முதலாவதாக மனிதனால் விளங்கப் படுத்த முடியாதது என்று சொல்லிக் கொண்டே அதனை 'கடவுள் 'என்னும் கோட்பாட்டால் விளக்கங்கப் படுத்த முயல்கின்றனர்.விளங்கப்படுத்

கடவுள் என்னும் பொய்மை - Prof. Dawkins இன் கருத்துக்கள் பற்றிய ஒர் ஆய்வு

An analysis of God Delusion

By Alister Mc Grath

Professor of Historical Theology, Oxford University

Who holds Phd in both Molecular Biophysics and Theology

Part - 1

Edited by vettri-vel

டார்வினுக்கும் டோக்கின்சுக்கும் சில அற்புதப் படைப்புகள் விடுக்கும் சவால்

EVOLUTION MYTH & PROF. DAWKINS EXPOSED BY AMAZING CREATURES

Part 1

Part 2

Part 3

part4

Edited by vettri-vel

Below are the extracts of speech made by Swami Vivekanada in the World Religious Congress held at Chicago in September, 1893. Amazingly his speech seems to carry appropiate responses to Mr.Dawkins dilemmas even after more than 100 years past since Swami has made his speech.

Swami Vivekananda Speech at Chicago - 11 September 1893 - Welcome Address

Edited by vettri-vel

http://www.timesonline.co.uk/tol/audio_vid...icle1570989.ece

Richard Dawkins, author of The God Delusion in discussion with Professor Alister McGrath, Professor of Historical Theology at Oxford Univ, chaired by Joan Bakewell

Richard Dawkins இக்கும் Alister McGrath இக்கும் இடையில் நடாந்த நேரடி விவாதத்தின் பொட் காஸ்ட் மேல் உள்ள இணைப்பில் இருக்கிறது.

இரண்டு பக்க விவாதங்களையும்கேட்டு எது சரி எது பிழையென்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் கேட்பவர்கள்.

'appropriate response ' ஆ இல்லையா என்பதை அவர் அவரே தான் தீர்மானிக்க முடியும்.ஒருவரின் முன் முடிவுகளை இன்னொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடை முறை.ஆகவே apprppritae ஆ inappropriate ஆ என முடிவு செய்ய வேண்டியவர்கள் பார்வையாளர்கள்.

Richard Dawkins & Alister McGrath Debate part 1/7

Richard Dawkins and Alister McGrath's Debate at The Oxford Literary Festival

Richard Dawkins & Alister McGrath Debate part 2/7

Richard Dawkins & Alister McGrath Debate part 3/7

Richard Dawkins & Alister McGrath Debate part 4/7

Richard Dawkins & Alister McGrath Debate part 5/7

Richard Dawkins & Alister McGrath Debate part 6/7

Edited by narathar

Richard Dawkins & Alister McGrath Debate part 7/7

Dr Francis Collins on CNN - GOD IS NOT A DELUSION

http://youtube.com/watch?v=n0RcpqPa2v8&feature=related

Francis Collins, M.D., Ph.D., is the director of the National Human Genome Research Institute (NHGRI) at the National Institutes of Health (NIH), USA. He led the successful effort to complete Human Genome Project (HGP), a complex multidisciplinary scientific enterprise directed at mapping and sequencing all of the human DNA, and determining aspects of its function. A working draft of the human genome sequence was announced in June of 2000, an initial analysis was published in February of 2001, and a high-quality, reference sequence was completed in April 2003. Dr Francis Collins also the author of the book "The Language of God"

http://www.genome.gov/10000779

Edited by vettri-vel

How is it that some people are both very intelligent and extremely religious, even fundamentalist?

கடவுள் என்பது மாயை அல்ல என்பதை அறிவியற்பூர்வமாக எவரும் நிறுவவில்லை.

Dr Francis Collins தான் உணர்ந்ததாக்ச் சொல்லி இருகிறாரே தவிர அவர் அதற்கான காரணங்கள் எவற்றையும் சொல்ல வில்லை. ஒருவர் தான் உணர்ந்ததாக்ச் சொலவதை மற்றவர்கள் நம்பவேண்டும் என்று சொல்வதற்க்கு என அறிவியல் அடிப்படை இருக்கிறது? Dr Francis Collins பட்டம் பெற்ரவராக இருக்கலாம் ஆனால் கடவுள் என்பது மாயை அல்ல என்பதை அவர் தான் பெற்ற அறிவால் எங்குமே நிறுவவில்லை. வெற்றிவேல் இணைத்த விவரணத்தில் எந்தவிதமானா காரணக்களும் கூறப்படவில்லை.குறைந்தளவில் கடவுள் என்னும் மாயை மறுதலிப்பதற்கான தர்க்கங்கள் கூட இல்லை.

God and DNA made easy

ஆளாளுக்கு இங்கிலிசிலை நீளமா எழுதியும்... யூரியூப் வீடியோக்கள இணைச்சும் சனத்த பயப்படுத்திக்கொண்டு இருக்கிறீங்கள். இப்ப நாங்களே மாயை எண்டு சிலர் சொல்லுறீனம். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? இந்த உலகம் மாயைதானே?

எல்லாம் மாயைதானா? எங்கட லெவலுக்கு இவ்வளவுக்கு மேல போனா மேல்மாடி தாங்காது.

கலைஞன் சொல்லுறது சரிபோலத்தான் படுது!!

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

இணைபிரியாத இறைவனை மறந்தனையோ

இணைபிரியாத இறைவனை மறந்தனையோ - உனை

ஈன்றவர் முறைமை மீறவும் துணிந்தனையோ - உனை

ஈன்றவர் முறைமை மீறவும் துணிந்தனையோ - உன்

மொழியறிவாலே பலபேர் அறிவு வீணே பொய்த்ததுவோ

மொழிதான் விளையாடியதோ?

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

கனவிலும் மறவா கடவுள் நினைவுடனே

கனவிலும் மறவா கடவுள் நினைவுடனே - உன்

கண்டறியாத விசமக் கருத்துடனே - மன

வேதனை என்னும் தீயதுசூழ வெந்தே வாழ்வதா - இது

நன்றோ மானுடா...

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

:):lol:

கலைஞன் மேல்மாடி மனிசனுக்கு இருக்கிறது அதைப் பாவிக்க.அதைப் பாவிக்காமா இருக்கிறதுஎன்பது சோம்பேறித்தனம்.அதைப்பாவிக்க

ஏன்னென்றால் அவர்களுக்கே தெரியும் எது அவசியம் எது அவசியம் இல்லை என்று. ஊருக்குத் தான் பொய்மையான உபதேசங்கள்.

100% சத்தியமான வார்த்தைகள்! ஆனால் தாங்கள் தப்பிப்பிழைத்த பின்னரும், வாழ்ந்து அனுபவித்த பின்னரும் தெரிந்து கொண்டே ஏன் சில முதியவர்கள் இளையோருக்கு தவறாக வழிகாட்டுகின்றனர் என்பது மர்மாகவே இருக்கிறது!

மூடநம்பிக்கையை ஒழித்து, தன்னம்பிக்கையை வளர்த்து ஒவ்வொரு விடயத்தையும் பல கோணத்தில் பகுத்தாயும் திறனை இளையோரிடம் ஊக்குவிக்கும் நவீன சிறுவர் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு சற்சங்கம், சொற்பொழிவு என்று கூட்டம் கூடி மாற்றான் பிள்ளைக்கு தவறாக வழிகாட்டி விடும் தந்திரம் தான் ஏனோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.