Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கொம்பெனித் தெருவில் குண்டு வெடிப்பு

Featured Replies

இன்று காலை கொழும்பு கொம்பெனித் தெரு (Slave Island) நிபோன் ஹோட்டலின் முன் இராணுவ பஸ் ஒன்றை இலக்கு வைத்து குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டள்ளது.. இச் சம்பவத்தில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் மரணமடைந்தவர்களில் இருவர் இராணுவத்தினன் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜானா

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

20 பேர் காயப்பட்டுள்ளார்கள். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு பேர் மரணமடைந்ததுள்ளதாகவும் அதில் இருவர் இராணுவத்தினனும் இரு பொதுமக்களும் என இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பு கொம்பெனித் தெரு (Slave Island) நிபோன் ஹோட்டலின் முன் இராணுவ பஸ் ஒன்றை இலக்கு வைத்து குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டள்ளது.. இச் சம்பவத்தில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் மரணமடைந்தவர்களில் இருவர் இராணுவத்தினன் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜானா

குண்டும் சாவும் அவரவர் வீடு வாசல்ல வந்தாத்தான் சிங்களவனுக்கு புரியும்

Edited by Appu

மகேஸ்வரனின் கொலையால் ஆட்டம்கண்டிருக்கும் இலங்கை அரசின் செல்வாக்கை சரிசெய்ய அரசால் அல்லது அரசஒட்டுக்குழுவால் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்பாக இது இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேஸ்வரனின் கொலையால் ஆட்டம்கண்டிருக்கும் இலங்கை அரசின் செல்வாக்கை சரிசெய்ய அரசால் அல்லது அரசஒட்டுக்குழுவால் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்பாக இது இருக்கலாம்

நிச்சயமாக இப்போ உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு கண்டனம் தெரிவிப்பார்கள்.

உலக நாடுகளின் கண்டனம் என்பது அவர்களின் கேவலமே, அதனால் ஆகப்போறது ஒன்றுமில்லை... இதுக்கு மேலே அவர்கள் என்னதான் செய்து புடுங்கப்போயினம்... ராஜபக்ஸவின் கோமணந்தான் தோய்க்காத குறை... மிச்சமெலலாம் செய்துட்டினம்.

  • தொடங்கியவர்

வெடித்தது கிளைமோர் குண்டு என தற்போது இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ஜானா

இந்த கிளைமோர்த் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐநாவின் பொதுச்செயலருடன்(நிச்சயம் கண்டன அறிக்கை வெளியிடுவார்) நிறைய நாடுகள் தயாராகுகின்றன. அதே அறிக்கையில் மகேஸ்வரனின் கொலைக்கு கண்டனம் தெரிவிக்காது வருத்தம் மாத்திரம் தெரிவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெடித்தது கிளைமோர் குண்டு என தற்போது இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ஜானா

நிப்போன் ஹோட்டலுக்கும் மிக அருகில் விமானப்படையினரின் ஒரு சோதனைச் சாவடி இருக்கிறது. அந்த சோதனைச் சாவடிக்கு முன்னால் இராணுவ முகாம் ஒன்று இருக்கிறது. இத்தனை பாதுகாப்பான இடத்தில் கிளைமோர் குண்டென்றால் சந்தேகம் இன்னமும் வலுக்கின்றது. அத்துடன் அதிகாலையில் அந்த வீதிகளில் இராணுவமும் நாய்களும்(இராணுவ நாய்) ரோந்து சென்று குப்பைகள் சந்துகள் பொந்துகள் எல்லாம் கிளறுவார்கள்.

இந்த கிளைமோர்த் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐநாவின் பொதுச்செயலருடன்(நிச்சயம் கண்டன அறிக்கை வெளியிடுவார்) நிறைய நாடுகள் தயாராகுகின்றன. அதே அறிக்கையில் மகேஸ்வரனின் கொலைக்கு கண்டனம் தெரிவிக்காது வருத்தம் மாத்திரம் தெரிவிப்பார்கள்.

முதல் ஆளாக மன்மோகன் சிங் என்ற சர்தாஜீ ஜோக் அடிப்பார்.

இது சிங்கள அரசால் 2008ல் தமிழனுக்கு அடிக்கும் சாவு மணி.. அதற்க்கு முன் .. நாம் அவனுக்கு(சிங்களவனுக்கு) .. ஊத வேண்டும் சங்கு

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி! 22 பேர் காயம்

கொழும்பில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலி்ல் 4 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 22 பேர் காயமடைந்துள்ளளனர்.

companyroad1fl6.gif

இன்று காலை 9.30 மணியளவில் கொம்பனித் தெருச் சந்தியில் சிறீலங்காப் படையினரை ஏற்றிச் சென்ற பேரூந்தை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

companyroad2el7.gif

இத் தாக்குதலில் படைத் தரப்பில் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் பெண்கள். 8 படையினர் உட்பட 22 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.

companyroad3ch1.gif

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.

companyroad4eb4.gif

companyroad5on3.gif

companyroad5on3.9cbd6f643d.jpg

படங்கள்: டெய்லி மிரர்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ பஸ்ஸை இலக்குவைத்து கொம்பனி வீதியில் குண்டுத்தாக்குதல்

1/2/2008 12:30:14 PM

வீரகேசரி இணையம் - கொழும்பு கொம்பனி வீதி சந்தி ஹொட்டலிற்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பொதுமக்கள் மற்ரும் ஒரு இராணுவ வீரர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 24 பேர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்களுள் 14 பொதுமக்களும்,10 இராணுவ வீரர்களும் அடங்குவதாக வைத்திய சாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற பஸ்ஸிலொன்றே இக்குண்டு தாக்குதலிற்கு இலக்காகியதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இக்குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலியில் திடீர் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளனர்.இவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் படுகொலையின் முக்கியத்துவத்தை குறைத்து சர்வதேசத்தின் மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப இந்தத் தாக்குதல் அரச தரப்பால் நடத்தப்பட்டுள்ளது போலவே தெரிகிறது அல்லது மகேஸ்வரனின் படுகொலைக்குப் பதிலடியாக ஐ தே கவே இதை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முனைந்திருக்கலாம். ஐ தே க லேசுப்பட்ட கட்சியல்ல. அதுவும் கொடிய பேரினவாத பயங்கரவாதக் கட்சிதான்..!

இக்குண்டு வெடிப்புக்கும் தமக்கும் பொறுப்பில்லை என்று புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

Military officials said they suspected the separatist Tamil Tigers. The rebels denied involvement, Reuters reported

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7167384.stm

"We have nothing to do with that," rebel military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from the Tigers' northern stronghold of Kilinochchi. "It is up to the government to find out who did it."

http://www.reuters.com/article/worldNews/idUSSP3004520080102

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் உங்கள் ஊகம் சரியனது போலத்தான் உள்ளது. த(கொ)லைநகரில் தற்போது சிங்களவரும் உந்தக் கருத்தைத்தான் வெளியிடுகின்றார்கள். திரு.மகேஸ்வரனின் கொலைக்கு வெளிநாடுகளின் அழுத்தங்களைக் குறைப்பதற்கான செயல் இது என்றே தோன்றுகின்றது.

ஜானா

அரசுப்பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களை உலகம் புரிந்தும் புரியாமல் ஏன் தான் இருக்கிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கிளைமோர் தாக்குதலுக்கு அமெரிக்கா உடனடிக் கண்டனம். அதோடு இணைத்து மகேஸ்வரனின் கொலைக்கும் பிந்திய கண்டனம்..!

கொழும்பில என்ன வெடிச்சாலும் அமெரிக்காவுக்கு சரியான கவலை. ஆனால் தமிழ் பகுதிகளில் விமானக் குண்டுகளாக் கொட்டேக்கையோ கிளைமோர் வெடிக்கேக்கையோ அதில அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி...!

கொழும்பில குண்டு வெடிச்ச உடன கண்டனம் வருகுது. அதோட சேர்த்து மகேஸ்வரனுக்கும் கண்டனம் வரச் செய்யப்பட்டிருக்குது..!

ஆக அமெரிக்காவின் பார்வையில் சிங்களப் படையினர் உட்பட சிங்களவர்கள் எல்லாம் மனிதர்கள். தமிழர்கள் அது புலி என்றால் என்ன மகேஸ்வரன் (பேரினவாதக் கட்சிகளில் இருந்தாலும் கூட) என்றால் என்ன அப்பாவி மக்கள் என்றால் என்ன எல்லாரும் பயங்கரவாதிகள்...!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24150

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Claymore attack in Colombo targets SLA bus, 5 killed, 24 wounded

[TamilNet, Wednesday, 02 January 2008, 04:11 GMT]

Two SLA soldiers and three civilians were killed, 10 SLA soldiers and 14 civilians were wounded Wednesday around 9:30 a.m. in Colombo's High Security nerve center at Slave Island, 200 meters from Sri Lanka Army headquarters and the Sri Lanka Air Force (SLAF) headquarters, where a Claymore mine was triggered targeting a bus carrying SLA soldiers, Police said. The attack comes a day after a leading Tamil parliamentarian of the opposition UNP, Thiyagarajah Maheswaran, was assassinated inside Ponnampala Va'neasvarar temple while attending New Year's prayers.

Two of the killed civilians were students of two leading boys schools. Three civilian vicitms were identified as Pathum Dissanayke, 14, of Ananda Vidiyalalya in Maradana, Manith Lasindu, 16, of Asoka Vidiyalaya in Maradana and Renuka Krisantha, 42, of Maradana.

One of the two SLA soldiers killed in the attack was identified as Jayantha Kumara from Passara, Badulla.

24 wounded, including 10 SLA soldiers, have been admitted at Colombo national hospital.

The Claymore attack has taken place in a high security area surrounded with military headquarters and police, near Colombo Fort. There are at least 7 checkposts in the location with business establishments and hotels with civilian traffic.

கொழும்பு கிளைமோர் தாக்குதலுக்கு அமெரிக்கா உடனடிக் கண்டனம். அதோடு இணைத்து மகேஸ்வரனின் கொலைக்கும் பிந்திய கண்டனம்..!

கொழும்பில என்ன வெடிச்சாலும் அமெரிக்காவுக்கு சரியான கவலை. ஆனால் தமிழ் பகுதிகளிl விமானக் குண்டுகளாக் கொட்டேக்கையோ கிளைமோர் வெடிக்கேக்கையோ அதில அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி...!

கொழும்பில குண்டு வெடிச்ச உடன கண்டனம் வருகுது. அதோட சேர்த்து மகேஸ்வரனுக்கும் கண்டனம் வரச் செய்யப்பட்டிருக்குது..!

ஆக அமெரிக்காவின் பார்வையில் சிங்களப் படையினர் உட்பட சிங்களவர்கள் எல்லாம் மனிதர்கள். தமிழர்கள் அது புலி என்றால் என்ன மகேஸ்வரன் (பேரினவாதக் கட்சிகளில் இருந்தாலும் கூட) என்றால் என்ன அப்பாவி மக்கள் என்றால் என்ன எல்லாரும் பயங்கரவாதிகள்...!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24150

இந்த கண்டனத்தில் அமெரிக்காவின் தொனி மாறியுள்ளது. தாக்குதல்களுடன் விடுதலை புலிகளை சம்பந்தப்படுத்தி கண்டனம் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.

யார் குத்தினாலும் அரசி ஆனா சரி தானே

முள்ளை முள்ளாலான் எடுக்க வேண்டும் பழிக்குப் பழி உடனே சூடு ஆறமுதல் குடுக்க வேணும் உப்பிடித்தான்.

Cheers!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கண்டனத்தில் அமெரிக்காவின் தொனி மாறியுள்ளது. தாக்குதல்களுடன் விடுதலை புலிகளை சம்பந்தப்படுத்தி கண்டனம் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல.. எல்லாரும் பேச்சுக்குப் போக வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது..! அப்ப கிளைமோரை அமெரிக்காவே வெடிக்க வைக்குதா..??! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

அதுமட்டுமல்ல.. எல்லாரும் பேச்சுக்குப் போக வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது..! அப்ப கிளைமோரை அமெரிக்காவே வெடிக்க வைக்குதா..??! :rolleyes::icon_idea:

அமெரிக்கா வெடிக்க வைக்கவில்லை. ஆனால் வெடிக்க வைத்தது யார் என்று இதற்குள் அமெரிக்க தூதரகத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 02-01-2008 16:44 மணி தமிழீழம் [மயூரன்]

அமெரிக்கா மகேஸ்வரின் படுகொலையையும், கொழும்பு கொம்பனிதெரு கிளைமோர் தாக்குதலையும் கண்டித்துள்ளது.

சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் முதலாம் திகதி கொல்லப்பட்ட நாளுமன்ற உறுப்பினர் தியாகராச மகேஸ்வரனின் படுகொலையை கண்டித்தும் இன்று கொழும்பு கொம்பனித்தெருவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் அறிக்கைவெளியிட்டுள்ளன.

அவ் அறிக்கையில் இவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இவரை கொலை செய்தவர்களை காலதாமதம் இன்றி விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அரசை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 2ம் திகதி கொழும்பு கொம்பனித்தெருவில் நடைபெற்ற தாக்குதலையும் கண்டிப்பதாகவும் இதில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும் அனைத்துக் கட்சிகளும் பேச்சுவார்த்தை ஊடாகவே முரண்பாட்டுக்கு தீர்வு எய்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கொம்பனித் தெருவில் இராணுவ பஸ் மீது குண்டுத் தாக்குதல் 4 பேர் பலி, 25 பேர் காயம் (3 ஆம் மேலதிக இணைப்பு)

[Wednesday January 02 2008 05:52:26 AM GMT] [யாழினி]

இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பு தலைநகர் கொம்பனித் தெரு நிப்போன் ஹொடேலிற்கு அருகாமையில் இராணுவ பஸ் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜெயசிங்க தெரிவித்தார். இதன் போது 2 பொது மக்களும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான பஸ் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலியில் திடீர் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளனர்.இவர்கள

ஏனோதெரியாது ஆமிக்காரங்களும் குண்டுகல்ளை தேடித் தேடித் திரிய குண்டும் அவங்களத்தான் தேடிப்போகுது... 3000 4000 எண்டு எல்லாத் தமி(ல)ரையும் பிடிச்சும் குண்டு வெடிக்குது..

ஆரோ உதுல எளுதினமாதிரி அமரிக்கா காரங்கள் தான் குண்டு வைகிறாங்களோ? வெடிச்சதும் பக்கத்தில தானே இருந்தாலும் இருக்கும்... எதுக்கும் J.V.Pன்ர காது போட்டுவைக்க வேனும்... அவங்கட பிரச்சார பீரங்கி சொன்னாத்தால் உவன் அமரிக்கா கேட்பான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.