Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு

Featured Replies

மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமார்த் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்ஸ் உள்ளிட்ட 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தளபதிகள் எல்லாம் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோருக்கும் விமானப்படைக்கும் வீரமரணமடைஞ்சு கொண்டிருக்கிறது நல்ல சமிக்ஞையா தெரியல்ல..! திரும்ப திரும்ப இலுப்பக்கடவை உட்பட வன்னிப் பெருநிலப்பரப்பு அநியாய வீரச்சாவுகளின் களமாகிட்டே இருக்குது..!

தளபதியின் இழப்பு போராளிகளுக்கு உற்சாகக் குறைவாகவும் அமையும். போர்க்களத்திலும் பின்னடைவுகளாகலாம்..!

எதிர்காலத்தில் இவை குறித்து மக்களும் புலிகளும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

வீரமரணமடைந்த தளபதிக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கங்கள். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சிறுவர்கள் மீதான கிளைமோர் தாக்குதலை புலிகளின் உள்வீட்டு வேலை என்று சொன்ன அரச பாதுகாப்புப்படை.. இத்தாக்குதலை மட்டும் தங்கள் elite படை செய்துள்ளதாக வீரப்பிரதாபம் பண்ணுகிறது..!

எதிரிக்கு இலவசமாகவும் வெற்றிகள் போய்ச் சேர்கின்றன..!

LTTE's 'military' intelligence head killed in ambush - Mannar

Shanmuganathan alias Charles, was the man behind many terrorists attack on civilians and VIPs in the South.

Head of LTTE's 'military' intelligence wing Shanmuganathan Ravishankar, alias Charles was reported killed along with three other terrorists following an ambush by Sri Lanka elite forces, in the general area North of Mannar, last evening (January 05), said the defense sources.

Charles, was known to be another self styled colonel of the terrorist outfit and also the deputy to Pottu Amman the chief of LTTE's intelligence.

According to the sources the army elites had ambushed a vehicle movement carrying Charles and his companions. A senior defense official told defence.lk that the attack was carried out with accurate ground information received from LTTE dominated Wanni region.

defence.lk

2116Col.Charles.jpgLTTE's Head of Intelligence and 3 leaders were killed by SL Army

(2008Jan.06, 12.15PM) Head of LTTE Intelligence, Charls was killed Saturday evening in a claymore attack by Sri Lanka Army Deep Penetration Unit in Pallamadu in Mannaar, said by SL Army and pro LTTE media.

Charles (Shanmuganathan Ravishankar, Jaffna) who has been in charge of internal intelligence of LTTE was killed together with three LTTE leaders in the ambush while they were riding in a van.

Charles was on a mission inspecting his regular forces in Mannaar.

The other leaders were killed in the ambush identified as Sukanthan (Sivapalan Sreetharan) from Jeyapuram, Lt. Veeramaravan (Pararajasingham Suthan) from Mallaavi and Lt. Kalaa (Sinnaththamby Kangatharan) from Vaddakkachchi.

Meanwhile media center of national security said 20 LTTE carders were killed and 8 bunkers were destroyed due to heavy fighting in Parrappakandal and Adampan areas in Mannar on yesterday morning. The T-56 assault rifles and over two hundred (200) anti-personnel mines were recovered in search operations which followed.

(Photo-Tamilnet)

col_charles_200.jpg

சார்ல்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்- யாழ்நகர்)

மன்னார் பள்ளமடு பகுதியில் வைத்து ஊடுருவி தாக்கும் படையினரால்

நேற்று மாலை 5 மணியளவில் நடந்த கிளைமோர்

தாக்குதலில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான

சார்ல்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்- யாழ்நகர்) உட்பட சுகந்தன் (சிவபாலன் சிறீதரன்) வீரமறவன் ( பரராஜசிங்கம் சுதன்) காலா (சின்னதம்பி கங்காதரன்) ஆகியோர் இறந்துள்ளதாக அறிய முடிகிறது.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத் தாக்குதலில் எல்.டி.டி.இ உளவுப் பிரிவு தலைவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6, 2008

கொழும்பு: விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார். தாக்குதலில் மேலும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்த தகவலை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்டுள்ளது. கர்னல் சார்லஸ் மன்னார் மாவட்டம் பள்ளமேடு என்ற இடத்தில் நடந்த, ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பலியானார். இந்த சம்பவத்தில் மேலும் 3 விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்விவகார உளவுப் பிரிவின் தலைவராக சார்லஸ் இருந்து வந்தார். மேலும், வெளி புலனாய்வு பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். மன்னார் பகுதியில் போரில் ஈடுபட்ட வந்த புலிகளின் படைப் பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கியிருந்தார்.

நேற்று மாலை ஒரு வேனில் சார்லஸும், விடுதலைப் புலிகளும் போய்க் கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதலில் அவர்கள் பலியானர்கள்.

நான்கு பேரும் மன்னார் பகுதியில் போரில் ஈடுபட்டிருந்த படையினரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர். தாக்குதலில் இறந்த மற்ற இருவர் சுகந்தன் (சிவபாலன் ஸ்ரீதரன்), வீரமறவன் (பரராஜசிங்கம் சுதன்), கலா (சின்னத்தம்பி கங்காதரன்) எனத் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் புலிகள் அமைப்பின் முக்கியப் பிரிவு தலைவரான சார்லஸ் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

இந்த செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளமும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தை அது உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இருப்பினும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கடந்த இரு வாரங்களாக மன்னார் பிராந்தியத்தில் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் விடுதலைப் புலிகள் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சார்லஸும் ஒருவராக இருக்கக் கூடும் என்றார்.

மேலும், அடம்பன் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் சார்லஸ் இறந்திருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கர்னல் சார்லஸ் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ்ச்செல்வன் மரணத்திற்குப் பின்னர் பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயா ராஜபக்சே கூறுகையில், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். முன்பு போல அவர்களது நடமாட்டம் இனியும் ரகசியம் இல்லை. அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் மிகத் தெளிவாக கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்துள்ளாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர் சார்லஸ் கொல்லப்பட்டிருப்பது இலங்கை விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தட்ஸ்ரமிழ்.கொம்

யுத்த நிறுத்தம் தந்த இன்னொரு பரிசு!!! இவைகள் எங்கே போய் முடியப் போகின்றது?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இக்பால்அத்தாஸ் தானும் பத்தையிக்கை படுத்துக்கிடந்து பாத்த மாதிரி நல்லதொரு வர்ணனை எழுதுவார் தங்கடை prize catch பற்றி.

இப்ப இப்ப மோட்டுச் சிங்களவன் random ஆக செய்யிறதுகளே Col., Brig. என்ற றேஞ்சிலான் இருக்கு. கொஞ்சம் deterministic ஆக செய்தா :D random முயற்சிகளிற்கு அவங்கடை கடவுள் உப்பிடி அள்ளிக் கொடுக்கிறாரோ. புண்ணியம் செய்தவங்கள் தான்.

இக்பால் அத்தாஸ் இல்லை எமது வானவேடிக்கை ஊடகவியலாளர்கள் இதையும் எமது வெற்றிகள் என்று நாளை எழுதுவார்கள் வாசிக்கத் தயாராவோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவன் ரன்டமாகச் செய்வதே கேணல், பிரிகேடியர் என்ற ரேன்சிலிருந்தால், அவன் டாகெட் பண்ணினால் நமது கதி அதோகதிதான் போல இருக்கு ! எதுக்கும் நீங்கள் சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தைப் பிடிப்பம், பிறகு மிச்சத்தைப் பார்க்கலாம்.

அதுக்கு கடவுள் கண் திறக்க வேணுமே? நாங்கள் முற்பிறப்பில என்ன பாவம் செய்தமோ.

பனங்கொட்டையளுக்கு யாழ்பாணம் பிடிச்சாக் காணும் தானே. கொலிடேயில போறத்துக்கு கொழும்பிலையோ தமிழ்நாட்டில இருந்தோ விமான சேவையும் செய்து விட்டால் அவைக்கு தமிழீழம் கிடைச்சமாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நம்மில் எத்தனை பேருக்கு தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறது. சிலருக்கு தமிழீழம் கிடைத்தால் ஊரிலுள்ள காணியையும் வீட்டையும் ஒருக்கப் போய் வித்துப்போட்டு வரலாம் என்ற ஆசை. சிலருக்கு தமது பிள்ளைகளைக் கொண்டு போய் தமது ஊரைச் சுத்திக் காட்டலாம் என்ற ஆசை. இண்டைக்கு வன்னியில ச்கோர் என்ன எண்டு கேட்டுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கும் கூட்டம்தானே நாங்கள். எங்களை நம்பி ஒரு சந்ததியே தமது வாழ்வையும் உயிரையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டுப் போயிருக்கு !

நாங்கள் இன்னும் எமது கனவுகளில் வாழ்ந்து கொண்டிருப்போம். ஈழமா ? அது தானாகக் கிடைக்கிற நேரம் கிடைக்கட்டும் !

சிங்களவனுக்கு செய்தி கிடைத்தது தமிழ் நெட்டில் வந்தபின் தான். அதன் பின்னே அதை சிங்கள ஊடகங்கள் ஊதிக் காட்டின. ஆக்கிரமிப்பு இராணுவம் ஊர்ஜிதம் செய்தது. ஏன் இப்படிப்பட்ட மரணங்களை எதிரிகள் அறிய தரவேண்டும். இதனால் போராளிகள் மட்டமல்ல அத்தனை ஈழத்தமிழரின் உள உறுதிக்கும் பாதிப்பல்லவா?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

கேர்ணல் சார்ல்ஸ் உட்பட ஏனைய போராளிகளுக்கும் வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் பொதுமக்கள் பாவிக்கும் வாகனங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. எனவே புலிகளின் வாகனங்கள் ஆழ ஊடுருவும் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகச் சாத்தியம் அதிகம். இதனால்தான் ஆழ ஊடுருவும் படையினர் குருட்டாம்போக்கில் வாகனங்களைக் குறிவைக்கும்போது புலிகளின் தளபதிகளும் கொல்லப்படுகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தளபதிக்கும், போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Col. Charles, Head of Liberation Tigers Military Intelligence, was killed Saturday evening in a random Claymore attack by Sri Lanka Army Deep Penetration Unit in Pa'l'lamadu in Mannaar, LTTE sources in Vanni said

மேலும் படிக்க

Edited by piththan

தளபதி சார்ள்ஸ் அண்ணாவிற்கும் ஏனைய போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்கள். அவர்கள் கண்ட கனவு நனவாக நாமும் சேர்ந்து உழைப்போமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு செய்தி கிடைத்தது தமிழ் நெட்டில் வந்தபின் தான். அதன் பின்னே அதை சிங்கள ஊடகங்கள் ஊதிக் காட்டின. ஆக்கிரமிப்பு இராணுவம் ஊர்ஜிதம் செய்தது. ஏன் இப்படிப்பட்ட மரணங்களை எதிரிகள் அறிய தரவேண்டும். இதனால் போராளிகள் மட்டமல்ல அத்தனை ஈழத்தமிழரின் உள உறுதிக்கும் பாதிப்பல்லவா?

ஜானா

புலிகளின் பாணியில் இயங்கும் சிறிலங்காவும் இந்தியாவும் என்று எழுதியதை யாழ்கள நிர்வாகிகள் நீக்கிவிட்டனர் :rolleyes: . புரிந்தால் சரி.

செய்தி உண்மையா?? :rolleyes: வீரவணக்கங்கள்

தளபதி சார்ள்ஸ் அண்ணாவிற்கும் ஏனைய போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்கள்

புத்தாண்டில் அடித்த முதல் புயல்

இழப்பது இலைகளெனினும் அவைதான் எம் சுதந்திரமான ஈழத்திற்கான உரமாக அமையும். அந்த மாவீரர்களின் தோள்களில் ஏறி சுதந்திர ஈழத்தை விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கை அலை கண்முன்னே தோன்றுகின்றது.

மறைந்த வீரர்களிற்கு வீர வணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.