Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி

இந்தியாவுடன?985; இரண்டாவது டெஸ்ட் போட்டியை 122 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 16 போட்டிகளை வென்று தனது சொந்த உலக சாதனையை சமன்செய்தது.

1999 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்டீவ் வோக் தலை?90;யிலான அவுஸ்திரேலிய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் தெடர்ச்சியாக வென்று படைத்திருந்த உலக சாதனையையே தற்போது பொன்டிங் தலைமையிலான ஆஸி.அணி சமன்செய்துள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி கடைசி நேரத்தில் 210 ஓட்டங்களுக்கே சுருண்டது.இதன்போது 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் கும்ப்ளே மற்றும் உப தலைவர் தோனி ஆகியோர் போட்டியை சமநிலையில் முடிக்க போராடினாலும் கடைசி நேரத்தில் செயல்பட்ட மைக்கல் கிளார்க் இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளையும் மளமளவென்று வீழ்த்தி அவுஸ்திரேலியாவுக்கு சாதனை வெற்றியை தேடிக்கெ?975;ுத்தார்.

எனினும் போராடிய கும்ப்ளே 111 பந்துகளுக்கு முகம்கொடுத்து ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்றார்.இதில் ஆட்டத்தின் கடைசி நாளான நேற்றைய தினத்தில் 7 பந்துகள் மாத்திரம் மிச்சம் இருக்கும் நிலையிலேயே இந்திய அணி போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இந்திய அணிசார்பாக நிதானமாக ஆடிவந்த டிராவிட் மற்றும் கங்குலி ஆகியோர் நடுவர்களின் தவறான தீர்ப்பால் வெளியேறவேண்டி ஏற்பட்டமை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது.இந்திய அணியின் முதல் இன்னிங்ஸிலும் நடுவரின் தவறான தீர்ப்புகள் பெரும் சர்ச்சையை கிளப்பியமை குறிப்பிடத்தக்கது.

இதில் போட்டியை சமநிலையில் முடிக்க போராடிய டிராவிட் 103 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் கங்குலி 56 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸி.அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்ட மைக்கல் கிளார்க் வெறும் 1.5 ஓவர்களில் 5 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இது தவிர சைமன்ட்ஸ் 3 விக்கெட்டுகளையும் பிரெட் லீ, ஸடுவட் கிளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 69 ஓட்டங்களால் பின்னிற்க ஆட்டத்தின் மூன்றாவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய தினம் வரை துடுப்பெடுத்தாடி 7 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.இதில் ஹஸே, ஹெய்டன் ஆகியோர் சதம்பெற்றனர். 196 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஆர ம்ப துடுப்பாட்ட வீரர் ஹெய்டன் 12 பௌ ண்டரிகளுடன் 123 ஓட்டங்களை பெற்றார்.அதேபோன்று அபாரமாக ஆடிய ஹஸே 259 பந்துகளுக்கு 16 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 145 ஓட்டங்களை பெற்றார்.இரண்டாவது இன்னிங்ஸிலும் கும்ப்ளே 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அன்ட்ரூ சைமன்ட்ஸ் தெரிவானார்.

அவுஸ்திரேலிய அணி இந்த போட்டியை வெற்றியீட்டியதன் மூலம் இந்திய அணிக்கு இந்த தொடரை வெற்றிபெறும் வாய்ப்பு நழுவிப்போனது.இந்தியா இந்த தொடரை சமநிலையில் முடிக்க வேண்டுமானால் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெறவேண்டும்.

இருநாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இதற்கு முன்னர் இந்திய அணி வரும் வியாழக்கிழமை 3 நாள் பயிற்சி போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

http://www.virakesari.lk/vira/sports/sp_news.asp?key=2831

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த போட்டியின் சிறந்த ஆட்டகாரருக்கான விருது போட்டி நடுவர் Steve Bacner க்கு தான் கொடுத்திருக்க வேணும்.

அவுஸ்திரெலியாவின் மொத்த ஓட்டத்தில் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வழிசமைத்து கொடுத்தது மட்டும் அல்லாமல் 4 விக்கட்டையும் பாதுகாத்து கொடுத்தார் :rolleyes::lol::D

கொஞ்சம் கூட நியாயம் இல்லாத தீர்ப்பாக இருந்தது..

கடைசிக்கு முதல் ஓவரில் 3 விக்கட் போனது கேவலம்

எப்போது பார்த்தாலும் அவுஸ்திரேலியாவுக்கு வக்காலத்து வாங்கும் ஜம்மு அவுஸ்திரேலியாவின் குட்டுடைபட்டதும் ஆளையே காணோம்.

SUN TVயில் Vidio Replayபார்க்க முடிந்தது. அதைப் பார்த்ததும் அவுஸ்திரேலியாவுக்கு இப்படியும் ஒரு பிழைப்புத் தேவையா எனவே கேட்கத் தோன்றுகின்றது?? :o

பார்ப்போம் இந்தியாவின் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்று?? :lol::D

64727984pe0.png

அட வசபண்ணா கூப்பிடனியளோ நான் இப்ப தான் அப்பியரே ஆகிறேன் யாழிற்கு :lol: .......அட வந்தவுடனையே சண்டையோட வர சொல்லுறீங்க எப்படி அண்ணா......அந்த ஏரியா,இந்த ஏரியா,அடுத்த ஏரியா எல்லாம் பேபியின்ட ஏரியா தான் அட என்னவோ உளறுது பேபி என்று பார்கிறியளோ அப்படி உளறினா தான் கருத்து சரியோ.... :lol: (அப்பாடா ஓப்பினிங் சீனை ஒரு மாதிரி முடிதாச்சு எனி விசயதிற்கு வாரேன் )....

நோ.. நோ குட்டுடைபட்டதும் ஆளை காணவில்லை என்று இல்லை வசபண்ணா ஏனென்றா குட்டு உடைபட்டாதானே எஸ்கேப் ஆகிறதிற்கு குட்டுடைபட்டா எஸ்கேப் ஆகிறது இந்தியாவின் பொலிசி குட்டு உடைபட்டாலும் கடைசி மட்டும் நிற்கிறது நம்ம பொலிசி அது தான் ஆசி பொலிசி..

எனிவே வசபண்ணா என்ன நடந்தது என்று இவ்வளவு டென்சன் மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடுறியள் தானே.......இப்ப பாருங்கோ வசபண்ணா அம்பயர் இருக்கிறார் அவர் தான் ஸ்டீவ் பக்னர் அவர் வந்து அவுஸ்ரெலியாவை சேர்ந்தவர் அல்ல அவர் வந்து மேற்கிந்திய தீவை சேர்ந்தவர் அவர் வெள்ளையும் இல்லை கறுப்பு தான் அப்படி இருக்கிற ஒருவர் இந்தியாவிற்கு பிழையா அவுட்டை கொடுக்கிறார் என்றா இதில சிந்திக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு பாருங்கோ..அவருக்கு கூட இந்திய அணியின் (ஆட்களின்) மேதாவிதனமான எண்ணங்கள் மற்றும் (கேண) செய்கைகள் பிடிக்காம இருந்திருக்கலாம் பாருங்கோ அதற்கு போய் அவுஸ்ரெலியா அணியை குற்றம்சாட்டுறதில ஒரு நியாயம் இருக்கா பாருங்கோ.. :)

நீங்களே பாருங்கோ அன்றுசைமன்ஸ் வெளிபடையாக கூறினார் தான் முதலே ஆட்டமிழந்துவிட்டார் என்று இந்தியா அணியில யாரும் அப்படி சொல்லுவீனமோ பிழையா அவுட் கொடுத்தா மட்டும் அம்பயரை தாக்கி பத்திரிகையில எழுதுவார்கள் இல்லை அம்பயரை புகழ்ந்து எழுதுவார்கள் என்ன நான் சொல்லுறது சரியோ இல்லை இந்திய அணி தோற்றுவிட்டா வீரர்களின் வீடுகளை உடைப்பார்கள் இது தான் இந்தியமக்களிற்கு தெரிந்தது.......ஒரு ஸ்போர்ட்டை வந்து ஸ்போர்டிவா எடுக்க தெரியாத ஆட்கள் எம் அவுஸ்ரெலிய மண்ணை இகழ்ந்து பேசுவது அவர்களின் அறியாமை மற்றும் வெல்ல முடியவில்லை என்ற ஒருவித பொறாமையிலும் பிதற்றுவது போல் அல்லவா இருக்கு வசபண்ணே... :D

என்னவோ சொல்லுங்கோ இந்தியவீரர்களிற்கு ஒழுங்கா மட்டையை பிடித்து ஆடதெரியவில்லை என்பது கண் மூலம் காணகூடியதாக இருக்கிறது ஆகவே அடுத்த முறை கிரிகெட்டிற்கு எல்லாம் வராம எங்கையாச்சும் போய் கோழி பிடித்து பழக சொல்லுங்கோ வசபண்ணே அவைக்கு உது எல்லாம் சரிபட்டு வராது... :lol:

அத்தோட கர்பஜன் மங்கி தானே ஒரு மங்கி என்பதை மறந்து (நியுசிலாந்திற்கு சென்ற போது தன்னுடைய சப்பாத்தை கூட ஒழுங்கா கொண்டு போகவில்லை என்று நியிசிலாந்து விமான நிலையத்தில் அனுமதி மறுக்கபட்ட மங்கி :) ) நம்ம அன்ரு சைமன் அண்ணாவை பார்த்து ஏதோ உளறி இருக்கு என்றா பாருங்கோ பிறகு அவுஸ்ரெலியா ரேசிசம் என்று தூக்கிபிடியுங்கோ அதற்கு சிட்னியில இருக்கிற கொஞ்ச டமிழ்சும் ஆதரவு தருவீனம் ஏன் ஆதரவு தாறவை என்றா அப்ப தான் தங்களின்ட புகழை சமூகத்தில நிலை நாட்டி கொள்ளாம் என்று தான்.. :D .

அவுஸ்ரெலிய அணி வீரர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லோ இப்படி ஏதாவது செய்து உள ரீதியாக பாதிப்படைய செய்வதே சிங் மங்கியின் நோக்கம் ஆனா அது வேகவில்லை.....அக்சுவலா சொல்ல போனா ஆசியாவில் இருக்கிறவர்களின் மனநிலை வெள்ளையர்கள் தங்களை அவமதிக்கிறார்கள் என்று அதன் காரணமாக தான் இந்த பிரச்சினை எல்லாம் ஆனா அவர்கள் அப்படி இல்லை வசபண்ணே...ஆகவே மொத்தத்தில் இது அவுஸ்ரெலிய அணியின் பிழை இல்லை வசபண்ணே இன்னொரு போட்டியில் வெற்றிபெற்றால் 17 போட்டிகளை அவுஸ்ரெலிய அணி இந்தியா அணியை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனையை நிலைநாட்ட போகிறது என்ற அவமானத்தில் இப்படி எல்லாம் உளறுகிறார்கள்.......நான் கேட்கிறேன் ஒரு அணி எத்தனையோ கோடி மக்கள் இருக்கும் நாட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து இவ்வளவு போட்டிகளிள் தோற்று இருக்கிறார்கள் என்றால் வெட்கமாக இல்லையா.......ஆகவே பிழை வேற எங்கையோ இருக்கு வசபண்ணே கண்டுபிடித்து நிவர்த்தி செது போட்டு வர சொல்லுங்கோ கிரிகேட் விளையாட அது வரை வெற்றி பெற்ற ரிக்கிபொன்டிங் தலைமையிலான ஆஸி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்... :)

ஆஸி..ஆஸி...ஒய்....ஓய்...ஒய் ...ஆஸி...ஆஸி...ஓய்...ஓய்...ஓய்!!

வசபண்ணே நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் அவுஸ்ரெலிய பத்திரிகை இந்திய அணிக்கு ஆதரவாக செய்திகளை வழங்கியுள்ளது என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையாவது இப்படி ஒரு காரியத்தை செய்யுமா அதில் இருந்து எம் நாட்டை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்...வசபண்ணா பெட்டர் லக் நெஸ்ட் டைம்!! :)

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=373150

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் 2008-

"ஒரு மனிதன் விழாமல் வந்தான் என்பது முக்கியமில்லை விழுந்த போது எல்லாம் எழுந்தான் என்பது தான் முக்கியம்"

Edited by Jamuna

அட அட வந்தாச்சா ஜம்முக் கண்ணா

பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல் ஏதோவெல்லாம் எழுதியுள்ளீர்கள். பிரைச்சனையை ஆரம்பித்து வைத்ததே சைமண்ட்ஸ் தான். ஆனால் நீங்களோ இப்போதான் நித்திரையால் எழும்பி வந்தவர் போல் ஏதேதோ பிதற்றுகின்றீர்கள்.

கீழேயுள்ளவற்றைப் படித்தாவது நடப்பவற்றை தெரிந்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கு இந்த வருடமாவது பெட்டராக அமைய நானும் இறைவனைப் பிரார்த்திக்றேன்.

இந்திய அணியின் புகாரைத் தொடர்ந்து பக்னர் நீக்கப்படுவார் எனக் கருத்துத் தெரிவித்த ஐசிசி, பின் பல்டி அடித்தது. பின் உலகஅரங்கில் ஐசிசி க்கு எதிராக எழுந்த விமர்சனங்களால் தற்போது பக்னர் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் புதிய நடுவராக நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல ஹர்பஜன் சிங் தன் மீதான தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதால் அவர் தொடர்ந்து விளையாடலாம். எனவே பெர்த் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் விளையாடத் தடை இல்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மீதான தடை விவகாரத்திற்கும் புதிய தீர்ப்பு வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்ணா ஆசையா கூப்பிடக்க வராமா எப்படி வசபண்ணா அது ஓடி வந்துட்டென் :lol: ..........பூனை கண்ணை மூடி கொண்டு பாலை குடித்தாலும் பல விசயங்களை மனதில வைத்து தான் பாலை குடிக்கும் இல்லாட்டி நாய் வந்து துரத்திடும் வசபண்ணா :) .....எப்படி கரக்டா கண்டு பிடித்தனியள் அக்சுவலா நித்தா கொண்டு எழும்பி தான் யாழிற்கு வந்தனான் கரக்டா கண்டுபிடித்திடியள் போங்கோ வசபண்ணா :D ......கீழே இருப்பவற்றை படிக்கிறேன் ஆனா நான் கேட்ட கேள்வி ஒன்றுக்கும் விடையை காணவில்லை வசபண்ணா என்ன ஆச்சு உண்மையை சொல்லிட்டனோ :) ......நடுவரை மாற்றுறதிற்கும் அவுஸ்ரெலிய அணிக்கும் என்ன சம்மந்தம் அது மேற்கிந்திய அணி நடுவர் அல்லோ :) வசபண்ணா நீங்க மாறி அவுஸ்ரெலிய நடுவர் என்று நினைத்துபோட்டியளோ :D ...சிங் மீது புதிய தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது ஆனா என்னும் வழங்கபடவில்லை ஏனென்றா அவர் செய்த தப்பு அவருக்கு தானே தெரியும் :) ........என்ன தான் சொன்னாலும் கர்பஜன் சிங் மேல தான் பிழை பிகோஸ் அவர் மங்கி ஆச்சே :lol: ....என்ன தான் சொன்னாலும் தொடர்ந்து 16 போட்டியில ஒரு அணி தோற்று இருக்கு என்றா எவ்வளவு பெரிய மானகேடு வசபண்ணா என்னும் ஒரு போட்டியில் அவுஸ்ரெலிய அணி வென்றா பழைய சாதனையே அவுஸ்ரெலிய அணி வெல்ல போகுது அல்லோ வசபண்ணா :) ........ம்ம் வசபண்ணா எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி அண்ணாவிற்காக நானும் பிரார்த்தனை செய்யிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரர்களும் ரசிகர்களும் இது விடயத்தில் அவுஸ்திரேலிய அணியைக் குற்றச்சாட்டுறது சரியாப் படேல்ல..!

பிழைவிட்டது நடுவர்கள். நடுவர்களை நோக்கி வைக்க வேண்டிய விமர்சனத்தை அவுஸ்திரேலிய அணி நோக்கி வைக்கிறது சரியான அணுகுமுறையல்ல. சைமன் ஏலவே சுட்டிக்காட்டி விட்டார் நடுவர்கள் சரியாகத் தீர்ப்பு வழங்கவில்லை என்று. அப்படி இருக்க அவுஸ்திரேலிய அணியோடு இந்திய அணி இதுவிடயத்தில் எரிஞ்சு விழுகிறது.. பொறாமைத்தனமே..!

ஒருவேளை இந்தத் தீர்வுகள் இந்திய அணிக்குச் சார்ப்பாக நடுவர்களால் வழங்கப்பட்டிருப்பின்.. இந்திய ரசிகர்களும் வீரர்களும்.. கம்மென்று இருந்திருப்பார்கள். முரளிதரனும் சிறீலங்கா அணி போலவும்..! முரளிதரன் திறமையானவர்தான். இருந்தும் நடுவர்களின் பலவீனத்தையும் துஸ்பிரயோகம் செய்யாமல் பாவிக்கத் தெரிந்தவர்..! அதேபோல் தான் எல்லா அணிகளும்.

ஹர்பஜனை.. சைமன் பேசியதற்கு பதிலாகத்தான் ஹர்பஜன் சைமனைப் பேசியதாகச் சொல்லியுள்ளனர். விசாரணையில் ஹர்பஜன் தான் குற்றவாளியாகியுள்ளார். மேல் முறையீடு செய்துள்ளனர். தீர்ப்பு வர எல்லாம் தெரியும்.

அவுஸ்திரேலிய வீரர்கள்.. இனவெறியை பகிரங்கமாகக் கக்குபவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. யாரும் எதையும் சொல்லிச் சமாளிக்கலாம்..! ஆனால் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது அதன் திறமையாலும் நடுவர்களின் தவறாலுமே தவிர.. வெட்கப்படும் படி அது நடந்து கொண்டல்ல..!

நடுவர் தீர்ப்பு வழங்கினா.. அதற்கு வீரர்கள் என்ன செய்ய முடியும்..???! :)

ஜம்முக் கண்ணா

விளையாடும் அணிகளின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடுவர்களாக இருக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் அவர்கள் Vidio replyயை பார்த்தும் பொய்யான தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியம். சம்திங்கா??

போட்டியின் 3வது நடுவர் ஆக்ஸன்போர்டிடம் அப்பீல் போனது. ஆனால் சந்தேகமாக இருப்பதாகவும், அதன் பலனை சைமண்ட்ஸுக்குக் கொடுப்பதாகவும் அவர் தீர்ப்பளித்தார். இத்தனைக்கும் 3வது நடுவர் என்பவர் Vidio replyயைப் பார்த்து தீர்ப்பு சொல்பவர். Vidio replyயில் சைமண்ட்ஸ் அவுட் ஆவது அழகாக தெரிந்தும் கூட, அது ஆக்ஸன்போர்டு கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது மாபெரும் மாயாஜாலம்தான்!

உங்களுக்கும் நெடுக்ஸ்சுக்கும் பொதுவாக மேலும் சில இணைப்புக்கள் கீழே தருகின்றேன். இப்பிரைச்சினையில் அவுஸ்திரேலிய வீரர்களின் தலையீடு எந்தளவில் இருந்தது என்பதை புரிந்து கொள்ள.

1) கங்குலி அடித்த பந்தைப் பிடிக்கிறார் மைக்கேல் கிளார்க். ஆனால் பந்து கங்குலியின் பேட்டிலேயே படவில்லை. இருந்தாலும் நடுவர் பென்சன், ஆஸ்திரேலிய கேப்டன் பான்ட்டிங்கிடம் ஆலோசனை கேட்டு அவர் சொன்னதால், அவுட் என்று கூறி கங்குலியை வெளியேற்றுகிறார். அப்போது கங்குலியின் ஸ்கோர் 51.

2) கர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தைப் பார்த்து ஆத்திரமுற்ற சைமன் தான் கர்பஜன் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமென முனைப்புடன் செயற்பட்டதாக அவுஸ்திரெலிய பத்திரகைகளே சுட்டிக் காட்டியுள்ளன. குறிப்பாக ஹர்பஜன் சிங், பிரெட் லீ பந்துகளை சிதறடித்து அரை சதத்தைக் கடந்த போது ஆஸ்திரேலிய வீர்ரகளால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஹர்பஜன் அரை சதத்தைப் போட்ட பிறகுதான் சைமண்ட்ஸ் வெடித்தார். அவர்தான் முதலில் ஹர்பஜனுடன் சண்டைக்குப் போனதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே செய்தி வெளியிட்டுள்ளன. ஹர்பஜன் அடித்து நொறுக்கியதால் அப்செட் ஆன லீக்கு தெம்பூட்டும் வகையில்தான் ஹர்பஜனை சீண்டினார் சைமண்ட்ஸ் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் குரங்கு என்று தன்னைப் பழித்ததாக சைமண்ட்ஸ் சொன்னது முழுவதுமாக இட்டுக்கட்டப்பட்டது என்றே பலரும் நம்புகின்றார்கள்.

வசபண்ணாவிற்கு ஜம்மு பேபி மேல எவ்வளவு பாசம் பாருங்கோ :D ஓம் வசபண்ணா நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான்.....வசபண்ணா நடுவரின் தீர்ப்பு சம்திங்கா இருக்கலாம் என்று நீங்க சொல்லுறியள் அவுஸ்ரெலிய அணி திறமையை மனதில் வைத்து தான் கிரவுண்டில் இறங்கும் அணி பட் இந்தியாவை பற்றி நான் சொல்லவா வேண்டும் வசபண்ணா :( ...நான் ஏற்கனவே சொன்னனான் ஸ்டிவ்பக்னர் ஒரு வெள்ளை இனத்தவரை சார்த்தவர் அல்ல அவரே இந்தியாவிற்கு அவுட்டை கொடுக்கிறார் என்றா இந்தியாவின் செய்கைகள் அது தான் மேல எழுதினதில வடிவா டிஸ்கரைப் பண்ணி இருக்கிறேன் தானே... :D

ம்ம் வசபண்ணே சில நேரங்களிள் கண்கள் கூட தவறுவிடுமாம் இதை யார் சொன்னது என்றா வேற யார் நான் தான் :lol: ...ஆகவே அப்படி நடுவர் தவறை இழைத்திருக்க கூடும் வசபண்ணா அதற்கு வீரர்களை திட்டுவது அவுஸ்ரெலிய அணியை திட்டுவது எந்த விதத்தில் நியாயம் நீங்களே சொல்லுங்கோ :D ..நம்ம யாழ்கள நடுவர் நெடுக்ஸ் தாத்தா நல்ல ஒரு தீர்பை கொடுத்து இருக்கிறார் அவருக்கு எல்லாரும் ஜோரா கையை தட்டுங்கோ (பிறகு வசபண்ணா வந்து சொல்ல போறார் ஜம்மு பேபி நெடுக்ஸ் தாத்தாவிற்கு சம்திங் கொடுத்திருக்கிறார் என்று :D )......இதை மக்கள் தான் ஏற்று கொள்வார்களா என்ன நீங்களே சொல்லுங்கோ வசபண்ணா இதை போல் தான் அதுவும்!! :wub:

1)வசபண்ணா நடுவர் பென்சன் அவுஸ்ரெலிய அணி தலைவரிடம் ஆலோசணை கேட்கிறார் என்றா அவர் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகும் இத்தகைய ஒரு நம்பிக்கையை இந்தியவீரர்களினால் ஏற்படுத்த முடியாம போனதன் காரணம் தான் என்ன வசபண்ணா...

2)அவுஸ்ரெலிய பத்திரிகைகள் தங்கள் வீரரை பற்றியும் தம் தவறை பற்றியும் எழுதுவதில் இருந்து இந்தியாவிற்கு,அவுஸ்ரெலியாவி

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் தவறிழைத்ததும் உண்மை, அதனால் இந்தியா கோட்டைவிட்டதும் உண்மை. ஆனால் ஆட்டத்தில் தோற்றதிற்காக அவுச்திரேலியாவைக் குற்றம் சாட்டுவதில் நியாயமில்லை.

ஆனால் நடுவர்களை தவறிழைக்கும் அளவிற்கு நெருக்கியதில் அவுச்திரேலியாவுக்கு பெரும் பங்கு உண்டு. எப்படியாவது இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற வெறியில் அவுச்திரேலியர்கள் தம்மை மறந்து நிதானம் இழந்து எடுத்ததெற்கெல்லாம் ரகளை பண்ணியது கேவலம். அதை விடக் கேவலம் கர்பஜான் சிங் சிமென்சை குரங்கு என்று கூறியது. இந்த ஜென்மம் திருந்தாது. அது அவர்களது ரத்தத்தில் ஊறிய பழக்கம். குரங்கு என்பது சிமென்சைக் காட்டிலும் சிங்குக்கே பொருந்தும்.

மற்றவர்களை விட விளையாட்டில் நேர்மையானவர்கள் என்று தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் அவுச்திரேலியர்கள் நடந்து கொண்ட விதம் இவர்கள் நேர்மையாக விளையாடி ஒருபோதுமே வெல்ல முடியாதவர்கள் என்று என்னத் தோன்றுகிறது. தம்மை விட்டால் ஆளில்லை என்று எண்ணும் தலைக்கணம் பிடித்த கூட்டம். அகம்பாவம் கொண்ட அணித்தலைவரும் அவ்ருக்கே ஏற்ற அணியும் !

இந்தியா, பொறுமையான அணித் தலைவர், ஆனால் இன்னும் சிறிது பொறுமை காத்திருக்கலாம்- பத்திரிகையாளர் மாநாட்டில். அவரது அணியோ குணிந்து வளைந்து பந்து பொறுக்க முடியாத பெண்கள் கூட்டம். டென்டுல்கறை நீக்கி விட்டால் அணி படுத்துவிடும்.

அகம்பாவம் பிடித்த ஆசி அணியை ஒரு முறையாவது இந்தியா வீழ்த்த வேண்டும்- இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை, அவுச்திரேலியாவுக்கு பாட புகட்டுவதற்காக.

மற்றவர்களை விட விளையாட்டில் நேர்மையானவர்கள் என்று தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் அவுச்திரேலியர்கள் நடந்து கொண்ட விதம் இவர்கள் நேர்மையாக விளையாடி ஒருபோதுமே வெல்ல முடியாதவர்கள் என்று என்னத் தோன்றுகிறது. தம்மை விட்டால் ஆளில்லை என்று எண்ணும் தலைக்கணம் பிடித்த கூட்டம். அகம்பாவம் கொண்ட அணித்தலைவரும் அவ்ருக்கே ஏற்ற அணியும் !

ரகுநாதன் அண்ணா!!

அவுஸ்ரெலியர்கள் எப்பவும் நேர்மையானவர்கள் தான் பின்னே அன்றுசைமன்ஸ் வெளிபடையாகவே தான் ஆட்டமிழந்ததை ஓப்புகொண்டார் அல்லவா :D அதில் இருந்து அவர்களின் நேர்மை தெரிகிறது......இந்திய அணி வீரர்கள் இப்படி எப்பவாச்சு செய்து இருக்கிறார்களோ கொஞ்சம் திங் பண்ணி பாருங்கோ அண்ணே!! :lol:

தம்மைவிட்டா ஆளிள்ளை என்பது அகம்பாவம் இல்லை அவர்கள் கிரிகேட் மேல் வைத்துள்ள ஈடுபாடும்,தன்னம்பிக்கையும், மண்ணிண் மேல் அவர்கள் கொண்டுள்ள பற்றையுமே எடுத்து காட்டுகிறது :)

அத்துடன் அவர்கள் கிரிகேட்டை உயிராக நேசிக்கிறார்கள் என்பது தான் உண்மை.அவுஸ்ரெலிய அணி அகம்பாவம் கொண்ட அணி என்று கூறுகிறீர்கள் நிச்சயாமா இல்லை அவர்கள் தங்களை வெல்ல ஒருவராலும் முடியாது என்று வாய்பேச்சு பாடவில்லை :D செயலில் நிருபித்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு எடுத்துகாட்டு இந்திய அணி தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளை அவுஸ்ரெலியாவிடம் தோற்றுள்ளது :D ஆகவே தலைசிறந்த அணிதலைவருடன் பேச்சளவிள் இந்தியவீரர்களை போல் இல்லாமல் செயலில் காட்டி கொண்டு இருக்கிறது என்பதனை பாராட்ட வேண்டும் தவிர அதனை அகம்பாவம் கொண்ட கூட்டம் என்று சொல்வது பிழை!! :(

எனக்கு மிகவும் பிடித்த வீரர் பொன்டிங் எப்பவும் வெற்றியை மட்டுமே சிந்திக்கும் ஒரு வீரர் சிறந்த தீர்மானத்தை எடுத்து தனது அணியை வழிநடத்தி செல்லும் ஆற்றலை கொண்டவர் :wub: ..அவரிடம் நாம் கற்று கொள்ள வேண்டியது பல முக்கியமாக இந்திய அணி கற்று கொள்ள வேண்டியது பல என்றே கூறலாம்!! :D

அவுஸ்ரெலியாவிற்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை ஏனெனின் அவர்கள் பாடத்தை நன்கு கற்று தேர்தவர்கள் ஆகவே மறுபடி வெற்றியுடன் உங்களை சந்திக்கிறேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வெல்ல வேண்டும் என்ற வெறி அகம்பாவம் இல்லை அது ஒரு குறிகோள்"

Edited by Jamuna

கண்ணா கில்லி ஆடலாம், பரத நாட்டியம் ஆடலாம், ஏன் ஆணவத்தில கூட ஆடலாம் ஆனா அவுஸ்ரேலியா கூட மட்டும் கிரிகெட் ஆடக்கூடாது..ஏன்ன நல்லா ஆடினாலும் வெல்ல விடமாட்டாங்கப்பா.. :D

ரகுநாதன் அண்ணா!!

அவுஸ்ரெலியர்கள் எப்பவும் நேர்மையானவர்கள் தான் பின்னே அன்றுசைமன்ஸ் வெளிபடையாகவே தான் ஆட்டமிழந்ததை ஓப்புகொண்டார் அல்லவா :D அதில் இருந்து அவர்களின் நேர்மை தெரிகிறது......இந்திய அணி வீரர்கள் இப்படி எப்பவாச்சு செய்து இருக்கிறார்களோ கொஞ்சம் திங் பண்ணி பாருங்கோ அண்ணே!! :)

ஆகா ஆகா எதப்பு நேர்மை?? ஆட்டமிளக்கவில்லை என்று நடுவர் சொன்னதால் தொடர்ந்து விளையாடி ரன்களை எடுத்துவிட்டு, பலர் Vidio replayயில் சைமண்ட்ஸ் ஆட்டமிளந்ததை சுட்டிக்காட்டிய பின் ஆம் நான் ஆட்டமிளந்தது உண்மை என்று ஒப்புக் கொள்வதா?? :D சுத்தம். :D:wub: இதைவிட கோமாளித்தனமான பதில் இருக்கமுடியாது. :lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா எதப்பு நேர்மை?? ஆட்டமிளக்கவில்லை என்று நடுவர் சொன்னதால் தொடர்ந்து விளையாடி ரன்களை எடுத்துவிட்டு, பலர் Vidio replayயில் சைமண்ட்ஸ் ஆட்டமிளந்ததை சுட்டிக்காட்டிய பின் ஆம் நான் ஆட்டமிளந்தது உண்மை என்று ஒப்புக் கொள்வதா?? :D சுத்தம். :D :D இதைவிட கோமாளித்தனமான பதில் இருக்கமுடியாது. :wub:

வசம்பு உங்களுக்கு கிரிக்கெட் விதிகள் தெரியும் என்றே நினைக்கிறேன். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. சைமன் நடுவர் தீர்ப்பு வழங்க முதல் களத்தை விட்டுப் போயிருக்கலாமே தவிர நடுவரின் தீர்ப்பின் பின்னர் சைமன் களத்தை விட்டு நீங்க முடியாது.

நடுவர்கள் தங்கள் தீர்ப்பை உறுதி செய்யப் பல வழிகள் இருக்கின்றன. அதை அவர்கள் கையாள வேண்டுமே தவிர வீரர்கள் எல்லாரும் நேர்மையா விளையாடுவினம் என்றால் பிறகெதற்கு நடுவர்களை மைதானத்திலையும் வெளிலையும் நிறுத்தி வைச்சு விளையாடனும்..???!

இது கொஞ்சம் கூட நியாயமில்லாத வாதமா எல்லோ இருக்குது. நான் பார்க்கவே பல தடவை ரென்டுல்கரின் மட்டை விளிம்பில் பட்டுச் சென்ற பந்து பிடி எடுக்கப்பட்டும் றீ பிளேயில் உறுதி செய்யப்பட்டும் அவர் களத்தை விட்டு நகரவில்லை. ரெண்டுல்கர் மட்டுமல்ல.. ஜெயசூரியா என்று கிட்டத்தட்ட எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சைமன் அதையும் சுட்டுக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

நடுவர் தீர்மானிக்க வேண்டியதை.. களத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரனிடம் எதிர்பார்க்கக் கூடாது. இதையே புட்போலில்.. கற்பனை பண்ணிப் பாருங்கள்..???! கிரிக்கெட் எவ்வளவோ மேல்..! :):lol:

நெடுக்ஸ்

நான் வீரர்கள் நேர்மையாக விளையாடுபவர்கள் என்று எங்குமே குறிப்பிட்டதில்லை. ஆனால் மேலே ஜம்மு சைமண்ட்ஸின் நேர்மை என்று பிலிம் காட்டியதற்குத் தான் அந்தப் பதில். சைமண்ட்ஸ் நடுவரின் தீர்ப்புக்கு முதலிலேயே தான் ஆட்டமிளந்ததை ஒப்புக் கொண்டு வெளியேறியிருந்தால் அது நேர்மை. எல்லாம் முடிந்தபின் மற்றையவர்களும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பின் ஒப்புக் கொள்வதை நேர்மை என்று நீங்களும் ஒப்புக் கொள்கின்றீர்களா?????

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

நான் வீரர்கள் நேர்மையாக விளையாடுபவர்கள் என்று எங்குமே குறிப்பிட்டதில்லை. ஆனால் மேலே ஜம்மு சைமண்ட்ஸின் நேர்மை என்று பிலிம் காட்டியதற்குத் தான் அந்தப் பதில். சைமண்ட்ஸ் நடுவரின் தீர்ப்புக்கு முதலிலேயே தான் ஆட்டமிளந்ததை ஒப்புக் கொண்டு வெளியேறியிருந்தால் அது நேர்மை. எல்லாம் முடிந்தபின் மற்றையவர்களும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பின் ஒப்புக் கொள்வதை நேர்மை என்று நீங்களும் ஒப்புக் கொள்கின்றீர்களா?????

ஆட்டமிழந்ததை உணர்ந்து நடுவரின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் தானா வெளியேறினா அது 100% நேர்மை.

ஆட்டமிழந்ததை உணர்ந்து நடுவரின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்று தீர்ப்புக்கு அமைய வெளியேறல் 50% நேர்மை.

ஆட்டமிழந்ததை உணர்ந்தும் நடுவர் தீர்ப்பு வழங்காமையால் தொடர்ந்து ஆடி கிரிக்கெட் விதிப்படியே நடப்பன் என்று நிற்பது 25% நேர்மை.

ஆட்டமிழந்ததை உணர்ந்தும் நடுவரின் தீர்ப்பு வழங்காமையால் ஆடி முடித்து போட்டியின் முடிவில் ஆட்டமிழந்ததை ஒப்புக் கொள்ளுறது 30% நேர்மை.

ஆட்டமிழந்ததை உணர்ந்தும் நடுவர் தீர்ப்பு வழங்காமையால் தொடர்ந்து ஆடி போட்டியின் முடிவென்ன வாழ் நாள் பூராவுமே அதை வெளில சொல்லாமல் இருப்பது 0 % நேர்மை.

இப்படிப் பார்க்கும் போது சைமனுக்கு 30% நேர்மை இருக்கிறதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் பல வீரர்களுக்கு இதில் 25% நேர்மைதான்.. அதிகம். :D:D

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்

என்னைப் பொறுத்தவரை நேர்மையென்பது அது 100 வீதம் நேர்மையாகவிருக்க வேண்டும். மற்றையவர்களால் தவறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியபின் தவறை ஒப்புக் கொள்வதில் நேர்மையென்பது வெறும் விதண்டாவாதமே. நீங்கள் சொன்னமாதிரி 30 வீதம் நேர்மையென்று எடுத்தால் மிகுதி 70 வீதம் நேர்மையற்றவர் என்கின்றீர்கள். பின்பு எங்கு நேர்மையுள்ளது?? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டமிழந்தாலும் நடுவர்களின் தீர்ப்பைப்பார்த்தே பொதுவாக எல்லாவீரர்களும் முடிவு எடுக்கிறார்கள். ஆனால் கடந்த 4, 5 வருடங்களில் விளையாடியவர்களில், அண்மையில் ஒய்வு பெற்ற மேற்கிந்தியா தீவு வீரர் பிரயன் லாராவும், அவுச்திரெலியா வீரர் கில்கிறிஸ்ட்டும் மட்டுமே நடுவர்களின் தீர்ப்பை எதிர்ப்பார்க்காது ஆட்டமிழந்தவுடன் வெளியேறுகிறார்கள். 2003ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அரை இறுதியில் கில்கிறிட் ஆட்டமிழக்கவில்லை என்று நடுவர் தீர்ப்பளித்தார். ஆனால் அவர் தான் உண்மையில் ஆட்டமிழந்தவர் என்பதினால் அவர் வெளியேறினார்.பிரயன் லராவையும், கில்கிறிஸ்டையும் தவிர மற்றைய எல்லாவீரர்களும் பெரும்பாலும் நேர்மையற்றவர்கள். ஆனால் அவர்களில் பிழையில்லை. எனென்றால் அவர்கள் ஆட்டமிழக்காத பல சந்தர்ப்பங்களில் ஆட்டமிழந்தாக நடுவர்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்.

கண்ணா கில்லி ஆடலாம், பரத நாட்டியம் ஆடலாம், ஏன் ஆணவத்தில கூட ஆடலாம் ஆனா அவுஸ்ரேலியா கூட மட்டும் கிரிகெட் ஆடக்கூடாது..ஏன்ன நல்லா ஆடினாலும் வெல்ல விடமாட்டாங்கப்பா.. :D

இந்த டயலக்கை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு மாம்ஸ் ....தப்பு....தப்பு....தப்பு..அப்படி எல்லாம் சொல்ல கூடாது :lol: ....மாம்ஸ் ஆட தெரியாதவனிற்கு அரங்கு பிழை அது பரதநாட்டியமா இருந்தாலும் சரி கிரிகேட்டா இருந்தாலும் சரி நான் சொல்லுறது விளங்குதோ :lol: ...நல்லா ஆடினா வெல்லலாம் ஆனா நல்லா ஆட அவுஸ்ரெலிய அணி விடமாட்டுது ஏனேனின் அவ்வளவு திறமை மிக்க வீரர்களை தன்னகத்தே கொண்ட அணி :) ......கிரிகேட்டை ஒரு வியாபாரமாக (ஏனைய அணிகளை போல் நினைக்காமல் :wub: ) விளையாடுவதால் தான் என்றைக்கும் நம்பர் 1 சரியோ மாம்ஸ்.... :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" வெல்லுவோம் என்று இறங்க வேண்டும் களத்திள வெல்லுவோமா..என்று இறங்க கூடாது (அது எந்த களமா இருந்தாலும் :wub: ).....

ஆகா ஆகா எதப்பு நேர்மை?? ஆட்டமிளக்கவில்லை என்று நடுவர் சொன்னதால் தொடர்ந்து விளையாடி ரன்களை எடுத்துவிட்டு, பலர் Vidio replayயில் சைமண்ட்ஸ் ஆட்டமிளந்ததை சுட்டிக்காட்டிய பின் ஆம் நான் ஆட்டமிளந்தது உண்மை என்று ஒப்புக் கொள்வதா?? சுத்தம். இதைவிட கோமாளித்தனமான பதில் இருக்கமுடியாது.

வசபண்ணே சைமன்ஸ் அண்ணா நினைத்திருந்தா அதையும் சொல்லாம விட்டிருக்கலாம் ஆனா வெளிபடையாக சொன்னாரே அதில் இருந்து அவரின் நேர்மையை இன்னுமா விளங்கி கொள்ளவில்லை :wub: ...நெடுக்ஸ் தாத்தா எவ்வளவு அழகா விளங்கபடுத்தி இருக்கிறார் தாங்ஸ் நெடுக்ஸ் தாத்தா (ஜ லைக் இட் :) )....சோ சைமன் அண்ணாவிடம் 30% நேர்மையாவது இருக்கிறது ஆனா இந்திய வீரர்களிடம் அந்த 30% நேர்மை கூட இல்லாதது தான் வருத்தம் வசபண்ணா :( ...இது கோமாளிதனமான பதில் அல்ல வசபண்ணா எல்லா மனிதர்களிடமும் 100% நேர்மையா எதிர்பார்க்க முடியாது என்னிடமும் சரி உங்களிடம் சரி ஏன் நம்ம நெடுக்ஸ் தாத்தாவிடமும் சரி :D (அட சும்மா எக்சாபிளிற்கு பிறகு ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ இரண்டு பேரும் கோவிக்கமாட்டீனம் என்று நேக்கு நல்லா தெரியும் :D ).அப்படி தான் சைமன் அண்ணாவும் இப்ப ஒரு எக்சாபிளிற்கு உங்கள் நண்பர் ஒரு லாட்டரி எடுக்கிறார் என்று வையுங்கோவேன் :) வசபண்ணா அதை அவர் உங்களிடம் தருகிறார் இன்னொரு லாட்டரியை வாங்கிறார் தனக்கு.. உங்களிற்கு தந்த லாட்டரியில் பரிசு விழுகிறது அப்ப நீங்க என்ன செய்வீங்க வசபண்ணா லாட்டரியை மறுபடி உங்கள் நண்பணிற்கு கொடுப்பியளோ :lol: நீங்க செய்தாலும் செய்வீங்க ஆனா சாதாரண ஒரு நபர் என்ன செய்வார் நண்பனிடம் சொல்லுவார் நீங்க வாங்கி தந்த லாட்டரியில் பரிசு விழுந்துவிட்டது என்று அதை போல் தான் சைமண் அண்ணாவும் :lol: ......வந்த அதிஸ்டத்தை யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள் வசபண்ணா ஆனாலும் வந்த அதிஸ்டத்தை சரியான விதத்தில் பாவித்து அதையும் வெளிபடையாக சொன்னது சாதாரண மனிதர்களிடம் உள்ள 100% நேர்மை அவரிடம் உள்ளதை வெளிபடையாக காட்டி நிற்கிறது :) அல்லவா இதை விட வேறேது வேண்டும் வசபண்ணா.... :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"திறமை இருக்குமிடத்தில் அதிஸ்டம் வந்து சேரும்......திறமை இல்லாத இடத்தில் அதிஸ்டம் வந்து சேர்ந்தாலும் அதை சரியான விதத்தில் கையாள அவர்களிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை"

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் அவுச்திரெலியா வீரர்களில் சிலர் மற்றைய நாட்டு வீரர்கள் துடுப்பாடும் போது அவர்கள் உணர்ச்சி வசப்படும் படியாக கதைப்பதாகச் சொல்லப் படுகிறது(sledging). சிறிலங்கா அணியின் விக்கேற் காப்பாளரான சங்கக்காராவும் இவ்வாறு கதைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏன் அவுச்திரெலியா வீரர்களைக் குற்றம் சொன்ன இந்தியா அணித் தலைவர் அணில் கும்பிளே சென்ற பாகிஸ்தான் தொடரின்போது பாகிஸ்தானின் சிறந்த துடுப்பாட்ட வீரர் முகமட் யூசுப் உணர்ச்சிவசப் படக்க்குடிய விதத்தில் கதைத்தினால் அடுத்த பந்தில் முகமட் யூசுப் ஆட்டமிழந்தார். கும்பிளே போன்ற சிறந்த வீரரிடமிருந்து இப்படியான நடவடிக்கையினைத் தான் எதிர்ப்பார்க்கவில்லை என்று முகமட் யூசப் தெரிவித்தார். விபரங்களுக்கு

Kumble's sledging unexpected, says Yousuf

Cricinfo staff

December 11, 2007

Mohammad Yousuf was so surprised that Anil Kumble sledged him, that he lost his concentration, and ultimately his wicket, on the third day of the third Test in Bangalore.

"Moments before I got out, Anil Kumble threw a few words at me. I just walked up to him and told him that it doesn't look good for a senior player like him to behave in such a manner," Yousuf wrote in his column in the Times of India. "It was completely unexpected from someone like him."

The incident happened at the end of the 70th over, bowled by Harbhajan Singh. Kumble exchanged words with Yousuf, who was then on 23 from 71 balls. Just before the next over, bowled by Irfan Pathan, Yousuf walked over to gully where Kumble was fielding and continued with the verbal volley.

He was visibly agitated, Kumble patted him on the back and asked him to continue batting but Yousuf even had a word with the umpires Simon Taufel and Rudi Koertzen.

Six balls later, for the addition of just one run, Yousuf chased a wide one from Pathan and drove it straight to Yuvraj Singh at point.

http://content-aus.cricinfo.com/indvpak/co...ory/324806.html

  • கருத்துக்கள உறவுகள்

அவுச்திரேலிய அணியின் அபார அட்டம் பற்றி யாரும் கூறத் தேவையில்லை. இன்று உலகின் சாம்பியன்கள் அவர்கள். அதிரடியாக ஆடி எதிரணிகளை துவம்சம் செய்வது அவர்களுக்குக் கைவந்த கலை. இதைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த சாம்பியன் என்ற பட்டமே அவர்களை அகம்பாவத்துடன் நடக்கப் பண்ணுகிறதோ என்னவோ ? அவுச்திரேலிய அணியினரின் களத் தடுப்பாளர்களின் கிண்டலென்பது மிகவும் பிரபலம். எதிரணித் துடுப்பாட்டக்காரரை கிண்டலடித்து அவரின் கவனத்தை திசைதிருப்பி பின்னர் அவரை பிழையான அடி ஒன்றுக்கு வழிநடத்தி ஆட்டமிழக்க வைப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். இதை ஜம்மு மறுத்தாலும் உண்மை அதுதான். இதே பாணியைத்தான் இலங்கை விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்கார பின்பற்றுவதும் அனைவரும் அறிந்தது.

நேர்மை என்றால் என்ன ? நடுவர் தீர்ப்பளிக்குமுன் வெளியேறுவதுதான். தான் ஆட்டமிழந்ததாக நினைத்தல் நடுவரைக்கூட பாராது ஓட்டமும் நடையுமாக மைதானத்தை விட்டு வெளியெறும் கில்கிறிச்ட்டை எத்தனை பேருக்குத் தெரியும். அவர் தன்னைப் போலவே மற்றவர்களும் நடக்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால் அந்த கில்கிறிச்ட்டே திராவிட்டின் பந்து அவரது கால் மட்டையில் பட்டது என்று தெரிந்தும் அதை துடுப்பில் பட்டு வந்ததாக கூச்சலிட்டு நடுவரை பிழையான தீர்ப்பளிக்க வைத்தாரே ? இது நேர்மை இல்லைத்தானே ?

சரி, ரிக்கிப் பொண்டிங்கை எடுத்துக் கொள்வோம். உலகின் மிகவும் சிறப்பான துடுப்பாட்ட வீரர். அவர் அடிக்கும் புள் ஷொட் மற்றும் குக் ஷொட்டுக்கு ஈடு இணையே இல்லை. மிகவும் சிறந்த தலைவர். எல்லாம் சரி, அவர் டோனியின் அடியைப் பிடித்ததாக கூச்சலிட்டது பிழை. ரீப்பிலேயில் பந்து நிலத்தில் படுவது திருப்பி திருப்பிக் காட்டப்படுகிறது. சரி ஆட்டம் முடிவடைந்த பின்னராவது அதை ஒத்துக் கொள்வார் என்று பார்த்தால் இல்லை, தான் பிடித்தது சரியான பிடிதான் என்று அடம் பிடிக்கிறார். இதுவும் நேர்மை இல்லைத்தானே ?

அவுச்திரேலிய அணியின் ஆணவம் பிடித்த ஆட்டம் பற்றி அவுச்திரேலிய பத்திரிகைகள் முதல் முன்னால் ஆட்டக்காரர்கள், பிரபல வர்ணணையாளர்கள் வரை கண்டனம் தெரிவிக்கும்போது நாம் மட்டும் அதைச் சரியென்று வாதிடுவது மடமை.

ஜம்முக் கண்ணு ! நானும் அவுச்திரேலிய அபிமாணிதான். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இப்போது அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளும் தருணமும், தேவையும் வந்திருக்கிறது. செய்ய விடுவதே நல்லது. அனைவராலும் வெறுக்கப்படும் ஆசி அணி எல்லோராலும் விரும்பப்படும் அணியாக மாறவேண்டும் !அதுதான் என்னுடைய அவா!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.