Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

Featured Replies

சபேசன்

பஞ்ச கொளத பிராமணர்கள்

பஞ்ச திராவிட பிராமணர்கள்

என்று உயர் நிலையில் 2 ஆக பிரிப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பிறகு பஞ்ச என்பதில் இருந்து ஊகிக்க கூடிய முறையில் 5 உப பிரிவுகளாக.

இதில் பஞ்சதிராவிட பிராமணர்களில் தான் ஐய்யர் ஐய்யங்கர் போன்ற பிரிவுகள் வருகிறது.

இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

http://en.wikipedia.org/wiki/Brahmin

ஐய்யங்கர் என்பவர்களினுள் பிறகு வடகளை தென்களை என்று பிரிவு வருகிறது? கஸ்தூரி என்றும் இருக்கா?

  • Replies 117
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து ஐயர்மார் சைவர்கள். ஐயங்கார் வைணவர்கள்.

ஜஸ்ரின் அவர்களுக்கு..!

இள வயதில் எல்லோருக்கும் பெண்களை கேலி செய்வது.. அவர்களுடன் குறும்பு செய்வது போன்ற செயல்கள் சந்தர்ப்பத்தைப் பொறுத்து நிகழ்வதுதான். எனினும்.. நான் தாயகத்தைவிட்டு வெளியேறும்போது அவ்வாறான செயல்கள் பெரியவர்களுக்கு பயந்தனவாக இருந்தன. பயப்படாத செயல்களைத் தட்டிக்கேட்கும் உறுதி பொருந்தியவர்களாக பெரியவர்களும் இருந்தார்கள்.

அதேபோல சில சில்லறை வேலைகளுக்காக எத்தனையோ பெண்கள் வீடுகளுக்கும் வந்து வேலை செய்வார்கள். ஆனால் அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்கள். இல்லையேல்.. அன்றே தினமும் பத்திரிகைகளில்.. 'மாவிடிக்க வந்த பெண் மான பங்கம்..' 'முத்தம் கூட்ட வந்தவளுக்கு முத்தம்' இப்படி நாளொரு செய்தி வந்திருக்கும்..

ஆனால் இன்று.. 'வெள்ளாளர்' எனப்படுவோரில் பல இளைஞர்கள் வசதி காரணமாகவோ ஏதோ வெளிநாடுகளில் தஞ்சமடைந்துவிட்டார்ர்கள். சிலர் மாவீருர்களாகிவிட்டார்கள். தஞ்சமடைய முடியாதவர்கள் மத்திய கிழழக்கு நாடுகள் என பாதுகாப்பிற்காக வேலை செய்ய சென்றுவிட்டார்கள். அங்கே உள்ள இளைஞர்கள் வெகு சிலர். ஒரு வீதிக்கு 5 இளைஞர்கள் இருந்தாலே ஆச்சரியம்.

இன்று பலருடைய வீடுகளில் ஆட்கள் இல்லை. அந்த வீடுகளில் முன்பின் அறிமுகமில்லாதவர்களும் உள்ளார்கள்.

இன்னொரு வீடயத்தையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும்.

முன்பு ஒரு வயல் கிணற்றில் நன்னீர் அள்ளுவார்கள். இன்று அந்த கிணற்றை மூடி, ஒரு சிறிய வழி விட்டு.. அதிலே கப்பியும் வாளியும் பொருத்தி இருக்கிறார்கள். எல்லோரும் அந்த கிணற்றில்தான் நீர் அள்ளுவோம் என பிரச்சினைப்பட்டதால் அப்படி செய்திருக்கிறார்ர்களாம்.

அதேபோல, முன்பு நான் மாரி காலத்தில் நீச்சல் பழகிய கோயில் கேணியை பார்த்தேன். சுற்றி முட்கம்பி வேலி..

இப்படி இந்த கப்பி வாளி, முட்கம்பி வேலிகள் போன்றவை பலாத்காரத்துக்கு பலாத்காரம் என்பதை வெளிப்படுத்துகிறதோ என்பதுதான் எனது கருத்து.

மதமாற்றல் விவகாரத்தை எடுத்துக் கொண்டால்.. அது அவரவர் தனிப்பட்ட விடயம். எனினும், 80களிலே சாமத்திய வீட்டுப் பணச்சடங்குகளில் ஒலிபெருக்கிகள் பனைகளில் இருந்து கத்்திக் குளறி நித்திரையை விரட்டிக் கொண்டிருகு்கும்.. தற்போது அதே பனைகள்.. அதே ஒலிபரப்பிகள்.. அதே நித்திரை வரட்டல்.. ஒரு வித்தியாசம்.. முன்பு பாடிய சினிமாப் பாடல்களுக்குப் பதிலாக இயேசு பாடல்கள்..!!

சபேசன்! தங்களது விளக்கத்திற்கு நன்றி! எனது ஊரில் ஐயர், சைவர், வீர சைவர், செட்டி, பண்டாரம் இப்படி ஆலயம் சார்ந்த பிரிவினர் உள்ளனர்.

பொதுவாக ஐயரையும் சைவரையும் தவிர வீர சைவர் உட்பட எல்லோரும் மாமிசம் உண்பார்கள். அதனாலேயே அவர்கள் பிராமணர் இல்லை என எழுதினேன். மற்றும்படி இந்த சாதி விடயங்களில் எனது அறிவு அரைகுறைதான்!

Edited by sOliyAn

சில பைபிள் காரர்கள், மதம் கூவிக் கூவி விக்கின்றதற்கு யாழ்களத்திலும் திரிகினம் போல. சோழியன் என்ன விலை வரும் எண்டு பார்த்து, நல்ல விலை என்றால் இறங்கிடுங்கோ! ஆனால் பாருங்கோ, பைபிளைத் தூக்கினால், மதம் இல்லை என்று புளிச்சுப் போன ஏமாற்றுத் தத்துவத்தைச் சொல்லுகினம்.

யாழ்பாணத்தில் குருநகர் காரருக்கும், பாசையூர்காரருக்கும் இடையில் பிரச்சனை வாரதே அந்தக் கோதாரிக்காகத் தான்.

பரிசுத்த பிசாசு உங்களைக் காப்பாற்றட்டும்.

என்ன தூயவன் அண்ணை உணர்ச்சிவசப்படுறீங்கள்? அச்சுவேலி, ஆவரங்கால், இணுவில், இடைக்காடு, நீர்வேலி, கந்தர்மடம், வண்ணார்பண்ணை, வடலியடைப்பு, சித்தங்கேணி, சங்கானை, மானிப்பாய், சுன்னாகம், மல்லாகம் எண்டு மிச்சத்தையும் இழுத்துவிடுங்கோவன். பாசையூர், குருநகரோட உங்கட தேடல நிப்பாட்டிப் போட்டீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தாலியறுப்பு.. என்றதை இங்கு கொண்டு வந்து பெண்ணிலைவாதம் பேசினார்கள்.. சபேசன் அதை வைத்தே இந்துத் துவேசியம் பேசினார் இப்போ.. சாதி விதைப்பு நடக்கிறது..!

சபேசன் போன்றவர்களின் ஆழ்மனதில் உள்ள சாதியச் சிந்தனையும் தாழ்வு மனச் சிக்கலும் தான் பார்பர்னர்கள் என்று இனங்காட்டி ஒரு மக்கள் கூட்டத்தை வேறு பிரித்து.. அவர்களை எப்படியாவது சிறுமைப்படுத்திக் காட்டிட வேண்டும் என்ற அவசியத்தில் அவரை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதேதான் பாரதத்திலும் நிலை..! தமது சாதிய அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த பார்பர்னர்கள் என்ற இனங்காட்டலும் அவர்களுக்கு எதிரான கோசங்களும் பிறருக்கு அவசியமாக உள்ளதால்.. அங்கு சாதி வெறியாக நிலை கொண்டிருக்கிறது.

இதே நிலையில் தான் சபேசன் போன்ற பிற்போக்குவாதிகளும் உள்ளனர்..!

புலம்பெயர்ந்த இடங்களில் இந்திய சமூகத்தினரும் சரி.. ஈழத்தமிழ் சமூகத்தினரும் சரி... சாதி என்று வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில்லை. இனங்காட்டிக் கொள்வதும் இல்லை.

இருந்தாலும்.. சிலரின் நடத்தைகள் சாதி இருப்பை இனங்காட்டுவதனை முக்கியமாகக் கொண்டுள்ளது. சபேசன் போன்றவர்களின் நோக்கமும் அதுதான்..!

சோழியான் சொல்கின்ற தொழிலடிப்படியினான சமூகப் பிரிவினைகள் யாழ்ப்பாண சமூகத்தவரிடம் இருப்பதற்குக் காரணம்.. சில மக்களிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே..! தான் செய்யும் தொழிலை தாழ்வாக ஏன் நினைக்க வேண்டும்.

புகலிட நாடுகளில் 80% தமிழர்கள் என்ன புறவெசனல் தொழிலா செய்யினம்..???! அப்ப அவர்களை எல்லாம் தாழ்வாக எடைபோட்டால்...???! எல்லாரும் சாதி குறைச்சவையா எல்லோ தென்படுவினம்..???!

சிக்கன் கடையில வேலை செய்யுறவர்.. ஒரு சாதி.. பிசா கடையில வேலை செய்யுறவர் ஒரு சாதி.. மக்டொனால்சில வேலை செய்யுறவர் ஒரு சாதி.. கே எவ் சியில வேலை செய்யுறவர் ஒரு சாதி.. சுப்பர் மார்கெட்டில குப்பை கொட்டிறவர் ஒரு சாதி.. பெரிய நிறுவனங்களில பெரிய உத்தியோகம் செய்யுறவை பெரிய சாதி.. இப்படி என்று ஏன் சாதி இன்னும் புரிக்கல்ல...???! இன்றிருந்து அதையும் ஆரம்பியுங்கோ..! :rolleyes::rolleyes:

இதையே எம்மவர்கள் ஊரில செய்தா.. சாதி பிரித்து.. சண்டையும் பிடிச்சிருப்பர்..!

ஊரில் சாதி என்ற ரீதியில் மக்களிடையே தாழ்வுமனப்பான்மை தான் வேரூன்றியுள்ளது. அதன் பிரதிபலிப்பு புலம்பெயர் இடங்களிலும் தெரிகிறது. ஊரில் தாழ்த்தப்பட்டு அவமானப்பட்டோம் என்று நினைக்கிறவர்கள்.. இன்று புகலிடத்தில் தம்மை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்கும் செயல்களைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன்..! இது எதனைக் காட்டுகிறது.. தாழ்வுமனப்பான்மையின் உளவியல் தாக்க வெளிப்பாட்டையே அன்றி வேறல்ல.

ஒரு வேளை சபேசனுக்கும் தாழ்வுச் சிக்கல் முற்றிய நிலை இருக்கலாம். அதனால் தான் எப்பபார் பார்பர்னர்கள் என்று சாதிய அடிப்படையில் ஒரு மக்கள் குழுமத்தின் மீது தனது வெறித்தனமான சாதியச் சிந்தனைகளைக் கொட்டி வருவதுடன் அவர்களுடன் தன்னைத் தாழ்த்தியும் கருத்துப் பகர்கிறார்..! இது தனிமனிதனின் உளவியல் பிரச்சனையை யாழில் பொதுக்கருத்தாகச் சொல்ல முடியாது.

சோழியான் சொன்ன விடயமும் இதே தாழ்வுச்சிக்கலில் இருந்துதான் பிறக்கிறது. எங்களை ஆட்டிப்படைச்சவைய பார் நாங்க ஆட்டிப்படைக்கிறம்.. என்று அன்று தாழ்வுச் சிக்கலின் உச்சியில் இருந்தோர் இன்று புறப்பட்டிருப்பது.. அவர்களின் பலவீனமே தவிர.. பலம் என்பது அவர்களை தாழ்த்த பயன்படுத்தப்பட்ட அவர்களின் சமூக பொருளாதாரக் காரணிகளை இனங்கண்டு அவற்றை மேம்படுத்துவதே. ஆனால் அவர்களிடம் இன்னும் அந்த எண்ணம் தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது.

மனிதனிடையே வர்க்கப்பிரிவினை என்பது தொழில்.. சமூக அந்தஸ்து.. பொருளாதாரம்.. நடத்தை.. இவை 4 கும் சார்ந்துதான் பெரிதும் வெளிப்படுகிறது. இது ஈழம் தொடங்கி உலகம் பூரா இருக்கிறது வெவ்வேறு வடிவங்களில்..!

இதைக் களையனும் என்றால் எல்லா மனிதனும் செய்யும் தொழில் ரீதியில் வேறுபடுத்தப்படாது.. சம நிலையில் கருதப்பட வேண்டும்.. எல்லோருக்கும் (பார்பர்னன்.. வேளாளன்..சைவப் பூசாரி) என்ற பிரிப்புக்கள் இன்றி சம நிலை அளிக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அளிக்கப்பட வேண்டும். நடத்தையில் எல்லோரும் பண்பான, சுகாதாரம் மிக்க, மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

இதற்குக் காரணம்...தாழ்வுமனப்பான்மை. தான் எப்படித்தான் உயர்வாக நடந்தாலும் தன்னை உயர்வாக மதிக்க மாட்டினம் என்ற சிந்தனைப் போக்கு.. என்றே நினைக்கிறேன்.

இது தவறானது. அப்படி நோக்கின் அகதியாகி புலம்பெயர் தேசங்களில் வாழும் நம்மவர்களை வெள்ளையர்கள் நாயிலும் கேடா எல்லோ நடத்த வேணும். அவைட பழக்க வழக்கத்துக்கு.

லண்டனில் ஒரு தமிழ் கடைக்குப் போய்.. வெல் கம்.. தாங்கியு.. சொல்லக் கேட்டிங்கன்னா.. அது அதிசமாத்தான் இருக்கும்.

ஊரில பெட்டிக்கடையில இடமில்லாம வாழைக்குலை தொங்க விட்டிருப்பாங்க.. அதேபோல லண்டனிலும் கடை நடத்திற ஜென்மங்கள் இருக்கிறார்கள்..! தமிழ் கடைகளில் கணக்கெடுத்துப் பாருங்கள் எத்தனை உள்ளூர் வெள்ளையள் வந்து பொருள் வாங்குதுகள் என்று... பொருட்களை காட்சிப் படுத்திற முறையிலும் அவற்றின் தரமும்.. சுகாதாரமும் முக்கியம் வாடிக்கையாளர்களைக் கவர.

சில இந்தியர்கள் நடத்திற கடைகள் சுப்பர் மார்கெட் வகைகள் போல இருக்கும் போது நிறைய வெள்ளையர்கள் வந்து இந்தியப் பொருட்களை வாங்கி ருசிபார்க்க விளைகின்றனர். ஆனால் நம்மவர்கள்..???!

இது நாம் மற்றவனின் ரசனை மட்டத்தை அடையும் நிலைக்கு எமது சிந்தனையை செயலை உயர்த்தா நிலையே காரணம். நம்மவர்களின் இள வாரிசுகள்.. பாடசாலைகளில் வெள்ளையளக் கொப்பி பண்ணி.. கொஞ்சம் உருப்பட்டிட்டு வருகினம். ஆனாலும் இன்னும் உருப்பட நிறைய இருக்குது.

இதை ஏன் சொல்லுறனென்றால்.. சபேசன் போன்றவர்கள் பார்பர்னர்கள் என்று பிராமண சமூக மக்களைப் பார்த்து திட்டக் காரணம்.. அவர்கள் சமூகத்தில் கொண்டுள்ள மேலாண்மை தானே தவிர வேறல்ல. இவரால் அவர்களின் மேலாண்மை நிலைக்குப் போக முடியல்ல என்ற உடன.. அவர்களை தரம் இறக்கிக் காட்டிடத் துடிக்கிறாரே தவிர.. அவர்கள் இனங்காட்டும் மேலாண்மை நிலைகளுக்கும் மேலான ஒரு நிலையை தான் அடைய முயற்சிக்கல்ல..! இதற்குக் காரணம்.. சபேசனிடம் இருந்து வெளிப்படும் தாழ்வுச்சிக்கல்.

இதேதான் லண்டனில் கடை நடத்தும் எம்மவரிடமும். நான் கேட்டேன்.. ஏன் உங்கள் கடையை வெள்ளையளும் வந்து சாமான் வாங்கிறது போல செய்தா வெள்ளையள் இந்த ஊரை விட்டே ஓட வேண்டிய அவசியம் வராதே. பாவங்கள் சிங்களவன் வெடிகுண்டு போட்டுக் கலைக்கிறான்.. நீங்கள் மிளகாய்த்தூள் வாசனையாலேயே வெள்ளையளை அகதி ஆக்கிறியளே.. உதுகளைக் கவனத்தில எடுத்து.. அப்படியான பொருட்களை விசேடமான வியும் கபேட்டில வைக்கலாமே என்று. அதெல்லாம் செலவு கூட.. நாங்கள் தமிழாக்களைத்தான் ராகட் பண்ணுறம் என்று.. அவரொருத்தர் விண்ணானம் பேசினார். அவரால வெள்ளையளயும் ராகட் பண்ணுறது போல நடக்க முடியல்ல என்றதுக்காக.. தமிழாக்களைத்தானாம் ராகட் பண்ணுறது என்பது சுத்த தமிழரின் போக்கிரித்தனம் என்றதை இனங்கண்டிட்டு என்பாட்டில போயிட்டன்..!

இதே வழியில் தான் சபேசனும்.. பார்பர்னர்கள் என்று சக சமூகத்தையே பிரித்துக் கூறுபோட்டு.. தன் இயலாமையை வெளிப்படுத்திட்டு இருக்கிறார்..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். ஆனால் தாழ்வுச் சிக்கலோ, உயர்வுச் சிக்கலோ எனக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை.

பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்று நினைத்தால்தான் எனக்கு அந்தச் சிக்கல் வரக்கூடும். "முற்பிறவியில் புண்ணியம் செய்து அவர்கள் பார்ப்பனர்களாக பிறந்திருக்கின்றார்கள"; என்று இந்து மதம் சொல்வதை நம்புகின்றவர்களுக்குத்தான் அவ்வாறான சிக்கல் இருக்கும்.

நான் இந்து மதத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது சொல்கின்ற இந்த புருடாக் கதைகளையா நம்புவேன்?

அதை விடுங்கள். ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது

இந்த சைவ வேளாளர் பற்றி ஆராய்கின்ற போது, சைவ சமயத்தின் முக்கியமான ஒரு மனிதரின் கொலை குறித்து ஒரு துப்புக் கிடைத்தது.

இரண்டு, மூன்று நாட்கள் சற்று வேலையாக இருப்பேன். அதிகம் எழுத மாட்டேன். திங்கட் கிழமைக்குப் பிறகு அந்தக் கொலை பற்றிய கதையை சொல்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். ஆனால் தாழ்வுச் சிக்கலோ, உயர்வுச் சிக்கலோ எனக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை.

பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்று நினைத்தால்தான் எனக்கு அந்தச் சிக்கல் வரக்கூடும். "முற்பிறவியில் புண்ணியம் செய்து அவர்கள் பார்ப்பனர்களாக பிறந்திருக்கின்றார்கள"; என்று இந்து மதம் சொல்வதை நம்புகின்றவர்களுக்குத்தான் அவ்வாறான சிக்கல் இருக்கும்.

நான் இந்து மதத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது சொல்கின்ற இந்த புருடாக் கதைகளையா நம்புவேன்?

பாவம்.. புண்ணியம்.. எல்லா மதங்களிலும் இடம்பெற்றுள்ளன. கிறீஸ்தவத்தில் இது அதிகம். இஸ்லாத்தில் குறைவின்றி இருக்கிறது. பெளத்ததில் இருக்கிறது.. கர்மா..!

ஆனால் அங்கெல்லாம் குறைபிடிக்காத உங்கள் நிலை.. இந்துச் சமூகத்தில் ஒரு பிரிவினர் மீது மட்டும்.. வீழ்வதற்கு காரணம் என்ன..!

பார்பர்னம் சார்ந்த பிராமண சமூகத்தினர்.. கல்வியில் ஓங்கி இருப்பதாலா.. சமூக நடத்தை நாகரிக நடைமுறையில் மற்றவர்களை விட சிறப்புற நடப்பதாலா.... இந்தியாவில் கும்பகோணத்தில் குப்பம் என்று பார்பர்ன சமூகம் சுகாதாரச் சீர்கேட்டோடு வாழ்வதில்லையே என்ற ஏக்கதிலா?... அவர்களைப் போல வாழ முடியல்லையே என்ற ஏக்கம் தரும் தாழ்வுமனப்பான்மையிலா.. முயற்சியின்மையாலா.. பிராமண சமூகத்தை எதிரியாக்கிக் காட்டவும்.. சிறுமைப்படுத்திக் காட்டவும் முயற்சிக்கப்படுகிறது.

இதை விடுத்து.. அந்த பிராமண சமூக மக்களின் ஒத்துழைப்பையும் பெற்று.. எல்லா சமூக மக்களினதும்.. தரத்தை உயர்த்த ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கிறீங்களா.. இல்ல திட்டங்களை பரிந்துரைக்கிறீர்களா என்றால் அது கிடையாது.

பாம்பை பிராமணனைக் கண்டால்.. பிராமணனை கொல்லடா.. இந்து மதம் பிராமணி மதம்.. அது சொல்வதெல்லாம் பித்தலாட்டம்.. சோ.. பிராமணர்கள் அறிவிலிகள். நாமும் அறிவிலிகள்.. அவர்களும் அறிவிலிகள் பிறகென்ன எமக்குள் தாழ்வு என்று புலம்புவது ஆகாது. இதுதான் உங்களின் மன நிலை. இதுவே உங்களின் உளவியல் தன்மையைக் காட்டுகிறதே சபேசன். நீங்கள் எனக்கு தாழ்வுச் சிக்கல் இல்லை என்று மறுதளிப்பதால் அது இல்லை என்றாகிடுமா. உங்கள் எழுத்துக்கள் அதை இனங்காட்டுகின்றனவே..!

சமூக முன்னேற்றத்தை விரும்புற எந்த முற்போக்குச் சிந்தனையாளனும் ஒரு சமூகத்தை மட்டம் தட்டி அடுத்ததை உயர்த்தலாம் என்று நினைக்கமாட்டான். அவனின் கண் முன்னே எல்லா சமூகமும் மனித சமூகம், தனது சமூகம் என்ற சிந்தனைதான் இருக்கும். மூட நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் உள்ளன. பார்பர்ன சமூகம் தான் அதைத் தாங்குகிறது என்பது போலக் காட்டுவது.. பிறர் தங்கள் மூடநம்பிக்கைகள்.. இனங்காணாது வாழவே வகை செய்யும்.

இப்படிப் பல பிறழ்வுகள்.. உங்களின் பார்பர்ன சமூக விரோத பாசிச நிலைப்பாட்டால் விதைக்கப்படுகிறது. இதைத்தான் தவறெங்கிறோம். இது உங்களின் உளப் பாதிப்பின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் இல்லையா..! காரணம்.. குற்றம் ஒன்றுக்கு பலர் பொறுப்பாக உள்ள போது.. குறை ஒன்று பலரிடமும் உள்ள போது.. ஏன் ஒருவரில் மட்டும் எல்லாவற்றையும் இனங்காண்கிறீர்கள்..??! அது அந்த ஒருவர் மீது உங்கள் உள்ளம் கொண்ட வெறுப்பின்... மிகுதியால் தானே. அது உங்கள் உள நிலைசார்ந்து வந்திருக்கலாம் தானே..! :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

சபேசன்

பார்ப்பனர்கள் பிராமணர்கள் ஐய்யர்கள் ஐங்கர் குருக்கள் என்பவற்றிற்கான தொடர்புகள். அவர்களிற்குள் இருக்கும் பிரிவுகள் பற்றி நாம் ஆழமாக அறிய வேண்டும்.

எமதுபோராட்டத்திற்கு எதிராக பிராமணர்கள் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்று மேலோட்டமாக முழு சமூகத்திலும் குற்றம்சாட்டி பகை வழர்க்காது, எமது போராட்டத்திற்கு காலம் காலமாக இடையூறு விழைவிப்பவர்கள் எதிர்ப்பாக நிற்பவர்கள் அவர்களினுள் குறிப்பாக எந்த வகையினர் அதற்கான காரணம் எவற்றையும் சமூகவியல் வரலாற்று அடிப்படையில் அறிய முடியுமான என்று நாம் விளங்க முற்படுவது ஆரோக்கியமாக இருக்கும்.

பிராமணர்கள் பார்ப்பனர்கள் கொண்டுள்ள வேறு நம்பிக்கைகள் கொள்கைகள் நீதியற்றது என்பது ஒருவிடையம். ஆனால் அவர்களில் எல்லா வகையினரும் உள்ளூர ஒரே அளவு எதிர்ப்பை வெறுப்பை ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு தற்பொழுது நடைமுறையில் காட்டுகிறார்களா என்று ஆழமாக தேடல் செய்வுது எமது கடமை. அவ்வாறு தேடல் செய்து அதன் முடிவு ஆம் எல்லாப்பிரிவினரும் தான் ஒரே நிலைப்பாட்டை உள்ளாரக் கொட்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் அவர்களது குறித்த ஒரு நம்பிக்கை என்ற முடிவிற்கு எப்போதாவது வந்தோமா?

பொதுவாக யாரும் இலங்கைத் தமிழர் கள்ளகாட் விவகாரத்தில் பிடிபட்டால் புலிகள் கள்ளக்காட் செய்து பிடிபட்டுவிட்டார்கள் என்பது போல் பொதுப்பட பார்ப்பனர் பிராமணர் எமது போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்கிறோமா? இதற்கு பெரியார் மற்றும் திராவிடக் கட்சிகளின் உறவுகள் ஒற்றுமைகள் எம்மை அறியாமலே sterotyping இற்கு துணை போகலாம். இந்து மனுதர்மம் போன்றவை தவறு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் எமது போராட்டத்திற்கு எதிராக மூர்க்கமாக இன்று இயங்குபவர்களை குறித்த ஒரு சில உப-பிரிவுகளிற்குள் இனங்காணலாமா அதன் மூலம் எமது சவாலை ஆழமாக புரிய முடியுமா என்ற தேடலை நாம் இதுவரை செய்தோமா என்ற ஆதங்கத்தில் கேட்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி ஒருவருக்கு சுடலை ஞானம் பிறந்திட்டு.. பார்பர்னர்கள்.. பிராமணர்களில் ஈழத்தை எதிர்ப்பவர்களை இனங்காணவும் ஏன் எதிர்கினம் என்று இனங்காணவும் வெளிக்கிட வேணும் என்றிருக்கிறார். அதுக்கு மேல பார்பர்னர்கள்.. பிராமணர்கள் எல்லோரும் ஈழத்தை எதிர்க்கல்ல என்றதையும் ஒத்துக் கொண்டிருக்கினம். இதைத்தானே கையுழைய எழுதித் தள்ளுறம் பக்கம் பக்கமா..!

பார்பர்னர்கள் எல்லாம் எதிர்க்கல்ல. எதிர்கிறவையையும் அரவணைச்சு.. விளங்கப்படுத்தி.. புரிய வைச்சு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டிய விடயங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேணும். அதற்கு வெட்டடா விழுத்தடா என்ற நிலைப்பாடுகள் சரிவராது என்று..!

ஏதோ.. ரெம்ப லேட்டா என்றாலும்.. கொஞ்சம் மூளை வேலை செய்து..ஒருமாதிரி ஒத்துக் கொண்டுட்டினம் பார்பர்னங்கள் பிராமணர்களில் எல்லாரும் ஈழத்தை எதிர்க்கல்ல என்று. எனி சபேசன் அண்ணாச்சி இதை ஏற்றுக்கனுமே..! அவரின் பிராமண எதிர்ப்பு பாசிசத்துக்க குஞ்சு குருமன் எல்லாம் கொடிய பார்ப்பர்னமா எல்லோ தெரியுது..! :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

நான் என்றைக்கோ தெளிவாகச் சொல்லி விட்டேன்.

பார்ப்பனர்களை நான் எதிர்க்கவில்லை. பார்ப்பனியத்தையே நான் எதிர்க்கின்றேன். ஈழத்திலே பார்ப்பனர்களின் ஆதிக்கம் இல்லை. அங்கே வேளாளர்கள் பார்ப்பனியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் சில இடங்களில் பார்ப்பனியத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக தேவர், வன்னியர் என்று பல சாதியினர் உண்டு.

பார்ப்பனியம் எந்த வடிவில் வந்தாலும் நான் அதை எதிர்க்கிறேன். எந்தத் தனி மனிதர்களையும் அல்ல.

Edited by சபேசன்

ஈழத்தில் இருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்பது பற்றி முன்பே இங்கு கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கு. இந்தியாவில் உள்ளவர்கள் எல்லாரும் எதிர்க்கவில்லை என்று சொல்லவில்லை. நமக்கு தெரிந்த ஈழப்போராட்டத்தை மூர்க்கமாக எதிர்ப்பவர்களில் அறுதிப் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் - பிராமணர்கள். இது தற்செயலானது என்று நடிக்க முடியாது இங்கு ஊழையிடும் சில இந்து மத அடிவருடிகள் போல். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் எமக்கு எதிராக இயங்குகிறது என்பதும் ஒரு விபத்து என்று நடிக்க வேண்டிய தேவையில்லை. வரலாற்றுரீதியில் மற்றும் அவர்கள் கொண்டுள்ள சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவற்றை புரிந்து கொள்ளலாம்.

எமக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்கள் - பிராமணர்களை தனிமனிதர்களாக பார்க்கச் சொல்லும் மோசடியை செய்யவில்லை. பார்ப்பனர்களினுள் இருக்கும் பிரிவுகளின் அடிப்படையில் எமக்கு எதிராக மூர்க்கமாக இன்று நடைமுறையில் இயங்குபவர்களை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும் என்று தான் சொல்லியுள்ளேன்.

அதன் மூலம் சமூகவியல் வரலாற்றுரீதியில் அந்த உப பிரிவு(களது) எதிர்ப்பை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள முனைவது எமது இன்றைய தேவை.

Edited by kurukaalapoovan

சபேசன் மற்றவர்களின் மோசடியான திரிப்புகளால் திசை திரும்பி சலிப்படை வேண்டாம். நான் இங்கு கேட்பது என்ன வென்று உங்களிற்கு புரிகிறதா?

பார்ப்பனியத்தை நானும் எதிர்க்கிறன். ஆனால் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் நடைமுறைப்படுத்த முனைபவர்கள் என்ற அடிப்படையில் பிராமணர்களினுள் உள்ள உபபிரிவுகளினுள் ஒன்றே அல்லது குறித்த சில என்று இனங்காண முடியுமா என்பது தான் கேள்வி.

இது சரியான ஒப்பீடோ தெரியாது இருந்தாலும்...

பார்ப்பனியம் என்பதை zionism போன்ற ஒன்றாக பார்த்தால் பார்ப்பனியர்கள் zionist என்று கூறலாம். ஆனால் எல்லா யூதர்களையும் zionist ஆக பார்ப்பதில்லை. இது போன்ற ஒரு வித்தியாசப்படுத்தல் மூலம் பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்ற சமூகத்தினுள் உள்ள குறித்த ஒரு பிரிவு என்ற விளக்கத்தைப் பெற முடியுமா ? அதற்காக நாம் முயற்சிக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டு கோள்.

உதாரணத்திற்கு சங்கத்தில் நடந்த இந்தக் கருத்தாடலில் ( http://www.sangam.org/discuss/2702 ) ஒருவர் kasturi iyengar என்று ஒரு குறித்த பிரிவு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் போன்று சொல்லியுள்ளார். அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்கள் எதன் அடிப்படையில் தம்மை தனித்துவமாக ஏனைய பிரமாணர்களில் இருந்து இனங்காண்கிறார்கள் அல்லது அவ்வாறு நம்புகிறார்கள்?

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றைக்கோ தெளிவாகச் சொல்லி விட்டேன்.

பார்ப்பனர்களை நான் எதிர்க்கவில்லை. பார்ப்பனியத்தையே நான் எதிர்க்கின்றேன். ஈழத்திலே பார்ப்பனர்களின் ஆதிக்கம் இல்லை. அங்கே வேளாளர்கள் பார்ப்பனியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் சில இடங்களில் பார்ப்பனியத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக தேவர், வன்னியர் என்று பல சாதியினர் உண்டு.

பார்ப்பனியம் எந்த வடிவில் வந்தாலும் நான் அதை எதிர்க்கிறேன். எந்தத் தனி மனிதர்களையும் அல்ல.

தாங்கள் தானே அண்ணாச்சி... பிராமணர்கள் பார்பர்னத்தின் எச்சம் என்று வர்ணித்து அவர்களை அடியோடு எதிர்ப்பதாக சொல்லித் திரிந்தீர்கள்.

நானும் தூயவனும் ஈழத்துக்கு ஆதரவான அல்லது ஈழத்தை, தமிழ் தேசியத்தை.. தமிழர் தாயக் கோட்பாட்டை வலியுறுத்திய.. பிராமண சமூகத்தவரை இனங்காட்டிய போது கடுமையாக எதிர்த்தீர்களே..! ஈ வெ ராமசாமி என்றவரை முன்னிறுத்தும் பொருட்டு..! எப்போ மட்டும் எங்கோ போனது பிராமணமும் பார்பரினிய இணைப்பும்..!

இப்போ புதிய பல்லவி பாட ஆரம்பித்திருக்கிறீர்கள். ஈழத்தின் பார்பர்னிய எச்சம் வேளாளர்.. இந்தியாவில் பார்பர்னியத்தின் எச்சம் தேவர் வன்னியர் என்று நேரடியான சாதிய வாதத்தை முன்னிறுத்துகிறீர்கள்..! இதுதான் உங்களின் வாதத்தின் அடிப்படை நோக்கமும்.

நீங்கள் சாதிப் பிரிவினை அற்ற சமூகத்தை விரும்பும் உண்மையான மனிதரல்ல. சாதிய இருப்பை வைத்து ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்த முனையும் சக்திகளின் மறைமுக செயற்பாட்டாளர் என்றே என்னால் உணர முடிகிறது.

இவ்வளவு ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டு... இப்போ தடாலடியாக வேளாளர்கள்.. தேவர்கள்.. வன்னியர்கள் பார்பர்ன மீதுகள் என்று குரைக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.

இது உங்களின் உள்ளத்தில் இருந்த எண்ணத்தின் நோக்கத்தை வெளியிடுகிறது..!

நாளை பக்கம் பக்கமாக எழுதிவிட்டு சொல்வீர்கள்.. வேளார்கள் எல்லோரும் வன்னியர்கள் தேவர்கள் எல்லோரும் பார்பர்னத்தின் எச்சங்கள் அல்ல..! அவர்களில் ஒரு பகுதியினர் ஏன் ஈழப்போராட்டத்தை எதிர்க்கின்றனர் என்ற தேடலைச் செய்வதே சமூக நலனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஆதங்கப்படுகிறேன் என்று..!

யாருக்கையா சுத்துறீங்க.. பூப்பூவா..???! :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதன் மூலம் சமூகவியல் வரலாற்றுரீதியில் அந்த உப பிரிவு(களது) எதிர்ப்பை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள முனைவது எமது இன்றைய தேவை.

எமதல்ல.. உங்களுக்கும் சபேசனுக்கும் அவசியமானது. இங்கு இதர கள உறவுகளுக்கு விளங்கி இருக்கின்ற சமூக வரலாற்றுப் பின்னணி உங்கள் இருவருக்கும் மட்டுமே தெளிவற்றதாக இருக்கிறது..!

உங்கள் இருவரின் நோக்கமும்.. அடிப்படை தளம் அற்ற போலித்தனமான அறைகூவல்கள்.

சபேசன் இந்திய தள சமூக வரலாற்றுப் பின்னணியை ஈழத்துக்குள்ளும்.. நீங்களோ ஈழத்தள சமூக வரலாற்றுப் பின்னணியை இந்தியாவிலும் பிரயோகிக்க நிற்கிறீர்கள். அதனால் வந்த குழப்பம் தான் உங்கள் இருவருக்கும்..!

இந்த சமூக வரலாற்றுக்கு மேலாக ஈ வெ ராமசாமி போன்ற அரசியல்வாதிகள் போட்ட சமூக வரலாற்று குழப்ப களைகளுக்கான வித்துக்களை ஆராய்கிற போது.. பிராமண சமூகத்தில் ஒரு பிரிவு ஏன் தமிழர்களை எதிர்க்கிறது என்ற உண்மை தெரியவரும். அதன் பின்னாடி.. திராவிட வெறியின் ஈவிரக்கமற்ற அரசியல் நலன் இருப்பது வெளிப்படும். தமிழர்களான பிராமணர்களையே கூறுபோட்டுப் பிரித்தாண்ட திராவிடக் கொள்கைகளால் விளைந்த சமூக வரலாற்று மாற்றங்களை ஆராயுங்கள். உங்களுக்கான விடை கிட்டும்..!

எதுஎப்படியோ.. தற்போது பார்பர்னிய எச்சம் என்ற தொப்பி.. பிராமணர் தலையில் இருந்து உருண்டு.. தேவர் வன்னியர்.. வேளாளர் மீது சேர்க்கப்பட்டுள்ளது..!

அடுத்த சாதிய உச்சரிப்புக்கான அடி எடுத்து வைக்கப்பட்டாச்சு..! இதன் மூலம் வேளாளர்கள் என்ற சமூக பிரிவினையை ஆழப்படுத்தி அவர்களையும் ஈழப்போராட்டத்துக்கு எதிரானவர்களாகக் காட்ட வேண்டிய தேவை எழுந்தாச்சு... வன்னியர்களையும்.. தேவர்களையும் தொட்டாச்சு..! எனி என்ன இருக்கு..???! இப்படியே இது நீளூம்....??! இதை நீட்ட பார்பர்னிய இருப்பு மிக முக்கியம்..! :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்,

நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது விளங்காது போன்று நடிக்கின்றீர்களா?

பார்ப்பனியத்திற்கு நிறைய முகங்களும், நிறைய கரங்களும் நிறைய வடிவங்களும் உண்டு.

ஈழத்தில் ஒருவர் தன்னை உயர்குல வேளாளர் என்ற கருதுகோளோடு ஒரு தாழ்த்தப்பட்டவரை அடக்கினால், அவரும் ஒரு பார்ப்பனியர்தான்.

தமிழ்நாட்டில் வன்னியர்கள் தலித் மக்களை அடக்கினால், அதுவும் பார்ப்பனியம்தான்.

பார்ப்பனியத்திற்கு ஈழவிடுதலை எதிர்ப்பு, ஆரியவாதம், சாதியவாதம் என்று பல முகங்கள் உண்டு.

பார்ப்பனியத்தின் அனைத்து முகங்களையும் பொருத்திக் கொண்டவர்களாக பெரும்பாலான பார்ப்பனர்கள் இருப்பதால்தான் அவர்கள் பற்றி பேசவேண்டி வருகின்றது. அதுவும் ஈழவிடுதலை எதிர்ப்பை அவர்கள் கொண்டிருப்பது எம்மை நேரடியாக பாதிக்கவும் செய்கின்றது.

எம்மைப் பாதிக்கின்ற விடயத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதால், அது மட்டும்தான் பார்ப்பனியம் என்று நினைக்காதீர்கள்.

குறுக்காலபோவான் சொன்ன விடயம் ஆராயத் தக்கது.

பார்ப்பனர்களில் உள்ள எந்தப் பிரிவு மிக மோசமான வகையில் பார்ப்பனியத்தை கட்டிக் காக்கின்றது என்பதை ஆராய வேண்டும். இது எமது எதிரியை சிறப்பான முறையில் இனம் காண உதவும். எதிரியை பலவீனப்படுத்தவும் உதவும்

பார்ப்பனர்களில் உள்ள எந்தப் பிரிவு மிக மோசமான வகையில் பார்ப்பனியத்தை கட்டிக் காக்கின்றது என்பதை ஆராய வேண்டும். இது எமது எதிரியை சிறப்பான முறையில் இனம் காண உதவும். எதிரியை பலவீனப்படுத்தவும் உதவும்

உப்பிடி சொல்லிப் போட்டு நழுவாமல் எதிர்வரும் காலங்களில் யாழில் செலவிடும் நேரத்தை உந்த விடைத்தில் பயன்படுத்தினால் புண்ணியமா போகும். :rolleyes: இதுவரை இப்படி ஒரு முயற்சி நடை பெற்றதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனியம் என்பது ஒரு கருதுகோள் அதாவது சகல சாதிய மேலாதிக்கத்தினையும் குறிக்கும் ஒரு சொல்லாகவே பின்னாளில் நான் விளங்கிக் கொண்டிருக்கிறேன்.

எதிர்கிறவையையும் அரவணைச்சு.. விளங்கப்படுத்தி.. புரிய வைச்சு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டிய விடயங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேணும்

இது சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கும் பொருந்துமா என அறிய ஆவல்..

ஒருவர் தனது உயர் சாதி அடையாளத்தை முன்னிலைப் படுத்தி இன்னொருவர் மீது ஆதிகத்தைப் பிரயோகித்து அடக்கு முறையை மேற்கொண்டால்... அடக்கப்பட்டவர் மிக மோசமாக மனதளவிலும் வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்தால் --

அடக்கியவருக்கு கொடுக்க வேண்டிய பதில் என்ன என்றால்...

அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் விடுவதே சாதியை ஒழிக்கும் என சொல்கிறார்கள்.

சிங்கள இன வாதத்ததின் அப்பட்டமான மனித உரிமைகளை அலட்டிக்கொள்ளாமல் விடலாம் என்பது குறித்து யோசிக்கிறேன். ஏனெனில் எனக்கு தமிழர் பிரச்சனை விரைவில் தீர வேண்டும் என்ற ஆவல் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது விளங்காது போன்று நடிக்கின்றீர்களா?

பார்ப்பனியத்திற்கு நிறைய முகங்களும், நிறைய கரங்களும் நிறைய வடிவங்களும் உண்டு.

ஈழத்தில் ஒருவர் தன்னை உயர்குல வேளாளர் என்ற கருதுகோளோடு ஒரு தாழ்த்தப்பட்டவரை அடக்கினால், அவரும் ஒரு பார்ப்பனியர்தான்.

தமிழ்நாட்டில் வன்னியர்கள் தலித் மக்களை அடக்கினால், அதுவும் பார்ப்பனியம்தான்.

பார்ப்பனியத்திற்கு ஈழவிடுதலை எதிர்ப்பு, ஆரியவாதம், சாதியவாதம் என்று பல முகங்கள் உண்டு.

பார்ப்பனியத்தின் அனைத்து முகங்களையும் பொருத்திக் கொண்டவர்களாக பெரும்பாலான பார்ப்பனர்கள் இருப்பதால்தான் அவர்கள் பற்றி பேசவேண்டி வருகின்றது. அதுவும் ஈழவிடுதலை எதிர்ப்பை அவர்கள் கொண்டிருப்பது எம்மை நேரடியாக பாதிக்கவும் செய்கின்றது.

எம்மைப் பாதிக்கின்ற விடயத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதால், அது மட்டும்தான் பார்ப்பனியம் என்று நினைக்காதீர்கள்.

குறுக்காலபோவான் சொன்ன விடயம் ஆராயத் தக்கது.

பார்ப்பனர்களில் உள்ள எந்தப் பிரிவு மிக மோசமான வகையில் பார்ப்பனியத்தை கட்டிக் காக்கின்றது என்பதை ஆராய வேண்டும். இது எமது எதிரியை சிறப்பான முறையில் இனம் காண உதவும். எதிரியை பலவீனப்படுத்தவும் உதவும்

அங்கால ஒருவர் மிக மோசமான பார்பர்னப் பிராமணனை இனங்காண ஆய்வு செய்யச் சொல்லுறார்..??!

நீங்களோ மிக மோசமான பார்பர்னனை அடையாளம் காண வேண்டும் எங்கிறீர்கள்..??!

அப்புறம் நீங்கள் இருவருமே சொல்கிறீர்கள் பிராமணர்கள் எல்லோரும் பார்பர்னர்கள் அல்ல என்று..???!

அதுக்கு மேல நீங்கள் சொல்கிறீர்கள்.. வேளாளர்.. வன்னியர்.. தேவர் இவையும் பார்பர்னர் தான் என்று..??!

அப்ப மிக மோசமான பார்பர்னன் பிராமணருக்கதான் இருப்பான் என்று எப்படி தீர்மானிச்சு உங்கள் அருமை நண்பர்.. அதுக்க தேடல் செய்யச் சொல்லுறார்...??!

எல்லாத்துக்கும் முதல்.. பார்பர்னம் என்றால் என்ன என்பதை வரையறுங்கள் வரலாற்றுச் சான்றுகளோட...??!

அதற்குப் பிறகு ஆராய்வம்..!

சும்மா அநாவசியமா ஈழத்தை எதிர்கிறவன் பார்பர்னி.. ஆரியவாதம் பேசுறவன் பார்பர்னி.. இந்துமதத்தை கையாள்பவன் பார்பர்னி.. சாதியம் பேசுறவன் பார்பர்னி.. என்று நீங்களா அதுக்கு ஒவ்வொரு வரைவிலக்கணம் கொடுக்காமல்.. பார்பர்னம் என்றால் என்ன.. அதன் இருப்புக்கான வரலாற்று சமூகவியல் சான்றென்ன.. அது ஏன் உருவானது.. உருவாததற்கான பின்னணி என்ன... இவற்றைக் கொஞ்சம் அடையாளம் காட்டுங்கோ பாப்பம். சும்மா வாயால இல்ல சான்றுகளோட..???! :rolleyes::rolleyes:

அப்படிக் காட்டாத போது.. இந்துக்களை எதிர்கிறவையை.. பிராமண எதிர்ப்பை கைக்கொள்ளுறவையை.. நான் பார்பர்னியத்தால அடையாளப்படுத்துவன்..! அவையும் பார்பர்னிகள் தான்..! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

உங்கள் உள் மனதில் என்ன இருக்கிறதென்பது நன்கு தெரிகிறது

QUOTE (nedukkalapoovan @ Jan 17 2008, 09:25 AM)

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

உங்கள் உள் மனதில் என்ன இருக்கிறதென்பது நன்கு தெரிகிறது

இதில் உள்மனது வெளிமனது என்று என்ன உள்ளது வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது. மேல்சாதியினர் எப்படிப்பட்டவர்கள் கீழ் சாதியினர் எப்படிப்பட்டவர்கள் என்று விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. இதில் சாதிகளை குழும மக்கள் என்று கூறியுள்ளார்.

குழும மக்கள் என்ற போர்வையில் சுமத்தப்பட்டுள்ள விடயங்கள் சாதிமதங்களை தாண்டிய பொதுவான தனிமனிதனுக்குரியவை. அவை ஒரு குழுமம் மீது பாரபட்சமின்றி சுமத்தப்படுகின்றது அதே நேரம் என்னுமொரு தரப்பு பாரபட்சமின்றி குழும அடிப்படையில் உயர்வாக்கப்படுகின்றது.

கீழ்சாதிகள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தவிர சாதிய ஒடுக்குமுறை என்பது பற்றி எதுவும் இல்லை.

கீழ்சாதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகமைகள் என்னவென்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இவை மேல்சாதிக்கு இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. அவர்களை விலத்தி வைப்பதற்கு காரணம் சொல்லப்பட்டுள்ளது. தனிமைப்பட்டு போக மேலும் வகை செய்யும் காரணிகள் என்னவென்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கீழ்சாதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகமைகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குள் இருக்கும் பொது பிரச்சனை என்று எந்தவிதத்திலும் மறுவாதம் செய்யவோ நியாயப்படுத்தவோ முடியாதவாறு குழும மக்களின் நடத்தை என்று எழுதப்பட்டுள்ளது பிரதானமானது.

இந்த கருத்தை எழுதியவர் ஏற்கனவே உழைக்கும் மக்களை குட்டிபோடும் விலங்குகள் என்று இழித்தது என்னல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர் இவ்வாறு எழுதுவது ஆச்சரியப்படும் ஒரு விசயம் இல்லை.

இவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு தகமைகளுக்கும் கருத்தெழுதுவது பெரிய விசயம் இல்லை. கல்வியில் நாட்டமில்லை என்பதுக்கு பண்டைக்காலம் தொட்டு கீழ்சாதிகளை கல்வி கற்றக விடாமல் மேல்சாதிகள் தடுத்ததை பற்றி பிரிட்டிஷ்காரன் முதல் எத்தனையோ வரலாற்றாசிரியர்கள் எழுதிய ஆதாரங்கள் உள்ளது ஆனால் அவற்றை இங்கு எழுதுவது மிகவும் தவறானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு கருத்தையும் உண்மையையும் நியாயப்படுத்தி நிராகரித்து விடுவதற்காக எழுதப்படம் விடயங்கள் இவை. பதில் கருத்துக்களை வரவளைத்தல் என்பதே பிரதானமானது. பதில்கள் எழுத எழுத நியாயப்படுத்தப்பட்டுக்கொண

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வேளைகளில் இளசுகள் சந்தியில்.. அதுவும் வெள்ளாளர் எனப்பட்டோர் குழுமி வாழும் பிரதான சந்திகளில் கூடுவார்கள்.. சந்திக்கு மின்விளக்கு பொருத்தினால் மறுநாள் அது நொறுங்கிவிடும்.. அவவ்வழியால் போகும் இளம் பெண்களை நையாண்டி செய்வதும்.. பல வரம்பு மீறிய பேச்்சுக்களை பேசுவதும்தான் நான் ஒரு மாதமாய் அங்கிருந்தபோது நேரடியாகக் கண்டவை.

உந்த வெள்ளாளர் மனபான்மையில தான் உந்த வெள்ளைகளும் இருக்கிறதுகள் போல தெரியுது.வெள்ளாளர் சந்தியில் வேறு சாதியினர் பல்ப் உடைக்கும் போது வெள்ளாளருக்கு ஏற்படும் கோபம் தான்,இங்கே புலத்தில் நாங்கள் வந்து சேட்டை விடும் போது வெள்ளைகளிற்கு கோபம் வருகிறதோ,வெள்ளாளருக்கு கோபம் வருவது சரி என்றா வெள்ளையள் எம்மை பார்த்து முகத்தை அப்பால் திருப்பி கொள்வது தப்பில்லை போல் தெரிகிறது :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்திருக்கிறேன்..சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

சினிமா மோகம் பற்றி கூறி இருந்தீர்கள் ஊரில் இருக்கும் போது நானும் அப்படி தான் நினைத்திருந்தேன்,ஆனால் இப்பொழுது புலதிற்கு வந்தா பிறகு புலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிள் புலத்தில் சிறுவர்கள் சினிமா மோகம் கொண்டு அலைவதை காணகூடியதாக இருக்கிறது பெற்றோர்கள் கற்றோர்களாக இருப்பார்கள் ஆனால் சிறுவர்கள் சினிமா மோகம் பிடித்த கலை நிகழ்ச்சிகளை தான் நடத்துவார்கள்.கனடாவில் இருந்து அவுஸ்ரெலியா வரை உள்ள தமிழ் ஒலிபரப்புகளிள் இளசுகள் சினிமா பாடல்களிற்கு ஆடும் ஆட்டத்தை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் நாட்டமில்லை என்பதுக்கு பண்டைக்காலம் தொட்டு கீழ்சாதிகளை கல்வி கற்றக விடாமல் மேல்சாதிகள் தடுத்ததை பற்றி பிரிட்டிஷ்காரன் முதல் எத்தனையோ வரலாற்றாசிரியர்கள் எழுதிய ஆதாரங்கள் உள்ளது ஆனால் அவற்றை இங்கு எழுதுவது மிகவும் தவறானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானது.

மீண்டும் ஒரு தடவை.. எனது பொதுவான சமூகக் கருத்துக்கு தனது சாதியச் சாயப் பார்வையை தெளித்து கருத்தை திசை திருப்ப முற்பட்டிருக்கிறார் சுகன் என்பவர்.

மேற்கு நாடுகளில் கூட அரசு வறுமைக் கோடு என்ற ஒரு கோட்டை வைத்து மக்களைக் குழுமமாக வகுத்து அந்த மக்களும் ஏனைய மக்களைப் போல அடிப்படை வசதிகளைப் பெற்று வாழ வழிவகை செய்கிறது. அப்படி ஒரு குழுமமாகத்தான் இந்த தாழ்வுச்சிக்கல் கொண்ட மக்கள் குழுமத்தை நாம் வகைப்படுத்த வேண்டும். இந்தக் குழுமத்துள் அடங்கும் மக்களுக்கு புனர்வாழ்வுத் திட்டங்களில் முன்னுரிமை அளித்து அவர்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்கவும் ஏனைய மக்களோடு சரிநிகராக செயற்படவும் உற்சாகம் அளிக்க வேண்டும்..!

இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் கல்வியியல் ரீதியில் ஒரு குழும மக்கள் பிந்நிற்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கல்வி வழங்கப்படாமை.. அல்லது பாரபட்சமான கல்வி நடைமுறை என்பது தவறானது..! கொடுக்கப்படும் இலவசக் கல்வியின் பெறுமதியை உணராமல் தட்டிக்கழிக்கும் மனநிலைதான் அதற்குக் காரணமே அன்றி வேறில்லை..! இதற்கும் சிலர் சாதிய ரீதியில் விளக்கம் கொடுக்க முற்படுவது சுத்த சாதிய வெறித்தனத்தின் வெளிபாடே அன்றி கள யதார்த்தமல்ல..!

உண்மையில் சிலருக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்ற ஆங்கிலேயரின் வாதம் என்பதே சமூக வகுப்புவாதத்தை விதைத்து சமூகங்களைப் பிரித்துப் பலவீனப்படுத்தி தமது தேவைகளை திறம்படப் பூர்த்தி செய்யத்தான் பரப்பட்டது. அப்படி கல்வி மறுக்கப்படுவதாக இனங்கண்ட ஆங்கிலேயர்கள் ஏன் எல்லோருக்கும் கல்வி வழங்கி இருக்கலாமே. ஆங்கில மிசனரிகளில்.! ஏன் தமது மிசனரிகளில் ஆங்கிலப் புலமையாளர்களை மட்டும் தேர்வு செய்து கல்வி வழங்கினர்...??! தங்கள் நிர்வாகத் தேவையைப் பூர்த்தி செய்ய..! :huh:

ஆங்கிலேயர்கள் எமது வரலாறுகளைப் படித்து எமது பெருமையைச் சொல்ல ஆய்வுகளைச் செய்யவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப ஆய்வுகளைச் செய்து.. அதற்கேற்ப அறிக்கைகளையும் தாக்கல் செய்து.. அவர்கள் தேவையானவற்றை சுருட்டிக் கொண்டு.. தங்களைப் பலமாக்கிக் கொண்டு.. எம்மைப் பிரித்தாண்டு பலவீனப்படுத்தி விட்டுப் போயுள்ளனர்.

இன்றும்.. நாம் இதை உணராது.. ஆங்கிலேயரின்.. ஆராய்ச்சிக்குப் பின்னால் இழுபடும் நிலையில் இருக்கிறோம். இப்படித்தான் முல்லரால் இந்திய சமூக மக்களைப் பிரித்தாழவும் பலவீனப்படுத்தவும்.. ஆரியம் திராவிடம் என்பதும் புகுத்தப்பட்டது..! இருந்தும் இன்றும் ஆங்கிலேயரை உயர்வெனக் கருதி அவர்களின் பாதம் தொழும் சுத்த அடிமைத்தனம் என்பது தொடர்கிறது. இது கூட அந்த தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடுதான்.

தனது வரலாற்றைத் தான் ஆராய்ந்து அறிய முடியல்ல.. அடுத்தவன் சொன்னதை நம்பி.. தன்னைத் தாழ்தும்.. நிலை.. தாழ்வுச் சிக்கலன்றி என்ன..???!

இந்த நிலைதான் ஆபத்தானது. இந்தக் குழுமத்துள் தமிழர்கள் ஏறக்குறைய பலர் அடங்குகின்றனர்..! இந்த நிலை மாற்றப்பட வேண்டும்..! தமிழ் தேசிய எழுச்சியோடு இது நிகழ வேண்டும்..! அப்போ இந்தப் பார்பர்னம் என்ற மாயைக்கு மயங்கி அழுவதும் இல்லாமல் போகும்.. எமக்கென்றான தமிழர் வரலாற்றுப் பதிவுகளுக்கான தேடல்களும் முழுமையடையும்.. அல்லது முழுமையடையும் திசையில் சுதேசிய தேடலோடு நகரும்..! :mellow:

Edited by nedukkalapoovan

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

மேற்கு நாடுகளில் கூட அரசு வறுமைக் கோடு என்ற ஒரு கோட்டை வைத்து மக்களைக் குழுமமாக வகுத்து அந்த மக்களும் ஏனைய மக்களைப் போல அடிப்படை வசதிகளைப் பெற்று வாழ வழிவகை செய்கிறது. அப்படி ஒரு குழுமமாகத்தான் இந்த தாழ்வுச்சிக்கல் கொண்ட மக்கள் குழுமத்தை நாம் வகைப்படுத்த வேண்டும். இந்தக் குழுமத்துள் அடங்கும் மக்களுக்கு புனர்வாழ்வுத் திட்டங்களில் முன்னுரிமை அளித்து அவர்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்கவும் ஏனைய மக்களோடு சரிநிகராக செயற்படவும் உற்சாகம் அளிக்க வேண்டும்..!

நீங்கள் எப்படி வேண்டுமானலும் நியாயப்படுத்துவீர்கள். அது உங்கள் இயல்பு. இங்கே யாரும் வறுமைப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி கருத்தாடவில்லை. நீங்கள் தெளிவாக மக்களின் நடத்தை என்று சொல்ல வேண்டியதெல்லம் சொல்லியுள்ளீர்கள். அதன் மூலம் பிரிவுகளாக பிரித்துள்ளீர்கள். அவர்கள் நடத்தை அவர்கள் தனிமைப்பட்டு போக வகை செய்கின்றது என்று தெளிவாக கூறிவிட்டு இப்பவந்து புனர்வாழ்வு அளிப்பதும் உற்சாகம் கொடுப்பதும் என்று எழுதுகின்றீர்கள்.

இன்றும்.. நாம் இதை உணராது.. ஆங்கிலேயரின்.. ஆராய்ச்சிக்குப் பின்னால் இழுபடும் நிலையில் இருக்கிறோம். இப்படித்தான் முல்லரால் ஆரிய திராவிடம் என்பதும் புகுத்தப்பட்டது..! இதுதான் ஆங்கிலேயரை உயர்வெனக் கருதி அவர்களின் பாதம் தொழும் சுத்த அடிமைத்தனம். இது கூட அந்த தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடுதான். தனது வரலாற்றைத் தான் ஆராய்ந்து அறிய முடியல்ல.. அடுத்தவன் சொன்னதை நம்பி.. தன்னைத் தாழ்தும்.. நிலை.. தாழ்வுச் சிக்கலன்றி என்ன..???!

என்ன இது?

மேற்கு நாடுகளில் கூட அரசு வறுமைக் கோடு என்ற ஒரு கோட்டை வைத்து மக்களைக் குழுமமாக வகுத்து அந்த மக்களும் ஏனைய மக்களைப் போல அடிப்படை வசதிகளைப் பெற்று வாழ வழிவகை செய்கிறது.

உங்கள் கருத்தே மேற்குநாட்டை உதாரணத்துக்கு இழுத்து எழுதப்பட்டுள்ளது.

நீங்கள் இருப்பதும் மேற்கு நாட்டில்.

கல்வியில் நாட்டமில்லை என்பதுக்கு பண்டைக்காலம் தொட்டு கீழ்சாதிகளை கல்வி கற்றக விடாமல் மேல்சாதிகள் தடுத்ததை பற்றி பிரிட்டிஷ்காரன் முதல் எத்தனையோ வரலாற்றாசிரியர்கள் எழுதிய ஆதாரங்கள் உள்ளது

இது தான் நான் எழுதிய கருத்து. காலனித்துவ காலத்தில் கீழ்சாதி மக்கள் அவ்வரசுகளிடம் கல்வி கற்று உத்தியோகம் போன்றவை பெறுவதற்கு மேல்சாதிகள் எவ்வாறு தடையாய் இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவன் எழுதிவைத்துள்ளான். பிற்பாடு வந்த வரலாற்றாசிரியர்கள் அவற்றை தமது ஆய்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாழ்வுமனச்சிக்கல் ஆங்கிலேயர் பாதம் தொழுதல் என்று எழுதி அதை நிராகரித்து விட்டால் வரலாற்று வழியில் உயர்சாதிய ஒடுக்குமுறை என்பதை நியாயப்படுத்திவிடலாம் ?

அடுத்தவன் சொன்னதை நம்பி என்று விழித்துக்கொள்ளும் இவருக்கு அவன் நாட்டில் வசிப்பதும் அவனை உதாரணத்துக்கு இழுத்து எழுதுவதும் ஒரு பிரச்சனையே இல்லை. அது உயர்வுமனச்சிக்கல்?

கல்வியை தடுத்தது தட்டிப்பறித்தது என்று எவ்வளவோ அட்டகாசங்களை செய்து விட்டு கல்வியில் நாட்டமில்லை என்பதை கீழ்சாதிகளின் நடத்தை குணம் என்று தப்பித்துக்கொள்வதும் அவர்கள் குணம் அது என்று அவர்கள் மீதே தங்கள் பாவங்களுக்கு பழி போடுவதும் . அந்த நிகழ்வைப்பற்றிய வரலாற்று குறிப்புகளை படிப்பது தாழ்வுச்சிக்கல் என்றும் விழிப்பதின் ஊடாக ஏற்கனவே தான் சொல்லிய கருத்தை மீள வலியுறுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் நாட்டமில்லை என்பதுக்கு பண்டைக்காலம் தொட்டு கீழ்சாதிகளை கல்வி கற்றக விடாமல் மேல்சாதிகள் தடுத்ததை பற்றி பிரிட்டிஷ்காரன் முதல் எத்தனையோ வரலாற்றாசிரியர்கள் எழுதிய ஆதாரங்கள் உள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் சரி.. பிற வரலாற்றாசிரியர்களும் சரி.. யதார்த்தப் புறநிலைகளை விட தங்கள் தங்கள் சொந்த நலனை நோக்கி தயாரித்த வரலாறுகள் தான் அதிகம். சிங்கள வரலாற்றாசிரியர்கள் செய்ததைப் போல.. பல நிகழ்ந்துள்ளன.

தமிழர்களின் வரலாறு என்பது பல விடயங்களில் மீளாய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டியுள்ள நிலையில்.. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் சொன்னதன் அடிப்படையில்.. தாழ்வுச்சிக்கலை.. சமூகச் சிக்கலாக்கிக் காட்டுதல் சரியானதா என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டும்.

பிரிட்டிஷ்ஷார் காட்டிட்டினம் என்றதற்காக அதுவே உண்மையானது என்ற நிலை ஆபத்தானது.. அதுவும் ஒரு வகை தாழ்வுச் சிக்கலின் விளைவுதான் என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர... வேறதும் அங்கு திணிக்கப்படேல்ல..!

ஒரு விடயத்தை இலகுவாக மறைத்துவிடுகிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இலவசக் கல்வியைக் கூட பெறத் தயங்குகின்ற அல்லது கல்வியின் மகத்துவத்தை உணர மறுக்கின்ற தாழ்வுச்சிக்கல்.. ஒரு குழும மக்களிடம் இருக்கிறது எனும் நிலை இருப்பின் அது எதைக் காட்டுகிறது என்று கொள்வீர்கள். கல்வி மறுப்பையா.. கல்வியில் நாட்டமின்மையையா..??!

இலவசக் கல்வியைக் கூட பெறத்தயங்கிற கல்வி பற்றிய நாட்டமின்மை என்பதை இனங்காணத் தயங்கும் சிலர்.. சாதிய அடிப்படையில் கல்வி மறுப்பு என்பதை ஏன் சாதிக்க முனைகின்றனர். அவர்களின் தேவை வேறேதோ என்பதால் தானே இவ்வாறு செய்ய முற்படுகின்றனர். இவர்களின் சாதி வெறிக்கு சாதிய இருப்பை காட்டி பிழைப்பு நடத்திய வரலாற்றாசிரியர்களின் புனையப்பட்ட வரலாறுகளை திணிக்க முற்படுகின்றனர்.

இலவசக் கல்வியை பெறத் தூண்ட வேண்டிய நிலையில் கல்வி மறுப்பு என்ற கதையளப்பு என்பது இன்றைய 21ம் நூற்றாண்டுச் சூழலில் அவசியம் தானா..???! :huh:

முதலில் ஒரு மக்கள் குழுமத்தை பீடித்துள்ள தாழ்வுச்சிக்கலில் இருந்து அவர்களை வெளிக்கொணரும் போது கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு இலவசக் கல்விமுறையை திறம்படப் பாவிக்கும் நிலை தோற்றுவிக்கப்படலாம். அதை உணர்ந்து ஏன் இவர்கள் செயற்படுகிறார்கள் இல்லை.. குரல்கொடுக்கிறார்கள் இல்லை.

சாதி வெறியை காவ நினைக்கும் இவர்களையும் தாண்டி, காலமாற்றம்.. இன்று இலவசக் கல்வியை எல்லோரும் பெற வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியுள்ளது. இது சமூகச் சிந்தனையில் அடிப்படையில் நல்ல மாற்றங்களைத் தந்துள்ளதோடு.. மக்கள் தாழ்வுச்சிக்கலில் இருந்து விடுபடவும் கொஞ்சம் கொஞ்சமாக வழிகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இன்றை உலகில் யாருக்கும் யாரும் கல்வி மறுக்கும் நிலை தாயகத்திலோ.. புலம்பெயர் தேசங்களிலோ இருப்பதாகத் தெரியவில்லை (சிறீலங்கா அரசின் வெட்டுப் புள்ளி பாகுபாட்டைத் தவிர).

மேற்குநாடுகள் வெறுமனவே வறுமைக் கோட்டை பொருளாதார நிலை என்ற நோக்கில் கவனிக்கவில்லை. அண்மையில் பிரித்தானிய அரச ஆய்வின் படி.. வறுமைக் கோட்டில் உள்ள சிறார்கள் கல்வியில் செலுத்தும் கவனம் குறைந்து வன்முறைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்ற நிலை இனங்காணப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அன்றும் எமது சமூகங்களிலும் பொருளாதாரக் காரணிகள் கல்வியில் ஆர்வமின்மையை வளர்த்திருக்கும். அவற்றையெல்லாம் சாதியக் கல்வி மறுப்பாகக் காட்டி சிலர் சாதிய வெறியைத் தூண்டி விடத் துடிக்கின்றனர் இன்றும்..!

பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏலவே நான் சுட்டிக்காட்டிய தாழ்வுச் சிக்கல் பிரச்சனை நிறைந்த சிந்தனைப் போக்குகள் தான் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வித்திடுகின்றனவே தவிர.. வேறு காரணிகள் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.

எனவே மக்கள் அனைவருக்கும் மேற்குலக நாடுகள் வழங்குவது போல மக்களுக்கு தேவையான அடிப்படைப் பொருளாதாரத்தை வலுவாக்கக் கூடிய நடைமுறைகளை செய்து கொடுப்பதோடு.. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வகையில் ஆரோக்கியமான சமூகம் அல்லது இன மக்களுக்கு தேவையான அனைத்து அடிபடை வசதிகளையும் எல்லோருக்கும் சமனாக வழங்கும் போது.. சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பது பிறக்க காரணமாக உள்ள தாழ்வுச்சிக்கல் என்பதை அகற்ற முடியும்.. என்ற வகையிலேயே எனது கருத்துப் பகிர்வு அமைகிறது என்பதுடன்.. 22ம் நூற்றாண்டிலும் சாதிய புனைகதை வரலாறுகளை புனையப்பட்ட வரல்லாற்றுச் சான்றுகளோடு காவ வேண்டிய அவசியமில்லை என்பதையும் சொல்கிறது..!

இதை உணராதவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு... எனது கருத்துக்களுக்கு சாதியப்பூச்சிடும் செயலை நிறுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கின்றேன்..! :mellow:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.