Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது

Nagalingam-04.jpg

Nagalingam-06.jpg

பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு

உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார். தமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்தில??புதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக்கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது. அய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் "தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் " என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோல??ான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:huh::o

இதுமாதிரி கட்டுரையள எழுதி இலக்கியத் தொண்டாட்டுற எங்கட சாத்திரியண்ணாக்கு யாழ் களத்தின்ர சார்பா நானும் முடிசூட்டுறன்.......................... எல்லாரும் கைதட்டுங்கோ.....................

  • கருத்துக்கள உறவுகள்

:huh::o:D

இதுமாதிரி கட்டுரையள எழுதி இலக்கியத் தொண்டாட்டுற எங்கட சாத்திரியண்ணாக்கு யாழ் களத்தின்ர சார்பா நானும் முடிசூட்டுறன்.......................... எல்லாரும் கைதட்டுங்கோ.....................

அட சத்தம் வருதேயில்ல :(

''முடிசூடா மன்னன் சாத்திரி" என்ற சிறப்புவிருதை வழங்கிக் கைகளைத்தட்டுகிறோம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட இதுதான் இலக்கியம் எண்டிறதா??? பூனைக்குட்டி எனக்கு இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சுது. இனிமேல் நான் எழுதிறது தான் இலக்கியம் அதை எல்லாரும் பாராட்டி முடி சூட்டுங்கோ ஏனெண்டால் பூனைக்குட்டியே சொல்லிட்டுது

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை முடியிலை யாரும் கைவைச்சா எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிப்புட்டன்.

இந்த ஆள் யாரெண்டு யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை முடியிலை யாரும் கைவைச்சா எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிப்புட்டன்.

இந்த ஆள் யாரெண்டு யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

சாத்திரி எழுதியதில் இருந்து தெரியுது அவர் ஒரு வாத்தியார் எண்டு .

மிச்சத்தை சாத்திரி யே எழுது வார் .

சாத்து

எனக்கும் உமக்கு மலர்மாலை போட்டு கையிலை மலர்க்கொத்து கொடுக்கத்தான் ஆசை. ஆனால் போறபோக்கைப் பார்த்தால் மலர்வளையம்தான் சாத்த வேண்டி வரும் போல!!!! :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற ரணங்களை கூர்வாளால் கீறித்தள்ளும் சாத்திரிக்கு ஏன்ஒரு வீரவாள் பரிசளிக்கக் கூடாது?

:lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ரை முடியிலை யாரும் கைவைச்சா எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிப்புட்டன்.

இந்த ஆள் யாரெண்டு யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

இவர் ஒரு ஆசிரியர் இவர் ஜெர்மனியில் புலம் பொயர்ந்து வந்து அங்கு தமிழ்ப்பாடசாலைகளை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு தமிழறிவை ஊட்ட ஒரு காரணமாக இருந்தவர். அந்த விடயத்தில் அவரை பாராட்டுகிறேன். ஆனால் எதிர் கால சந்ததிக்கு ஒரு வழிகாட்டியாய் விளங்க வேண்டியவர்கள் வாள் குடுக்கிறது கேடயம் குடுக்கிறது காலிலை விழுறது எண்டு எதுக்கு சில மோசமான இந்திய அரசியல் காலாச்சாரங்களையும் எமது எதிர்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். உங்களை மாதிரி ஆசைக்கு வணங்காமுடி வீரவாள் எண்டு பேரை வைச்சிட்டு இருக்கலாம்தானே

இதுபோன்ற ரணங்களை கூர்வாளால் கீறித்தள்ளும் சாத்திரிக்கு ஏன்ஒரு வீரவாள் பரிசளிக்கக் கூடாது?

:lol::D

சுவி வாள் கேடயம் எல்லாம் பழசு எனக்கு ஒரு ரி 56 ரக துவக்கும் புல்லட்புறூவ் ஜக்கற்றும் பரிசா தாங்கோ இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி :D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கியதற்கு நன்றி சாத்து.

அந்தாளின்ரை முடியைப் பார்த்தால் சாட்சாத் என்ரை முடியேதான். யாரோ என்ரைமுடியை களவாடி அந்தாளுக்கு கொடுப்பதாக நினைச்சு கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். போதாக்குறைக்கு இராத்திரி கெட்ட கனவும் ஒண்டும் கண்டனான் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற ரணங்களை கூர்வாளால் கீறித்தள்ளும் சாத்திரிக்கு ஏன்ஒரு வீரவாள் பரிசளிக்கக் கூடாது?

:lol::wub:

சாத்துவுக்கு ஒர பிளாஸ்டிக் வாழ் பரிசாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. :lol:

விளக்கியதற்கு நன்றி சாத்து.

அந்தாளின்ரை முடியைப் பார்த்தால் சாட்சாத் என்ரை முடியேதான். யாரோ என்ரைமுடியை களவாடி அந்தாளுக்கு கொடுப்பதாக நினைச்சு கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். போதாக்குறைக்கு இராத்திரி கெட்ட கனவும் ஒண்டும் கண்டனான் அதுதான்.

சாத்திரி உங்கடை முடியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட நீங்கள் சாத்திரியை வாழ்கொண்டு துரத்திறமாதிரியோ கனவு கண்டனீங்கள். முனியம்மாக்கா பாவம் கோயிலெல்லாம் நேத்தியும் விரதமுமா திரியிறா 'கிபீராமியம்மன்" தான் சாத்திரியை காப்பாற்ற வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்துவுக்கு ஒர பிளாஸ்டிக் வாழ் பரிசாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. :lol:

சாத்திரி உங்கடை முடியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட நீங்கள் சாத்திரியை வாழ்கொண்டு துரத்திறமாதிரியோ கனவு கண்டனீங்கள். முனியம்மாக்கா பாவம் கோயிலெல்லாம் நேத்தியும் விரதமுமா திரியிறா 'கிபீராமியம்மன்" தான் சாத்திரியை காப்பாற்ற வேணும்.

எல்லாம் இருக்கட்டும் நீங்கள் பரிந்துரைக்கும் அலுவலகம் எதுவோ?

Nagalingam-06.jpg

படத்தில அந்த தாத்தாவின்ட முகத்தில மலர்கின்ற புன்னகையை பாருங்கோவேன் :( இப்ப பாருங்கோ எனக்கு உந்த பட்டம்,பதவி மேல எல்லாம் ஆசை இல்லை பட் சாத்திரி அங்கிள் வந்து என்னை கெளரவிக்க போறார் என்னுடைய சேவையை பாராட்டி என்றா நான் என்ன வேண்டாம் என்றா சொல்ல போறேன்... :( (அது சரி நீங்க என்ன சேவை செய்தனீங்க என்று என்னை பார்த்து யாழ்கள மெம்பர்ஸ் கேட்கிற மாதிரி இருக்கு நான் எஸ்கேப் :( )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும் நீங்கள் பரிந்துரைக்கும் அலுவலகம் எதுவோ?

அலுவலகமெல்லாம் ஒண்டுமில்லை. அடுத்தமாதம் இங்கை காணிவேல் கொண்டாட்டம். பிள்ளைகள் அதில கலந்து கொள்ள பிளாஸ்டிக் வாழ் முடியெல்லாம் வாங்கி வைச்சிருக்கினம். பிள்ளைகள் காணிவேலை கொண்டாடி முடிய சாத்திரிக்கு அதை பெருமையாக குடுப்பமெண்டா குமாரசாமியண்ணை அலுவலகத்தைக் கேட்டு இரகசியத்தை பரகசியமாக்கிப் பண்ணீட்டியள்.

பிற்குறிப்பு - சாத்திரியண்ணை பாவிச்சது வேண்டாமெண்டு சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேணும் பிளாஸ்டிக்கை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரியார்.. நீங்கள் உந்த ஊர் வம்பெல்லாம் எழுதிறத்துக்காக.. ஒரு பேப்பருக்குள்ள உள்ளவையே மாறி மாறி ஒரு பேப்பர் முடி சூடிக்கலாமே..! :lol:

அங்கால காசு கொடுத்து கலாநிதிப் பட்டம் வாங்கிறது என்றும் கவலைப்பட்ட மாதிரித் தெரிஞ்சுது..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரையொருவர் சொறிந்து விடுவதே இந்தக்காலத்தில் பெரும்பணிபண்பாக இருக்கிறது.

நாகலிங்கம் ஐயாவின் அம்மையார் திருமதி நாகலிங்கம் அவர்களுக்கு அண்மையிலே "ஆசிரியத்தாய்" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதை வழங்கியது ஒரு கலாநிதிப்பட்டத்தை காசுக்கு வாங்கியவராலேதான்.

Edited by kannaki

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையொருவர் சொறிந்து விடுவதே இந்தக்காலத்தில் பெரும்பணிபண்பாக இருக்கிறது.

நாகலிங்கம் ஐயாவின் அம்மையார் திருமதி நாகலிங்கம் அவர்களுக்கு அண்மையிலே "ஆசிரியத்தாய்" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதை வழங்கியது ஒரு கலாநிதிப்பட்டத்தை காசுக்கு வாங்கியவராலேதான்.

ஆசிரியத்தாயா??அப்பிடியெண்டால் என்ன அர்த்தம். ஆசிரியராகவும் தாயாகவும் இருப்பவர் என்பதா. அப்பிடிப்பாத்தால் எத்தனையோ ஆயிரம் ஆசிரியர் தாயாய் இருக்கினம். அல்லது ஆசிரியர்கள் எல்லாருக்கும் தாயாய் இருப்பவர் என்பதா?? இதுவும் சரியாய் வராது . யாரோ ஒரு ஆசிரியருக்கு தாய் என்று அர்த்தமா?? ஒண்டுமா விழங்கேல்லை யாராவது தமிழ் வித்தகர் கொஞ்சம் விழங்கிற மாதிரி சொன்னால் புண்ணியமா போகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.