Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடுக்கள் வலிகளாய் - வன்முறையாய்

Featured Replies

அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல.

ஆதிரை:

என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல.

அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும்

அவன் நித்திரையே கொள்றேல்ல என்று நினைக்கிறன். மற்ற பெடியங்களைப் போல இல்லாமல் அவன் எப்பவும் ஒரு பெரிய சோகத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறான் என்று நான் அப்பவே நினச்சனான்.

ஆதிரை: ஆமா யாருக்குத்தான் சோகம் இல்லை. எனக்கில்லையா? உனக்க்குத் தானில்லையா?? உனக்குள்ள ஆயிரம் சோகங்களையும் கேள்விகளையும் ஏக்கங்களையும் விருப்பங்களையும் வச்சுக்கொண்டு ஏண்டியிப்பிடி யாற்றயும் பிரச்சனைகளை உன் தலையில போட்டுக்கொண்டு நீயும் மண்டை காஞ்சு கூட இருக்கிறாக்களையும் குழப்புறாய்?

அம்பா: என்ர பிரச்சனைகள் எல்லாமே சின்னச் சின்ன பிரச்சனைகள் இப்ப இல்லாட்டி எப்பவாவது ஒருநாளைக்கு இல்லாமல் போயிடும். ஆனால் தீபன் போன்ற பெடியங்களுக்கு இருக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடேக்க எங்கட சின்னச் சின்ன கவலையெல்லாம் ஒன்றுமேயில்ல ஆதிரை.

63319226wk6.jpg

நேற்று நான் volunteer வேலை செய்யுற இடத்துக்கு கடைசியா வந்த file அவன்ரதான். அவன் என்ர ஒரு வகுப்பில இருக்கிறபடியால் அவன் எப்பிடி வகுப்பிலயும் வெளிலயும் நடந்துகொள்றான் என்று அவனுக்குத்தெரியாமல் கவனிக்கச் சொன்னவா என்ர சீனியர்.அவன் 8 வயசில இருந்து 13 வயசு வரைக்கும் அவன்ர அப்பாவால பாலியல் ரீதியில துன்புறுத்தப் பட்டிருக்கிறானாம் . அவன்ர testimony ஐ வாசிச்சு நான் அழுதிட்டன். அவன்ர அப்பா மட்டும் என் கையில கிடைச்சார் அவ்வளவுதான்.

ஆதிரை : முதல் அவன் testimony ல என்ன சொல்லியிருக்கிறான் என்று சொல்லு.

அம்பா : தீபனுக்கு அவன்ர வீட்டில எந்தவிதமான கவனிப்பும் கிடைக்கேல்ல. அப்பா அம்மான்ர தாம்பத்ய வெற்றியை வெளிக்காட்ட பிறந்த அண்ணா மேலதான் எல்லாருக்கும் பாசம். அண்ணாக்கு விளையாட ஒரு பொருளா தன்னை உருவாக்கினது போல அவன் உணர்த்தப்பட்டிருக்கிறான் பல சந்தர்ப்பங்களில்.அம்மான்ர பரிவுக்கும் அப்பான்ர அணைப்புக்கும் ஏங்கி ஏங்கித் தவிப்போடயே அவன் பல நாட்களில் நித்திரை கொண்டிருக்கிறான்.

அவனுக்கு எட்டு வயசிருக்கும்போது அவன்ர மென்மையான வெண் தோல் அவனுடைய தந்தைக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கு.பொதுவா சிறுவர்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் மனித வல்லூறுகள் தேர்ந்தெடுக்கும் சிறுவர்களின் மெல்லிய தோல் கொண்டவர்களாகவும் ஏதோ ஒன்றை வாழ்வில் இழந்தவர்களாகவும் ; அதாவது அன்பை , பாதுகாப்பை , அழகை , துணிவை , உடல் பலத்தை , மன பலத்தை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படி அவர்கள் ஏங்கும் ஒன்றை வழங்குபவராக ஒருவர் அவர்களை நெருங்கும்போது எந்தவிதத் தயக்கம் யோசனை எச்சரிக்கையுணர்வு எதுவுமின்றி இந்தச் சிறுவர்கள் அந்த வல்லூறுகளிடம் ஒட்டிக்கொள்வார்கள்.

இதுதான் தீபனுக்கும் நடந்தது. அன்புக்காக ஏங்கிய அவன் அப்பா தன்னிடம் திடீரென்று அன்பாய் நடந்துகொள்ளத்தொடங்கவும் அப்பாக்கு தன்னில் உண்மையாகவே அன்பு வந்துவிட்டதாக எண்ணி அப்பாவின் சின்ன சின்னத் தொடுதல்களையும் உரசல்களையும் ஏற்றுக்கொண்டான். அப்படித்தான் ஒருநாள் தீபனை மஸாஜ் செய்துவிடும்படி தந்தை கேட்கவும் தீபனும் தயங்காமல் அப்பா வேலைக்குப்போய் விட்டு வந்திருக்கிறார் பாவம் என்று மஸாஜ் செய்துவி்ட்டிருக்கிறான்.அன்

Edited by Snegethy

சித்தி,

கதை வாசிக்க நல்லா இருக்குது எண்டு சொல்லமுடியவில்லை. வழமையாக நாங்கள் சிந்திக்காத சில விசயங்களைபற்றி சிந்திக்ககூடியதாக இருந்திச்சிது.

இப்பிடி கதைகள் எழுதும்போது எதுக்கும் நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கோ. ஆங்கிலத்தில் இதுகள்பற்றி தாராளமா எழுதலாம். ஆனா தமிழில எழுதினா உதுகள வாசிச்சபின் சரியாக பிரச்சனைகளை விளங்கிக்கொள்வதற்கு எங்கட சனத்துக்கு மனப்பக்குவம் காணும் எண்டு அல்லது மனப்பக்குவம் இருப்பதாக நான் நினைக்க இல்லை.

எதுக்கும் எங்கட சனத்துக்கு இப்பிடியான விசயங்கள்பற்றி விளக்கம் சொல்லேக்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ.

உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்!

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி,

கதை வாசிக்க நல்லா இருக்குது எண்டு சொல்லமுடியவில்லை. வழமையாக நாங்கள் சிந்திக்காத சில விசயங்களைபற்றி சிந்திக்ககூடியதாக இருந்திச்சிது.

இப்பிடி கதைகள் எழுதும்போது எதுக்கும் நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கோ. ஆங்கிலத்தில் இதுகள்பற்றி தாராளமா எழுதலாம். ஆனா தமிழில எழுதினா உதுகள வாசிச்சபின் சரியாக பிரச்சனைகளை விளங்கிக்கொள்வதற்கு எங்கட சனத்துக்கு மனப்பக்குவம் காணும் எண்டு அல்லது மனப்பக்குவம் இருப்பதாக நான் நினைக்க இல்லை.

எதுக்கும் எங்கட சனத்துக்கு இப்பிடியான விசயங்கள்பற்றி விளக்கம் சொல்லேக்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ.

உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்!

நன்றி!

கலைஞன் வெள்ளைக்காரன்/காரி மனசைக் கட்டுப்படுத்தி வாழுற வகையில்ல. உணர்ச்சிக்கு அடிபணிந்து வாழுறவன்/ள்.

அவையை நோக்கி பல விசயங்களைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கு.

எங்கட சமூகம் இதையெல்லாம் எப்பவோ அலசி ஆராய்ஞ்சுதான் சில சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து மனங்களைக் கட்டுப்படுத்தி குடும்ப வாழ்க்கையில சந்தோசம் என்றால் எப்படி வரும் என்று வழிகாட்டிச்சினம்..!

ஆனால் இன்றைய சூழலில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர்களுக்கு எமது சமூகக் கட்டுப்பாட்டின் தார்ப்பரியம் விளங்கல்ல. அதை அவங்க அடக்குமுறை என்று இனங்கண்டு கொண்டு.. உணர்ச்சிக்கு அடிமையாகி வாழப் போய்.. பரிதாபகரமாகிட்டு இருக்கும் நிலையில் தான்.. சிநேகிதி போன்றவைக்கு இப்படி கதை எழுத வேண்டிய தேவை எழுகுது..!

எங்கட சமூகம் இதை உணராமல் இல்லை. அதை எப்பவோ உணர்ந்து அதற்கு தீர்வாகத்தான் சில சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அதை உணராத ஆக்கள் தான்.. எமது சமூகத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில இருக்கினம். அவை மட்டுமன்றி.. எமது சமூகக் கட்டுப்பாட்டின் தார்ப்பரியம் விளங்கி நடக்கிறவையும் குறைவு. ஆளுக்கு ஆள் தான் மதிப்பிடும் அளவுக்கு முன்வைக்கும் அளவுக்கு மிஞ்சிய கட்டுப்பாடுகளும் இப்படியான தார்ப்பரியங்களை உணரச் செய்யாமல் செய்திடுது..! :)

என்ன நெடுக்கு, ஏதோ சொல்லுங்கோ. நாங்கள்தான் எங்கட கலாச்சாரம், பண்பாடு வெள்ளைகக்காரனிடத விட திறமானது எண்டு சொல்லி குதிச்சுக்கொண்டு இருக்கிறம். ஆனா வெள்ளைக்காரன் எல்லாரும் இப்படி சித்தி சொன்ன கதையில வாழுறமாதிரியோ இல்லாட்டி தமிழர் ஒருவரும் சித்தி சொன்னகதையில வாறமாதிரி வாழாதமாதிரியோ அர்த்தம் இல்லை.

மற்ற ஆக்கள மட்டம் தட்டுறதில எங்கட சனம் வெள்ளைக்காரன விட வலு கெட்டிக்காரர். அதாலதான் நான் சித்திக்கு அப்படி ஒரு அறிவுரை சொன்னனான்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சினேகிதி,

சில விடயங்களை மறைபொருளாகவும் ஒளிபொருளாகவும் பதுக்கி வைத்தலே பாரதூuமான விபரீதங்களை ஏற்படுத்திவிடுகிறது. நமது இனம் மிகவும் தார்ப்பரியம் மிக்கது எனச் சொல்லி வெள்ளையர்களை நளினம் பண்ணியே காலத்தை கழித்துவிடுகின்றனர் பலர். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆலவட்டம் பிடிக்கவே பலர் தயாராகவுள்ள நிலையில் மூடிவைத்து பண்பாட்டுப் பம்மாத்துப் பேசாமல் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கற்றலின் வழி கிடைக்கும் விடயங்களை வலைப்பூவிலும் தருகிறீர்கள். துணிவுடன் பல விடயங்களை வெளிப்படையாகவே எழுதுகிறீர்கள். எமது இளையோரைப் பொறுத்தளவில் இதுவொரு நல்ல முன்னேற்றமே.

பேசாப்பொருளைப் பேசத்துணிதல் பெருங்குற்றம் என்றெண்ணாமல் எழுதுங்கள் சினேகிதி.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் அறியாததைப் பேசுறம் என்று போட்டு பேசுங்கள் சிநேகிதி.

உங்களால் அறியக் கூடியதுகளை இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த உலகில் எல்லோரும் அறிவினம். எதையும் மூடி மறைச்சு வைக்க முடியும் என்று இன்னும் கற்பனை செய்திட்டு இருக்கிறவை முதலில அதுக்குள்ள இருந்து வெளியில வாங்க..! :):lol:

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஒன்றும் பேசாப் பொருள் அல்ல. காலங் காலமாப் பேசப்படும் பொருள் தான். அதுவும் சிறிலங்காவைப் பொறுத்தவரை.. எப்போ அது உல்லாசப் பயணத்துறையைக் கவர வெளிக்கிட்டுது அதோட.. அதுக்கு இதுவும் ஒரு தலையிடியாப் போச்சு. வந்த வெள்ளைக்காரனுக்கு... ஊர்ப்பழக்கம் விட்டுப் போகல்ல...! அதுகளையும் தெளிவா துணிஞ்சு எழுதுங்கோ.. சிநேவுதி..! :lol:

அதுமட்டுமன்றி.. எப்பவும் ஆண்கள் தான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது போலவும் பொய்த் தோற்றம் காட்டாதீர்கள். பெண்களின் பங்களிப்பையும் எழுதுங்கள்.

இதற்கு மேலதிகமாக.. சிறுவர் தொழிலாளர் பிரச்சனை.. சிறுவர் படையில் சேர்ப்புப் பிரச்சனைகள்.. சிறுவர் போரில் மன நலம் பாதிப்படையும் நிகழ்வுகள்.. இப்படிப் பல விடயங்களை ஆராய வேண்டும். வெறுமனவே பாலியலுக்க மட்டும் நிற்காதேங்கோ. அதுவும் ஆண்களில மட்டும் குறை பிடிக்கிறத்துக்கு என்று..!

http://www.unicef.org/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் வேற எந்தப் பகுதியில போடுறதென்டு தெரியாததால இங்க போட்டன் அவ்வளவும்தான்.

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை அடிப்படையாக வைத்து சிநேகிதி எழுதியுள்ளார்...பெரும்பாலும் குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்த,அவர்களது உறவினர்களாலேயே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த படுகின்றனர்.ஒரு தாய் தன் குழந்தைகளை மிகவும் கவனமாக அவதானிக்க வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிநேகிதி நல்லதொரு பகிர்வு. உங்கள் துணிவுக்குப் பாராட்டுக்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் விழிப்புடன் இருந்தாலே இப்படியான விடயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெண்களிடமுள்ள ஒருவித பயம் தான் இப்படியான விடயங்கள் தெரிந்தும் தெரியாது இருக்கப் பண்ணுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.